போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் தங்கமணிக்கே !
➦➠ by:
மாதவன்
இங்கு ஒரு வார காலம் ஆசிரியராக பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்க காரணமானவர்களுக்கு மிக்க நன்றிகள். ஆரம்ப காலங்களில் வலைப்பூவில் வெறும் வாசகனாகவே இருந்தேன். இட்லி-வடையைத் தான் நான் முதன்முதலில் சுவைத்துவந்தேன். பிறகுதான் தெரிந்தது, மற்ற கடைகளிலும் வடை கிடைக்குமென்பது.
நானும், எனது வலைமனையும் - ஓர் அறிமுகம்
வலைமனையில் நாமும் எழுதலாம் என்பது தெரியாத போது, பெயர் சொல்ல விருப்பமில்லாதவரின் தூண்டுதலில் சொந்தமா கடைய விரிச்சேன். கடை ரெடி சரக்கு வேணுமே ? நாள் பூரா ஆபீசுல வேலை செஞ்ச களைப்போட வீட்டுக்கு போனேன். சாப்பிடலாம்னு தங்கமணிய கூப்புட்டா, "முன்னாலேயே வந்திருக்கப்டாதா.. இன்னும் அரை மணி கழிச்சுத்தான் சாப்பாடு", தங்க்ஸின் பதில். ஒம்பது மணி மெகாத் தொடராம் டிவில. எனக்கு வந்த கடுப்புல கணணிய ஓபன் பண்ணி எழுதினேன் மொதோ மோதலா. அதாவது, நா வலைமனைல எழுத ஆரம்பிச்சதுக்கு தங்கமணியும் ஒரு காரணம், அதான் தலைப்புலயே மரியாதலாம். அந்த போஸ்டுக்கே, "இப்படியும் முதல் இடுகை இடலாமா - பலே பலே, நல்வாழ்த்துகள்", கமெண்டு போட்டு என்னைய பாராட்டுனது, 'அன்பின் சீனா' சார்தான்.
அப்புறம் ரெண்டு மாசத்துக்கு சொல்லுறாமாதிரி எதுவும் எழுதலை (சரக்கு இல்லை). குடும்பத்தோட பாத்துட்டு வந்த, அம்சமான 'சர்க்கஸ்' கலைச்சேவைய பாராட்டும் இந்தப் பதிவு விளைந்தது. டீசென்ட்டா எதைவேணாலும் வலைமனைல சொல்லலாம்னு தெரிஞ்சுகிட்டேன். அதனாலதான் இந்த மாதிரி பட்டாம் பூச்சி மேட்டர், எப்பவோ கேட்ட, படிச்ச, பாத்த மேட்டர்லாம், போட்டேன். படப்புதிர் போட எனக்கா ஒரு ஐடியா வந்துச்சு, போட்டேன். அப்புறம் இதே மாதிரி வசந்த், அருண்லாம் போடுறாங்கன்னு தெரிஞ்சதுனால நா விட்டுட்டேன். (ஹி.. ஹி.. அவுங்கள அளவுக்கு நம்மளால முடியலை..).
"இதே பாணில எழுதினா சரக்குல வீரியம் இருக்காது, மாதவா! மாத்தி யோசின்னு" மனசு சொன்னத இந்த மாதிரிலாம் எழுதினேன் , ப(ழ)டம் வரைய சொல்லிக் கொடுத்தேன்.
பிரபல பதிவர் டோண்டு ராகவன் தனியார் தொலைக்காட்சியில் ஒரு பேட்டில வந்தாங்க. நம்மளையும் பேட்டி எடுக்க வந்தா எப்படி இருக்கும்னு நான் கற்பனை பண்ணிப் பாத்தேன், அதப் படிச்சுப் பாருங்க.
கல்விக்கும் கற்பித்தவர்களுக்கும் மரியாதை செய்யறமாதிரி ஒரு பதிவும் குழந்தைகள் தினத்துக்கு ஒரு பதிவும் போட்டேன். 'ஸ்வீட்டா' இருந்திச்சி. குழந்தைகளின் பேச்சே தனிதான். அதனாலதான் என்னோட மூனு வயசுப் பொண்ணு சொன்னத எந்திரன் சினிமா விமர்சனமா பதிவிட்டேன்.
கதையே எழுதாத என்னை சவால் விட்டு எழுத வச்சாங்க நம்ம பரிசல்கார அண்ணாச்சி. காமெடின்னு நெனைச்சிகிட்டு என்னத்தையோ எழுதி அனுப்பினேன் அந்த சிறுகதை போட்டிக்கு.
ஒரு வழியா நூறாவதா இப்படி எழுதினத அருமை அண்ணன் கே.ஜி.கௌதமன், "உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும், ஏதாவது புதிய விஷயம் அல்லது புதிய கோணம் இருக்கும். அது உங்கள் படைப்பாற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு... .......பதிவுலகில், மேன் மேலும் புகழ் பெற எங்கள் வாழ்த்துக்கள்", என்று பாராட்டியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
என்னைப் பற்றிய அறிமுகம் போதுமென நினைக்கிறேன். வரும் நாட்களில், நான் படித்த பதிவுகளை எனக்கு தோன்றியபடி வகைபடுத்தி அறிமுகம் செய்கிறேன். ஒவ்வொருநாளும், எனது பார்வையில் வித்தியாசமான ஒரு பதிவர் அல்லது பதிவை கடைசியாக சொல்லவிருக்கிறேன்.
இன்றைய அறிமுகம் - 'வித்தியாசமான பதிவுகள்', என் பார்வைப் படி.
இந்த உத்தமரு பண்ண 'திரை விமர்சனம்' மற்றும் இருபதாயிரம் ரூபாயை மாசம் மிச்சப் படுத்துவது எப்படின்னு இந்த கோகுல வாசரு, தந்த ஐடியா.
இந்த ரெண்டு பதிவுகளுக்கும் பக்கத்துல உள்ள படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன ? நாளை சொல்லுகிறேன்..
டிஸ்கி 1 : வள வள ஆசாமி, நா. பீ கேர்புல் ! (என்னையச் சொன்னேன்)
டிஸ்கி 2 : ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கி படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாதை மாறி போயிட்டா கம்பெனி பொறுப்பல்ல.
"இதே பாணில எழுதினா சரக்குல வீரியம் இருக்காது, மாதவா! மாத்தி யோசின்னு" மனசு சொன்னத இந்த மாதிரிலாம் எழுதினேன் , ப(ழ)டம் வரைய சொல்லிக் கொடுத்தேன்.
பிரபல பதிவர் டோண்டு ராகவன் தனியார் தொலைக்காட்சியில் ஒரு பேட்டில வந்தாங்க. நம்மளையும் பேட்டி எடுக்க வந்தா எப்படி இருக்கும்னு நான் கற்பனை பண்ணிப் பாத்தேன், அதப் படிச்சுப் பாருங்க.
கல்விக்கும் கற்பித்தவர்களுக்கும் மரியாதை செய்யறமாதிரி ஒரு பதிவும் குழந்தைகள் தினத்துக்கு ஒரு பதிவும் போட்டேன். 'ஸ்வீட்டா' இருந்திச்சி. குழந்தைகளின் பேச்சே தனிதான். அதனாலதான் என்னோட மூனு வயசுப் பொண்ணு சொன்னத எந்திரன் சினிமா விமர்சனமா பதிவிட்டேன்.
கதையே எழுதாத என்னை சவால் விட்டு எழுத வச்சாங்க நம்ம பரிசல்கார அண்ணாச்சி. காமெடின்னு நெனைச்சிகிட்டு என்னத்தையோ எழுதி அனுப்பினேன் அந்த சிறுகதை போட்டிக்கு.
ஒரு வழியா நூறாவதா இப்படி எழுதினத அருமை அண்ணன் கே.ஜி.கௌதமன், "உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும், ஏதாவது புதிய விஷயம் அல்லது புதிய கோணம் இருக்கும். அது உங்கள் படைப்பாற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு... .......பதிவுலகில், மேன் மேலும் புகழ் பெற எங்கள் வாழ்த்துக்கள்", என்று பாராட்டியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
என்னைப் பற்றிய அறிமுகம் போதுமென நினைக்கிறேன். வரும் நாட்களில், நான் படித்த பதிவுகளை எனக்கு தோன்றியபடி வகைபடுத்தி அறிமுகம் செய்கிறேன். ஒவ்வொருநாளும், எனது பார்வையில் வித்தியாசமான ஒரு பதிவர் அல்லது பதிவை கடைசியாக சொல்லவிருக்கிறேன்.
இன்றைய அறிமுகம் - 'வித்தியாசமான பதிவுகள்', என் பார்வைப் படி.
இந்த உத்தமரு பண்ண 'திரை விமர்சனம்' மற்றும் இருபதாயிரம் ரூபாயை மாசம் மிச்சப் படுத்துவது எப்படின்னு இந்த கோகுல வாசரு, தந்த ஐடியா.
இந்த ரெண்டு பதிவுகளுக்கும் பக்கத்துல உள்ள படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன ? நாளை சொல்லுகிறேன்..
டிஸ்கி 1 : வள வள ஆசாமி, நா. பீ கேர்புல் ! (என்னையச் சொன்னேன்)
டிஸ்கி 2 : ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கி படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாதை மாறி போயிட்டா கம்பெனி பொறுப்பல்ல.
....... மத்ததலாம் அப்புறம் பாக்கலாம்.
|
|
வருக! வருக!
ReplyDeleteஅந்த படத்துக்கும் இரண்டு பதிவுகளுக்கும் என்ன சம்பந்தம்?
ReplyDeleteஒருவேளை அந்த மாடு கன்னுகுட்டியை நக்கிறாப்பில நீங்களும்.......
.
.
.
.
.
.
.
.
.
.
அந்த பதிவுகளை அன்பா பாசமா படிச்சீங்களோ!
ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்!
ReplyDelete//இந்த ரெண்டு பதிவுகளுக்கும் பக்கத்துல உள்ள படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன ? நாளை சொல்லுகிறேன்.. //
யோசிக்கிறேன், என்
மூளை(????!!!!_"க்கு எட்டலை!
மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல சிந்தனா சக்தி இருக்கிறது.
ReplyDeleteவாங்க.. வாங்க.. வரவேற்கிறோம்..
ReplyDeleteபோயும் போயும் வலைச்சரத்திலையும் டிஸ்கி யா...
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நல்லவேளை நான் எந்த லிங்கையும் படிக்கலை
ReplyDeleteவணக்கம் மாதவன் சார் வருக வருக வரசரத்தில் சரமாக வெடிக்க...வருக வருக வரவேற்கிறோம்
ReplyDeleteவலைசரத்தில் டிஸ்கி போட்றது
ReplyDeleteஎன்ன பெரிய சாதனையா..?!!
டிஸ்கி : நாங்கல்லாம் வலைசர Comment-லயே
டிஸ்கி போடுற ஆளுங்க..!!
அற்புதமான படைப்பு... வருங்கால சந்ததிகள் இதை பேசட்டும்... :))
ReplyDeleteஇப்படிக்கு பதிவைன் முதல் பத்தி மட்டும் படித்து கமெண்ட் போடுவோர் சங்கம்.. :))
அற்புதமான படைப்புகள் மாதவன் .....
ReplyDeleteஇப்படிக்கு கமெண்ட்ஸ் பார்த்து கமெண்ட்ஸ் போடும் சங்கம்
வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி
ReplyDeleteகலக்கல் ஆரம்பம் ஆயிடுச்சு. காத்திருக்கிறோம் மேலும் பல புதிர்களுக்கு.
ReplyDeleteஅற்புதமான படைப்புகள் மாதவன்..
ReplyDeleteஇப்படிக்கு கமெண்ட்சை Copy & Paste
பண்ணுவோர் சங்கம்..
காணாப்போயிடுவேன்னு பயமா இருந்ததுனால, நீங்க சொன்ன மாதிரியே எந்த இணைப்புயும் சொடுக்கிப் படிக்கல....!
ReplyDeleteஹா,ஹா,ஹா.... ஆரம்பமே கலக்கலாக இருக்குதுங்க... வாழ்த்துக்கள்!
ReplyDelete//இப்படிக்கு பதிவைன் முதல் பத்தி மட்டும் படித்து கமெண்ட் போடுவோர் சங்கம்..//
ReplyDelete//
இப்படிக்கு கமெண்ட்ஸ் பார்த்து கமெண்ட்ஸ் போடும் சங்கம்
//
//
இப்படிக்கு கமெண்ட்சை Copy & Paste
பண்ணுவோர் சங்கம்..
//
எத்தனை எத்தனை
சங்கங்களடா?
அதில்தான் எத்தனை
சிங்கங்களடா
எல்லோரும் நம்முடைய
தங்கங்களடா!
(சங்கத்துக்கு பங்கம் சேர்க்கும் சங்கம்)
@ எஸ்.கே //ஒருவேளை அந்த மாடு கன்னுகுட்டியை நக்கிறாப்பில நீங்களும்.......
ReplyDelete.
அந்த பதிவுகளை அன்பா பாசமா படிச்சீங்களோ! //
ம்ம்ம் .... நீங்கள் சொன்னதுல க்ளு இருக்கு.. விடை இல்லை..
//பெயர் சொல்ல விருப்பமில்லை said... "ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்! மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல சிந்தனா சக்தி இருக்கிறது."//
ReplyDeleteநன்றி..
//இந்த ரெண்டு பதிவுகளுக்கும் பக்கத்துல உள்ள படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன ? நாளை சொல்லுகிறேன்.. //
யோசிக்கிறேன், என்
மூளை(????!!!!_"க்கு எட்டலை!//
ஏணி போட்டு முயற்சி பண்ணுங்க.. கெடைச்சிடும்..
// வெறும்பய said...
ReplyDelete"வாங்க.. வாங்க.. வரவேற்கிறோம்.." //
----- > நன்றி
"போயும் போயும் வலைச்சரத்திலையும் டிஸ்கி யா... "
------>
"டிஸ்கி 1 - வள வள ஆசாமி, நா. "
ஹி.. ஹீ.. அது வந்து.. அடுத்தவங்க நம்மள கிண்டல் பண்ணுறதுக்கு முன்னமே, நாமளா பண்ணிக்கலாமுன்னுதான்....
//ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... "உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை." //
ReplyDeleteகொடுத்த காசுக்கு, மேல நா quote பண்ணத மட்டும் சொன்னாப் போதும்.. (பப்ளிக்... பப்ளிக்....)
// சௌந்தர் said..."வணக்கம் மாதவன் சார் வருக வருக வரசரத்தில் சரமாக வெடிக்க...வருக வருக வரவேற்கிறோம்" //
ReplyDeleteவரவேற்பிற்கு மிகுந்த நன்றி..
// வெங்கட் said..." வலைசரத்தில் டிஸ்கி போட்றது என்ன பெரிய சாதனையா..?!!
ReplyDeleteடிஸ்கி : நாங்கல்லாம் வலைசர Comment-லயே டிஸ்கி போடுற ஆளுங்க..!!" //
சத்தமா.. 'வெறும்பய' காதுல இது கேக்குறமாதிரி 'இன்னொரு முறை சொல்லுங்க..'
//TERROR-PANDIYAN(VAS) said..." அற்புதமான படைப்பு... வருங்கால சந்ததிகள் இதை பேசட்டும்... :)) "
ReplyDelete--> அப்படியே ஆகட்டும்
"இப்படிக்கு பதிவைன் முதல் பத்தி மட்டும் படித்து கமெண்ட் போடுவோர் சங்கம்.. :))"
--> தலைப்ப மட்டும் படிச்சுட்டு ஓடுறவங்களுக்கு, நீங்கள் எவ்வளவோ பெட்டெர் தல..
// இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete"அற்புதமான படைப்புகள் மாதவன் ..... இப்படிக்கு கமெண்ட்ஸ் பார்த்து கமெண்ட்ஸ் போடும் சங்கம்"//
'கும்மி'ல இதுலாம் சாதாரணமப்பா..
//+++ மாலுமி +++ said...
ReplyDelete" வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி "
'கும்மி'ல இதுலாம் சாதாரணமப்பா..
நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு , நண்பரே
நல்ல கனி நல்ல கனி..!!
ReplyDeleteஅட ச்சே ., நல்ல அறிமுகம் அண்ணா .!!
//ஆதி மனிதன் said... " கலக்கல் ஆரம்பம் ஆயிடுச்சு. காத்திருக்கிறோம் மேலும் பல புதிர்களுக்கு." //
ReplyDelete( தினமும் )வாங்க ஆதி..
முடிஞ்சவரை சுவையா சொல்ல முயற்சி பண்ணுறேன்.
நன்றி..
உங்களைப் பத்தி ரொம்ப பெரிசாவே அறிமுகம் பண்ணிட்டீங்க ..!!
ReplyDelete//வெங்கட் said "இப்படிக்கு கமெண்ட்சை Copy & Paste
ReplyDeleteபண்ணுவோர் சங்கம்.."//
எல்.கே.ஜி லேருந்து ஆரம்பிச்ச பழக்கமாச்சே.. விட்டுடுவோமா என்ன ?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete"காணாப்போயிடுவேன்னு பயமா இருந்ததுனால, நீங்க சொன்ன மாதிரியே எந்த இணைப்புயும் சொடுக்கிப் படிக்கல....! "
நீங்களாவது, நா சொன்னத கேட்டீங்களே.. அதுவே எனக்கு வெற்றிதான்..
// Chitra said..." ஹா,ஹா,ஹா.... ஆரம்பமே கலக்கலாக இருக்குதுங்க... வாழ்த்துக்கள்! "
ReplyDeleteஹி.. ஹி.. ஏதோ என்னால முடிஞ்சா கலைப் பணி..
// எத்தனை எத்தனை
ReplyDeleteசங்கங்களடா? //
--- > அரசியல் ??
// அதில்தான் எத்தனை
சிங்கங்களடா //
--> சிங்கம் எப்பவுமே சிங்கிளாத் தான வரும்..... சேர்ந்து வர ஆரம்பிடிச்சா ? என்னதான் இருந்தாலும் 'சிங்கம்டா.....'
//எல்லோரும் நம்முடைய
தங்கங்களடா! //
தொரை.. ரொம்ப காஸ்ட்லியாப் பேசுது..
//கோமாளி செல்வா said..." நல்ல கனி நல்ல கனி..!!
ReplyDeleteஅட ச்சே ., நல்ல அறிமுகம் அண்ணா .!! "
வடையதான தேடுவ.. 'கனி'யா ?
// கோமாளி செல்வா said...
ReplyDeleteஉங்களைப் பத்தி ரொம்ப பெரிசாவே அறிமுகம் பண்ணிட்டீங்க ..!! //
--> டிஸ்கி - 1 படிச்சீங்களா இல்லையா ?
(வெறும்பயல.. . பாத்தீங்களா என்னத்துக்கு டிச்கிலாம் போட வேண்டி இருக்குனு.. )
//வெறும்பயல.. . பாத்தீங்களா என்னத்துக்கு டிச்கிலாம் போட வேண்டி இருக்குனு.. )
ReplyDelete//
ஹி ஹி ஹி ..!!
ஆரம்பிச்சாச்சா...பலே...போற வேகத்தைப் பார்த்தா ஒரு நாளைக்கு ஒரு பதிவுதானான்னு கேப்பீங்க போலிருக்கே... இன்னொரு பதிவும் இன்னைக்கே வந்துடுமோ...! கலக்குங்க மாதவன்..
ReplyDelete//ஸ்ரீராம். said... "ஆரம்பிச்சாச்சா...பலே...போற வேகத்தைப் பார்த்தா ஒரு நாளைக்கு ஒரு பதிவுதானான்னு கேப்பீங்க போலிருக்கே... இன்னொரு பதிவும் இன்னைக்கே வந்துடுமோ...! கலக்குங்க மாதவன்.. "//
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்..
சரியாச் சொல்லனும்னா, ஏழு நாள்ல ஏழு இடுகையாவது வரணும்..
இது குறைந்த பட்ஷம். அதிக பட்ஷம், எண்களைப் போன்றது (கணக்கே இல்லை)
இருந்தாலும், படிக்கறவங்கள நெனச்சிதான்.. ஒன்னோ ரெண்டோ, தினமும் போடணும்..
அளவுக்கு மிஞ்சினா... என்ன ஆகும்..?
online
ReplyDelete40
ReplyDeleteஎன்னைக் குறிப்பிட்டதற்கும், 'எங்களு'க்கு சுட்டி கொடுத்ததற்கும் நன்றிகள் பல. வலைச் சரத்தில் ஏழு நாட்களும் கலக்குங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல துவக்கம்... நல்ல அறிமுகங்கள்.... (இப்படித்தான போடனும்... சொல்லுங்கப்பா)
ReplyDeleteஅப்புறம், படத்துக்கான் விடை “நக்கல்”
இதுல almost எல்லா பதிவும் ஏற்கனவே எனக்கு அறிமுகமான பதிவுன்றதால, இப்போதைக்கு "வருக வருக"ன்னு வாழ்த்து மட்டும் சொல்லிக்கிறேன்.
ReplyDeleteஎங்க ஆபிஸ்ல அந்த படம் block ஆகியிருக்கு. அதனால, புதிருக்கு ஆன்ஸர் கண்டுபிடிக்க முடியல. எஸ் கே & அருண் சொல்றத வச்சு பாத்தா, இந்த ரெண்டு போஸ்ட்டும் நக்கல் போஸ்ட்டுன்னு சொல்ல வர்றீங்கன்னு நினைக்கிறேன்..
வலைச்சரத்துக்கு வருக! வருக!! என உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
ReplyDelete//போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் தங்கமணிக்கே !//
ReplyDeleteஇப்ப என்ன சொல்ல வர்றீங்க?
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நல்லவேளை நான் எந்த லிங்கையும் படிக்கலை//
ஏன்னா படிக்கத் தெரியாது.
//TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteஅற்புதமான படைப்பு... வருங்கால சந்ததிகள் இதை பேசட்டும்... :))
இப்படிக்கு பதிவைன் முதல் பத்தி மட்டும் படித்து கமெண்ட் போடுவோர் சங்கம்.. :))//
இதை நான் வழிமொழிகிறேன். இப்படிக்கு பதிவை படிக்காமல் கமெண்ட் போடும் பதிவரைத் தொடருவோர் சங்கம்.
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDelete//இப்படிக்கு பதிவைன் முதல் பத்தி மட்டும் படித்து கமெண்ட் போடுவோர் சங்கம்..//
//
இப்படிக்கு கமெண்ட்ஸ் பார்த்து கமெண்ட்ஸ் போடும் சங்கம்
//
//
இப்படிக்கு கமெண்ட்சை Copy & Paste
பண்ணுவோர் சங்கம்..
//
எத்தனை எத்தனை
சங்கங்களடா?
அதில்தான் எத்தனை
சிங்கங்களடா
எல்லோரும் நம்முடைய
தங்கங்களடா!
(சங்கத்துக்கு பங்கம் சேர்க்கும் சங்கம்)//
ஆஹா அருமை.
இப்படிக்கு,
சங்கத்துக்கு பங்கம் சேர்க்கும் சங்கதுக்கு பங்கம் வரவழைக்கும் சங்கம்.
49
ReplyDeleteவடை எனக்கா?
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கமணிக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.
வருக வருக மாதவன் சார், ஆரம்பமே நல்லா இருக்கே. அதுலயும் இப்படி படத்த பார்த்து கேஸ் பண்ற போட்டிவேறையா கலக்குக
ReplyDeleteThanks to
ReplyDeleteArun Prasath,
Nararaaja Cholan,
KG. Gowthaman,
Anu,
Komathi Arasu,
Gayathri
54
ReplyDeleteவந்துட்டீங்களா?
நகைச்சுவையான சுய அறிமுகம்.
கலகலன்னு இருக்கு படிக்க.
வாழ்த்துக்கள் மாது!
சில நாட்களா கோமாளிகள் கையில் வலைச்சரம் சிக்கிவிட்டது போலருக்கே.
ReplyDelete//
ReplyDeleteAnonymous said...
சில நாட்களா கோமாளிகள் கையில் வலைச்சரம் சிக்கிவிட்டது போலருக்கே.////
எலேய் உனக்கு உன் பேரை சொல்றதுக்கே துப்பில்லை. நீ பேசாத.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//
Anonymous said...
சில நாட்களா கோமாளிகள் கையில் வலைச்சரம் சிக்கிவிட்டது போலருக்கே.////
எலேய் உனக்கு உன் பேரை சொல்றதுக்கே துப்பில்லை. நீ பேசாத.
//
ஒரு வேளை, கோமாளிக்கும் ஜாலி மேனுக்கும் வித்தியாசம் தெரியாதவரா இருப்பாரோ!
ஆஹா நீங்க எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் பெயர் சொல்ல விருப்பமில்லதவரா? ரைட்டு
ReplyDelete//Anonymous said...
ReplyDeleteசில நாட்களா கோமாளிகள் கையில் வலைச்சரம் சிக்கிவிட்டது போலருக்கே.
//
இதை ஒரு அனானியா வந்து சொல்ல வேண்டிய அவசியமில்லையே! அது சரி, எத்தனை பேருக்கு தன்னோட கருத்துகளை தைரியமா சொல்ற பக்குவமிருக்கு?
ஐ அறுபது! (கோமாளிகள் எனப் போற்றப் படுவோர் சங்கம்)
ReplyDelete@ // மோகன் குமார் said...
ReplyDeleteஆஹா நீங்க எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் பெயர் சொல்ல விருப்பமில்லதவரா? ரைட்டு
//
ஆமாம், அவரே எழுதுறப்ப நாமளும் ட்ரை பண்ணலாம்னுதான்....
// NIZAMUDEEN said...
ReplyDelete54
வந்துட்டீங்களா? நகைச்சுவையான சுய அறிமுகம். கலகலன்னு இருக்கு படிக்க. வாழ்த்துக்கள் மாது! //
உங்கள் ரசனைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி..
// எலேய் உனக்கு உன் பேரை சொல்றதுக்கே துப்பில்லை. நீ பேசாத. //
ReplyDeleteநண்பர் ரமேஷ்.. பொறுமை.. பொறுமை..
ஏதோ என்னால் முடிந்தவரை நகைச்சுவையாக எழத முயல்கிறேன். படியுங்கள் .. சரியாக இல்லையென்றால் எது சரியில்லை எனச் சொல்லுங்கள்.. மாற்றிக் கொள்ள முயலுவேனே ?
@Anonymous
ReplyDelete//Anonymous said...
சில நாட்களா கோமாளிகள் கையில் வலைச்சரம் சிக்கிவிட்டது போலருக்கே.//
I Cordially Invite you to the so called Komalis blog to save valaisaram... :))
Address : http://terrorkummi.blogspot.com/
ஐய்யா!! தங்களை எங்கள் வலைதளத்திற்க்கு அன்புடன் அழைக்கிறேன். தங்களை போன்ற மாவீரர்களை எங்கள் தளம் கட்டி அணைத்து வரவேற்க்க காத்து இருக்கிறது... :))
அனானிக்கெல்லாம் பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்களே.. போய் வேலைய பாருங்கப்பா..
ReplyDeleteஇப்படிக்கு,
இன்னொரு அனானி ;)
//Anonymous said... "அனானிக்கெல்லாம் பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்களே.. போய் வேலைய பாருங்கப்பா.."
ReplyDeleteஇப்படிக்கு,
இன்னொரு அனானி ;)"
//
ரெண்டாவது அனானியாரே... படிச்சிட்டு பிரயோஜனமா இருந்தா கமெண்டு போடுங்க.... இந்த மாதிரி கமெண்டு போட்டு உங்க டயத்து வேஸ்டு பண்ணுறீங்களே..
அட.. நா யாரா ? நா ரிடையர் ஆயி நாலு வருசம் ஆயிடிச்சி.. அதான் பொழுது போகாம இப்படி அனானிகுலாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்..
--- அனானி-3
//Anonymous said...
ReplyDeleteசில நாட்களா கோமாளிகள் கையில் வலைச்சரம் சிக்கிவிட்டது போலருக்கே.//
ஹா ஹா ....,மிகவும் அருமையான கமெண்ட் ..,அனானி அவர்களே ...,நீங்கள் தயவு செய்து http://terrorkummi.blogspot.com/ ,இந்த அட்ரஸ்க்கு நீங்கள் வரவும் ,அல்லது thillumullu2011.blogspot.com க்கு வந்து உங்கள் பொன்னான கருத்துகுகளை பின்னுட்டமாக இடவும் ...,உங்களை வாரி அனைத்து அனைத்திற்கும் பதில் சொல்ல கடமைபட்டுளேன்..,உங்களுடைய பெயர் மறந்து விட்டால் பராவில்லை என்பதையும் இந்த நேரத்தில் தெரிய படுத்தி கொள்கிறேன் ...,
///// நண்பர் ரமேஷ்.. பொறுமை.. பொறுமை..
ReplyDeleteஏதோ என்னால் முடிந்தவரை நகைச்சுவையாக எழத முயல்கிறேன். படியுங்கள் .. சரியாக இல்லையென்றால் எது சரியில்லை எனச் சொல்லுங்கள்.. மாற்றிக் கொள்ள முயலுவேனே ? ////
@ மாதவன்
இதில் எல்லாம் பொறுமையாக இருக்க முடியாது ,எழுதிய எழுத்தில் எவரையும் திருப்தி படுத்த முடியாது அது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில்( நிலப்ரபுதுவ காலத்தில் எழுதப்பட்ட ஆணாதிக்க கருத்து என்று சொல்பவர்கள் உண்டு ) இருந்து தற்போது எழுதும் இலக்கியம் என்கிற பேரில் குப்பையை எழுதி குவித்து புகழை தேடும் எழுத்தாளர்கள் மத்தியில் தாங்கள் எழுதியுள்ள பதிவுகள் நிதர்சன உண்மையானது ,மாற்று கருத்தை தெரிவிக்க அந்த அனானி தன்னுடைய பெயரை வைத்து கொண்டு வந்திருந்தால் நீங்கள் எழுதிய மேலுள்ள பின்னோட்டம் சரியாக இருக்கும் என்பது என் எண்ணம் .
///// I Cordially Invite you to the so called Komalis blog to save valaisaram... :)) /////
ReplyDeleteஅடிச்சான் பாருயா ..,எங்காளு ....,இன்னாமா இங்க்லிபிசு பேசுறே ...,டெர்ரர் . ஆமா இன்னாய சொல்லிகினே அந்த அனானிக்கு ...,ஒன்னியுமே பிரியல .
///// I Cordially Invite you to the so called Komalis blog to save valaisaram... :)) /////
ReplyDeleteஅடிச்சான் பாருயா ..,எங்காளு ....,இன்னாமா இங்க்லிபிசு பேசுறே ...,டெர்ரர் . ஆமா இன்னாய சொல்லிகினே அந்த அனானிக்கு ...,ஒன்னியுமே பிரியல .
@ தில்லு முல்லு ...
ReplyDeleteஹி.. ஹி.. என்னோடது கொஞ்சம் சாஃப்ட் அப்ரோச்.. அதான்..
நீங்க போட்ட பின்னூட்டம் எல்லாமே சூப்பர இருக்கு.. நன்றி.. நாளைக்கும் மறக்காம வாங்க..
மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇதையும் படிச்சி பாருங்க
இந்தியா பைத்தியகார நாடு...?