07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 30, 2014

என்னோடு நான் - சிகரம்பாரதி.

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

                       "சிகரம்பாரதி" ஆகிய என்னை அறிந்தவர்கள் சிலர், அறியாதவர்கள் பலர். பாடசாலைக் காலகட்டத்தில் "சிகரம்" என்ற கையெழுத்து சஞ்சிகை வாயிலாகவும் தொடர்ந்து இலங்கையின் தேசிய நாளேடுகள், சஞ்சிகைகளுக்கும் எழுதி வந்தேன். பின்பு வலைத்தளத்தின் பக்கம் "தூறல்கள்" வலைப்பதிவின் வாயிலாக கால் பதித்தேன். "சிகரம்" வலைப்பதிவின் ஊடாக என்னை நிலை நிறுத்தினேன். இன்று "சிகரம்3" உடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.


                    வலைச்சரம் ஒரு ஆரோக்கியமான முயற்சி. தமிழில் வலைப்பதிவுகளையும் வலைப்பதிவர்களையும் அறிமுகப்படுத்துவதிலும் ஒன்றுபடுத்துவதிலும் வெற்றிபெற்ற முயற்சி. வலைச்சரத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் ஏராளம். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள். அத்தனையும் வலைப்பதிவர்கள் தந்த அறிமுகங்கள்! ஆங்கிலத்தில் கூட இப்படி ஒரு முயற்சி இருக்குமா என்பது சந்தேகமே!

                   வலைச்சரத்தில் மூன்று முறை அறிமுகம் பெற்றுள்ளேன். இன்று வலைச்சரத்தில் ஆசிரியராக... நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு அழைப்பு வர சில தினங்களுக்கு முன்னதாகத்தான் மனதினுள்ளே 'வலைச்சர ஆசிரியப் பொறுப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்' என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அழைப்பு வந்ததும் நினைத்ததும் நடந்துவிட்டதே என்று ஆச்சரியமாக இருந்தது.

                  பணி நெருக்கடி மற்றும் சில சிக்கல்கள் காரணமாக முறையான தயார்படுத்தல்கள் ஏதும் என்னிடம் இல்லை. அதற்காக ஏனோ தானோ என்று எழுதப்போவதுமில்லை. ஏனையோரை விட வித்தியாசமான முறையில் எனது அறிமுகங்கள் இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

               முதலில் எனது வலைத்தளங்களில் நான் எழுதிய நட்சத்திரப் பதிவுகள் சிலவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

> வலைச்சர ஆசிரியப் பணி குறித்து எழுதியது:
   * வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!

"சிகரம்" வலைத்தளம்.
* எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல

* வேலைக்கு போறேன்!

* கற்பிழந்தவள்

* பிரிவோன்றே முடிவல்ல

* கவிதைகள்

* #100 மகிழ்ச்சியான நாட்கள்

* மீண்டும் அதிசயா

* அகவை ஒன்பதில் சிகரம்!

* கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல்    

இவை மட்டுமல்ல இன்னும் பல பதிவுகள் இருக்கின்றன. ஒரு முறை எனது வலைத்தளம் சென்று பாருங்களேன்!

மேலும் எனது "தூறல்கள்" மற்றும் "சிகரம்3" வலைத்தளங்களிலும் பல்வேறு பயனுள்ள பதிவுகளைக் காணலாம். ஒரு வலைப்பதிவை தொடர்ந்து நடாத்துவது என்பது மிகச் சிரமமான பணி. அப்பணியை முன்கொண்டு செல்வதில் நாமனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம் . எத்தனை இடர்கள் வந்தாலும் இப்பணியை தொடர்ந்து செய்ய முன்வருமாறு தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். மேலும் வலைப்பதிவர்கள் ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களைக் குறைத்து "இயன்றவரை தமிழ்" என்ற கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


மீண்டும் நாளை முதல் வலைப்பதிவு அறிமுகங்களுடன் சந்திக்கலாம்.

அதுவரை
அன்புடன்

சிகரம்பாரதி.
மேலும் வாசிக்க...

Sunday, June 29, 2014

சிகரம் பாரதியிடம் அ.பாண்டியன் ஆசிரியப் பொறுப்பினை ஒப்படைக்கிறார்

அன்பின் சக பதிவர்களே ! 
வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆர்வமுடன் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த அ.பாண்டியன்  அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

அவர் கீழ்கண்ட தலைப்புகளில் எட்டு் பதிவுகள் எழுதி உள்ளார்.

இணைந்தே தொடங்குவோம்,  புதிய தடங்கள், சூரியனுக்கு டார்ச் அடித்துப் பார்த்திடலாமா , கடல் கடந்தும் வளரும் தமிழ், கடல் கடந்தும் வளரும் தமிழ் - 2 , வலையுலகில் ஆசிரியர்கள், தொடரும்   நட்புகள், தொடர்கிறது தொடரும் நட்புகள்.                                                                    

அறிமுகப் படுத்திய பதிவுகள்            : 90
அவருக்கு கிடைத்த மறுமொழிகள் :   329
 பக்கப்பார்வைகள்                                     :  1522

திரு ஆ,பாண்டியன் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க  சிகரம் என்னும் தளத்தில் எழுதி வரும் சிகரம் பாரதி இணக்கம் தெரிவித்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

துரைசாமி லெட்சுமணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சிகரம்பாரதி ஆகிய இவரது பிறப்பிடம்  இலங்கையின்  இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமான மலையகத்திலுள்ள கொட்டகலை என்னும் இடமாகும். தரம் 13 வரை கல்வி கற்றுள்ள இவர் பல்கலைக்கழக 
 வாய்ப்புக் கிடைத்தும் அதை ஏற்காமல் கொழும்பிலுள்ள ஈஸ்வரன் என்னும் தனியார் தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் மூலப்பொருள் கட்டுப்பாட்டாளர் உதவியாளராக [Material Controller Assistant] பணி புரிந்து வருகிறார்.

 தமிழகத்தில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னாள் இலங்கையில் தேயிலைப் பயிர்ச் செய்கையை விருத்தி செய்வதற்காக கூலிகளாக அழைத்து வரப்பட்ட இவரது  சமூகத்தின் அவலத் துயர் துடைத்து சமூகத்தை முன்னேற்றுவதே இவரது  வாழ்நாள் இலட்சியமாகும். 2012 முதல் வலைப்பதிவுகளை எழுதி வருகிறார். .  அரசியல்,இலக்கியம், விளையாட்டு, நகைச்சுவை , சுயமுன்னேற்றம் என பன்முகப்பட்ட விடயங்களையும் 
பலித்து வருகிறது.

சிகரம்பாரதி" என்னும் பெயரிலேயே பலராலும் அறியப்பட்டுள்ள இவர்  அப்பெயரிலேயே தொடர்ந்தும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என எண்ணுகிறார்.

இலங்கையின் பல்வேறு தேசிய தமிழ் நாளிதழ்கள்  சஞ்சிகைகளில் இவரது
எழுத்துக்கள் பிரசுரமாகியுள்ளன.

இவரைப் பற்றிய  மேலதிக விபரங்களுக்கு: 

அகவை ஒன்பதில் சிகரம்!



 ” சிகரம் “ வலைப்பூ பதிவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்....

நல்வாழ்த்துகள் அ,பாண்டியன் 

நல்வாழ்த்துகள் சிகரம் பாரதி .

நட்புடன்  சீனா 
மேலும் வாசிக்க...

தொடர்கிறது தொடரும் நட்புகள்

வலை உறவுகளுக்கு வணக்கம்!!

அன்பு நண்பர்களுக்கு உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் வலையுலக மூத்த பதிவர் ஐயா சென்னைபித்தன் அவர்கள்
பதிவர் நாள் வாழ்த்து!

  உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் என்று அழகிய கருத்தை எடுத்தியம்பும் திருமதி பக்கங்கள் கோமதி அம்மா அவர்களின் பதிவு இறைவன் படைப்பில் அதிசயங்கள்

அன்பான குணம் கொண்டவர், குழந்தைகள் வளர்ப்பு பற்றி அதிகம் பகிர்ந்து கொள்வார். வல்லமை, மின்னூல் என சுறுசுறுப்பாக இருக்கும் ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்களின் பதிவு உங்களின் பார்வைக்கு எங்க ஊரு… திருக்கண்ணபுரம்

கவிதையில் கெட்டிக்காரர், அன்றாட வாழ்வின் விடயங்களைக் கவியாய் தந்து சிந்தனைகளைக் கிளறி விடுபவர், மனிதநேயம் கொண்ட பண்பாளர் திரு. கவியாழி கண்ணதாசன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன் உண்மை வாழ்வு...

தென்றல் சசிகலா சகோதரி அவர்களின் கவிதைகள் கிராம மணம் கமழும் வார்த்தைகளெல்லாம் எப்படி பிடிக்கிறார் என்பதே வியப்பாக இருக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு பதிவு

பத்திரிக்கைகளில் எழுதி வரும் வேலூர் உஷா அன்பரசு அவர்களின் எழுத்தில் சமுதாய மாற்றத்திற்கான வித்து அடங்கி இருக்கும். திறமைகளைப் பாராட்ட எப்பவும் தயங்க மாட்டார். அவரின் இளகிய குணமும் பாராட்டத்தக்கது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

என்னுயிர் ஓசை கேட்க வாருங்கள் என அழைக்கும் அன்பு சகோதரர் சீராளன் அவர்களின் கவிதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கருத்துரையிலும் கூட கவிதை மழையில் நனைய வைக்கும் ஆற்றல் கொண்டவர் பேசும் நினைவுகள்

சென்னையில் வசிக்கும் ஸ்கூல் பையன் அவர்கள் தனது பயணம் பற்றிய அனுபவத்தைக் குறிப்பிடும் அழகான பதிவு பயணம்!

முத்துச்சிதறல் எனும் வலைப்பக்கம் மூலம் தொடர்ந்து எழுதி வரும் சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் படைப்புகளிலிருந்து உங்கள் பார்வைக்காக ஒன்று அன்பிற்கேது எல்லை?

பல மேடைகளை அலங்கரித்து வரும் ஆரணி பேச்சாளர் திருமதி. பவித்ரா நந்தகுமார் அவர்களின் பேச்சுக்களை நீங்களும் காண வேண்டுமா

அன்மையில் வலைப்பக்கம் தொடங்கி எழுதி வரும் குப்பு சுந்தரம் அவர்களின் அவ்வையும் பாரதியும் பதிவு அவ்வையும் பாரதியும்!

எழுதுகிறேன் அதனால் நான் இருக்கிறேன் எனும் எண்ணம் கொண்ட காரிகன் அவர்களின் பதிவு இசை விரும்பிகள் XVII - சுவர்களைத் தாண்டி....

எம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன் எனும் வாசகத்தோடு எழுதி வரும் நண்பர் மகேந்திரன் அவர்களின் பதிவு

என்னை பற்றி சொல்றதுக்கு எதுவும் இல்லையென்றாலும் உலகமே என்னை திரும்பி பாக்குற மாதிரி கனவு காணும் உங்களில் ஒருவன் என கூறும் கத்திவாக்கம் NSK அவர்களின் பதிவு பயண அனுபவம்


மேலும் வாசிக்க...

தொடரும் நட்புகள்

வணக்கம் நண்பர்களே!

இந்த பதிவில் நான் அறிமுகம் செய்யும் நண்பர்கள் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்களாக இருக்கலாம். இது அறிமுகம் என்பதை விட என்னோடு நட்புகள் பாராட்டும் இவர்களுக்கு நான் காட்டும் நன்றி முகமாக இதை நான் பார்க்கிறேன்.

வணக்கம் உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பார்க்கவும்........ இப்படி ஒரு வசனம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் தளங்களில் சில நிமிடங்களில் பார்க்கலாம். தகவல் தெரிவிப்பவர் யார் என்று உங்களுக்கே தெரியும். ஆம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தான். அவரின் தளத்திலிருந்து ஒரு பதிவு
நம் குற்றங்களைத் திருத்த...

நான் குறிப்பிடும் ஐயா புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். குழந்தை மனசுக்கு சொந்தக்காரர் இவரின் நட்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோசம் எனக்கு. இவரின் எழுத்துக்கள் எதார்த்தங்களை எடுத்தியம்பும் ஆற்றல் கொண்டவைகள் அவர் யார்னு தெரிந்து கொள்ள வேண்டுமா! அவர் தாங்க நாம தமிழ் இளங்கோ ஐயா அவர்கள். அவரின் பதிவு அனைவருக்கும் பயன்படும் பயன்படும் இணையதளங்கள் – 1

காணாமல் போன கனவுகள் தளத்தில் சகோதரி ராஜீ அவர்கள் எழுதிய அவரின் அனுபவப் பகிர்வு மதுரை திருமலை நாயக்கர் மஹால்- மௌன சாட்சிகள்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறார்கள். சங்க இலக்கிய பாடல்களுக்கு அவர் எழுதும் எளிய மாற்றுப்பாடல் மிக அருமை அவரின் பதிவில் ஒன்று
நம்மையும் அறியான் பிறரையும் அறியான்

தினம் ஒரு நகைச்சுவை, தினசிரி கவிதை என கலக்கி வரும் பகவான் ஜி அவர்கள் சிந்தனைகள் மற்றும் சுறுசுறுப்பு உண்மையில் வியக்க வைக்கிறது
இந்த மறதி வரக் காரணம் ,மனைவியிடம் 'கடி 'வாங்கியதாலா ?

சிட்டுக்குருவியின் சிறுகதை எதார்த்தத்தை அள்ளித்தெரிக்கும் ஆற்றல் கொண்டது. அதன் சிறப்பான சிறுகதைகளில் சிக்கிக் கொண்டவர்களில் நானும் ஒருவன் உளுந்த வடை,,,,,,,,,

உலகில் நடப்பவை என்னுடைய பார்வையில் டிபி.ஆர். ஜோசப் அவர்களின் எழுத்துகளின் மயங்கிய மனங்களில் என் மனமும் முதல்வரிசையில் நிற்கும்
நினைவுகள் சுகமானவை!

தனிமரம் தலைப்பிலும் வித்தியாசம் எண்ணங்களிலும் வித்தியாசம் காட்டும் நல்ல எழுத்தாளரின் ஒரு பதிவு இங்கு என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-நன்றிகள்

காலை எழுந்தவுடன் முதலில் படிக்கும் பதிவு ராஜாராஜேஸ்வரி அம்மாவுடையது தான் என்று பதிவுலக சகோதரிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ஆன்மிகத்தில் அழகிய நாட்டம் கொண்ட அம்மாவின் அத்தனை பதிவுகளும் அசர வைக்கும் அதில் ஒன்று
சயனத் திருக்கோல அனுமன்

சகோதரி  அருணா செல்வம் அவர்கள் கதம்ப வலை எனும் பெயர் கொண்ட வலைப்பக்கத்தில் எழுதி வருகிறார். அவர் வைத்த பெயர் போலவே பூக்கங்களின் கதம்பங்களே அவரது தளத்தில் பூக்கிறது
வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்குழந்தை உள்ள பெற்றோரா? படியுங்கள்.

நெஞ்சை வருடிச் செல்லும் கவிதைகள் அடங்கிய அம்பாளடியாள் தளம் அனைவரும் பின் தொடர வேண்டிய வலைப்பக்கம் அதிலிருந்து ஒரு பதிவு
சுவாசிக்கும் நேரத்திலும் இதைத் தான் மனம் யாசிக்கிறது

நண்டு நொரண்டு எனும் வழக்கறிஞர் ராஜசேகரன் அவர்களின் தளத்தில் அழகான விடயங்கள் ஊர்ந்து வலம் வருகின்றன. நாமும் சென்று பார்ப்போம்
ஜாதி ,மதம், தீண்டாமை X சமச்சீர்கல்வி .

கில்லர்ஜி (பேர கேட்டவுடனே சும்மா அதிருதில்ல... ) எனும் வலைத்தளத்தில் இடப்படும் பதிவுகள் புதிய சிந்தனைகளோடு சிரிக்க வைக்கும் பதிவுகளும் நம்மை ஈர்க்கும் அப்படியொரு பதிவு களத்தூர், கண்ணம்மா

எண்ணங்களை எழுத்தோவியாகமாக தரும் தளிர் சுரேஷ் அவர்கள் ஆன்மிகப்பதிவுகளோடு பல்சுவைப்பதிவுகளையும் தந்து கொண்டிருக்கிறார். அவரின் எண்ணங்கள் எல்லாம் உயர்ந்தவையாக இருக்கும். பின்னூட்டம் இடுவதில் புயல் இவர். இவரின் பதிவில் ஒன்று “இரண்டு ரூபாய்!” “இரண்டு ரூபாய்!”

சாமானியன் கிறுக்கல் கூட சமூகச் சிந்தனைகள் கொண்டதாக இருக்குமா! ஆம் நண்பர்களே அவரின் எழுத்துகள் சமூக நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கும் பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் !

சகோதரி அபயா அருணா நினைவுகள் எனும் தனது தளத்தில் கடவுள் நம்பிக்கை பற்றி கூறியுள்ளார். வாங்களேன் படித்து வருவோம்
கடவுள் நம்பிக்கை

ஜே.பாண்டியன் அவர்களின் பதிவுகளில் ஒரு இளமை துள்ளுவதைக் காணமுடியும். நாளைய உலகின் மாற்றம் இப்படியும் இருக்கலாம் என்பதைத் தெரிவிக்கும் கவிவரிகள் இது நிலவில் நீர்

கடல் கடந்து வளரும் தமிழில் விடுபட்ட ஒரு பதிவர்
டென்மார்க்கில் வாழ்ந்து வரும் கோவை கவி அவர்கள் கனவு தேசம் எனும் பதிவில் எப்படி அமைய வேண்டும் எனும் தன் எண்ணங்களைக் கவியாக்கி தந்திருக்கிறார் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு
322. கனவு தேசம்.



மேலும் வாசிக்க...

Saturday, June 28, 2014

வலையுலகில் ஆசிரியர்கள்...

வலையுலகச் சொந்தங்களுக்கு வணக்கம்!

ஆசிரியர் தொழிலுக்கு நான் போக வேண்டும் என்று பத்தாம் வகுப்பு முடித்ததும் முடிவெடுத்தேன். அதற்கும் ஒரு ஆசிரியர் தான் காரணம்.அதன் விளைவே இன்று நான் அரசுப்பள்ளியில் ஆசிரியர். என்னைப் போலவே வலைப்பக்கத்தில் எழுதி வரும் ஆசிரியர்கள் நிரம்ப உள்ளனர். அவர்களில் எனக்கு தெரிந்த பதிவர்களை அறிமுகம் செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

ஆதவனுக்கு அறிமுகம் தேவையா! இது அவருக்கான அறிமுகம் இல்லை. ஏனெனில் இவர் அனைவரும் அறிந்த முகம். இருப்பினும் நான் இங்கு அறிமுகம் செய்வது என் நன்றி முகம் காட்டுவதற்கு. மூங்கில் காற்றின் வழியே இசையென எழுந்து பல நண்பர்களின் மனம் கவர்ந்த ஐயா முரளிதரன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதைப் பெருமையாக கருதுகிறேன்

ஜே.சி.ஐயின் மண்டலப் பயிற்சியாளர்களில் ஒருவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களை இலவசமாக வழங்கிவரும் நிகில் நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவர். சினிமா விமர்சனம் எழுதுவதில் தனி ஸ்டைல். வாசிப்பு மாற்றத்திற்கான வடிகால் என்பதை நம்பும், பள்ளி மாணவர்கள் பள்ளிப்புத்தகம் தாண்டி படிக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்ட பன்முகச் சிந்தனையாளர் திரு. கஸ்தூரிரெங்கன் அவர்களின் பதிவு

மகிழ்நிறை மிகவும் அழகான பெயர் இத்தளத்தில் எழுதுபவர் என் உடன்பிறவா அக்கா மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள். வயதில் இளையவராக இருந்தாலும் எழுத்துக்களில் நல்ல கூர்மை இருக்கும். கவிதைகளில் ஆழம் இருக்கும். அழகான இரு பெண்குழந்தைகளுக்கு தாயான இவரின் கவிதை கண்டிப்பாக உங்களுக்கு இனிக்கும்

கரந்தை தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் புதிய செய்திகளுடன் சிறந்த மனிதர்களை அறிமுகம் செய்யும் சிறந்த மனிதர் இவர். இவரின் எழுத்துகளை நான் கண் கொட்டாமல் பார்ப்பது உண்டு அப்படிப்பட்ட ஒரு பதிவு கோரா

ஓய்வு பெற்ற ஆசிரியர் தேனியை விட சுறுசுறுப்பானவர். பல மக்கள்நல பணிகளைச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருப்பவர். இசையில் சிறந்து விளங்கும் இவர் எண்ணற்ற கிராமிய பாடல்களைக் குறுந்தகதிட்டு சிறப்பு சேர்க்கும் பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் புதுகை மணிமன்றம் தளத்தின் ஒரு பதிவு 

பாலக்காட்டில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் துளசிதரன் மற்றும் அவரது தோழி கீதா அவர்களும் தில்லைக்காத்து கிரோனிக்கல் எனும் தளத்தில் எழுதி வருகிறார். அன்பான குணம் கொண்டவர்கள் இவர்களின் பதிவு

வேர்களைத்தேடி எனும் வலைப்பக்கத்தில் எழுதிவருமான , மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என முழங்கும் இளையவர், தமிழறிஞர்களின் முக்கிய தினங்களை மறவாமல் நினைவு கூறும் கல்லூரி பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களின் பதிவு

தமிழாசிரியர், தேனியின் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர், கனியும் மனம் கொண்டவர் கனியின் சுவை போலும் பேச்சுக்கொண்டவர். சிறந்த சிறுகதை எழுத்தாளர். இவ்வளவு சிறப்பு கொண்ட திரு.குருநாதசுந்தர் அவர்களின் பதிவு 

திண்டுக்கல் மாவட்டம் லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வரும் திரு.கோபி அவர்கள் வயதில் இளையவர் ஆனாலும் இலக்கண, இலக்கிய புலமை வாய்ந்தவர். அவரின் பதிவுகளின் ஒன்று கனவு இலக்கண நூல் அறிவோம்!

வலைப்பக்கம் வேலுநாச்சியர் ஆனாலும் வலைப்பக்கம் உள்ளே தென்றல் அழகான கவிதைகளை நாளும் வடிக்கும் ஆசிரியர் இவரின் எண்ணங்கள் சமூக நோக்கம் கொண்ட ஆசிரியர் கவிஞர் கீதா அவர்களின் பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் கவிஞர் சுவாதி அவர்களின் கவிதைத்துளிகளில் நீங்களும் நனைந்து வரலாம் வாருங்கள் பறவையாக ஆசை....

வலசைப்போகும் கவிக்குயில் புதுக்கோட்டை அரசு பள்ளியில் தமிழ்க் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குயிலின் பெயர் துரைக்குமரன் இவரது எழுத்துகள் செறிந்த எண்ணங்களைக் கொண்டது

இப்படிக்கு இ.ஆரா என்றும் இனியவன் எனும் பெயரில் ஆசிரியர் கிங் ராஜ் அவர்களின் சிந்தனைகள் புதுமையானதாகவும் நடைமுறை வாழ்வோடு பொருந்திப் போவதுமாக இருக்கும் அவரின் பதிவு ஓ...பேய் கூட்டங்களே......


குறிப்பு
நான் மேற்குறிப்பிட்ட நண்பர்களில் ஆங்கிலம், கணிதம் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தமிழில் எப்படி இப்படியெல்லாம் கலக்குகிறார்கள் என்று எண்ணி பல நேரம் வியப்பில் ஆழ்ந்து போவதுண்டு. இவர்களுக்கு நம் அனைவரின் சார்பாக அன்பு கலந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம். உங்கள் எழுத்துக்களால் தான் நாளைய விடியல் இருக்கிறது. நன்றி...




மேலும் வாசிக்க...

Friday, June 27, 2014

கடல் கடந்தும் வளரும் தமிழ்! 2

வணக்கம் நண்பர்களே!
நேற்றைய பதிவின் தொடக்கம் தான் இது. கடல்கடந்து வாழும் தமிழர்கள் தமிழின் வளர்ச்சிக்கு செய்திடும் பங்கினை எண்ணி எனக்கு எப்பவும் அவர்கள் மீது மிகுந்த ஒரு மரியாதை உண்டு. அதன் தொடர்ச்சியாக இன்று ஆண்குயில்கள்!!

என்றுமுள செந்தமிழன் கம்பன் பெயரில் இயங்கும் கம்பன் கழகம் பாரதிதாசன் அவர்களின் வெண்பாவின் வகைகள் பற்றிய பதிவு உதாரணக்கவிதையோடு
மடக்கு அணி வெண்பா! - பகுதி 2

யாழ்பாவாணன் ஐயா அவர்கள் யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என்று அழைத்து தமிழில் கவிதைகள் எப்படி எழுத வேண்டும். அன்றாடம் செயல்களைக் கூட எப்படி கவியாக்க முடியும் என்று எல்லாம் வழிகாட்டுகிறார்
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?

அதிரடியான அரசியல் பதிவுகள், அடிதடினா பூரிக்கட்டை, கருத்துரை இடுவதில் தனி ஸ்டைல் இப்படி அனைத்திலும் தனித்து இயங்கும் அவர்கள் உண்மைகள் வலைப்பக்க மதுரைத்தமிழன் சொல்லாற்றல் அனைவரையும் சிந்திக்கவும் பல நேரம் சிரிக்கவும் வைக்கும்
அவர்கள் உண்மைகள்

பணியின் காரணமாக அயல்நாட்டில் இருந்தாலும் வலையுலகில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி என நடத்திக் கலக்கி வரும் இளைஞர் சிறகடிக்கும் நினைவுகளில் நீந்தி வருகிறார் என்ன தான் சொல்கிறார்னு பார்த்து வருவோமா!
சிறகடிக்கும் நினைவலைகள்-6

தஞ்சையில் பிறந்து குவைத் பணி செய்து வரும் துரை செல்வராஜ் ஐயா அவர்களின் ஆன்மிகப்பதிவுகள் அசர வைக்கும். குழந்தை மனம் கொண்ட ஒரு நல்லவரின் எண்ணங்களில் கண்ணதாசனின் நினைவலைகள்
தஞ்சையம்பதி

படித்தது ஆங்கிலவழிக்கல்வி, பணி புரிவது ஆஸ்திரேலியா. ஆனாலும் தமிழில் கலக்கி வரும் பதிவர், குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுக் கொடுக்கும் ஆசான் உண்மையானவன் சொக்கன் சுப்பிரமணியன் அவர்களின் தமிழும் நானும் பதிவு
தமிழும் நானும்

மதுரைத்தமிழன் கொழுத்திப் போட்ட பத்து கேள்விகளுக்கு திரு.நாஞ்சில் மனோ அவர்களின் பதில்கள்
பத்து கேள்வியும் ஈசியா இருக்கே பரிசில் கிடைக்குமா ?

மனசு பேசுகிறது சே.குமார் அனைத்து விடயங்களையும் அலசிப்பார்ப்பவர் அப்படிப்பட்டவரின் மனதை நெகிழ வைக்கும் பதிவு
மன்னித்துவிடு பாலச்சந்திரன்

சீனியின் கவிதை இவரின் பெயரைப் போலவே இனிக்கும். வெளிநாட்டு வாழ்க்கைப் பற்றிக் கூறும் இவரது குட்டிக்கவிதை எதார்த்தம்
வினோதமான சிறை!








மேலும் வாசிக்க...

Thursday, June 26, 2014

கடல் கடந்தும் வளரும் தமிழ்!


வணக்கம் நண்பர்களே!
பணி நிமிர்த்தமாகவும், மணம் முடித்தும் தன் தாய் மண்ணை விட்டு, சொந்தங்களைப் பிரிந்து கடல் கடந்து வாழ்ந்தும் தமிழினை இறுகப் பற்றிக் கொண்டு, தமிழைச் சுவாசித்து வாழும் வெளிநாடுவாழ் தமிழர்களின் பதிவுகளை இன்று அறிமுகப்படுத்துவதில் அளவில்லா மகிழ்ச்சி.

இவர்கள் வசந்தத்தை களித்திட ஓடிவரும் வேடந்தாங்கல் பறவைகள் அல்ல. வாழுதல் வேண்டி பயணித்த தமிழ்க்குயில்கள். இவர்களின் குரல் தமிழ்பேசும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் வரை தமிழ் வளரும்.

தாய்ப்பாசம் பற்றியே பேசி வரும் பெரும்பாலானோர் மத்தியில் தந்தைக்கும் ஒரு கவிதை தந்து தந்தையின் அன்பினை தம் காவிய எழுத்துகளில் கவி பாடியிருக்கிறார் திருமிகு. இனியா அவர்கள். தனது பெயரைப் போலவே பழகுவதில் கருத்துரை வழங்குவதில் அவர் இனியவர் தான். தன் கவி வரிகளில் படிப்பவர்களின் மனங்களை ஈர்ப்பதிலும் கெட்டிக்காரர் தான்.
அவரது பதிவு: தந்தையை மிஞ்சிய தெய்வமும் இல்லை

அன்னையின் பிரிவால் துயரின் உச்சிக்கே சென்று தோழமைகளின் அழைப்பால் மீண்டும் இணையவானில் வட்டமடிக்க வந்திருக்கும் இளையநிலா என்றும் இளையநிலா தான். அவரின் அன்னையின் பிரிந்த வலிகளைத் தாங்கிய குறும்பா உங்கள் பார்வைக்கும்
அன்னைக்குச் சமர்ப்பணம்!..

படைப்பாற்றல், தோட்டக்கலை, பாடும் திறன் என பன்முகம் கொண்ட ஒரு பதிவர் ஜெர்மனியில் வசித்து வரும் ப்ரியசகி அவர்களின் எழுத்துகளில் ஒரு எதார்த்தமும் குழந்தைத் தனமும் துள்ளி எழும்புவதை நான் கண்டு உணர்ந்திருக்கிறேன். அவரின் தோட்டத்திற்கு நீங்கள் சென்று வர ஆசையா
என் வீட்டுத்தோட்டத்தில்....

மியாவ் மியாவ் என்னஙக பார்க்கிறீங்க! மின்னல் மியாவ் அதிரா அவர்களைத் தான் அழைக்கிறேன் பழகலாம் வாங்க வாங்கனு சொல்லிட்டு எங்க போயிட்டாங்க வாங்க நாம அவங்களை அவங்க சமையல் அறையில் போய் தேடுவோம்
பழகலாம் வாங்க!!.. வாங்க!!!:)

சென்னைத்தமிழில் பேசினால் நமக்கே கிறுகிறுனுகீதுபா என்று சொல்லும் அளவுக்கு நமக்கு இருக்குது ஆஸ்திரேலியா ஆங்கிலத்துடன் ஒப்பிட்டால் எப்படி இருக்கும் இதோ சகோதரி கீதமஞ்சரி அவர்கள் அழைத்துச் செல்கிறார் வாருங்களேன் சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3

தாய் தன் குழந்தையைக் கொஞ்சும் அழகிற்கு ஏது இணை! அவர்களின் அன்பினில் குழந்தைகள் அடங்கிக்கிடக்கும் தொட்டிலில் அப்படியொரு கவிதையை நம் வலையுலக சகோதரி திருமிகு மஞ்சுபாஷினி அவர்கள் தந்திருக்கிறார் படிக்கலாம் வாங்க
அழகே என் அற்புதமே....

ரெசிப்பி, தோட்டமென எப்போழுதும் சுறுசுறுப்போடு இயங்கும் மற்றொரு பெண் பதிவர் திருமிகு ஏஞ்சலின் அவர்களின் பன்முகத்திறனும் பாராட்டதலுக்குரியது அவரின் தோட்டமும் அருகாமையில் தான் நாமும் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா!
காகிதப்பூக்கள்

தன்னை ஈன்றெடுத்த தாய்க்கும் தான் ஈன்றெடுத்த இளைய மகனுக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் அழகிய கவிதை எழுதியவர் யாரென்றால் கிச்சன், கைவினைப் பொருட்கள் கிவியின் கூவல்கள் என்று எப்பவும் படு பிசியாக இருப்பவர் அவர் தான் சகோதரி இமா அவர்கள். அவரின் கவிதை
வாழ்த்தொன்று!

வெல்கம் டூ மகிஸ் பேஸ் என்று அன்புக்குரலில் அழைக்கும் சகோதரி அவர்களின் தோட்டத்தில் வளர்ந்துள்ள ரோஜா மலர்களைப் பார்க்க வேண்டுமென எனக்கு ஆவலாக இருக்கிறதே உங்களுக்கு!
ரோஜா...ரோஜா!

வயதும் அனுபவமும் தரும் பாடங்கள் நிறைய நிறைய. அப்படியொரு வயது தந்த தானம் பற்றித் தன் கவி வரிகளில் சொல்கிறார் திருமதி. உமையாள் காயத்ரி அவர்கள். அவருக்கு வயது தந்த தானம் தான் என்னவாக இருக்கும்
வயது தந்த தானம் - கவிதை

தன் எண்ணச் சிக்கலை எளிமையாய் தன் மன ஆறுதலுக்காகக் கோர்த்திருக்கும் வானம் வெளுத்த பின்னும் ஹேமா அவர்களின் எழுத்துகள் கரையாத ஓவியங்கள் தான்
கரையா வண்ணம்

இன்று கடல் கடந்து தமிழ்ப்பாடும்  பெண்குயில்களின் குரல்களை மட்டும் வலைச்சரத்தில் ஒலிக்க விட்டுருக்கிறேன். நாளை ஆண்குயில்கள். சந்திப்போம். நன்றி..








மேலும் வாசிக்க...

சூரியனுக்கு டார்ச் அடிச்சு பார்த்திடலாமா!

வணக்கம் நண்பர்களே! எனது திருமண வேலையின் காரணமாக வலைப்பக்கம் வருவது தாமதமாகி விடுகிறது. தாமதத்திற்கு முதலில் மன்னிக்கவும்..

சூரியனுக்கு டார்ச் லைட் தேவையா!
மலர்களுக்கு வாசனை திரவியம் தெளிக்க வேண்டுமா!
கார்முகிலுக்கு கருவண்ணம் பூசிப் பார்ப்போமா!!
நிலவுக்கு ஒப்பனைகள் செய்வோமா!!
மழைத்துளியை குளிப்பாட்டிப் பார்ப்போமா!
கம்பனுக்கு தமிழ்க் கற்று கொடுப்போமா!

என்ன்ன்ங்க நான் என்ன சொல்ல வருகிறேனு புரியல தானே!! இதோ நான் அறிமுகம் செய்யும் பதிவுகளை நீங்கள் படிக்கும் போது உங்களுக்கே புரியும்.

பதிவர்கள் மூத்தவர். நமக்கெல்லாம் தமிழ்த் தாத்தா. 70 வயதையும் கடந்த இளைஞர். பாடும் ஆற்றலையும் பாட்டுக்கு மெட்டு அமைக்கும் திறமையும் கொண்ட ஐயா சூரி சுப்பிரமணியம் சிவா ஆமாங்க நாம சுப்பு தாத்தா எழுதின ஒரு பதிவுல பதிவுலக நண்பர்களின் பதிவுகளையெல்லாம் குறிப்பிட்டு அழகான நகைச்சுவை ததும்ப பதிந்துள்ளார். நீங்களும் கொஞ்சம் படிங்களேன்
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் !!

இவரைப் போலவே வயதில் மூத்தவராக இருந்தாலும் கருத்துகளின் என்றும் இளைமையாகத் திகழும் இன்னொரு மதிப்பிற்குரிய ஐயா ஜி.எம்.பாலசுப்பிரமணியன் அவர்கள் கம்பராமாயணம் ஆறு காதைகளையும் ஒரு கவிதையில் சொல்லி முடித்தவர். அப்படிப்பட்ட அவரிடமிருந்து வந்துள்ள ஒரு படைப்பு படித்து ரசித்தேன். நீங்கள் ரசிக்க
எனக்கொரு GIRL FRIEND வேண்டாம்....!

வலைச்சர நிர்வாகி சீனா ஐயா அவர்கள் பற்றி அனைவரும் நன்கறிவீர்கள். ஆனால் அவரின் முதல் கணினி அனுபவம் பற்றி அறிந்திருக்கிறீர்களா?அவரே தனது முதல் கணினி அனுபவம் பற்றி எழுதி அசை போடுகிறார்  நீங்களும் படித்து அசை போடுங்களேன்
எனது முதல் கணினி அனுபவம் -

நல்லவர்கள் அதிகாரிகளாய் அமைவது மிகவும் அரிது. அவர் கல்வியாளராக புதுமைச் சிந்தனையாளராக அமைவது அதை விட அரிது. அதிலும் பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மண்ணில் புதைந்த போன வரலாற்று பொக்கிசங்களை உலகிற்கு அறிமுகம் செய்யும் அதிகாரி கிடைப்பது அதனினும் அரிது. அவர் தான் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு. அருள்முருகன் ஐயா அவர்கள். அவர் மண்ணில் புதைந்து கிடைந்த மைல்கள் துணைக் கொண்டு கண்டறிந்த ராசராசன் பயணம் செய்த பெருவழியை நமக்கெல்லாம் அறிமுகம் செய்யும் அழகான பதிவு
நட்ட கல்லும் பேசுமே…

சிறந்த சிந்தனையாளர்,கல்வியாளர், பட்டிமன்ற பேச்சாளர், தமிழாசிரியர், ஆறாம் திணையாகிய கணினித்தமிழை அனைவருக்கும் வழங்கிடும் பொருட்டு பயிற்சிப் பட்டறைகளை முன்னின்று நடத்துபவர், வளம்மிக்க நாளைய உலகம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்பதை நன்குணர்ந்து அவர்களுக்கு தோள்கொடுக்கும் தோழர். அவர் தான் கவிஞர் திரு. நா.முத்துநிலவன் அவர்கள் வளரும் கவிதை எனும் தனது தளத்தில் மகளுக்கு எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கும்
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!

தொடர்ந்து தனது பதிவுகளில் காஞ்சி பெரியவரின் அற்புதங்களைக் கூறி வருபவரும் சிறுகதைப் போட்டி நடத்தி வலையுலக சிறுகதை தந்தையாக திகழுபவருமான திரு. வை.கோ ஐயா அவர்கள் எழுதிய சாத்திரம் சொல்லும் ஸ்நான வகைகள் - ஐந்து.
ஸ்நான வகைகள் - ஐந்து.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நான்மாடக்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் ஒரு சிந்தனையாளர். மாற்றி யோசிப்பதில் கெட்டிக்காரர். கவிதை, கட்டுரைப் போட்டிகளுக்கு தன் முழு ஆதரவையும் தந்து முன்னின்று நடத்திக் கொடுத்து மகிழ்பவர் ரமணி ஐயா அவர்கள் எழுதிய ஒரு படைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டல்
தினம் நன்மை தடையின்றித் தொடர

பல புத்தகங்கள் படைத்து தன் எண்ணங்களுக்கு தட்டச்சால் உயிர்கொடுத்து வலைப்பக்கத்தில் உலாவ விடும் கவிஞர் இவர். அடிக்கடி விமானம் மூலம் வெளிநாடு என்று பறந்தாலும் கூடவே மடிக்கணினியுடன் பயணம் செய்து தமிழ்க்காற்றைச் சுவாசிக்கத் தயங்குவதில்லை அவர் கவிஞர் இராய செல்லப்பா அவர்கள் தான். அவரின் நல்ல எண்ணங்களை அறிந்து கொள்ள உதவும் ஒரு படைப்பு
பத்து கேள்விகள் - பத்துக்கும் பதில்கள்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான் நம் வாழ்க்கை. இதற்கிடையில் நாம் வாழ எடுக்கும் சிரத்தைகள் எத்தனை எத்தனை? இது பற்றிய புலவர் திரு.சா.ராமாநுசம் அவர்கள் எழுதிய கவிதை அனைவருக்கும் வாழ்க்கைப் பாடம்
பிறப்பு வாழ்வில் ஒரு முறை தான் மேலும் இறப்பு வாழ்வில் ஒரு முறை தான்

பௌத்த சுவட்டைத் தேடித் தேடி தன் வாழ்நாளின் மணித்துளிகளை எல்லாம் செலவிட்டு அறிய கண்டுபிடிப்புகளை அரசாங்கத்திற்கு அறிமுகம் செய்து வருபவருமான, தான் படித்த நூல்களை நம்மோடு அன்போடு பகிர்ந்து கொள்பவருமான முனைவர் பா.ஜம்புலிங்கள் அவர்கள் எழுதிய வரலாற்று கண்டுபிடிப்புகளில் செதுக்க வேண்டிய ஒரு பதிவு
பௌத்த சுவட்டைத் தேடி : பெரண்டாக்கோட்டை

இப்படிப்பட்ட தமிழறிஞர்களை இந்த சிறியவன் அறிமுகம் செய்தது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இவர்களை நான் அறிமுகம் செய்து தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா! என்று நீங்கள் கூறும் வாசகம் என் செவிகளையும் எட்டுகிறது.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம். பணிச்சுமையே என் முன் வந்து பயமுறுத்துகிறது. இருப்பினும் விடுவதாக இல்லை. தொடர்ந்து சந்திப்போம். நன்றி





மேலும் வாசிக்க...

Tuesday, June 24, 2014

புதிய தடங்கள்


அறிமுகப் பதிவர்கள் வலைப்பக்கத்திற்கு வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள் ஏற்கனவே தமிழ்க்கரம் பிடித்து நடை பழகி இன்று வேகமாக ஓடக்கூடியவர்கள் இவர்களின் ஓட்டத்திற்கு என்னால் ஈடுகொடுத்து ஓடமுடியவில்லை என்ற ஏக்கம் கூட எனக்கு உண்டு. இவர்களின் புதிய தடத்தால் வலைப்பக்க வசந்த காலங்கள் தொடரும்..

திரு.மகாசுந்தர் அவர்கள் 2012 ஆம் ஆண்டே வலைப்பக்கம் ஆரம்பித்திருந்தாலும்  புதுக்கோட்டை கணினித் தமிழ்ப் பயிலரங்கத்திற்கு பிறகு தளத்தை வளப்படுத்தி கொண்டு எழுத தொடங்கியுள்ளார். அவரின் எழுத்துப் புலமைக்கும் ஆராய்ச்சி நோக்கிற்கும் சான்றாக அமைந்த இந்த கட்டுரை அறிமுகம் செய்வதில் அளவில்லா மகிழ்ச்சி.
உடைந்த சிலம்பும் உடையாத சிலம்புகளும்..

ஈழத்தில் நடந்த கொடுமைகளைச் சாடும், விடியலுக்கான எதிர்பார்ப்பும் கொண்ட சிறப்பான கவிதையை தந்திருக்கும் நண்பர், கருத்துரையில் கூட இவரின் எழுத்துச் செறிவினைக் காணமுடியும். இவர் யார் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது தானே நண்பர்களே!  இதோ அவரது கவிதை
தமிழ் வருவாள்!

முனைவர் பேராசிரியர் பா.மதிவானன் அவர்கள் இனிது இனிது வலைப்பக்கம் தொடங்கி வலைப்பக்கத்தில் எழுதவும் தொடங்கியுள்ளார். பலரை ஆய்வாளர்களாக மாற்றியுள்ள ஐயா அவர்களின் ஆராய்ச்சி நோக்கிற்கு இந்த பதிவே சான்று
அம்சொல் நுண் தேர்ச்சிப் புலமை நடை

எல்லாமே டூப்பு எனும் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி இருக்கும் திரு.ஸ்டாலின் சரவணன்  எச்சில் எனும் தலைப்பில் வாழ்வின் அனுபவங்களை எதார்த்தமாக சொல்லியிருக்கும் கவிதை
எச்சில்

தலைமையாசிரியர் திருமதி. மாலதி அவர்கள் அவரது பெயரிலேயே வலைப்பக்கம் தொடங்கி தனது எண்ணங்களை எழுத்துகளாக்கி தந்து கொண்டிருக்கிறார். உயிர் எழுத்துகளில் ஓரெழுத்துகளை பட்டியலிட்டு பதிவாக தந்திருக்கிறார் உயிரின் ”“ஓர்”“ எழுத்து

சமூகத்தில் திருமணங்கள் என்ற பெயரில் நடக்கும் ஆடம்பர செலவுகள், அப்படிப்பட்ட செலவுகளை தன் செல்வாக்கை நிலைநாட்ட சம்பந்தப்பட்டவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் செல்வி. ரேவதி அவர்களின் பதிவு
இது அவசியமா?

லட்சிய வெறி கொண்டவராக நீங்கள் உங்கள் லட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.ஜெயலெட்சுமி அவர்கள் ஒரு கவிதைப் பகிர்வின் மூலம் சொல்கிறார். லட்சிய வார்த்தைகள் கூறியவர் பிரிவையும் தாங்கிய பதிவு.
தூங்காமல் இருக்கச்சொன்னவர் ...தூங்கிப்போன நாள்....

தமிழின் நிலை கண்டு ஒரு கல்லூரி மாணவனின் மனக்குமுறல்கள் தமிழ் இனி மெல்ல சாகும் எனும் தலைப்பில் தனக்கான ஆதங்கத்தைச் சொல்லியிருக்கும் பதிவு. புதுகை சீலன் வலைப்பக்கத்திலிருந்து
தமிழ் மெல்ல இனி சாகும்......

குறிப்பு
நான் குறிப்பிட்ட அறிமுகப்பதிவர்களின் பதிவுகள் குறைவு தான் ஆனாலும் அவர்களின் எழுத்துகள் செறிவும் செழுமையும் கொண்டது. ஆனாலும் ஒரு சிலருக்கு எனது வேண்டுகோள் தொடர்ந்து எழுதுங்கள் தங்கள் எண்ணங்கள் எழுத்துகளாக இணையவானில் வலம் வரட்டும். நன்றி.











மேலும் வாசிக்க...

இணைந்தே தொடங்குவோம்!

வலை உலக நண்பர்களுக்கு வணக்கம்!

நான் தான் பாண்டியன் பேசுகிறேன். பெயரைச் சொன்னதும் தெரிந்து கொள்வதற்கு நீ என்ன மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?னு தானே கேக்குறீங்க. இதோ என்னை அறிமுகம் செய்தவற்கு முன்பு என்னை பெற்றெடுத்து உலகை அறிமுகம் செய்து வைத்த என் அன்னைக்கும், சான்றோர்களின் அறிமுகம் கிடைக்க  காரணமாகிய தமிழன்னைக்கும், வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கொடுத்து அறிமுகம் செய்து வைத்திருக்கும் திரு.சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் முதலில் என் அன்பான நன்றிகள்.

நான் தான் பாண்டியன் பேசுகிறேன். அரும்புகள் மலரட்டும் எனும் வலைப்பக்கத்தில் எழுதி வரும் அ.பாண்டியன் தான் நான். என் வலைப்பக்கம் ஆரம்பத்து வருகிற சூன் 17 வந்தால் ஒரு வருடம் முடிவடைய இருக்கிறது.  ஆமாங்க நடை பழகும் சிறு குழந்தை நான். என் எண்ணங்களை எழுத்துக்களாக்கும் முயற்சியில் கட்டுரைகள், கவிதைகள் புனைந்துள்ளேன். அவ்வாறு எழுதியதில் எனக்கு பிடித்த பதிவுகள் இருக்கட்டும். எனக்கு பிடித்த பதிவுகளை நானே அறிமுகம் செய்வதை விட நம் வலைப்பக்க நண்பர்களுக்கு பிடித்த பதிவுகளை இப்பதிவு மூலம் அறிமுகம் செய்கிறேன்.

 சகோதரி இளையநிலா அவர்கள் அவர்களது பக்கத்தில் பதிவோடு பகிரும் நண்பர்கள் எனும் தலைப்பில் அறிமுகம் செய்த எனது பதிவு
புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு

சகோதரி தென்றல் சசிகலா அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த பதிவு
தாய்மார்களே தமிழ்ப் பால் ஊட்டுங்கள்

சகோதரர் தளிர் சுரேஷ் அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த பதிவு
சினிமா விமர்சனம் அல்ல- சினிமா சார்ந்த விமர்சனம்

சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த கவிதை
வரலாறு படைப்போம் வா நண்பா!

சகோதரி மஞ்சுபாஷினி அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த பதிவு
வலைப்பதிவு தம்பதியினரோடு ஓர் இனிய சந்திப்பு

சகோதரி கருவாச்சி கலை அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த பதிவு
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்- அறிவோம்

குறிப்பு:
தாமதமான வருகைக்கு நண்பர்கள் மன்னிக்கவும். நேற்றைய பதிவிற்காக காத்திருக்க வைத்தமைக்கு பொறுத்தருள்க. சென்னை பயணம் இப்பொழுது வந்தேன். வந்தவுடன் முதல் வேலை இப்பதிவு தான். இச்சிறிவனின் எழுத்துக்களைப் பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள்.. வாருங்கள் நண்பர்களே தமிழின் வளர்ச்சிக்கான நம் பணிகளில் இணைந்தே தொடங்குவோம். நன்றி...




மேலும் வாசிக்க...

Monday, June 23, 2014

தந்தையர் தின வாழ்த்து

அன்பின் சக பதிவர்களே !

தந்தையர் தினத்தன்று எனது அருமை மகள் சுஜா தந்தையர் தின வாழ்த்துக் கவிதை ஒன்று அனுப்பி இருந்தார். நானும் அதனைப் படித்து மகிழ்ந்து எனது தளத்தில் பதிவாக வெளி இட்டிருந்தேன்.

அதனைப் படித்த நண்பர் சுப்பு தாத்தா என அழைக்கப் படும் சூரி சிவா மகிழ்ந்து அக்கவிதையை சாரங்க இராகத்தில் அப்படியே பாடி அந்நிகழ்வினை காணொளியாக்கி யூ ட்யூப்பில் இணைத்து எனக்கு அனுப்பி இருந்தார்.

அதனைக் கண்டு மகிழ்ந்து அதனை அனைவருக்கும் பகிரும் வண்ணம் இங்கு பதிவாக்கி வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

வருகை தரும் அனைவரும் படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் வாசிக்க...

Sunday, June 22, 2014

செல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் முத்து சிவா, 

இவரது  வலைத்தளம்   :  அதிரடிக்காரன் .   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த 
 ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து 
  முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.  

 இவர் எழுதிய பதிவுகள்                         : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள்             : 040
அறிமுகப் படுத்திய பதிவுகள்               : 056
பெற்ற மறுமொழிகள்                            : 053
வருகை தந்தவர்கள்                              : 2951

முத்து சிவா   பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

முத்து சிவா   -    இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   அரும்புகள் மலரட்டும் என்னும் வலைப்பூவை எழுதிவரும் அ.பாண்டியன்  ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  அ.பாண்டியனை -வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்தில் சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவினைத்  தருக எனக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளைய ஆசிரியர் பெயர் : .பாண்டியன்
எம்.ஏ., பி.எட் தமிழில் படித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம்- கல்குடி ரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக
பணி புரிந்து வருகிறார். ரும்புகள் மலரட்டும் எனும் வலைப்பக்கத்தில்
கடந்த ஒரு வருடமாக எழுதி வருகிறார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிறந்து ங்கேயே
வசித்து வருகிறார்.. ப்பா, ம்மா,  இரண்டு இளைய சகோதர்களுடன்
வசிக்கிறார். வயது 29 முடிவுற்றது. இவருக்கு  டுத்த மாதம் ஜூலை 9 ஆம் தேதி
ன்று திருமணம் நடைபெற இருக்கிறது. 

பதிவர்கள் - நண்பர்கள் அனைவரையும் நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கும் நண்பர் அ.பாண்டியனை - ஜூலை 9ம் தேதி நடை பெற இருக்கும் அவர்து திருமணத்தை முன்னிட்டு வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நல்வாழ்த்துகள்  முத்து சிவா

நல்வாழ்த்துகள் அ.பாண்டியன் 

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

பிரபல பதிவர்களுடன் கவுண்டர்!!!

குறிப்பு : இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்கே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. கவுண்டர் பதிவென்பதால் அவர் பாணி வசனங்கள் சில தவிர்க்க இயலாததாகிவிட்டது.

கவுண்டரும் செந்திலும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில பத்து மணிக்கு அன்னிக்கு ரிலீஸான ஒரு புதுப்படத்துக்கு

தியேட்டருக்கு போறாங்க. கவுண்டர் ஸ்லாங்குல தொடருங்க.

கவுண்டர் : டேய் மண்டையா... நீ சொன்னேங்குறதுக்காக இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மொத மொறையா ஒரு படத்த மொத ஷோ பாக்க வந்துருக்கேன். மவனே இதுல எதாவது நடந்துச்சி நடு மண்டையப் புடிச்சி கடிச்சி வச்சிருவேன்.

செந்தில் : சும்மா பொலம்பாம சீக்கிரம் வாங்கன்னே... மொத ஷோ வேற கூட்டம் வேற அதிகமா இருக்கும். டிக்கெட் கிடைக்காம எதுவும் போயிடப்போவுது.

(தியேட்டர் வந்ததும் கவுண்டர் வெளியில பாக்குறாரு யாருமே இல்லை)

கவுண்டர் : டேய் படம் போட்டாங்க போலருக்கு சீக்கிரம் போய் டிக்கெட் எடுத்துட்டு வாடா...

செந்தில் : இதோ வந்துட்டேன்னே.... (இரண்டு நிமிடத்தில் செந்தில் டிக்கெட் எடுத்துட்டு வர ரெண்டு பேரும் உள்ள போறாங்க. தியேட்டர் கதவ திறந்து உள்ள போகும் போது

கவுண்டர் : டேய் மண்டையா.. என்னடா ஒரே கருங்கும்முன்னு இருக்கு (ன்னு சொல்லிட்டு கண்ண மெல்ல கசக்கிட்டு தியேட்டர் உள்ள சுத்தி சுத்தி பாக்க மொத்தமே ஒரு நாலு பேரு அங்கங்க உக்காந்துருக்காங்க)

கவுண்டர் : (செந்தில் பின்னந்தலையப் புடிச்சி) டேய் பெருச்சாளி... இந்தப் படத்துக்கு தான் கூட்டம் அலை மோதுதா? இதுல டிக்கெட் கெடைக்காதுன்னு வேகமா வேற வரச்சொல்லுற

செந்தில் : ஐ ஆம் வெரி சொரின்னே...

கவுண்டர் : வீட்டுக்குவா நாயே மம்பட்டிய எடுத்து நடுமண்டைய கொத்தி வச்சிடுறேன்.. (ஹை பிட்ச்ல) ஆமா யாருமே வராத இந்தப் படத்துக்கு காலங்காத்தால வந்து உக்காந்துருக்கானுகளே யாருடா இவனுக... வா பாக்கலாம்...

முதல்ல ஒருத்தர  பாக்குறாங்க..

கவுண்டர் : அய்யா பேர் என்னங்க?

போ.ஆ.செ : போரூர் ஆனா செந்தில் ங்க

கவுண்டர் : நீ ஆனா செந்திலா வேணாலும் இரு.. இல்லை ஆவன்னா செந்திலா வேணாலும் இரு.. அதென்ன விடியக் காலையிலயே தியேட்டர் பக்கம்?

போ.ஆ.செ : நான் இந்தத் திரைப்படத்தை சென்ற வாரமே பார்க்க வேண்டும் என்று இருந்தேன்.

கவுண்டர் : இன்னிக்குத் தான் படத்தையே ரிலீஸ் பன்னிருக்கானுக.. இதுல நீ போன வாரம் எப்புடி பாக்கனும்னு இருந்த... ?

போ.ஆ.செ : அட விடுங்கண்ணே வழக்கமா இதே டயலாக் எழுதி பழகிடுச்சி.. அதாவது இந்தப் படத்திற்கு நான் வருவது என முடிவெடுத்து ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு  வந்து கொண்டிருக்கையில் என் நண்பர் ஒருவர்....

கவுண்டர் : யப்பா.. முடியலடா சாமி...நா கெளம்புறேன் நீ ஆள விடு

போ.ஆ.செ : அண்ணே போறதுக்கு முன்னால ஒரு தத்துவம் சொல்றேன் கேட்டுட்டு போங்க..

கவுண்டர் : சொல்லு ஆனா தத்துவம் நல்லா இல்லைன்னா இவன் உன் மூக்க கடிச்சி வச்சிருவான் பரவால்லையா

போ.ஆ.செ : சரி. சொல்றேன் கேளுங்க " முன்னேற்றம் என்பது வாழ்க்கையில் நல்லவனை விட வல்லனுக்கே இயல்பாக அமைகிறது. அதனால் நீயும் வல்லவனாகவே இரு"

கவுண்டர் : எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே இரு... டேய் மண்டையா ரொம்ப நாளா யார் காதையாவது கடிக்கனும்னு சொல்லிக்கிட்டு இருந்தியல்ல... கடிச்சி வச்சிட்டு வா...

அடுத்து ரெண்டு வரிசை தள்ளி ஒருத்தர் ரெண்டு குயர் டிம்மி பேப்பர் வச்சி வேக வேகமா எழுதிகிட்டு இருக்காரு

கவுண்டர் : டேய் நாம தியேட்டருக்குள்ள வந்தோமா இல்லை எதுவும் பள்ளிக்கூடத்துக்குள்ள வந்துட்டோமா என்னடா இது? எழுதிகிட்டு இருக்கவர கூப்பிட்டு

கவுண்டர் : தம்பி படம் அங்க ஓடிகிட்டு இருக்கு நீ பாட்டுக்கு இங்க பேப்பர்ல எழுதிகிட்டு இருக்கியே அப்புறம் எதுக்கு படத்துக்கு வந்த? யாருப்பா நீ?

செ.கு : என் பேரு பீப்பீ செந்தில் குமாருண்ணே.. நா படத்துக்கு விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்...

கவுண்டர் : என்னது விமர்சனம் எழுதிகிட்டு இருக்கியா? படம் ஆரம்பிச்சி இன்னும் 10 நிமிஷம் கூட ஆவல அதுக்குள்ள விமர்சனமா?

செ.கு : அட நீங்க வேற... நா எழுதிகிட்டு இருக்கது அடுத்த வாரம் ரிலீஸ் ஆகப்போற படத்துக்கு.

கவுண்டர் : என்ன அடுத்த வாரம் ரிலீஸ் ஆவப்போற படத்துக்கா.. அடப்பாவி.. அப்போ இந்தப் படத்துக்கு?

செ.கு : அதப் போன வாரமே எழுதிட்டேன்..

கவுண்டர் : எங்க குடு பாப்போம்... ன்னு சொன்னதும் செந்தில் குமார் ஒரு அம்பது பக்க நோட்டு புத்தகத்த எடுத்து குடுக்குறாரு.. கவுண்டர் அதப்பத்து ஷாக் ஆகி

கவுண்டர் : அடங்கப்பா.. இது என்னடா படத்தோட ஸ்கிரிப்ட விட பெருசா இருக்கும் போலருக்கு...  "தம்பி... அது என்ன எனக்குப் பிடித்த வசனங்கள்னு போட்டு படத்துல உள்ள எல்லா வசனத்தையும் எழுதிருக்க? ஆமா அப்புறம் இது என்ன பாட்டா செருப்புல விலை போடுறமாதிரி மார்க் 2.25, 2.35 ன்னு.. அத ரவுண்டா குடுத்தா உங்க லட்சியத்துக்கு எதாவது இழுக்கு வந்துருங்களா...

செ.கு : அதெல்லாம் விடுங்க.. டைரக்டர்கிட்ட சில கேள்விகள் கேட்ருக்கேன் பாருங்க... யாராலயும் பதில் சொல்ல முடியாது

கவுண்டர் : டைரக்டர்ட்ட நீ கேள்வி கேக்குறது இருக்கட்டும்.. நா உன்ன ஒரு கேள்வி கேக்குறேன். "நீ படம் பாக்க வந்தியா இல்லைப் பரிட்சை எழுத வந்தியா?" உன் பக்கத்துல நிக்கிறதே டேஞ்ஜர்... நா வர்றேம்ப்பா.." ன்னு அடுத்த ஆளப் பாக்க நகர்றாரு... அப்போ செந்தில்


செந்தில் : அண்ணே இதுல ஒரு ஒற்றுமையப் பாத்தீங்களா

கவுண்டர் : என்ன நாயே?

செந்தில் : மொதல்ல பாத்தோமே அவர் பேரும் செந்திலு... அடுத்து பாத்தோமே அவர் பேரும் செந்திலு.. ஏன் பேரும் செந்திலு... எப்புடி?

கவுண்டர் : அட அட அட.. என்னா ஒரு ஒற்றுமை.. நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிகிட்டு பக்கத்துலயே நீ உக்காந்துக்க... உனக்குப் பின்னால வர்ற சந்ததிகள் அதப் பாத்துப் படிச்சி தெரிஞ்சிக்கட்டும்.

அடுத்து ரெண்டு வரிசை தாண்டி ஒருத்தர் ரொம்ப சீரியஸா படம் பாத்துக்கிட்டு இருக்காரு... ஹீரோயின் வரும்போது மட்டும் சிரிக்கிறாரு. மத்த நேரத்துல சீரியஸா உக்காந்துருக்காரு

கவுண்டர் : டேய் மண்டையா யாருடா அது...வித்யாசமான கேரக்டரா இருக்கு. வா போய் பேசிப்பாக்கலாம்னு அவர் பக்கத்துல போய் "சார்" ங்குறாரு உடனே

அவர் : பீப் பீப் பீப்....ன்னாடா வேணும் உங்களுக்கு ( பீப் பீப் - சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள்)

கவுண்டர் : ஒண்ணுமில்லீங்... அது என்னங் படத்துல லேடீஸ் வரும்போது மட்டும் வாய நாலு இஞ்ச் நல்லா தொறக்குறீங்.. மத்த நேரத்துல மொறப்பா இருக்குறீங்ன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேங்

அவர் : பீப் பீப்... அதெல்லாம் என்ன பீப் க்கு உன்கிட்ட சொல்லனும்...பீப்..  நா யாரு தெரியுமா.. பீப் பீப் போயிடு..

கவுண்டர் செந்திலைப் பார்த்து

கவுண்டர் : டேய் சென்சார் போர்டு மண்டையா இநத அளவு காதுல தேன் வந்து பாயுற மாதிரி பேசுறாரே யாருடா அது?

செந்தில் : அது தான்னே அவரு

கவுண்டர் : அவரா? ஓ..... அவ்வுறா... சரி சரி வா போகலாம்னு திரும்புறவறரு டக்குன்னு ஷாக் அடிச்சி நிக்கிறாரு

கவுண்டர் : (ரொமான்ஸ் மூடுல) டேய் பீரங்கி வாயா.. அங்கப் பாருடா... இந்த ஷோவுக்கு கூட  ஒரு யங் கேர்ள் வந்துருக்கு... வாவ் வாட் ய பாப் கட்டிங்? பின்னாலருந்து பாக்கும் போதே  அந்த அழகு தெரியுதுடா

செந்தில் : நானும் வட இந்தியாவுலயும் பாத்துருக்கேன் தென் இந்தியாவுலயும் பாத்துருக்கேன்.. இப்புடி ஒரு ரங்கோலி கட்டிங்க நா பாத்ததே இல்லியே..

கவுண்டர் : "வா முன்னால போய் பாக்கலாம்"..ன்னு ஆசையா முன்னால போய் மூஞ்ச பாக்குறாரு... முகத்த பாத்ததும் டக்குன்னு ஷாக் ஆயி

கவுண்டர் : இய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. அடடடா.... பேக்குலருந்து பாத்து ஏமாந்துட்டியேடா.... ய்ய்ய்யய்ய..சோ... டேய் அம்மா வாட்டர் மண்டையா அவன் பேரு என்னன்னு கேளுடா..

செந்தில் : ஹலோ அண்ணேன் கேக்குறாருல்ல.. உங்க பேரு என்னனு சொல்லுங்க..

பி.பி : யோ..யோ...தி ஈஸ் பி.பி.  ரேம்போக் மாடல்...

கவுண்டர் : டேய்.. ப்ரொஜெக்டர் மண்டையா... இந்தத் தம்பிய பொத்துனாப்புல பின் சீட்டுக்குத் தூக்கிட்டு வா... ரொம்ப நாளா ஆக்சன் படம் பாக்கனும்னு சொன்னியல்லோ... இன்னிக்கு காட்டுறேன்.


**********************************X********************************************

சரி இந்தப் பதிவோட முடிச்சிக்குறேன். ஒரு வாரமா நம்ம மொக்கையெல்லாம் தாங்கிட்டு வன்முறையில எதுவும் ஈடுபடாம இருந்தமைக்கு மிக்க நன்றி.

வலைச்சர ஆசிரியர் பொறுப்பை வழங்கியதற்கு சீனா அய்யாவிற்கும், வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அனைத்துப் பதிவுகளுக்கும் ஊக்குவித்து பின்னூட்டமளித்த அனைவருக்கும் குறிப்பாக, அய்யா துரை செல்வராஜு, அய்யா தளிர் சுரேஷ், சொக்கன் சுப்ரமணியன்ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றியுடன்,

வீ.முத்துசிவா





மேலும் வாசிக்க...

Saturday, June 21, 2014

இங்கிலீஷ்காரன்!!!

கொஞ்ச நாளுக்கு முன்னால ரீமேக்குன்னா என்னன்னு தெரியாது. எந்த சீன எங்கருந்து சுடுறாய்ங்கன்னு தெரியாது. எதோ நல்லா இருந்தா கைதட்டிட்டு போய்க்கிட்டே இருந்தோம். ஏன்னா தமிழ்ப் படங்களைத் தவிற வேற படங்கள் நமக்கு அவ்வளவு பரிட்சையம் இல்லை. ஒரு சில பேரு மட்டும் தான் இங்கிலீஷ் படங்கள் மட்டும் பாப்பாங்க. ஆனா இப்போ அப்புடி இல்லை. அனைத்து மொழிப் படங்களையும் நம்மாளுங்க பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்கருந்து எத சுட்டாலும் எவனாது ஒருத்தன் கண்ணுலயாது மாட்டிரும். ஒரு சீன்னாலும் சரி ஒரு சீன்ல ஒரு ஷாட்னாலும் சரி எத எத எங்கருந்து ஆட்டையப் போடுறாய்ங்கன்னு அப்படியே சொல்லிருவாய்ங்க. ஒரே ஒரு ஃபோட்டோவ மட்டும் ரிலீச் பண்ண நம்ம இளைய தளபதியோட "யோகன் - அத்தியாயம் ஒன்று" நின்னு போகக் காரணமே இந்த மாதிரி விஷயத்தாலதான்.

இன்னிக்கு தமிழ் மட்டும் இல்லாம பிற மொழிப்படங்களையும் பார்த்து நமக்கு விமர்சனங்களை வழங்கும் சில பதிவர்களை பாக்கலாம்.

 நம்மூர்ல உள்ள நுழையும் போதே கோடிகள்ல சம்பளம் வாங்குற ஹீரோக்கள் இருக்க இன்னும் கேரள சூப்பர் ஸ்டார்களே லட்சங்களில் தான் வாங்கிட்டு இருக்காங்களாம்.பிரம்மாண்டம் மட்டுமே கம்மியா இருக்குமே தவிற கதைகள்ல மலையாளப் படங்களை அடிச்சிக்க முடியாதுன்னு மறுபடியும் நிரூபித்த ஒரு மெகா ஹிட் க்ரைம் த்ரில்லர்  படமான த்ரிஷ்யம் விமர்சனம் இங்கே.  

மலையாளப்  படங்களயாவது நமக்கு ஓரளவுக்குத் தெரியும். மம்முட்டி மோகன்லான், சுரேஷ் கோபின்னு ஒரு சில நடிகர்களையும் தெரியும். மீரா ஜாஸ்மீன், பாவனா, நஸ்ரியான்னு சில நடிகைகளையும் தெரியும். (யார்ரா அது சகீலா பேர தேடுறது) ஆனா நமக்கு சுத்தமா பரிட்சையமே இல்லாத ஏரியா கன்னடம். குத்து ரம்யாவத் தவற நமக்கு (எனக்கு) அங்க வேற யாரயும் தெரியது. அப்படிப்பட்ட கன்னடப் படங்களிலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க் வைச்ச படம் லூசியா. பல தமிழர்கள் பார்த்த முதல் கன்னடப் படமும் அதுவாத்தான் இருக்கும். லூசியாவின் விமர்சனம்  இங்கே.

அடுத்து நம்மை விட ஒரு படி மேலிருக்கும் தெலுங்குப் படங்களில் சமீபத்தில் வெளிவந்து ஹிட்டடித்த ரேஸ் குர்ரத்தின் விமர்சனம் அண்ணன் அட்ரா சக்கயின் கைவண்ணத்தில்.

அண்ணன் விமர்சனத்துல என்ன சொல்ல வர்றாருன்னா... ஹலோ அவரு என்ன சொன்னா என்ன? எல்லாரும் அவர் விமர்சனத்துல போடுற ஹீரோயின் ஸ்டில்லப் பாக்கத்தானே போறீங்க.. பாத்துட்டு பேயாம வாங்க.

ஜெய் சன்னா கேசவ ரெட்டி என்னும் ஒரே சீன்ல தமிழ்நாட்டையே கலங்கடித்த பாலகிருஷ்ணாவோட ஆக்சன் அவதாரத்த பத்தி நம்ம யுவர்கிருஷ்ணா விளக்குறாரு.  பாலகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் ப்ளாக் பஸ்டர் LEGEND இன் விமர்சனம்.

பதிவிலிருந்து ஒரு பகுதி உங்களுக்காக

இங்கே ‘தல’யோட பைக்கை காட்டினாலேயே விசில் அடிக்கிறார்கள். ‘தல’க்கு மட்டும்தான் பைக்கே ஓட்டத்தெரியும் என்று தமிழர்களுக்கு அப்படியொரு நம்பிக்கை. பாலைய்யா பைக், கார், ரயில், குதிரை, ஹீரோயினையெல்லாம் அசால்டாக ஓட்டுகிறார். ப்ளைட் மற்றும் கப்பல் ஓட்டக்கூடிய காட்சிகள் இல்லாததுதான் படத்தின் ஒரே குறை.

 ஆந்திராவின் இளையதலைமுறை ரசிகர்கள் இவரது நடனத்தை காமெடிக் காட்சியாகதான் பார்க்கிறார்கள். இந்த வரலாற்று சோகத்தையும் முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறது லெஜண்ட். இப்படத்தில் ஆடுபவர் பாலகிருஷ்ணாவா அல்லது ஜூனியர் என்.டி.ஆரா என்று கையை கிள்ளி பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது முதுமையையும் தாண்டி ரிஸ்க் எடுத்து, டூப் போடாமல் அசுரத்தனமான அசைவுகளை அனாயசமாக செய்திருக்கிறார்.

அப்புறம் போன வாரம் ரிலீஸ் ஆச்சு நம்ம விஜய்யின் "துப்பாக்கி"யோட ரீமேக்கான அக்சய் குமார் நடிச்ச "ஹாலிடே". எங்க ரீமேக்குக்கே ரீமேக்கா...  ரெண்டு படத்துக்கும் உள்ள வித்யாசங்கள் என்ன என்ன? அப்புடின்னு இங்க ஒருத்தர் வரிசைப்படுத்திருக்காரு. அவர் சொன்ன ஒரு முக்கியமான பெரிய வித்யாசம் இதோ 

"துப்பாக்கியில் "I AM WAITING" என்று சொல்லிவிட்டு விஜய் கழுத்தை இடதுபுறமாக வெட்டுவார்.. அக்ஷய் கழுத்தை வலது புறமாக வெட்டுவாராம்"
படிச்சிட்டு நா அப்புடியே ஸாக் ஆயிட்டேன்

அடப்போங்கப்பா.. நீங்கல்லாம் சும்மா ஜூஜூபி... என்னய்யா தெலுங்குங்குறீங்க, மலையாளம்ங்குறீங்க கன்னடம்ங்குறீங்க நாங்கல்லாம் கொரியா படங்களையே பாக்க ஆரம்பிச்சிட்டோம்.  THE MAN FROM NOWHERE /2010/ கொரியா/அவன் யார்?  

இப்புடி ஒரு தலைப்பு வச்சதுமே தெரியும் அவர் யார்?ன்னு. நா சொல்லித்தான் தெரியனுமா.. அவரு இந்தப்படத்தோட கதையப் பத்தி அவுரு என்ன சொல்றாருன்னா

"ஒரு காட்டுத்தனமான அமைதியான ஆள்.... அவன் யாருன்னே யாருக்கும் தெரியாது..?.. அவன் ஒரு  புரியாத புதிர்... அவனுக்கு இரக்கம் என்பதே இல்லை. யாரிடமும் பேசமாட்டான்.. தனிமைதான் அவன் வாழ்க்கை...

எல்லோருக்கும் அவன் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் இருக்கும் அது மட்டுமல்ல...  படத்தில் நடிக்கும்  அத்தனை கேரக்டர்கள் முதற்கொண்டு அவன் யார் என்று அறிந்துக்கொள்ள ஆசை..." அப்டின்னு அவரு சொல்றாரு. எதுக்கும் அதான் கதையான்னு நீங்களும் ஒருதடவ பாத்து கன்ஃபார்ம் பன்னிக்குங்க.

அடுத்து லேட்டஸ்டாக ரிலீஸ் ஆகி பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஆங்கிலப் படமான  How to Train your Dragon-2 இன் விமர்சனம். வெறும் விமர்சனமாக மட்டும் இல்லாம படத்தைப் பற்றிய பல டெக்னிக்கல் விஷயங்களையும் சுவரஸ்யமா சொல்லிருக்காரு கருந்தேள்.


ரைட்டு கிட்டத்தட்ட ஆறு நாள் ஓட்டியாச்சி..

அடுத்த பதிவு "பிரபல பதிவர்களுடன் கவுண்டர்"... காத்திருங்கள்!!!






மேலும் வாசிக்க...

Friday, June 20, 2014

எதிரும் புதிரும்!!!

நம்மூரைப் பொறுத்த வரைக்கும் சினிமாவிலோ இல்லை அரசியலிலோ போட்டின்னு வந்துட்டா அது எப்பவுமே  ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டுமே இருக்கும். பல பேரு போட்டியில இருந்தாலும் மொத்த கூட்டமும் ரெண்டே பங்கா பிரிஞ்சி ரெண்டு பேரு பின்னால நின்னு, போட்டில இருக்க மத்த எல்லாரயும் அல்லகைஸா அப்படியே சுத்தி  நின்னு வேடிக்கை பாக்க வச்சிருவோம். எம்ஜியாரா சிவாஜியா, திமுகவா இல்லை அதிமுகவா ரஜினியா கமலா,  சச்சினா கங்குலியா, அஜித்தா  விஜய்யா இப்புடி பாலமன் ஆப்பைய்யா பட்டிமன்ற தலைப்பு மாதிரி வச்சிக்கிட்டு  தான் நாம பொழுத ஓட்டிகிட்டு  இருக்கோம். இப்டி இருந்தாதான் நல்லாவும் இருக்கு. இல்லை ஜெமினி கணேசனா  முத்துராமனா ன்னு ஒரு தலைப்பு வச்சா ஒரு கிக் இருக்குமா இல்லை அர்ஜூனா சரத்குமாரான்னு தலைப்பு வச்சா  யாரும் பக்கத்துல இருப்பாய்ங்களா.. வெறிச்சி ஓடிர மாட்டாய்ங்க. சரி இன்னிக்கு இந்த மாதிரி எதிரும் புதிருமா இருக்க சில பிரபலங்களை பற்றின பதிவுகளப் பாக்கலாம்.

எம்ஜிஆரையும் சிவாஜியையும் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு இப்போதுள்ள பதிவர்கள் யாரும் இல்லை. அதனால் முத்த பதிவர் தருமி அவர்கள் எம்ஜிஆரையும் சிவாஜியையும் கொஞ்சம் ஓப்பிடுகிறார். ஏன் எம்.ஜி.ஆருக்கு சிவாஜியோட மரியாதை அதிகம் கிடைக்குதுன்னு ஒரு நகைச்சுவையாவும் ஒரு ஆராய்ச்சி பண்ணிருக்காரு அவரது ஆராய்ச்சி முடிவு என்ன சொல்லுதுன்னா

சிவாஜியின் பெயர் கணேசன் என்று முடிகிறது; இதனால், (சிவாஜி)கணேசன் நடித்தான்;(சிவாஜி)கணேசன் கொன்னுட்டான்’டா… இப்படித்தான் சொல்ல எளிதாகிறது. அடுத்த பெயரைச் சொல்லிப் பாருங்கள்: எம்.ஜி.ஆர். நடித்தார் என்பதுதான் எளிதாக வரும். நல்லா வாள் சண்டை எம்.ஜி.ஆர். போட்டான் என்றால் நல்லாவா இருக்கு.ஆக, கண்டுபிடிச்சது என்னென்னா, பெயரின் விகுதியை ‘அர்’, ‘ஆர்’ என்பதுபோல வைத்தால் பின்னால் கூப்பிடுபவர்கள்

எம்ஜிஆர் சிவாஜிக்களுக்கு பிறகு ரஜினி கமல்ல தொடர்ந்து இப்போ அஜித் விஜய் ஃபைட்டு தான் இப்போ உச்சத்துல இருக்கு

இவங்க ரெண்டு பேரு படமும் ஒண்ணா ரிலீஸ் ஆகுற அன்னிக்கு அட்லீஸ்ட் ஒரு நாலு பேராவது குத்திக்கிட்டு செத்து போயிடுறாய்ங்க. படம் பாக்கப் போறப்போ கத்தில என்னடா விளையாட்டு. அஜித் ஃபேன்ஸ் விஜய்ய அசிங்கமா பேச, விஜய் ஃபேன்ஸ் அவனுங்கள அசிங்கமா பேச ரெண்டுபேருக்கும் ஒரே எண்டர்ட்டெய்ண்மெண்டு தான் . தல கவுண்டர் சொல்ற மாதிரி 'beautiful game". அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள் இவங்க பன்ற அலும்பப் பாருங்க.

ஆனா ரெண்டு தரப்புமே அவங்க  அவங்க சைடுல நாங்க எதுக்கு இவருக்கு ரசிகரா இருக்கோம் அப்புடிங்குறதுக்கு பல காரணங்கள் வச்சிருக்காங்க.
இதுல ந்ம்மூர் அரசியல்வாதிகள் கட்சித்தாவல் பண்ற மாதிரி இவங்களும் டைம் கிடைக்கும்போது இங்கருந்து அங்கயோ இல்லை அங்கருந்து இங்கயோ மாறிகிட்டு தான் இருக்காங்க. எங்க கம்பெனில ஒரு அஜித் ஃபேன "ஆஞ்சனேயா" படத்த சொல்லி எதோ கிண்டல் பண்ணும் போது "ஹலோ.. ஆஞ்சனேயா வரும்போது நா விஜய் ஃபேன்ங்க"ன்னான்... அவனாடா நீயி.. நல்ல வேளை நாங்க எப்பவும் உஷா ஃபேன் தான்.

அஜித் அவரோட ரசிகர்கள் சிலரது பார்வையில். அஜித் ஒரு ஆச்சர்யக்குறி ன்னு நம்ம சக்கரக்கட்டி சொல்றாப்ளே. அப்போ விஜய் என்ன கேள்விக்குறியான்னு கேக்கக்கூடாது. வழக்கமா கோயிலுக்குத்தான் 'தல' வரலாறுன்னு ஒண்ணு இருக்கும். ஆனா இவங்களோட தல வரலாற கொஞ்சம் பாருங்க.

விஜய் ஃபேன்ஸ் மட்டும் என்ன சும்மாவா... எனக்கு ஏன் விஜய்ய புடிக்கும் அப்டின்னு நம்ம அகாதுகா அப்பாட்டக்கர் சொல்றாரு கேட்டுக்குங்க. உங்களுக்கு மட்டும்தான் தல வரலாறு உண்டா, எங்களுக்கு ஒரு தளபதி வரலாறு இல்லையா... இக்கடச் சூடு

அப்போ அஜித்துன்ன என்ன சும்மாவா... அவரோட பாப்புலாரிட்டி என்ன தமாசா அப்டின்னு என்கிட்ட கேட்காதீங்க. நம்ம சிவகாசிக்காரன்கிட்ட கேளுங்க அவரு பதில் சொல்லுவாரு. சரி மொத்தமா என்னதாம்ப்பா சொல்ல வர்றீங்க.. அஜித்தா விஜய்யா .. இதப் படிச்சிட்டு  நீங்களே ஒரு முடிவு பண்ணிக்குங்க.

அட என்னங்க தனித்தனியா கம்பேரிசன் போட்டுக்கிட்டு இப்போ நா போடுறேன் பாருங்க ஒரு கம்பேரிசன் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் சிம்பு - தனுஷ் ன்னு மொத்தச் சண்டையையும் போட்டுட்டு கடைசியா என்ன தீர்ப்பு குடுக்குறார்னா

        எந்திரனில் சிட்டி ரோபோ சொல்வது இந்த நடிகர்களின் சண்டையை 
                                         " யாராலும் அழிக்க முடியாது"

சச்சின் vs Rest

அது என்னப்பா இவருக்கு மட்டும் multiple opponents ன்னு பாக்குறீங்களா.. நேரத்துக்கு ஏத்தாமாதிரி இவரோட ஆப்பொனெண்டுங்களும் மாறிடும். திடீர்னு சச்சினா கங்குலியாம்பாய்ங்க. இல்லை சச்சினா ட்ராவிட்டாம்பாயிங்க.  இல்லை கண்டம் விட்டு கண்டம் தாண்டி சச்சினா லாராவாம்பாய்ங்க. அதனாலதான் அப்டி.

கிரிக்கெட்டுல சச்சினுக்கு முன் சச்சினுக்கு பின் என சச்சினோட செல்வாக்கை பத்தி அருண் குறிப்பிட்டுருக்காரு.  அட போங்கப்பா எல்லாரும் சச்சின் சச்சின்குறீங்க...மத்தவங்களையெல்லாம் யாரும் கண்டுக்கவே மாட்டீங்களாப்பா,... எனக்கு ஏன் அவரப் புடிக்கல தெரியுமா ன்னு ஒருத்தர் அவர் தரப்பு காரணங்களச் சொல்றாரு.

ஹலோ என்னப்பா இது..  சச்சினா கங்குலியா? ன்னு ஒரு சண்டையா? ஆக்சுவலா ஒருத்தரோட இன்னொருத்தர கம்பேர் பண்ணவே கூடாதுங்குறாரு நம்ம பாலா அண்ணேன். அவரு சொன்னா கரீக்டாதாம்பா இருக்கும்.

அடுத்து இந்த திமுக அதிமுகக்களப் பத்தி எதாவது பேசுவோமா.. ஹலோ ஹலோ ஏன் சார் கல்லெடுக்குறீங்க... ப்ளீஸ் இருங்க எதா இருந்தலும் பேசித் தீத்துக்குவோம். வன்முறை கூடாது.


மேலும் வாசிக்க...

Thursday, June 19, 2014

ஒரு ஊர்ல ஒரு பாட்டி!!!

அட என்னப்பா எப்பப்பாத்தாலும் ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஒரு ஊர்ல ஒரு பாட்டின்னே கதைய ஆரம்பிக்கிறீங்க. வேற யாருமே உங்க கண்ணுக்கு தெரியாதா? உருண்ணா நாலு கெழவிங்க இருக்கத்தான் செய்யும். தென்னை மரம்னா குளவி இருக்குறதும் ஊருன்னா நாலு கெழவி இருக்குறதும் சகஜம்தானப்பா. அதுக்குன்னு எப்பப்பாத்தாலும் ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்துச்சி அது வடை சுட்டுச்சின்னுட்டு. ரொம்ப வருஷமா அந்தப்பாட்டி வடைய மட்டுமே சுட்டுகிட்டு இருக்கு. ஒரு பீட்சா, பர்க்கர், ஸ்பிரிங் ரோல்ன்னு கொஞ்சம் வித்யாசமா சுட்டாத்தானே வியாபாரம் டெவலப் ஆவும். ஆகவே யுவர் ஹானர், நா எதுக்கு இப்புடி மொக்கை போடுறேன்னா, இன்னிக்கு நாம பாக்கப்போவது சில சிறுகதைகள்.

எங்க எல்லாருக்கும் பெரியண்ணா ஒருத்தர் இருக்காரு. பேரு வினையூக்கி செல்வா. நெட்ட கண்டுபுடிக்கிறதுக்கு முன்னாலயே blog எழுதுனவரு. வலைச்சரம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே நிறைய வலைய பிண்ணுனவரு. சுருக்கமா சொல்லனும்னா பதிவுலகத்துல இவரு போதிதர்மன் செட்டு. இன்னும் சுருக்கமா சொல்லப்போனா ஆதாம் ஏவாள் காலத்துலருந்தே பதிவெழுதுற the one & only வினையூக்கி செல்வா.

ஒரு பக்கக் கதை, ஒரு நிமிடக் கதை, ஒரு வருடக் கதைன்னு வகை வகையா கதைங்கள எழுதித் தள்ளிருக்காரு. கிட்டதட்ட இவர் எழுதுன சிறுகதைகள் மட்டும் ஒரு 200 ah தாண்டும். ஆனா ஒரு பக்கம் எழுதுனாலும் சரி ஒன்பது பக்கம் எழுதினாலும் சரி இவரோட கதைகங்க நமக்குள்ள பெரிய தாக்கத்த ஏற்படுத்தும். பெரும்பாலும் இவரோட சஸ்பென்ஸ், திகில் கதைகள் செமயா இருக்கும்.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி தொலைச்சிட்டு இன்னுமும் தேடிகிட்டு இருக்க அந்த மலேசியா விமானத்த மையமா வச்சி அண்ணன் எழுதிய  காணாமல் போகிற விமானங்கள் "ஒரு வேள அப்டி இருக்குமோ"ன்னு நம்மள யோசிக்க வைக்கும். தொலைந்து போன விமானங்கள்

இதுவரைக்கும் நீங்க ஹைக்கூ கவிதைன்னு ஒரிரு வரி கவிதைதான் கேள்விப்பட்டுருப்பீங்க. ஆனா ஹைக்கூ கதை கேள்விப்பட்டதில்லையே.. ரெண்டு பாராவுல ஒரு கதை..  ஒரு குட்டிக்கதை - கொஞ்சூண்டு திகில் இருக்கலாம் எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா?


நம்ம பக்கத்து வீட்டுல எதாவது சண்டை நடந்தா நாம உடம்பு நம்ம வீட்டுலயும் நம்மளோட காது பக்கத்துவீட்டு சுவத்துலயும் இருக்கும். அங்க என்ன நடக்குதுங்குறதுல தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வம். அப்படி ஒட்டுக்கேட்டு மாட்டிக்கிட்ட ஒருத்தர பத்தின திகில் கதை பக்கத்து வீட்டுப்பெண்


வினையூக்கியின் கதைகள் இதுங்க வெறும் ட்ரெயிலர் தான். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதத்துல நமக்கு டெரர கெளப்பும்.

" நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான். ஆனா கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான் ஆனா கைவிட்டுடுவான்" ங்குறா தத்துவத்த பேஸ் பண்ணி நம்மூர்ல சாமியார்கள் எப்படி உருவாகுறாங்கங்குற கதைய நம்ம சிவகாசிக்காரன் அவரோட ஸ்டைல்ல சொல்லிருக்காரு  புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி  குறிப்பா அதுல நம்மாளுங்க எப்படி பொண்ணு பாக்குறப்போ போடுர கண்டிஷன்ஸ செமையா சொல்லிருக்காரு.

உதாரணமா 26 வயசுல பொண்ணு தேட ஆரம்பிக்கும் போது 1. படிச்ச பொண்ணா வேணும் 2. அழகான பொண்ணா வேணும் 3. வேலையில இருக்க பொண்ணா வேணும் 4. பணக்கார பொண்ணா வேணும் அப்புறம் கொஞ்ச நாள்ல 1.படிச்சிருந்தா போதும். 2 அப்டியே அழகாவும் இருக்கனும். வேலைக்கு போனா போகலாம். மனுசனுக்கு காசா முக்கியம். பணக்காரரா இருக்கனும்னு அவசியம் இல்லைன்னு கொஞ்சம் இறங்குவாங்க. அப்புறம் கொஞ்ச நாள்ல அழகுங்குறது மனசுல தான் இருக்கு முகத்துல இல்லை. அதனால படிச்சிட்டு வேலைக்கு போற பொண்ணா இருந்தா பரவால்லைன்னு கொஞ்சம் இறங்குவாங்க இன்னும் கொஞ்ச நாள்ல  வேலை என்னப்பா வேலை.., குடும்பப்பொண்ணுங்க வேலைக்கு போனா நல்லாவா இருக்கும். பொண்ணு ஒரு பத்தாப்பு படிச்சிருந்தா  போதும்னு டன்னுலருந்து கிலோவுக்கு கொறைச்சிப்பாங்க. அதுக்கும் அப்புறம் வெறும் பொண்ணு மாதிரி இருந்தாப் போதும்பாங்குற நிலமை ஆயிடும்.
 

சாமி சத்தியமா நா ரவுடிய்யான்னு கெஞ்சி கதறுத நாம பாத்துருக்கோம். ஆனா சாமி சத்தியமா நா செத்துட்டேன்யான்னு ஒரு ஒருத்தன் கதறுத கேள்விப்பட்டுருக்கோமா... இங்கப் பாருங்க.. யோவ் என்ன ஒருத்தன் கொன்னுட்டான்யா.. நா செத்துட்டேன்... தயவு செஞ்சி ஒரு கேஸ் எழுதுன்னு ஒருத்தர் வந்து போலீஸ் ஸ்டேஷன்ல கதறுறாரு...  ஒரு தமாஷான பேய்க்கதை


பேய் இருக்கா இல்லையா... நம்பலாமா நம்பக்கூடாதாங்குற சந்தேகம் நம்ம பலபேருக்குள்ள இருக்கு. என்னதான் பேய் பிசாசெல்லாம் இல்லைன்னு அடிச்சி பேசுனாலும் நடு ராத்திரில உச்சா வரும்போது தான் அடிவயித்துல ஒரு பீதி நமக்கு கிளம்பும்.  என்னதான் சயிண்டிஃபிக்கா பல காரணங்கள எடுத்து வச்சாலும் பல சம்பவங்கள் இன்னும் விளக்கப்படாம தான் இருக்கு. அப்படி ஒரு உண்மையான பேய்க்கதை உங்களுக்காக.

அதுவும் நம்ம நடுராத்திர பஸ்லருந்து இறங்கி நம்ம வீட்டுக்கு போகும்போது இருக்க பயம் இருக்கே... பஸ்ஸ்டாப்புல இறங்கி நம்ம வீட்டுக்கு போற வழியில வீடு எதுவும் இல்லைன்னா டர்ர்ர்ரு தான். வடிவேலு மாதிரி வழில பாக்குறவிங்கள "அண்ணேன்... கா காலெங்கண்ணே"ன்னு கேட்டுட்டு ஓட வேண்டியதுதான். அப்படிப்பட்ட இன்னொரு உண்மைப் பேய்க்கதை

இருக்கா இல்லையாங்குற கன்பீசன வரவைக்கிற  ஒரு மாதிரியான பேய்க்கதை.


என்னப்பா ஒரே பேய்க்கதையா ஓடிக்கிட்டு இருக்கு. பேய்க்கதைங்கன்னா எனக்கு சின்ன வயசுலருந்தே அலர்ஜின்னு சொல்றவங்களுக்காக இன்னொரு ஜாலியான ஒரு சின்ன டச்சிங்கான கதை. வாழ்க்கைங்குறது வெறும் காசு, பணம், துட்டு ,மணி மணி மட்டும் இல்லை அதுக்கும் மேல உறவுகளுக்குத் தான் முக்கியத்துவம் தரணும்ங்குறது உணர்த்துற மாதிரி ஒரு நெகிழ வைக்கும் கதை

இல்லை.. நேக்கு அந்த மாதிரியெல்லாம் இல்லை... நீங்க தப்பா புரிஞ்சுண்டேல் நா இந்த மாதிரி சின்ன சின்ன கதையெல்லாம் படிக்க  மாட்டேன். பெரிய பெரிய நாவலாத்தான் படிப்பேன்னீங்கன்னா நம்ம தேவிகுமாரோட  The Celestial Hunt படிங்க. சூப்பரான சயின்ஸ் ஃபிக்சன் கதை.

ஓக்கே... நாளைக்கு வேற ஒரு செட்டப்போட உங்களை சந்திக்கிறேன்.  ஹலோ... பதிவுங்களச் சொன்னேன்...



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது