கங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள்
➦➠ by:
சொக்கன்
அன்பார்ந்த
வலைப்பூ உறவுகளே,
இன்றைக்கு
தான் என்னுடைய பணியை ஆரம்பிக்கிறேன். முதலில் என்னுடைய புகுந்த வீட்டின் உறவுகளை உங்களுக்கு
அறிமுகம் செய்து வைக்கிறேன். ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் உள்ளவர்களை, உயர்வாக சொல்லும்போது தான், அந்த வீட்டின் சிறப்புகளை காண
முடியும். அது போல் நான் இங்கு எனக்குத் தெரிந்த வலைப்பூ எழுத்தாளர்களை பற்றி சொல்கிறேன்.
கம்பனின்
மீது தீராக் காதல் கொண்டு, அவனுடைய பாடல்களிலிருந்து உவமைகளையெல்லாம் நமக்குத் தந்துக்கொண்டிருப்பவர்
தான் திருவாளர். அன்பு ஜெயா அவர்கள் தமிழ்ப் பந்தல்
பணத்தைப்
பற்றிய ஒரு விரிவான அலசலை, திரு. பக்கிரிசாமி இங்கே தந்திருக்கிறார் ஊக்கமது கைவிடேல்
கானா பிரபாவான
இவர், தான் சந்தித்த வலைப்பதிவாளர்களைப் பற்றி அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.
உலா
இவர் தன்னோட இன்னொரு வலைப்பூவில் தான் வலைப்பூ உலகில் பிறந்து
8 ஆண்டுகளை கடந்து விட்டதை நினைவு கூறுகிறார். மடத்துவாசல் பிள்ளையாரடி
பெண்களை சக மனிதராக பார்க்காமல் நுகர்வுப்
பண்டமாய்ப் பார்க்கிறார்களே என்று ஆதஞாப்படுகிறார் ஷ்ரேயா மழை
மகளின் குறும்பை
மிக அழகான ஒரு கவிதையின் மூலம் சொல்லியிருக்கிறார் திருவாட்டி. கீதா மஞ்சுரி அவர்கள்
- கீதமஞ்சுரி
ஆண்களும் பெண்களும் இரண்டு காதுகளை எவ்வாறு பயன்படுத்துக்றார்கள் என்று திருவாட்டி. யசோதா என்கிற மணிமேகலா அவர்கள் ரசிக்கும்படியாக சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது ஆண்கள் விஷயங்களை ஒரு காதால் கேட்டு, மறு காதால் வெளியிடுவார்களாம் (நச்சுன்னு
சொல்லனும்னா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடுவாங்களாம்) ஆனால் பெண்கள்... நீங்கள் படித்துப் பாருங்கள். அக்ஷய பாத்ரம்
சிவஞானதீபம் சதாவதானி நா கதிரவேற்பிள்ளை
அவர்களின் சரித்திரத்தை இங்கே வழங்கியிருக்கிறார்கள் திரு. சிறீதரன் அவர்கள் - தமிழ் வலையின் மினி நூலகம்
நாம எல்லோரும் ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை
மட்டும் தான் சொல்லுவோம். ஆனால் இங்க கோச்சடையான் திரைப்படத்திற்கு விமர்சனம் செய்து,
இறுதியில் தன்னோட ஒரு குட்டி கதை மூலமாக இந்த படத்தை சேர்த்த விதம் மிக அருமை. நீங்களும்
படித்துப்பாருங்களேன் - படலை
1.
ஈழத்து
முற்றம். அதன் இணைப்பாளர் கானா பிரபா. ஈழத்து முற்றம்
3. உயர்திணை
- அதன் இணைப்பாளராக யசோதா. உயர்திணை
உண்மையில் எனக்கு இதில் ஒரு சிலரை
மட்டும் தான் தெரியும். அவர்களை மட்டும் எவ்வாறு அறிமுகப்படுத்துவது, கண்டிப்பாக இன்னும்
சிலர் இருக்க வேண்டும் என்று எண்ணி, திருவாட்டி, யசோதா அவர்களை தொடர்புகொண்டு கேட்டபொழுது,அவர்கள்
அரைமணி நேரத்திற்குள் மற்றவர்களின் வலைப்பூ முகவரிகளை தந்து உதவினார்கள். அவர்களுக்கு
என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
|
|
புகுந்த வீட்டின் உறவுகளை எங்களுக்கு அறிமுகம் செய்தமை அருமை..
ReplyDeleteமேலும் தொடர்க.. வாழ்க நலம்..
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஅறிமுகங்கள் சிறப்பு ஒரு சிலர் புதியவர்கள் எனக்கு .அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteகங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்களில் கீதமஞ்சரியும் இடம்பிடித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் தளம் உட்பட பல தளங்கள் இதுவரை அறிந்திராதவை. பகிர்வுக்கு மிக்க நன்றி. அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் பாராட்டுகள். தோழி யசோதாவுக்கு என் அன்பான நன்றி.
ReplyDeleteதங்கள் லிவர்பூலில் தான் வசிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. நான் இங்கில்பர்ன்னில் தான் வாசிக்கிறேன்.
Deleteதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி நண்பரே.
Delete
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
Deleteதாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்! திருமதி கீதா மதிவாணன் அவர்களின் ‘கீத மஞ்சரி’ வலைப்பூ மட்டும் எனக்கு பரிச்சயமானது. மற்றவர்களின் படைப்புகளை இனி படிக்கவேண்டும்.
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteதங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதங்களின் வலைப்பூவும், தாங்கள் அறிமுகப் படுத்திய வலைப்பூக்களும் எனக்கு சந்தோஷமான அறிமுகங்கள். நன்றி. பயணம் இனிதாக தொடரட்டும்.
ReplyDeleteதங்களுக்கு சந்தோஷமான அறிமுகங்களாக அமைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.
Deleteதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
ஆஸ்திரேலிய வலைப்பதிவர்களின் வலைப்பூக்கள் அறிமுகம் சிறப்பு! இதில் சிலரை அறிவேன்! பலரை அறியேன்! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்
Deleteபுகுந்த வீட்டு பெருமை கொஞ்சம் அதிகம்தான் போல!
ReplyDeleteஇதுவே அதிகமா?
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
ஆஸ்திரேலிய பதிவர்களை முதல் நாளில் அறிமுகப்படுத்தியமை... நன்று!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா
Deleteவித்தியாசமான தொகுப்பு //கங்காருவின் மடியில் //என்று உங்க ஊர் பதிவர்களை அறிமுகபடுத்திய விதம் நன்றாக இருக்கு கீதமஞ்சரி தவிர்த்து அனைவரும் புதியவர்கள் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
Deleteஅறியாத சில தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி. உங்களுக்கே அறியாத தளங்களா!!!!
Deleteபதிவை தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா...? Contact : Mr. Prakash (tamilvaasi)
ReplyDeleteநான் இணைத்து விட்டேன்... +1 நன்றி...
மிக்க நன்றி டிடி
Deleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteபல மைல் தூரம் பயணித்தும் தமிழை வளர்க்கும் தமிழார்வளர்கள் மற்றும் சான்றோர்களின் வலைப்பூக்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். ஒவ்வொரு தளமாக இனி தான் பயணிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றிகள் பல.
வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் சகோதரர் அறியாத தளங்களை அறிமுகப்படுத்தி விட்டூர்களா! நிச்சயம் உங்கள் உழைப்பு கவனிக்கத்தக்கது. தங்கள் சகோதரனின் வாழ்த்துகளும் நன்றிகளும் உங்களுக்கே. நன்றி..
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா.
Delete''கங்கருவின் மடியில் ''அறிமுகமே அசத்தல் தான். புகுந்த வீட்டை நேசிப்பவரே பொறந்த வீட்டை மறக்காமல் இருந்தால் சரி தான்.எனக்கு ''கீதமஞ்சரியை'' மட்டுமே தெரியும். அனைத்து அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ...!நன்றி சகோ வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteபிறந்த வீட்டை எப்படி மறக்க முடியும் சகோ. ஒரு பெண்ணுக்கு என்னத்தான் புகுந்த இடம் பணக்கார இடமாக இருந்தாலும்,அவள் அதிகம் விரும்புவது பிறந்த இடத்தை தான். அதுபோல தான் நானும் சகோ.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தமிழில் இவ்வளவு வலைப்பூக்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பது எனக்கு இதுவரை தெரியாது. தகவல்களுக்கும்,
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கும் மிகவும் நன்றி
அன்புடன்
பக்கிரிசாமி.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பக்கிரிசாமி.
Deleteவாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteஎனக்கு கீதாக்காவை மட்டும் தான் தெரியும் மாலை மற்ற தளங்களை பார்க்கிறேன்.
காலை வணக்கம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteசிறப்பான தொகுப்புகள்.. பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!
ReplyDeleteதங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அம்மா
Deleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜே கே
Deleteவாழ்த்துக்கள் தங்களுக்கும், தாங்கள் அறிமுகப்படுத்திய வலைப் பதிவர்களுக்கும்!
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு. ரவி
Deleteஅன்பின் சொக்கன்
ReplyDeleteஎன்னுடைய வலைப்பதிவுடன், குழும வலைப்பதிவு மற்றும் சக நண்பர்களின் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
வலைச்சர வாரம் சிற்ப்பாக அமைய வாழ்த்துகள்.
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பிரபா.
Deleteநன்றிகள் சொக்கன்....எனது கிறுக்கல்களையும் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு.புத்தன்
Deleteநல்ல அறிமுகங்கள்.... கானா பிரபா மற்றும் கீதமஞ்சரி ஆகியோரின் வலைப்பூக்களை மட்டுமே நான் அறிவேன். மற்ற வலைப்பூக்களையும் ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும்......
ReplyDelete