வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள்
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்
பெரிய ஜீயர் என்றழைக்கப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அரங்கனுக்கே ஆசார்யன் என்கிற பெருமை பெற்றவர். ஒரு வருட காலம் அரங்கன் தம் உற்சவங்களை எல்லாம் நிறுத்திக் கொண்டு இவருடைய திருவாய்மொழி காலட்சேபத்தை (சொற்பொழிவை) கேட்டு மகிழ்ந்தாராம். இறுதி நாளன்று ஒரு பாலகனாய் வந்து மேலே சொன்னதை குரு வாழ்த்தாய் அருளினாராம்.
வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
பாதியுமுறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பசி பிணி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே
ஆழ்வார் பாசுரத்தின் அழகைப் பாருங்கள். வேதம் சொல்லிய 100 வயதுக் காலம் ஒருவர் வாழ்வதாய்க் கொண்டால் அதில் எப்படி எல்லாம் வீணாகிறது என்கிற தவிப்பு.. பேதை.. பாலகன்.. அது ஆகும் என்று பருவங்களைப் பிரிக்கிறார். இளைஞனாய் இருக்கும் காலத்தை ‘அது’ என்றே குறிப்பிடுகிறார்.
ஒரு இளைஞன் எப்படி உருவாகிறானோ அதுவே அவன் பிற்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால்.. யவ்வன அவஸ்தையை.. அது என்று நயமாகக் குறிப்பிட்டு காட்டுகிறார்.
என் ப்ரிய எழுத்தாளர் லா.ச.ரா. அவர்கள் வார்த்தையைக் கேட்போமா..
ஒரு நல்ல புத்தகம் தூண்டி உன்னை ஆழ்த்தும் சிந்தனையும் சொகுஸுதான்.
நீ படிக்கும் புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்திலோ
அதில் ஒரு வாக்கியத்திலோ சொற்றொடரிலோ பதத்திலோ
அல்லது இரு பதங்களிடையே தொக்கி
உன்னுள்ளே நின்று கொண்டு உன்னை இடறி நிறுத்தும்
அணு நேர மோனத்திலோ
நீண்ட பெருமூச்சிலோ
உன் கண்ணில் பனிக்கும் கண்ணீர்த் துளியிலோ
அந்தத் தருணத்தோடு நீ ஒன்றிப் போய்
உன்னை அடையாளம் கண்டு கொள்வது
அதுவே சொகுஸுதான்.. பெரிய சொகுஸு !
இனி இன்றைய பதிவர்கள்...
பால கணேஷ் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்துகிறவர்.. இவருக்கு அலுப்பு என்பதே வராதா.. இவ்வளவு சுறுசுறுப்பாய் செயல்படுகிற இவரது ஆற்றலில் நூறில் ஒரு பங்கு எனக்கு வாய்த்திருந்தாலும் எவ்வளவோ சாதித்திருப்பேன்..
பதிவுகளில் இன்னதுதான் என்கிற வரையறைக்கு உட்படாதவர்.. இவரது வாசிப்போ அளவில்லாதது.. அந்த நாள் சமாச்சாரங்கள் முதல் இந்த நாள் லேட்டஸ்ட் டெக்னிக் வரை இவருக்கு எல்லாமே அத்துப்படி.
இவரை நான் அறிமுகம் செய்யவில்லை..இங்கே. யாரேனும் ஒருவருக்கு இவரைத் தெரியாமல் தற்செயலாய் விடுபட்டிருந்தால்.. அந்தக் குறை நீங்க வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தைகள்.
மேய்ச்சல் மைதானம் இவரது இன்னொரு தளம். நகைச்சுவையில் வல்லவரான இவர் சூழலை கலகலப்பாக்குவதில் சகல கலா வல்லவர்.
நான் பேச நினைப்பதெல்லாம் சென்னைப் பித்தன் அவர்களின் வலைத்தளம்.
பதிவர்கள் பலர் பதிவிடுவதைக் கைவிட்டு விடும் இந்நாட்களில் இப்போதும் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட சில பதிவர்களில் இவரும் ஒருவர். வலைத் தளத்தில் மூழ்கி இருப்பதை நையாண்டி செய்தே ஒரு பதிவிட்டிருக்கும் இவரைப் போன்றோரால் இன்னமும் பதிவுலகம் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. வணக்கம் சென்னைப் பித்தன் ஸார்.
சும்மா இருக்க முடியுமா.. சாதிக்கப் பிறந்தவர்களால் ? 5 வலைப்பூக்களுக்கு சொந்தக்காரரான தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் பதிவுலகம் நன்கறிந்த படைப்பாளி. முகநூலிலும் இவரது எழுத்துக் கொடி பறக்கிறது. கவிதை.. பயணம்.. சமையல்.. விமர்சனம் இப்படி இவர் தொடாத எழுத்து இல்லை.
வாழ்த்துகள்..
தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்களும் பிரபல பதிவர். இப்போதும் இவரது வலைத்தளம் சுறுசுறுப்பாய் இயங்குகிறது. ஒவ்வொரு தலைப்பிலும் கவி புனையும் இவரது திறமைக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டோ ?!
மேலே சொன்னவர்கள் சிலர்தான். இம்மாதிரியான உற்சாகமான பதிவர்கள்தான் வலைத்தளம் சிறப்பாகச் செயல்பட காரணமாய் இருப்பதோடு வாசிப்பவரையும் தூண்டி எழுத வைப்பவர்கள்.
ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டாம். ஒரு காலத்தில் வலைத்தளம் மிகவும் ஈர்ப்புடன் இருந்தது. அதன் ஜீவன் குலையாமல் காத்து வருகிற இவர்களைப் போன்றோர்க்கு நம் நன்றி வணக்கம் எந்நாளும் உரித்தாகட்டும்.
நாளையோடு எனது வலைச்சர ஆசிரியர் பணி நிறைவு பெறுகிறது.. என்னோடு இணைந்திருந்து உற்சாகப்படுத்தும் உங்கள் பேரன்பை நாளையும் எதிர்பார்க்கிறேன் என்று அன்போடு கூறிக் கொள்கிறேன்.
|
|
ஆஹா இன்றைய வலைச்சரத்தில் நான் தொடர்ந்து படிக்கும் நண்பர்களின் பதிவுகள்..... அனைவருக்கும் எனது வாழ்த்துகளும்.....
ReplyDeleteநன்றி வெங்கட் நாகராஜ்...
Deleteசென்னைப்பித்தன், ரமணி ஸார், தேனு அக்கா எல்லாரும் இடைவிடாமல் நிறைய எழுதி வருகிறார்கள். நான் சற்று இடைவெளி விட்டே இப்போது எழுத முடிகிறது. இந்த நிலையில் இங்கே உங்கள் மனதிலிருந்து என்னைக் குறிப்பிட்டிருப்பது, நண்பர்களின் கைப்பிடித்து ஓட மகத்தானதொரு கிரியாஊக்கி எனக்கு. மனம் நிறைய மகிழ்வுடன் நன்றி அண்ணா.
ReplyDeleteமகிழ்ச்சி பால கணேஷ்
Deleteநல்ல பதிவர்களை நயமாக அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் மிக தன்றி ரிஷபன் ஜி.
ReplyDeleteஅவர்களால் தான் நமக்கும் உற்சாகம்..நன்றி
Deleteமூத்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteவணக்கம் நண்பரே
Deleteவணக்கம்!!!மூத்த பதிவர் சென்னை பித்தன் அய்யா "வை மட்டும் தெரியும்!!!!அனைவருக்கும் நன்றிகள்!!! தங்களுக்கும்!
ReplyDeleteவழக்கம்போல் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. இன்று தாங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்கள் அறிமுகமானவர்களே. நாளை சந்திப்போம்.
ReplyDeleteரிஷபன் அவர்கள் வலையில் பால கணேஷ் அவர்கள் குறிப்பிடப்பட்டு
ReplyDeleteஉள்ளார்.
எனக்கு பெரிதும் மகிழ்வாக இருக்கிறது.
உருவத்திலும் ஆற்றலிலும் அந்த சாக்ஷாத் வினாயகனே.
பால கணேஷ் அவர்களை எப்பொழுது சந்தித்தாலும் அவர்களது "வாருங்கள் வாருங்கள்" என்று மனதார அழைப்பார்.
யாருக்கு என்ன உதவி தேவையாக இருந்தாலும் அதை முன் நின்று செய்வார். இடர் வரினும் களைவார். அதிலும் விக்ன விநாயகன் தான்.
இவரது ஆற்றல் வலை உலகத்துக்குப் பெரும் உதவியாக இருக்கிறது.
இவர் பக்கத்தில் இருந்தால் யானை பலம் நமக்கு வந்து விடும்
விநாயகன் எப்பொழுதும் அமர்ந்திருப்பது மூஞ்சுறு வாகனத்தில்.
இன்று ரிஷப வாகனத்தில்.
சுமுகாய, ஏக தந்தாய , கபிலாய, கஜ கர்னகாய, லம்போதராய,விகடாய, விக்னராஜாய, விநாயகாய, பால சந்திராய , கஜானனாய , தூம கேதவே, கணாத்யக்ஷாய,
இந்த விநாயகப் பெருமானின் அத்தனை நாமங்களும்ஆற்றல்களும் பால கணேஷு அவர்களிடம் சங்கமம்.
சுப்பு தாத்தா
www.subbuthatha.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
www.subbuthathacomments.blogspot.com
This comment has been removed by the author.
ReplyDeleteஅந்தரங்கம் யாவும் அறியும் அந்த ரங்கம்!..
ReplyDeleteதிருமூலஸ்தானத்தை நெருங்கி விட்டோம்!..
அரங்கனை நெருங்கியே,,,,,,,,
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கங்கள்,
தங்களுக்கு நன்றிகள்.
அனைவரும் தெரிந்தவர்களே. அதிகம் போனதில்லை என்றாலும் முக்கியமான பதிவுகளை விட்டதில்லை. மணவாள மாமுனிகள் குறித்த இடுகைக்கு நன்றி. இன்னும் படிக்கக் கொடுத்திருக்கலாம் என்னும் எண்ணம் தோன்றியது.
ReplyDeleteஅறிமுகங்களாய் தொடர்ந்து வாசிக்கும் பிரபலங்கள்... வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் ரசனையைப் பகிர்ந்தேன்.. அவர்கள் பிரபலங்களே
Deleteமுத்துமுத்தான பதிவர்களை மொழிந்திருக்கிறீர்கள். இந்த வார அறிமுகங்கள் ரங்கனையும் சேவித்துக் கொண்டே..... புண்ணியத்துக்கு புண்ணியம், புருஷார்த்தத்துக்கு புருஷார்த்தம்....
ReplyDeleteநமஸ்காரம் !
Deleteஅனைவரையும் நான் தொடர்ந்தே வருகின்றேன்.
ReplyDeleteஅனைவரையும் நான் தொடர்ந்தே வருகின்றேன்.
ReplyDeleteஅறிவேன்.. நீங்களும் பிரபலமே !
Deleteஅறிமுகத்துக்கு மிக்க நன்றி ரிஷபன் அவர்களே
ReplyDeleteஅறிமுகம் இல்லை.. ரசித்ததைப் பகிர்ந்தேன்.. நீங்கள் ஏற்கெனவே பிரபலம் !
Deleteசிறப்பான பதிவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅரங்கனைப் பற்றிப் படித்து ரசித்தேன்.
ReplyDeleteமனதால் நாமும் இன்னும் அந்த ரங்கனின் குழந்தைப் பருவம்தான். காலட்சேபம் செய்தவர் ஆச்சார்யன்.அவருக்கு குருவானவர் அரங்கன்.
தெரியாத விஷயங்களையும் தெரிந்துகொண்டேன் ரிஷபன்.
எங்களையும் குறிப்பிட்டமைக்கு நன்றிகள். நான் வெறும் துரும்பு.. இல்லை தூசு என்று சொல்லலாம். ( கடவுளையே துகள் என்கிறார்கள் :)
வாழ்த்திய அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றிகள். வலைத்தளம்தான் என்னைத் தொடர்ந்து சோர்வில்லாமல் இயங்கச் செய்கிறது. பின்னாளில் இவையும் ஆவணமாகும் வாய்ப்பு உள்ளது என்ற எண்ணம் அவ்வப்போது ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் கலந்து கட்டியே எழுதி வருகிறேன் :)