காந்தள் மலர் – விழிப்புணர்வுச் சரம்
➦➠ by:
வெங்கட் நாகராஜ்
[பட உதவி: www.tamilpookkal.blogspot.com]
”தனித்திரு.... விழித்திரு.... பசித்திரு.... இது விவேகானந்தரின் முழக்கம்.
ஞானிகள், அறிஞர்கள், சித்தர்கள், முன்னோர்கள் அறிவித்த அந்த விழிப்புணர்வுதான் என்ன?”
[பட உதவி: கூகிள்]
வலைப்பூக்களில்
விழிப்புணர்வு பதிவுகள் எழுதுபவர்களைப் பற்றி இன்று பார்க்கலாம்.
”பொன்வேண்டேன், பொருள் வேண்டேன், மண் வேண்டேன், மனை வேண்டேன், நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்” என்ற வேண்டுதல் இல்லாத நாளும் ஏது. புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு ”நேசம்”, முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பித்தது பற்றி இங்கே எழுதியிருக்கிறார் விஜி.
”புற்று நோய்க்கு தீர்வு மரணம் தானா? இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காது விட்டது தன் தவறோ என்ற வேதனை
அவரை ஆட்டி படைத்தது. நம்ம ஊரிலாவது, நாற்பது வயதை தாண்டியவர்கள் முழு உடல்
பரிசோதனை செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மகனிடம் சொல்லி
புற்றுநோய் விழிப்புணர்வைப் பற்றிய துண்டு பிரசுரம் ஒன்றை ஏற்பாடு செய்து, ஊர்
முழுவதும் எல்லா ஜமாத்திற்கும் விநியோகிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்” என்று
தனது “வலி” என்ற முதல் பரிசுபெற்ற சிறுகதை மூலம் விழிப்புணர்வைச் சொல்லியிருக்கிறார் சகோ ஆசியா உமர்.
ஒரு
சிறு வலி என்றாலும் மருத்துவரை நாடி ஓடச் சொல்வதல்ல கட்டுரையின் நோக்கம். வலி என்பது
ஒரு பாதிப்பின் அடையாளம் என்பதால், அந்தப் பாதிப்பைக் கண்டறிந்து அதை நீக்கி முழு குணமடைய
வேண்டுமேயல்லாது, தற்காலிக வலி நிவாரணிகளை அளவில்லாமல் எடுத்துக்கொண்டு, அதனால் வரும்
பாதிப்புகளையும் இலவச இணைப்பாக வாங்கி வைத்துக் கொண்டுச் சிரமப் பட வேண்டாமே” என்று
சொல்கிறார் ஹுசைனம்மா.
சாலையைக்
கடக்கும்போது கூட விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது. அந்த விழிப்புணர்வினை அழகிய ஆத்திச்சூடியில்
சேலம் மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் சொன்னதை தனது பகிர்வில் நமக்குத் தந்திருக்கிறார் முனைவர் இரா குணசீலன்.
”இந்த
உலகத்தில் மிகவும் புனிதமான இடம் என்று ஒன்று இருக்கிறதென்றால் அது தாயின் கருவரை என்று
தான் சொல்லுவேன்” என்று சொல்லும் பனித்துளி சங்கர், அந்தப் புனிதத் தளத்திலும் இயற்கைக்கு
மாறாக பல கலவரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது என
சிசேரியன் பிரவசத்தினால் சீரழியும்
பெண்கள்
என்ற பதிவினில் பகிர்ந்திருக்கிறார்.
”இயற்கையைக்
காப்போம்! எதிர்காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்!” என்று சொல்லும் செல்வி ஷங்கர்
அவர்களின் டெரர் கும்மி பரிசு பெற்ற கட்டுரையை இங்கே காணுங்கள்.
வலைப்பூ
வைத்திருக்கும் நம்மில் பலருக்கு சைபர் கிரைம் என்றால் என்ன என்று தெரியுமா? எந்தெந்த
குற்றங்களுக்குப் புகார் கொடுக்கலாம், தமிழகத்தில் எங்கே புகார் கொடுக்க வேண்டும் என்ற
விழிப்புணர்வினை நமக்குத் தரும் பகிர்வு தான் பிளாக்கர் நண்பனின் ”சைபர் கிரைம் - ஒரு பார்வை”.
”ஏன் ஹெல்மெட் அணிய வேண்டும்?” சாலை விபத்துகள் அதிகமாக நடப்பது இருசக்கர வாகனத்தால்
என்கின்றனர். எனவே ஹெல்மெட் அணிவது நிச்சயம் உயிரிழப்பைத் தடுக்கும் எனச் சொல்கிறார்
கௌசல்யா அவரது “நாங்க மாறிட்டோம்…. அப்ப நீங்க?” என்ற பகிர்வில்.
[பட உதவி: கூகிள்]
”புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
அப்படித் தெரிந்தும் புகைப்பிடிப்பவர்களை நாம் என்னவென்று சொல்வது. புகை எமக்குப் பகை
என்றாலும் விடுகிறார்களா? புகை பிடிப்பதால் பல நோய்கள் மற்றும் சுவாசக் குழாயில் பிரச்சனைகள்
வருகின்றது” என்றெல்லாம் சொல்கிறார் பவி.
நாளை
வேறு சில பதிவர்கள் பற்றிய அறிமுகங்களுடன் சந்திப்போம்.
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
|
|
சிறப்பான பயனுள்ள வலைத்தள அறிமுகள்.... பாராட்டுக்கள்..
ReplyDeleteகாந்தள் மலர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteஇம்மலர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள அறிமுகங்கள்
நன்றிங்க.
ReplyDeleteவிழிப்புணர்வளிக்கும் இடுகை அருமை நண்பரே..
ReplyDeleteதேவையான பதிவு.
என் இடுகையையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் அன்பரே
ReplyDelete"குடி“மக்கள் சிந்தனைக்கு..
ReplyDeletehttp://gunathamizh.blogspot.in/2012/02/blog-post_03.html
என்ற இடுகையையும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன் நண்பரே..
அறிமுகங்கள் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ
இதுவரை தொடுத்த சரங்களில் இதுதான் உச்சத்தில் நின்னு ஜொலிக்குது!!!!!
ReplyDeleteஇலக்கியத்தில் கேள்விப்பட்ட காந்தளை இன்றுதான் அறிந்துகொண்டேன்.
நன்றி நன்றி
அனைத்தும் பயன்தரும் பதிவுகள். நல்லறிமுகங்களை செய்த உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே!
ReplyDeleteகாந்தள் மலர். இது தான் எங்கள் நாட்டில் (இலங்கையில்)கார்த்திகைப்பூ என்பது. அத்தனை பதிவர்களிற்கும் தங்களிற்கும் வாழ்த்துகள். இடுகை நன்று.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வித்தியாசமாய் மலர்கள் பெயரில் அறிமுகம் செயவது அருமை.காந்தள் மலர் அழகு.
ReplyDeleteவிழிப்புணர்வு பகிர்வில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.நன்றி சகோ.மற்ற அறிமுகங்கள் மிக அருமை.
விழித்துக்கொள் மானிடா என
ReplyDeleteவிழிப்புணர்வு ஊட்டும் அருமையான
பதிவுகள் அரங்கேற்றம்...
அருமையான அறிமுகங்கள் தந்தமைக்கு நன்றிகள் நண்பரே..
ஈழத்தின் கனவோடு பூத்திருக்கும் காந்தள் பூவும் அதோடு இணைத்திருக்கும் விழிப்புணர்வுப் பதிவுகளும் நெகிழ்வாயிருக்கிறது !
ReplyDeletenalla arimukam!
ReplyDeleteவிழிப்புணவிற்கான பதிவுகளை ஒரே இடத்தில் தொகுத்தளித்தது மிக்க நன்று.
ReplyDeleteகாந்தள் மலர் சொல்லும் விழிப்புணர்வு பதிவுகள் அருமை.
ReplyDeleteமிகவும் அவசியமான பதிவுகள். நன்றி வெங்கட்.
வாழ்த்துக்கள் வெங்கட்.
அழகழகான அறிமுகங்கள்.
ReplyDeleteசிகரெட்டாலேயே சிகரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் எனச்சொல்வது போல STOP எனக் காட்டியுள்ள படம் மிகச்சிறப்பாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
"விழிப்புணர்வுச் சரம்" நல்ல அறிமுகங்கள். பாராட்டுக்கள்.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ராஜி: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ விஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ குணா தமிழ்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவரே. உங்களது மற்ற இடுகையும் படித்திருக்கிறேன்.....
ReplyDelete@ புதுகைத் தென்றல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDelete@ துளசி கோபால்: பதிவினை நீங்கள் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ கணேஷ்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ அப்துல் பசித்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ கோவைக்கவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDeleteகாந்தள் மலர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteஇம்மலர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள அறிமுகங்கள்
@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.
ReplyDelete@ ஹேமா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDelete@ சீனி: இன்றைய அறிமுகங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி சீனி!
ReplyDelete@ நிஜாமுதீன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.
ReplyDelete@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....
ReplyDelete@ வை. கோபாலகிருஷ்ணன்: //சிகரெட்டாலேயே சிகரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் எனச்சொல்வது போல STOP எனக் காட்டியுள்ள படம் மிகச்சிறப்பாக உள்ளது.// அந்தப் படம் முகப்புத்தகத்தில் வந்தது!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.
ReplyDelete@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா.
ReplyDeleteஅத்தனையும் நன்று. எனக்குப் புதிய தளங்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete@ துரைடேனியல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteதேடிப்பிடித்துப் படித்துப் போட்ட
ReplyDeleteபதிவுகள்! அருமை!
புலவர் சா இராமாநுசம்
@ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஎன் வலைப்பூவிலிருந்து பொருத்தமான கட்டுரையைத் தேர்ந்தெடுத்ததற்கு மிக நன்றி!! நிச்சயம் மிக அதிகம் பேரைச் சென்றைடைய வேண்டும் என்ற என் நோக்கம் நிறைவேற உதவியதற்கு மீண்டும் நன்றி.
ReplyDelete@ ஹுசைனம்மா: அதிகம் பேரைச் சென்றடைந்தால் எனக்கும் மகிழ்ச்சி. அதனால் தான் இந்தப் பகிர்வுகளை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்தேன்.
ReplyDeleteதங்களது வருகைக்கும்கருத்திற்கும் மிக்க நன்றி.
தில்லி அண்ணாச்சியின் சரம் வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது! புத்துணர்வான சிந்தனைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDelete@ தக்குடு: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு!
ReplyDeleteசிறப்பான பகிர்வு.
ReplyDelete@ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஎன்னுடைய "பட்டறிவும் பாடமும்" தளத்தில் இருந்து "இயற்கையைக் காப்போம்” என்ற பதிவினை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி
ReplyDelete@ செல்விஷங்கர்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வி ஷங்கர்.
ReplyDelete