வண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்...
நகைச்சுவை உணர்வு என்பது ஓர் வரம். அது இயல்பிலே வர வேண்டும் . முக்கி முக்கி வரவழைத்தால் அது மொக்கையாகிவிடும். நகைச்சுவைக்கும் மொக்கைக்கும் நூலளவுதான் வித்தியாசம். நான் கூட நகைச்சுவை என்று முயற்சி செய்த நிறைய பதிவுகள் மொக்கையாகி போனபோதுதான் விபரீத முயற்சி என்கிற விஷயம் மண்டைக்குள் உரைக்க ஆரம்பித்தது.
பொதுவாக சினிமாவில் நகைச்சுவை நடிகர்களை கோமாளிபோல் காட்டுகிறார்கள். ஆனால் ரியல் லைஃப் அதற்கு நேரெதிர். பத்து நண்பர்கள் அல்லது தோழிகள் அல்லது உறவினர்கள் குழுமியிருக்கும் ஓரிடத்தில் எவன் ஜாலியாக, கலகலப்பாக, நகைச்சுவை -யுணர்வுடன் பேசுகிறானோ அவன்தான் அங்கு ஹீரோ. அங்கே புரட்சி, போராட்டம், புண்ணாக்கு என்று பொங்குபவன் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறான்.
சினிமா அறிமுகமாகாத காலக்கட்டங்களில் தெருக்கூத்து நாடகங்கள் மட்டுமே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது.ஒருபுறம் கோவலன் -கண்ணகி,அரிச்சந்திர மயான காண்டம் போன்ற விழிப்புணர்வை விதைக்கும் நாடகங்கள் அரங்கேற்றப் பட்டாலும் மறுபுறம் கரகாட்டம்,குறவன்-குறத்தி போன்ற கிராமிய கலை வடிவங்களும் மக்களை மகிழ்வித்து வந்தது.
அன்றைய எல்லா பொழுதுபோக்கு கலைவடிவங்களிலும் பிரதானமாக ஓர் கதாப்பாத்திரம் இடம்பெறும். அது எல்லோரையும் ரசித்து சிரிக்க வைக்கும் ' பஃபூன் ' கதாப்பாத்திரம். இது பார்வையாளர்களைப் பரவசப் படுத்துவதற்காகவே வலிய திணிக்கப்பட்ட ஒரு உப்பு சப்பில்லாத இடைச்செருகலாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு இதுவே கதையோட்டத்துடன் இணைந்தே பயணிக்கும் அளவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது.சமகாலத்திய சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடகம் என்கிற கலைவடிவம் முற்றிலுமாக அழிந்துவிட,S.V.சேகர்,கிரேசிமோகன் நாடகங்கள் மட்டும் இன்னமும் அரங்கம் நிறைய ஓடுகிறது என்றால் நகைச்சுவை என்ற ஒற்றைப் புள்ளியை சுற்றியே அமைக்கும் அவர்களின் நாடகமாக்கத் தந்திரமே இதற்குக் காரணம்.
என் பால்ய பருவங்களில் சித்திரை மாதத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் வருடம் தவறாமல் நடக்கும்.அவர்கள் பேசும் வசனமும் பாடல்களும் புரியாமல் தூக்கத்தில் சொக்கி விழும் தருணத்தில்,திடீரென்று சம்மந்தமில்லாமல் பஃபூன் காட்சி தருவார்.உறக்கத்தில் சொக்கிய அத்தனைப்பேருக்கும் அது உற்சாக டானிக்காக இருக்கும்.தூக்கம் கலைந்த உடன் திரும்பவும் அரிச்சந்திரன் குச்சியோடு சுடுகாட்டுக்கு வந்து சோகப்பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். பிற்பாடு இது திரைப்படங்களாக பரிணாம வளர்ச்சியடைந்த போது நகைச்சுவை கதாப்பாத்திரங்களின் அவசியம் இன்னும் அதிகமாயிற்று.
பத்மஸ்ரீ கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன்பு ஒரு
பேட்டியில் கூறியிருந்தார். சினிமாவில், எந்த வேடத்தில் வேண்டுமானாலும்
சுலபமாக நடித்து விடலாம்.ஆனால் நகைச்சுவை வேடம் மட்டும் சிரமமானது.
அதனால்தான் சென்னையில் கலைவாணருக்கு மட்டும் சிலை அமைத்திருக்கிறார்கள் என்றார்.
(அப்போது சிவாஜி சிலை கிடையாது)
நாடகங்களில் சோகக் காட்சியைவிட காமெடிக் காட்சி நடிப்பதே கடினம்.காமெடி வசனங்கள் சொல்லும்போது பார்வையாளர்கள் யாரும் சிரிக்கவில்லை என்றால் மேடையில் எங்களின் உள் மனதில் ஏற்படும் வலி யாருக்கும் தெரியாது என காபி வித் அனு-வில் ஒய்.ஜி.மகேந்திரன் சொன்னதாக நினைவு.
சமகால தமிழ் சினிமா கூட காமடி நடிகர்களின் முக்கியத்துவத்தை கமர்சியல் ரீதியாக உணர்ந்துள்ளது. முதலில் அவர்களின் கால்சீட்டை உறுதி செய்த பின்புதான் ஹீரோ ஹீரோயினையே புக் செய்கிறார்கள்.
சினிமா வேரூன்ற ஆரம்பித்த காலத்திலிருந்தே காமடி நடிகர்களின் பங்களிப்பு தமிழ் சினிமாவில் போற்றுதலுக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. கலைவாணர் தம்பதிகள், நாகேஷ்,பாலையா,தங்கவேலு, சுருளிராஜன்,V.K.ராமசாமி என அந்தகால கருப்பு வெள்ளையில் கலக்கிய 'லெஜன்ட்ஸ்' ஏராளம்.அவர்களை இங்கே பட்டியல் போட்டு தரம்பிரிக்க மனம் ஒப்பவில்லை...
வண்ணக் காவியங்களில் கலக்கிய காமெடி நடிகர்களை மட்டும் என் ரசனைக்கு ஒப்ப 'டாப் டென்' என வரிசைப் படுத்துகிறேன்...
10.வெண்ணிற ஆடை மூர்த்தி.
"பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." என்ற ஒற்றையோசையில் குழந்தைளையும் சிரிக்கவைத்துவிடுவார் இந்த வழக்கறிஞர். நான்கு தலைமுறை நடிகர்களுடன் கலைத்தொடர்பு இருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் கில்மா வில்லனாக அறியப்பட்டவர். அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் போன்ற சில படங்களில் மலையாள பிட்டுப்பட நடிகர்களுக்கே சவால் விட்டவர். பிறகு தனக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு தாய்க்குலங்கள் மத்தியில் சரிந்திருந்த தன் செல்வாக்கை செங்குத்தாக தூக்கி நிறுத்தப் படாத பாடுபட்டார். ஆனாலும் தன் இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் இன்னும் விடாமல் , வேலிமேல வேட்டி விழுந்தாலும் வேட்டி மேல வேலி விழுந்தாலும் டர்ர்ர்ர்ர்ர்னு கிழியப்போவது தன் வேட்டிதான் என்பதை கடைசிவரை உணராமல் இருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள்தான் இவரது பலமும் பலவீனமும்.
9.ஒய்.ஜி .மகேந்திரா..
நடிகர் திலகத்துடன் சுமார் 35 படங்கள் நடித்துள்ளார். ஆரம்பகால ரஜினி படங்களில் நடித்தபோது அவரைவிட பிசியான,அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்திருக்கிறார். S.P. முத்துராமன், ரஜினி கமலை வைத்து இயக்கிய படங்களில் ஒய்.ஜி.மகேந்திரா கட்டாயம் இருந்தாக வேண்டுமென்பதை செண்டிமெண்டாகவே வைத்திருந்திருக்கிறார். பிறகு 80 களில் கவுண்டர், ஜனகராஜ் தலைதூக்கியபோது இவருக்கு கிழிஞ்சது லம்பாடி லுங்கி.
8. S .S.சந்திரன்..
லாரல் & ஹார்டி போன்ற comedy duo நம் தமிழ் சினிமாவில் யோசித்தால் உடனே கவுண்டர்-செந்தில் இணைதான் ஞாபகத்துக்கு வரும். 80 களில் பட்டையக்கிளப்பிய இந்த ஜோடி கவுண்டரின் கதாநாயகக் கனவால் பிரிந்து போனது. பிற்பாடு கவுண்டர் விட்டுச்சென்ற அவ்வெற்றிடத்தை நிரப்பியவர் எஸ்.எஸ்.சந்திரன். இவரும் இரட்டை அர்த்த வசனங்களில் ஜொலித்தவர். இந்த இடத்தில் இரட்டை அர்த்தம் என்பது ஆபாசத்தில் அல்ல ,அரசியலில். 80 களில் வெளிவந்த பெரும்பானமையான ராமராஜன் படங்களில் இந்த ஜோடிதான் கலக்கியிருக்கும். தவிரவும் விஜயகாந்த், டி.ராஜேந்தர், ராம நாராயணன், பாண்டியராஜனின் ஆஸ்தான காமெடியன் இவர். மீண்டும் கவுண்டர் தலையெடுத்தபோது இவர் ஓரங்கட்டப்பட்டார்..
7.சந்தானம்..
பதிவு நீண்டு விட்டதால் இதன் தொடர்ச்சி அடுத்தப் பதிவில்....
----------------------(((((((((((((((((((()))))))))))))))----------------------
அடுத்ததாக சில நகைச்சுவைப் பதிவுகள்...
Dr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள் என்ற வலைப்பூவில் அனைத்தும் நகைச்சுவைப் பதிவுகள் .இவர் ஒரு டாக்டர் என நினைக்கிறேன். அனைத்தும் அவரது துறை சம்மந்தமானப் பதிவுகள். வாய்விட்டு சிரிக்கும் பதிவுகள் நிறைய இருக்கிறது. ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வாருங்கள் .
நானும் கொஞ்சம் டாக்டர்-நர்ஸ் சம்மந்தப்பட்ட நகைச்சுவைப் பதிவு ஓன்று போட்டேன்... எந்த ஊர் போனாலும் நம்மவர்களை எளிதில் கண்டுபிடிக்க சில வழிகள்...
Chilled Beers.. எல்லோருக்கும் தெரிந்தவர்தான்.. பதிவுகளில் அறிவுஜீவித்தனமும், நகைச்சுவையும் மிகுதியாக இருக்கும். தற்போது பதிவெழுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார் . எப்படி இருந்த அரவிந்தசாமி...
லக்கிலுக்கின் அசத்தல் பதிவு. சின்ன விசயம்தான் . ஆனால் செம சுவாரஸ்ய நடை.. நடுவுலே திடீர்னு ஜட்டியைக் காணோம்
ஜோக்காளி நானெல்லாம் பக்கம் பக்கமா நகைச்சுவைப் பதிவுகள் எழுதினாலும் பெரும்பாலும் மொக்கைதான் வாங்குவேன்.. இவர் என்னடா என்றால் இரண்டு வரியில் ஜோக் சொல்லி கலகலக்க வைக்கிறார். இவரது எல்லா ஜோக்குகளும் கருத்தாழமிக்க நகைச்சுவையுணர்வு கொண்டவை.
வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா..?கட்டவெளக்குமாறு ... இந்தப் பக்கம் கொஞ்சம் எட்டிப்பாத்துட்டு வாங்க... ட்வீட்டர் சிகரங்கள் எல்லாம் இணைந்து ஒரு இணைய இதழை ஆரம்பித்திருக்கிறார்கள். சில மொக்கைகள் இருக்கலாம். ஆனால் மற்றவை எல்லாம் செம..செம..செம...மன்னிக்கவும்... நிறைய குறிப்பிடவேண்டியிருக்கிறது. இன்று சில அவசர ஆணிகள் இருந்ததால் பதிவு எழுத தாமதமாகிவிட்டது. இதன் தொடர்ச்சி நாளை வரும். உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி...
திரும்பப் படித்துப் பார்க்கக் கூட நேரமில்லை.. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்...
மீண்டும் சந்திப்போம்...
அன்புடன்...
மணிமாறன்.
|
|
அன்பின் மணிமாறன்..
ReplyDeleteவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்.. ஆனால் - வாய் விட்டு சிரிப்பது . வேறு மனம் விட்டு சிரிப்பது வேறு..
இன்றைய அறிமுகங்கள் தனித்துவமான நகைச்சுவை உடையவை..
வாழ்த்துக்கள்..
முதல் கருத்துக்கு மிக்க நன்றி சார்
Deleteதிரையில் வந்தாலே மனம் சிரிக்க தயாராகி விடும்... நாகேஷ், சந்திரபாபு, தங்கவேலு, one man army ஜனகராஜ், கவுண்டமணி, செந்தில் + வண்ணக் காவியங்களில் கலக்கிய காமெடி நடிகர்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...
ReplyDeleteகடைசி தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... நாயகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி DD
Deleteஅட.. இந்த வாரம் நீங்களா?? சூப்பர் ஜி.. எல்லா பதிவுகளும் கலக்க்ஸ்.. பேஸ்புக், பதிவுலகம்னு எல்லாவற்றையும் கலந்து கட்டி வழங்குரிங்க.. வாழ்த்துக்கள் பாஸ்.. தொடர்க உங்க பணி..
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி ஹாரி
Deleteநகைச்சுவை தளங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி மேடம்
Deletetop 10 நாயகர்களை பற்றி உங்கள் விமர்சனம் சரியானது !
ReplyDeleteஎன் தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி !
இத்தகவலை நானே தெரிந்து கொள்ளும் முன்பாக எனக்கு தகவல் தந்து பாராட்டும் தந்த திருவாளர்கள் . துரை செல்வராஜூ,திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி !
த .ம 3
மிக்க நன்றி Bagawanjee..துரை செல்வராஜூ,திண்டுக்கல் தனபாலன் இவர்களுக்கும் கடைசிப் பதிவில் நன்றி அறிவிப்பு கண்டிப்பாக வெளியிடப்படும்.
Deleteதங்களைப் போல
ReplyDeleteஅனைவரையும் கவர்ந்த அருமையான
நகைச்சுவைப் பதிவர்கள் இவர்கள்
அருமையான அறிமுகத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அய்யா...
Deleteநல்ல நல்ல பதிவுகளாகத் தந்து கொண்டிருக்கின்றீர்கள்!
ReplyDeleteஇந்தப் பதிவும் அருமை! நகைச் சுவை என்பது அருமையான ஒரு கலை! அது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடாது! சிரிக்க வைப்பது என்பது கடினமான கலை! அதில் தாங்கள் கூறியுள்ள கலைங்கர்கள் எல்லோருமே காமெடி கதாநாயகர்கல்தான்.!!
பல வலைத்தளங்கள் அறிமுகம் ஆகின்றன! நன்றி!
வாழ்த்துக்கள்!
கருத்துக்கு மிக்க நன்றி சார்
Deleteநகைச்சுவை நாயகர்களின் பட்டியலோடு நகைச்சுவை பதிவுகளையும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநகைச்சுவை நாயகர்களின் பட்டியலோடு நகைச்சுவை பதிவுகளையும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி suresh
Deleteநகைச்சுவையும் அதன் தொடர்பான பதிவுலகமும் வித்திசாசமான பகிர்வு
ReplyDeleteமிக்க நன்றி தனிமரம்
Deleteநகைச்சுவையாய் பதிவுகளைத் தரும் மணிகண்டன் சாருக்கு மிக்க நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி அ. முஹம்மது நிஜாமுத்தீன்
Deleteஎன்னடா இது, நடிகர்கள் லிஸ்ட்டா இருக்கேன்னு கன்ஃபியூஸ் ஆகிட்டேன்..அந்தளவுக்கு பதிவர்கள் பஞ்சம் ஆகிடுச்சா!
ReplyDeleteஹி..ஹி.. சும்மா எதையாவது எழுதுவோம்னு எழுதினது பாஸ்...
Deleteநன்றிங்ணா......!
ReplyDeleteமிக்க நன்றி பன்னிக்குட்டி...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteThanks a lot sir
ReplyDelete