கணக்குக் கதையோடு விளையாட்டு.
➦➠ by:
மாதவன்
எனக்கு கணக்கு பண்ணுறது ரொம்ப புடிக்கும். அட, நா சொன்னது மேதமடிக்ஸ்.. அதான்.. நம்பருலாம் வருமே அது. தேவியக்கா, ஒரு கணக்கு சரியாப் போட சொல்லிட்டு அவங்களே மறந்து போயிட்டாங்களாம். நா, விடை சொன்னதுக்கு அப்புறம்தான் அவங்களுக்கே தான் கணக்கு புதிர் போட்டது ஞாபகம் வந்துச்சின்னு சொன்னாங்க. சரியாச் சொன்னாலும், பரிசு தரலை, அவங்க.
எண்களை கண்டுபிடித்ததாலேயே ராமானுஜம் உலகப்புகழ் பெற்றார், என்று ஆரம்பித்து ஒரு ஆறு இலக்க என்னை கண்டு பிடிக்கச் சொல்கிறார் ஸ்ரீதேவி, இங்கு. முயற்சி பண்ணிப் பாருங்க சார் / மேடம், சுலபம்தான். அத்தோடவிடலை.. அவரு கொறஞ்ச வேலைக்கு அரிசி விக்குறாரு .. அதுல ஒரு சின்ன பிரச்சனை வந்துடிச்சாம்.. அத நம்மள கண்டுபிடிக்கச் சொல்லுறாரு.. என்ன டீலா நோ டீலா ?
இப்பலாம் ஒரு கோடி, ரெண்டு கோடிலாம் சப்ப மேட்டரு.. ஆயிரக் கணக்கான கோடிலாம் சகஜமா புழங்குது மக்களோட பேச்சுல. அதுனால மிகப் பெரிய நம்பர வெறும் 5 -- 50 -- 500 ஆல வகுக்கத் தெரிஞ்சா போதாது.. 550500 ஆல வகுப்பதற்கு ஒரு எளிய முறை சொல்லுறாரு. செல்வகுமார் ( மொக்கை செல்வா. இல்லீங்க ).. இவரு சினிமா சம்பந்தப் பட்டவரு, ஏப்ரல் 2010 க்கு அப்புறம் அவரு எழுதினதா தெரியல.. நாமலாம் அங்கிட்டு போயி பின்னூட்டமழை பெஞ்சு அவர எழுப்பணும் போல.
நம்மளோட இயந்திர வாழ்க்கைல, வீட்டில் குழந்தைகள் கதை சொல்லச் சொல்லி நம்மளகேட்டா நாமா பேந்தப் பேந்த முழிக்க வேண்டாம், நா சொல்லுற வலைப்பூக்களை, படிச்சா..
இவரு பல விஷயங்களை சொல்லுறாரு.. உங்களுக்கு எது புடிக்குதோ அதப் படிங்க.. அனாலும் அவரு சொல்லுற பஞ்ச தந்திரக் கதை, முல்லா, அக்பர் பீர்பால், ஜென் கதைகள முடிஞ்ச வரைக்கும் படிச்சு ஒங்களோட கொழந்தைங்களுக்கு சொல்லுங்க.. என்னது ஒங்களுக்கு புள்ளை குட்டி கெடையாதா ? அதனாலென்ன, ஒங்க அண்ணன், அக்கா, புள்ளைங்களுக்கு சொல்லுங்க.. பிற்காலத்துல உதவும் (உங்களுக்கும்தான்)
"சிறுவர் சிறுமியர்களுக்காக, பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்" அப்படின்னு சொல்லி இந்த வலைப் பதிவுல 'சிறுவர் மலர்' டைப்புல நெறைய கதை எழுதுறாரு நண்பர் ஒருத்தர்.
- தீராத வெளையாட்டு புள்ளை இவரு.. அப்படீன்னு அவரே சொல்லிக்கிட்டு திரியுறாரு. இங்கிட்டு போயி பாருங்க தெரியும். நகைச்சுவை கலந்த கற்பனையோட கதை, கட்டுரைனு எழுதித் தள்ளுறாரு. பின்னால ஒரு காலத்துல வலைப்பதிவுல எழுத மேட்டர் வேணும்னு தெரிஞ்சே சின்ன வயசுல அந்த அளவுக்கு லூட்டி அடிச்சாரு போல. நீங்களும் லூட்டி அடிச்சிருக்கீங்களா, அப்ப அவரு சொல்லுறதப் படிச்சு ஒங்களோட ஒப்பிட்டு பாருங்க, நா இப்ப கடையக் கட்டனும்.
....... மத்ததலாம் நாளைக்கு பாக்கலாம் .
|
|
நான்தான் முதல்ல...
ReplyDeleteஅறிவுக்குத் தீனி....நல்ல அறிமுகங்கள் மாதவன்..
ReplyDeleteபிரபலம் உண்மையிலே பிரமாதம்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteதிறமையான வலைச்சர விளையாட்டுப் பிள்ளை மாதவனுக்கு இந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளையின் நன்றிகள். ;-)
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை..
ReplyDelete//எண்களை கண்டுபிடித்ததாலேயே ராமானுஜம் உலகப்புகழ் பெற்றார், என்று ஆரம்பித்து ஒரு ஆறு இலக்க என்னை கண்டு பிடிக்கச் சொல்கிறார் ஸ்ரீதேவி,//
ReplyDeleteஅப்ப கல்வியும் கல்வி சார்ந்த இடமுன்னு சொல்லுங்க...
சிறப்பான அறிமுகங்கள் தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
சிறப்பான அறிமுகங்கள் !!
ReplyDeleteஅங்கயும் போயிருவோம்!
நான் கூட கணக்கு பண்றத சொல்றீங்களோன்னு நினைச்சேன். என்னை மாதிரி யூத் களை ஏமாத்திட்டீங்களே..
ReplyDeleteஎல்லா அறிமுகங்கள் அருமை
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஅறிமுக ஆரம்பமே நல்லா இருக்குங்க.. நன்றி :-)
(கணக்கு பண்றேன்.... ஹா ஹா ஹா.. நல்லா இருக்கு)
நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteஇன்னைக்கு என்ன ஒரே சின்ன வயசு ஞாபகமா வருது!
ReplyDeleteசொல்லத்தான் நினைக்கிறேன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteயோசிங்க பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteமின்னல் கணிதம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteபகுத்தறிவு பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteசிறுவர் பூங்கா பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteதீராத விளையாட்டு பிள்ளை பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteநன்றி எஸ்.கே..
ReplyDeleteநீங்க நுனிப்புல் மேயாம, ஒவ்வொரு பிலாகுக்கும் போயி படிச்சிட்டு.. உங்களோட வாழ்த்தை சொல்லியமைக்கு, மிகுந்த நன்றிகள்..
//நீங்க நுனிப்புல் மேயாம, ஒவ்வொரு பிலாகுக்கும் போயி படிச்சிட்டு.. உங்களோட வாழ்த்தை சொல்லியமைக்கு, மிகுந்த நன்றிகள்.//
ReplyDeleteஇது ஓவரு... அப்போ மத்தவங்க படிக்க்கலைனு சொல்றீங்களா....
எஸ் கே கமெண்ட்டை காப்பி பேஸ்ட் பண்ணி இருக்காரு... அதுக்கு இவ்வளோ பில்டப்பா?
ok ok Arun sir!:-))))
ReplyDeleteவலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி!!!
ReplyDeleteBest wishes to everyone!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteஇன்றைய பிரபலம், ஆர்விஎஸ் அவர்கள் சவால் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். அவரின் மன்னார்குடி டேஸ் தொடர் அருமையாக உள்ளது!
ReplyDeleteஒரு கணக்கு புதிர்
ReplyDeleteஇரண்டு வாத்துகள் இரண்டு வாத்துகளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தன
இரண்டு வாத்துகள் இரண்டு வாத்துகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தன
இரண்டு வாத்துகள் இரண்டு வாத்துகளுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டிருந்தன
அப்படியானால் எத்தனை வாத்துகள் அங்கிருந்தன?
@ yes.ke.
ReplyDeleteஅவரும்(RVS) 'மன்னை மைந்தருள் ஒருவர்'
ஐயோ கணக்கு பதிவா ..?
ReplyDeleteஎனக்கு கணக்கு வரதே .. சரி ஒவ்வொரு ப்ளாக்க போய் பாக்குறேன் ..!!
நன்றி
ReplyDeleteஅன்பரசன்
ஸ்ரீராம்
எள்.கே.
@ RVS 'வலைச்சர விளையாட்டுப் பிள்ளை' -- அட.. நல்லாத்தான் இருக்கு..
ReplyDelete////அவரின் மன்னார்குடி டேஸ் தொடர் ///
ReplyDeleteதூர்தர்சன்ல வருமே அந்த தொடரா ..?
நன்றி வெறும்பய, வைகை ..
ReplyDelete@ மாணவன் -- "அப்ப கல்வியும் கல்வி சார்ந்த இடமுன்னு சொல்லுங்க..." -- இது சூப்பரு..
ReplyDeleteஇப்போ தான் வந்தேன், சாரி லேட்... படிச்சிட்டு வரேன்
ReplyDelete//இரண்டு வாத்துகள் இரண்டு வாத்துகளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தன
ReplyDeleteஇரண்டு வாத்துகள் இரண்டு வாத்துகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தன
இரண்டு வாத்துகள் இரண்டு வாத்துகளுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டிருந்தன
அப்படியானால் எத்தனை வாத்துகள் அங்கிருந்தன?
//
எட்டு ..? சரியா ..?
நான் சொன்ன கணக்கும் அதன் பதிலும் இங்கே!
ReplyDeletehttp://www.riddles-online.com/animal_riddles/duck-riddle-puzzle.htm
//@ Ramesh who said 'நான் கூட கணக்கு பண்றத சொல்றீங்களோன்னு நினைச்சேன். என்னை மாதிரி யூத் களை ஏமாத்திட்டீங்களே..' //
ReplyDeleteஒன்னையப் பத்தி எனக்குத் தெரியாதா..?
ஐ மின்னல் கணிதம் எழுதுறவர் பெரும் என் பெரும் ஒண்ணா இருக்கு ..
ReplyDeleteநான் இப்பவே போய் அவர பின் தொடர்கிறேன் ..!!
அந்த ஐந்தால் வகுகுறது எப்படின்னு சொல்லிருக்கார் . நானும் சிலது பண்ணிப் பார்த்தேன் .. உண்மைலேயே அருமையான அறிமுகம் அண்ணா ..!
நன்றி டு சௌந்தர் & ஆனந்தி
ReplyDeleteநன்றி டு சித்ரா, பெ.சோ.வி & யோசிப்பவர்
ReplyDeleteஎட்டு ..? சரியா ..?//
ReplyDeleteஇவ்ளோ பெரிய அறிவாளியா செல்வா நீ
முல்லா கதை:
ReplyDeleteஒரு நாள், முல்லா தமது வீட்டு மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையல் அறையில் அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார்.
மாடியிருந்த முல்லா, திடீரென கால் தவறிக் கீழே விழுந்து விட்டார்.
'தடால்' என்ற சப்தத்துடன் ஏதோ ஓன்று விழுந்த சப்தத்தை கேட்ட மனைவி திடுக்கிட்டு "அது என்ன சப்தம்" என்று கேட்டாள்.
கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தடி விட்டவாறே "ஒன்றுமில்லை. மாடியிலிருந்த என் சட்டை கீழே விழுந்துவிட்டது" என்றார்.
"ஒரு சட்டை விழுந்து விட்டதனாலேயா அவளவு பெரிய சத்தம் கேட்டது ?" என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"சட்டைக்குள் நான் இருந்தேன்" என்று கூறி முல்லா சமாளித்தார்.
// Arun Prasath said...
ReplyDeleteஎட்டு ..? சரியா ..?//
இவ்ளோ பெரிய அறிவாளியா செல்வா நீ
/
அது தப்பு .! நாலு தான் விடை .!! ஹி ஹி ஹி
பகுத்தறிவு ப்ளாக்கும் சூப்பர் .
ReplyDeleteஎனக்கு ஜென் கதைகள் ரொம்ப பிடிக்கும் ..
அத யார் எழுதுவாங்க அப்படின்னு தேடிட்டு இருந்தேன் ..
இப்ப இது ஓகே .. அதுக்கும் ஒரு நன்றி அண்ணா ..
//@ அருண் பிரசாத் said...
ReplyDelete" இது ஓவரு... அப்போ மத்தவங்க படிக்க்கலைனு சொல்றீங்களா....
எஸ் கே கமெண்ட்டை காப்பி பேஸ்ட் பண்ணி இருக்காரு... அதுக்கு இவ்வளோ பில்டப்பா? "//
நோ அருண்.. எஸ்.கே அந்தந்த பிலாக போயி படிச்சதுனானதான்,
"
1) இன்னைக்கு என்ன ஒரே சின்ன வயசு ஞாபகமா வருது!,
2) சொல்லத்தான் நினைக்கிறேன்,
3) யோசிங்க,
4) மின்னல் கணிதம்,
5) பகுத்தறிவு ,
6) சிறுவர் பூங்கா "
இப்படிலாம் சொல்லி இருக்காரு..
//"சட்டைக்குள் நான் இருந்தேன்" என்று கூறி முல்லா சமாளித்தார்.
ReplyDelete//
ஹா ஹா ஹா .. அப்படியே முல்லா கதைகள் எங்க கிடைக்கும்னும் சொல்லிடுங்க ..
ஏன்னா எனக்கு i mean காமெடி கதைகள் தான் பிடிக்கும் ..!!
இன்னொரு புதிர்:
ReplyDeleteஒரு நாள். ஒரு கப்பல் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தது. திடீரென நீர்க்குள் மூழ்க ஆரம்பித்து விட்டது. அங்கே புயல், சூறாவளி எதுவுமில்லை. எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த கப்பல் மூழ்கி விட்டது!
ஏன்?
50
ReplyDelete// கோமாளி செல்வா said...
ReplyDelete////அவரின் மன்னார்குடி டேஸ் தொடர் ///
தூர்தர்சன்ல வருமே அந்த தொடரா ..? //
'வருமே' -- இல்லை.. இல்லை.. 'வந்திச்சே' (பாஸ்ட் டெண்சு )
"மால்குடி டேஸ்.."
//'வருமே' -- இல்லை.. இல்லை.. 'வந்திச்சே' (பாஸ்ட் டெண்சு )
ReplyDelete"மால்குடி டேஸ்.."
//
உண்மைலேயே அவர்தான் இவரா ..? ஹய்யோ எனக்கு அந்த நாடகம் அவ்ளோ பிடிக்கும் ..சத்தியமா ரொம்ப ரொம்ப பிடிக்கும் .. அதுல கூட இந்த வில்லன் நடிகர் ஒருத்தர் நடிச்சிருப்பார் ..சின்னப் பசங்க எல்லாம் காட்டுக்குள்ள போய் விளையாடுறது எல்லாம் வரும் .. சூப்பர் தொடர் ..
@ yes.ke அது நீர்மூழ்கிக் கப்பல் !
ReplyDeleteமாதவன் சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே!:-)
ReplyDelete//ஒரு நாள். ஒரு கப்பல் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தது. திடீரென நீர்க்குள் மூழ்க ஆரம்பித்து விட்டது. அங்கே புயல், சூறாவளி எதுவுமில்லை. எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த கப்பல் மூழ்கி விட்டது!
ReplyDelete///
நீச்சல் தெரியாத கப்பல் ..?
// Arun Prasath said...
ReplyDeleteஎட்டு ..? சரியா ..?//
இவ்ளோ பெரிய அறிவாளியா செல்வா நீ //
அதான அப்படி கேளு..
(படிச்சிட்டீங்கள.. இப்ப வாங்க வெளையாடுவோம்)
வாத்துப் புதிர் சூப்பர், எஸ்.கே. விடியப் பாத்துட்டேன்.. (முயற்சி செய்யல)
ReplyDelete@ selva //நீச்சல் தெரியாத கப்பல் ..? //
ReplyDeleteஎல்லாப் பதிலும் 'மொக்கை' அல்ல
இது உங்ககிட்ட இருந்திச்சின்னா, அதை மற்றவங்கிட்ட பகிர்ந்துக்குனும்னு நினைப்பீங்க, ஆனா அதை பகிர்ந்துகிட்டீங்கன்னா, அது உங்கிட்ட இருக்காது. அது என்ன?
ReplyDelete//இது உங்ககிட்ட இருந்திச்சின்னா, அதை மற்றவங்கிட்ட பகிர்ந்துக்குனும்னு நினைப்பீங்க, ஆனா அதை பகிர்ந்துகிட்டீங்கன்னா, அது உங்கிட்ட இருக்காது. அது என்ன?//
ReplyDeleteசாப்பாடு ..?
// எஸ்.கே said...
ReplyDeleteமாதவன் சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே!:-) //
15 நாளைக்கு முன்னாடி இந்த பதிவுல சொன்ன நிகழ்ச்சில 'நீர்மூழ்கிக் கப்பல் பாத்தேன்..
// எஸ்.கே said...
ReplyDeleteஇது உங்ககிட்ட இருந்திச்சின்னா, அதை மற்றவங்கிட்ட பகிர்ந்துக்குனும்னு நினைப்பீங்க, ஆனா அதை பகிர்ந்துகிட்டீங்கன்னா, அது உங்கிட்ட இருக்காது. அது என்ன? //
நல்ல மனுஷனுக்கு 'எல்லாமே' போருஞ்சுமே ?
என்னாது..
சொன்னபடி செய்து நிரூபித்த எஸ்.கே அண்ணன் / தம்பி அவர்களுக்கு அன்பான நன்றிகள் (டார்கெட் அச்சீவ்ட் )
ReplyDeleteஇது உங்ககிட்ட இருந்திச்சின்னா, அதை மற்றவங்கிட்ட பகிர்ந்துக்குனும்னு நினைப்பீங்க, ஆனா அதை பகிர்ந்துகிட்டீங்கன்னா, அது உங்கிட்ட இருக்காது. அது என்ன?
ReplyDeleteவிடை: ரகசியம்
முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.
ReplyDeleteஅவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.
கணக்கை கதையோடு இணைத்து விளையாட்டாய் சொன்னால் பிள்ளைகள் விருப்பமாய் செய்வார்கள்.
ReplyDeleteநீங்கள் அறிமுக படுத்திய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
//@ yes.ke
ReplyDeleteவிடை: ரகசியம் //
சீக்ரெட்டா ?.. அப்ப பதில என்னோட காதுல மெதுவா சொல்லுங்க
//கோமதி அரசு said...
ReplyDeleteகணக்கை கதையோடு இணைத்து விளையாட்டாய் சொன்னால் பிள்ளைகள் விருப்பமாய் செய்வார்கள்.//
அட.. அட.. சூப்பரா இருக்குதே..
இதைத் தான் சுருக்கமா நாஞ்சொன்னேன்..
(கணக்குக் கதையோடு விளையாட்டு)
@ yes.ke.
ReplyDelete"Mulla the Great"
நல்லாருக்கு மாதவன், வித்தியாசமான வலைப்பூக்களுக்குள் கொண்டு செல்கிறீர்கள்!
ReplyDeleteஐ.. இன்னைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவுகள்.. என் காட்டில மழை தான்.. எல்லா பதிவுகளும் நல்லா இருக்கு.. இனிமேல் அவர்களை தொடர்கிறேன்.. பதிவுகளை செலக்ட் பண்ணுறதுக்கு நல்லாவே ஹோம்வர்க் பண்ணியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎஸ் கே இன்னைக்கு ஃபுல் ஃபார்ம்ல இருக்காரு போல.. :)
மிக்க நன்றி, ராம்ஸ்..
ReplyDelete// அனு said...
ReplyDeleteஐ.. இன்னைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவுகள்.. என் காட்டில மழை தான்.. எல்லா பதிவுகளும் நல்லா இருக்கு.. இனிமேல் அவர்களை தொடர்கிறேன்.. பதிவுகளை செலக்ட் பண்ணுறதுக்கு நல்லாவே ஹோம்வர்க் பண்ணியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..//
'புதிய பதிவுகள்' -- 'ஹோம் வொர்க்'
அமாம் மேடம்.. 3-4 நாளு முழுசா செலவு செஞ்சு செலெக்ட் பண்ணினேன்.
வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றிகள்.
வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து வைக்கும் ஆசிரியர் மாதவனுக்கு நன்றியும், பாராட்டும்.....
ReplyDeleteஎஸ்.கே. சார் , பின்னூட்டத்திலேயே பதிவு போடுறீங்க.. உங்கள் ஈடுபாடு ரொம்ப அருமைங்க..
ReplyDelete// Blogger பாரத்... பாரதி... said...
ReplyDeleteவித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து வைக்கும் ஆசிரியர் மாதவனுக்கு நன்றியும், பாராட்டும்.....//
நன்றி பாரதி.. புதுசா இருந்சிச்சா அறிமுகங்களும், விதமும் ?
அது எதுக்கு ரெண்டு தடவை 'பாரதி' ?
// பாரத்... பாரதி... said...
ReplyDeleteஎஸ்.கே. சார் , பின்னூட்டத்திலேயே பதிவு போடுறீங்க.. உங்கள் ஈடுபாடு ரொம்ப அருமைங்க..//
அதுவா.. அவருக்கு நா ரொம்ப நன்றி சொல்லணும்
இன்னிக்கு பின்னூட்டம் 30 கூடத் தாண்டாத பொது, அவரு கிட்ட நான், என்னோட டார்கெட் அம்பது.. தாண்டாது போல அப்படின்னு வருத்தப் பட்டு சொன்னத, கேட்டு, அவர் தந்த ஆறுதல்கள்தான் அது..
Looks like your target achieved... Wishing You All the Success :-))
ReplyDeleteஅட நீங்க என்னங்க ஆறுதல் அது இதுன்னு!
ReplyDelete// @ Anandhi who said 'Looks like your target achieved... Wishing You All the Success :-))" //
ReplyDeleteநன்றி ஆனந்தி..
இப்போ பேராசைக்கு 'எடுத்து'காட்ட இருக்கலாமான்னு தோணுது..
அதாம் டார்கெட்ட 100 ஆக்கலாமானு நெனைக்கிறேன்.
இன்னும் 20 தானா? அப்போ இன்னிக்கு டார்கெட் 100 தான்!
ReplyDelete// எஸ்.கே said...
ReplyDeleteஅட நீங்க என்னங்க ஆறுதல் அது இதுன்னு! //
உண்மையச் சொன்னே, எஸ்.கே . உங்களைப் போல நண்பர்கள் இருந்தா இந்த டார்கெட்லாம் ஜுஜுபி...
//நன்றி ஆனந்தி..
ReplyDeleteஇப்போ பேராசைக்கு 'எடுத்து'காட்ட இருக்கலாமான்னு தோணுது..
அதாம் டார்கெட்ட 100 ஆக்கலாமானு நெனைக்கிறேன்.//
அவ்ளோ தானே.. மேட்டர்... நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்... பண்ணிட்ட போச்சு.. :-)))
நல்ல அறிமுகங்கள் :))
ReplyDelete1961 ல் நடக்க கூடிய ஒன்று 6009 நடக்கவே நடக்காத ஒன்று என்ன அது?
ReplyDeleteசொல்லத்தான் நினைகிறேன்.. ப்ளாக்-ல பழகணக்கு பாத்தேன்.. பாலோவர் ஆகி விட்டேன்.. :)
ReplyDeleteநன்றி..
புதிய, புதிய அறிமுகங்கள்,
ReplyDeleteநன்றி மாது!
87
// எஸ்.கே said...
ReplyDeleteஇன்னும் 20 தானா? அப்போ இன்னிக்கு டார்கெட் 100 தான்! //இருபதுல, நீங்கலாம் சேந்து பத்து கமெண்டு போட்டப் பொது.. நா எல்லாத்துக்கும் பதில் போட்டா டார்கெட் தாண்டிடலாம்..
//Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
ReplyDelete//நன்றி ஆனந்தி..
இப்போ பேராசைக்கு 'எடுத்து'காட்ட இருக்கலாமான்னு தோணுது..
அதாம் டார்கெட்ட 100 ஆக்கலாமானு நெனைக்கிறேன்.//
அவ்ளோ தானே.. மேட்டர்... நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்... பண்ணிட்ட போச்சு.. :-))) //
அட.. இதுதான பிடிச்ச புள்ளைக்கு அழகு..
// ஜெய்லானி said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் :)) //
நன்றி ஜெய்லானி.
//எஸ்.கே said...
ReplyDelete1961 ல் நடக்க கூடிய ஒன்று 6009 நடக்கவே நடக்காத ஒன்று என்ன அது? //
யோசிக்க கொஞ்சம் டயம் வேணும்..
// Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
ReplyDeleteசொல்லத்தான் நினைகிறேன்.. ப்ளாக்-ல பழகணக்கு பாத்தேன்.. பாலோவர் ஆகி விட்டேன்.. :)
நன்றி.. //
நான்தான் சொன்னேனே, நீங்க பிடிச்ச புள்ளன்னு..
// NIZAMUDEEN said...
ReplyDeleteபுதிய, புதிய அறிமுகங்கள்,
நன்றி மாது!
87 //
நீங்கள் தரும் ஊக்கம், மெய் சிலிக்க வைக்கிறது.. நன்றிகள்
கேள்விக்கு ஆன்சர் அப்புறமா: இப்ப ஒரு ஜோக்:
ReplyDeleteஇந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்.
இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் பூசிக்கொல்லும் ஒரு வகை மருந்து) பூசியிருந்தேனே" என்றார்.
எஸ்.கே.அவர்கள் தனது பின்னூட்டத்தில்
ReplyDeleteசொன்ன முல்லா கதை அனைவரும்
அறிந்ததே! இந்தக் கதையை நானும்
தமிழ்குடும்பம் டாட் காம்-மிலும்
எனது வலைப்பூவிலும் பதிவு
செய்துள்ளேன்.
எஸ்.கே.அவர்கள் தந்துள்ள
வார்த்தைகள் எனது பதிவுதான்.
நன்றி எஸ்.கே.
இது எனது பதிவு:
http://nizampakkam.blogspot.com/2009/10/mullastory1.html
டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.
ReplyDeleteமாணவன்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுத்தவேண்டும்.
//Madhavan Srinivasagopalan said...
ReplyDelete// NIZAMUDEEN said...
புதிய, புதிய அறிமுகங்கள்,
நன்றி மாது!
87 //
நீங்கள் தரும் ஊக்கம், மெய் சிலிக்க வைக்கிறது.. நன்றிகள்///
ஊக்க மாத்திரை சாப்பிடிருப்பெங்க
100
ReplyDelete100
ReplyDeleteYes.. 101
ReplyDeleteAll the best to you..!! :-)
ஆமாம் நிஜாமுதீன் அவர்களே தங்கள் பதிவிலிருந்து அதை இங்கே தந்தேன்! மிக்க நன்றி!
ReplyDeleteபோலீஸ்கார் எப்படித்தான் கரெக்டான் வடை எங்கிருந்தாலும் போய் புடிச்சிடுறீங்களோ!
ReplyDelete// எஸ்.கே said...
ReplyDeleteபோலீஸ்கார் எப்படித்தான் கரெக்டான் வடை எங்கிருந்தாலும் போய் புடிச்சிடுறீங்களோ! //
"அவசர உதவிக்கு போலீஸ் - 100"
இதுக்கு இப்பத்தான் அர்த்தம் புரியுது..
அனனவருக்கு மிகுந்த நன்றிகள்
விடையை சொல்லிடவா?
ReplyDeletewait please.. yes.ke
ReplyDeleteI will try..
ur sardar joke fantastic..
சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக்கு மனு கொடுத்தனர்.
ReplyDeleteநீதிபதி: உங்களிட்ம் மூன்று குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.
சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.
இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது.
ReplyDeleteஅதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், “இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்”. மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் “நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.C.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்” என்று!
*சர்தார்: ஒரு தேசியக் கொடி கொடுங்களேன்!*
ReplyDelete*கடைகாரர்: இந்தாங்க...*
*சர்தார்: வேற கலர்ல இல்லையா?*
நண்பன்: ராம்சாமி உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்...
ReplyDeleteமனம் நொந்த அவர் சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் ராம்சாமி இல்லே ரமேஷ் என்று!
எஸ்.கே.. இன்னும் ரெண்டு நாளு இருக்கு.. சரக்கு தீந்துடப் போகுது..
ReplyDeleteசரக்கு இருக்குங்க:-))
ReplyDeleteசரி அந்த கேள்வி விடை?
//Madhavan Srinivasagopalan said...
ReplyDelete//எஸ்.கே said...
1961 ல் நடக்க கூடிய ஒன்று 6009 நடக்கவே நடக்காத ஒன்று என்ன அது? ///
Flash Back
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDelete//Madhavan Srinivasagopalan said...
//எஸ்.கே said...
1961 ல் நடக்க கூடிய ஒன்று 6009 நடக்கவே நடக்காத ஒன்று என்ன அது? ///
Flash Back//
நல்ல பதில்! ஆனா அது இல்லை! ஏனெனில் பிளாஷ் பேக்னா எப்பவேனா நடக்கலாமே!
க்ளூ: அது வருஷம் இல்லை!
ReplyDelete//1961 ல் நடக்க கூடிய ஒன்று 6009 நடக்கவே நடக்காத ஒன்று என்ன அது? ///
ReplyDeleteஎஸ்கே, உங்க கேள்வி தப்புன்னு நினைக்கிறேன்.
1961 ல் நடக்க கூடிய ஒன்று 6009 வரை நடக்கவே நடக்காத ஒன்று என்ன அது? ///
இப்படி இருக்க வேண்டும், சரியா?
(இதுக்கு பதில் சொன்னா, என் பதில் ரெடி)
என் கேள்வி சரி எனக் கொண்டால், விடை இதோ:
ReplyDelete1961 மற்றும் 6009 இரண்டு எண்களும் தலைகீழாகப் பார்த்தாலும் அதே எண்ணாகத் தெரியும். ஆகவே, 6009 வரும் வரை அந்த மாதிரி எண் கொண்ட வருடம் வராது. சரியா?
சரியான விடை!
ReplyDeleteஆனால் அதை இப்படியும் கேட்கலாமே!
1961 ல் நடக்க கூடிய ஒன்று 6009ல் நடக்கவே நடக்காத ஒன்று என்ன அது?
எப்படியோ சரியான விடை! வாழ்த்துக்கள் பிஎஸ்வி!
ReplyDelete@ SK
ReplyDelete//1961 ல் நடக்க கூடிய ஒன்று 6009ல் நடக்கவே நடக்காத ஒன்று என்ன அது//
திரும்பவும் தப்பாவே கேள்வி கேக்கறீங்க. 6009 தலைகீழாக 6009 என்றுதான் வரும். அப்புறம் எப்படி நடக்கவே நடக்காதுன்னு சொல்வீங்க.
ஆமாங்க நான் வேறவிதமா நினைச்சு கேள்வியை தப்பா கேட்டுட்டேன்! மன்னிக்கவும்!:-))
ReplyDeleteசரி நான் இங்கிருந்து செல்கிறேன்! தப்பான கேள்விக்கு சரியான விடை சொன்னதால் 125ஆவது வடை உங்களுக்கு!
ReplyDeleteபுதிர், எண்கள்.. இதல்லாம் சொன்னேன்.. (தியரி)
ReplyDeleteஇங்க செயல்படுத்தியே காட்டுறாங்க.. (பிராக்டிகல்) நல்லா வளர்ச்சி..
'அது'.. -- நன்றி பி.எஸ்.வி மற்றும், எஸ்.கே.
வடை வருது.. வடை வருது.. நீ ஓடிவா..
ReplyDeleteமன்னா உன் பேரன்பிலே
vadai!
ReplyDeleteஇன்னிக்கு நான் கொஞ்சம் லேட்டு..
ReplyDeleteஎதாவது பனிஷ்மெண்ட் உண்டா..?!!
நல்ல அறிமுகங்கள்..
எல்லோரையும் ஒரு ரவுண்ட்
அடிச்சிட்டு வரேன்..
//வெங்கட் said...
ReplyDeleteஇன்னிக்கு நான் கொஞ்சம் லேட்டு..
எதாவது பனிஷ்மெண்ட் உண்டா..?!!//
உண்டு, உங்க போஸ்டையே திரும்பிப் படிங்க, அதுதான் punishment.
// வெங்கட் said...
ReplyDeleteஇன்னிக்கு நான் கொஞ்சம் லேட்டு..
எதாவது பனிஷ்மெண்ட் உண்டா..?!! //
பனிஷ்மென்ட் : நாளைக்கு மொதல்ல வந்து கமெண்டு போட்டு, வடையும் மார்கழி ஸ்பெஷல் பொங்கலும் வாங்கணும்.. ஆமா சொல்லிப்புட்டேன்..
ஹாய் மாது - எல்லாமே நல்ல அறிமுகங்கள் - புதிய அறிமுகங்கள் - மறுமொழிகள் அத்தனையும் சூப்பர் -
ReplyDelete:) நன்றி!!! நோ பேட் வெர்ட்ஸ்....
ReplyDeleteஆகா..எவ்வள்வு நாள் கழிச்சும் நினைவு வச்சுருக்கீங்க... அறிமுகத்திற்கு.நன்றியோ நன்றி....அப்படியே வலைசசர வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்..
ReplyDeleteஇப்பொழுதுதான் பார்த்தேன்....
கணக்கு வாத்தியாருன்னா காலகாலமாப் பயம்தான்..
//cheena (சீனா) said...
ReplyDelete"ஹாய் மாது - எல்லாமே நல்ல அறிமுகங்கள் - புதிய அறிமுகங்கள் - மறுமொழிகள் அத்தனையும் சூப்பர் -"//
நன்றி சீனா சார்.. கேட்க இனிமையாக இருக்கிறது...
// TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete:) நன்றி!!! நோ பேட் வெர்ட்ஸ்.... //
எஸ்... 'நன்றி', நெவெர் ய பெட் வேர்ட் .. !
//கண்ணகி said...
ReplyDelete"ஆகா..எவ்வள்வு நாள் கழிச்சும் நினைவு வச்சுருக்கீங்க... அறிமுகத்திற்கு.நன்றியோ நன்றி....அப்படியே வலைசசர வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்..
இப்பொழுதுதான் பார்த்தேன்....
கணக்கு வாத்தியாருன்னா காலகாலமாப் பயம்தான்.. "//
நன்றி கண்ணகி மேடம்.
கணக்கு வாத்தியாருக்கு இன்னமும் பயபுடுவீங்களா..
எல்லாம் எம்மோட நல்லதுக்குத்தானா அவர் அப்படி பயமுறுத்துராறு..