07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 2, 2015

மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.

வலைச்சரத்திற்கு அறிமுகமாகிய மூன்றாம் நாள் வணக்கம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பர் , மூன்று முத்துக்களுடன் தான் இன்றைய பதிவை தொடங்குகிறேன் .

அப்படி என்ன முத்தாக இருக்கும் ?

மூன்று வித்யாசமான பதிவர்கள் . சாதாரண இணையத்தை துருவி (ப்ரவுஸிங்க்கு சரியான தமிழ் வார்த்தை தெரியலீங்க ..மன்னிச்சூ :))
பல தளங்கள் ஏறி , இறங்கி...( சரி..pg up pg down ந்னு வச்சுப்போமே ) , படித்துப்பார்த்து என்னை பிணைத்துப்பார்த்த பதிவுகளுடன் இன்றைய ஆசிரியப்பணியில் தொடர்கிறேன் . (அச்சோ..இவங்க , பில்டப் தாங்கலையே ந்னு உங்க மை.வாய்ஸ் , இங்க கேக்குது.. அப்பப்ப எனக்காக நினைவுப்படுத்திக்கறேன் ).

ஸ்மார்ட்டா சிந்திப்போம் எல்லாரும் , இப்ப அதே ஒரு படி மேலேப் போய் ஸ்மார்ட் போன் எப்படி வாங்கினா நல்லாருக்கும்ன்னு சிந்திக்கறோம்.

நம் மோகம் அறிந்தே , நேற்று இல்லாத மாற்றம் என்னதுன்னு புது புதுமாடல்களை சந்தைப்படுத்தி , பாக்கெட்டை காலிசெய்வதுடன் , கார்டையும் நிரப்ப வைத்து கடனாளியாகவும் இருக்கிறோம் நம்மில் பலரும்.

என்ன மாடலாக இருந்தாலும் ரெண்டு வருஷம் சூப்பரோ சூப்பர் , அப்பறம் டேமேஜோ டேமஜ் தான்.

அப்படி மொபைல் போனோட தலையாயப்பிரச்சனை அடிக்கடி ஹேங்க் ஆவது.. எல்லாருமே டெக்னிக்கல் பெர்சன் இல்லப்பாருங்க.. !

ஆனால்..அழகா ஒருவர் விலாவரியாக விளக்குகிறார். எப்படி எதிர்கொள்ளலாம் ஆண்டிராய்டு அட்டூழியத்தை என்று.

அவர் U.K.Selvaraju என்ற வலைப்பதிவர் . தன் பெயரிலேயே வலைப்பூவில் இருக்கும் இவரது இந்தப்பதிவு ஹேங்கிங் பிரச்சனைக்கு ஹோல்ட் ஆன் சொல்கிறது.

மொபைல் ஹேங்கிங் ஆகாமல் தடுப்பது எப்படி  என்ற இந்தப்பதிவு.

சரி.. நல்லாருக்கே இவர் சொல்ற ஐடியா என்று பார்த்தால் மனிதர் இயற்கை , ஆரோக்கியம் என மனித வாழ்க்கைக்கு அவசியமானவற்றை அனாயாசமாக அள்ளித்தெளித்திருக்கிறார்.

இப்போது பியூட்டி பார்லர்களில் வாக்ஸிங் ரொம்ப பிரபலம்

 (பெண்களுக்கு தாங்க..)

இதைப்பற்றி நம் முதல்வர்.ஜெ.ஜெ அவர்கள் 1970 களில் பத்திரிகையில் அழகு குறிப்பாக எழுதியிருந்தார். வாக்ஸிங் மிக நல்லது , நாளைடைவில் முடி வளர்வது நின்றுப்போய் வழுவழுப்பான சருமம் வசீகரிக்கும் என்று அந்த நினைவு வர ,

இவரது வலைப்பக்கத்தில் , வேப்பிலைக்கொண்டு இந்த தேவையற்ற ரோமப்பிரச்சனையை தீர்க்கலாம் என்கிறார்.

அத்தோடு பலப்பல ஆரோக்கியத்திற்கான இலைகளையும் அதன் பயன்பாடுகளையும் இயல்பாக தருகிறார். நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலைகள் அதுவும் நம் கொல்லைப்புறத்திலிருந்து பறித்து உடல் நலன் பேணுவோம் என்கிறார் .


சமீபத்தில் டையாய்டில் விழுந்து எழுந்தவள் (உடனே எங்க காயம்ந்னு கேட்கப்படாது.. :)) , என்ற முறையில் , ஆண்டிபயாடிக் எத்தனை அவசியம் ஆனால் அது எடுக்க எடுக்க உடம்பில் செய்யும் அட்டகாசமும் அறிந்து அதிர்ந்தேன்.

அதற்காக நோய் வந்தால் மருந்து எடுத்துதானே ஆக வேண்டும். ஆனால் செய்யக்கூடாததை செய்யாமல் காக்கலாமே.. அதை அழகா சொல்றாருங்க செல்வராஜூ.

ஆண்டி பயாடிக் மருந்துகள் எடுக்கும் போது தவிர்க்க வேண்டியவை என்ற பதிவில் .

2013 லிருந்து வலைப்பதிவராக பல பதிவுகள் , குறிப்பாக உடல் ஹெல்த் சம்பந்தப்பட்டப்பதிவுகளை பகிர்ந்து வரும் U.K செல்வராஜூ அவர்களை வலைச்சரம் சார்பாக வாழ்த்தி... அடுத்தப்பதிவரின் சுவர் காண செல்வோம்.

வெண்புரவி - நாவி .. அருணா..(அருணாச்சலமா சார் ! )  என்றப்பெயருடன் புயலாய் வருவேன் ..தென்றலாய் வருடுவேன் என்று வார்த்தைகளால் வர்ணிக்கறாரோ என்றால் வித்யாசமான பதிவுகளின் பிறப்பிடமாக உள்ளது இவரது வலைப்பூ..


இடுகாடு .. அனைவரும்
அச்சத்துடன் பார்க்கும் மனோ நிலை.. அங்கு மட்டும் யாரும் போக விரும்பாத இடம் ! விதியால் சென்றடையும் இடம்..என்ன !! காலமும் நேரமும் தான் முன்னே... பின்னே !

இடுகாடு செல்லும் வழி , அதைப்பற்றிய ஒரு பதிவா என்று ஆச்சர்யத்துடன் கொஞ்சம் வாய்பிளந்து தான் படித்தேன் . நகைச்சுவையுடன் அவலங்களை தொட்டு செல்கிறார், கூடவே தான் கேட்ட மயான  ஆடியோ பைலையும் இணைத்திருக்கிறார்.

வைரமுத்துவின் வரிகளுடன் ஒரு பதிவு
வைரமுத்துவின் பாடலுடனான பதிவு என்றப்பார்வையை மாற்றிட 2003 ல் வெளிவந்த chokar Bali என்ற பெங்காலிப்படத்தின் விமர்சனமும் ஈர்க்கிறது. மனிதர் பெங்காலி , ஹிந்தி , ஆங்கிலம், தமிழ்ப்படங்கள் என்று பாரபட்சமில்லாமல் பார்த்து பதிவாக்கியிருக்கிறார் , ரசிக்கவும் வைக்கிறார்.
ஐய்வர்யாவின் விதவைக்கோலம் ..பெங்காலி திரைப்படத்தில்
 இவர் எழுதியுள்ள பதிவில் படிக்கலாம் .

தன்னுடைய பிறந்த நாளைப்பற்றிய ஒரு தேடல் , சுவாரஸ்யமாக படிக்க வைக்கிறார். நீங்களும் படித்துப்பாருங்களேன்.


பிறந்த நாள் கண்டுபிடிச்சுப்போங்க ..என்ற பதிவாக உள்ளது .

கவிதை , நகைச்சுவை , சிறுகதை தன் அனுபவம் , விமர்சனம்  என பல விருந்துப்படைக்கும் வெண்புரவி அருணா அவர்களை வலைச்சரம் வாழ்த்துகிறது.

பெண்ணின்றி அழகேது , நிறைவேது , பார்வையேது , பார்ப்பதேது.. !

கரெக்ட் ..அடுத்தது பெண் பதிவர் .

கவிதாவின் பார்வையில் என்ற வலைப்பூவியின் சொந்தக்காரர் .

அன்பே சிவம்..

தேடி சோறு நிதம் தின்று பல சின்னச்சிறுகதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழபருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனன்று நினைத்தாயோ - பாரதியாரின்  வலி மிகும் வரிகளுடன் வரவேற்கிறார் கவிதா.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவரது வரவேற்பு படு உற்சாகம் தந்து உள்ளிழுத்துப்போடுகிறது நம்மை.

இரவு நேரப்பயணம் எல்லாப்பெண்களையும் அலார்ட் அலமேலு ஆக்கிவிடும். அதுவும் பஸ் பயணங்கள் ஹாரிபிள் ! பின் சீட்டு மைனர்கள் , பஸ் ஸ்டாண்ட் பார்வைகள் , புகைவண்டியாய் பொதுப்பார்வைவீசிடும் ஆசாமிகள் என்று பயணிப்பதை சவாலாக மாற்றிவிடும் சமூகத்தில் வாழ்கிறோம்.

அதுப்போன்ற ஒரு பயணத்தில் தன் அனுபவம் , தன்னை ஹீரோ போல காத்த ஒருவரைப்பற்றி சுவைப்பட எழுதியிருக்கிறார்.


பாகுபலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை  என்று சுவைப்பட எழுதியிருக்கிறார் .

சமீபத்தில் ஒரு பேஸ்புக் பதிவு நண்பருடையதைப்படித்தேன் ! ஒரு சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெரு(வெறி) நாய்கள் பற்றியும் , த்ரிஷாவும்  , விஷாலும் ஏன் மேனகா காந்தியும் கடிப்பட்டிருந்தால் தெரியும் என வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். எத்தனை உண்மை.

இரவு 8 மணிக்கு மேல் பல தெருக்களில் இவர்களின் அரசாட்சிதான் ! நமக்கு குலை நடுங்கி.. கைவழியே ஹார்ட்டையே சர்ஜரி இல்லாமல் எடுத்துத்தர வைக்கும் நவீன சர்ஜன்கள் ! கிடைத்தால் சதையையும் எடுத்துத்தருவர்.
இப்படி ஒரு அனுபவமாக கவிதாவின் பதிவில் தெரு நாய் பற்றி எழுதியிருக்கிறார்.

தெரு நாய்கள் என்ற தலைப்பில்.

கவிதை , கட்டுரை , சமையல் குறிப்பு என பலப்பதிவுகளுடன்
எளிதாக , அதே சமயம் இயல்பான நடையில் ஈர்த்திடும் கவிதா அவர்களுக்கு நம் வலைச்சரம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்தது..
வேறு பல பதிவுகள் , பதிவர்களுடன் நாளை சந்திப்போம்... !

அதுவரை

அன்புடன்
சுமிதா ரமேஷ்.

19 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    இனி தான் இவர்கள் தளம் சென்று பார்க்கனும், தங்கள் எழுத்துநடை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மகேஷ்வரி :)

      Delete
  3. மூன்று முத்துக்களுக்கும் வாழ்த்துக்கள். அவர்களை அறிமுகப்படுத்திய விதம் அருமை சுமிதா ரமேஷ்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நன்றியும் ...

      Delete
  4. மேலும் சிறப்பாக விளங்குதற்கு - இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு நல்வாழ்த்துகள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. இரு முத்துக்கள் எனக்குப் புதிது இணைந்து கொள்கின்றேன் ! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோ இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு எமது நல்வாழ்த்துகள் தொடர்கிறேன்
    கில்லர்ஜி

    ReplyDelete
  7. ?அல்வாழ்த்துகள் சுமி. அறிமுகமான பதிவுகள் அருமையாக இருக்கின்றன. நன்றி மா. புதுமையான அணுகல் முறை,.

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் ரேவதிம்மா .. சந்தோஷம் .. :)

      Delete
  8. மூன்று தளங்களும் புதியவையே. வாழ்த்துகள் அனைவருக்கும். அசத்தலான அறிமுகம் சுமி.

    ReplyDelete
  9. சிறப்பான பதிவர் அறிமுகம்! விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. மிக அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ஜலீலாகமால்
    http://samaiyalattakaasam.blogspot.com/

    ReplyDelete
  11. இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! Browsing என்பதை தமிழில் தேடுதல் அல்லது உலாவுதல் என சொல்லலாம்.

    ReplyDelete
  12. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். அழகான நடையில் பதிவுகள் தொடர்கின்றன. நாளை சந்திப்போம். நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது