இது... இமாவின் உலகம்
➦➠ by:
இமா க்றிஸ்
வலைச்சர வாசகர்களுக்கு இமாவின் அன்பான வணக்கங்கள். _()_
என் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, பாடசாலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம், 'இது இமாவின் உலகம்'.... இன்று இங்கு வந்திருகிறேன். சந்தர்ப்பம் கொடுத்த வலைச்சரத்தினர்க்கு என் நன்றிகள்.
சுருண்டது போல் வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும், நிலை இல்லாதவை. தினம் ஒரு ரசனை.
முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆவல்தான் இமாவின் உலகிற்கு அடிக்கல். எழுத ஆரம்பித்துவிட்டு... வலைப்பூ அமைப்பை, குழந்தையொன்று 'லெகோ செட்' வைத்து விளையாடுவது போல பிரித்துப் பிரித்து அடுக்கினேன். ஒரு நாள் பாதி வேலையோடு ஏதோவொரு தடங்கல். அப்படியே விட்டுவிட்டேன். பிறகு இதற்கென நேரம் ஒதுக்க இயலவேயில்லை. நாயும் கல்லும் போல நான் தட்டிச் சேமித்துள்ள என் இடுகைகளும் எங்கோ சேமிப்பிலுள்ள நானெடுத்த புகைபடங்களும். ஒன்றைக் கண்டால் மற்றது கண்ணில் படாது. :-) அப்படியே இடுகைகளும் குறைந்து போயிற்று. எப்பொதாவது மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
இமாவின் உலகில் எனக்கு அதிகம் பிடித்தவை... என் ஆரம்பகால இடுகைகள். ரசித்துப் பதிவிட்டவை அவை. பெரிதாக ஏதாவது விடயம் இருக்கும் என்று நினைத்து வந்தால் ஏமாறுவீர்கள்.
உங்களுக்கும் தெரிந்திருக்கும்... உயிர்ச்சத்து சீ உடம்புக்கு நல்லது என்று. அது பழங்களில் கிடைக்கும். பழங்களை வாயால் மட்டும் சாப்பிடாமல் கண்ணாலும் சாப்பிடவேண்டும். விருந்தினர் வந்தால்தால் மேசை அலங்காரமா! உங்களுக்காகவும் ஒருமுறை அலங்கரிக்கலாம். :-) அலங்கரித்துத்தான் பாருங்களேன்.
ஒருவேளை... திராட்சைப் பழம் கிடைக்காவிட்டால்!!
கிடைக்காத பழம் புளிக்காதா!
இந்தப் படமும் புளித்தது எனக்கு, பப்பியும் திராட்சைக் குலையும் வரும் முன்னால். எழுத்து... சிதம்பரசக்கரத்தைப் பார்த்தது போல இருக்கிறதா!! சுஜாதா அவர்களின் 'என் இனிய இயந்திரா' படித்தவர்களுக்கு இந்த மொழி புரியும்.
இமா இப்படித்தான். யாருக்கும் புரியாத விதமாக எழுதி குழப்பி வைப்பேன். :-)
வேறு என்ன சொல்லலாம்!!!
ம்!!! நான் தினம் தினம் ரசிக்கும் வலி ஒன்று இருக்கிறது வீட்டில். இங்கே... என் வலி, அது தனி... வலி.
போதும் உலகம் சுற்றியது. படிப்பவர்கள் மேல் என் ரசனையை!! திணிக்க விரும்பவில்லை. நீங்களே நேரம் கிடைக்கும் பொழுது பிடித்ததைப் படித்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இங்குள்ளதை மட்டும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
இப்போது... என் பேனாவுக்கு மை தீர்ந்து விட்டது. :-) கிளம்புகிறேன் என் தாயாரைப் பார்க்க. நீங்களும் விரும்பினால் வரலாம்.
மீண்டும் நாளைய இடுகையில் சந்திப்போம்.
இன்றைய நாள் அனைவர்க்கும் இனியதாக அமையட்டும்.
_()_

|
|
_()_
ReplyDeleteAll the best! 😊
_()_ நன்றி மகி. :-))
Deleteவருக.. வருக.. இனிய பதிவுகளைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
ReplyDeleteஅன்பின் நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி சகோதரரே.
Deleteதங்களின் வலைத் தளத்தில் சில பக்கங்களைப் படித்தேன்.. அடடா..
ReplyDeleteமிகவும் கவர்ந்தது - பப்பியும் திராட்சைக் குலையும்!..
மகிழ்ச்சி..
நன்றி துரை செல்வராஜு. :-) அது ரசித்துச் செய்த வேலை. இன்னொரு வீட்டில் 100% இதே போல மேசை காணக் கிடைக்காது இல்லையா!
Deleteகண்ணாடிதான் மெதுவாகக் கீறல் விழ ஆரம்பிக்கிறது. :(
வருக இமா.உங்களை பற்றிய அறிமுகம் சிறப்பு. தொடர்ந்துஅசத்துங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்களுக்குக் தெரியாத எதைச் சொல்லப் போகிறேன் ப்ரியா. :-) வருகைக்கும் ஊக்கம் கொடுப்பதற்கும் என் அன்பு நன்றிகள்.
Deleteஅறிமுகம் அருமை. வாழ்த்துக்கள். . .
ReplyDeleteமிக்க நன்றி விக்னேஷ்.
Deleteசிறந்த அறிமுகம்
ReplyDeletevisit http://ypvn.0hna.com/
நன்றி சகோதரரே.
Deleteதங்களின் பதிவுகளை சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteஅறிமுகம் அருமை
நேரம் கிடைக்கும் போது மறக்காமல் பாருங்கள் சொக்கன். நன்றி.
Deleteசுய அறிமுகம் அருமை இமா !! வாழ்த்துக்கள் ..தொடருங்கள்
ReplyDelete:-) நன்றி ஏஞ்சல்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
தாங்கள் இந்தவாரம் வலைச்சர ஆசிரியராக கடமை புரிவதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
:-) நன்றி மகன்.
Deleteசிறப்பான வலைச்சர பணிக்கு
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்.
வாழ்த்துக்கு நன்றி அக்கா. என்னால் ஆன வரை முயற்சிப்பேன். :-)
Deleteவாவ்..இமா டீச்சர் இப்ப வலைச்சர ஆசிரியரா..ஜாமாய்ங்க இமா.சிறப்பாக வலைசர ஆசிரியர் பணியை செய்ய இனிய வாழ்த்துக்கள்.
ReplyDelete:-) வாழ்த்துக்கு என் அன்பு நன்றி ஸாதிகா.
Deleteஅன்பின் இமா - சுய அறிமுகம் அருமை - தாங்கள் சுட்டிக் காட்டி இருக்கும் பதிவுகளைச் சென்று பார்த்து படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இடுகிறேன். 09.06.2014 முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று சுய அறிமுகம் செய்து தங்களீன் சிறப்பான பதிவுகளை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் - வாக்கும் முதலாவதாக அளீத்துள்ளேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅனைத்து உதவிகளுக்கும் நன்றி ஐயா.
Deleteஉடனுக்குடன் பதிலிடுவதுதான் இயலாமலிருக்கிறது. இருந்தாலும் பணியை ரசிக்கிறேன்.
ReplyDeleteவணக்கம்!!
தமிழ்மணம் 2
சிரித்திடச் செய்யும்! சிறப்புகளை நெய்யும்!
விரித்துள பூவழகை விஞ்சும்! - பரிவுடன்
வட்டாரப் பேச்சொலிரும்! வல்ல இமாப்பதிவைத்
தட்டாமல் பார்ப்பேன் தழைத்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
ஆஹா! ஜில்..லென்றிருக்கிறது. :-)
Deleteசந்தோஷம் ஐயா.
அய்ய்ய்யய்ய்ய்யி அத்தை ..................
ReplyDeleteஇமா ரீச்சர் இப்போ உண்மையாவே வலை ரீச்சர் ஆகி இருக்காங்க ./......................ரீச்சர் உங்கள் அறிமுகம் ஜூப்பர் ...தொடருங்கள் .....நாளை இருந்து கரீகட்ட்டா அட்டனன்ஸ் போடுவேன் ../..........
//நாளை இருந்து கரீகட்ட்டா அட்டனன்ஸ்// போடணும். ம். :-)
Deleteநன்றி குட்டிப்பெண்ணே!
இமா அவர்களே வருக வருக...
ReplyDeleteதொடர்ந்து அசத்துங்க...
நல்வாழ்த்துக்கள்!
தமிழ்மணம் 3.
_()_ நிஜாமுதீன்.
Deleteவாழ்த்துக்கு நன்றி. :-)
வருக, வருக. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் ஐயா! நன்றி.
Deleteசுய அறிமுகம் நன்று...
ReplyDeleteமேலும் அசத்த வாழ்த்துக்கள்...
//மேலும் அசத்த// இமாவின் உலகத்தை மெதுவாகவாவது சுழலவைக்கத்தான் வேண்டும் தனபாலன். பார்க்கலாம்.
Deleteவாழ்த்துக்கு என் அன்பு நன்றிகள்.
டீச்சருக்கு வாழ்த்துக்கள் வலைச்சரபணி இனிதே தொடர வாழ்த்துக்கள்
ReplyDelete:-) அக்காளைக் காணோமே நேசன்!!
Deleteமிக்க நன்றி.
Super. Vanakkam, teacher.
ReplyDelete_()_ வான்ஸ். :-)
Deleteவணக்கம்சொந்தமே பாராட்டுக்கள் உங்களுக்காய்
ReplyDelete_()_ அதிசயா. மிக்க நன்றி. :-)
Deleteஐ இமா க்கா வா , சூப்பர் கலக்குங்கோ ஓ , பாசசாலை ஆசிரியர் இப்ப வலைசர ஆசிரியர்....
ReplyDeleteவாழ்த்துக்கள் இமா அக்கா
வாழ்த்துக்கு நன்றி ஜலீ. :-)
Deleteசுய அறிமுகம் நன்று..... தொடரட்டும் அறிமுகங்கள்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி வெங்கட்.
Deleteஅருமை. தொடருங்கள். என் தளம்:http://newsigaram.blogspot.com
ReplyDeleteநன்றி பாரதி. தொடருகிறேன்... உங்கள் வலைப்பூவை.
Deleteநல்வாழ்த்துக்கள் இமா.தொடர்ந்து அசத்துங்கள்.
ReplyDeleteஆசியாவுக்கு என் அன்பு நன்றிகள்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் இமாவா ! இந்த அதிசயமெல்லாம் எப்போ நடந்துச்சு ! உங்கள் பாணியிலேயான சுய அறிமுகம் நன்று.
ReplyDeleteபிஸியோ பிஸி. இன்னும் இரண்டுமூன்று நாட்களில் நீங்கள் எழுதியுள்ள பதிவுகளையெல்லாம் ஒன்று விடாமல் படித்துவிடுகிறேன்.
அசல் ஆசிரியரின் கூடுதலான தற்காலிக ஆசிரியப் பணியும் சிறக்க (இந்நேரம் சிறப்படைந்திருக்கும்) வாழ்த்துக்கள் :)
//இந்த அதிசயமெல்லாம் எப்போ நடந்துச்சு !// எனக்கே தெரியல சித்ரா! ;))
Delete//ஒன்று விடாமல் படித்துவிடுகிறேன்.// ம்.. வாங்க, வாங்க.
நன்றி சித்ரா.