27.02.2012 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

Wednesday, February 29, 2012

மனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி

சாலையில் எத்தனையோ அனாதையாக விடப்பட்ட பெரியவர்களைப் பார்க்கிறோம்..
ஆனால் ஐயோ பாவம் என்ற வார்த்தையுடன் அவர்களைக் கடந்து செல்கிறோம்.
ஆனால் இந்த வலைபதிவர் ஈரம் மிக்க மனதுடன் அவர்களைக்  காப்பாற்றி 
உரியவர்களிடம் சமர்ப்பிக்கிறார். இவரை விட உயர்ந்த மனிதர் 
யாரேனும் உண்டோ உலகத்தில்.

ராஜம்மாளைப்  பாருங்கள் இவரைப்போல எத்தனை மனிதர்கள் நகைக்காக அழைத்து வரப்பட்டு எங்கோ ஒரு மூலையில் அனாதையாக விடப்பட்டுள்ளார்களோ?   


                                    
   
உறவினரே மனம் மாறி அனாதையாக விடப்பட்ட அலமேலு அம்மாளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 

                                        
மகனாலேயே அனாதையாக விடப்பட்ட 80௦  வயது பாட்டி மரண நேரத்தில் மகனைச் சந்தித்திருக்கிறார் 


மனநிலை பாதிக்கப்பட்ட நிர்மலா குணமடைந்த அதிசயம். 
                                                 



போகும்போது வாழ்கையில் என்னதாங்க கொண்டு போகப் போகிறோம் 
இந்தப் பதிவரை அமெரிக்க பத்திரிக்கை ஒன்றும் பெருமைப்படுத்தி உள்ளது.

மகேந்த்ரனைப் போல பதிவர்களும் ஈரமுள்ளவர்களும் பதிவுலகத்தில் தோன்றிட 
வலைச்சரம்  போன்ற இணையங்கள் உறுதுணை புரியவேண்டும்.
                            

இப்படிப்பட்ட ஈரமுள்ள பதிவர்களை யாரேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமிட்டுச் செல்லவும் மறக்காமல் .


சிந்திக்க தூண்டும் சில பதிவுகள் 


மெத்தனமாக இருந்து விடாதீர்கள் என்று எத்தனம் பதிவு நம்மை சாதிக்க தூண்டுகிறது கே.ஆர் .ஸ்ரீதர் போல .



1800 க்கும் மேல் பதிவுகளை தேன் தமிழில் எழுதி அரசியல் வாதியாய் இருந்தால் என்ன? ஆளும் கட்சியாய் இருந்தால் என்ன 
அம்பானி கம்பெனியில் தயாநிதிக்கு பங்கு என்று படிக்கத் தூண்டுகிறார். 



நடந்த கதை குறும்படத்தை நம் கண்முன் நிழலாடச் செய்கிறது திரை பறை பதிவுலகம். 


எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா சாஜகானின் கவிதையை அடர் கருப்பில் சென்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள். 


காவல் கோட்டம் ஒரு அனுபவம் சந்தேகமா தமிழ் வீதியில் நடந்து தெரிந்து கொள்ளுங்கள்.


புதிய பதிவர்களின் திறமைகளைக் காணலாம் இப்போது 



எண்ணங்களும் திரை வண்ணங்களும் வலைப்பதிவிற்குச் சென்றால்..

கேள்வியைத் தேடும் படம் பார்த்ததுண்டா நீங்கள் சினிமா சினிமாவிற்குச் சென்று வாருங்கள். 

அண்டை வீட்டாரிடம் அன்பு செலுத்த இறைவனிடம் கை ஏந்துங்கள்.

எல்லைகள் இல்லாமல் நீண்டு கொண்டே போகிறது 

நம்மைத் தொட்டுவிட்டுச் செல்கிறது தமிழ்க் காற்று .



நாளை எதைப் படிப்பது எதை விடுவது 
இவருக்கு எது தெரியாமலிருக்கும் என்று 
ஆராய்ச்சி செய்ய வைக்கும்  சகலகலா வல்ல வலைப்பதிவு ஒன்றுக்கு 
அழைத்து செல்லும் தமிழ்ப் பைங்கிளி.
                                     


அண்மைய மறுமொழிகள்

மகளிர் சக்தி

தமிழ் மணத்தில் - தற்பொழுது