க_, க__. க____ க____
➦➠ by:
இமா க்றிஸ்
_()_
வணக்கம் எப்படிச் சொல்லட்டும்!!
இங்கு Māori மரபுப் படியானால்... மூக்கும் மூக்கும் முட்டிக்கொள்வார்கள்.
தமிழர் முறைப்படி!!!
கைகூப்பினால் மட்டும் வணக்கம் தெரிவிப்பதாகிவிடுமா!
நானும்... ரசிக்கிறேன்.. ருசிக்கிறேன்.. மாதவன் இளங்கோவின் வலைப்பூவை. எளிமையான, எழுத்துப் பிழையில்லாத அழகுதமிழுக்கு ஒரு உதாரணம் இவர் வலைப்பூ. இடுகை
அமைப்பில் ஒரு நேர்த்தி இருக்கும். எழுத வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டும்
என்பதை விட, எதையும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்னும்
சிரத்தையும் ஈடுபாடும் உள்ளவர் என்பதைப் படித்துப் பார்த்தால்
புரிந்துகொள்வீர்கள். என் பார்வையில் பட்ட இவரது நிறங்கள் - ஒரு பார்வை சிறுகதை வெகு அருமை. ஏராளமான கட்டுரைகளும் இவரது தளத்தில் சிதறிக் கிடக்கின்றன.
'தேவை எனில் ...இனிய உளவாக இன்னாத கூறலும் ...இனிது' என்று நினைக்கும் கன்யாகுமரியைச் சேர்ந்த பிரபுதாஸ், வலைப்பூ இடுகைகள் கொஞ்சம் முரண். ஒரு படம்... பொருத்தமாக ஒரு குறிப்பு. நீளமாக இராது இடுகைகள். இவர் வலைப்பூவில் உலவினால் இன்னதுதான் என்றில்லாமல் எதிர்பாராதது கண்முன்னே வந்து நிற்கும். நிச்சயம் ஒவ்வொருவருக்கும் சுவைக்க எதுவாவதொன்று இருக்கும். பிரபுதாஸ் அணில் வளர்த்த அனுபவம் சோகம். ;( ஆனால் அவர் பேகனாக மாற முனைந்த அனுபவம்... புன்னகைக்க வைக்கிறது. :-)
//நிஜமாவே பேகன் மயிலுக்கு போர்வை போர்த்தினாரா ?// ஆமாம், போர்த்தினார். ஆதாரத்தோடு நிரூபிக்கட்டுமா! :-)
அருகே போர்த்தக் கேட்டு ஆடிக்கொண்டு அமர்ந்திருந்த ஆட்டைக் கூடக் கவனிக்காமல் மயிலுக்கு மட்டும் போர்த்தினார். :-)
பிரபுதாஸின், 'வாழ்க்கை அதனினும் சிறிது' என்னும் கவிதை, இந்த 'டைரி'... இரண்டையும் மறக்காமல் படித்துவிடுங்கள்.
செல்வாவின் கவிதைகள் வெகு அற்புதமாக இருக்கும். பாசமான பாட்டிக்கு என்றொரு கவிதை... அது கவிதையல்ல, பாட்டிக்குப் பேத்தியின் கடிதம். நிச்சயம் உங்கள் மனதைத் தொடும்.
அப்படியே கிளம்பிப் போய்... தமிழ்வாசலைத்.
திறந்து உள்ளே நுழைந்து பாருங்கள். தன்னைக் கவிஞர் வைரமுத்து அவர்களின்
ஏகலைவன் என்கிறார் நாகபட்டினத்தில் வசிக்கும் இரா. ச. இமலாதித்தன். அவரது
கிறுக்கல்கள்... கிறுக்கல்களா அவை! இங்கே.
இலக்கியவாதி
என்பவர்... நாங்கள்தான் என்கிறார். :-) (இந்த... 'எங்களைப்' பற்றி என் தனிப்பட்ட
கருத்து ஒன்று இருக்கிறது. இங்கு வேண்டாம். எப்போதாவது இமாவில் உலகில் பகிர்கிறேன்.) சமயத்தில்... எனக்கொன்றும் தெரியாது என்றும் சொல்லுவார். 'இதை விட இது நன்று,' என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாதவை இவரது
கிறுக்கல்கள்.
வலைப்பூவின் பெயர்... 'விசு Awesome' அவர்களது துணிக்கைகளா! அல்லது விசுவின் awesome மின் துணிக்கைகளா!! எதுவாக இருந்தால் என்ன! வலைச்சரத்திற்காக இவர் சரம் வாங்கிய கதை அதாவது... காதில் சரம் வாங்கிய கதை சுவாரசியம். இவர் கலாய்க்க ஆரம்பித்து எட்டே எட்டு மாதங்கள்தான் ஆகின்றன. என் சந்தேகம்... இவர் தனிமை விரும்பியோ!!
வலைப்பூவின் பெயர்... 'விசு Awesome' அவர்களது துணிக்கைகளா! அல்லது விசுவின் awesome மின் துணிக்கைகளா!! எதுவாக இருந்தால் என்ன! வலைச்சரத்திற்காக இவர் சரம் வாங்கிய கதை அதாவது... காதில் சரம் வாங்கிய கதை சுவாரசியம். இவர் கலாய்க்க ஆரம்பித்து எட்டே எட்டு மாதங்கள்தான் ஆகின்றன. என் சந்தேகம்... இவர் தனிமை விரும்பியோ!!
இடுகைக்கான தலைப்பு... கதை, கவிதை, கட்டுரைக் கதம்பம். சரியாக ஊகித்தீர்களா! :-)
"ஹ்ம்!
போயும் போயும்... கடைசி பெஞ்ச் மாணவி மாதிரி இருக்கிற இமாவைப் போய்
ஆசிரியர் நாற்காலியில் அமர்த்தினேனே!" - இது சீனா ஐயா mind voice. :-)
சிரியுங்கள், சிரியுங்கள், சிரித்துக்கொண்டே இருங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
|
|
அருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteபாராட்டுக்கள்..வாழ்த்துகள்.
இராஜேஸ்வரி அக்காவுக்கு என் அன்பு நன்றிகள்.
Deleteவலைச்சரத்தில் மணக்கும் - கதம்பப் பூச்சரம்..
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அருமை..
மகிழ்ச்சி சகோதரரே. மிக்க நன்றி.
Deleteஇன்றைய தள அறிமுகங்கள் அருமை இமா. பாராட்டுக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
;) நன்றி ப்ரியா. உங்களுக்கு ஒரு கடன் பாக்கி இருக்கிறது.
Deleteகூடிய விரைவில் தீர்த்து வைக்கிறேன்.
:))
Deleteகதம்பச்சோறு மிக அருமை.
ReplyDeleteநிறைய தெரியாத தளங்கள். வாழ்த்துக்கள் சகோதரி
//நிறைய தெரியாத தளங்கள்// அப்பாடா! இப்போதான் நிம்மதியாக இருக்கிறது. :-))
Deleteநன்றி சொக்கன்.
உங்களுக்கு பரிசு ஏதாவது கொடுக்கவேண்டுமே!
ம்.. இதோ பிடியுங்கள் ஒரு ரோஜா. @}->--
Present teacher! :) Shall try to check the sites. My best wishes to all of them.
ReplyDeleteடீச்சரா! கிண்டல்!! ம்.. ;))
Deleteஎன்ன கிண்ட ப் போறாவாம் றீச்சர்??? மில்க் ரொபியோ? :).. நோ தங்கியூ எனக்கு வாணாம்ம்ம்.. மீ விரதமாக்கும்:)
Deleteகர்ர்.. ;)
Deleteவணக்கம் வைப்பதற்க்கான விளக்கங்கள் அருமை.
ReplyDeleteஅனேக தளங்களை முதன்முறையாக பார்வையிடும் வாய்பை தந்தமைக்கு நன்றி.
வாழ்த்துக்கள்...
//அனேக தளங்களை முதன்முறையாக பார்வையிடும்...//
Deleteசந்தோஷம் விக்னேஷ்.
வாழ்த்துக்கு நன்றி. :-)
//இங்கு Māori மரபுப் படியானால்... மூக்கும் மூக்கும் முட்டிக்கொள்வார்கள்.//
ReplyDeleteaaaaaa!! aww Dap greeting is okay :)
இது maori வணக்கம் இப்பதான் கேள்விபடறேன் ... நான் நம்மூர் வழக்கப்படி சொல்லிக்கறேன் இங்கே நன்றி _ /\_ :)
இதைவிட இன்னும் முறைகள் இருக்கஞ்சு.... ஒரு நாட்டுக்கு ஒரு வழக்கம்...
Delete//இப்பதான் கேள்விபடறேன்// ஆஹா!
Deleteநான் இதைப் பற்றி இங்கு வரும் முன்பே அறிந்திருந்தேன். எண்பதுகளில், இலங்கையில் ஆங்கிலப் பாடநூலொன்றில் ஒரு வாசிப்பு இருந்தது.
மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன் .. சூப்பர் படம் :)
ReplyDeleteசந்திரகெளரி அக்கா தவிர அனைவரும் எனக்கு புதிய அறிமுகங்கள் சென்று பார்க்கிறேன் ..
இப்பவே போயிடோணும் பார்க்க:) இல்லாட்டில் விடமாட்டன் இண்டைக்கு:)
Delete//புதிய அறிமுகங்கள்// அவங்கள் ஒரு போஸ்ட்டாவது க்விலிங் போட்டிருந்தால் அஞ்சு எப்பவோ பார்த்திருப்பீங்கள். ;))
Delete//மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன்// கூட்டிப் போன பீட்டர், பேகனைக் காட்டினார். ஆடு அடம் பிடித்து உட்கார்ந்திருந்தது. பேகனைத் தனியே படம் எடுக்க முடியவில்லை.
இப்போதுதான் வெளியிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. :-)
கதம்பம் தொகுப்பு அருமை. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நேசன். :-)
Deleteசிரிப்புத்தான் வாழ்க்கையும் அழகான டானிக்:))))))
ReplyDelete;)))
Deleteபுதிய தளங்களை பரிச்சயப் படுத்திய இமாவிற்கு நன்றி.அனைத்தும் எனக்கு புதிது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//அனைத்தும் எனக்கு புதிது.// அட! இது இமாவுக்குப் பெரிய சாதனை. :-) சந்தோஷமாக இருக்கிறது உமையாள். மிக்க நன்றி.
Delete///"ஹ்ம்! போயும் போயும்... கடைசி பெஞ்ச் மாணவி மாதிரி இருக்கிற இமாவைப் போய் ஆசிரியர் நாற்காலியில் அமர்த்தினேனே!" - இது சீனா ஐயா mind voice. :-)////
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) அவர் இதை எப்பூடிப் பார்ப்பார்ர்..:) இதுக்குத்தான் அதிரா வரோணும் என்கிறது:) --- இது அதிராட மைண்ட் வொயிஸ்ஸ்ஸ்ஸ் (இன்னும் ஆருடையதெல்லாம் இங்கின பேசப் போகுதோ?:).
சுஷ்ஷ்...!!!! :-)))
Delete//சிரியுங்கள், சிரியுங்கள், சிரித்துக்கொண்டே இருங்கள்.
ReplyDeleteவாழ்க்கை வாழ்வதற்கே!//
ஹா..ஹா..ஹா.... ஓடிவந்து பிடிச்சு ஹொஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிடுவினம்:).. இதுக்கு மேலயும் மீ இங்கிருக்க மாட்டேன் சாமீஈஈஈஈஈஈஈஈஈஈ... ஓஓஒ வலைச்சரம் ஆடுதே.. அவ்வ்வ்வ்வ் றீச்சர் தடியோட வாறாஆஆஆஆஆ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :)
;))))))))
Delete//றீச்சர் தடியோட வாறா// ம். வாறன், வாறன். இன்னொரு நாள் மட்டும் பொறுங்கோ. ;)
///இடுகைக்கான தலைப்பு... கதை, கவிதை, கட்டுரைக் கதம்பம். சரியாக ஊகித்தீர்களா! :-)/////
ReplyDeletekarrrrrrrrrrrrrrrrrrrrrr:) இதையெல்லாம் ஊகிச்சு எங்கட பொன்னான ரைமையும் :) புதுசா இருக்கும் கிட்னிப் பவரையும்:) வேஸ்ட் பண்ண மாட்டோம்ம்ம்ம்ம் :) எங்கிட்டயேவா??:)
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மனம் கொண்ட தவப்பெண் இமாவே!
தமிழ்மணம் தந்து தரும்பா! - அமுதமணம்
நல்கும் அறிமுகம் நல்கினாய்! ! நற்சுவை
பல்கும் பதிவுகளைப் பாா்த்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
மிக்க நன்றி ஐயா.
Delete
ReplyDeleteதமிழ்மணம் 1
நன்றி. :-)
Deleteஆஆஆஆஆஆ அத்தை என்ன க க க க்கா ன்னு காக்கா வ கூப்பிட்டு இருக்காங்க
ReplyDeleteஅறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் ,....நானும் சிரிக்கிறேன் உங்களோடு
ReplyDeleteநன்றி கலை. ;)
Deleteபுதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. தலைப்பு வித்யாசமாக இருந்தது.
ReplyDeleteஅறிமுகப்படுத்த முடிந்தமை... மகிழ்ச்சி.
Deleteதலைப்பு... அந்தச் சமயம் தோன்றிற்று. வைத்தேன்.
கருத்துக்கு நன்றி ஐயா.
அழகாய் , இனிமையாய் சிறப்புடன் பகிர்ந்து கொண்டீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழ்மணம் 2.
:-) சந்தோஷம், கருத்துக்கு என் அன்பு நன்றிகள் நிஜாமுதீன்.
Deleteஅன்பின் இமா - அறிமுகங்கள் அருமை - த.ம : 3 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன் வலைதளத்தை அறிமுகப்படுத்தி எழுதியுள்ள இமா க்றிஸ் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்! I'm blessed!!
ReplyDeleteஇந்த இன்ப அதிர்ச்சியை ஏந்தி வந்து எனக்குத் தெரிவித்து, வாழ்த்திய இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் வலைச்சரத்திற்கும் என் நன்றிச்செண்டு!
வாழிய நலம்,
மாதவன் இளங்கோ.
;-) உங்களை மகிழ்ச்சிப் படுத்திப் பார்க்க முடிந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரரே.
Delete//இங்கு Māori மரபுப் படியானால்... ..//
ReplyDeleteஇமா, நியூஸியிலா இருக்கீங்க??????
ஆமாம் அக்கா. ஆனால் உங்கள் ஊரில் இல்லை. Auckland இல் இருகிறேன்.
Deleteரசனையான தொகுப்புகள். பல தளங்கள் அறியாதவை. பகிர்வுக்கு நன்றி இமா.
ReplyDelete//பல தளங்கள் அறியாதவை.// உண்மையாகவா! அப்போ நான்தான் அதிக நேரம் வலையில் செலவளிக்கிறேனா!! :-)
Deleteநன்றி கீதா.
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி இமாஅவர்களே, ஏதோ ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை போல் என் எழுத்துக்கள். தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
ReplyDelete:-) தொடர்ந்து எழுதுங்கள் சகோதரரே.
Deleteஅனைத்தும் ரசிக்க வைக்கும் தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
:-) கருத்துக்கு நன்றி தனபாலன்.
Deleteமிக அருமையான தொகுப்பு இமா அனைவருக்கும் வாழ்த்துக்கள், மியாவ் மியாவ் வ இங்க பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம்
ReplyDelete( + _ + )
Deleteஉங்களுக்கு என் அன்பு நன்றிகள் ஜலீ.
Deleteபல தளங்கள் அறியாதவை. அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteஎன்னையும் சில நண்பர்கள், இமா என்று தான் சுருக்கி அழைப்பார்கள். என்னுடைய வலைப்பக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி! :)
ReplyDelete