07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 10, 2014

செவ்வாய் இன்று வாய்க்கு ருசியாக...

சென்ற வாரம் விஞ்ஞான ஆசிரியர் ஏழாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் சமயம் ஒரு வேலையாக உள்ளே நுழைந்தேன். மணம், சுவை இரண்டுக்குமான தொடர்பு பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். 
பார்வைக்கும் சுவைக்கும் தொடர்பு எதுவுமே இல்லையா! அழகாகத் தெரிந்தால்தானே சாப்பிட ஆசை வரும்!

சிலர் சுவைபடச் சமைத்து கூடவே அழகாகப் படமும் பிடித்திருப்பார்கள். சித்ராவின் வலைப்பூ அப்படியொன்று. பெயர் Chitra's Easy recipes என்று ஆங்கிலத்திலிருந்தாலும் குறிப்புகளனைத்தும் தமிழிலில்தான் இருக்கின்றன. படங்களெல்லாம் பளிச். முருங்கை தொக்கு குறிப்பில் அவர் சேர்த்திருக்கும் படங்கள் சமைப்பதை நேரில் பார்ப்பது போலவே இருக்கின்றன.
இமாவுக்கு ஒரு குட்டி சந்தேகம்!!
பச்சை பீட்ரூட் சாப்பிடும் போது... வாய், எப்படி செவ்வாயாகிறது!! :-)
சற்று வித்தியாசமாகத் தெரியும் சித்ராவின் பீட்ரூட் கட்லட் சுவையாகவும் இருக்கும். ஒரு முறை சமைத்துப் பார்த்திருக்கிறேன். சின்னவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
'அப்பொழுதெல்லாம் பெரியளவில் இனிப்புகள் வாங்கித் தரமாட்டார்கள். ஏதாவது ருசிக்குச் சாப்பிட வேண்டும் அதுவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்றால் மில்க் டொஃபிதான்,' என்று சுவை வலைப்பூ உரிமையாளர் இந்திராணி சொல்லியிருப்பது உண்மைதான். இப்போது போல எங்கள் சின்னக் காலத்தில் விதம் விதமாக கொறிப்பதற்கு இருக்கவில்லை.
பல இடங்களில்  மில்க் ரொபி குறிப்பு பார்த்திருக்கிறேன். குறிப்பில் செய்யப்படிருக்கும் மாற்றங்கள், 'இனிப்புக்குப் பெயரை மாற்றலாம்,' என்று நினைக்க வைத்திருக்கிறது. நானறிந்தவரை... 'சுவை' வலைப்பூவிலுள்ளதுதான் சரியான குறிப்பு. கஜு சேர்ப்பது மட்டும் அவரவர் விருப்பம். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு இது. அடுப்பில் பதம் வரும் சமயம் கமகமவென்று வாசனை வீசி பக்கத்து வீட்டுக்கும் தகவல் சொல்லும்.
வெள்ளை அப்பம் குறிப்பை அழகாக இலங்கைத் தமிழில் கொடுத்திருக்கிறார் இந்திராணி. 'முட்டையப்பம்... மஞ்சள், வெள்ளை, தவிட்டு நிறமென பார்க்கவும் அழகாகவும் இருக்கும்.' என்னும் அவர் ரசனை பிடித்திருந்தது. இந்திராணி கொடுத்திருக்கும் 'மாலுபாண்'  குறிப்பும் வெகு அருமையாக இருக்கிறது. மாற்றங்கள் எதுவும் செய்யாமல் சரியான அடிப்படைக் குறிப்புகளை மட்டும் கொடுத்துவந்த இவர் என்ன காரணத்தாலோ தெரியவில்லை, 2009 இற்குப் பின்னே குறிப்புகள் எதுவும் கொடுக்கவில்லை.

பால் பர்ஃபியில் பால் சேர்ந்திருக்கும்; முட்டைக் குழம்பில் முட்டை இருக்கும்; குக்கர் அல்வாவில் குக்கர் இருக்குமா! :-)
அல்வாவை 'குக்' போல அலங்கரித்து வைத்திருக்கிறார் பாருங்கள் 'ராதாஸ் கிச்சன்' ராதாராணி. கருவேப்பிலை ஜுஸ் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? இங்கு சுத்தமான கறிவேப்பிலை கிடைக்கவில்லை இதுவரை. யாராவது முயற்சி செய்து பார்த்துவிட்டு சுவை எப்படி இருந்தது என்று சொல்லுவீர்களா?


சித்ரா சுந்தர் சௌசௌ கூட்டுக்காக அலங்காரமாக பயறு வறுத்து வைத்திருக்கிறார். இது போல சின்னச் சின்ன ரசனைகள் எனக்கும் இருக்கிறது. இங்கே விதம் விதமான பொரியல் சாத வகைகள் பற்றி விபரிக்கிறார். ஆரவாரமில்லாத, எளிமையான அந்தப் படங்களைப் பார்க்க சாப்பிடத் தோன்றுகிறதா இல்லையா!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5-SE0bNm_WjI9P8b1b_F-bmwEDCjHa3M1RhS8WFGZZbbwihyRMSs22fw6x6bXd_X-50w86caQIeNo_hmXXns0uuOuJG5DLw-L3744uyulK6sDlE4_w68rJhiHQBftVWGTUoW8OnWeIS3l/s640/101_8326.JPG
தினமும் 5+ சாப்பிடச் சொல்வார்கள். 5+ !!??  ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று கை அளவு கீரை காய்கறிகளும் இரண்டு கையளவு பழங்களும் சாப்பிட வேண்டுமாம். வாங்க... சமைக்கலாம்! என்கிறார் ஜொலி ராமசந்திரன். ஆரோக்கியமான, ஏழு வித சாலடுகள் கொடுத்திருக்கிறார். வாரம் இரண்டு சாலடாவது சாப்பிடுங்கள்.

சுவைக்க இன்னும் நிறைய இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. எவ்வளவுதான் அருமையானதாக இருந்தாலும்... அளவோடு உண்போம்; ஆரோக்கியமாக வாழ்வோம்.

மீண்டும் நாளை காண்போம்.
_()_

39 comments:

  1. வாய்க்கு ருசியான பதிவுகளை அறிமுகப்படுத்தி விருந்தளித்தமைக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வாழ்த்துக்கு என் நன்றி அக்கா. :-)

      Delete
  2. சுவையான உணவு வகைகளின் தளங்கள்..
    நகைச்சுவையுடன் அறிமுகம். நன்று!..

    ReplyDelete
  3. சுவையான அறிமுகங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நாம் ரசித்து ருசிக்க, நல்ல பல தள அறிமுகங்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா. :-)

      Delete
    2. இது.. இது.. இதுதான் சபையடக்கம்.. இப்படித்தான் இருக்கோணும் அம்முலு :)

      Delete
  5. வாய்க்கு ருசியான அறிமுகங்கள். சென்று பார்க்கிறேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சென்ற வாரம் உங்கள் இடுகைகளை மேலோட்டமாகத்தான் படிக்கக் கிடைத்தது. இந்த வாரம் போகட்டும். நிச்சயம் உங்கள் அனைத்து இடுகைகளையும் படித்து அறிமுக வலைப்பூக்களைப் பார்வையிடுவேன்,

      வாழ்த்துக்கு நன்றி சொக்கன்.

      Delete
  6. டீச்சர்.. வலைசர அறிமுகத்திற்கு மிக்க நன்றி . நகைசுவையுடன் கூடிய அறிமுகம்.. இமா மிகவும் ரசித்தேன்.. :)

    ReplyDelete
  7. அன்பின் இமா

    சாப்பாடு - சுவையாக இருக்கிறது - ஒவ்வொருவர் வீட்டிற்கும் அழையா விருந்தாளியாகச் சென்று கண்டு களித்து அனைத்தையும் உண்டு ம்கிழ வேண்டும். ஏற்கனவே உண்ட உணவுகள் இன்னும் நாக்கில் எச்சில் ஊறுகிறது........ அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு அறிமுகமில்லாத வலைப்பூக்கள் எதையாவது அறிமுகம் செய்திருக்கிறேனா என்பது தெரியவில்லை. இடுகைகள் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.
      பாராட்டுக்கு நன்றி ஐயா.

      Delete
  8. அருமையான தொகுப்பு பணிதொடரட்டும்.

    ReplyDelete
  9. ஆஹா !! சமையல் குறிப்பு ப்ளாக்ஸ் அனைத்தும் அருமை ...மில்க் toffee நான் தேடிகொண்டிருந்த ஒன்று ..மிக்க நன்றி இமா

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் பிடித்த ஒரு குறிப்பாவது தேடிக் கொடுக்க முடிந்தது பற்றி சந்தோஷம் ஏஞ்சல். மில்க்டொஃபி எப்படி வந்தது என்று மறக்காமல் சொல்லுங்கள்.

      Delete
    2. என்ர சிவனேஏஏஏஏஏஏஏஎ :) எதுக்கு இமா மில்க் ரொபி குறிப்பு போட்டீங்க.. இனி நாங்க இங்கின இருந்த பாடில்லையாக்கும்:).. பிளேட்டில செய்து.. குறிப்பு வரப்போகுது ஆண்டவா எல்லோரையும் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்:)

      Delete
  10. ரசிக்க...., ருசிக்க..., போய் பதிவுகளைப் படிச்சுட்டு வரேன்

    ReplyDelete
    Replies
    1. :-) ம்... படிச்சுட்டு வாங்க ராஜி.

      Delete
  11. ருசியான அறிமுகங்கள்.

    ReplyDelete
  12. ஆஹா ஆரம்பமே அசத்தல் - சமையல் பதிவுகள் - சில குறிப்புகள் எனக்குப் பயன்படும் - புக் மார்க் செய்து வைத்துக்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. //புக் மார்க் செய்து வைத்துக்கொண்டேன். // ஆஹா!
      சமைத்துச் சாப்பிட்டுவிட்டு மறங்காமல் அங்கங்கே எப்படியிருந்தது என்று சொல்லிவிடுங்கள் வெங்கட். :-)
      நன்றி.

      Delete
  13. சுவையான பதிவு!

    தமிழ்மணம் 5.

    ReplyDelete
  14. தனி தனி உணவுடன் அறிமுகம் எல்லாம் அருமை
    டீச்சர்க்கு ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பக்கம் வருவீங்க என்று எதிர்பார்க்கவில்லை.
      நன்றி மகன்.

      Delete
    2. ஆஹா புல்ல்லாஆஆஆஆஆஆஆஆஆரிக்குதேஏஏஏஏஏஏஏஏஏ :)

      Delete
  15. ஆவ்வ்வ்வ்வ் “றீச்சர்” - இப்போ “ஒரு வார றீச்சர்” ஆகிட்டாவோஒ?? வாழ்த்துக்கள். நானும் மில்க் ரொபி செய்யப்போறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அதீஸ். எனக்கும் ஒரு பாசல் ப்ளீஸ். :-)

      Delete
  16. அனைத்தும் பயனுள்ள தளங்கள். பகிர்வுக்கு நன்றி இமா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது