07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 2, 2010

கதம்பம் மூன்று...

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்

அட நம்ம பதிவர்கள் நல்லாவே 2 நாளாக ஆடறாங்க போல இருக்கே! சரி நம்பிக்கையுடன் மேலும் சில பதிவர்களை இன்று களமிறக்குகிறேன்.

(பல்சுவை) பாரிஜாதம்:
ரோஜா பூந்தோட்டத்திற்கு போனேன், என்ன அழகா வளர்த்து இருக்காங்க மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர். மாணவ பருவத்திற்கே உரிய நக்கலும் நையாண்டியும் இவர்கள் பதிவுகளில் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவிற்கு சாதிக்க வேண்டும் என்ற வெறியும் இவர்கள் எழுத்தில் காணமுடிகிறது.

சூரியகாந்தி (சமூகப்பார்வை):
நாம் சிறு வயதில் பார்த்து ரசித்த தெருக்கூத்து கலையின் இன்றைய நிலையை விவரிக்கிறார் தமிழாசிரியர் தி.பரமேசுவரி. சரளமான எழுத்து நடை ஒரு தமிழாசிரியருக்கு வருவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது தமிழில்.


(கவிதை) ரோஜாக்கள்:
தன் கவிதை தமிழால் நம் இதயத்தில் சாரல் அடிக்க வைக்கிறார் தமிழ்காதலன். எங்கிருந்துதான் பிடிக்கிறாரோ சில தமிழ் வார்த்தைகளை... அவ்வளவும் அருமை


(கதை சொல்லும்) காந்தள்:
நன்றாகவே யோசித்து கதை எழுதுகிறார் இந்த யோசிப்பவர் (அட, இவர் பேருதாங்க யோசிப்பவர்). டைம் டிராவலை மையமா வெச்சி எழுதி இருக்குற சற்றே பெரியதான இந்த சிறுகதை முடிவு வித்தியாசமாவே இருக்கு.


(அனுபவ) அல்லி:
ஒரு அடிப்பட்ட அணில் எப்படி தன்னுள் மனிதத்தை துளிர்க்க வைத்தது என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கிறார் விஜய். கவிதைகளில் தான் கலக்குவார் என எதிர்பார்த்து போனால் இப்படி ஒரு அனுபவத்தின் மூலம் மனிதத்தை உணர்த்துகிறார்.


வாடா மல்லிகை (திரைப்படங்கள்):
அழகாய் திரைவிமர்சனங்கள் எழுதுவதில் பிரபாகரும் ஒருவர். தனக்கு பிடித்த காட்சி, கதாநாயகன், நாயகியின் நடிப்பு, இயக்கம், ரசிகனின் பார்வை என வகைப்படுத்தி ஒவ்வொரு திரைப்படத்தையும் விவரிக்கிறார். நந்தலாலா படத்திற்கு என்ன பரிந்துரை வழங்குகிறார் பாருங்கள்.

தாமரை (சிரிப்பு):
சரி உங்களுக்கு ஒரு கேள்வி - உயிர்னா என்ன? இப்படி ஒரு கேள்வியை உங்கள் குழந்தை கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டி முழிக்கிறார் நம்ம பாபு. மத்தவங்களை இவர் கொஞ்சம் நஞ்சமாவா இம்சை செஞ்சாரு! இவருக்கு இது தேவைதான்.


(எப்பொழுதாவது எழுதும்) குறிஞ்சி:
எப்பொழுதாவது எழுதினாலும் உருப்படியாய் எழுதுகிறார். இந்த சோலைஅழகுபுரத்திற்கு சென்றால் நீங்கள் உங்கள் கவலையை சிறிது நேரமாவது ஒதுக்கிவைப்பது உறுதி. நன்றாக சிரிக்கவைக்கிறார். தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.

அப்பாடி, 3 நாள் பேட்டிங் முடிஞ்சது. நல்லா ஸ்கோர் பண்ணி இருக்கேன்னு நினைக்கிறேன். நாளைல இருந்து பெளலிங் ஆரம்பிக்கலாம்.

ஆங்... கேட்க மறந்துட்டேனே.....

ஒரு டவுட்டு: டூர் போறவங்களை டூரிஸ்ட்டு சொல்லலாம், டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா? - கேட்டது சாட்சாத் டெரர் பாண்டியனேதான்.


111 comments:

 1. நல்ல வாசமுள்ள மலர்கள்தான்..!!

  ReplyDelete
 2. அருமையான அறிமுகங்கள்.. இதுல நிறைய எனக்குத் தெரியாத பதிவர்களாவே இருக்காங்க.. உடனே பாத்து ஃபாலோயர் ஆயிடறேன்..

  ReplyDelete
 3. ரெண்டு மூணு பேர் தெரிஞ்சவங்க தான்... மிச்சவங்கள பாத்துடறேன்..

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள்.. தொடருங்கள்..

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள்.....

  தெரியாத பலர் தெரிந்துக்கொண்டேன்

  ReplyDelete
 6. ரோஜா பூ தோட்டம் வழியா போன்னேன் அன்பேன்று கொட்டுகிறது முரசு, இதயசரல் தூவும் நேரம், கவிதை எழுத தோன்றியது, விஜயம் கவியதாக, ஏதோ தத்துபித்துவை உளறி கொண்டு, இம்சை செய்து கொண்டு, சோலை அழகு புரத்தில்,டெரர்ராக சென்றேன்

  ReplyDelete
 7. அழகு மலர்களால் தொடுக்கப்பட்ட கதம்ப மாலை.

  ReplyDelete
 8. அருமையான அறிமுகங்கள்.

  ReplyDelete
 9. @ செளந்தர்

  அட கவிதை கவிதை.... கும்மி குரூப் இங்க வந்து என்னனு கேளுங்க செளந்தரை

  ReplyDelete
 10. அறிமுகங்கள் நன்று. குறிப்பா டெரர் டவுட்டு சூப்பர்

  ReplyDelete
 11. ரைட்டு .......... இரு எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்துட்டு வர்றேன்

  ReplyDelete
 12. எனக்கு அனைவரும் புதியவர்கள்.

  ReplyDelete
 13. அருண் டெர்ரர் டவுட் மட்டும் கிளியர் பண்ணிடுங்க!!

  ReplyDelete
 14. நிறைய எனக்கு தெரியாத பதிவர்களை தெரிந்து கொண்டேன்.பேட்டிங் அருமை.

  ReplyDelete
 15. சுருக்கமா அறிமுகப்படுத்தினாலும் நச்சுனு விளக்கம் குடுத்துருக்கீங்க..
  அட.. அது யாருப்பா கடைசி அறிமுகம்..?
  நம்ம டெரரா???
  பாருடா...

  ReplyDelete
 16. நல்ல அறிமுகங்கள் அருண். பார்த்துவிடுகிறேன்.

  ReplyDelete
 17. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 18. நீங்கள் எழுதும் விதம் அருமை...
  நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 19. என்னை அறிமுக படுத்தியதற்கு ரொம்ப நன்றி அருண் மக்கா ..............

  ReplyDelete
 20. நல்ல அறிமுகங்கள்!
  அதுவும் கடைசி அறிமுகம் fantastic!

  ReplyDelete
 21. @ஆல் ரவுடி கும்மிஸ்

  என்ன்ன்ன்ன்ன கமெண்ட் ஏரியா காத்து வாங்குது?? :) இப்பொ பேரேன்.. திருப்பி ஒரு மணி நேரம் அப்புறம் வருகிறேன்.. :)

  ReplyDelete
 22. மிக அருமையான கதம்ப மாலை
  வாழ்த்துகக்ள்

  www.samaiyalattakaasam.blogspot.com

  ReplyDelete
 23. //டூர் போறவங்களை டூரிஸ்ட்டு சொல்லலாம், டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா? //

  நிச்சயமாக முடியாது ............
  சிரிப்பு போலீஸ் வைச்சிக்கிட்டு அந்த போலீஸ் சிரிகாம மூஞ்சிய உம்ம்னு வைசிருப்பாறு ஆனா பேரு சிரிப்பு போலீஸ் . ......
  பன்னிகுட்டி ராமசாமி கைல பன்னி குட்டியா வைசிருக்காறு........
  இம்சை அரசன் பாபு ன்னு வச்சிக்கிட்டு ....அமைதியா சாந்தமா ஒரு பய புள்ள சுத்துது ......
  வாரியர் வைசிகிட்டு ஒருத்தர் போர் களமே பார்த்தது கிடையாது ...........
  ரசிகன் ஒருத்தர் பேர் வைசிகிட்டு போஸ்டர் பார்த்து விமர்சனம் பண்ணுறாரு ........
  சுற்றுலா விரும்பி ஒருத்தர் அவர் சுற்றுலா செல்லாமலே காலேஜ் பொண்ணுகளே பத்தி எழுதுறாரு ....
  சூரியனின் வலை வாசல் சொல்லிட்டு ........இந்த வலைலதான் பதிவு எழுதுறாரு (internet ),சூரியன்லயா பதிவ எழுதுறாரு .........

  அதே மாதிரி என் அன்பு நண்பன் டெர்ரர் பேரு தான் அப்படியே தவிர நல்ல பண்பாளர் ,பாசம் உள்ளவரு,இறக்கம் உள்ளவரு ....என்ன அநியாயம் நடந்த தட்டி கேட்பார் .அவ்வளவு தான்

  ReplyDelete
 24. இம்சைஅரசன்...இங்க ஏற்கனவே அருண் பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கார்...நீங்க வேற வந்து பதிவர்களை அறிமுகம் செய்றிங்க...உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் அப்போது வந்து அறிமுகம் செய்யுங்கள்

  ReplyDelete
 25. பெரும்பாலான பிளாக்கில் ஏற்கனவே பாலோயர்தான்! மிச்சமிருந்ததிலும் ஃபாலோயர் ஆகிவிட்டேன்!

  ReplyDelete
 26. ரொம்ப முரட்டுத்தனமா இருக்கு அறிமுகம் எல்லாம்....!

  சூப்பர் தம்பி....போய்கினே இரு...!

  ReplyDelete
 27. நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 28. நல்ல அறிமுகங்கள்..
  தொடருங்கள் அருண்..!!

  ( வலைசரத்தில் என்னை கலாய்க்க
  வேண்டாம் என்று அருண் கண்ணீர் விட்டு
  கதறி அழுததால்., வேறு வழி இல்லாமல்
  இப்படி கமெண்ட் போடுவோர் சங்கம்.. )

  ReplyDelete
 29. //வெங்கட் said...

  நல்ல அறிமுகங்கள்..
  தொடருங்கள் அருண்..!!

  ( வலைசரத்தில் என்னை கலாய்க்க
  வேண்டாம் என்று அருண் கண்ணீர் விட்டு
  கதறி அழுததால்., வேறு வழி இல்லாமல்
  இப்படி கமெண்ட் போடுவோர் சங்கம்.. )
  //

  சூப்பர் கமென்ட், வெங்கட்!

  (எங்க யாராவது கலாய்ப்பாங்களோன்னு பயந்து வலைச்சர ஆசிரியர் பதவியே வேண்டாம்னு சொல்லுவோரை மட்டும் பாராட்டுவார் சங்கம்)

  ReplyDelete
 30. விஜய் அண்ணன் மற்றும் இம்சை அண்ணனை தவிர மற்றவர்கள் புதிது பார்கிறேன் அண்ணா ..!!

  ReplyDelete
 31. வலைசரத்தில் என்னை கலாய்க்க
  வேண்டாம் என்று அருண் கண்ணீர் விட்டு
  கதறி அழுததால்., வேறு வழி இல்லாமல்
  இப்படி கமெண்ட் போடுவோர் சங்கம்..//


  ஐ, இந்த சங்கத்துல நானும் சேரரேன்....

  ReplyDelete
 32. //அப்பாடி, 3 நாள் பேட்டிங் முடிஞ்சது. நல்லா ஸ்கோர் பண்ணி இருக்கேன்னு நினைக்கிறேன். நாளைல இருந்து பெளலிங் ஆரம்பிக்கலாம்.//
  இது என்ன டெஸ்ட் மேட்சா?

  ReplyDelete
 33. ரோஜாப் பூந்தோட்டம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 34. இது என்ன டெஸ்ட் மேட்சா?//

  அட மேட்ச்னா பௌலிங் பாட்டிங் எல்லாம் சேந்து தான பண்ணுவாங்க? அருண் அண்ணனுக்கு இது கூட தெரிலயே.... அடடா

  ReplyDelete
 35. அன்பென்று கொட்டு முரசே! பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 36. இதயச்சாரல் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 37. கதை எழுதுகிறேன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 38. விஜய் கவிதைகள் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 39. பிரபாகரனின் தத்துபித்துவங்கள் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 40. இம்சை அரசன் பாபு பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 41. கதை எழுதுகிறேன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.//

  இதுக்கு பேறு தான் template பின்னூட்டமா?

  ReplyDelete
 42. வலைச்சரம் ஆசிரியர் அருண் பிரசாத் அவர்களுக்கும், அவரின் குழுவினருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
  அதுவும் பல்சுவை பாரிஜாதமாக எங்களை அறிமுகப்படுத்தியது, எங்களுக்கான அடையாளத்தை நாங்களே உணர்ந்துக்கொள்ள உதவியது.

  தங்களின் அறிமுகம், எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
  வலைச்சரத்தின் கதம்பம்-2 அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 43. சோலை அழகுபுரம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 44. TERROR-PANDIAN (VAS) பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 45. வலைச்சர ஆசிரியர் அருண்பிரசாத் அவர்களுக்கு நன்றிகள்! நல்ல பிளாக்குகளை அறிமுகம் செய்யும் தாங்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்!

  ReplyDelete
 46. அனைத்து இளம் பதிவர்கள்,அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 47. அறிமுகம் அட்டகாசம் கலக்குங்க..

  ReplyDelete
 48. வலைச்சரம் நிர்வாகத்தினருக்கு நன்றிகள்! பல்வேறு பிளாக்கர்களுக்கு வாய்ப்பளித்து பல்வேறு வலைப்பூக்களை அனைவரும் அறிய செய்வதற்காக மிக்க நன்றிகள்! தாங்கள் மென்மேலும் மேன்மை பெறவும்!

  ReplyDelete
 49. //ரோஜாப் பூந்தோட்டம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.//  வாழ்த்திய எஸ்.கே. அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டம் சார்பில்,அழகிய முள் இல்லாத ரோஜாவை பரிசளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்..

  ReplyDelete
 50. //வலைச்சர ஆசிரியர் அருண்பிரசாத் அவர்களுக்கு நன்றிகள்! நல்ல பிளாக்குகளை அறிமுகம் செய்யும் தாங்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்!

  //

  ReplyDelete
 51. தினம் இங்கு வந்து தினமும் கமெண்ட்கள் போட்டும் புதிய வலைப்பூக்களை அறிமுகம் செய்வதில் ஊக்கமும் உற்சாகமும் தந்து பல நல்ல வலைப்பூக்களை ஏற்று அதனை பின்தொடரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! தாங்கள் அனைவரும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்!

  ReplyDelete
 52. தாங்கள் அனைவரும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்!//


  எத்தன மேன்மை... சரி நானும் சொல்றேன்....
  எல்லாரையும் வாழ்த்திய எஸ்.கே அண்ணனுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 53. நல்ல அறிமுகங்கள்..

  தொடருங்கள் அருண் :))

  ReplyDelete
 54. என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 55. நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 56. நன்றி அருண் பிரசாத். உங்கள் அறிமுகம் சோர்ந்திருக்கும் என் மனத்தை மயிலறகாய் வருடுகிறது. மட்டுமல்லாமல் இன்னும் எழுதத் தூண்டும் கிரியா ஊக்கியாய் இருக்கிறது. என்னோடு அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கு என் வாழ்த்துகள். குறிப்பாக, மாணவிகளின் வலைப்பூ ஒரு ஆசிரியராய் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவர்களுக்கு என் அன்பு. என் மாணவர்களுக்கும் இதை அறிமுகப் படுத்துவேன்.

  ReplyDelete
 57. நன்றி அருண் பிரசாத். உங்கள் அறிமுகம் சோர்ந்திருக்கும் என் மனத்தை மயிலறகாய் வருடுகிறது. மட்டுமல்லாமல் இன்னும் எழுதத் தூண்டும் கிரியா ஊக்கியாய் இருக்கிறது. என்னோடு அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கு என் வாழ்த்துகள். குறிப்பாக, மாணவிகளின் வலைப்பூ ஒரு ஆசிரியராய் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவர்களுக்கு என் அன்பு. என் மாணவர்களுக்கும் இதை அறிமுகப் படுத்துவேன்.

  ReplyDelete
 58. //சூப்பர் கமென்ட், வெங்கட்!

  (எங்க யாராவது கலாய்ப்பாங்களோன்னு பயந்து வலைச்சர ஆசிரியர் பதவியே வேண்டாம்னு சொல்லுவோரை மட்டும் பாராட்டுவார் சங்கம்)///

  இது எனக்கு பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 59. சூரியனின் வலை வாசல்ல்ன்னு மட்டமான பிளாக் இருக்காமே. அதை படிக்க வேணாம்னு எல்லோர்கிட்டயும் சொல்லிடுங்க. மக்கள் பயந்திட போறாங்க

  ReplyDelete
 60. //அட நம்ம பதிவர்கள் நல்லாவே 2 நாளாக ஆடறாங்க போல இருக்கே! சரி நம்பிக்கையுடன் மேலும் சில பதிவர்களை இன்று களமிறக்குகிறேன்.//

  பாத்து இறக்கி விடுங்க. மழை பெஞ்சு சேரும் சகதியுமா இருக்கு...

  ReplyDelete
 61. //மண்ணுக் குள்ளே சிலமூடர்//

  மச்சி self introduction ஆ?

  ReplyDelete
 62. //ரோஜா பூந்தோட்டத்திற்கு போனேன், என்ன அழகா வளர்த்து இருக்காங்க/

  தண்ணி ஊத்துனா அதுவே வளருமே...

  ReplyDelete
 63. //ஆனால், இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது தமிழில்.//

  ஆமா முதல் போய் தமிழ் கத்துகிட்டு வாங்க. அப்படியே டெரரையும் கூப்டு போங்க

  ReplyDelete
 64. //தன் கவிதை தமிழால் நம் இதயத்தில் சாரல் அடிக்க வைக்கிறார் தமிழ்காதலன்.//

  குடை கொண்டு போகலியா?

  ReplyDelete
 65. //இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டி முழிக்கிறார் நம்ம பாபு.///

  இந்த pathivarai எனக்கு ரொம்ப நாளா தெரியும். இந்த ஆள் கிட்ட இருந்து முதல்ல தப்பிக்கணும்.

  ReplyDelete
 66. //டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா?//

  வேணாம் தற்கொலை முயர்ச்சின்னு சொல்லலாம்...

  ReplyDelete
 67. அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 68. //எப்பொழுதாவது எழுதினாலும் உருப்படியாய் எழுதுகிறார்///

  அப்டின்ன நீ இதுவரைக்கும் ஒருப்படியா எதுவும் எழுதல. அப்படித்தான?

  ReplyDelete
 69. என்ன ரமேஷ் சார்! வந்தவுடனே கமெண்ட் மழையா!

  ReplyDelete
 70. //பிரியமுடன் ரமேஷ் said...

  அருமையான அறிமுகங்கள்.. இதுல நிறைய எனக்குத் தெரியாத பதிவர்களாவே இருக்காங்க.. உடனே பாத்து ஃபாலோயர் ஆயிடறேன்..///

  அப்படியே அருண் ப்ளாக் ல இருந்து unfollow பண்ணிடுங்க.

  ReplyDelete
 71. // சௌந்தர் said...

  இம்சைஅரசன்...இங்க ஏற்கனவே அருண் பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கார்...நீங்க வேற வந்து பதிவர்களை அறிமுகம் செய்றிங்க...உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் அப்போது வந்து அறிமுகம் செய்யுங்கள்///

  அசிங்கப்பட்டான் இம்சை...

  ReplyDelete
 72. //எஸ்.கே said...

  என்ன ரமேஷ் சார்! வந்தவுடனே கமெண்ட் மழையா!///

  hehe

  ReplyDelete
 73. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //அட நம்ம பதிவர்கள் நல்லாவே 2 நாளாக ஆடறாங்க போல இருக்கே! சரி நம்பிக்கையுடன் மேலும் சில பதிவர்களை இன்று களமிறக்குகிறேன்.//

  பாத்து இறக்கி விடுங்க. மழை பெஞ்சு சேரும் சகதியுமா இருக்கு...//

  அதுவரை என்னை களமிறக்காத கேப்டன் அருணின் போக்கினை.. கண்டித்து
  இன்று இரவு 10 மணி முதன் நாளை காலை 8 மணி வரை, நான் உண்ணா விரதம் இருந்து எனது எதிர்ப்பினை அனுசரிக்கப் போகிறேன்..

  உங்களால் (அருண் உள்பட) முடிந்தால் நீங்களும் இருக்கும் இடத்திலேயே உங்கள் உள்ளூர் நேரப் படி
  இன்று இரவு 10 மணி முதன் நாளை காலை 8 மணி வரை உண்ணாவிரதமிருந்து உங்கள் ஆதரவினை
  தெரிவுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....

  பின் குறிப்பு : தேவைப் பட்டால்.. நாளையும் இதே மாதிரி போராட்டம் தொடரும்..

  ReplyDelete
 74. சரிங்க மாதவன் உங்க வேண்டுகோளுக்கு இணங்க இன்று நல்லா சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதத்தை தொடங்கி விட்டேன்!

  ReplyDelete
 75. வரவேற்க்க தக்க தளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்........

  ReplyDelete
 76. நல்ல பதிவர்களின் அழகான அறிமுகங்கள்.
  நல்லா ஆடு(றி)ங்க!!!

  ReplyDelete
 77. அறிமுகத்திற்கு மிக்க நன்றி, அருண் பிரசாத்.

  ReplyDelete
 78. சிறப்பான அறிமுகங்கள். நிரைய முகங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.
  நன்றி.

  ReplyDelete
 79. @பன்னிகுட்டி

  ஹேய் Funny குட்டி... நமக்கு லீவ் விட்டா இந்த பசங்களும் ஒ.பி அடிக்கிறானுங்க. ஒன்லி 83 கமெண்ட்? ஆட்டம் செல்லாது... :)

  ReplyDelete
 80. @அருண்

  //பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்//

  அப்பொ ஆணுக்கு வைக்கலையா?? இது பெண்ணாதிக்கம்... :)

  ReplyDelete
 81. @ரமேஷ்

  //மண்ணுக் குள்ளே சிலமூடர்//

  ரமேஷை இப்படி மறைமுகமா திட்டற வேலை வேண்டாம்.. என் நண்பன யார் திட்டினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். நானும் கூட சேர்ந்து திட்டுவேன்...

  ReplyDelete
 82. @அருண்

  //அட நம்ம பதிவர்கள் நல்லாவே 2 நாளாக ஆடறாங்க போல இருக்கே! //

  அவங்க எங்க ஆடறாங்க. அவங்க பேர சொல்லி நீ தான் இங்க 3 நாள தொம்மு தொம்முனு குதிக்கிற... :)

  ReplyDelete
 83. @அருண்

  // மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்.//

  ஹும்.. ஸ்கூலுக்கு போகாம ப்ளாக் எழுதறாங்களா? அவங்க டீச்சர்கிட்ட மாட்டிவிடனும்... :))

  ReplyDelete
 84. //அவங்க எங்க ஆடறாங்க. அவங்க பேர சொல்லி நீ தான் இங்க 3 நாள தொம்மு தொம்முனு குதிக்கிற..//
  அதுக்கு சிறந்த மாஸ்டர்கள் இங்க இல்லையே அதான்!

  ReplyDelete
 85. // TERROR-PANDIYAN(VAS) said...
  @அருண்

  // மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்.//

  ஹும்.. ஸ்கூலுக்கு போகாம ப்ளாக் எழுதறாங்களா? அவங்க டீச்சர்கிட்ட மாட்டிவிடனும்... :))
  //
  நாளைய எழுத்தாளர்களை, பிரபல பதிவர்களை உருவாக விடாமல் தடுக்காதீர்கள்!

  ReplyDelete
 86. @எஸ்.கே

  //அதுக்கு சிறந்த மாஸ்டர்கள் இங்க இல்லையே அதான்!//

  அட!! எஸ்.கே இன்னைக்கு நல்லா விள்ளாடி இருக்கிங்க. எனக்கு ஒரு டவுட் ”என்ற வெறியும் இவர்கள் எழுத்தில் காணமுடிகிறது.” அப்படினு அருண் சொன்னாரே. வெறி அதிகமாகி நம்மள கடிச்சி வச்சிட மாட்டாங்களே?

  ReplyDelete
 87. // TERROR-PANDIYAN(VAS) said...
  @எஸ்.கே

  //அதுக்கு சிறந்த மாஸ்டர்கள் இங்க இல்லையே அதான்!//

  அட!! எஸ்.கே இன்னைக்கு நல்லா விள்ளாடி இருக்கிங்க. எனக்கு ஒரு டவுட் ”என்ற வெறியும் இவர்கள் எழுத்தில் காணமுடிகிறது.” அப்படினு அருண் சொன்னாரே. வெறி அதிகமாகி நம்மள கடிச்சி வச்சிட மாட்டாங்களே?
  //

  கரெக்டுதான்! எதுக்கும் தடுப்பூசி போட்டுக்க வேண்டியதுதான்!

  ReplyDelete
 88. @அருண்

  //இன்றைய நிலையை விவரிக்கிறார் தமிழாசிரியர் தி.பரமேசுவரி.//

  எங்க மாட்டிவிடறது. டீச்சரே இங்க தான் இருக்காங்க.. :)) .

  (டீச்சர் டீச்சர் நான் சும்மா விள்ளாட்டுக்கு தான் சொன்னேன். கோவப்பட்டு என்னை முட்டி போட சொல்லிடாதிங்க.)

  ReplyDelete
 89. நாளைக்கு பவுலிங் கபில்தேவ் மாதிரி போடுவாரா, ஹர்பஜன் மாதிரி போடுவாரா?

  ReplyDelete
 90. //டூர் போறவங்களை டூரிஸ்ட்டு சொல்லலாம், டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா?//
  டெரர் சார் செல்வா மொக்கை படிச்சு இப்படி ஆயிட்டீங்களா?

  ReplyDelete
 91. @அருண்

  //தமிழ்காதலன்.//

  எப்பொ கல்யாணம்?

  //எங்கிருந்துதான் பிடிக்கிறாரோ சில தமிழ் வார்த்தைகளை...//

  அதோ அந்த காட்டுகுள்ள மேஞ்சிகிட்டு இருக்கு பாரு. அங்க இருந்து தான் பிடிச்சி வராரு.. :))

  ReplyDelete
 92. ஸ்கோர்:
  முதல் நாள் - 87
  இரண்டாம் நாள் - 118
  மூன்றாம் நாள் - 100ஆக்க நானும் டெரரும் ஆடி வருகிறோம்!

  ReplyDelete
 93. @அருண்

  //ஒரு அடிப்பட்ட அணில் எப்படி தன்னுள் மனிதத்தை துளிர்க்க வைத்தது//

  ஆனா நமக்கு மட்டும் பிராணிகளை பார்த்தா நாக்குல தான் நீர் துளிர்க்க வைக்குது.. :(

  ReplyDelete
 94. @அருண்

  //. நந்தலாலா படத்திற்கு என்ன பரிந்துரை வழங்குகிறார் பாருங்கள்.//

  பரிந்துரை எல்லாம் சரி. டிக்கட் வழங்கராரா?? :)

  ReplyDelete
 95. @அருண்

  //சரி உங்களுக்கு ஒரு கேள்வி - உயிர்னா என்ன?//

  இப்பொ நீ எடுக்கறியே அதான்... :(


  (வெகு நேரம் காத்திருந்தும் இந்த எஸ்.கே 100வது கமெண்ட. வடை வாங்க வரவில்லை..)

  ReplyDelete
 96. @அருண்

  // நாளைல இருந்து பெளலிங் ஆரம்பிக்கலாம்.//

  ஆரம்பிங்க சார்... அப்பொதான் நாங்க அடிக்க சரியா இருக்கும்... :))

  ReplyDelete
 97. எனக்கு வடை மீது ஆசையில்லை! அதனால்தான் 100வது கமெண்ட் போடவில்லை!

  ReplyDelete
 98. // TERROR-PANDIYAN(VAS) said...
  @அருண்

  // நாளைல இருந்து பெளலிங் ஆரம்பிக்கலாம்.//

  ஆரம்பிங்க சார்... அப்பொதான் நாங்க அடிக்க சரியா இருக்கும்... //
  3 நாளா அதுதானே நடந்துகிட்டு இருக்கு!

  ReplyDelete
 99. @அருண்

  //டூர் போறவங்களை டூரிஸ்ட்டு சொல்லலாம், டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா? //

  இப்படி ஒரு கேள்வி கேட்டதுக்கு. அவனே போய் ஆப்பிரிக்கா காட்டுல இருக்க அனக்கோண்டா வாய திறந்து அதுக்குள்ள படுத்துக்கலாம்.. :(

  ReplyDelete
 100. டெரர் உங்க சிறப்பம்சம் பற்றி அருண் சொல்லவே இல்லையே!

  ReplyDelete
 101. @எஸ்.கே

  //3 நாளா அதுதானே நடந்துகிட்டு இருக்கு!//

  அது பௌலிங் போடறோம் சொல்லி பாலால் அடிச்சது. இப்பொ பேட்டால நல்லா சாத்து சாத்து சாத்தலாம்...

  நெட் ரொம்ப ஸ்லோ.. அதனால கிளம்பறேன்... குட் நைட் எஸ்.கே.. :)

  ReplyDelete
 102. குட் நைட் டெரர்! இனிய கனவுகள் மலரட்டும்!

  ReplyDelete
 103. @அருண்

  //டெரர் உங்க சிறப்பம்சம் பற்றி அருண் சொல்லவே இல்லையே!//

  அவன் என்ன வச்சிகிட்டா வஞ்சனை பண்றான். அப்படி எதாவது இருந்தா சொல்லி இருக்க மாட்டானா? இப்படி பொதுமக்கள் முன்னாடி கேள்வி கேட்டு மானத்த வாங்கிட்டிங்களே... :)

  ReplyDelete
 104. மீ தி பிரஸ்ட்..........
  சொல்லாம்னு பாத்தா
  கொஞ்சம் லேட்..

  வாழ்த்துக்கள் அண்ணே..
  கலக்குறீங்க..

  வலைசரத்தை கலக்கி வரும் அருண் அண்ணன் வாழ்க

  எங்கள் தங்க தலைவர்
  அகில உலக மெகா கவி
  அண்ணன் டெரர் பாண்டியன் வாழ்க
  அண்ணன் டெரர் பாண்டியன் வாழ்க
  அண்ணன் டெரர் பாண்டியன் வாழ்க

  ReplyDelete
 105. நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 106. அன்பு நண்பர் அருணுக்கு அன்பில் தமிழ்க்காதலனின் வணக்கங்கள். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. என் போன்ற இளம் எழுத்தாளர்களை இனம் கண்டு அறிமுகப்படுத்தும் உங்கள் இலக்கியப் பணி பாராட்டுக்குரியது. தொடருங்கள். "இதயச்சாரல்" என்ற எமது வலைப் பூவின் அறிமுகத்துக்கும், உங்களின் கருத்துக்கும் எனது நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது