07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 31, 2010

காக்டெயில் சனி

பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் 
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 =======================================================================
 தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்...
போதை ஏறி போச்சு...புத்தி மாறி போச்சு.

வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறமோ இல்லியோ சனிக்கிழமை சாயங்காலம் டாஸ்மாக் போகணும். அதான் ஒரு தமிழனோட கடமை. இன்னிக்கு எல்லா விசயங்களும் கலந்து காக்டைலா எழுதுற பதிவர்களை பத்தி சொல்றேன். போதை ஏறாம படிங்க. சரியா?

ஒரிஜினல் படத்தையும் ரீமேக்கையும் கம்பேர் பண்ணி நக்கல் பண்ணி இருக்கார். இத படிச்சு உங்களுக்கு இன்பம் பொங்கட்டும். போட்டோ கமெண்ட் போட்டு சிரிக்கவும் வைக்கிறார். பக்தி பரவசமாகவும் பதிவு எழுதுறார்.



தொப்பி தொப்பி பிளாக்கின் செட்டிங் பற்றி டெக்னிக்கலாவும் சொல்றார். கணினியை இசைக்கருவியா எப்படி மாத்தணும்னு ஐடியாவும் கொடுக்கிறார். போலீஸ் அராஜகத்தை(நான் இல்லை) தோலுரிக்கிறார். அரசியல் பத்தின கோபமும் இவரிடம் இருக்கிறது.



இப்போ அண்ணன் தம்பி உறவு எப்படி இருக்குன்னு இந்த அமைதி அப்பா சொல்றாரு. போய் பாருங்க. அப்படியே சிரிக்கவும் வைக்கிறார். தமிழக கோவில்களில் ஜாதி வெறி எப்படி இருக்குன்னு கோபமாக சொல்கிறார்.


இவர் கவிதை மட்டுமே எழுதுகிறார். வானவில் நாட்கள், களவு காதல் கற்பு, குற்றம், காதல் சாம்பல் என பல தலைப்புகளில் கவிதை எழுதுகிறார்.


கணேஷ் என்கிற பெயரில் எழுதுகிறார். Fibonacci யை வைத்து ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அறிவியல் சம்மந்தமான தகவல்கள் சொல்கிறார். அடுத்த ஐன்ஸ்டீன் பற்றி நிறைய தகவல்கள் சொல்கிறார்.


டிஸ்கி: சரி யாருக்கும் போதை ஏறலியே? சரி நாளைக்கு தலைப்பை கண்டு பிடிச்சா உங்களுக்கு ஒரு பரிசு உண்டு. கண்டு பிடிக்கலைனாலும் ஒரு பரிசு உண்டு.

கண்டு பிடிச்சா: திங்கள் முதல் வலைச்சரத்தில் எழுத மாட்டேன்னு சொல்லிடுவேன்.

கண்டு பிடிக்கலைனா : திங்கள்கிழமை அவங்களே வலைச்சரத்துல இருந்து துரத்திடுவாங்க. ஹிஹி
மேலும் வாசிக்க...

சூப்பர்ஹிட் நகைச்சுவை வெள்ளி

சிரிப்பு வருது சிரிப்பு வருது 
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது 


சிரிச்சா ஆயுள் கூடும்னு சொல்லுவாங்க. மங்குனி அமைச்சர் மாதிரி பைக்கோட பெட்ரோல் டேங்க திறந்து சிரிச்சிட்டு ஆயில் கூடலைன்னு சொல்ல கூடாது. நான் சொன்னது ஆயுள், ஆயில் இல்ல.



இருவர் உள்ளம் என்கிற பதிவர் சிரிக்கவும் சிந்திக்கவும் கடி ஜோக்ஸ் மற்றும் நகைச்சுவை தோரணங்களை கட்டி தொங்க விடுகிறார்(எங்கன்னு எல்லாம் கேட்க கூடாது). சிரிப்பும் ஒரு மருந்துதான். அது போல மருத்துவ தகவல்களையும் அள்ளி தருகிறார். ஒரு எட்டு போயிட்டு வாங்களேன்.  






அவிய்ங்க. இவரு நம்ம நண்பர்தான். சாருவின் நூல் வெளியீட்டை பதிவர்கள் வெளியிட்டால் எப்படி இருக்கும்னு சொல்லி எல்லா பதிவர்களையும் செம நக்கல் பண்ணிருக்கார். படிச்சு சிரிச்சிட்டு வாங்க. நம்ம டீ.ஆர் க்கு ஆஸ்கார் அவார்டு வேற கொடுக்க சொல்றாருங்க.  இவர் வயசை தெரிஞ்சிக்கணும்னா இங்க வந்து பாருங்க




படித்தது பிடித்ததும் பாதித்ததும் நம்ம நாட்டு அரசியல் அவலங்களின் கார்டூன் தொகுப்பை  கலெக்ட் பண்ணி நமக்கு தருகிறார். சர்தார்ஜி பில்கேட்சுக்கு எழுதின கடிதத்தை போஸ்ட்மேன்கிட்ட வாங்கி ஒரு காப்பி(Coffee இல்லை Copy) நமக்கு தந்திருக்கார். 


சப்ப பிகருக்கு அனுமதி இல்லைன்னு நம்மளை உஷாரய்யா உஷாரு சொல்றாரு இவரு. அப்படியே கொஞ்சம் கடிச்சும் வைக்கிறாரு. 

இவரோட பிளாக் பேரே செம ஜோக்ஸ். குடிகாரன், காதல், காதலை எப்படி சொல்லணும்  என நகைச்சுவை தோரணங்களை தூவிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பா போய் பாருங்க. 

மிளகுப்பு. இவர் விஜய் வாழ்க வாழ்கன்னு கூவிக்கிட்டு இருக்கார். A Jokes மாதிரி இவர் B Jokes சொல்லறாரு. போய் பாருங்களேன். 

டிஸ்கி: இன்னிக்கு தலைப்பை யாரும் கரெக்டா சொல்லலியே. இப்ப என்ன பண்ணுவீங்க. இப்ப என்ன பண்ணுவீங்க.நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம். ஒரு க்ளு, சனிக்கிழமை ஆச்சுன்னா நம்ம பசங்ககளுக்கு கண்டிப்பா இது வேணும்(என்னை மாதிரி நல்லவங்களுக்கு கிடையாது. குடிகார பசங்களுக்கு மட்டும்).


மேலும் வாசிக்க...

Thursday, December 30, 2010

அதிரடி (புதன் + 1)

வலைவிரிக்கிறேன் வலைவிரிக்கிறேன் வள்ளியம்மா
 விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா!!..

விளங்காதவன்னு பேர் வச்சிக்கிட்டு உருப்படியான விசயங்களை அதிரடியா சொல்றார். இவர் கலைஞருக்கு எழுதிய கடிதங்களை பாருங்களேன். அப்படியே டாக்டர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை செம நக்கலாக சொல்லி இருக்கிறார்.


நினைவில் நின்றவைங்கிற பேர்ல ஊழலை பத்தி பல விசயங்கள் சொல்லிருக்காரு. ஊழல்ல இந்தியாவுக்கு தங்கப்பதக்கமே கொடுக்கலாம்னு சொல்றாரு.


சந்தை நிலவரம் பங்கு சந்தையை பத்தி தெளிவா எடுத்து சொல்றார். மொபைல் பயங்கரத்தை ஒற்றை போட்டோவில் சொல்கிறார்.

வருணன் கவிதைகள் அப்டிங்கிற பெயரில் கவிதை அழகாக  எழுதிக் கொண்டிருக்கிறார். கவிதை மழையில் நனைந்துவிட்டு வாருங்கள்.

உங்கள் பிளாக்கை பிரபலமாக்க காவியம் படைக்க இவர் ஐடியா கொடுக்குறாரு பாருங்க. சீக்கிரம் பார்த்து என்னை மாதிரி பிரபல பதிவர் ஆக பாருங்க. 

மீனாவின் எண்ணங்கள் என்கிற பெயரில் இவரும் கவிதைகள் மட்டுமே எழுதுகிறார்.


டிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.

பாவிகளா ஒரு பதிவுக்கு தலைப்பு கூட வைக்க முடியலை. சாவடிக்கிறாங்களே!!!
மேலும் வாசிக்க...

Wednesday, December 29, 2010

காவிய Wednesday!!

காவியம் பாடவா தென்றலே...

பதிவுலகில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அவங்க அவங்க எழுதுற ஸ்டைல் அவங்களுக்கு காவியம்தான(தலைப்புக்கு எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிதிருக்கு)

தல தளபதி. பேர் கலக்கலா இருக்குல்ல. ஓசில ஊர் சுத்தி காட்டுறாரு(சுத்தியல் இல்லை). திருச்சி, மடிப்பாக்கம், தேரிகுடியிருப்பு அப்டின்னு ஊர் ஊரா ஓசில கூட்டிட்டு போறாரு.  ஓசில சுத்திபாத்துட்டு சீக்கிரம் வாங்க.


பிரியமுடன் ரமேஷ். சிறுகதை சித்தர் இவர். கண்ணில் அன்பை சொல்வாளே, இரத்தத்தில் கலந்தவள் போன்ற சிறுகதைகள் இவரது பிளஸ். இவரது கதைகளில் கடைசியில் ஒரு மெசேஜும் இருக்கும்.


மாப்ளே ஹரிஸ். நாட்டு நடப்புகளை அசைவ கொத்தாக சொல்வதில் வல்லவர் இவர்.


கணக்கு பண்றதுக்காகவே(அட நிஜ கணக்குங்க) ஒரு வலைப்பூ. எனக்கு கணக்குனாலே பயம்னு யாராவது சொன்னீங்க இவர்கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன். ஜாக்கிரதை.


சாருஜன் என்பவரது வலைப்பூவில் கவிதைகள் கொட்டி கிடக்கின்றன. இவரது கவிதைகளை படித்து பாருங்கள்.


வள்ளலாரின் சிஷ்யனான இவர் பட்டினத்தடிகள், ரமண மகரிஷி, வள்ளலாரின் வரலாறு போன்ற சிறப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்கிறார். இவர்களை பற்றியும் தெரிந்து கொள்வோமே.

அரசன். கவிதைகளின் அரசன். கலக்கல் கவிதைகளை எழுதுகிறார். 


டிஸ்கி: காவிய புதன்னு தலைப்பு வைப்பேன்னு நினைச்சீங்களா? எப்படி ஏமாத்தினேன் பாத்தீங்களா? ஹிஹி

இன்னிக்கு புதிர்: முதல்நாள் வச்ச புதிருக்கே ஒரு பய விடை சொல்லலை. அதுக்கு முதல்ல விடை கண்டு பிடிங்க. அப்புறம் அடுத்த புதிர்க்கு போகலாம்..

மேலும் வாசிக்க...

Tuesday, December 28, 2010

காதல் செவ்வாய்

காதலின் தீபம் ஒன்று...

நேத்து ஒரு பிரபல பதிவரின் லிங்க் கொடுத்தனே. போய் பாத்தீங்களா? என்னது அவரை புழந்து பாடணுமா? சேச்சே. அவருக்கு புழச்சி எல்லாம் பிடிக்காது. புகழ வேண்டாம். வேணும்னா அவரோட அக்கவுண்டுல பணமா போட்டுடுங்க.


காதல். சினிமாவுல இருந்து ஸ்கூல் படிக்கிற பசங்க வரைக்கும் இந்த மூன்றேழுத்துக்கு மயங்காதவர் யாரும் இல்லை. தமிழன் அவர்கள் தவணைக் காதலை பத்தி கவிதையாக சொல்லி இருக்கிறார். காதலின் தோழனான ரோஜாவின் அணிவகுப்பையே அழகாக நடத்தி இருக்கிறார். காதல் கவிதையின் தொகுப்புகள் உங்களுக்காக. தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கனும்கிறது இவருடைய காதல்.






இதயச்சாரல் வீசும் தமிழ் காதலன். இவரை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கவிதையை காதலிப்பவர்கள் இவர் பிளாக் வாருங்கள்.




மனதை அதிர வைக்கும் காதல் கதையை சொல்கிறார் நண்பர் "இது எப்படி இருக்கு" பாக்கியராஜ். படிச்சிட்டு மொக்கை ஆனீங்கன்னா நிர்வாகம் பொறுப்பில்லை. பொண்ணுங்ககிட்ட உங்க லவ் சொல்றதை எதோட கம்பேர் பண்றார்னு பாருங்க.






காதல்னா என்னான்னு இவங்க கொஞ்சம் கிறுக்கி இருக்காங்க. என்னான்னு போய் பாருங்க. காதலனுக்கோ காதலிக்கோ செல்லப் பேர் இருக்கனுமா வேணாமா? இங்க பாருங்க.




இந்த அஞ்சா சிங்கம் காதலர்களுக்கு எச்சரிக்கை கொடுக்குறார். பாத்து எஸ்கேப்பு ஆவுங்கோ(செல்வா அவர் பிளாக்குல வடை இருக்கு. போய் எடுத்துக்கோ).




இவர் பேர் காதல் குருடன் தாங்கோ. ஆனா காதல் பார்வை இவரிடம் நிறையவே இருக்கு.  விவசாயி முத்தம் எப்டி இருக்குன்னு படிச்சு பாருங்களேன்.


நிரஞ்சன் வாய்ஸ். இது தமிழா? வரி விலக்கு கிடைக்குமா? உயர்ந்த காதல்(LIC Buildingகா அப்டின்னு கேட்க கூடாது) எப்டி இருக்கும்னு கவிதையா சொல்லிருக்காரு. காதலும் கல்யாணமும் எப்டி இருக்கும்னு கவிதைல சொல்லிருக்காரு. 




இங்க என்ன கெக்கபிக்கேன்னு சிரிப்பு. போய் எல்லா பதிவையும் படிங்க. என்னை மாதிரி எந்த லிங்க்கையும் படிக்காம அருமையான அறிமுகங்கள், நிறைய புதியவர்கள்ன்னு டெம்ப்ளேட் கமென்ட் போட்டா அப்புறம் நம்ம நண்பர்கள் பன்னிகுட்டி , செல்வா பிளாக் லிங்க் அனுப்பிடுவேன் ஜாக்கிரதை.......
.....
மேலும் வாசிக்க...

Monday, December 27, 2010

பிரபல பதிவரின் அறிமுகம்

நான் யாரு எனக்கேதும் தெரியலையே..

எங்கப்பா ஆசிரியர். அவரை மாதிரி என்னை ஆசிரியர் ஆக்கணும்னு பார்த்தார். தப்பிச்சி ஓடி வந்துட்டேன். இப்ப ஒரு வாரத்துக்கு வலைச்சரம் ஆசிரியர் ஆயிட்டேன்(இத எங்க அப்பாகிட்ட சொல்லனுமா?). என்னை வலைச்சரத்துக்கு இந்த வார ஆசிரியராய் அழைத்த சீனா சார் அவர்களுக்கு மிக்க நன்றி. இன்னிக்கு என்னை பத்தி ஒரு சின்ன விளம்பரம்(அப்படியே சன் டிவில போட்டுடலாமா?). ஹிஹி. 



நான் முதல்ல கம்ப்யூட்டர் அசம்பில் செய்ய ஈஸியான வழிகளை சொல்லிக்கொடுத்து சம்பாதிச்சிக்கிட்டு இருந்தேன். யார் கண்ணு பட்டதோ. போலீஸ்ல மாட்டி போலீஸ் எனக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்துட்டாங்க. சரி இந்த வேலை சரிப்பட்டு வராது. பேசாம பதிவர் ஆயிடலாம்னு பதிவருக்கான நேர்முக தேர்வுக்கு போனேன்.(ஒரு பய மதிக்கலை).அதில் எனக்கு ஏமாற்றம்தான் கிடைச்சது.


அப்புறம் என்ன பண்றது. நம்ம அரசியல்வாதிங்க மாதிரி இலவச டிவி,கேஸ் எல்லாம் கொடுத்து பதிவர் ஆயிட்டம்ல. அப்புறம் நம்ம திறமைய பாத்து செம்மொழி மாநாட்டுல பாராட்டுவிழா எல்லாம் எடுத்தாங்க. நீங்க அங்க போய் பாத்தா கல்வெட்டுல நம்மல பத்தி சொல்லிருப்பாங்க. நம்ம திறமைய பாத்து பதிவுலகம் வரமா சாபமா பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்க கூப்டாங்க. அதுக்கப்புறம்தான் பதிவர் மாப்பிள்ளைன்னாகூட ஓகே ன்னு பொண்ணுங்க கூட சொல்ல ஆரமிச்சாங்க. அதனால பதிவர்கள் சார்பா எனக்கு விளம்பரம் கூட செஞ்சாங்க. 


அதனால பாருங்க எனக்கு 27 வயசு ஆகுறதால அந்த நம்பருக்கே பெருமை ஆகிடுச்சு. பிரபலம் ஆயிட்டாலே தத்துவம் எல்லாம் தானா வருது.


என்னதான் நான் சரத்குமாரோட மெஹா ரசிகனா இருந்தாலும் விஜயை பத்தியும் பெருமையா பேசுவோம்ல. 


சரி என்னோட சுயபுராணம் போதும். அப்படியே இந்த பெண்குரல் பாடல்களை  கேட்டுக்கிட்டே என் பின்னால வாங்க. நாளைக்கு நிறைய அறிமுகங்களை பாப்போம். சிடுமூஞ்சி எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்.


இன்னிக்கு புதிர்:(இப்படி தினமும் புதிர் போடணும்னு பன்னிகுட்டி & மாதவன்தான் சொன்னங்க. ஹிஹி.)

இது யாரோட சட்டைன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.(இனிமே யாராவது புதிர் போடுவீங்க?)

.....

மேலும் வாசிக்க...

Sunday, December 26, 2010

வாகை

அனைருக்கும் வணக்கம். முதலில் என்னை வலைசரத்தில் ஆசிரியராக தேர்ந்தெடுத்த திரு.சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றி
ஒருவார காலம் தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு என்னை உசுப்பேத்திய..... ஸாரி  ஊக்கப்படுத்திய உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியல.. நீங்க எல்லாரும் எனக்கு வெங்காயம் மாதிரி (விலைமதிக்க முடியாதவங்கன்னு சொன்னேன். தப்பா எடுக்கப்படாது) இந்த ஒரு வாரத்தில் யாரின் மனமாவது புண்படும்படி என் பதிவோ அல்லது பதிவின் ஏதேனும் வார்த்தைகளோ அமைந்திருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
உங்களுக்கு நேரம் இருக்குமேயானால், அதவிட பொறுமை இருக்குமானால்,  என் JUST FOR LAUGH  வந்து படியுங்கள்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மேலும் வாசிக்க...

Saturday, December 25, 2010

வலைச்சரமும், பிரபல பதிவரும் பின்னே ஞானும்


இதுக்கு மேலயும் என்னால முடியாது... வித்தியாசமா அறிமுகம் செய்யனும்னு நினைச்சு நினைச்சு மூளையே சூடாகி போச்சு (யாரது அங்க எத்தனை டிகிரி சூடாச்சுன்னு கேட்கிறது? பிச்சு பிச்சு). என்னால முடியல.... நேத்து வெள்ளிகிழமை லீவு வேற. எக்கசக்க வேலை. அதுல ஒரு வேலையா மதிய வேளை “மன்மத அம்பு” சேர்ந்திடுச்சு. என்னது படம் எப்படி இருந்துச்சாவா?. வேண்டாம் பதிவர்களை அறிமுகப்படுத்த ஒன்னும் தோணாம நான் படத்தை பத்தி எழுதி ஒப்பேத்திட போறேன். பதிவர்களை பத்தி பார்க்கலாம்.

யார் யாரை அறிமுகப்படுத்தனும்னு என்ன எழுதுறதுன்னே தெரியல... சாட்ல பார்த்தா நம்ம நண்பர் கம் பதிவர் ஒருத்தர் இருந்தார். அவரை பின்ங் பண்ணி எப்படி இருக்கீங்க?ன்னு கேட்டேன். (அவர் யார்னு சீக்ரெட்! முடிஞ்சா நீங்களே கண்டுபிடிச்சுக்கங்க மக்களே)

எனக்கென்ன குறைச்சல்?ன்னு சலிப்பா சொன்னாரு. ஆஹா இவர் தான் சரியான ஆளுன்னு இவர்கிட்டயே பேச்சை கொடுத்தேன்.

“உபுண்டு பத்தி தெரியுமா?”

”இது கூட தெரியாதா?. கேஸ் ட்ரபுளுக்கு ரொம்ப நல்லது. பார்க்கிறதுக்கு வெள்ளை வெங்காயம் மாதிரி இருக்குமே. ஆமா அதையேன் கேட்குற?”

“அடக்கடவுளே... ஏன் இப்படி அறுக்குறீங்க? அது ஒரு OS"என்றேன்.

“ஓ யெஸ்” என்றார்

“அய்யோ கடவுளே....உங்க கிட்ட இதுக்கு மேல பேசி புரிய வைக்க முடியாது. அதுனால இந்த லின்ங்ல போய் பாருங்க.”ன்னு கொடுத்தேன்.

“அட இப்ப எதுக்கு என்கிட்ட இந்த OSயை பத்தி கேட்டீங்க?”ன்னு கேட்டார்

“இல்ல வலைச்சரத்துல போடனும் எதாவது ஐடியா கொடுப்பீங்கன்னு கேட்டேன்”ன்னு சலித்துக்கொண்டேன்.

“வெள்ளப்பூண்டை பத்தி கேட்டா ஆயிரெத்தெட்டு ஐடியா கொடுப்பேன். இந்த மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாத உபுண்டுவை கேட்டேனேன்னா நான் என்ன சொல்றது?”

”என்னது ஒன்னுத்துக்கும் உதவாத உபுண்டுவா? அவ்வ்வ்... இதுனால என்னென்ன உபயோகம் இருக்குன்னு படிச்சு பார்த்துட்டு அப்புறம் உபுண்டா இல்ல வெள்ளப்பூண்டா சொல்லுங்க” என்றேன்.

”ஓ அப்படியா!.. சரி படிச்சுப்பார்க்கிறேன். ஆனா நீ ஏன் வெள்ளைப்பூண்டை இவ்ளோ சாதாரணமா சொல்லிட்ட? சரி இப்ப வெள்ள பூண்டை விடு. நெத்திக்கு மூனு இன்ஞ் தள்ளி புருவத்துக்கு ரெண்டு இன்ச் மேல உனக்கு வலி எடுத்திருக்கா?” என்றார்

கொஞ்சம் டென்சாகிட்டேன் நான் “ப்ரோ ! நேரா தலைவலிச்சிருக்கான்னு கேட்க வேண்டியது தானே? ஏன் இப்படி சுத்தி வளைச்சு கேட்குறீங்க?ன்னு கொஞ்சம் கத்திட்டேன்.

அவரும் “சரி சரி ரிலாக்ஸ். ஆயுர் வேதம்னா அப்படி தான். இந்த சைட்ல போய் பார். எக்கசக்க நோய்களுக்கு ஆயுர்வேதம் தொடர்பான விடை கிடைக்குது. உனக்கு நிறைய யூஸ் ஆகும். அதே நேரம் இதையும் வலைச்சரத்துல ஒரு அறிமுகம் போடு. பல பேருக்கு தெரிஞ்சா நல்லாயிருக்கும்” என்றார்.

“அட சூப்பரா ஒரு ஐடியா கொடுத்தீங்களே. ரொம்ப பெரிய புண்ணியமா போகும். என்ன பண்றதுன்னே தெரியாம முழுச்சுட்டு இருந்தேன். வீட்ல வேற நிறைய வேலை. அப்புறம் மகள் வேற படுத்துறா. சுட்டித்தனம் அதிகமாகிட்டே போகுது. நிறைய விசயங்கள்ல அவளை புரிஞ்சுக்கவே முடியல. அவளைப் பார்த்துக்கறதுல்லயே பாதி நேரம் போகுது. எப்படி நாளைக்கு ஆறாம் நாள் எழுத போறேன்னு நினைச்சுட்டே இருந்தேன்.”என்று என் கதையை புலம்ப ஆரம்பித்தேன்.

“மகள் சம்பந்தமா தெளிவு பெற அனுபவஸ்தவங்ககிட்ட கேட்க வேண்டியது தானே?”ன்னு அட்வைஸ் வேற வந்தது.

“ஹலோ இந்த பாலைவனத்துல  சொந்த பந்தங்க பக்கத்துல இல்லாம இருக்குற நாங்க எதுக்கெடுததாலும் இந்தியால இருக்குற அம்மாக்கு போன் பண்ணி பேசிகிட்டா இருக்க முடியும்?” என்றேன்

“இதெல்லாம் அம்மாகிட்டவே தான் கேட்கனுமா? அனுவஸ்தங்கன்னா நிறைய பேர் இருக்காங்க. அதுவும் உன் வயசுலயே. இந்த சைட் போய் பாரு. முழுக்க முழுக்க பேரண்ட்ஸே எழுதுறாங்க. நீயும் வேணும்னா சேர்ந்துக்கோ. உன் அனுபவத்தை கூட எழுதலாம். மத்தவங்களுக்கு உபயோகப்படும்ல?” என்றார். அவர் கொடுத்த லின்ங்கில் சென்று வாசித்தேன். மிக அருமையான தளம். என்னைப்போன்ற பெற்றோர்கள் அவர்களது அனுபவங்களை பகிரும் அற்புதமான தளம். மகிழ்ச்சியுடன் அவரை திரும்பவும் பின்ங் செய்தேன்.

“தெய்வமே... உன்னை அஞ்சு நாள் முன்ன பார்த்திருந்தா இன்னும் வித்தியாசம் வித்தியாசமான பதிவு லின்ங்கெல்லாம் கெடச்சிருக்குமே!” என்று அவர் புகழ் பாடினேன்.

“என்னை புகழ்றது இருக்கட்டும். என் வலைப்பூவை வலைச்சரத்துக்கு அறிமுகப்படுத்தினயா?” என்றார்

“உங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி தான் ஆகனுமா என்ன? அல்ரெடி பிரபலம் நீங்க?”ஹிஹி சமாளித்தேன். “தெய்வமே அப்படியே இந்த சைட்டுக்கு தேவையானதையும் சொல்லுங்க. அப்படியே எழுதிக்கிறேன். இப்ப என்ன எழுதுறதுன்னு ஒன்னுமே தோணமாட்டேங்குது” என்றேன்

“என்ன சைட் அது?”என்றார்

இது சமையல் & அழகு குறிப்பு பத்தினது. சிநேகிதின்னு ஒரு பதிவர் தளத்தோட ஓனர். நல்ல அருமையா புது புது வகையா சொல்லித்தராங்க. ஒவ்வொரு சமையல் வகையையும் எளிமையான தமிழ்ல ஒரு தடவை படிச்சாலே மனசுல பதியிற மாதிரி சொல்லித்தராங்க. அதுவுமில்லாம இயற்கையான வகையில அழகுகுறிப்புகள் சொல்லித்தராங்க. சிநேகிதின்ற பேருக்கு ஏத்தமாதிரியான தளம் இது. இந்த தளத்தை பத்தி எழுதனும். என்ன எழுதனும்னு சொல்லுங்களேன்”என்றேன்

“எத்தனை லைன்ல வேண்டும்?” என்றார்.

”மினிமம் மூனு லைன் போதும். மிச்சம் நான் பார்த்துப்பேன்”என்றேன்

“அப்ப இந்தா நோட் பண்ணிக்கோ.,,” என்றபடி வேகமாக டைப்பினார் “சிநேகிதின்னு ஒரு பதிவர் தளத்தோட ஓனர். நல்ல அருமையா புது புது வகையா சொல்லித்தராங்க. ஒவ்வொரு சமையல் வகையையும் எளிமையான தமிழ்ல ஒரு தடவை படிச்சாலே மனசுல பதியிற மாதிரி சொல்லித்தராங்க. அதுவுமில்லாம இயற்கையான வகையில அழகுகுறிப்புகள் சொல்லித்தராங்க. சிநேகிதின்ற பேருக்கு ஏத்தமாதிரியான தளம் இது” என டைப்பினார்.

“இதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே?” என்றேன்

”எல்லாம் நீ சொன்னது நான். எல்லாம் உனக்கே தெரியுதே. அப்புறம் என்ன என்னை கேட்குற? :))))) ”என்று ஸ்மைலியோடு ரிப்ளே வந்தது. நான் ஙே என முழுத்தது நல்லவேளை அவருக்கு தெரியவில்லை. தொடர்ந்து...

“அட இப்படி மடக்கிட்டீங்களே.. அப்ப இந்த வந்தேமாதரம் சைட் பத்தி கூட நான் நினைச்ச மாதிரி “கம்யூட்டர் பத்தின நம் பல சந்தேகங்களுக்கு விடையளிக்கும் தளம்.அதுவும் எளிய தமிழில்”னு போட்டுறவா?”என்றேன்

”அதிலென்ன சந்தேகம்? போட்டுருங்க” என்றார்

“பட் நீங்க சொன்ன மாதிரி அதையே போட்டுட்டா ரொம்ப சாதாரணமா இருக்குமே? அதுனால உங்க பர்மிசனோட ஒன்னு பண்ணலாம்னு இருக்கேன்” என்றேன்

”என்ன?” என இழுத்தார்....

“இதே சாட்டை அப்படியே பதிவா போட போறேன்....”

“அடக்கடவுளே!” என்றார்.

(ஹலோ போட மாட்டேன்னு நினைச்சீங்களா? போட்டேன் பாருங்க. எனிவே நன்றி பிரபல பதிவரே) :))
மேலும் வாசிக்க...

Friday, December 24, 2010

தங்கமணி Vs ரங்கமணி

”தங்கமணி சாப்பாட்டுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது.. சீக்கிரம் வாம்மா. பதிவு படிக்கிறச்ச ப்ரேக் எதுவும் கிடையாதா? ச்சே  சீரியல் கூட பரவாயில்ல விளம்பர இடைவேளையில சாப்பாடு கிடைச்சுது. ப்ளாக் படிக்க ஆரம்பிச்சதிலிருந்து அந்த கேப் கூட போயிருச்சே” 

“என்ன அங்க சத்தம்? செத்த நாழி இருங்கோ வரேன். இப்ப தான் படிக்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ள என்ன? இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கே? நிம்மதியா கொஞ்ச நேரம் படிக்க விடமாட்டாங்களே?” என கத்தினாள்.
“கொஞ்ச நேரம்னு சொல்றயேம்மா கொஞ்ச நாள்னு சொல்லு” ரங்கமணி புலம்பினார்.

"அப்பா இன்னும் கொஞ்ச நாள் போனா கொஞ்ச மாசம்னு சொல்லனும் போலயே?” மகள் கூட கிண்டல் செய்தாள்.

“என்ன இங்க சத்தம்? என்னாச்சு? படிக்க சுவாரஸியமா இருக்கேன்னு கொஞ்ச நேரம் கொத்து பரோட்டா படிச்சுட்டு இருந்தா பொருக்காதே? என்ன முழிக்கிறேள்?.......... பயப்படாதீங்க. சைவ கொத்து பரோட்டா தான்.” கோபமாக வந்தது தங்ஸ்க்கு.

”என்னடா குட்டி உங்கம்மா டென்ஷன்னா இருக்காளே என்ன காரணம்? நேத்து இதே மாதிரி சாப்பிடறச்ச கூப்பிடுறப்ப சிரிச்சுட்டே வந்து சாப்பாடு பரிமாறிட்டு போனாளே? ” என்று மகள் காதில் கிசுகிசுத்தார் ரங்ஸ்

 நேத்து படிச்சது அன்புடன் மலிக்காவோட காதல் கவிதை ஆனா இன்னைக்கு சகோ எல்.கே  எழுதின  பதிவபடிச்சுட்டு திருந்தா மனிதர்களை பற்றி நெனச்சு  ஆதங்கத்துல  இருக்கும் போது புன்னகை எப்படி வரும் ?
ரங்கஸ்க்கு எப்படி இது புரியும் ?

"என்ன அங்க ரகசியம்? எதுவா இருந்தாலும் இங்க பப்ளிஷ் பண்ணுங்க. பாஸிடிவ் ஓட்டா இல்ல நெகடிவ் ஓட்டான்னு நான் சொல்றேன்” தங்ஸ்
“அம்மா தாயே நானும் குட்டியும் தட்டோட டைனிங் டேபிள்ல வந்து ரொம்ப நேரம் ஆச்சு. சீக்கிரம் சாப்பாடு போடுறய்யா? இல்ல இன்னைக்கும் பட்டினியா?” ரங்க்ஸ்

“என்ன இப்படி சொல்லிட்டீங்க? என்னைக்கு உங்களுக்கு சாப்பாடு போடாம இருந்திருக்கேன்? அன்னைக்கு கார குழம்பு கேட்டீங்க டக்குன்னு அன்புடன் ஆனந்தி பதிவு ஓபன் பண்ணி அதே மாதிரி சூப்பரா காரக்குழம்பு ரெடி பண்ணி கொடுத்தேன். நோன்பு நாள்ல ஒரு நாள் குட்டி மிக்சர் வேணும்னு சொன்னா. எல்லா கடையும் மூடியிருந்தது. டக்குன்னு ஆனந்தி பதிவுல இருக்குற மாதிரி மிக்சர் கூட வீட்டிலயே பண்ணிகொடுத்தேனே?” பொரிந்து தள்ளினாள் தங்ஸ்.
“அம்மா அன்னைக்கு குலோப்ஜாமூன் கேட்டேனே.. நீ செய்ய மாட்டேன்னு சொல்லிட்ட. அப்ப அந்த ஆனந்தி ஆண்ட்டி “குலோப்ஜாமூன் செய்வது எப்படி?”ன்னு பதிவு போடலயா?” மகள்
“நீ சும்மா இருடி உனக்கு தெரியாது. இவர் இப்படி தான் என்னை எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிட்டே இருக்கார். எல்லாம் எந்நேரம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்”  அழுதாள் தங்ஸ்

“தங்கமணி அழாதடி... ப்ளீஸ்.. உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன்” ரங்ஸ் உருகினார்.

“அப்பாட இப்பவாச்சும் என்னை புரிஞ்சுகிட்டேளே”
“இல்லடி முன்னெல்லாம் ரொம்ப அழகா அழுவ..நல்லா ரசிச்சு பார்ப்பேன். இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் வாயை சிரிச்ச மேனிக்கு வச்சுட்டு கண்ல தண்ணியே வராம “அவ்வ்வ்வ்வ்வ்”ன்னு வடிவேலு மாதிரி அழற.. பார்க்க சகிக்கலடி. இதாவது பராவில்ல அன்னைக்கு கரப்பான் பூச்சியைப் பார்த்து பயந்துட்டு மயக்கம் போடும் போது கூட “கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”ன்னு டவுண்டு விட்டுகிட்டே கீழ விழுந்த. மயக்கம் வரும்போது கூடவா அப்படி? பதிவு படிச்சதிலிருந்து இப்படி ஆகிட்டயே” கடுப்பை கிளப்பினார் ரங்ஸ்.

“ரீப்பிட்டே” மகள்
“குட்டிம்மா நீயும் பதிவு படிக்கிறயா? டூ பேட்.” ரங்ஸ் விடாமல் சிக்ஸர் அடித்தார்.

”இல்லப்பா ஒன்லி கமெண்ட்ஸ் தான்”மகள் வேகமாக தலையாட்டினாள்.
“அய்யோ கடவுளே ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க. ஏற்கனவே நான் டென்சன்ல இருக்கேன். அமீரகத்துல நம்ம அநன்யா மஹாதேவன் பதிவு எழுத ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆச்சுன்னு ஆனிவர்ஸரி எல்லாம் கொண்டாடுறா..

ஹூஸைனம்மாவும் வந்து ஒரு வருசம் மேல ஆச்சு. கலக்கலா எழுதி கலக்குறாங்க. எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா.. ஆனா எனக்கு அது கூட கொண்டாட முடியலன்ற கவலையில இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் என்னடான்னா வெறுப்பேத்திகிட்டு இருக்கீங்க” என்று வெம்மினாள் தங்ஸ்.
“என்ன கொடுமை தங்கமணி இது?  பதிவு எழுதி ஒரு வருசம் ஆனதை கொண்டாட நீ எழுதி ஒரு வருசம் ஆகியிருக்கனும்மா.. நல்லா எழுதுறதைப்பார்த்து பொறாமைபட்டா போதாது நீயும் நல்லா எழுதனும். தங்க நகை கேட்டா வாங்கிகொடுக்கலாம், பட்டு சேலை கேட்டா வாங்கி கொடுக்கலாம் இதெல்லாம் நான் எப்படிடா வாங்கி கொடுக்க முடியும்?” ரங்ஸ்
“சரி அப்ப எனக்கு இந்த மாசம் தங்க நெக்லஸ் வாங்கி கொடுங்க” அவர் சொன்னதையே பிடித்துக்கொண்டாள்.

“வாயை கொடுத்து மாட்டிகிட்டேனே.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (ச்சே எனக்கும் தொத்திகிச்சே!)” ரங்ஸ்
“அப்பா வேற வழி இல்ல.. ஒத்துக்கங்கோ ரொம்ப பசிக்கிறது” மகள்
“சரிம்மா வாங்கித்தரேன். நீ பதிவு படிக்கிறதை நிறுத்திட்டு சீக்கிரம் சாப்பாடு போடு.”

“அப்படி வாங்க வழிக்கு” என்றபடி சாப்பாடு பரிமாறினாள்.

“என்ன சமையல் இன்னைக்கு?” என்றவர் கத்திரிக்காயைப் பார்த்ததும் “ஐய் என்னோட பேவரிட் கத்திரிக்காயா.. தாங்ஸ் தங்கமணி” ரங்ஸ் குஷியானார்.
“இப்ப தாங்க ஞாபகம் வருது உங்களுக்கு இந்த கத்திரிக்காய் பிடிச்ச மாதிரி நம்ம வானதியோட ஹஸ்பண்டுக்கும் ரொம்ப பிடிக்குமாம். அதை பத்தி ஒரு பதிவு எழுதி இருந்தா பாருங்கோ. அவ்ளோ சூப்பர். அப்புறம் அவரோட அறுசுவை சைட்டுக்கு போனோம்னா விதவிதமா.....” தங்ஸ் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக...
“அம்மா ஸ்டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்” என்று மகள் கோவமாக எழுந்து சுவரை பார்த்தபடி நின்றுகொண்டாள்.
தங்ஸூம் ரங்ஸூம் மாறி மாறி அவளை சமாதானாம் பண்ணினார்கள். “அம்மா இனி பதிவே படிக்க மாட்டேன். பதிவு பத்தியும் பேச மாட்டேன். ப்ளீஸ் வந்து சாப்பிடும்மா” என்றாள் தங்ஸ்.
இறுதியாக இருவரும் சேர்ந்து மகளின் ஆளுக்கொரு கன்னத்தில் இறுக்க முத்தமிட... மகள் சந்தோஷத்தில் “ஸ்வீட் மம்மி & டாடி.. வடையும் பூங்கொத்தும் எனக்குதான்” என கத்தினாள்.
மேலும் வாசிக்க...

Thursday, December 23, 2010

சீனியர்ஸ் ஆல்வேஸ் ஜீனியஸ்

வலைச்சரத்தோட விதிமுறையை மீறப்போகிறேன். ஆமா ஒரு நல்ல காரியத்துக்கக மீறுறதுன்னா நல்லது தானே? அப்படியென்ன நல்ல காரியமா? சொல்றேன் சொல்றேன். புது பதிவர்களை அறிமுகப்படுத்த பல புது சைட் லின்ங்கை தேடிகிட்டு இருந்தப்ப ஒரு சீனியர் ப்ளாக்கர் லின்ங் கிடைச்சுது. ரொம்ப அருமையா எழுதி இருந்தார். இவ்வளவு நாள் இவரை படிக்காம விட்டுட்டோமேன்னு உடனே ரீடர்ல போட்டுட்டேன். அவருக்கு வந்திருக்கிற கமெண்ட்ஸை பார்த்தப்ப ஒரு புது பதிவர்கள் கூட போடல. ஒரு வேளை அவங்களை பத்தி தெரியாம கூட இருந்திருக்கும். அவங்களும் இந்த கமெண்ட்ஸ், ஓட்டு இதை எதைப்பத்தியும் கவலைப்படாம நிறைகுடம் தழும்பாம எழுதிட்டு இருக்காங்க.

உடனே சில நண்பர்கள் கிட்ட பழைய பதிவர்கள் லின்ங் கேட்டேன். அவங்க கொடுத்ததும் கடந்த சில வாரம் முழுக்க படிக்க ஆரம்பிச்சு அசந்து போயிட்டேன். அப்படி பட்டவங்களோட பதிவர்களை என்னை மாதிரி புது பதிவர்களுக்கு தெரியப்படுத்தப்போகிறேன். அறிமுகப்படுத்துறேன்னு அதிகப்பிரசிங்கித்தனமா சொல்ல கூடாதுல்ல.. அதான் தெரியப்படுத்துறேன்னு சொல்றேன்.

”கற்றது கையளவு” அப்படின்னு கேள்விபட்டிருப்போம். “கற்றது கடலளவு” கேள்வி பட்டிருக்கீங்களா? கடல் கணேசன் தன் அனுபவங்களை எழுதியிருக்கார். கொஞ்ச வருடம் முன்ன ஆனந்த விகடன் கூட தொடரா வெளிவந்திருக்காம்! (நமக்கு எங்க புஸ்தகம் படிக்கிற பழக்கம் இருக்கு!) இவரோட கடல் அனுபவத்தை தொடரா எழுதியிருக்கார். கொஞ்சம் படிச்சேன். படிச்சுட்டும் இருக்கேன். இன்னும் முடிக்கல. படிக்கவே ரொம்ப சுவாரஸியமா இருந்துச்சு. நீங்களும் படிச்சு பாருங்க நிச்சியமா உங்களுக்கும் பிடிக்கும்.

முன்னெல்லாம் ஆங்கில பத்திரிக்கை வாங்கினாலே முதல்ல தேடுறது குறுக்கெழுத்துப்போட்டி தான். நானும் என் தங்கையும் அதை போட்டி போட்டுட்டு விடையை கண்டு பிடிப்போம்.(அவ எப்பவும் ஜெயிப்பான்னு நான் சொல்லி தான் தெரியனுமா என்ன?) ஆனா இதுவரைக்கும் தமிழ்ல அந்த குறுக்கெழுத்துப்போட்டிய முயற்சி பண்ணினது இல்ல. ஆனா முதல் முறையா ஆசை வந்திருக்கு இவரோட குறுக்கெழுத்து போட்டிய பார்த்த பிறகு. இலவச கொத்தனார் ரொம்ப பிரபலமாம். எனக்கு இப்ப தான் தெரியுது :( எவ்ளோ பேரை மிஸ் பண்ணியிருக்கேன்!. இவர் தமிழ் இலக்கணம் வேற ஈஸியா “தமிழ்பேப்பர்” சைட்ல சொல்லிதர்ரார் (ஐ ஜாலி!). இவரையும் என்னை மாதிரி புதியவங்க மிஸ் பண்ணாம படிங்க.

கிராமம் எனக்கு பரிட்ச்சயமில்லாத ஒன்னு :( பல பேர் அவங்க கிராமத்து பால்யகால அனுபவங்களை பதிவு வழியா நினைவுகூறும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும். நாம நகரத்துல இருந்துட்டு எவ்ளோ விசயங்களை மிஸ் பண்ணியிருக்கோம்னு. அதுவும் இவரை மாதிரி ஒரு அனுபவ பதிவர் அவருக்கே உரித்தான நடையில சுவாரசியமா சொல்லும் போது படிக்க அருமையா இருந்துச்சு. இவர் ரொம்ம்ம்ம்ப சீனியர் பதிவர் கார்த்திகேயன். "கார்த்தியின் கனவுலகம்"னு பதிவு வச்சிருக்காரு. போய் படிச்சு பாருங்க ஒரு நல்ல அனுபவமா இருக்கும்.

சில பேரோட பதிவு படிச்சா பிடிக்கும். சில பேரோட பேரெ வித்தியாசமா நல்லா இருக்கும். ஆனா சில பேர் பதிவுகளுக்கு வச்சிருக்கிற தலைப்பே ரொம்ப பிடிச்சுப்போகும். அப்படி ஓபன் பண்ணினதும் பிடிச்சுப்போனது இந்த ”மாதவிப்பந்தல்”. KRSன்னு ஒரு சீனியர் பதிவர் எழுதிட்டு இருக்கார். கடவுள் பத்தி இவர் எழுதி இருக்கிற பல பதிவுகள்ல சில பதிவுகள் படிச்சதுக்கே மெய் மறந்துட்டேன். இந்து. கிறிஸ்த்துவம்,இஸ்லாம்ன்னு அனைத்து மதங்களை பத்தியும் எழுதுறார். இவரையும் மிஸ் பண்ணாம படிங்க நியூ ப்ளார்கஸ்.
 
அடுத்தவர் பெயரை கேட்டாளே சிரிப்பு வரும். "கைப்புள்ள" :) "கைப்புள்ள காலிங்..."னு தளம் வச்சிருக்காரு. காமெடியில பல கட்டுரைகள் வெளுத்து வாங்கியிருக்கார். பல சமூக பொறுப்புள்ள கோப கட்டுரைகளும் இருக்கு! இப்ப அப்பாவானதால அடிக்கடி எழுத முடியல போல. "வருத்த படாத வாலிபர் சங்கம்"த்தை கூட ஆரம்பிச்சு இன்னமும் சங்கம் கலையாம ஓடிகிட்டு இருக்குறதா சொல்றாங்க. இவரையும் தொடர்ந்து வாசிச்சுட்டு வாங்க.
இவரை கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஏன்னா இப்பவும் நிறைய எழுதிட்டு வரார். இருந்தாலும் இவரோட கலக்கல் பதிவுகள் யாரும் மிஸ் பண்ண வேணாம்னு புதியவங்களுக்காக சொல்லிக்கிறேன்...
"டுபுக்கு".  உம்மனாமூஞ்சிங்க கூட இவரோட பதிவை படிச்சா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும். அவ்ளோ ஜாலியா எழுதுறார். குறும்படம் கூட ட்ரை பண்ணியிருக்கார். இவரை பத்தி சொல்ல முன்னமே நோட் பண்ணி வச்சிருந்தாலும் வலைச்சரத்துல என்னோட ரெண்டாவது பதிவுல இவர் கமென்ட்!!. ரொம்ப சந்தோஷமா போயிடுச்சு :)

இவரையும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். நிறைய சைட்ல இவரை பார்த்திருப்பீங்க. பல வருடங்கள் ஆனாலும் இன்னமும் ஆக்டிவா இருப்பவரு. ஆயிரம் பதிவுக்கு மேல எழுதியிருப்பவரு (காயத்ரி நீ இன்னும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் முடியாது!) பயணக்கட்டுரை, கோவில் தளம்னு எழுதி கலக்குபவரு, புதிய பதிவர்கள் பல பேருக்கு பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துபவர்...இதுக்கு மேல இவரை பத்தி நான் சொன்னா சூரியனுக்கே டார்ச் அடிக்கிற மாதிரி இருக்கும்.. அவர் வேற யாருமில்ல நம்ம துளசி டீச்சர். இவரை எல்லாம் மிஸ் பண்ணவே கூடாது. என்னை மாதிரி புதுசா வந்திருக்கிற பதிவர்கள்  நோட் பண்ணிக்கங்க. முன்னமே சொன்னமாதிரி பால்யகால கிராமத்து அனுபவங்களை ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க இந்த டீச்சர். கொஞ்சம் பதிவுகள் தான் படிச்சேன். இன்னும் படிக்கனும். 

என்னடா இவ்ளோ பெரிய பதிவர்களை வலைச்சரத்துல போட்டுருக்காளே இந்த பொண்ணுன்னு யாரும் கோபப்பட வேண்டாம். எனக்கு இவங்கெல்லாம் அறிமுகமாகி கொஞ்ச வாரம் தான் இருக்கும். ஒவ்வொருத்தரையும் இப்ப தான் நல்லா வாசிச்சுட்டு வரேன். பல புதிய பதிவர்களுக்கு இவர்களைப்பத்தி தெரிஞ்சுக்காம இருக்கலாம். அவங்களுக்கு இந்த பதிவு உபயோகப்படும்ல? அட்லீஸ் ஒரு அஞ்சு பேருக்கு இந்த பதிவு உபயோகப்பட்டாலும் எனக்கு சந்தோஷம் தான்.

சரி இன்னைக்கு கோட்டா முடிஞ்சுது... நாளைக்கு மீண்டும் சந்திக்கலாம். டாடா பை பை :)
மேலும் வாசிக்க...

Wednesday, December 22, 2010

சித்திரம் பேசுதடி




ஆவிங்க ஒரு வேளை நம்மள மாதிரி காலேஜ் எல்லாம் போனா எப்படியிருக்கும்னு ஒரு கற்பனையே இப்படி டெரரா இருக்கே.... அப்ப இந்த அமானுஷ சக்திகளையும் ஆவிகளையும் ரொம்ப நாளா ஆராய்ந்து கட்டுரைகளையும் பல உண்மை சம்பவங்களையும் எழுதிட்டு இருக்க ரமணனோட தளத்தை நீங்க படிச்சீங்கன்னா மயங்கிறமாட்டீங்க? ஆக்சுவலி ரொம்ப சுவாரஸியமா எழுதிட்டு வரார் இவர். போய் படிங்க. போன ஜென்மத்துல என்னவாக இருந்தோம்னு யோசிங்க :)


இப்படி ஒரு மிகச்சாதாரண மனுசனும் நல்லா ஆங்கிலம் பேசுற நிலைமை கண்டிப்பா எல்லா இடத்திலேயும் வரும்ங்க.. எப்படின்னு கேட்குறீங்களா? இவர் தான் நல்ல எளிய முறையில ஆங்கிலம்(சுனிதா) சொல்லி தராங்களே அப்புறம் எல்லாரும் இதே மாதிரி பேசி அசத்தலாமே!




இந்த மாதிரி பல பேர் இவங்க போட்ட கோலத்தை(வாணி முத்துகிருஷ்ணன்) வீட்ல போட்டு நல்ல பேரு வாங்கிட்டு இருக்காங்க. ஆனா அது தான் இவங்க நோக்கமும். நீங்க வீட்ல நல்ல பேர் வாங்கனும்னு பலவித கோலம் போட்டு கலக்குறாங்க. போய் பாருங்க.






உண்மையா கொசுங்க எல்லாம் இவ்வள்வு வெறியோட தான் இருக்கும். பின்ன கொசுவை பத்தி நல்லா டீடெயில்லா இவங்க போட்ட பதிவை படிச்சு பாருங்க(அமைதிச்சாரல்). கொசு கோபத்துக்கான காரணம் தெரியும்.





பாருங்க ஒரு அம்மாவும் அப்பாவும் எவ்ளோ கஷ்டப்பட்டுப் போனை ஒட்டு கேட்குறாங்கன்னு... போன் ஒட்டு கேட்குறது அவ்ளோ கஷ்டமா? கஷ்டம் தான்னு இவர் சொல்றாரு(ரவி). போய் படிச்சு பாருங்க. ரொம்ப உபயோகமா பல பதிவுகள் எழுதிட்டு வராரு






என்னடா சிங்கக்குட்டி கடிச்சா இந்தாளு சிரிக்கிறானேன்னு பார்க்கிறீங்களா? இங்கே போய் பாருங்க(சிங்ககுட்டி). அவர் மட்டும் இல்ல நீங்களும் நல்லா வயிறு வலிக்க சிரிக்கலாம்.
மேலும் வாசிக்க...

Tuesday, December 21, 2010

ரெடி... டேக்... ஆக்சன்

"பதினைஞ்சு அடுக்கு மாடி கட்டிடம் சார். கேமராவை மேல வைக்கிறோம். அப்படியே அங்கிருந்து நேரா கீழ இறங்குறோம் சார்"

"கேமராவை மேல வச்சுட்டு எதுக்குய்யா கீழ இறங்கிறோம்? ப்ரொடியூசர் தலையில துண்டு போட்டு போகவேண்டியது தான்"

"இல்ல சார் கேமராவோட தான். கீழ அப்பயே ஸ்லோ மோசன்ல கொண்டு போனா ஹீரோயின் நடந்து வராங்க" அசிஸ்டென்ட் டைரக்டர் விளக்கும் முன் டைரக்டர் நிறுத்த சொல்கிறார்.

"உன்னை அந்த மாடியிலிருந்து தள்ளிவிடனும்ய்யா. கிராமத்து  கதையை சொல்றேன்னு சொல்லி பல  அடுக்கு மாளிகையா?" சலித்துக்கொண்டு "நீயாவது கிராம்த்து கதையா சொல்லுய்யா" என்று மற்றொரு அஸிஸ்டென்ட்டை பார்க்கிறார்.

"சார் ஒரு அழகான அக்ரஹாரம்.... ஹீரோவும் ஹீரோயினும் சின்ன வயசுலயிலிருந்து காமிக்கிறோம்"

"ஓஹோ.. சூப்பர் அப்புறம்"

"ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு. ஹீரோயின் பேரு "காயத்ரி" ஹீரோ பேரு "கார்த்திகேயன்". ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ் சார். சின்ன வயசுல கிண்டலும் கேலியுமா இருக்காங்க. ஹீரோயினுக்கு ஒரு அக்கா சார்"

" அவங்க பேரென்ன கௌரியா?" டைரக்டர்

"சார்ர்ர்ர் ஜூனியஸ் சார் நீங்க. எப்படி சார் என் மனுசுல இருக்குறது அப்படியே தெரியுது உங்களுக்கு?"

"அடிங்க... பண்றது திருட்டு வேலை. அட்லீஸ் பேராவது மாத்தலாம்ல... இது நம்ம அப்பாவி தங்கமணி "ப்ரியமானவளே " கதை தானே? டேய் அருமையான கதைடா அது. அதை இப்படி திருட்டுத்தனமா எடுத்து கொலை பண்ணாத.. அப்புறம் நான் உன்னை கொலை பண்ணிடுவேன்"

"ஹி ஹி ஸாரி சார்..." அஸிஸ்டென்ட் 1

"அவன் அப்படி தான் சார். என்கிட்ட ஒரு கதை இருக்கு கேளுங்களேன்." அஸிஸ்டென்ட் 2

"மறுபடி மாடியில இருந்து விழ போறயா?" டைரக்டர்

"இல்ல சார் இந்த கதையை கேளுங்க.. ஒரு வெளியூர் பையன் சார். இன்னொரு ஊருக்கு வரான். இங்க உள்ளூர் ரவுடி..அப்ப என்ன ஆகுதுன்னா"

"நிறுத்து.  விஷால் இப்போதைக்கு கால்ஷீட் கிடைக்காதுன்னு சொல்லிட்டார்.  அதுனால வேற கதை சொல்லு" டைரக்டர்.

"விஜயகாந்துக்கு ஒரு கதை வச்சிருக்கேன் சார். கிராபிக்ஸ் அனிமேசன் எல்லாம் நிறைய இருக்கும் சார்"

"அடடே  இதெல்லாம் நீ எங்கய்யா கத்துகிட்ட?" டைரக்டர்


"இப்ப தான் சார் கத்துகிட்டு வரேன். எஸ்.கேன்னு ஒரு பதிவர் இதெல்லாம் எளிய தமிழ்ல சொல்லி தரார் சார். இந்த கதையில அனிமேசனோட அருமையான ஆக்சன் இருக்கு சார். ஹாலிவுட்டே மூக்கு மேல விரலை வைக்கும்" அஸிஸ்டென்ட்

"அவ்ளோ நாத்தம்பிடிச்ச கதையா? எங்க சொல்லு பார்ப்போம்" டைரக்டர் குஷியானார்.

"முதல் சீனே ப்ளைட்ல தான் சார்"

"ஆஹா"

"ப்ளைட்ல ஒரு சண்டை... வில்லன் ப்ளைட்டையே ரெண்டா அறுத்திடுறான்.. அப்ப"

"அப்ப கேப்டன் பாதி ப்ளைட்டோட வண்டிய ஓட்டுறார். அது கடல்ல விழுகுது..அங்கிருந்து ட்ரைன்ல போறாங்க..இதானே கதை? இது நான் ஆதவன் எழுதின கதையாச்சே? அவரே கேப்டனை கலாய்கிறதுக்காக எழுதினா நீ அதை சீரியஸா எடுத்து சுட்டு உன்னோட சொந்த கதை மாதிரி சொல்றயே? ஓடிப்போயிடு.. இல்ல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" டைரக்டர் டென்சனானார்.

"எங்க நம்ம இன்னொரு அஸிஸ்டென்ட் தாடிக்கார கவிஞரை காணோம்? எங்கய்யா அவன்?" டைரக்டர்

"இதோ வரான் சார்" தாடிக்கார அஸிஸ்டென்ட் வந்து கொண்டிருந்தார்.

"என்னய்யா எங்க போன? ஆளையே காணோம்?"

"யாருமில்லாத வீதியில்
நீ நடக்கிறாய்
எனை நினைத்து

நீ இல்லாத கவிதையை
நான் கடக்கிறேன்
உன் நினைவை
துணைக்கழைத்து" எப்படி சார் இருக்கு கவிதை? நானே எழுதியது" தாடிக்கார அஸிஸ்டென்ட் .

"என்னது உன் கவிதையா? டேய் இந்த கவிதை ராஜா சந்திரசேகர்ன்ற ஒரு கவிஞரோடது. அவர் புத்தகமெல்லாம் போட்டிருக்காரேடா. அவர் கவிதையையே சுட்டுருக்கையா? ஏன்டா இப்படி இருக்கீங்க.. பதிவுலகத்தை எல்லாரும் கவனிச்சுட்டு வராங்க. இப்படி எல்லாம் சுடாதீங்கடா" டைரக்டர் கவலையுடன் கூறினார்.

"சார் சும்மா திட்டாதீங்க சார். ஒரு படக்குழுவோட டைரக்டர்ன்றவரு ஒரு கம்பெனியோட மேனேஜர் மாதிரி. மேனேஜர் எப்படி இருக்கனும்னு அப்துல் கலாமே சொல்லியிருக்கார்" அஸிஸ்டென்ட் கோபப்பட்டார்.


"அடடே உனக்கு இவ்வளவு தெரியுமா? என்ன சொல்லியிருக்கார்?"


"ஒரு முறை ஏவுகணை கடலில் விழுந்த போது APJ ஐயா வேலை செய்த நிறுவனத்தின் தலைவர் சொன்னாராம், இன்று பத்திரிக்கையாளர்களை நான் எதிர்கொள்கிறேன் - I will take the responsibility for this failure என்று. அதே ப்ராஜக்ட் வெற்றி அடைந்த போது, அதே தலைவர் APJ விடம் சொன்னாராம் - Go and take the press meet, it is your success என்று. அப்படி இருக்கனும் சார். அதுவுமில்லாம இந்த மாதிரி தலைமை பொறுப்புல இருக்குறவங்க எப்படி நடந்துக்கனும்னா..."


"டேய் நிறுத்து நிறுத்து இதெல்லாம் எந்த பதிவுல இருக்குதுன்னு சொல்லு நானே படிச்சுக்கிறேன்."


"சார் இதெல்லாம் நானே யோசிச்சது." அஸிஸ்டென்ட்


"அடி வாங்குவ. மரியாதையா சொல்லு" டைரக்டர்


"ஹிஹி நம்ம பாஸ்டன் ஸ்ரீராம்ன்னு ஒருத்தர் ஸ்போக்கன் இங்கிலீஷ், அப்புறம் மேனேஜ்மென்ட், இன்டர்வியூக்கு போறப்ப கவனிக்க வேண்டியதுன்னு நிறைய எழுதுறார் சார்..அங்க தான் படிச்சேன்"


அப்படி வா வழிக்கு. ஏன்டா இப்படி நல்ல நல்ல பதிவெல்லாம் திருடி படைப்பாளிக்கு கிடைக்குற பெருமைய கெடுக்குறீங்க. உங்களுக்கு தோன்றதை முதல்ல படமா எடுங்க அஸிஸ்டென்ட்ஸ். இங்கிலீஷ் படத்துல இருந்து  கதையை சுடுறது.. பாட்டை சுடுறதுன்னு போய் இப்ப பதிவர்கள் கதைகளையே சுட ஆரம்பிச்சுட்டீங்க. சொந்தமா யோசிச்சு ஒரு நல்ல கதையோட வாங்க நானே அதை தயாரிக்கிறேன். நீங்க டைரக்டராகிடலாம். இப்ப எல்லாரும் கிளம்புங்க" டைரக்டர். இருந்தடென்சனில் சிகரெட்டை பற்ற வைத்தார் .



ஏதோ தெளிவு பிறந்தது போல் அஸிஸ்டென்ட் அங்கிருந்து சென்றனர். ஒரே ஒரு அஸிஸ்டென்ட் மட்டும் தனியாக வந்தான்.


"சார் நீங்க சொன்னது இப்ப தான் என் மரமண்டைக்கு ஏறுச்சு. இனி எதுவா இருந்தாலும் நானே யோசிக்கிறேன். ஆனா இப்ப எடுக்குறதுக்கு கணேஷ்னு ஒரு பதிவர் சியாமளான்னு ஒரு அருமையான கதை எழுதியிருக்கார். பாரின் லொக்கேஷனெல்லாம் இருக்கு. ம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க. ஆட்டைய போட்டுறலாம்" என்று காதில் கிசுகிசுக்க


"கெட் அவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்"  என கத்த ஆரம்பினார் டைரக்டர்
மேலும் வாசிக்க...

Monday, December 20, 2010

வெட்சி

வலைசரத்தில் என்னை எழுத அழைத்து பெருமைப்படுத்திய திரு சீனா
அவர்களுக்கு என் முதல் நன்றி. 

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி, என்னையும் பதிவரா மதித்து இத்தனை நாள் என் மொக்கைகளை படித்து பாராட்டிய ?! நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

ஆச்சு , ஒரு நாளிலேயே என் தொல்லை தாங்காமல் தவிக்கும் நீங்கள் அனைவரும்  இப்பொழுது ஒரு வாரம் என்னிடம் சிக்கி தவிக்கப் போவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதையே சாக்கா வச்சு ஒரு வாரம் இந்த பக்கம் வராம போனீங்கன்னா தொடர்ந்து ஒரு மாசம் வலைச்சரம் ஆசிரியரா இருக்க வேண்டி இருக்கும்.. ஸோ எல்லாரும் மரியாதையா தினமும் இங்க அட்டனன்ஸ் போட்டுடனும் ஆமா.


நான் முதலில் வணக்கம் சொன்னபோதே என் தமிழைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், எனக்கு தமிழ் வரும் ஆனா வராதுன்னு!.

என் தமிழ் தான் இப்படின்னு நினைக்காதீங்க , என் கணக்கு அதை விட தமாஷாக இருக்கும்.  இப்படிலாம் நான் உங்கள கொடுமை படுத்துறத தெரிஞ்சுண்டு நாற்பது கொள்ளையர்கள் என்னை கடத்தி நொந்து நூலா போய்ட்டாங்க!

விடுவோமா நாம?? இதுக்கே இப்படின்னா நான் வண்டி ஓட்டி அடித்த லூட்டி பற்றி படிச்சுட்டு நாலுபேர் ஐசியு வுல போய் சேர்த்துத்துட்டாங்கன்னா பார்த்துக்கோங்க.

அப்படியும் என் வெறி அடங்காம நான் கடிச்ச கடியில மூனு பேர் பதிவேழுதுவதையே விட்டுட்டாங்க!. சரி சரி சமாதானமா போகலாம்னுதான் பதிவுலக நண்பர்களை கொலுவுக்கு நட்சத்திரங்களின் வீட்டிற்கு அழைத்து சென்று மகிழ்வித்தேன் . அப்படியும் கொலைமுயற்சி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நான் எழுதுவதை விடுவதாய் இல்லை.. ஹா ஹா ஹா ஹா

ரொம்ப என்னை பற்றி சொல்லிடேனோ?? இருக்கட்டும் பயம் கொஞ்சம் வேணும்ல.

இன்னைக்கு இதுபோதும் நாளையிலிருந்து சில நல்ல பதிவர்களின் அருமையான கைவண்ணங்களை பற்றி பார்ப்போம்..

எல்லாரும் நிம்மதியா சந்தோஷமா இருக்க இறைவனை வேண்டிக்கொன்கிறேன் ! ( யார் அது அங்க ?? நீ எழுதறத நிறுத்து நாங்க சந்தோஷமா இருப்போம்ன்னு சொல்றது??  )

மேலும் வாசிக்க...

மாதவனுக்கு வாழ்த்துகளும் காயத்ரிக்கு வரவேற்பும்

நேற்றுடன் முடிவடைந்த வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் மாதவன் சிறந்த முறையில் பணியாற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 650க்கும் மேலாக மறுமொழிகள் பெற்று மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார். புதுமையாக பல்வேறு தலைப்புகளில் முற்றிலும் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி விடை பெறுகிறார். நண்பர் மாதவனை நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

இன்று துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் காயத்ரி. இவர்
"Just for laugh" என்னும் தளத்தில் எழுதி வருகிறார். நகைச்சுவைக்கென்றே இத்தளத்தினை வைத்திருக்கிறார். இவர் ஷார்ஷாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணினி மென் பொருள் துறையில் கலக்கி வருகிறார். இவரை வருக வருக என வரவேற்று வாழ்த்தி பொறுப்பினை ஏற்க அன்புடன் அழைக்கிறோம்.

நல்வாழ்த்துகள் மாதவன்
நல்வாழ்த்துகள் காயத்ரி

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Sunday, December 19, 2010

நன்றியுடன் பேசுவது.

அருமை நண்பர்களே.. ஒரு வார காலமாக, நான் எழுதி வந்ததை படித்துப் பார்த்து, சொல்லப் பட்ட கருத்துக்களையும், அந்தந்த வலைப் பதிவுலகையும் நீங்கள் படித்தி பயனடைந்திருப்பீர்கள், என நம்புகிறேன். மிகுந்த நன்றிகள், धन्यवाद (ஹிந்தி), thanks, ధన్యవాతములు ( தெலுங்கு ), ધન્યવાદ ( குஜராத்தி ), धन्यवाद ( மராத்தி ),....

அட.. எனக்கு மத்த  மொழிகளில்  நன்றி சொல்லத் தெரியாது.. ஆனா எல்லா மொழிளையும் சொல்ல ஆசை.. அதுக்குத்தான் இந்த வலைமனை (இது பிளாக் பக்கம் அல்ல, இருந்தாலும்....  அட, இப்பக் கூட ஒரு அறிமுகம்.. பழக்க தோஷம், விடுங்க..) இருக்குதே.. பாருங்க சமயத்துல உபயோகமா இருக்கும்.

அன்பின் 'சீனா'விற்கும், பி.எஸ்.வீ, வெங்கட் & கும்மி நண்பர்களுக்கும், எனது சிறப்பு நன்றிகள். எனது வலைப்பூவை பின்தொடர்பவர்களுக்கும் நன்றிகள்.
மேலும் வாசிக்க...

Saturday, December 18, 2010

கவிதையால் ஆன பயன்

) அசைபோடும் கவிதைகள் :
நண்பரொருவரு சொல்லுற கவிதைய என்னால உணர முடிஞ்சுது.. ஆனா, அவரோட காதலியால உணர முடியலைனு நெனைச்சு நெனைச்சே வருந்தறாரு. அவரு சொன்ன அந்தக் காதலி நீங்களா இருந்தா அவரோட மனசு விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அதான் அவருக்கு நல்லது.

வெகு சமீபத்தில் படிச்ச சூடான கவிதை 'கலாய்ப்பு' நிகழ்ச்சி, உங்கள் பார்வைக்காக. முதலாமவர் போட்ட காதல் கவிதைய, இரண்டாமவர் 'இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு.. அல்ல... அல்ல... அல்ல...", அப்படி சொல்லிட்டே பட்டைய கெளப்பினாரு. வல்லவனுக்கு வல்லவன் உண்டுங்கற மாதிரி அந்த ரெண்டாமவர, மூனாவதா ஒரு ஆளு அதே பாணில அதே டிஸ்கி போட்டு,  மொக்கிட்டாரு , படிச்சுப் பாருங்க.

சினிமால வந்த ரெண்டு மூணு கவிதைகளை சுவைபட படம் போட்டு சொல்லி இருக்காரு நண்பர் சரண் வெங்கட். இதுலே எனக்கு ரொம்பப் புடிச்சது நம்ம பன்னிகுட்டி ராம்சு.. சாரி.. சாரி.. ஆக்சுவல் கவுண்டர் சொன்னதுதான். கடைசியா சரம் வெங்கட் சொன்னாரு பாருங்க, அவரோட, காமெடி கவிதை .......சூப்பருதான்.
    ) ஆன பயன், யாதெனில் :
    வலைமனையில் நான் எழுத ஆரம்பித்து என்ன நன்மைகள் பெற்றேன் ? 'ஒண்ணுமில்லை, சரியாச்சொல்லன்னும்னா, நேரத்த வீணாக கழித்து, வீட்டிற்கு ஒரு உபயோகமும்செய்யுறதில்லை ', என்னோட மனைவியின் பதிலது. என்னைக் கேட்டால் அதைப் பத்தி ஒரு தொடர் பதிவே எழுதிடுவேன்.
    தமிழ்ல கிறுக்குகிற நண்பரொவர், வலைமனையினால் தான் புதிய நண்பர்கள் பெற்று, தன்னுடைய நட்பு வட்டாரம் விரிவடைந்தது என்று சொல்லுகிறார்.

    தமிழ், ஆங்கில மொழி மட்டும் அல்லாது கணினி மொழியும் தெரிந்த பலருள் இந்த 'இவனும் ஒருவன்' சொல்கிறார், நட்புமட்டுமின்றி மேலும் மூன்று பயன்கள் தனக்கு கிடைப்பதாக. நீங்கள் பெற்ற பயன் உங்களுக்கே வெளிச்சம்.
      ) இன்றைய நாயகர்
      • இந்த வலைப்பூவில் நண்பர் எஸ்.கே. அவர்கள் கணணி மென்பொருள் அடோப்ஃபிளாஷ் பற்றி, தொழில்நுட்பம் என்ற வரிசையில் எழுதி இருக்கிறார். பொறுமையாக அது பற்றி பகிர்ந்தமைக்கு நாம் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளோம். நீங்கள்  சென்று பார்த்து, படித்து பயன்  பெற வேண்டி அவரை இங்கு சிறப்பு வரிசையில் அறிமுகம் செய்கிறேன். படத்தோடு உள்ள தொடர்பு, புரிகிறதா ? பின்னூட்டத்தில் சொல்லவும். 
      PS  -  ஒரு தகவல்....
      கையால் எழுதும் முறை மட்டுமே இருந்த காலத்தில்.. எழுதியவற்றில், ஏதாவது விட்டுப் போயிருந்தால், கடைசியில் அதைப் பற்றி குறிப்பிடுவதுண்டு. அதை, போஸ்ட் ஸ்க்ரிப்ட் (பி.எஸ்.) என்பர் (ஹி.. ஹி.. 'பின்குறிப்பு' .. நம்ம பில்ட் அப் எப்புடி ?). அதேபோல நான், வலைச்சரத்தில் எழுதுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே எல்லா பதிவுகளையும் எழுதி தயார் நிலையில் வைத்திருந்தேன். அவற்றைத்தான், கடந்த ஏழு நாட்களாக, நீங்கள் படித்தது (மகிழ்ந்தது !). அன்றைய தினத்தில், இன்றைய 'கும்மி' வலைப்பூ பிறந்திருக்கவில்லை. ஆதலால், அதனை பற்றி சொல்ல இயலவில்லை. ஆகவே பி,எஸ் ஆக இங்கு சொல்லி இருக்கிறேன்.
      கும்மியில்  வந்த இடுகைகளுக்குள் எனக்கு மிகவும் பிடித்த மூன்று பின்வருவன...

      1. கும்மிஎன்றால் என்ன?..  அட இதுதான்
      2. எதிர்பார்ப்பு பற்றி  வந்ததிது.
      3. கும்மி மக்களைப் பற்றிய இலக்கணம் மாறாத குறள் வெண்பாக்கள்

      ... நன்றி ! மத்ததலாம் எப்பவேனாலும் பேசிக்கலாம் இங்க இருப்பேன் நான்

          மேலும் வாசிக்க...

          தமிழ் மணத்தில் - தற்பொழுது