ஒரு வயது குழந்தைகளை வரவேற்போம்
➦➠ by:
சொக்கன்
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இன்றைக்கு நான் வலைப்பூ உலகில் பிறந்து ஒரு வயது கூட நிறைவடையாமல்
இருக்கும் குழந்தைகளையும் மேலும் ஒரு வயதே ஆன குழந்தைகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்
என்று இருக்கிறேன். இதில் சில குழந்தைகள் தங்களின் வயதுக்கு மீறிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள்
(100க்கும் அதிகமான படைப்புகளை படைத்திருக்கிறார்கள்) இருப்பினும் அவர்களை நாம் சரியாக
கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதனால் அவர்களை மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களின்
பார்வை அந்த குழந்தைகளின் மீது பட வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னையும் இப்படித்தான்
ஸ்கூல் பையன் அவர்கள் உங்களிடம் அறிமுகப்படுத்தியதால், என்னாலும் இந்த அளவு வளர
முடிந்தது. அதுபோல் அவர்களும் வளர வேண்டும்.
சரி இனி அந்த குழந்தைகளைப் பார்ப்போமா.
"உமையாள் காயத்ரி" என்ற வலைப்பூவை 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்
தொடங்கி இன்று வரை 123 பதிவுகளை திருமதி
உமையாள் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த பதிவில் செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரம் - இவர் செட்டிநாட்டு பலகாரமான “வெள்ளைப் பணியாரத்தின்”
செய்முறையை விளக்கியிருக்கிறார்.
"சுதா’ஸ் போயெம்ஸ் (sutha’s poems)" என்ற வலைப்பூவில் சுதா யுவராஜ்
என்பவர் 2013ஆம் ஆண்டு நவம்பர் முதல் கவிதைகளை எழுதி வருகறார். இந்த பதிவில் நெஞ்சம் பொறுக்குதில்லையே - என்று நம் தேசத்தை நினைத்து குமறுகிறார்.
சந்தோஷ் குமார் என்னும் இவர் "கவிப்படைப்புகள்" என்ற வலைப்பூவில்
2013ஆம் ஆண்டு ஜூலை முதல் 67 பதிவுகளை எழுதியுள்ளார். இந்த பதிவில் அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள் - அலைபேசியினால் இளம் சிறார்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை
கவிதையாய் கொட்டியிருக்கிறார்.
திரு.பிச்சையா என்பவர் “அய்யவின் களஞ்சியம்” என்ற வலைப்பூவில்
இந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி 46 பதிவுகளை எழுதியுள்ளார். இந்த பதிவில் என்ன இது அநியாயம் - நம் தொப்புள் கொடி உறவுகளான
இலங்கை தமிழ் உறவினர்களை எண்ணி மனம் வேதனைபடுகிறார்.
மீரா ப்லாசம் என்பவர் தன் "எண்ணத்துரிகையை" 2013ஆம் ஆண்டு அக்டோபர்
மாதத்தில் தொடங்கி 80 பதிவுகளை எழுதியிருக்கிறார். இந்த பதிவில் காகிதத்தில் ஒரு காடு ஒரு தூரிகையைக் கொண்டு ஒரு வானத்தை வரைந்து, அதில் எவ்வாறு அவர்
அரசியானார் என்பதை மிக அழகாக கவிதைத்துவமாய் சொல்லியிருக்கிறார்.
பாண்டி பிரியன் என்பவர் "கனவுப்பிரியன்" என்ற பெயரில் வலைப்பூவை
2013ஆண்டு ஜூலை
மாதத்தில் தொடங்கி 159 பதிவுகளை எழுதியிருக்கிறார். இந்த பதிவில் மனைவி அமைவதெல்லாம் - அவருக்கு எப்படி நல்ல மனைவி அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார்
நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
|
|
அறிமுகங்களுக்கு நன்றி சகோ!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவி சார்.
Deleteஅய்யா மேலும் நான் இருபது தலைப்புகளில் வலைப்பூக்கள் அமைத்து தொடர்ந்து
Deleteஎழுதிவருகிறேன்.என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி.
கொ.பெ.பி.அய்யா.
பாண்டி பிரியன் தளம் புதியது. போய் பார்த்துட்டு வரேன்
ReplyDeleteகண்டிப்பாக போய் பாருங்கள்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
வணக்கம் சகோதரர்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றிகள். வலைச்சர ஆசிரியர் பணிக்காக உங்கள் தேடல் நன்றாக புரிகிறது. தொடர்ந்து அசத்துங்க சகோதரர்.
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteபுதிய வலைப்பதிவாளர்களுக்கு வாழ்த்துக்கள்! அறிமுகம் செய்து பாராட்டியமைக்கு நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்
Deleteஉங்கள் எல்லோரையும் பார்த்து... தவழ ஆரம்பித்து இருக்கும் எனக்கு தொடர்ந்து நடை பயில ஆசை வந்திருக்கிறது. அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteதாங்கள் ஏற்கனவே நடக்க ஆரம்பித்து, இப்பொழுது குடு குடு என்று ஓட ஆரம்பித்து விட்டீர்கள் (தங்களின் பதிவுகளின் கணக்கைத்தான் சொன்னேன்).
Deleteதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள அந்த பதிவுலகில் ஒரு ‘வயதான’ குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்! அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
Delete’’ஒரு வயதே ஆன குழந்தைகள்!..’’
ReplyDeleteநல்லதொரு வர்ணனையுடன் - வலைத்தளங்களின் அறிமுகம்.. அருமை..
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
தங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteபுதிய தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி டிடி.
Deleteகுழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அம்மா.
Deleteவணக்கம்
ReplyDeleteவித்தியாசமான தலைப்பிட்டு அறிமுகம்செய்துள்ளீர்கள்...அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்.
Deleteஎன்ன சகோ புதுசு புதுசா கைவசம் நிறைய ஐடியா வைத்திருப்பீர்கள் போல அசத்துங்கள் அசத்துங்கள் சகோ. குழந்தைகள் அனைவரையும் வளர்ந்து பெரியவர்களாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ...! நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteபுதுசு புதுசா நிறைய ஐடியா எல்லாம் இல்லை. ஏததோ தலைப்புகளுக்காக தேடப்போய் இந்த ஐடியா சிக்கிக்கிச்சு. அவ்வளவுதான்.
Deleteதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.
அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஇதுவரை நான் அறியாத குழ்ந்தைகள் பலரை இன்று அறிமுகம் செய்ததுக்கு நன்றிகள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே
Deleteஎல்லாதளங்களும் மிக அருமை. தெரியாத பல தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு உங்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Deleteபுதியவர்களை நிச்சயம் ஊக்குவிக்கவேண்டும். புதிய பதிவர்கள் அனைவருக்கும் வாழத்துக்கள். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.பக்கிரிசாமி
Deleteவெகு சிறப்பான அறிமுகங்கள் சகோதரா அனைவருக்கும் என் இனிய
ReplyDeleteவாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
Deleteதேடித்தேடி புதிய பதிவர்களை அறிமுகம் செய்த உங்களுக்கு பாராட்டுகள். இன்றைய அறிமுகப் பதிவர்களின் பக்கங்களை இது வரை பார்த்ததில்லை. படிக்கிறேன்.
ReplyDeleteபதிவர்கள் அறிமுகம் சிறப்பு....
ReplyDeleteபதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..