07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 30, 2012

நாகரீகக் கோமாளி வந்தேனய்யா!

ஏ வந்தனம் வந்தனம்
வந்த ‌சனம் குந்தணும்
அடே தம்பி சந்தானம்
அள்ளிக் குடு சந்தனம்!


ல்லாருக்கும் வணக்கம் சொல்லி வந்தேனுங்க ‘மின்னல் வரிகள்’ வலைப்பூவின் பா.கணேஷ்.

உங்கள்ல சிலருக்கு என்னைத் தெரியும். நிறையப் பேருக்கு என்னைத் தெரியாது. அதனால... என்னை அறிமுகப்படுத்திக்கற மாதிரி என்னோட பதிவுகள் சிலவற்றை இங்கே குடுக்கலாம்னு நினைக்கிறேன். அதுககு முன்னால... ‘மாதா பிதா குரு தெய்வம்னு’ ‌சொல்லுவாங்க. என்னோட மாதா, பிதா ஆசிகள் எப்பவும் என்னோட இருககு. அதனால குரு, தெய்வத்தை போற்றிட்டு என் பதிவுகளுக்கு வரலாம்னு நினைக்கிறேன்.

எனக்கு ஒவ்வொரு விஷயத்துலயும் நல்ல நல்ல குரு அமையற ராசி உண்டுங்க. வலைத்தளம் ஒண்ணைத் துவங்கி எழுதணும்னு நான் நினைச்சப்ப, வலைத்தளத்தை துவங்கிக் குடுத்ததோட மட்டுமில்லாம, என் பல ஆரம்பகாலப் பதிவுகளையும் திரட்டிகள்ல இணைச்சு, எப்படில்லாம் எழுதணும்(முக்கியமா எப்படி எழுதக்கூடாதுன்னு)கறது வரைக்கும் எல்லாத்துலயும் வழிகாட்டியா இருந்தவர்...  சேட்டைக்காரன். அன்னா(ண்ணா)ரின் ஆசி‌யோட துவங்கறேன்.

சரி, குரு வணக்கத்துக்கு அடுத்ததா... இப்ப இறை வணக்கம்! முழுமுதற் கடவுள் விநாயகர் கிட்டருந்து துவங்கலாம். உங்களையெல்லாம் ‘மாங்கனி விநாயகரை’ தரிசனம் பண்றதுககு இராஜராஜேஸ்வரி கூப்பிடறாங்க. போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க. ஆச்சா... இப்போ நான் உங்களை தந்தைககு உபதேசித்த சுவாமிநாதனை’ தரிசனம் பண்ணக் கூட்டிட்டுப் போறேன். வாங்க...  சரி, புள்ளைங்களை தரிசனம் பண்ணிட்டு அப்பனை தரிசிக்காட்டா அவர் நெற்றிக்கண்ணைத் திறந்துடுவாரே... அதனால ‘பித்தா! பிறைசூடி!’ன்னு ஷைலஜா அக்காவோட தளத்துக்குப் போய் தரிசனம் சிவனை பண்ணிடுங்க. அப்புறம்... புவனேஸ்வரி ராமநாதன் உங்களை மகரநெடுங்குழைக்காதரைத் தரிசிகக கூட்டிட்டுப் போறாங்க. போய் பெருமாள் தரிசனத்தையும் முடிச்சுககங்க.

இறை வணக்கம் முடிச்சாச்சா... அடுத்ததா இப்ப தமிழ்த் தாய் வாழ்த்து. முனைவர் இரா. குணசீலன் அவர்களும், புலவர் சா.இராமாநுசம் அவர்களும் தமிழ்த் தொகுப்பு-களும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அழைக்கறாங்க. நற்றமிழைப் பருகிட்டு வாங்க நண்பர்களே...

இப்ப... என் எழுத்தைப் பத்திச் சொல்றதுக்கு முன்னால... ‌இணையத்துல எழுதணும்கற என்னோட ஆர்வத்துக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த ரெண்டு நண்பர்களுக்கு நன்றி சொல்லணும்.. ரெண்டு பேர் மேலயும் நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அதைப் புறந்தள்ளிட்டு பிஸியா எழுதிட்டு வர்ற பிரபலங்கள். ஜாக்கிசேகர்சி.பி.செந்தில்குமார் - இந்த ரெண்டு பேருக்கும் என் நன்றி! அப்புறம்... வலைச்சரத்துல என் பதிவுகளை அறிமுகப்படுத்திய ராம்வி, ஷக்திப்ரபா, மதுமதி, துரை டேனியல், கீதமஞசரி, ஸாதிகா, வெங்கட் நாகராஜ்- இந்த நட்புகள் அனைவருக்கும் மனநெகிழ்வுடன் கூடிய என் நன்றிகள்!

இப்ப சென்னை வாசியா இருந்தாலும் என்னோட வேர் மதுரை. ‘மதுரை’ ங்கற ஊர் பேரைச் சொன்னாலே, ஊரை நினைச்சாலே மனசுக்குள்ள பூப் பூக்கும் எனக்கு. என்னோட ஊரைப் பத்தி நான் எழுதின என்னோட இந்த ஆரம்பகாலப் பதிவைப் படிச்சு நீங்களும் மதுரையைக் கொண்டாடுங்க.

எழுத்தார்கள் பேரைச் சொன்னா சில கேரக்டர்கள் நினைவுக்கு வரும். உதா: சங்கர்லால் - தமிழ்வாணன்! அப்படி கணேஷ்னா நினைவுக்கு வர்ற மாதிரி ஒரு தொடர் கதாபாத்திரத்தை அமைககணும்னு நான் நினைச்சப்ப வந்ததுதான் சரிதா கேரக்டர். சரிதா கேரக்டரை வெச்சு நான் முதன்முதலா எழுதின இந்தக் கதையை நிறையப் பேர் பார்த்திருகக வாய்ப்பில்லை. இப்ப படிச்சு சிரிங்க.

‌மலரும் நினைவுகளுக்குள்ள போய்ட்டு வர்றது எல்லாருக்கும் பிடித்தமானதுதான். நான் முதல் முறையா என் பள்ளி நாட்களை இந்தப் பதிவு மூலமா பின்னோக்கிப் பாத்தப்ப எல்லாத் தரப்பிலருந்தும் வரவேற்பு கிடைச்சது. அந்த ஆதரவுதான் இப்ப நடைவண்டிகள்-ன்னு நினைவுத் தொடரே எழுதற தைரியத்தைக் குடுத்திருக்குங்க.

800. 1000 பக்கங்கள் கொண்ட நாவலை படிக்கறதுக்குப் பொறுமையில்லாதவங்களுக்கும், படிக்க விருப்பமிருந்தும் அந்த மாதிரி புத்தகங்களோட உள்ளடக்கம் என்னன்னு தெரியாம இருககறவங்களுக்கும் பயன்படுமேன்னு கேப்ஸ்யூல் நாவல்-ங்கற பேர்ல நான்கைந்து பக்கஙகள்ல சுருக்கித் தந்தேன். நாவலோட பொருளும், சுவையும் கெடாம சுருக்கறது எவ்வளவு கஷ்டம்கறதை உணர்ந்து எல்லாரும் பாராட்டறப்ப ‌மனசு லேசாயிடுது.

வழக்கமான முறையில எண்ணங்களைச் சொல்றதைவிட கொஞ்சம் வித்தியாசமாச் சொல்லலாமேன்னு நினைச்சு இந்தப் பதிவை எழுதினேன். எல்லாத் தரப்பிலருந்தும் பாராட்டுக்களை பெற்றுத் தந்து என்னை மகிழ்வு கொள்ள வைத்தது இது.

ஒன்பான் சுவைகள்ன்னு சொல்வாங்க. அதுல எனக்குப் பிடிச்சது நகைச்சுவை. நகைச்சுவையா எழுதணும்னு விருப்பப்பட்டு நான் எழுதிய இந்தப் பதிவும், இந்தப் பதிவும் அனைவராலும் வரவேற்கப்பட்டதில எனக்கு நிறைய சந்தோஷம்.

நகைச்சுவை தவிரவும் உணர்வுகளை மையப்படுத்தி நான் எழுதின இந்தச் சிறுகதையும், இந்தச் சிறுகதையும் நிறையப் பாராட்டுகளை பெற்றுத் தந்ததால அப்பப்ப இப்படியும் எழுதணும்கற ஆசையும் உள்ள ஓடிட்டிருக்கு.

இன்னும் நிறையப் பதிவுகளைப் பத்திச் சொல்லிட்டே இருப்பேன். ஆனா என்னோட தன்னடக்கம்(!) தடுக்குது. அதனால இன்னிக்கு இதோட நிறுத்திக்கிட்டு .உத்தரவு வாங்கிக்கறேன். நாளைலேர்ந்து பதிவுகளை அறிமுகப்படுத்தணும்.

என்னை மாதிரி ஒரு சாதாரண ஆள் அறிமுகப்படுத்தறதை விட, பிரபலங்கள் அறிமுகப்படுத்தினா நல்லா இருக்கும்னு தோணிச்சு எனக்கு. அதனால சில பிரபல ஜோடிகளுக்கு அழைப்பு விடுத்தேன். அவங்களும் தினம் ஒரு ஜோடியா வந்து தாங்கள் ரசிச்ச பதிவுகளை அறிமுகப்படுத்தறதா சொல்லியிரு்க்காங்க. நாளைக்கு வரப்போற பிரபல ஜோடியைப் பார்க்க... தவறாம வந்துடுங்க!
மேலும் வாசிக்க...

Sunday, April 29, 2012

வைரை சதீஷிடமிருந்து கணேஷ் பொறுப்பில் வலைச்சரம்

அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த தம்பி வைரை சதீஷ் அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

இவர் வலைச்சரத்தில் ஒவ்வொரு நாளும்  "பிடித்த பதிவுகள் சில" என்ற தலைப்பின் கீழ் தனது பார்வையில் கவர்ந்த இடுகைகளை அழகாக குறிப்பிட்டு நிறைய மறுமொழிகளையும் பெற்றுள்ளார்.

தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று மிகச்சிறப்பாக முடித்த தம்பி வைரை சதீஷ் அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை  முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக மின்னல் வரிகள் வலைப்பூ கணேஷ் அவர்கள் பொறுப்பேற்க உள்ளார். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த சில வருடங்களாக புத்தக வடிவமைப்பாளராக சென்னையில் வசித்து வருகிறார். தினமலர், க்ரைம் நாவல், கிழக்குப் பதிப்பகம் ஆகியவற்றில் வடிவமைப்பாளராகவும், ‘ஊஞ்சல்’ என்ற மாத இதழுக்கு வடிவமைப்பாளர் மற்றும் உதவி ஆசிரியராகவும் இருந்த இவர் தற்சமயம் ‘தாம்ப்ராஸ்’ மாத இதழின் வடிவமைப்பாளனாக இருக்கிறார்.
மெல்லிசை  கேட்பதிலும், நகைச்சுவை உணர்வும் மிக்க இவர் தனது வலைப்பூவில்  சிறுகதைகள், அவர் படித்து ரசித்த படைப்புகள், பொக்கிஷமான பழைய விஷயங்கள் என ஒரு பத்திரிகையை படித்த அனுபவம் ஏற்படுமாறு எழுதி வருகிறார்.

கணேஷ் அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துக்கள் வைரை சதீஷ்...
நல்வாழ்த்துக்கள் கணேஷ்...

வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.
மேலும் வாசிக்க...

கூடன்குளம் அணுஉலை (இறுதி பதிவு)

இன்றைக்கு travel என்பதால் தாமதமாகிவிட்டது(எனக்கு கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டது) சீனா ஐயா என்னை மன்னிக்கவும்

கூடல்பாலா எழுதிய அணுஉலை குறித்த பதிவுகள்


1.அணு உலை விழிப்புணர்வு :அவசியம் காணவேண்டிய வீடியோ

2.அணுமின் நிலையமா?பவர் கட்டா ? குழப்பத்தில் அரசியல் கட்சிகள் !

3.கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல விஞ்ஞானிகள் !

நண்பர் சூர்யாஜீவா எழுதிய  அணுஉலை குறித்த பதிவுகள்:




நண்பர் ரெவரி எழுதிய  அணுஉலை குறித்த பதிவுகள்:




நண்பர் அப்பு எழுதிய  அணுஉலை குறித்த பதிவுகள்:


2.கல்பாக்கம் பாதுகாப்பானதா?


நண்பர் சூறாவளி பாஸ்கர் எழுதிய  அணுஉலை குறித்த பதிவுகள்:




மேலும் சில அணுஉலை குறித்த என்னுடைய பதிவுகள்



3.கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார் அவர்களின் அறிக்கை

இறுதியாக சில வரிகள்
நான் கடந்தமுறை வலைச்சர ஆசிரியாக இறுந்த போது உடல்நலம் சரியில்லாததால் என்னால் பதிவு போடமுடியவில்லை.இந்த முறை 7 பதிவு போட்டுருக்கேன்.நான் எப்படி எழுதினேன் என்று எனக்கு தெரியவில்லை.எனக்கு வலைச்சர ஆசிரியர் வாய்ப்பை கொடுத்த சீனா ஐயாவுக்கு நன்றிகள் பலமேலும் இந்த முறை வலைச்சர ஆசியராக இருக்கும் போது பல பதிவுகளை படிக்க முடிந்தது.மேலும் அதிகமான கவிதைகளையும் படிக்க முடிந்தது.இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐயாவுக்கு மறுபடியும் நன்றிகள்

மேலும் வாசிக்க...

Saturday, April 28, 2012

கவிதைகள் 15

நண்பர்களுக்கு வணக்கம்  

                போதிய நேரமின்மையால் கவிதைகளின் தலைப்பை மட்டும் குறிப்பிடுகிறேன்.மன்னிக்கவும்
     
1.முதலில் நண்பர் ப்ரேம்குமாரின் உனக்கு தெரியுமா

2.கவிதைப்பூங்காவின் கல்லூரி
 
3. அடுத்து தமிழ் கவிதைகளின் எப்போது நீ வருவாய்

4.கவிச்சோலையின் பிம்பம்

5.கவிதை வீதி செளந்தர் அண்ணன் எழுதியஎதிர் பாராமல் நிகழ்ந்து விடுகிறது இப்படியெல்லாம்...!

6.காகிதஓடத்தின் சலன நதி

7.காலம் எண்ண கவிதைகளின்பிறப்பும் இறப்பும் !

8.நமது அண்ணன் சீனிகவிதையின் தீ பொறி

9.நண்பர் பிரணவனின் என்னை அறிந்தவள்

10.மணவழகன் கவிதைகளின் கனவு சுமந்த கூடு

11.இதயச்சாரலின் புதிராகும் மலர்

12.புலவர் சா இராமானுசத்தின்செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது!

13.ஒருதுளி தேனின் குளியல் (குழந்தை) கூத்து..!!

14.ஒதிகை நிழலின் நிலையன நினைத்தே!

15.இறுதியாக கண்மனி பக்கத்தின் பெண்ணாய்ப் பிறந்திடவே........
மேலும் வாசிக்க...

Friday, April 27, 2012

தொழிழ்நுட்ப பதிவுகள்

அண்பு நண்பர்களே
இன்று தொழில் நுட்ப பதிவுகளை பற்றி பார்ப்போம். 

              முதலில்  ப்ளாக் தொடங்குவது எப்படி என்று பார்ப்போம்.அடுத்து பதிவின் தலைப்பு பக்கத்தில் எத்தனை Comment சொல்லப்பட்டிருக்கு என்று பார்போம்.Windows 7-க்கு 7 டிப்ஸ் பற்றி காண்போம்
       
           அடுத்து நண்பர் அன்பைத் தேடி அன்பு தரும் Windows 7-க்கு குறுக்கு விசைகளைக் காண்போம்.google புதுசா ஒரு தளத்தை அறிமுகப்படுத்தி இருக்காம்.அது என்ன தளம் வந்தேமாதரம் சசியிடம் கேட்போம்.கணிணியில இருக்கும் மென்பொருளோட Licence key-தெரிஞ்சிக்க பொன்மலர் அக்கா சொல்லும் அறிவுறைய கேளுங்க.

           இப்போ இந்தியா தனக்கென ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தி இருக்கு.அதை எப்படி கணிணியில் டைப் செய்வது என்பதை விக்னேஸ் சொல்லித்தருகிறார்.உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க வேண்டுமா இங்க பாருங்கடோரன்ட் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் இருந்தால் வடகரை தாரிக்கிடம் கேட்போம்

             இங்க பாருங்க உங்களுக்கு Computer என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா?தெரியாதுன்னா இங்கே போய் தெரிஞ்சிக்கோங்க Nokia Phone-ல Security Code-ஐ மறந்துட்டீங்களா அப்போ கண்டுபிடிங்க பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள் பற்றி பார்ப்போமா.அப்போ கற்போம் தளத்திற்கு வாங்க.

             உங்கள் File-களை இலவசமாக Online-ல பதிவேற்றனுமா இதை படிங்க.கணிணியில இருந்துகிட்டே தொலைக்காட்சி பார்க்கனுமா இதோ இப்பவே பாருங்க.யாராவது Magic பன்னினா அதை வேடிக்கை பார்ப்போம்.ஆனால் அதை நாம் செய்ய தெரியாது.இப்போ அந்த கவலையை விடுங்க TAMIL TECH GUIDE தளத்திற்கு சென்று Magic செய்றது எப்படின்னு கத்துக்குவோம்.

மேலும் மூன்று என்னுடைய தொழில்நுட்பப்பதிவுகள்:


          1.மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய
             2.பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box வரவைக்க 
             3.Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்

மேலும் வாசிக்க...

Thursday, April 26, 2012

பிடித்த பதிவுகள் சில 4

அனைவருக்கும் மதிய வணக்கங்கள்

                முதலில் உங்களுக்கு வயதாகி விட்டதான்னு பார்ப்போம்.இது ஒரு காமெடி பதிவு தான் சென்று பாருங்க என்ன காமெடின்னு தெரியும்.அடுத்து விஜய் TV சூர்யாவின் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பற்றி பார்ப்போம்.ஒரு பேருந்துல காதல் ஜோடி பன்னின அட்டகாசத்தை தெரிஞ்சிக்கோங்க

                அடுத்தது தமிழர்களின் அடையாளங்கள் அழிந்து போய் கொண்டிருக்கிறது.என்று விரிவாக விவரிக்கிறார் நாஞ்சில் மணோ அண்ணன்.அடுத்து பார்க்க போவது No100.No 100-ல் என்ன இருக்கிறது.அதில் என்ன முக்கியத்துவம்.அடுத்து தஞ்சை வாசனின் அமாவாசையும் பெளர்ணமியும் கவிதை.
 
             ஹார்ட்அட்டக் உள்ளவர்களுக்கு தெரியமலேயே தோன்றும் அறிகுறிகள் தெரிஞ்சிகுடுவோம்.கிராமத்து சொர்க்கத்தை பற்றி அறிய காந்தி பணங்கூர் சொல்கிறார்.அடுத்து ஆடுகளம் விமர்சணம்.அடுத்து கவிதை
புன்னகை பொன்நகை

            திருக்குளை எழுதியது யார் என்று கேட்டால் நாம் இதென்ன கேள்வி திருவள்ளுவர்தான் என்று சொல்வோம்.ஆனால் அது இல்லையாங்க அப்போ யார் எழுதிருப்பா  நண்டு@நொரண்டு அண்ணன்கிட்ட கேட்போம்.தமிழரின் பின்னடைவுக்கு காரணம் மூட நம்பிக்கைகள தான் என்கிறார் சிறகுகள் மதுரன்
இங்க கொடுப்பதும் மழைதான் கெடுப்பதும் மழைதான் என்க்ன்றனர் இவர்கள்.யாவருக்கும் புரியும் படியாக திருக்குறள் வரிகளில் சொல்கிறார் வியபதி.

              அடுத்து கவிதை பிரிவிலும் காதல்.கவிதை இலங்கையில வில்பத்து சரணாலயத்தில எடுத்த சில படங்களை நம்மிடம் காட்டுகிறார்.அடுத்து பிரிவின் வலியை உணர்த்தும் காதல்  

மேலும் மூன்று பதிவுகள்:
            1.தமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா? - ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

           2.பிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசதிகள்

           3.நமக்கும் இந்த நிலை வரவேண்டுமா?
மேலும் வாசிக்க...

Wednesday, April 25, 2012

பிடித்த பதிவுகள் சில 3

அனைவருக்கும் காலை வணக்கங்கள்

                    இன்று முதலில் பார்க்கப்போகும் முதல் பதிவு புலவர் சா இராமாநுசம் அவர்கள் எழுதிய இளமையில் வறுமை இன்னாது!இதில் அவர் வாழ்க்கையில் எதெல்லாம் கூடாது என்று அழகாக சொல்லி இருக்கிறார்.தமிழ் சினிமாவில் இப்போது கலக்கிக்கொண்டிருக்கும் 2 கலைவாணிகள் பற்றி படிங்க.அடுத்து நண்பர் செய்தாலி எழுதிய இருட்டில் அந்த உருவங்கள்.
               
                   தோழி மாலதி எழுதிய பழங்காலப் பெண்கள் இன்றைய காலப் பெண்களின் காதலைப்பற்றி அழகாகவவே கவிதை வடிவில் சொல்லிருக்காங்க.நண்பர் மனவிழி சத்ரியன் எழுதிய ஆலிங்கனா கதை.அதில் அவர் நமக்கு ஒரு புது விஷயமும் சொல்கிறார்.அடுத்து ஒரு ஹாலிவுட் விமர்சணம் The Artist [2011] - கலப்படமற்ற சினிமாவின் மொழி

                    குழந்தை வளர்க்கும்போது  என்னனென செய்ய வேண்டும் .அப்படி செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நமக்கு சொல்லித்தருகிறார் நமது தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார்.உங்களுக்கு பழங்காழ நாணயங்களை பார்க்க ஆசையா இருக்கா 60-க்கும் மேலான நாணயங்களை காட்டுகிறார் நண்பர் ரசிகன் நாணயம்என்ற பதிவில்.அடுத்து ஒரு கவிதை நீயின்றி நான் ஏது!......

                   தமிழுக்கு சொல்திருத்தி வந்தாச்சாங்க .அப்படின்னா நல்லது தானே.இப்போது ஹாக்கர்கள் பெருகிவிட்ட நிலையில் நாம் தான் ஹாக்கர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.மனித தலையுள்ள பாம்பை பார்திருக்கீங்களா இதோ பாருங்க .உங்களுக்கு திருநெல்வேலிய பற்றி தெரிஞ்சிக்கனுமா.இதோ தெரிஞ்சிக்கோங்க
               .
                நாம திராட்சை பழத்தை சாப்பிடுவோம்.ஆனால் அது என்னென்னவெல்லாம் செய்யும் என தெரியுமா.இதோ தெரிஞ்சிக்கோங்க.நண்பர் ஆனிவேர் சூர்யாஜீவாவின் அடுத்து கல்பாக்கம்.அவர் எழுத்துகள் அனைவரையும் சிந்திக்கவைக்கும்.அடுத்த கவிதை காற்றோடு காதல்

மேலும் மூன்று விமர்சனங்கள்:
                 
         1.7-ம் அறிவு - சினிமா விமர்சனம்
         2.வெங்காயம் அசத்தலான சூப்பர் தமிழ் சினிமா
         3.நண்பன் - சிந்தனையை தூண்டும் விஜயின் சினிமா திருப்பு முனை
மேலும் வாசிக்க...

Tuesday, April 24, 2012

பிடித்த பதிவுகள் சில 2

அனைவருக்கும் மதிய வணக்கம்


3.விமர்சனங்கள்
                 இன்றைய பதிவுகளில் முதல் பதிவு   நண்பர் செங்கோவியுடைய ஒரு கல் ஒரு கண்ணாடி விமர்சனம்.படத்தைவிட இவரது விமர்சனம் சூப்பர்.அடுத்து குமரனுடைய Falling Down ஹாலிவுட் பட விமர்சணம்.இவரது விமர்சணம் அனைத்தும் அருமையாக உள்ளது.தமிழ் படம் ஹாலிவுட் படம் பார்த்து போரடிச்சவுங்க நண்பர் கவிதை காதலன் சொல்லும் மழையாழ படம் விமர்சனத்தை படிச்சிட்டு படத்தை பாருங்க.

3.கவிதைகள்:
           நண்பர் சீனி கவிதை கண்கள் என்ற பதிவில் கவிதையோடு கேள்விகளையும் எழுப்புகிறார்.அடுத்து சகோ ரமணியின் அது இருந்தால் இது இல்லை.உண்மைதாங்க.நம் வாழ்க்கையில ஒன்று இருந்தால் இன்னொன்று இருப்பதில்லை அவர் சொன்ன விதம் அருமை.அடுத்து தென்றல் சசிகலாவின்
காதலின்றி ஏதுமில்லை! என்ற கவிதை வரிகள்.


3 அனுபவப் பகிர்வுகள்
          விக்கியுலகம் வெங்கட்குமார் அவர் சென்னைய பார்த்துட்டு வந்துட்டாராம்.அவர் பார்த்த சென்னைய நீங்களும் பாருங்க.நீரூபன் அண்ணனின் ஆஸ்திரேலிய பயணத்தில் ஒரு விஷயத்தை நம்மோடு பகிர்ந்துள்ளார்.அது என்ன ஆஸ்திரேலியாவில் ரோபோ தான் நாணயத்தை தயாரிக்குமாம்.அடுத்து சகோ ரமணி அவர்கள் சாலையில் போய்கொண்டிருக்கும் போது ஒரு சண்டைபோட்ட கும்பலுடன் மாட்டிக்கொண்டார் இதை படிக்க
   
3 தொழில்நுட்ப பதிவுகள்
       இன்றைய பதிவுகளில் முதல் பதிவு நண்பர் தங்கம்பழனியோட செல்போன்கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று அழகாகவே புரியும்படி சொல்றாரு.சரி உலகத்தில் மொத்தம் எத்தனை இனையதளங்கள் இருக்குன்னு தெரிஞ்சிக்கனுமா எண்டர் தி வேர்ல்டு-க்கு செல்வோம்.Youtube வீடியோவ HD format-ல டவுன்லோட் பன்னனுமா அண்ணன் அன்பை தேடி,,அன்புதில் சொல்லும் அறிவுரையைக் காண்போம்.

3 ஆல்ரவுண்ட் பதிவுகள்    
          நம்முடைய புவியின் வரலாறு உங்களுக்கு தெரியுமா.எனக்கு தெரியும்.எனக்கு சொல்லித்தந்தவர் வறலாற்று சுவடுகள்.உங்களுக்கும் சொல்லித்தருவார்.சரி நம்ம நடிகைகளோட சம்பளம் எவ்வளவுன்னு உங்களுக்கு தெரியனுமா சகோ மதியோடை மதிசுதா சொல்றாங்க.அடுத்து மனசாட்சி அவர்களின் பெண்களின் சித்திரம் பதிவில் அழகான படங்கள் உள்ளது.அதில் கடைசி படம் ஆண் பெண் கலந்து இருக்கும் அது சூப்பர்.

மேலும் மூன்று கவிதைகள்

    1.இதழ் விரிந்தால்..!
    2.குறுந்தொகை - புதுக் கவிதை
    3.இரவின் மடியில் ... (கவிதை) !
   
மேலும் வாசிக்க...

Monday, April 23, 2012

பிடித்த பதிவுகள் சில

அனைவருக்கும் வணக்கம்.


நீங்கள் சேலையில் நின்றால் தேவதையை விட நீங்கள் அழகா.நீங்க கல்யாணம் கட்ட போறீங்களா இந்தாங்க நம்ம சிட்டுகுருவி காட்டுற நகையை பார்த்துட்டு போங்க .உங்களுக்கு தமிழ் மொழியை தவிர வேறு மொழி கற்க ஆசை இருக்கா.அப்படி ஆசை இருக்குன்னா ஸ்பானிஸ் மொழி கத்துக்கோங்க.

               நீரிழிவு நோய் பிரச்சனை இருந்தால் அதை கட்டுப்படுத்த எங்கள் ப்ளாக் சொல்லும் வழிமுறையை பாருங்க.இலைகளை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆசை இருக்கிறதென்றால் இங்கே செல்லுங்கள்.அம்மாவும் மகனும் பிரிந்து அம்மாவை பார்க்க ஏங்கும் மகன் அம்மா வீட்டிற்கு சென்றால் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி வருகிறது.அது ஏன்
      
                    சிட்டுக்குருவி விமலன் அண்ணன் ஒரு இடத்தை சோலையாய் இருக்கிறது என்கிறார்.அது எந்த இடமா இருக்கும்.ஒரு பொண்ணு நம்ம மத்திய அரசிடம் ஒரு கேள்விய கேட்டாள்.ஆனால் பிரதமர் அலுவலகத்துக்கே அந்த கேள்விக்கு விடை தெரியலையாம்.பிரதமர் அலுவலுகத்துக்கே தெரியாத கேள்வின்னா அது என்ன கேள்வியா இருக்கும்.பார்ப்போம்.இப்போ வெளியில வந்த மூணு படத்துக்கு கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் ஏற்படுகிற காமெடி சமாச்சாரங்களை பார்க்க இங்கே செல்லுங்க.

                      நம்ம தமிழ் மக்களோட கலைகள் அழிந்து கொண்டே போகின்றன.இந்த வகையில் அழியாத கலைகளை பாருங்கள்.என்னங்க நீங்க வெறும் சாதம் சாப்பிட்டு பார்த்திருப்பீங்க ஆனால் தேங்காய் சாதம் சாப்பிட்டுருக்கீங்களா.அதை செய்ய தெரியாதா இதோ தெரிந்து கொள்ளுங்கள்ஒரு காதல் கவிதையை படிங்க அவளிடம் அப்படி என்ன கேட்டுவிட்டேன்..!

                    கொசு விரட்டுரதுக்கு நம்ம கொசு விரட்டி(All out)பயன்படுத்துவோம்.ஆனால் நம்ம கடற்கரை விஜயன் அண்ணன் கணிணி மூலமாகவே கொசு விரட்ட சொல்லிதாரார்.உங்களுக்கு HTML கற்க ஆசை ருக்கா.சகோ தங்கம் பழனி சொல்லி தாராங்க.அண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை என்ற தலைப்பில் சகோ சென்னை பித்தன் எம்.ஆர்.சந்தானலக்ஷ்மி அண்ணாவை முத்தமிட்டுறுக்கிறாங்களாம்.அது எந்த அண்ணா.

மேலும் மூன்று தொழில்நுட்ப பதிவுகள்

மேலும் வாசிக்க...

Sunday, April 22, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பன் மதுரையைச் சார்ந்த சித்திர வீதிக்காரன் என்றும் மதுரை வாசகன் என்றும் புனைப்பெயர் கொண்ட சுந்தர் தான் ஏற்ற பொறுப்பினை வித்தியாசமான முறையில் திறம்பட நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் தன்னைப் பற்றிக் கூறும் போது “மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்து விடப் பட்டவன்” எனப் பெருமையுடன் கூறிக் கொள்கிறார். இவர் எழுதும் இடுகைகள் பெரும்பாலும் நீண்டவைகளாகவும், தமிழ் தட்டச்சுப் பிழைகள் இல்லாமலும் - அவ்ற்றில் பல படங்கள் தரவுகளாகவும் இருக்கும்.

இவர் ஏறத்தாழ 250 பதிவுகளை அறிமுகப் படுத்தி இருப்பார் என நினைக்கிறேன். ஏழு இடுகைகளில் தான் படித்த அத்தனை எழுத்தாளர்களைப் பற்றியும், மதுரையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் எழுதி உள்ளார். மதுரையில் நடக்கும் புத்துகத் திருவிழா - கண்காட்சிகளில் தவறாது கலந்து கொள்வார்.

அருமை நண்பன் சுந்தரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சுந்தர்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்பவர் வைரை சதீஷ். இவர் வைரை சதீஷ் என்ற பெயருள்ள தளத்திலேயே எழுதி வருகிறார். இவர் கணினி, கூகுள், மொபைல், பிளாக்கர் டிப்ஸ் எனப் பல டிப்ஸ்களை வழங்கி வருகிறார். கணினி மற்றும் அலைபேசியில் பயன் படுத்தும் பல மென் பொருள்களைப் பற்றி எழுதி வருகிறார். உங்கள் ஆருயிர் நண்பன் எனத் தளத்தில் விளம்பரப்படுத்தும் இவர் தான் இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர்களில் இளையவர் ஆவார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர். இவரை வருக வருக - அதிக - புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவர் ஏற்கனவே சென்ற ஆண்டு டிசம்பர்த் திங்களில் ஆசிரியப் பொறுப்பேற்றவர். இவர் தானே புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழையினால் உடல் நலமின்றி மூன்று நாட்கள் இணையத்தின் பக்கம் வர இயலாமையினால் குறைந்த பதிவுகளே இட முடிந்ததென வருத்தத்தோடு கூறினார். ஆகவே மற்றுமொரு முறை ஆசிரிய்ப் பொறுப்பேற்க விரும்பினார். விருப்பம் நிறைவேற்றப் பட்டது.

நல்வாழ்த்துகள் வைரை சதீஷ்

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

சங்கத்தமிழ் வளர்த்த ஆலவாயிலிருந்து…


சில புத்தகங்கள் மீதான நெருக்கம் நண்பர்களின் மீதான நெருக்கத்தை விடவும் வலியது. அதை சொல்லி விளங்க வைக்க முடியாது. ஏன் மனது அப்படி புத்தகங்களின் மீது ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்று இன்றுவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை.
                    -எஸ்.ராமகிருஷ்ணன் (காற்றில் யாரோ நடக்கிறார்கள்)
எனது சிறுவயதிலிருந்தே  கதைகள் அதிகம் கேட்டு வளர்ந்ததால் புத்தகங்களின் மீதான காதல் இன்னும் குறையவில்லை. வாசிக்க பழகும் முன் படம் பார்ப்பதற்காகவே புத்தகத்தை விரும்பினேன்.
பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர் இவைகளைத்தான் நானும் முதலில் வாசிக்க பழகினேன். இராணிகாமிக்ஸ் புத்தகங்கள் அடுத்தகட்ட வாசிப்பிற்கு வந்தது. கபீஸ் குரங்கு, விக்ரமாதித்தன்-வேதாளம், இரும்புக்கை மாயாவி எல்லோரும் இன்று வரை நினைவில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
விகடன், குமுதம், இந்தியாடுடே எ நாலாம் வகுப்பு படிக்கையிலேயே வாசிக்க தொடங்கிய பழக்கம் இன்றும் தொடர்கிறது. கிடைக்கும் புத்தகங்களையெல்லாம் வாசித்துகொண்டிருந்த வேளையில் பஞ்சதந்திரகதைகள், திராவிடநாட்டுப்புறகதைகள், தெனாலிராமன்கதைகள், பீர்பால் கதைகள், வால்காவிலிருந்து கங்கைவரை(அப்ப புரியல), துணைப்பாட புத்தகங்களில் இருந்த கதைகள் எல்லாம் வாசித்தேன்.
எங்க ஊரில் நூலகம் இல்லை. எட்டாப்பு வரை எங்க ஊர் பள்ளியில் படித்ததால் நூலகம் மட்டும் எட்டாக்கனியாகவே இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது நூலகத்தில் சேர்ந்தேன். சிறுவர் கதைகள்,யோகா-தியான புத்தகங்கள், பொதுஅறிவு, ரெய்கி-ஹிப்னாட்டிசம் போன்ற புத்தகங்களாக எடுத்து படித்தேன். இதெல்லாம் கடந்து வருவதற்குள் வெகு நாட்களாகி விட்டது.    
பதினொறாம் வகுப்பு விடுமுறையில் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தேன். அந்த சரித்திரநாவல் பிடித்து போக பொன்னியின் செல்வன் ஐந்து பாகத்தை ஆறு நாளில் முடித்தேன். அடுத்து சாண்டில்யனின் கன்னி மாடம் படித்து பிடித்து போய் எங்கள் நூலகத்தில் இருந்த சாண்டில்யன் புத்தகங்கள் எல்லாத்தையும் படிச்சுட்டேன். நல்ல வேளை இதையும் தாண்டி வாசிக்க தொடங்கி விட்டேன்.
1001 அராபிய இரவுகள், கண்ணதாசன்-ஓஷோ புத்தகங்கள், தீபாவளி மலர்கள், வாழ்க்கை வரலாறுகள், மங்கையர் மலர், சுயமுன்னேற்ற புத்தகங்கள் எல்லாம் படித்தேன். பத்தாம் வகுப்பிலிருந்து கல்லூரி சேரும் வரை பக்தி ஸ்பெஷல் வாசகன் வேறு.
விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதாவிலாசம், துணையெழுத்து, தேசாந்திரி எல்லாம் எனக்கு உயிர். பின் ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், தொ.பரமசிவன், கி.ரா, நாஞ்சில்நாடன், சுந்தர ராமசாமி,  ஜெயமோகன், பெருமாள்முருகன் என நல்ல இலக்கிய வட்டத்துக்குள் வந்தேன். உயிர்மை,காலச்சுவடு,அம்ருதா போன்ற இலக்கிய இதழ்களும் என் வாசிப்பை விரிவு செய்ய உதவின.
கண்டது கடியது எல்லாம் வாசித்தேன். ஆனால் எதையும் குப்பை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள் தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி,மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
புத்தகங்களைப் பற்றிய பதிவுகளைத் தொகுத்து உள்ளேன். இணையத்தில் வாசிக்கும் போது வலைப்பக்கங்களில் புத்தகங்கள் பற்றிய பதிவைத்தான் தேடிப்படிப்பேன். அதிலிருந்து சில பதிவுகளை மட்டும் தொகுத்துள்ளேன். மேலும், வாசித்தபுத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும் என்ற எனது பதிவை பாருங்கள்.

  1. தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
  2. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
  3. ரெயினீஸ் ஐயர்தெரு - வண்ணநிலவன்
  4. கொற்றவை - ஜெயமோகன்
  5. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
  6. உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  7. நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
  8. உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்
  9. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
  10. இதற்கு முன்பும் இதற்கு பிறகும் – மனுஷ்யபுத்திரன்
  11. எனது மதுரை நினைவுகள் – மனோகர்தேவதாஸ்
  12. காவல்கோட்டம் – சு.வெங்கடேசன்
  13. ஆழிசூழ்உலகு – ஜோ.டி.குருஸ்
  14. ராஜன்மகள் – பா.வெங்கடேசன்
  15. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
  16. உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் - தாணுபிச்சையா
  17. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
  18. பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்ரன்
  19. அப்பத்தா – பாரதி கிருஷ்ணகுமார்
  20. இசையின் தனிமை – ஷாஜி
  21. வெயில் நண்பன் பிராத்தனை ஒரு தேசம்  – பா.திருச்செந்தாழை
  22. திருநங்கைகள் உலகம் – பால்சுயம்பு
  23. இடைவெளி - சம்பத்
  24. ஆ.மாதவன் கதைகள்
  25. பொய்கைகரைப்பட்டி – அர்ஷியா
எழுத்தாளர்களுக்கு பிடித்த புத்தகங்கள் பட்டியல், பதிவர்களுக்கு பிடித்த புத்தகங்கள் பட்டியலை வாசித்துப்பாருங்கள். அட்சயத்திருதியை வருகிறதாம். உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் பதிவை வாசித்துப்பாருங்கள். நகைகளை வாங்கி சேர்ப்பதைப் போல் புத்தகங்களையும் வாங்குங்கள். இன்றுடன் வலைச்சரத்தில் என்னுடைய பதிவை நிறைவு செய்கிறேன்.
இந்த வார வலைச்சரத்தில் எனக்கு பிடித்த பதிவுகளைக் குறித்து பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த சீனா அய்யாவிற்கு நன்றிகள் பல. மறுமொழிகள் அளித்து ஊக்கமூட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி. மதுரையில் சமணம் குறித்த பதிவை வாசித்துப்பாருங்கள். நானே அறிமுகப்பதிவர்தான். சித்திரவீதியில் உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும்,
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது