20.02.2012 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்

சம்பத் குமார்

தமிழ் பேரன்ட்ஸ்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

Monday, February 26, 2007

வலைப்பூ ➜ வலைச்சரம்

தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில் வலைப்பதிவுகளின் பட்டியலை உருவாக்கி தமிழ் வலைப் பதிவாளர்களை ஒருங்கிணைத்த சந்திரமதி கந்தசாமி இன்னொரு அற்புதமான முயற்சியையும் செய்திருந்தார். அதுதான் வலைப்பூ இதழ். இதில் வாரம் ஒரு வலைப்பதிவர் வலைப்பூ ஆசிரியராகப் பங்கேற்று மற்றவர்களுடைய வலைப்பதிவுகளை விமர்சனம் செய்து அறிமுகம் செய்து வைப்பார்கள். நிறைய புதிய வலைப்பதிவாளர்கள் அதன்மூலம் கவனப் படுத்தப் பட்டார்கள். முக்கியமான பதிவுகள் அதில் சுட்டிக் காட்டப் பட்டும் விமர்சிக்கப் பட்டும் தவறவிடப் படாமல் வாசிக்க உதவின.

வலைப்பூ இதழ் ஆசிரியர் என்பது பின்னர் தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவாக மாறியது. ஆனால் வலைப்பூவில் வலைப்பூ ஆசிரியர் செய்தது போல தாங்கள் வாசித்த பதிவுகளின் விமர்சனமாகவோ தொகுப்பாகவோ நட்சத்திரப் பதிவர்கள் செயல்பட அவசியமில்லாமல் தங்கள் படைப்புகளை அந்த வாரத்தில் முதன்மைப் படுத்துவதாக மட்டுமே அமைந்து விட்டது. அதே சமயம் தமிழ்மணத்தின் இப்போதைய பூங்கா இதழ் வலைப்பதிவர்களின் படைப்புகளை தொகுத்து வழங்குவதன் மூலம் இன்னொரு விதமாக அந்த சேவையை மீண்டெடுத்துள்ளது.

கில்லி ஓரளவுக்கு வலைப்பூ போன்றதொரு அமைப்பை கொண்டுள்ளது. எனினும் பெரும்பாலும் ஆங்கிலப் பதிவுகளையே கில்லி முன்னிலைப் படுத்துகிறது என்பதால் இதுவும் வலைப்பூ ஆசிரியர் அளவுக்கு தமிழ் வலைப்பூக்களை அறிமுகம் செய்வதாக இல்லை.

பாஸ்டன் பாலா தனிநபராக தனது snape judgement மூலம் சில பதிவுகளை அறிமுகம் செய்து ஆவணப் படுத்தி வருகிறார்.

எனினும் அன்றைய வலைப்பூ தந்த சேவையை, திருப்தியை வழங்கும் சேவைகள் இப்போது இல்லாததால் அதுபோன்றதொரு முயற்சியை மீண்டும் உருவாக்க உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன்.

அன்றைய வலைப்பூ மூலம் பல புதிய பதிவர்களுக்கு ஊக்கமும் வெளிச்சமும் கிடைத்தது. பல்வேறு விதமான விமர்சனப் பார்வைகள் மூலம் முக்கியமான பதிவுகள் கவனப் படுத்தப் ட்டன. அதற்கு மேலாக அவை அங்கே ஆவணப் படுத்தப் பட்டன. அது போன்றதொரு முயற்சி மீண்டும் தமிழ் வலைப்பதிவுலகிற்கு தேவை என்ற எண்ணத்தில் விளைந்த ஒரு முயற்சி இது.

வலைச்சரம் என்ற வலைப்பதிவு அதற்கென உருவாக்கப் பட்டுள்ளது. வலைப்பதிவர்களில் ஒருவர் ஒரு வார காலம் தன் பார்வையில் கவர்ந்த, முக்கியமான வலைப்பதிவுகள், இணைய தளங்களைப் பற்றி சில வரிகளில் சிறு விமர்சனக் குறிப்பினை இட்டு அறிமுகம் செய்வார்.

இதற்கென தேர்வு செய்யப் படும் வலைப்பதிவர் அந்த ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று பதிவுகள் முதல் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் இடலாம். ஒவ்வொரு பதிவும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவு அல்லது இணைய தளத்தை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். இது போன்ற சில விதிமுறைகளின் அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப் பட்ட நோக்கங்களுடன் வலைச்சரம் உங்கள் முன் வலை(ப்பதிவு)ச்சரம் தொடுத்துப் படைக்க வருகிறது.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக வலைச்சரத்தின் முதலாவது ஆசிரியர் பொறுப்பை பதிவர் பொன்ஸ் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த தளம் மற்றும் முயற்சி குறித்த விமர்சனங்களும் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றன...

16 comments:

Boston Bala said...

அடடே.. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் :)

லக்கிலுக் said...

அருமையான முயற்சி!!!

மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

வரவனையான் said...

வாழ்த்துக்கள்.


(ஆனால் லக்கி உண்மையாகவே வாழ்த்தினாலும் எனக்கு சிரிப்பு வருவதை தவிர்க்கமுடியவில்லை )

தேவ் | Dev said...

நல்ல முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் !!!

ஞானவெட்டியான் said...

இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.

சென்ஷி said...

//அருமையான முயற்சி!!!

மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!//

ரிப்பீட்டே

சென்ஷி

துளசி கோபால் said...

ரொம்ப நல்ல விஷயம்.

ரொம்ப நாளைக்குமுன்னாலே மதியுடன் பேசும்போது 'வலைப்பூ'வை மீட்டு எடுக்கலாமான்னும்
கேட்டாங்க. ஆனா நேரம் பத்தாக்குறையா இருக்கு. அதுவுமில்லாம இப்ப 1700 வலைப்பதிவுகளுக்குமேலே
இருக்கு பாருங்க. படிக்க முடியுமா? ஒரு சிலதை மட்டும் குறிப்பிட்டா, கண்ணில் படாமப்போன நல்ல பதிவுகளை
எப்படி முன்னே கொண்டுவந்து வெளிச்சத்தில் வைக்கறதுன்னு பலவித எண்ணப்போக்கால் அதை செயல்படுத்த முடியலை.

இப்ப நீங்க முன்வந்து செய்யறது சந்தோஷமா இருக்கு.

வாழ்த்து(க்)கள்.

பொன்ஸ் கணினி சம்பந்தப்பட்டவைகளைச் சொல்லி இருக்கறதும் நல்லா இருக்கு. என்னமாதிரி இருக்கற
க.கை.நா.வுக்கு பொறுமை வேணும்,நிதானமாப் படிச்சுப் புரிஞ்சுக்கறதுக்கு !

வைசா said...

மனமார்ந்த வாழ்த்துகள், பொன்ஸ்.

வைசா

SP.VR.சுப்பையா said...

வலைச்சரம் வாழ்க! வளர்க!
இந்தவார ஆசிரியர் பொன்ஸ் அம்மணிக்கு வாழ்த்துக்கள்
SP.VR.சுப்பையா

இரமணன் said...

வணக்கம்
உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்

முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள விரும்ப்புகிறேன்.

இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

நன்றி
இரமணன்
www.thurikai.com

எஸ்.கே said...

வித்தியாசமான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

வலைச்சரத்தை வலைச்சரத்தில அறிமுகம் செய்தது நீங்கதான்!:-)

vanathi said...

சிறியவனாகிய என்னை உங்களது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, வாழ்த்துக்கள்

தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி ரமேஷ்.

sarujan said...

சிறியவனாகிய என்னை உங்களது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, வாழ்த்துக்கள்

தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி ரமேஷ்.

சீராசை சேதுபாலா said...

ஆஹா! தமிழ் வலைப்பூக்கள் பட்டியல் தொகுத்து வெளியிட ஆசை. தங்கள் வலைச்சரம் கண்ணில் பட்டது எனது நல்வாய்ப்பு. மறைந்த பாசிட்டிவ் அந்தோணிமுத்து(மாற்றுத் திறனாளி) அவரது நினைவு நாள் அன்று நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு அவரது குடும்பத்தினருக்கு ( தாயாக இருந்த தமக்கைக்கு) உதவிட வேண்டும்.
இந்த ஆண்டில் இதுவரை 10 பதிவுகள். rssairam.blogspot.com மனித தெய்வங்களும் சில சேகரிப்புக்களும் அதன் தலைப்பு. தங்களைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பினை உடனே எதிர் பார்க்கின்றேன். சென்னை என்றால் மிகவும் எளிது. rssairam99@gmail.com
நன்றியுடன்-ச.இராமசாமி

வை.கோபாலகிருஷ்ணன் said...

தகவலுக்கு மிக்க நன்றி. எப்படி வோட் அளிப்பது என்று எனக்குப் புரியவில்லையே!

தயவுசெய்து தெரிவித்தால் வோட் அளிக்க இயலும்.

என் இ.மெயில் valambal@gmail.com

அண்மைய மறுமொழிகள்

மகளிர் சக்தி

தமிழ் மணத்தில் - தற்பொழுது