இளையராஜாவின் விழுதுகள்.!(எங்கே விழுறாங்க.?)
➦➠ by:
தம்பி
வணக்கம்.!!
ஆல் ஹாய்.!! நோ பாய்னு விடாம துரத்திகிட்டு இருக்கிறேனு கடுப்பாயிடாதீங்க. நமக்கு பொழப்பே இது தான. பலர் வெயிலுக்கு வாட்டப்பட்டுகிட்டு இருப்பீங்க. சிலர் குளுருல பொங்கிகிட்டு கிடப்பீக. உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தா ஒரு பதிவு போடலாம்னு நினச்சேன். அதான் என்ன பண்ணலாம்னு குப்புற படுத்து யோசிச்சப்ப இங்கிட்டு நிறையா ராஜா ரசிகர்கள் இருப்பீங்கன்னு தெரியும் அதாங்க இளையராஜா. சரின்னு அவர பத்தி போட்டே உங்கள கூல் பண்ணிடலாம்னு வந்துட்டேன்.
அவரபத்தி நான் என்ன எழுத போறேன்.? அப்படி எழுதுற அளவுக்கு நான் ஒண்ணும் அதிபுத்திசாலி இல்லையே.! யாராவது எழுதி இருப்பாங்கல. அத இங்க இப்போ உங்ககிட்ட பகிர்ந்துகிடலாம்னு வந்துட்டேன். அப்பரம் என்ன மேட்டருக்குள்ள போவோம்.
எண்பதுகளில் பிபிசி-யில் இளையராஜா INDIA 24 hours எண்ணும் நிகழ்ச்சியில் இசையமைத்து பற்றியும் அதன் 17 இசை கோர்வைகளையும் தருவதாக இங்கே மனசாளி என்பவர் பதிவிட்டுள்ளார். ஒருவர் தருகிறேன் என்று சொல்லிவிட்டால் விடலாமா.? உடனே ஓடுங்கள்.
ராஜாவின் இசையை கேட்டு மட்டும் தான் லயித்திருக்க முடியுமா.? ஏன் அவரின் முகத்தை ஓவியமாக தீட்ட மகிழ கூடாதா.? 6ஏ நிமிடங்களில் அவரது முகத்தை அருமையாக வரைந்திருக்கிறார் தமிழ் பறவை. முன்பே பலர் பார்த்திருப்பீர்கள். இருப்பினும் பாக்காத சிலருக்காக. இதுவும் இவர் வரைந்ததே. அருமையாக இருக்கிறது நண்பரே.!
இப்ப நான் சொல்ல போறவர் ராஜாவின் இசையோடவே திரியிறவர். நிறைய ராஜா பற்றிய பதிவுகள் இட்டிருக்கிறார். நீங்க இங்க போனீங்கனா ரவி ஆதித்யா உங்கள இசையில முக்கி எடுத்திடுவார்.
இளையராஜாவை பத்திய பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. அதில் இவரை பற்றிய 'இசைஞானி இளையராஜா' என்னும் புத்தகத்தை பதிவர் ராஜா பகிர்ந்துகொள்கிறார். எல்லார்கிட்டயும் எக்கசக்கமா இருக்கும். இருந்தாலும் இதையும் போய் எடுத்துக்கோங்க. ராஜானா கசக்குதா.?
அழகர்சாமியின் குதிரைக்கு முன்பு பதிவர் ராஜேஷ்குமார் ''ராஜா சகாப்தம் முடிந்து விட்டதா? ஒருவேளை ராஜா ஓய்வு பெற எண்ணினாலும் ஒரேஒரு படம் நச்சென்று அடித்து அதிரவைத்துவிட்டு ஓய்வு பெறட்டுமே.'' என்ற இறுதி வரிகளோடு ஒரு பதிவு போட்டிருந்தார். அதை போய் தான் பாருங்களேன்.
கடைசியா எனக்கு பிடித்த ஒரு ஸ்பெஷல் பதிவரின் பதிவு. இதை ராஜாவின் இசையின் ஒரு ஒப்பீடுனு சொல்லலாமா.? இல்ல எப்படி சொல்லணும்னு தெரியல. எப்படியோ சொன்னா சரி தான். இது தான் அந்த பதிவு. போய் எல்லாரும் பாருங்க.
அப்பரம் என்ன.? இப்படியே நான் சுட்டிய கொடுத்துட்டே இருப்பன் வேலையெல்லாம் பாக்காம ராஜாவோட ஐக்கியம் ஆகலாம்னு பாத்தீங்களா.? போங்க பாஸ் போய் சோலிய பாருங்க.
''ஆச்சர்யம் கொள்ள வைக்கும் நம் இறப்பையும் நாம் வரவேற்கலாம். நமது போரின் அழுகை சத்தம் உறங்கிகொண்டிருந்த ஒருவனின் காதுகளில் பாய்ந்து போரிட தொடங்க செய்யும்போது''-சே குவேரா
|
|
பாட்டாலே புத்தி சொன்னவர்...
ReplyDeleteபாட்டாலே பக்தி சொன்னவர் இளையராஜாவின் பதிவு...
அரைப்பற்றி நிறைய தெரிந்துக் கொண்டேன்...
பதிவில் அறிமுகமாகியுள்ள
ReplyDeleteமனசாளி..
தமிழ்பறவை..
கே.ரவிஷங்கர்...
"என் ராஜபாட்டை"- ராஜா ...
ராஜேஸ்குமார்...
ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி..
ஆகிய அனைவருக்கும் கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..
இந்த சிறியவனை அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பா
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஓ...நீங்க ஆபிசிலும் குப்புறப்படுத்து யோசிப்பீங்களா? சொல்லவேயில்லை....
ReplyDeleteபாஸ் இசைஞானியினைப் பற்றி பதிவிட்ட தோழர்களின் அறிமுகம் சூப்பர்.
தொடர்ந்தும் பட்டயைக் கிளப்புங்க.
வாழ்த்துகள்....
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteயார் எங்கே எப்படி பதிவு போடுறாங்கன்னு புலனாய்வு செய்யறதுதான் உங்க வேலையா இருக்கும் போல இருக்குதே:)
ReplyDeleteநல்லாவே ஆட்களை வேவு பார்க்கிறீங்க.வாழ்த்துக்கள்.
NO words...only smiley..:))))))))))))))))
ReplyDelete