பொன்னியின் செல்வனை திரும்பிப் பார்ப்போம்
➦➠ by:
சொக்கன்
(அமெரிக்காவில் மேடையேற்றப்பட்ட பொன்னியின் செல்வன் நாடகத்தின் ஒரு காட்சி)
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இன்றைக்கு யாரை அறிமுகப்படுத்தலாம்னு யோசித்த பொழுது, பொன்னியின் செல்வன் தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் ஞாபகத்துக்கு வருவதற்கு காரணம், கடந்த இரண்டு வாரங்களாக நான், பொன்னியின் செல்வனைத்தான்
மூன்றாவது முறையாக மிகவும் நிதானமாக புகைவண்டியில் படித்துக்கொண்டு அலுவலகத்துக்கு
சென்று வருகிறேன்.
ஏற்கனவே ஒரு குழு பொன்னியின் செல்வன் என்ற பெயரில் யாஹூ குழுமத்தில்
(yahoo groups) இயங்கி வருகிறது. அதனால் நிச்சயமாக வலைப்பூவிலும் இந்த புதினத்தைப் பற்றி
பேசியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கூகிள் ஆண்டவரை நாடினேன். அவரும் என்னை கைவிடாமல், அவர்களை எனக்கு
அறிமுகப்படுத்தினார். இதோ, நானும் அவர்களை உங்களுக்கு அறிமுகப்
படுத்துகிறேன்.
ரவிஷங்கர் என்னும் இவர், "மாதவிப்பந்தல்" என்ற வலைப்பூவில் பொன்னியின்
செல்வனைப் பற்றி புதிர் போட்டியே நடத்தியிருக்கிறார். - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு
நம் அன்பிற்கினிய கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்கள் தன்னுடைய வலைப்பூவில், இராஜராஜ சோழனின் சமாதிக்கு சென்று வந்த அனுபவத்தை விவரிக்கிறார் - பொன்னியின் செல்வன்
கிரிஷ்சந்த்ரு என்பவர் தன்னுடைய அஞ்சறைப் பெட்டி வலைப்பூவில்
பொன்னியின் செல்வனில் அவருக்கு ஏற்பட்ட குழப்பங்களை விவரிக்கிறார் - பொன்னியின் செல்வன் - காலத்தை வென்ற புதினம்
முரந்தொடை என்னும் வலைப்பூவில், பொன்னியின் செல்வனைப் பற்றி
சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு தான் அரய்ச்சி செய்து சில பதில்களையும்
சொல்லியிருக்கிறார் - பொன்னியின் செல்வன் - சில கேள்விகளும் ஒரு தற்குரியின் பதில்களும்
சுரேஷ் என்பவர் தன்னுடைய கனவுகளே வலைப்பூவில் குந்தவைத் தான் கொலையாளியா என்று அவருடைய பாணியில்
அலசியிருக்கிறார் - குந்தவை தான் கொலையாளியா?
திடங்கொண்டு சீனு அவர்கள் பொன்னியின் செல்வனைப் பற்றி மிக அழகாக
தன்னுடைய கருத்துக்களை சொல்லியிருக்கிறார் - பொன்னியின் செல்வன் புதினம் என்னும் பதுமை
தமிழ் பிரியன் என்பவர் இது என்னோட இடம் என்ற வலைப்பூவில் நந்தினிக்கும்
வீரபாண்டியனுக்கும் உள்ள உறவை அலசுகிறார் - பொன்னியின் செல்வன் - நந்தினி வீரபாண்டியன் உறவு சர்ச்சை
பொன்னியின் செல்வனை பதிவிறக்கம் செய்வதற்கு இந்த வலைப்பூவிற்குள்
செல்லுங்கள் - தமிழ் மின் நூல்கள் - பதிவிறக்கம்
நாம் எல்லோரும் பொன்னியின் செல்வனைப் பற்றி படித்திருப்போம்.
இந்த தலைமுறையினருக்கு பொன்னியின் செல்வன் எந்த அளவிற்கு அறிமுகம் ஆகியிருக்கும் என்று
தெரியவில்லை. ஆனால் ஒரு பதினோராம் வகுப்பு மாணவி, நான் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும்
படித்து முடித்து விட்டேன் என்று கூறினார். எப்படி உனக்கு ஈடுபாடு வந்தது என்று கேட்டபோது, நான் சிறியவளாக இருக்கும்போது, என் தாயார் தினமும் அந்த
கதையை எனக்கு சொல்லுவார், அப்படி அந்த கதையை கேட்டதிலிருந்தே
எனக்கு அந்த புதினத்தின் மீது நாட்டம் ஏற்பட்டு
விட்டது. அதனால் என்னால் அந்த கதையை மிகுந்த ஈடுப்பாட்டோடு இப்போது படிக்க முடிந்தது
என்று கூறி என்னை ஆச்சிரியத்துக்குள்ளாக்கினார்.
நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
|
|
பொன்னியின் செல்வன் வாசிப்பிற்கான நல்ல அனுபவம். வரலாறு, காதல், அரசியல், மர்மம், நகைச்சுவை எல்லாம் கலந்த ஒரு கலவை. அன்றிருந்த மக்களின் வாழ்க்கை பற்றிய சிறு பதிவு கூட இல்லையே என்ற சிறு குறை மட்டும் உண்டு. பல முறை படித்த நாவல். கிழித்து வைத்த பக்கங்களை பைண்ட் செய்து, முழு நூலாக, ஒவ்வொரு வாரமும் தொடராக என்று பல விதங்களிலும் படித்த நூல் இது. பொன்னியின் செல்வன் குறித்து நீங்கள் பகிர்ந்து கொண்ட பல இடுகைகளும் சுவாரஸ்யமாக இருந்தன. திரு கரந்தை ஜெயகுமார் அவர்களின் பதிவை அனைவரும் அவசியம் படியுங்கள். பொன்னியின் செல்வன் குறித்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை எழுதவும் தூண்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஆமாம் ஐயா, நீங்கள் சொல்கிற மாதிரி இந்த நாவலில் நாம் அனைத்தையும் காண முடியும்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
‘பொன்னியின் செல்வன் நாவலை’ எத்தனை முறை படித்தாலும் அதைப்பற்றி எத்தனை முறை பேசினாலும் அதன்மேல் உள்ள ஆர்வம் கூடுமே தவிர குறையாது என்பதை நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள அத்தனை பதிவுகளுமே சொல்லும். நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉண்மை தான் ஐயா. நானும் இந்த நாவலை மூன்றாவது தடவையாக படிக்கிறேன்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஎத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதாகவே தோன்றும்
தன்மை உடையது பொன்னியின் செல்வன்.
எனது அலைபேசியில் எப்பொழுதும் பொன்னியின் செல்வன் இருக்கும்.
பதிவின் இறுதியில் பொன்னியின் செல்வன் நாவலை பதிவிறக்கம் செய்யயும்
இணைப்பு கொடுத்திருப்பது உண்மையிலேயே அற்புதம்
நன்றி நண்பரே
என்னுடைய அலைபேசியிலும் இருக்கிறது ஐயா. ஆனாலும் நான் புத்தகத்தில் படிப்பதையே விரும்புகிறேன்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ஜெயக்குமார் சார்
தம 1
ReplyDeleteமிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteஇத்தனை நாள் கழித்து அறிமுகமா? நன்றி தல..,
ReplyDeleteஎத்தனை நாள் கழித்தாலும் பதிவு அருமையாக அல்லவா இருக்கிறது.
Deleteநன்றி தல.. அது கொஞ்சம் மாறுபட்ட கோணம்.., விமர்சனங்கள் நிறைய வந்தது.
Delete2008ல் நான் எழுதிய இடுகையில் இவ்வாறு ஒரு பின்னூட்டம் உண்டு. //புருனோ BrunoThursday, December 18, 2008 11:15:00 PM
ReplyDelete//ஆதித்தன் குந்தவைக்கு அளித்த ஓலையில் தனது ஒற்றன் வந்தியதேவன் என்று குறிப்பிட்டுள்ளான், வந்தியதேவனை அவன் குந்தவையை ஒற்றறிய அனுப்பியிருந்தால் அவன் குந்தவைக்கு அனுப்பிய ஓலையில் அதை குறிப்பிட்டிருக்க் மாட்டான். //
ஓற்றர்களில் double agent, sleeper, என்று பலவகை உண்டு// டபிள் ஏஜெண்ட், சிலீப்பர் பற்றி எல்லாம் கல்கி வாயிலாக அன்று பேசினோம். பல ஆண்டுகள் கழித்து இந்து சிலீப்பர் ஏஜெண்டுகள் பற்றி துப்பாக்கி திரைப்படம் வெளிவந்தது
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சரஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்றைய பதிவில் நல்ல நூலை அறிமுகம்செய்துள்ளீர்கள் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்
Deleteஅமரர் 'கல்கி'யின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தை இங்கு நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா
Delete''பொன்னியின் செல்வன்'' காலத்தால் அழியாத காவியம்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteவலை பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! நாவலை பதிவிறக்கம் செய்யும் தகவலுக்கு நன்றி ஏனெனில் இனி தான் வாசிக்கவேண்டும். ஏனோ எனக்கு வாசிக்க கிடைக்கவில்லை.
ReplyDeleteநன்றி சகோ ! வாழத்துக்கள்....!
கண்டிப்பாக வாசியுங்கள் சகோ.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பொன்னியின் செல்வன் எனும் காலத்தால் அழியாத மாபெரும் காவியத்தைக் குறித்த வலைப்பதிவுகளை இன்றைய அறிமுகத்தில் கண்டதும் - மிக்க மகிழ்ச்சி..
ReplyDeleteஇதுவரையிலும் மூன்று முறை முழுதாகப் படித்துள்ளேன்.. என் பிள்ளைகளுக்கு - நான் பரிசாக அளித்த நூல் பொன்னியின் செல்வன்!..
அன்பின் இனிய சொக்கன் அவர்களுக்கு மிக்க நன்றி..
நானும் மூன்றாவது முறையாக படிக்கிறேன் ஐயா.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
படிக்கப்படிக்க சலிக்காத நாவல் பொன்னியின் செல்வன்! அவர் பற்றிய பதிவர்களின் தொகுப்பு அருமை எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteஅருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி சொக்கன்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Deleteசிறப்பான தொகுப்பு... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.
Deleteபொன்னியின் செல்வன் புதினத்தை எவரும் விரும்புவர். 1970களில் என் தாத்தாவுக்கு நான் பொன்னியின் செல்வன் படித்துக் காண்பித்தேன். என் மகன்கள் இருவரும் அப்புதினத்தில் ஈர்க்கப்பட்டுள்ளனர். எங்கள் இல்ல நூலகத்தில் தாத்தா வைத்திருந்த நூற்கட்டு பொன்னியின் செல்வனும், விகடன் பதிப்பான பொன்னியின் செல்வனும் உள்ளன.
ReplyDeleteஆஹா. உங்கள் குடும்பமே பொன்னியின் செல்வன் புத்தகத்தின் வாசகர்கள் என்று சொல்லுங்கள்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
பொன்னியின் செல்வன் இன்று முதல் சென்னை மியுசிக் அகடமியில் நாடகமாக....
ReplyDeleteco-incidence....
அட. தெரியாதே. இது எனக்கு புதிய செய்தி.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை
பொன்னியின் செல்வன் நாவலை பலமுறை படித்து ரசித்து வியந்துள்ளேன்! இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! சென்று பார்க்கிறேன்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி suresh
Deleteஉங்களால் தூண்டப்பட்ட எனது இன்றைய பதிவு - ராஜீவ் காந்தி, மருத்துவ மனை மற்றும் பொன்னியின் செல்வன் http://ramaniecuvellore.blogspot.in/2014/06/blog-post_8.html இணைப்பு இங்கே உள்ளது
ReplyDeleteமிக்க சந்தோஷம். இந்த பதிவு உங்களை பொன்னியின் செல்வனின் புத்தகத்தில் உள்ள படங்களை வெளியிட செய்திருக்கிறது என்று தெரியும்போது மாநாடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
நான் முதன்முதலில் பொன்னியின் செல்வன் படித்தபொழுது எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அதன் பின் மொத்தம் 10 முறைகள் படித்து விட்டேன். இரண்டு வாரங்களுக்கு இனி எந்த வேலையும் இல்லை என ஒரு நிலைமை ஏற்பட்டால், இன்றைய அரசியல் புரிதலில் மீண்டும் ஒருமுறை கூடப் படிக்க ஆவல்தான். அந்த அளவுக்கு அற்புதமான கதை அது!
ReplyDelete'பொன்னியின் செல்வன்' பற்றிய வலைப்பதிவுகள் அனைத்தையும் மொத்தமாக இப்படித் திரட்டித் தந்தமைக்கு நன்றி! இதை நூற்குறியிட்டு வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டியதுதான்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteநண்பரே! உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு நன்றி!
ReplyDeleteஆனால், ஒரு சிறு குறை!
நீங்கள் 'நியாபகம்... நியாபகம்' என அடிக்கடி எழுதுகிறீர்கள். அது - 'ஞாபகம்'!
மேலும் தான், தானே ஆகிய சொற்கள் தனித்துப் பொருள் தராத இடங்களில் அவற்றை முன் சொல்லோடு சேர்த்தே எழுத வேண்டும்!
எ.டு:
அவன் தானே இதைச் செய்தான். (He did it by his self try)
= இது சரி.
'பொன்னியின் செல்வன்' படித்திருக்கிறீர்கள் தானே? (All of you have read 'Ponniyin Selvan', wasn't it?) = இது தவறு! காரணம், இங்கு 'தானே' என்பதற்குத் தனிப்பொருள் கிடையாது. மிகப் பெரும்பாலானோர் இன்று இப்படித்தான் எழுதுகிறார்கள். எனவே, பதிவர்கள் பெரும்பாலோர் படிக்கும் இவ்விடத்தில் இதைத் தெரிவித்தால் அனைவருக்கும் சென்று சேரும் என நம்புகிறேன்.
குறை சொல்வதாக எண்ணாமல் கனிவு கூர்ந்து திருத்திக்கொள்ள அனைவரும் முன்வந்தால் நமக்கும் பெருமை தமிழுக்கும் நன்மை!
நன்றி! வணக்கம்!
குறை என்று தெரிந்த பிறகு எனக்கென்ன என்று போகாமல், நீங்கள் சுட்டிக்காட்டியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. தவறுகளை திருத்திக்கொள்பவனால் தான் மேலும் வளர முடியும் என்ற எண்ணம் கொண்டவன் நான். அதனால், நான் தவறாக எண்ணிக்கொள்ளவே மாட்டேன்.
Deleteநான் இப்பொழுத்து தான் இலக்கணம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதனால் மிகவும் மகிழ்ச்சியுடன் குறையை திருத்திக்கொள்கிறேன். இங்கே குறிப்பிட்டதால், மற்றவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
அந்த இரண்டு தவறுகளையும் திருத்தி விட்டேன் ஐயா.
குறை சொல்வதாக நினைக்காமல் உளமுவந்து ஏற்றுக் கொண்டமைக்கும், திருத்திக் கொள்ள முன்வந்தமைக்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteபொன்னியின் செல்வன் - எத்தனை முறை படித்தாலும் அலுக்காத ஒரு புதினம்....... இந்த புதினம் பற்றி இத்தனை பேர் எழுதி இருப்பது நல்ல விஷயம்.....
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.