07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 13, 2014

சின்னதாய்ச் சில அறிமுகங்கள்

_()_
முன்னுரை, முகவுரை ++ எதுவுமில்லாமல் நேரடியாக அறிமுகத்திற்கு வருகிறேன்.
இன்று பகிர்ந்துகொள்ளவென்று தேடிப் பிடித்த வலைப்பூக்களும் இடுகைகளும்....
வாகீசன் தான் படித்துச் சுவைத்த கவிதைகளை வாகீசனின் கிறுக்கல்களில் பகிர்ந்து கொள்கிறார். 'பொன்மாலைப் பொழுது' பாடலின் விட்டுப் போன வரிகளை இங்கே காண்பீர்கள். காசி ஆனந்தன் அவர்களது நறுக்குகளிலிருந்து கூண்டு என்னும் கவிதையை இங்கே இணைத்திருக்கிறார்.

கணனித் தொழில்நுட்பம் பற்றியது பொன்மலர் பக்கம் அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்,  வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள் என்று பல உபயோகமான தகவல்கள் கொடுத்திருக்கிறார்.  என்றாவது பயன்படும் என்று குறித்து வைத்திருக்கிறேன்.

கிருஷ்ணமூர்த்தியின் 'வானம் எப்போதும் நீலம்'. அங்கே வெகு தனியாய் இவர். அதே கிருஷ்ணமூர்த்தியின் முதல் கோணல் இது. தனது அனுபவங்களை சுவாரசியமான பதிவுகளாக்கியிருக்கிறார். சம்மர் க்ளாஸ் பூதங்கள் தினமும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் என்னைக் கவர்ந்தது.

பாதி விரிந்த வலைப்பூக்கள் இனி.

குமாரமுதம் குமார் அவர்கள், 'ஆசை கொள்' என்கிறார். என் ஆசை என்னவென்றால்... புதிதாகக் கிடைக்கும் பின்னூட்டங்கள் சிலவே ஆனாலும் இவர்களை மீண்டும் எழுதத் தூண்டாதா!
அவர் மகள்... தோழி கவிசிவா நடத்திய வலைப்பதிவர் சந்திப்பு இங்கே.

Inspired Tresures - இங்கு சாரதாஞ்சலி இடுகையிட்டிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் அவரால் எழுதப்பட்டு ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவை. கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-5,  கற்பனை வளத்தை பெருக்கும் வாசிப்புத்திறன், இவ்விரண்டு கட்டுரைகளும் என்னைக் கவர்ந்தன. 'குழலி தொடர்வாள்' என்னும் ஒரு குறிப்போடு தொடராமல் நிற்கிறது வலைப்பூ.

மகி குட்டியின் பேரங்கள்  பாருங்கள். எங்கள் விடுமுறை நாட்கள் படித்தேன், ரசித்தேன். எல்லா விடுமுறைகளும்...  //அவதாரில் தொடங்கி குங்ஃபூ பாண்டா வில்  தான் முடிகிறது.// :-) இப்போ குட்டிக் கிராமங்களில் கூட இந்த நிலைதான் என்று நினைக்கிறேன்.
அனைவர்க்கும் மகிழ்நிறை நாளாக இன்றைய நாள் அமையட்டும்.

மீண்டும் சந்திக்கும் வரை...
_()_

44 comments:

  1. சிறப்பான அறிமுகங்கள்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பார்த்து சிலருக்கு தகவல் சொல்லியுமிருக்கிறீர்கள். நன்றி அக்கா.

      Delete
  2. வணக்கம்

    இன்று வலைச்சரஅறிமுகங்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. //தொடருகிறேன் பதிவுகளை//
      நன்றி ரூபன்.

      Delete
  3. வணக்கம்
    அறிமுகம்செய்த வலைப்பூக்களில் இறுதியாக உள்ள வலைப்பூவைத் தவிர ஏனையவை புதியவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. //ஏனையவை புதியவை// மிக்க மகிழ்ச்சி. :-)

      Delete
  4. சின்னதா அறிமுகங்கள் சிறப்பாக இருக்கு. பல தளங்கள் புதிதாக.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி இமா.

    ReplyDelete
    Replies
    1. //பல தளங்கள் புதிதாக.// ஆமாம் ப்ரியா. நாங்கள் அதிகம் எங்கட வட்டத்துக்குள்ளயே சுற்றிச் சுற்றி இருந்துவிடுகிறோம். :-)

      Delete
  5. அன்பின் இமா - தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் - அறிமுகங்கள் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. //அறிமுகங்கள் நன்று// இதை உங்கள் கருத்தாகப் பெறுவதில் பெருமகிழ்ச்சி எனக்கு.
      மிக்க நன்றி.

      Delete
  6. இன்றைய சின்ன அறிமுகங்கள் சிறப்பு அறிமுகங்களே!...
    இதுவரை நான் அறிந்தோரும் அறியாதோரும் உள்ளனர்.
    அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    உங்களுக்கும் அன்பு நன்றியுடன் வாழ்த்தும் இமா!

    ReplyDelete
    Replies
    1. //அறிந்தோரும் // என்னை விட அதிகம் படிப்பவர் நீங்கள். //அறியாதோரும் உள்ளனர்.// என்பது மகிழ்ச்சி தருகிறது இளமதி. மிக்க நன்றி. :-)

      Delete
  7. சிறந்த அறிமுகங்கள்

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
  8. Replies
    1. டிக் பண்ணீட்டேன் ஜலீ. :-)

      Delete

  9. வணக்கம்!

    சின்னதாய்த் தந்த சிறந்த அறிமுகங்கள்
    கன்னலாய் நெஞ்சுள் கமழ்ந்தனவே! - என்னருமைத்
    தோழி இமாவின் இனியதமிழ்த் தொண்டோங்க
    வாழியென வாழ்த்துமென் வாய்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. கவிதையை ரசித்தேன். //இமாவின் இனியதமிழ்த் தொண்டோங்க// :-))) இங்கேதான் கொஞ்சம் இடிக்கிறது. :-))) கவிதைக்குப் பொய் அழகு!!

      மிக்க நன்றி கவிஞர் ஐயா. :-)

      Delete

    2. வணக்கம்

      பொய்யேந்தி நிற்றல் புலவர்தொழில் என்பதுவோ?
      மெய்யேந்திக் காக்கும்என் மென்றமிழே! - உய்யும்சீர்
      மின்வலையை மீட்டும் வியன்செயலை நானுணர்ந்து
      உன்னிலையைச் சொன்னேன் உவந்து!

      Delete
  10. Good intro. Will visit them sooner.

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும் போது போங்க வாணியம்மா.

      Delete
  11. என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி இமா மேடம். மற்றவர்களை சென்று பார்க்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. 'மகிழ்நிறை' என்கிற பெயர் உச்சரிக்கும் போது அழகு.

      //மேடம்// வேண்டாம். இமா மட்டும். :-) உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  12. நானும் பிரசண்ட் றீச்சர் :).. அப்பாடா இண்டைக்கு ஆரும் கண்ணாடியைக் கழட்டிப் போட்டு வோட் பண்ணல்ல.... :).

    ReplyDelete
    Replies
    1. யாரது குரு வும் தலிவியிம் இருக்குமிடத்தில வாலட்டுனது

      Delete
  13. இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் சிறந்த அறிமுகங்கள்
    நன்றி இமா பகிர்வுக்கு

    ReplyDelete
  14. அறிமுகப் படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள் /..........பொறுமையா ஒவ்வொரு ப்ளொக்ஸ் யும் படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் படிக்கவேணும் கலை.

      Delete
  15. அதிரா அக்காவைத் தொடர்ந்து அதிரடி தலிவி அஞ்சு அக்காவ கமெண்ட் போட வரவேற்கிறோம் .....

    ReplyDelete
    Replies
    1. தலிவீ கமெண்டின பின்புதான் நீ பின்னூடம் போட்டிருக்க தலையை உயர்த்தி பார் :)

      Delete
  16. அழகிய, சிறப்பான அறிமுகங்கள்.


    தமிழ்மணம் 5.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிஜாமுதீன்.

      Delete
  17. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. தொடரும் அருமையான அறிமுகங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன். :-)

      Delete
  19. நீங்கள் தேடிப்பிடித்த வலைப்பூக்கள் அத்தனையும் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் அன்பான நன்றிகள் சொக்கன்.
      உங்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு கருத்தும் படிக்கையில் கொஞ்சம் குற்ற உணர்ச்சி. நீங்கள் ஆசிரியராக இருந்த சமயம் ஒரு முறை கூட எட்டிப் பார்க்கவில்லை நான். ;(
      விரைவில் உங்கள் பக்கம் வருவேன்.

      Delete
    2. அப்படியெல்லாம் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம். நானும் சற்று சோம்பேறி தான். நான் ஆசிரியராக இருந்த சமயத்தில் எனக்கு கருத்திட்ட பலருடைய தளங்களுக்கு சென்றது கூட இல்லை. அதனால் தான், இனிமேல் யார் ஆசிரியராக வந்தாலும் அவர்கள் செய்யும் பணியை பாராட்டி, கருத்திட வேண்டும் என்று உறுதி கொண்டேன்.
      நீங்கள் நேரம் கிடைக்கும்பொழுது என்னுடைய வலைப்பூவிற்கு வரலாம்.
      நான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் தான், அதனால் உங்கள் மீது கோபம் எல்லாம் வராது.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது