07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 29, 2011

ரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்


dog sits at bar


 
நறுக் - 2 - ரொம்பப் பிடிக்கும்
"டார்லிங்."

"என்னப்பா"
 
"டா-ர்-லி-ங்.."

"ம்..."

"டா--ர்--லி--ங்...."

"எ-ன்-ன-டா."

"டார்லிங் உங்கவீட்லயே எனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?"

"கைய நோண்டாம யாருன்னு சொல்லு"

"சொல்லட்டா"

"சொல்லுப்பா"

"சொ-ல்-ல-ட்-டா----"
"சொல்லித்தொலையேண்டா.."

"நின்னா சின்னதாவும் உக்காந்தா பெருசாவும் இருப்பாங்களே..."

"நின்னா சின்னதா... உக்காந்தா பெருசாவா... ச்சே.. யாரு.."

"ஆமாம் டார்லிங்.. நெசமாத்தான்..."

"யாருப்பா..."

சொன்னான். (கடைசியில் பார்க்கவும்)

பதிலைக் கேட்டவுடன் ஆசையாய் இருந்த டார்லிங் ஆவேசமாய் பீச்சில் கஷ்டப்பட்டு ஒரு கல்லை தேடி பொருக்கி எடுத்துக் கொண்டு அடிக்க துரத்துகிறார்.. 

ஆம்பளை டார்லிங் சொன்னது கடைசியில்...

***********
என்.கணேசன் என்பவர் என்.கணேசன்.பிளாக்ஸ்பாட்.காமின் ஓனர். ஆனந்த விகடனில் எழுதியதிலிருந்து எழுத்தாளராக மிளிர்கிறார். பால் பிரண்டனின் பார்வையில் இந்தியப் பக்கிரிகள் பற்றியும் சயனைடு விழுங்கியும் சாகாத சாமியார்கள் பற்றியும் எழுதியிருப்பது படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இன்னும் நிறைய எழுதியிருக்கிறார். அவசியம் பாருங்கள். என் கணேசன் உங்கள் கணேசனாகி விடுவார்.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையில்லை என்ற ரமண மகரிஷியின் அநுபூதியை வலைமுகப்பில் எழுதி வைத்து வ.ஸ்ரீநிவாசன் கனவு மழையில் எழுதுகிறார். தினம் ஒரு பதிவு போட்டு அதகளப்படுத்தாமல், மாதம் ஒன்று போட்டாலும் அமர்க்களமாக போடுகிறார். அசோகமித்ரனுடன் தி.ஜா பற்றிய இவரது பேட்டியில் தி.ஜாவை பற்றி கால்வாசியும் அ.மி பற்றி முக்கால்வாசியும் தெரிந்துகொள்ள முடிகிறது. அசோகமித்ரனின் எவை இழப்புகள் என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு அ.மியின் பல முகங்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு முறை சென்ற நம்மை va. srinivasan பலமுறை வா வாவென்று அழைக்கிறார்.

திருவாளர் ரவி பிரகாஷ் எழுதும் வலைப்பூ உங்கள் ரசிகன். விகடனின் காலப் பெட்டகத்தை இத்தலைமுறைக்கு பொக்கிஷமாக தொகுத்தவர் இவர். வலைப்பூவிற்கு உங்கள் ரசிகன் என்று பெயர் வைத்திருந்தாலும் பதிவை படிக்கும் நம்மையெல்லாம் அவருடைய ரசிகனாக மாற்றுகிறார்.  என்னைக் கவர்ந்த அழகிகள் என்று இவர் எழுதிய ஒரு பதிவு படங்களுடன் பந்தாவாக இருக்கிறது. இமைக்காமல் 'பார்த்து', படித்து இன்புறுங்கள்.

பயமறியாப் பாவையர் சங்கம். தலைப்பே சுண்டி இழுத்தது. ஒரு கூடை நக்கல். ஒரு கூடை சிரிப்பு. ஒன்றாக சேர்த்தால் என்று தலைப்புக்கு கீழே டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். ஐந்தாறு பேராக சேர்ந்து கூட்டணி அமைத்து தாக்குகிறார்கள். சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. நக்கல் நாட்டியமாடுது. காக்க காக்க ரீமேக் ஒரு வெள்ளிவிழா ஹிட். 2009 க்கு பிறகு இந்த வலைப்பூ அப்டேட் ஆகவில்லை என்றாலும் இடது பக்க மார்ஜினில் இருக்கும் இந்த வலைப்பூவின் டீம் மெம்பர்கள் வலைப்பதிவை படித்து மகிழுங்கள்.

வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு என்று தத்துவார்த்தமாக பெயர் வைத்து சமுத்ரா சுகி என்று சுயமாக பெயர் சூட்டிக் கொண்டு எழுதுகிறார் இவர். கலைடாஸ்கோப் என்று இவர் எழுதும் பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இவரது வாசிப்பின் வீச்சு ரேடியோ கதிர்களாக வீசுகின்றன. அணு அண்டம் அறிவியல் என்று ஒரு விஞ்ஞானத் தொடர் வீராசாமியாக எழுதுகிறார். ரசிக்க வைக்கும் பதிவுகள். பிறருக்கு பின்னூட்டம் மட்டும் Super, Good One என்று போடுவார். மௌனம் அவ்வளவு பேசியதே ஜாஸ்தி தானே! 

******

கடைசியில் பார்க்கச்சொன்னது:

"உங்க வீட்டு டாமிதான்". போன பதிவில் எழுதிய வாத்தியாரைப் பார்த்து நான் கிறுக்கினது. புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட வல்லிய ச்சூடு. சரியா?

பட உதவி: http://stuffistolefromtheinternet.com

-

27 comments:

 1. எல்லாமே நல்ல அறிமுகங்கள் ஆர் வி எஸ். புக்மார்க் பண்ணி வைத்து விட்டேன்.

  ReplyDelete
 2. நன்றி ஸ்ரீராம்! ;-)

  ReplyDelete
 3. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.


  இன்றைய போனஸ் நறுக் - 2 நாய்க்கதை அருமை. கடைசியில் கல்லடி பட்டதா என்று சொல்லாமல் பாதியில் சஸ்பென்ஸ் ஆக நிறுத்தி விட்டீர்களே!

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள் .. நன்றி! ஆர்.வீ.எஸ்!

  ReplyDelete
 5. போட்டோ அருமை. நாய்க்கதை நன்றாக இருக்கிறது.

  என்.கணேசன் அமானுஷயமான திறமையாளர்.
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அறிவுப்பூர்வமான அறிமுகங்கள் ... தேடி போக வைக்கிறது ...
  ரவிசார் அவர்களின் எழுத்தில் எளிமையும் எதார்த்தமும் நிறைந்து இருக்கும் .. டிடைல்ஸ் எதையும் விடமாட்டார் .. என் டைரி எனும் வலைப் பூவும் வைத்துள்ளார் ...
  விஞ்ஞானி சமுத்ரா வலையுலகுக்கு கிடைத்த அறிவியல் அமுது ...

  ReplyDelete
 7. @வை.கோபாலகிருஷ்ணன்
  கல்லடி பட்டாலும்.. கண் அடி படக்கூடாதுன்னு சொல்லுவாங்க...

  கருத்துக்கு நன்றி சார்! ;-))

  ReplyDelete
 8. @மோகன்ஜி
  நன்றிண்ணா! ;-))

  ReplyDelete
 9. @இராஜராஜேஸ்வரி
  நன்றிங்க மேடம்! ;-))

  ReplyDelete
 10. @பத்மநாபன்
  நன்றி பத்துஜி! ;-))

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள்.... தொடருங்கள்...

  நறுக் - 2 :))) நல்ல முயற்சி.

  ReplyDelete
 12. எல்லாருமே நல்ல அறிமுகங்கள்.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. @வெங்கட் நாகராஜ்
  நன்றி தலைநகரம்! ;-))

  ReplyDelete
 14. @Lakshmi
  நன்றி மேடம்! ;-)

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் கலக்குது

  ReplyDelete
 16. சிறந்த அறிமுகங்கள் எல்லோரையும் படிக்கிறேன் வெங்கட்

  ReplyDelete
 17. நல்ல அறிமுகங்கள். ரவி பிரகாஷ் சாரின் இரண்டு வலைப்பூவையும் படித்திருக்கிறேன். மற்றவைகளை படிக்கிறேன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. அறிமுகத்திற்கு நன்றி ஆர்.வி.எஸ்.

  ReplyDelete
 19. அருமையான வலைத்தள அறிமுகங்கள்.

  என்.கணேசன் சாரின் அமானுஷ்யன் தொடர் நிலாச்சராலில் வருகிறது. அமானுஷ்யனின் தீவிர ரசிகை நான்.

  ReplyDelete
 20. எல்லாருமே நல்ல அறிமுகங்கள்.போட்டோ superb!!ROFL

  ReplyDelete
 21. @கவி அழகன்
  நன்றிங்க.. ;-)

  ReplyDelete
 22. @A.R.ராஜகோபாலன்
  நன்றி கோப்லி! ;-))

  ReplyDelete
 23. @கோவை2தில்லி
  நன்றி சகோ. ;-))

  ReplyDelete
 24. @சமுத்ரா

  You deserved it! ;-))

  ReplyDelete
 25. @கடம்பவன குயில்
  உங்க பேர் ரொம்ப நல்லா இருக்குங்க.. ;-))

  ReplyDelete
 26. @angelin
  நன்றி சகோ. ;-))

  ReplyDelete
 27. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  நறுக் - ஹா...ஹா..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது