முதல் நாளில் சில நிமிடங்கள் ..உங்களோடு ..
வலைச்சரம் ..
இனிய வரவேற்பு தந்து ஊக்கமளித்திருக்கிறீர்கள் . மிக்க மகிழ்ச்சி ! கொஞ்சம் பயமாகத்தான் அறிமுகப்படுத்திக்கொண்டேன் ! உங்கள் அழகான கமெண்ட்ஸ் ரெண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றின பீல் தந்தது .
ஆசிரியர் என்று ,
தந்த வேலைக்கு நான் படித்தப்பதிவுகளை அறிமுகப்படுத்துவதோடு , சில விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து செல்லலாம் என ஆசைப்படுகிறேன் உங்கள் சம்மதத்தோடு !
என்னடா ..பீடிகையெல்லாம் பலமாக இருக்கேன் ந்னு ரொம்ப யோசிக்கவேண்டாம் நட்புக்களே , ஜஸ்ட் சில நிமிஷங்கள் !!
அறிமுகப்படுத்திக்கொள்ளல் .
இது பலருக்கும் எனிமா தந்த பீல் தான் . அதிலும் டீன் ஏஜ்ல ரொம்பவே கூச்சம் பிடுங்கித்திங்கும் ! இந்த உணர்விலிருந்து வெளி வருவது ஒரு சவாலான செயல் தான் !
சிந்தனைகளே செயல்களாகின்றன ! நற் சிந்தனைகள் தானாக நல் வழிகளில் நிறைவடைகின்றன. சும்மாவா சொன்னாங்க பெரியவங்க , வரும் வார்த்தை நல்ல வார்த்தையாக இருக்கணும் என்று !
ஆண் - ஆண் அறிமுகம் ஒரு விதம் , பெண் - பெண் அறிமுகமும் ஒன்றே ஆனால் அதே மாற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது பல தடங்கல்கள் பார்க்கிறோம் !
தடங்கல்களை தகர்ப்பதும் சாத்தியம் தானே !
* எல்லாவிதமான அறிமுகத்திற்கும் நடுவில் இருக்கும் பெரிய கல் (எத்தனை நாளைக்கு தான் block ந்னே சொல்றது , மாற்றுவோமே :) ) தயக்கம் , நம்மைப்பற்றி எதாவது தவறாக நினைத்து விடுவாங்களோ , இல்லை , தவறா எதாவது சொல்லிவிடுவோமோ என்று அத்தனையையும் விட உளறிக்கொட்டி கிளறி மூடிடுவோமோ என்ற அச்சமும் , காரணம்!
* அறிமுகத்தில் , முதலில் நம்மைப்பற்றிய சொல்வது குறைவாக இருக்கலாம்.
நம் எதிரிலிருப்பவரை நிறைய பேச அனுமதிக்கலாம் ! தானாகவே நம் மேல் நல் அபிப்ராயம் தோன்றும் ! (கூடவே இவங்களுக்கு நிறைய விஷயம் தெரியும் போலருக்கு ! என்ற இமேஜையும் சம்பாதிக்கலாம் , சரிதானே ) .
நம் எதிரிலிருப்பவரை நிறைய பேச அனுமதிக்கலாம் ! தானாகவே நம் மேல் நல் அபிப்ராயம் தோன்றும் ! (கூடவே இவங்களுக்கு நிறைய விஷயம் தெரியும் போலருக்கு ! என்ற இமேஜையும் சம்பாதிக்கலாம் , சரிதானே ) .
* பாரதி தந்த நிமிர்ந்த நன்னடை , நேர் கொண்டப்பார்வை - இதை விட சிறப்பாக யாரால் சொல்லிவிட முடியும் ! ?
டைரக்டா கண்ணைப்பார்த்து பேச பழகினால் , நல் மதிப்பு தானாக கிடைக்கும் .
* கைக்குலுக்குதல் மேற்கத்திய பழக்கம் , நம் பழக்கம் வணக்கம் தெரிவித்தல் ,ரெண்டையுமே பின்பற்றியே வாழவேண்டியே கட்டாய சூழல் .
கைக்குலுக்குதல் ..
இதை நம்மைப்பற்றிய அறிமுகத்துடன் சாப்டாக , ஜெண்டிலாக செய்ய , நம்முடன் அறிமுகமாகும் நபர் , இயல்பாக உணரலாம்!
என் கணவரது நண்பர் ஒருவர் ஆர்மில இருந்தவராம் , எப்போது கைக்கொடுத்தாலும் குலுக்கற குலுக்கலில் , கை எலும்பே அழுத்தத்தில் முறிந்துடும் போலருக்கு என்பார். இப்படியும் சில பழக்கங்கள், சிலரை மறக்க முடியாமல் செய்து விடுகின்றன .
*ஆண்கள் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டிருக்கலாம் பதட்டமில்லாமல் இருக்க அல்லது மறைக்க :) , வெளியே எடுத்து குலுக்கும் சமயம் , கை வியர்வையால் ஈரமாக இல்லாமல் இருப்பதும் மறந்திடக்கூடாத ஒன்று !
எப்போதுமே பின்னால் கைக்கட்டியப்படி இருக்க , நம்மைப்பற்றிய மெஜச்டிக் பீல் வர்றத யாராலும் தடுக்க முடியாது .
அப்ப கை முன்னாடி கட்டறது .. அது நம் குருவிடம் , கடவுளின் முன் மட்டும் போதுமே :)
* நாம் சந்திப்பவரைப்பற்றி , உதாரணத்திற்கு , முதலில் ஹாய் சுமி ..என்று ஆரம்பித்து ..முடிக்கும்போது நன்றி . மிஸஸ் சுமிதா ரமேஷ். என்றிட , அட ஒரு அக்கறை பேசற விதத்துலயே ஒரு சின்ன அட்டாச்மெண்ட் காட்டறாங்களே ந்னு தோனும்.
அதே போல நம்மைப்பற்றியும் , நம்ம பெயரையும் அங்க பதிய வைக்கணுமே. .
அதற்கு , I'm sumi , Sumitha Ramesh என்று ஆரம்பிக்கலாம்!
* பெண் - ஆண் அறிமுகம் என்று வரும்போது , கொஞ்சம் பெண்களை கண்களைப்பார்த்து பேசுவது நல்ல மதிப்பை தானாகவே அள்ளித்தரும் .. என்னது ஆணுக்கும் அவசியம் என்கிறீர்களா , ஆமாங்க , இருபாலருக்கும் , ஏன் குழந்தையிடம் பேசும்போது கவனமுடம் இருந்தால் நாம் பேச நினைப்பது ஈசியா அவர்களுக்கு சென்றடையும் .
தேவையில்லாத காம்பிளிமெண்ட்ஸ் அள்ளி வீசாமல் (அதாங்க , இந்த ட்ரெஸ் நல்லா சூட் ஆகுது .. கூட வந்தது உங்க கணவரா..அவர் நண்பராகவோ , உறவினராகவோ கூட இருக்கலாமே !! ) நிதானமாக அதே சமயம் அன்பு புன்முறுவலோடு அறிமுகப்படுத்திக்கொள்ள, எப்போதும் கிடைக்கும் பீல் நண்பேண்டா தான் !
* ஒரு குழுவினருடன் சேர்ந்து இருப்பதும் , நடப்பதும் , குறிப்பாக ஆபீஸில் , கல்லூரியில் , இப்படி கிடைக்கு வாய்ப்புகள் தான் ,பின்னாளில் பல நல்ல காண்டக்ஸ் க்கு காரணமாகின்றன .
பலருடன் செல்ல , நடக்க அல்லது நடந்து சென்று சந்திக்கும் தருணங்களில்..
, முதுகில் ஐஸ் வாட்டர் யாராவது கொட்டிவிட்டார்கள் ந்னு ( ஒரு பேச்சுக்கு தாங்க ) நினைப்போம் , ஒரு ஜில் உணர்வு வரும் அல்லவா .அப்போது நம் நடை எப்படி இருக்கும் , தோள்கள் உயர்த்தி , நேர் கொண்ட பார்வை வருமல்லவா ! அதே தான் அவசியம் மற்றவர் முன் முதல் அறிமுகத்தில் .
* என்னுடன் பணிப்புரிந்தப்பெண் மிக புத்திசாலி , ரொம்பவே தகுதியானவர் , நன்கு பழகக்கூடியவர் . அவர் சேர்ந்து பல நாட்களில் , அவர் வரும் சமயம் அனைவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவர் , காரணம் துர் நாற்றம் ! பலரும் பல விதத்தில் அறிவுரை சொல்ல முயன்றது ம் தோற்றுப்போய் , அவரை வேலையிலிருந்தே அனுப்பிவிட்டனர் , அதே போலவே வாய் துர் நாற்றமும் கவனித்தல் கொள்ள வேண்டியது.
இதெல்லாம் சில சாம்பிள்கள் தான் , முதல் பார்வை , முதல் பேச்சு , முதல் அணுகுமுறை இவையே பல இடங்களிலும் வெற்றி வாய்ப்பை பெற்றுத்தருகிறது.
இப்போது ஆன் லைனிலும் பல அறிமுகங்கள் , போனில் பல இண்டர்வியூக்கள் ,
எப்போதுமே குறைவாகப்பேசி , நிறைவாக கேட்டல் நல்ல பலனைத்தருமாம்!
(அப்ப நா மட்டும் வளவளந்னு எழுதினா தெய்வ குத்தமாகாதா :P ,)
நான் குறிப்பிட்ட சில பாயிண்ட்ஸ் பலனுள்ளதாக அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையோட ( யாருங்க அது. ..நம்பிக்கை தானே வாழ்க்கை ..ந்னு பிரபு டயலாக் தர்றீங்க , இதோ கிளம்பிட்டேன் :)) பதிவர்களின் பதிவுகளுடன் வருகிறேன் ..
அன்புடன்
சுமிதா ரமேஷ் .
|
|
மகிழ்ச்சி மா அறிமுகமே இனிய நட்பை உருவாக்கும்..நம்மைப்பற்றிய மதிப்பையும்....தொடர வாழ்த்துகள்மா.
ReplyDeleteநன்றி கீதா :)
Deleteநல்ல கருத்துக்களைப் பகிர்ந்திருக்கீங்க சுமி. மனம் எப்படியோ அப்படியே பார்வையும். நேராகக் கண்களைப் பார்த்துப் பேசுதல் என்பது மனசில் களங்கமில்லையெனில் தானே வரும். அதற்குப் பயிற்சில்லாம் தரணுமா என்ன..?
ReplyDeleteதேங்க்யூ சார் ! இது என் ப்ளாக்கில் நான் எழுத இருந்தது , இங்கே பகிர்ந்திருக்கிறேன் ! தேவையே இல்லை , ஆனால் அறிமுகம் சிறக்க நன்றாக இருக்குமே என்று எழுதினேன் :)
Deleteவலையுலகில் நாம் தான் அதிகம் பேசவேண்டும். அப்போதுதான் பதிவுகள் சுவாரஸ்யம் பெறும். நேரில் நீங்கள் சொல்வது போல....
ReplyDeleteஇன்றைக்கு அறிமுகங்கள் ஏதும் இல்லையே?
ஆபீஸ் மீட்டிங்க்ஸ் , ஸ்கூலில் பேரண்ட்ஸ் , சக பேரண்டுடன் பேசுவது , வீடுகளில் முதல் அறிமுகம் எனப்பலரும் , பல தர்மசங்கடங்களில் ஆழ்படுவதைப்பார்க்கிறேன் ! இது முதலில் அறிமுகம் சிறப்பாக இருக்க சில டிப்ஸ்
DeleteThis comment has been removed by the author.
Deleteஅழகான அறிமுகப் பகிர்வு.
ReplyDeleteஅசத்துங்க...
நன்றி , குமார் . மகிழ்ச்சி ..
Deleteமனித உணர்வுகளின் நுணுக்கங்கள்!..
ReplyDeleteஅழகிய நடையில் அருமை.. வாழ்க நலம்..
தேங்க்யூ சார் .. அப்படியே , தொடர்கிறேன் .. மகிழ்ச்சி
Deleteவணக்கம்,
ReplyDeleteநல்ல தகவல், சக மனிதரிடம் பேசும் முறை,,,,,,, அருமை, வாழ்த்துக்கள்,
தொடருங்கள், தொடர்கிறேன்.
வணக்கம் , மகேஸ்வரி , மகிழ்ச்சி , தொடர்வோம் , இணைந்திருப்போம்
Deleteநல்லதொரு பதிவு. பெர்சனாலிட்டி டெவலெப்மென்டில் சொல்லித் தரப்படுவது, பயிற்சி அளிக்கப்படுவதும்...
ReplyDeleteஅசத்தல் தொடக்கம்...
தொடர்கின்றோம்....
சந்தோஷம் , இது சமீபத்தில் இன்னமும் சிலர் இப்படி இருக்காங்களே என்று வியந்து எழுதியது . நன்றி ..
Deleteபாரதி தந்த நிமிர்ந்த நன்னடை , நேர் கொண்டப்பார்வை - இதை விட சிறப்பாக யாரால் சொல்லிவிட முடியும் ! ? // உண்மை சுமி. அருமை. கண்கள் நேராகப் பார்த்துப் பேசாதவர்களை பார்க்கும் போது அவர்களுடன் மனம் ஒன்றுவதில்லை. பணி தொடர வாழ்த்துக்கள் மா!
ReplyDeleteஅறிவுரைகள் அழகாய் இருக்கு வ்லையுலகில் தயக்கங்கள் அதிகமாக இருப்பது என் அவதானிப்பு.தயக்கம் தொலையட்டும் நட்பு நெருக்கம் பரவட்டும்]]))))
ReplyDeleteதன்னை அறிமுகப்படுத்துவதிலும் ஒரு வித்தியாசமான பாணி. பல நுணுக்கங்கள். இன்றுதான் கண்டேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete