07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 30, 2011

உரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று



நறுக் - 3 
நிச்சயதார்த்ததிற்கு பிறகு.....
அவள்: அப்பாடி... இதுக்கு தான் ரொம்பநாளா நான் தவம் கிடந்தேன்.


அவன்: நீ என்னை பிரிந்துவிடுவாயா?

அவள்:  ச்சே.ச்சே.. கிடையவே கிடையாது 

அவன்: நீ என்னை விரும்புகிறாயா? 

அவள்: நிச்சயமாக. செய்தேன், செய்கிறேன். இன்னமும் செய்வேன்

அவன்: நீ என்னை ஏமாற்றினாயா? 

அவள்: ச்சே.ச்சே. அதற்கு நான் செத்தே போய்விடுவேன்.. 

அவன்: எனக்கு ஒரு உம்மா கொடுப்பாயா

அவள்: நிச்சயமாக. அது எனக்கு பேரின்பம். 

அவன்: நீ என்னை ஹிம்சிப்பாயா? 

அவள்: ச்சே.ச்சே. நான் அதுபோல ஆள் இல்லை... 

அவன்: நான் உன்னை நம்பலாமா? 

அவள்: உம். 

அவன்: ஹோ டார்லிங்.. 


திருமணத்திற்கு பிறகு அவளும் அவனும் என்ன பேசிக்கொண்டார்கள்?

கடைசியில் பார்க்கவும்..

******
போன பதிவில் உங்கள் ரசிகனைப் பார்த்தோம். இந்தப் பதிவில் ஒரு ரசிகன் இருக்கிறார். பர்மிங்க்ஹாமில் இருக்கும் புதுச்சேரிக்காரர். காதல் ரசிகன் என்று முத்தாய்ப்பாக சொல்லலாம். சின்ன சின்ன தப்புப் பண்ணுவேன் என்று ப்ளாக் சுயவிவரத்தில் சொல்கிறார். அதுவே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஈர்க்கிறது. துரையின் லேட்டஸ்ட் பொய்க்கால் காதலி.

கரந்தையில் பேராசிரியராக இருக்கிறார் ஹரணி. ஹரணி பக்கங்கள் என்ற வலைப்பூவில் தமிழேற்றுகிறார். தூய தமிழில் அழகாக எழுதுகிறார். என்றைக்காவது அத்தி பூத்த்தார்ப்போல நான் நன்றாக எழுதினால் வந்து நல்லாயிருக்கு என்று கருத்துரைப்பார். கடிதம் எழுதுவது பற்றி மடலேறுதல் என்று இவர் எழுதிய பதிவு, அந்தக்காலத்தில் கடிதாசி போட்ட எல்லோருக்கும் உரைக்கும். 

ஆதிரா ஒரு தமிழ் டாக்டர். தமிழுக்கு டாக்டர் இல்லை பைந்தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் பற்றி இருப்பவைகளை அந்தந்த வரிகளை மேற்கோள் காட்டி ஔஷதக் கட்டுரைகள் எழுதும் டாக்டர். அவை எல்லாம் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளியாவது சிறப்பு. நெல்லிக்கனியின் விசேஷ மருத்துவக் குணங்கள் பற்றி தேவலோக அமுதத்துளி என்று எழுதிய பதிவு இங்கே.

சிமுலேஷன் படைப்புகள் என்று எழுதுகிறார் சுந்தரராமன். நிறைய இபாவின் நூல்களை படித்து நூல்நயம் எழுதுகிறார். சில புதிய புத்தகங்கள் என் போன்ற புழுக்களின் கண்களுக்கு தென்படுகிறது. பத்து பதினைந்து சைட் வைத்திருக்கிறார். வலையுலக வலைப்பூ கிருஷ்ணன் போலிருக்கிறது. கர்நாடக சங்கீதம் கரைத்துக் குடித்திருப்பார் போல தெரிகிறது. சினிமாப் பாடல்களில் கர்நாடக சங்கீத மெட்டுக்கள் பற்றி புஸ்தகம் வெளியிட்டிருக்கிறார்.

ரேகா ராகவன் ஒரு பக்க கதை எழுதும் வித்தகர். நிறைய அவரது சிறுகதைகளை பார்த்து வியந்திருக்கிறேன். இருநூறு முன்னூறு வார்த்தைகளில் சாகசமாய் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். ஒரு மாதிரி இண்டர்வியு இங்கே. 

நானும் ஒரு நாள் இலக்கியவாதி ஆகவேண்டும் என்ற பெருந்தீ குபுகுபுவென்று உள்ளே பற்றி எரிகிறது. கீழே இருக்கும் பெரும் பேனாக்காரர்களின் எழுத்துக்களை படித்தால் மனதில் அச்சமும் ஐயமும் எழுகிறது. இரும்படிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலை என்றாலும்... பாழாய்ப் போன மனது கேட்காமல் அவ்வப்போது நான் சைட் அடிக்கும் திருத் தளம்.
 உலக இலக்கியம். என்ற வலைத்தளத்தினில் இந்த இலக்கியச் சேவை புரியும் "அழியாச் சுடர்கள்" ராம் புகழ் இணையதள வரலாற்றில் மங்காப் புகழ் பெற்றிருக்கும்.

******
தி.பிறகு..

திருமணத்திற்கு பிறகு ஆதர்ஷ தம்பதிகளாக இவர்கள் இருவரும் அன்னியோன்யமாக சம்பாஷித்தது கீழிருந்து மேல்.


-

மேலும் வாசிக்க...

Wednesday, June 29, 2011

ரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்


dog sits at bar


 
நறுக் - 2 - ரொம்பப் பிடிக்கும்
"டார்லிங்."

"என்னப்பா"
 
"டா-ர்-லி-ங்.."

"ம்..."

"டா--ர்--லி--ங்...."

"எ-ன்-ன-டா."

"டார்லிங் உங்கவீட்லயே எனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?"

"கைய நோண்டாம யாருன்னு சொல்லு"

"சொல்லட்டா"

"சொல்லுப்பா"

"சொ-ல்-ல-ட்-டா----"
"சொல்லித்தொலையேண்டா.."

"நின்னா சின்னதாவும் உக்காந்தா பெருசாவும் இருப்பாங்களே..."

"நின்னா சின்னதா... உக்காந்தா பெருசாவா... ச்சே.. யாரு.."

"ஆமாம் டார்லிங்.. நெசமாத்தான்..."

"யாருப்பா..."

சொன்னான். (கடைசியில் பார்க்கவும்)

பதிலைக் கேட்டவுடன் ஆசையாய் இருந்த டார்லிங் ஆவேசமாய் பீச்சில் கஷ்டப்பட்டு ஒரு கல்லை தேடி பொருக்கி எடுத்துக் கொண்டு அடிக்க துரத்துகிறார்.. 

ஆம்பளை டார்லிங் சொன்னது கடைசியில்...

***********
என்.கணேசன் என்பவர் என்.கணேசன்.பிளாக்ஸ்பாட்.காமின் ஓனர். ஆனந்த விகடனில் எழுதியதிலிருந்து எழுத்தாளராக மிளிர்கிறார். பால் பிரண்டனின் பார்வையில் இந்தியப் பக்கிரிகள் பற்றியும் சயனைடு விழுங்கியும் சாகாத சாமியார்கள் பற்றியும் எழுதியிருப்பது படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இன்னும் நிறைய எழுதியிருக்கிறார். அவசியம் பாருங்கள். என் கணேசன் உங்கள் கணேசனாகி விடுவார்.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையில்லை என்ற ரமண மகரிஷியின் அநுபூதியை வலைமுகப்பில் எழுதி வைத்து வ.ஸ்ரீநிவாசன் கனவு மழையில் எழுதுகிறார். தினம் ஒரு பதிவு போட்டு அதகளப்படுத்தாமல், மாதம் ஒன்று போட்டாலும் அமர்க்களமாக போடுகிறார். அசோகமித்ரனுடன் தி.ஜா பற்றிய இவரது பேட்டியில் தி.ஜாவை பற்றி கால்வாசியும் அ.மி பற்றி முக்கால்வாசியும் தெரிந்துகொள்ள முடிகிறது. அசோகமித்ரனின் எவை இழப்புகள் என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு அ.மியின் பல முகங்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு முறை சென்ற நம்மை va. srinivasan பலமுறை வா வாவென்று அழைக்கிறார்.

திருவாளர் ரவி பிரகாஷ் எழுதும் வலைப்பூ உங்கள் ரசிகன். விகடனின் காலப் பெட்டகத்தை இத்தலைமுறைக்கு பொக்கிஷமாக தொகுத்தவர் இவர். வலைப்பூவிற்கு உங்கள் ரசிகன் என்று பெயர் வைத்திருந்தாலும் பதிவை படிக்கும் நம்மையெல்லாம் அவருடைய ரசிகனாக மாற்றுகிறார்.  என்னைக் கவர்ந்த அழகிகள் என்று இவர் எழுதிய ஒரு பதிவு படங்களுடன் பந்தாவாக இருக்கிறது. இமைக்காமல் 'பார்த்து', படித்து இன்புறுங்கள்.

பயமறியாப் பாவையர் சங்கம். தலைப்பே சுண்டி இழுத்தது. ஒரு கூடை நக்கல். ஒரு கூடை சிரிப்பு. ஒன்றாக சேர்த்தால் என்று தலைப்புக்கு கீழே டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். ஐந்தாறு பேராக சேர்ந்து கூட்டணி அமைத்து தாக்குகிறார்கள். சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. நக்கல் நாட்டியமாடுது. காக்க காக்க ரீமேக் ஒரு வெள்ளிவிழா ஹிட். 2009 க்கு பிறகு இந்த வலைப்பூ அப்டேட் ஆகவில்லை என்றாலும் இடது பக்க மார்ஜினில் இருக்கும் இந்த வலைப்பூவின் டீம் மெம்பர்கள் வலைப்பதிவை படித்து மகிழுங்கள்.

வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு என்று தத்துவார்த்தமாக பெயர் வைத்து சமுத்ரா சுகி என்று சுயமாக பெயர் சூட்டிக் கொண்டு எழுதுகிறார் இவர். கலைடாஸ்கோப் என்று இவர் எழுதும் பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இவரது வாசிப்பின் வீச்சு ரேடியோ கதிர்களாக வீசுகின்றன. அணு அண்டம் அறிவியல் என்று ஒரு விஞ்ஞானத் தொடர் வீராசாமியாக எழுதுகிறார். ரசிக்க வைக்கும் பதிவுகள். பிறருக்கு பின்னூட்டம் மட்டும் Super, Good One என்று போடுவார். மௌனம் அவ்வளவு பேசியதே ஜாஸ்தி தானே! 

******

கடைசியில் பார்க்கச்சொன்னது:

"உங்க வீட்டு டாமிதான்". போன பதிவில் எழுதிய வாத்தியாரைப் பார்த்து நான் கிறுக்கினது. புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட வல்லிய ச்சூடு. சரியா?

பட உதவி: http://stuffistolefromtheinternet.com

-
மேலும் வாசிக்க...

Tuesday, June 28, 2011

ஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று

communication


நறுக் - 1- ஹலோ யார் பேசறது

"ஹலோ"

"ஹலோ"

"யார் பேசறது?"

"நான்தான்"

"நாந்தான்னா யாரு?"

"நான்தான் ரேவதி"

"ரேவதி அப்பா இல்லையா?"

"இல்லை"

"அம்மா இல்லையா?"

"இல்லை"

"சரி அப்பா வந்தா ராமன் டெலிபோன் பண்ணினதாகச் சொல்லு.."

"யாரு?"

"ராமன். எழுதிக்கோ ரா-ம-ன்"

"ரா எப்படி எழுதறது "

"சரிதான் பாப்பா வீட்ல வேற யாரும் இல்லையா?"

"சேகர் இருக்கான்."

"சரி சேகரைக் கூப்பிடு..."

"சேகர் இந்தா.."

இதுல என்னவா? கடைசியில பாருங்க....

*****************
திருமதி இராஜராஜேஸ்வரிக்கு பிறகு வலைச்சர அறிமுகம் எழுதுவது தலைகீழாக அந்தரத்தில் நடப்பதற்கு சமானம். அவரது கடந்த ஏழு நாள் பதிவை யாரேனும் மொத்தமாக திரட்டி வைத்திருந்தால் அதுதான் ஒரு நிகழ்காலத் தமிழ்ப் பதிவர்கள் கையேடு.

என்னால் முடிந்த அளவிற்கு தொடுக்கப்பட்ட அறிமுகங்கள் கீழே..

பார்த்தது கேட்டது படித்தது என்று ஒரு வலைப்பூ. பழைய சென்னையைப் படம் பிடித்து நிறைய இடங்களில் பிரேம் போட்டு மாட்டியிருக்கிறார்கள். பழைய தமிழகத்தை அதாவது, தஞ்சையை, மதுரையை யாரோ படம் பிடித்ததை எடுத்து பொக்கிஷமாக அந்தக் கால தமிழகம் என்று ஒரு பதிவாக போட்டிருக்கிறார் பிகேபி. வருடத்திற்கு வருடம் தஞ்சையின் பரிணாம வளர்ச்சி தெரிகிறது. திருச்சி அப்போதே தஞ்சையை விட பிக் சிட்டி என்று புரிகிறது. மலைக்கோட்டை மேலிருந்து பார்த்தால் காவிரி கரைபுரண்டு ஓடுவது தெரிகிறது. அற்புதம். அற்புதம். நிறைய டெக்னாலஜி கூட எழுதுகிறார். சுவாரஸ்யமான வலைப்பூ.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்று ஒரு எழுத்தாளர். விகடன் பிரசூரம் இவர் எழுதிய இரண்டு புக் போட்டிருக்கிறார்கள். பெரிய ஆள். எழுத்திலும், ஏற்றத்திலும். போன வருடம் ஜூலையில் கல்கி பத்திரிகை செல்லும் இடமெல்லாம் ஒரே மசால் வடை வாசனை. என்னடான்னு எல்லோரும் ஆராய்ச்சி செய்து பார்த்தால் அதில் செவ்வடையான மசால்வடையே! அப்டின்னு ஒரு செம்மொழிக்கட்டுரை. மனுஷர் கலக்கிட்டார்.


ராமச்சந்திரன் உஷா ஒரு எழுத்தாளர். நுனிப்புல் என்று வலைத்தளத்திற்கு பெயர் வைத்து விட்டு வாசிக்க வருகிறவர்களுக்கு முழு விருந்து வைக்கிறார். சமீபத்தில் இவர் எழுதிய இரவுக் கட்டுரை மதுமிதா அவர்கள் தொகுத்த "இரவு" புத்தகத்தில் இடப்பெற்றது. அது இங்கே.  இமை மூட மறுக்கும் இரவுகள்

காதலிப்பது பற்றி ஒரு பொறுப்பான அக்கா என்னவெல்லாம் எண்ணுவாள். முப்பது வரியில் வரிக்கு ஓரிருவரி எழுதி ஒரு கவிதையில் அசத்துகிறார் ஜகன். காதலிப்பது பற்றி இவர் எழுதிய ஒரு கவிதை அப்படியே அடித்துப்போடுகிறது. இரண்டிரண்டு வரிகளில் வீட்டிற்கு மூத்தவளின் கடமைகளை பட்டியலிட்டுள்ளார்.

நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அவர்களது வலைப்பூ வாரணம். வலை முகப்பில் மூன்று சுழி ணவோடு சேர்த்து ஒரு யானையைக் கட்டி வைத்திருக்கிறார். ஆடிக்கும் அமாவாசைக்கும் எழுதினாலும் நிறைய அமாவாசை பல ஆடிக்கள் தாங்கும் பதிவாக வெயிட்டாக எழுதுகிறார். சாம்பிளுக்கு ரெண்டு.
1. எழுத்து எங்கிருந்து வருகிறது?
 2. தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டம்

இன்றைய வரிசையில் பிகேபியை தவிர மீதமிருப்போர் அபூர்வமாகத்தான் எழுதுகிறார்கள். ஆனால் எழுத்து அபூர்வமாக இருக்கிறது.




**********
என்னவா? சேகருக்கு 1 வயசு.
இது வாத்தியார் எழுதியது.

பின் குறிப்பு: முடிந்த வரையில் புதுப்புது அறிமுகமாக தருவதற்கு முயற்சிக்கிறேன்.  தினமும் இந்தப் பதிவில் ஆரம்பித்தது போல சில நறுக் கதைகள்/டயலாக்  பதியலாம் என்று எண்ணம்.

படக் குறிப்பு: நாம ஒன்னு கேட்டா அவங்க ஒன்னு செஞ்சுத் தரும் அனைத்து தொழில்நுட்ப விற்பன்னர்களுக்கும் மேற்கண்ட படம் சமர்ப்பணம். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி எல்லா ஈமெயில் இன்பாக்ஸ்சையும் சகட்டுமேனிக்கு நிரப்பிய படம்.

-

மேலும் வாசிக்க...

Monday, June 27, 2011

அடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.

self portrait

ஆசிரியர் என்றாலே ரொம்ப பயந்தவன் நான். அதுவும் நான் படித்த மீசை வைத்த அத்யாபக்(अथ्यापक) என்றால் 50% அடிஷனல் மரியாதையான பயம். நான் தக்ஷின பாரத ஹிந்தி பிரச்சார சபாவினர் வைத்த மத்திமா தேர்வில் கோட் அடிக்காமல் செகண்ட் கிளாசில் ஒரே முயற்சியில் தேறிய பண்டிட். சிலம்பம் சுற்றும் வாத்தியாரைக் கூட பவ்யமாக காலைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வேன். குருவிற்கு ஒஸ்தி மரியாதை ஜாஸ்தி கொடுப்பவன். அவர்களிடம் மரியாதையை சரி சமமாக ஊற்றிக் கலந்த பயம் என் ரத்தத்தில் ஓடுகிறது. திருடன் கையில் சாவி கொடுப்பது போன்ற சீனா சாரின் அழைப்பை ஏற்று ஆசிரிய நாற்காலியை  அலங்கரிக்க(?!) (அ) அபகரிக்க (அ) அமர ஒத்துக் கொண்டேன். ஒரு வாரம் நான் உட்காரும் சீட்டில் யாரும் 'பின்' சொருகாமல் இருந்தால் மிக்க சந்தோஷப்படுவேன். 

சுயபுராணம், சுயதம்பட்டம், சுயவிளம்பரம், சுயசொரிதல் என்று சுயம் இருக்கும் எல்லாவற்றையும் முதல் நாள் இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று சொன்னார் சீனா. ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை. ஆனால் கடை விரித்துவிட்டேன். என்னுடன் பள்ளி, கல்லூரி படித்தவர்களுக்கு தெரியும். நான் ஒரு வாயரட்டை. பேச்சுப் பட்டறை. பாட, பேச, கெட்ட வார்த்தையால் திட்ட, சிரிக்க, சாப்பிட, கொறிக்க, குடிக்க, ஊத, உறிஞ்ச, முத்தமிட, கொட்டாவி விட, பிளந்து குறட்டை விட்டு தூங்க, சிலரை கடிக்க என்று வாயைப் படைத்த பரம்பொருள் எனக்கு மட்டும் முக்கால்வாசி நேரம் பேசுவதற்காக மெனக்கெட்டு செய்து அம்சமாக பொருத்திவிட்டான்.

நாளுக்கு நாள் கடியின் வீச்சு அதிகமானதால் தாங்கள் தப்பிப்பதற்காக சுயநலம் மிகுந்த நண்பர்கள் சிலர் என்னை எழுதத் தூண்டினார்கள். பொதுவெளியில் வலைப்பூ ஆரம்பிக்கும் போது இதுவரை நான் கடந்து வந்த தமிழாசிரியர்கள் கையில் பிரம்புடன் கண்ணில் முறைப்புடன் ஒருமுறை என் கண்முன்னே பரேட் நடத்தினார்கள். போதும். இத்தோடு நிறுத்திக்கொள்வோம். இனி எழுதிக் கொல்வோம். இதுவரை எழுதிக் கிழித்தவைகளை கொஞ்சம் பார்ப்போம்.

2007-ம் வருஷம் "ப்ளாக்ன்னா இன்னாபா?" என்பதற்காக அரசியல்வாதிகள் போல ஊர்ப்பெயரை முன்னால் சேர்த்து ஒரு வலைப்பூ பின்னி எனது திருமுகத்தை (பயந்துடுவீங்க! ஜாக்கிரதை!) மட்டும் ஏற்றி முதல் பதிவிட்டேன். பதிவுலகம் அப்போது லேசாக அதிர்ந்தது எனக்கு அப்பட்டமாக தெரிந்தது. அப்புறம் சுமார் மூன்று வருடம் தமிழில் நன்றாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டு 2010- பிப்பில் கச்சேரியை ஆரம்பித்தேன். "இப்போது நீ என்ன முத்தமிழறிஞரா?" என்று என் நெஞ்சுக்கு நேராக விரல் நீட்டுபவர்கள் சற்றே மன்னிக்க. பதிவுலகில் என்னுடைய வலைப்பூவின் பெயர் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதற்காக பெயர்க்காரணம் சொன்னேன். நிறைய குடும்பங்களில் உறவுகள் பிச்சுப்போட்டது போல உலகெங்கும் விரவியிருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்க இஷ்டமித்திர பந்துங்கள் எழுதினேன். என் மானசீக ஆசான் சுஜாதாவின் நினைவு தினத்தன்று ராஜனுக்கு ராஜன் இந்த ரெங்கராஜன் தான் என்று அஞ்சலி செலுத்தினேன். 

பரமசுகர் என்ற போலிச்சாமியார் பற்றி நானெழுதிய முதல் கதை இரண்டு பின்னூட்டங்களுடன் அமோக வரவேற்பை பெற்றது. மகளிர் தினம் ஒன்று வந்ததில் ஜிப்பா போடாத கவிப்பேரரசாக அவதாரம் எடுத்தேன். வலைக் கவிஞர்கள் வருத்தம் கொண்டனர். சொல்லனாத் துயர் அடைந்தனர். வாளென வீசிய எனது கவிதைப் பேனாவுக்கு ஒய்வு கொடுத்தேன். எஃப் டிவியின் கலைச்சேவை நிறுத்தியபோது பொது நிகழ்வுகள் பற்றி எழுதிப் பார்த்தேன். மீண்டும் இரண்டு பின்னூக்கங்கள் கிடைத்தது. லோக்கலில் ஆஞ்ஜூ கோயிலுக்கு போய்விட்டு வந்ததும் Fair & Lovely பூசிய ரயிலில் சென்று வந்ததும் சமகால பயண இலக்கியங்கள் ஆயின. சாமியாரைப் பற்றி கதை எழுதிய நான் வீடியோ 'பிட்டில்' வாத்து மேய்த்த நடிகையுடன் பின்னிக்கொண்ட ஆனந்தமயமானவருக்கு பத்து நெத்தியடி யோசனைகள் சொன்னேன். எல்லோரும் நீங்களே ஒரு ஆஸ்ரமம் அமைக்கும் அளவிற்கு திறன் படைத்தவர் என்று உளமார பாராட்டினார்கள். இரண்டு சிஷ்யர்கள் வீட்டு வாசல் கதவை தட்டினார்கள்.

ஜட்டி இல்லாமல் ரயில் பயணம் செய்த மக்களை பற்றி நான் எழுதியதை தேடிப் பிடித்து "நல்லாயிருக்கு" என்று யூத்ஃபுல் விகடனில் பிரசூரித்தார்கள். குஷ்பூவும் நானும் சேர்ந்து பார்த்த விண்ணைத் தாண்டி வருவாயா பற்றி நான் எழுதிய விமர்சனம் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு அச்சடித்து ஸ்பெஷலாக வழங்கப்பட்டது. கும்பமேளாவைப் பற்றி போர்ஃப்ஸ் பத்திரிகையில் அபிஷேக் ரகுநாத் எழுதியது என்னை வெகுவாகக் கவர அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப்'படுத்தினேன்'. கோடைக்கால சிறப்பு முகாம்கள் எதிலும் என் பிள்ளைகளை சேர்க்காமல் கொடைக்கானலுக்கும் மதுரைக்கும் சென்று மீனாட்சியின் அருள் பெற்று திரும்பியதை பற்றி பதிவிட்டிருந்தேன். 

உலக வலைப்பூக்களில் முதன் முறையாக கார்த்திக்கின் காதலிகள் என்று காதல் ரசம் சொட்டும் தொடர் எழுதி மக்கள் மீது மன்மத அம்பு போட்டேன். பால் தி ஆக்டோபஸ் ஆருடம் சொல்லிக் கலக்கிய காலத்தில் அதை ஒரு பிரத்யேக பேட்டி எடுத்தேன். மகாபாரதத்தில் வரும் நகுஷனைப் பற்றி சர்ப்ப..சர்ப்ப.. என்று எழுதி காப்பியம் படைத்தேன். ஆகஸ்ட்டில் சென்னையில் அடித்த பெருமழையில் பத்திரமாக நீந்திக் கரையேறி நான் இப்பெரு நகரத்தில் திரவியம் தேடுவதை பற்றி அங்கலாய்த்தேன். சினிமாவிற்குப் பெயர் வைக்க திணறுபவர்கள் இங்கே அணுகவும். போதாத காலமாகிய ஓரிரவில் மணியின் ராவணன் பார்த்துவிட்டு நான் பட்ட பாடு இங்கே.

மோகன்ஜி பதிவில் யானை ஜோக் ஒன்றிற்கு நானும் பத்மநாபனும் பின்னூட்டமிடப் போய் அது யானை மீது சத்தியம் என்ற பதிவாக மலர்ந்தது. வலையுலகில் பின்னூட்டங்களை திரட்டி பதிவிட்ட பெருமை என்னையே சாரும். (எழுத ஒன்னும் இல்லாமல் பதிவாகப் போட்டுவிட்டு பெருமை வேறு.. என்று யாரோ பேசுவது தெளிவாகக் கேட்கிறது) 2010 அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தது ஊரைப் பற்றிய பதிவு. மன்னார்குடி டேஸ். இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தஞ்சைத் தரணியின் திண்ணைக் காற்றின் பெரும் சுகத்தை அனுபவித்தவனாதலால் திண்ணைக் கச்சேரி என்று ஒன்றை ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை வம்பளக்கிறேன்.

ரொம்ப நாட்களாக கவிதையை விட்டுவைத்த நான் திரும்பவும் பித்துப் பிடித்து ஆக்ரோஷமாக எழுதியது ஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை. மஹாபாரத கேரக்டர்கள் பற்றி கதைகள் எழுதலாம் என்று எண்ணியதில் விளைந்தவை யார் அந்த யோஜனகந்தி? மற்றும் பாகுகன்?.  காலை நேர நடைப்பயிற்சியின் போது பைரவர்களுடன் நட்பு பாராட்டிய பழக்கத்தில் எழுதியது நாய்கள் ஜாக்கிரதை!.

ஜி போட்டு எழுதினால் தனக்கு சம்மதமில்லை என்ற அப்பாஜிக்கு எதிராக மோகன்ஜி என்னை ஏவிவிட்டு முடிந்தவரை ஜகாரம் வைத்து எழுதச்  சொன்ன சிறுகதை ஜாலிலோ ஜிம்கானா. ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் பல மேலாண்மைப் பாடங்கள் எடுக்க வல்லது. ரஜினி - தி மானேஜ்மென்ட் குரு பதிவு அதன் விளைவே! கால் கடுக்க ஒரு ரிஷப்ஷனில் நின்றதால் ஒரு பதிவு, புதிய கார் வாங்கப் போகிறேன் என்று ஒன்று, சேப்பாயியாக வாங்கியபின் ஒன்று என்று கிறுக்கியிருக்கிறேன்.

அறிவியல் புனைவுக் கதைகள் எனக்கு மிகவும் விருப்பம். வாத்தியார் பேனாவால் புகட்டியது. சிலிகான் காதலி என்று ஒன்று ஒரு சிறு அறிபுனைவுத் தொடர் எழுதினேன். கிராமத்து தேவதை மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை என்று இரு காதல் குறுந் தொடர்கள் அப்புறம் ஒரு துணை நடிகையின் கதை என்ற க்ரைம் தொடர் என்று பல கதைகள் எழுதி பாடாய்ப்படுத்தினேன். ஆண்டவன் இப்பதிவுலகைக் காக்கட்டும்.

உப்புமா பற்றி எழுதிய துரித உணவுகளின் தலைவன் லேட்டஸ்ட் ஹிட். யாக்கை திரி  என்ற அறிபுனை கதைக் கூட பரவாயில்லை என்று பேசிக்கொண்டார்கள்.

என்னுடைய ஸ்கோர் போர்டு:

பார்வையாளர்கள்: 110650 + நாளையிலிருந்து வரப் போகிறவர்கள்
மொத்த பதிவுகள் : 364
பின்தொடர்பவர்கள்: 170
மொத்த பின்னூட்டங்கள்:  8000 + இனிமேல் வரப்போகும் அர்ச்சனைகள்

வால்மீகி ராமாயணத்தை விட ஆர்.வி.எஸ்ஸாயணம் பெரிதினும் பெரிது என்பதால் இத்தோடு எண்டு கார்டு போட்டுவிட்டேன். தப்பித்தீர்கள். ஆயுஷ்மான் பவ! நாளை முதல் நீங்கள் அறிமுகத்தில் விழிக்கப் போகிறீர்கள். நன்றி!

பட உதவி: http://www.saturdayeveningpost.com. நார்மன் ராக்வெல்லின் triple self portrait மிகவும் பிரசித்தி பெற்ற ஓவியம். என்னை நானே ஓவர் டோஸாக விளம்பரப்படுத்திக் கொன்றதால் ச்சே.. கொண்டதால் இது இந்தப் பதிவில்.

-

மேலும் வாசிக்க...

Sunday, June 26, 2011

சென்று வருக இராஜராஜேஸ்வரி - வருக ! வருக ! ஆர்.வி,.எஸ்

அன்பின் சக பதிவர்களே

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் மன்னார்குடியினைச் சார்ந்த அருமை நண்பர் ஆர்.வி.எஸ். இவர் MCA பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு தலை சிறந்த, தேசிய ஆங்கில நாளிதழில், தொழில் நுட்பப் பிரிவில் துணைப் பொது மேலாளராகப் பணி புரிகிறார். இவரது கதை மற்றும் கட்டுரைகளீல் சில - சூரியக்கதிர் மற்றும் இவள் புதியவள் போன்ற பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. எழுத்தாளர் காலஞ்சென்ற சுஜாதாவின் பரம விசிறி. லா.ச.ரா, தி.ரா, கி.ரா.ஜ மற்றும் சு.ரா போன்ற எழுத்தாளர்களீன் படைப்புகளைப் படித்து மகிழ்பவர். சமகாலப் படைப்பாளிகளின் எழுத்தினையும் வாசிப்பவர். பொழுது போக்காக ஆரம்பித்த தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் பதிவினில் எழுதி வருகிறார். 2010 - 11 ல் ஏறத்தாழ முன்னூற்று அறுபத்தைந்து இடுகைகள் இட்டுள்ளார்.

நண்பர் ஆர்.வி.எஸ்ஸினை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என்று வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற அருமைச் சகோதரி இராஜராஜேஸ்வரி, எடுத்த செயலினை சரிவரச் செய்து, மன நிறைவுடன் ஆசிரியப் பொறுப்பினை அடுத்த ஆசிரியரிடம் ஓப்படைத்து, நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் 14 இடுகைகள் இட்டு, ஏறத்தாழ முன்னூற்று எண்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அனைத்து அறிமுகங்களூமே அருமையான பதிவர்களின் இடுகைகள். பல புதிய பதிவ்ர்களும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றனர். இவரது கடும் உழைப்பும், திறமையும் பாராட்டத் தக்கவை. அறிமுகப் படுத்தப் பட்ட இடுகைகளீன் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.

சகோதரி இராஜ ராஜேஸ்வரியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரகுழுவினர் பெருமை அடைகின்றனர்.

நல்வாழ்த்துகள் இராஜ ராஜேஸ்வரி
நல்வாழ்த்துகள் ஆர்.வி.எஸ்

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

பல்சுவை ஞாயிறு

Gifs Fireworksவலைச்சரத்தின் நிறைவுப் பகுதி.....
வலைச்சரம் என்னும் வண்ணச்சிறகு அணிவித்து
வானமே எல்லை என்று மனதிற்கு உற்சாகம் ஊட்டி
வலைப்பூக்கள் மலர்ந்து மணம் வீசும் சோலையில்
வலம் வந்து மலர்களயும் தேன்துளிகளையும் சேகரித்து
வணக்கத்திற்குரிய வாசகர்கள் திருமுன் அளிக்கும்
வரத்தினைத் தந்து பெருமைப்படுத்தி வாய்ப்பளித்த
வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு மனம் நிறைந்த
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.

வலைச்சரத்தில் வலம் வர ஒருநாளும் மறப்பதில்லை.
வாரம் ஒரு ஆசிரியராக திறமைகளைப் பகிர்ந்து கொள்ளும் தளம்..

 >> கணவக்கத்தரி எண்ணைக்கறி.. இன்றைக்கு ஞாயிறுதானே. மறக்காமல் பின்னூட்டக்கும்மியுடன் சேர்த்து ரசிக்கலாம்.
Gifs Eggplant


எழிலாய்ப் பழமை பேச...தமிழ்மணத் தேன் பருக வாரீர்! வாரீர்!!

அறிவியல் >>கல்பனா அவர்களின் பயனுள்ள பகிர்வு. வாழையிருந்து போலியோ தடுப்பூசி.

முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் வேர்களைத்தேடி...... மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை....

நாஞ்சில் மனோ அவர்களின் தளம். மக்கா என்னும் மந்திரச்சொல்லோடும், அருவாளோடும் அறிமுகமாவார். சாமி பதிவில் கலாய்த்தால் சாமி கண்ணைக் குத்திவிடும் என்று என் பதிவுப் பக்கம் வரமாட்டார். பாலைவனமண்ணில் பதிவிடும் இவர் பதிவுகளும்,  இவரின் பின்னூட்டங்களும் பிரசித்தமான்வை.

பேரன்ட்ஸ் கிளப் >>இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.-மிகப் பயனுள்ள தளம்.... இங்கே எழுதியவர்கள் : புதுகைத் தென்றல்Vidhooshவிசயக்குமார்பேரன்ட்ஸ் கிளப்வண்ணத்துபூச்சியார்கிருத்திகாJeevesஅபி அப்பாசுரேகாபாச மலர்.

Abirajan.Tk >> A Blog For IT Related Articles In Tamil தொழில் நுட்பத்தளம்.

பறவைகள் வசித்த மொட்டைமாடி >> மிக அழகாக இருக்கிறது. அதிஷா அவர்களின் தளம்.

கலையரசி அவர்களின் ஐரோப்பா பயணக்கட்டுரை படிக்கலாம்.

சும்மாவின் அம்மா >>மனதில் உறுதி வேண்டும்..

தேவன் மாயம் >> கொஞ்சம் தேநீர்புற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி!!... நல்ல பதிவு


விழியும் செவியும் >> பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள்.


யாவரும் நலம்>> எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அன்றி வேறொன்று அறியேன் பராபரமே....சுசி--யின் தளம்.


அமைதிச்சாரல்>> நினைத்ததையெல்லாம் கிறுக்குவேன் தளம். க்ரீமெல்லாம் பூசலைப்பா- அழகான படங்கள் பார்க்கலாம்.

யுவகிருஷ்ணா >>ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்! என்கிறார். கல்விக்காக ஏந்தப்பட்ட உயிராயுதம்! என்று பதறவைக்கும் பதிவு போட்டிருக்கிறார்.

இனிய தமிழ்ப் பாடல்கள் >> தாமரை தெப்பத்துல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.! சின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

வலை உலகத்திற்கு வந்து குடும்பத்திற்குக் கிடைத்த பரிசு முகம் தெரியாத பலரின் தளங்களுக்குச் சென்று வாழ்க வளமுடன், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்றெல்லாம் பழகி இப்போது சிறு விஷயங்களுக்கெல்லாம் குடும்பத்தினரை பாராட்டி வாழ்த்தி உற்சாகமளிக்கிறேன். இந்த மாற்றத்தைத் தந்த வலைச்சரத்திற்கு இதயம் நிறைந்த நன்றிகள்.பராட்டுக்கள். வணக்கம்.....வாழ்க வளமுடன்....
மேலும் வாசிக்க...

Saturday, June 25, 2011

சந்தோஷ சனிக்கிழமை 2

வலைப் பூ படி கொண்டாடு என்று இரண்டாம் பகுதி....

இது பவியின் தளம் .............துள... >> என் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல் by Pavi

இது நம்ம ஏரியா >> எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.


எங்கள் Blog >> ஆ 'சிரி' யர்கள்: Kasu Sobhanaramanஸ்ரீராம்kgkggouthaman... அருமையான தளங்கள்.

உள்ளதை (உள்ளத்தை) சொல்லுகிறேன்!! >> மனதில் தோன்றுவதை கிறுக்க என்னுடைய கரும்பலகை.. "என் புதிய குழந்தைகள்" என்ன அழகு. கிளி கொஞ்சுகிறதே!..

கலியுகம் >>தினேஷ்குமார் கவிதைகள் அழகு.

மதுரை சரவணன் >>கல்விக்கான சிறப்பு வலை.. முதல் வேலை பார்க்கலாம்.


அ.கொ.தீ.க. >>சிறுவயதில் படித்த சித்திரக் கதைகளைப் பார்க்கலாம். படிக்கலாம்.

அஃகேனம் >> முத்தமிழுடன் இதோ இங்கே நாலாம் தமிழ் - அறிவியல் தமிழ்!
ஃபேஸ்புக் - தங்களது வலைப்பதிவிற்கான ஒரு புதிய கருவி!

>>அருண் நரசிம்மனின் அ(றி)வியல் தளம்.. இசைக்கட்டுரைகளும் உண்டு.

தபூ சங்கர் >>தபூ சங்கர் கவிஞரின் கவிதைகள்.

என் இனிய தமிழ் மக்களேIslam, By Practiceதாய் தரும் கல்விஇனிய ரமதான்... இனிய வலைப்பூக்கள் மலர்ந்துள்ள தளம்.

மலைச் சாரல்>> Harini Nathan அவர்களின் தளம். உன்னால்.. உனக்காக... உன்னோடு மட்டும் நான் கவியாவதில் ஆனந்தம்...

ஆயுர்வேத மருத்துவம் >> ஆயுர்வேத மூலிகைகள் ,ஆயுர்வேத சிகிட்சைகள், ஆயுர்வேத சித்த வர்ம பஞ்சகர்ம யோகா அக்குபஞ்சர் தொடர்பான கட்டுரைகளுக்கு... curesure4u

வாசல்மனதோடு மட்டும்.. இருதளங்கள் Kousalya அவர்கள் சிறகுகள் வேண்டி காத்திருப்பவள்.. ஒரு உற்சாகப் பயணத்திற்காக... நெல்லையில் உறவுகளின் உற்சாகம் !

மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் சந்தோஷ சனிக்கிழமை...

வலைச்சரம்... வலைச்சரம்.. விட்டாச்சு லீவு...
கொண்டாடக் கண்டுபிடித்துக் கொண்டா
சில பதிவுகள் என்று வலைப்பூந்தோட்டத்தில்
மலர்ந்திருந்த சில வலைப்பூக்களைப் பறித்து
தங்கள் கரகமலத்தில் சமர்ப்ப்பிக்கிறேன்......

புலவர் சா இராமாநுசம் அவர்களின் அருமையான கவிதைகள் வலைப்பூ.

என் மன வானில் >> என் வாசிப்பின் பயணம்...! by Rathi

வெண்பாவனம் >>மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
ஆகிய பாவலர்களால் எழுதப்பட்டவை. பாராட்டலாம்.

தமிழ்த் தேனீ >> நண்பர்களே! உங்கள் பிளாக்கில் வலது மற்றும் இடது மவுஸ் கிளிக்குகள் வேலை செய்யாமல் இருக்க கீழ்கண்ட முறைகளை பின்பற்றுங்கள். தமிழ் நாவல் வரிசை50- என்று மிக பயனுள்ள ரசிக்கும் தளம்.

மதுரை பாபாராஜ் கவிதைகள்... கடவுளே தேடிவருவார் என்கிறார்.

உமா அவர்களின் கவிதக்களங்கள் >> சில கவிதைகள்கவிதைகள் 2 வலையுலகம் ரசிக்கிறது.

வேடந்தாங்கல் - கருன் >> கணிணி ஆசிரியரின் பல்சுவை பதிவுகளின் சரணாலயம். அரசியல் அலம்பல், காமெடிகலாட்டா, பொது அறிவு, கவிதைகள், டுவீட்டர்ல் டுவீட்ட என்று இனிமையான பலதரப்பட்ட கருத்துக் களம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா... Ramani  அவர்களின் ரமணீயமான மனதை ரமிக்க வைக்கும் வாழ்வியல் அர்த்தம் பொதிந்த கருத்துக் கவிதைகள் மலர்ந்து மணம் பரப்பும் வலைப் பூங்கா.

நீ நான் உலகம் by Arun Kumar >> ரசிக்கும் தளம்..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது