வணக்கம் - அன்புடன் ஒரு அறிமுகம்
வலைப்பதிவுகளில் சொற்களை விளையாட விட்டு , ஞான முத்துக்களையும் , அறிவென்னும் பொக்கிஷங்களையும் நித்தமும் பெறும் , அன்பினால் ஆன நம் தமிழ் சமூகவலைப்பதிவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் .
வலைப்பதிவுகளுக்கு புதுமுகமாகிய நான் இங்கு அறிமுகமானது Dr. சுந்தரி கதிர் அவர்களால் . சுந்தர நேசத்தை வார்த்தைகளால் குழைத்துத் தரும் இனிய தோழி , அவர் என்னையும் , என் வலைப்பதிவுகளையும் இங்கே அறிமுகப்படுத்த , அதன் பின் பட்டாம்பூச்சியாக சிறகடித்து , நம்முடன் இனிய சொல் பேசிச் செல்லும் தங்கை காயத்ரி தேவி , வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்க முடியுமான்னு கேட்டார் . யோசித்தேன் ..
நம்மால் இப்போது முடியுமான்னு .. பிறகு , செய்து தான் பார்ப்போமே என ஏற்றுக்கொண்டேன் , நல் முயற்சியாக இறங்கியும் விட்டேன் ! நன்றி தமிழ்வாசி பிரகாஷ் . :)
திருச்சியைச்சேர்ந்தவளாகிய நான் , மதிப்பெண்களுக்களுக்காக பள்ளியில் சமஸ்கிருதம் எடுத்து , தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு குட் பை சொல்லியவதற்கு பெருந்தண்டனையாக 2001 ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ல் வந்திறங்கி , தமிழ் சொல்கேட்பதற்கு ஏங்கித்தவிக்க ஆரம்பித்தேன் ..
அப்போது ஆரம்பித்தது தமிழ் தாகம் . வற்றினால் தானே ! , ஊற்றாக , கங்கு கனலாக கனன்றது , அது பற்றிக்கொண்டது பேஸ்புக்கால் .
அடிப்படையில் கம்ப்யூட்டர் பட்டம் பயின்றவள் , ஆசிரியப்பணியில் 2005 வரை இருந்தவள் , சற்றே அட்மின் துறையில் பணியில் நுழைந்தாலும் , சிறு சிறு கவிதைகள் , உணர்வின் விளிம்புகளில் அரும்பியதை கவனித்து குறித்தும் கொண்டேன்.
‘ஐயோ உங்கப்பொண்ணா ! .. கொஞ்சம் பேசாமல் இருந்தாப்போதுமே ! , வாயாடியா இருக்காளே ! ’ என்ற நல்ல பெயர் அப்பா அம்மாவிற்கு அடியேன் பள்ளியில் பெற்றுத்தந்த வாய்ப்பேச்சு , விசுவின் அரட்டை அரங்கம் வரைக்கொண்டு சென்றது , அப்போது முதன் முறையாக இயக்குனர் திரு. விசு , உரத்த சிந்தனை ராம் அவர்கள், தம் குழாமும் துபாயில் முகாமிட பல ரவுண்டுகள் படு ஆக்ரோஷமாய் பேசி கணவரை மெய் மறக்க செய்தேன் .
( அப்ப , வீட்ல இல்லயா ந்னு நீங்க கேக்கற்து ..புரியுது :)
ஒரு சர்பிகேட்டும் , வால் கிளாக்குடனும் மேடையிலிருந்து இறங்கினேன் .
பல பட்டிமன்றங்களில் பேச அழைப்பு வந்தாலும் ஆர்வம் காட்டமல் தவிர்த்தேன் , ஆன்மீக நாட்டத்தால் .
இந்தப்பேச்சே என்னை , தமிழ் குஷி என்ற இணைய வானொலியில் ஆர். ஜேவாகவும் அவதாரம் எடுக்க வைத்தது.முதல் நிகழ்ச்சியே கணவருடன் வீட்டுக்கு வீடு வாசப்படிதான் .. !
இல்லத்தரசியாக இருந்தப்படியே , பேஸ்புக்கில் கவிதைகள் , கட்டுரைகள் , சிறு சிறு துணுக்குகள் எழுத ( சரி..சரி .. படுத்த) ஆரம்பித்தேன் . எல்லாப்பெண்களையும் போல கணவர் , நம் குடும்பம் என்பதையும் தாண்டிய என் சமுதாயப்போக்கும் , தார்மீக எழுத்தும் உணர ஆரம்பித்தேன் (இதெல்லாம் , உனக்கே ஓவரா இல்லையா ந்னு கேட்கப்படாது .. ;) )
நிகழ்ச்சி தயாரிப்பு , எடிட்டிங் , மேற்பார்வை என ஆன்லைனில் ஆக்குபை செய்துக்கொண்ட எனக்கு ஒரு வருஷம் பறந்தது அறியாமல் போனது . ஒரு பெண்கள் மாதமிரு முறை வரும் இதழில் , பக்கம் தயாரிக்கும் பணியும் , அவர்கள் கேட்டபடியே வலைப்பூவும் ஆரம்பித்தேன்.
தற்சமயம் சிறிது ரேடியோவேலைகளில் பிரேக் எடுத்தப்படியே ,பிரபல எழுத்தாளர், நாவலாசிரியை திருமதி . வேதா கோபாலன் அவர்களது வழிகாட்டலுடன் சிறுகதை எழுத்தாளராக புது அவதாரம் எடுத்துள்ளேன்.
சில உடல் பிரச்சனைகளாலும் , இ-புக் வாசிப்பின் ருசியறியாமலும் , படிப்பதை தற்காலிகமாக விட்டிருந்தவள் பிரபல பத்திரிக்கையாளர் , திரு. சுதாங்கன் அவர்களின் மூலம் பல புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டு , படித்தும் , அதைப்பற்றியும் எழுதி வருகிறேன்.
இசையுடன், சினிமா பார்ப்பதிலும் உள்ள ஆர்வம் .. ( அப்ப , எங்களுக்கெல்லாம் இல்லையான்னு கேக்கற உங்க மைண்ட் வாய்ஸ் , கேக்குதே !) சுமி_சினிமாஸ் என்ற டேக்குடன் விமர்சிக்கவும் வைத்தது பேஸ்புக்கில் .
ஏன் பேஸ்புக்கில் எழுதுவது , கவிதை , கதை , இப்படி கிறுக்குவதைத்தவிர வேற ஆர்வமில்லையா இல்ல எதுவும் தெரியாதா என்ற உங்க கேள்விக்கும் வந்துட்டேனே ..
ரங்கோலி , சமையல் , க்ளாஸ் பெயிண்டிங் , பாட் பெயிண்டிங் , பேபரிக் பெயிண்டிங் ,போட்டோகிராபி இப்படி பல வேலைகளும் அப்பப்ப ஓடிட்டே இருக்கும்.
என் முதல் விமானப்பயணம் என்று நான் எழுதியது பேஸ்புக்கில் .. இன்றும் பலரும் பேசப்பட்டதாக உள்ளது . அதை இங்கும் பகிர உள்ளேன்.
பலக்கவிதைகள் எழுதி வெளிவந்தாலும் , மனதில் ஆழமாக ஊடுருவிய ஆன்மீகத்தேடல் ஆண்டாள் , ஆழ்வார்கள் என்று நாலாயிர திவ்யபிபந்தத்தில் இருக்கிறது . தொண்டரடிபொடியாழ்வார் இயற்றிய திருமாலை என்ற பக்தி இலக்கியத்திலிருந்து தொடராக எழுதி வருகிறேன்.
எழுத்தில் அரிச்சுவடிமட்டுமே தொடங்கியுள்ளவள் ,
வீடு தோறும் வரவேற்கும் துணி மலைகள் ,
என்ற பதிவு ஒரு முடியாதப்பொழுதில் எழுதிட மங்கையர் கவர் மலராக சே .. பதிவாகி விட்டது . ( கொஞ்சமா .. சொல்லிக்கிறேனே .. ! )
ஒரு நாள் மொட்டை வெயிலில் பால்கனியில் வந்தமர்ந்தப்பறவை கூடு கட்டி , பிள்ளைப்பேறுப்பார்த்து , சரி, சரீ... , குஞ்சுப்பொரிச்சு ..மீண்டும் பறந்தக்கதையை எழுத அது புதிய தலைமுறை இதழில் வெளிவந்தது .
(இந்த ஜப்பானில் ஜாக்கி சான் கூப்பிட்டாங்க ... அமெரிக்காவில் அர்னால்ட் கூப்பிட்டாங்க கதையெல்லாம் இல்லீங்கோ..சும்மா ..ஒரு வெளம்பரம் தர சொன்னாங்க அதான் )
கூடான வீடு அதான் இது.
திருச்சியில் எம் ஆர் ராதா அவர்களது குடியிருப்பில் வசித்த எபெக்ட் ஒரு நாள் நினைவலைகள் சுனாமியாக ..அதையும் பதிவாக்கி நடிக வேள் நினைவுத்துளிகள் என்று எழுதி வச்சேன் .
வசிப்பது துபாய் ஆகையால் , பலப்பல ஊர் சுற்றல்கள், அதிலொன்று அம்மா , அப்பா இங்கு வந்திருந்த போது எழுதிய அபுதாபி கிராண்ட் மாஸ்கும் அம்மாவும் , எனக்குள்ளிருந்து பல உணர்வுகளை எழுத்தாக்க முடியும் என்று நிரூபித்தது .
பல வருடங்கள் , அயல் நாட்டு வாழ்க்கை பலப்பல அனுபவங்களுக்கு பஞ்சமா .. இனி பகிர உள்ளேனே .. உங்களுடனும் .
தொடர்வோமா ..இனி வரும் பதிவுகளில் ..
|
|
இனிதான அறிமுகம் இன்னும் பல தங்களின் பதிவை படிக்க வேண்டும் படித்து பின்னூட்டம் இடுகின்றேன்.
ReplyDeleteதேங்க்யூ .. அவசியம், படிக்கலாம் , என் பேஸ்புக் பேஜ்லயும் .
Deleteவலைச்சரம் ஆசிரியர் பணி சிறப்புற அமைய நல்வாழ்த்துகள்
ReplyDeleteநட்புடன்,
புதுவை வேலு
நன்றி .. தொடர்ந்திருங்கள்.
Deleteஅடடே … நீங்க நம்ம ஊரு திருச்சியா? இப்பதான் தெரிந்து கொண்டேன். வலைச்சரம் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களைப் பற்றிய சுட்டிகள் மூன்றையும் படித்தேன். ஒவ்வொரு வீட்டிலும் துணி மலைதான். யார் மடித்து வைப்பது என்ற பிரச்சினைதான். எம்.ஆர்.ராதா காலனி பற்றிய நினைவுகள், இதுவரை நான் அறியாத சுவாராஸ்யமான படங்கள் தகவல்கள்.
ஆமாங்க , ஆமாம் .. பொன்னி நதி பாயும் காவேரிக்கரை வாழ்ந்தப்பெண் தான் . மிக்க மகிழ்ச்சி !தொடர்ந்து இணைந்திருங்கள்
Deleteஅருமை
ReplyDeleteநன்றி..
Deleteநன்றி..
Deleteஅடடா அறிமுகமே!அட்டகாசமா இருக்கு!! துணிமலைகள் ஏற்கனவே படிச்சிறுக்கேன்!! வாழ்த்துகள் நன்றி!!
ReplyDeleteஅன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!
நன்றி .. இணைந்திருங்கள் ... இன்னும் சில பதிவுகளும் இருக்குங்க ..இதென்ன கலாட்டான்னும் இருக்கும் பாருங்க ..ஓவர் வெளம்பரம் , ஒடம்புக்கு ஆகாதுன்னு ..விட்டுட்டேன் போடாமல் :)
Deleteஇனிய அறிமுகத்துடன் இந்த வாரம் ஆரம்பம்..
ReplyDeleteவாழ்க நலம்!..
நன்றி .. தொடர்ந்து படித்து , பயணிக்க வேண்டுகிறேன்
Deleteஅட்டகாசமான அறிமுகம்...
ReplyDeleteவிமானப் பயணம் பதிவுக்கு வைட்டிங்....
ஆஹா .. பிரகாஷ் .. தேங்க்யூ ... கண்டிப்பா , நாளை ...
Deleteஅன்புள்ள சுமிதா!
ReplyDeleteவலைச்சரத்திற்கு இனிதாய் வரவேற்கிறேன்!
நான் யாரென்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கடந்த நாற்பதாண்டு காலமாக நான் ஷார்ஜாவில் இருக்கிறேன். துபாய் அரட்டை அரங்கம் எங்களின் பானரில் தான் நடந்தது, ஷார்ஜா சஃபையர் உணவகம் பெயரில்! மேடையில் நடுவராக திரு.சலாலுதின்[ PRO. ETA GROUPS] திரு.நாதன் [ அரட்டை அரங்க தயாரிப்பாளர்], என் கணவர் திரு.சாமிநாதன் [சஃபையர் உணவக உரிமையாளர்] இருந்தார்கள். இப்போது உங்களுக்கு நினைவு வருமென நினைக்கிறேன்.
உங்கள் வலைத்தளம் சென்று உங்கள் பதிவுகளைப்படித்தேன். அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தன. அதில் உங்கள் புகைப்படம் பார்த்த போது அரட்டை அரங்கத்தில் உங்களைப்பார்த்த நினைவு வந்தது. மீண்டும் அரட்டை அரங்க சிடியைப்போட்டுப் பார்க்க வேண்டும்.
வலைச்சர ஆசிரியப்பதவியில் சிறப்புடன் பணியாற்ற இனிய வாழ்த்துக்கள்!!
ஆஹா .. சூப்பர் ! திரு. நாதன் அவர்களின் தம்பி தான் , மேடம் , வீட்டுலயே நல்ல கவுண்டர் தர்றாங்களே ,அ. அ. லயும் , பேசட்டும்ன்னு , அப்ளிகேஷனை வீட்டுலயே நிரப்பி வாங்கிட்டுப்போனார் . NRI 's &அவங்களுக்கு கிடைச்ச அங்கீகாரம்ன்னு புள்ளி விவரம்லாம் தந்து , ரமணா ஸ்டைல்ல ஒரு அம்மணி (அப்ப சின்னப்பொண்ணு) ..தாங்க .. அது நாந்தான் தாங்க . மிக்க மகிழ்ச்சி ...
Deleteம்ம் ஸார்ஜாவும், துபாயும் சேர்ந்துக்கிட்டீங்க வாழ்த்துகள்
Deleteவணக்கம்,
ReplyDeleteஆஹா அருமையான தொடக்கம், மதிப்பெண்களுக்காய் தமிழ் தொலைத்து,,,,,,,,,,
தங்களின் சிறுகதை அவதாரம் வெற்றிஅடையட்டும், தங்கள் பதிவுகளை இனி தான் பார்க்கனும். நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள், நன்றி.
தேங்க்யூ மஹேஸ்வரி .. மகிழ்ச்சி
Deleteவித்தியாசமான சுய அறிமுகம். ரசித்து படித்தேன். இந்த வாரம் அறுசுவை தான் போல உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி ..
Deleteஅருமை ji
ReplyDeleteமீனுக்கு நீந்தவும்
மானுக்கு துள்ளவும்
சொல்லித் தெரிவதில்லை
கலையும் நயமும் வரமே.
நன்றி.. சிவா ..
Deleteவாழ்த்துக்கள் அக்கா ..கலக்கல் .... வாழ்க வளமுடன் ...
ReplyDeleteஹை .. காஜா ! தேங்க்யூ ப்பா ! மகிழ்ச்சி ..
Deleteஆஹா... திருச்சிப் புள்ளையா நீங்க..? இம்பூட்டு நாள் எனக்குத் தெரியாத தகவல். மெலிதான நகைச்சுவையுடன் ஆன்மீகமும் சேர்ந்த எழுத்து உங்கள் பலம். சிறுகதை என்ன... வேதா மேமுடன் சேர்ந்த பலன்.. நெடுங்கதைகளும் எழுதிக் கலக்குவீங்க. வெல்கம் டூ வலைச்சரம். இந்த வாரம் உங்க உபயத்தில் ஆரவாரமாக மகிழ்வான நல்வாழ்த்துகள். (தினம் வந்து நானும் படுத்தறேன் உங்கள..)
ReplyDeleteஅப்படியே அரங்கனின் திருவுளம் படி ஆகட்டும் ! ஆம்! மகிழ்ச்சி :) படுத்துங்க படுத்துங்க .. :) இல்லன்னா கூப்பிட்டு நா படுத்தறேன்
Deleteஅப்படியே அரங்கனின் திருவுளம் படி ஆகட்டும் ! ஆம்! மகிழ்ச்சி :) படுத்துங்க படுத்துங்க .. :) இல்லன்னா கூப்பிட்டு நா படுத்தறேன்
Deleteசுய அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteநன்றி .. சந்திப்போம் !
Deleteஅசத்தலான இனிய அறிமுகம் .வாழ்த்துக்கள் சுமிதா
ReplyDeleteநன்றி , நன்றி , தொடர்ந்து பயணிக்க வேணும் :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆஹா..சிங்கம் களமிறங்கியாச்சா...சூப்பர் சூப்பர்....சுமியின் மொழி உலகெங்கும் உவகையெடுத்து பரவ இனிய வாழ்த்துக்கள்....நீ கலக்கு டியர்
ReplyDeletesunthari , உங்களின் அறிமுகம் தான் .. மகிழ்ச்சி , மகிழ்ச்சி :)
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி ..
Deleteஉங்கள் தளம் எனக்குப் புதிது. முதலில் வரவேற்கிறேன் ஆசிரியப் பணிக்கு. உங்கள் தளத்தில் ஓரிரு பதிவுகள் படித்துக் கருத்தும் எழுதி இருக்கிறேன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஐயா .. பார்த்தேன் , மகிழ்ச்சி , அரிச்சுவடி பயில்கிறேன் வலைப்பூக்களில் ..
Deleteவாழ்த்துகள் அக்கா, கலக்குங்க.
ReplyDeleteஉங்களை பேஸ்புக்கில் தொடர்ந்து படித்து கொண்டிருக்கிறேன்....காரணம் நட்புக்கு அங்கு இடம் இல்லை என்பதால்.......பேஸ்புக்கில் நீங்கள் தந்த தகவலால் இங்கு வந்து இருக்கிறேன் வலை ஆசிரியராக பணி செய்வதர்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்ச்சி , மதுரை தமிழன் அவர்களே .. நன்றி.. உங்கள் ஐடி , பெயர் தெரிந்தால் , நானே ரிக்வெஸ்ட் அனுப்புகிறேன் ..
Deleteவணக்கம் சகோ ஆரம்பமே அசத்தலான அறிமுகம் வாழ்த்துகள் தங்களது சுட்டிகளுக்கு போனேன் நன்றி
ReplyDeleteதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
நன்றி , சகோதரரே .. தொடர்ந்து பயணிப்போம்..
Deleteதமிழில் இவ்வளவு ஆர்வம் உடைய நீங்கள் வேற்று மொழி தேர்ந்தெடுக்க எப்படி ஒத்துக் கொண்டீர்கள். எந்த மொழிபாடத்திலும் எடுக்கும் மதிப்பெண்கள் மேல்படிப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லையே
ReplyDeleteநல்ல அறிமுகம் தொடரட்டும் பதிவுகள்
அப்போது ப்ளஸ் டூ ல நல்ல மார்க் தான் தெரியும் , எதோ பண்ணியாச்சு தப்பு :) , உண்மையிலே இப்பவும் வெண்பா , விருத்தம் கொஞ்சம் கிலி தான் :) தேங்க்யூ ..
Deleteவாழ்த்துகள். ..இனிதே தொடரட்டு உங்கள் எழுத்து பணி...
ReplyDeleteநன்றி வாணி .. மகிழ்ச்சி
Deleteவலைச்சர ஆசிரியருக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்..
ReplyDeleteதேங்க்யூ ஸ்ரீனிவாசன் சார் .. சந்தோஷம் வாழ்த்துகளுக்கு .. :)
Deleteஅழகான அறிமுகம் சுமி! உங்கள் ஆசிரியப் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்! பேச்சில் தனித்துவமான ஆளுமை உங்களிடம் உள்ளது பாராட்டுக்கள்.
ReplyDeleteகீதா , சந்தோஷம் , தெரியலை ..எதோ நீங்க சொல்றீங்க , தொடர்வோம் .. நன்றி :)
Deleteஅடடா...! இவ்வளவு நாள் தங்களின் தளம் தெரியாமல் போச்சே...!
ReplyDeleteஇனி தொடர்கிறேன்...
அசத்துங்க...
வாழ்த்துகள்...
பரவாயில்ல , இப்ப தெரிஞ்சுகிட்டோமே .. எல்லாமே நல்லதுக்கு தானே .. மகிழ்ச்சியும் நன்றிகளும்
Deleteஅருமையான அறிமுகம் நகைச்சுவையாகவும்,......வரவேற்கிறோம் மா ...புதுகையில் நடைபெறும் வலைப்பதிவர் விழாவில் கலந்துகொள்ள...வாழ்த்துகள்மா.
ReplyDeleteதேங்க்ஸ் கீதா , வசிப்பது துபாயில் , பிரிதொரு சந்தர்ப்பத்தில் அவசியம் சந்திப்போம் :)
Deleteசுவாரஸ்யமாய் அறிமுகம் ஆரம்பம்...
ReplyDeleteதொடரட்டும்...!
நன்றி .. :)
DeleteWelcome to Valaicharam!
ReplyDeleteநன்றி ..
Deleteஅமர்களமான அறிமுகம்!
ReplyDeleteபதிவுகளில் தமிழ் விளையாடுகிறது.
ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்!
தொடர்கிறேன்!
நன்றி .. தாங்களும் இருந்திருக்கீறீர்கள் , பார்த்தேன் .. மகிழ்ச்சி .. இறையருளால் முயற்சிக்கிறேன் ..
Deleteதங்கள் தளம் எனக்குப் புதிது. பகிர்ந்திருக்கும் சில பதிவுகளை வாசித்தேன், நினைவலைகளை சொல்லிச்சென்ற விதம் அருமை.
ReplyDeleteஒரு வாரம் வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்...
தேங்க்ஸ் கார்த்திக் :)
Deleteசுவைபட அறிமுகப் பதிவு! தொடக்கமே நன்று! வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி ஐயா ! தொடர்கிறேன் ...
Deleteநன்றி ஐயா ! தொடர்கிறேன் ...
Deleteவாழ்த்துக்கள் சுமி .... உன் எழுத்துகளின் ரசிகை நான் ..
ReplyDeleteதேங்க்யூ இந்து .. மகிழ்ச்சி :)
Deleteதேங்க்யூ இந்து .. மகிழ்ச்சி :)
Deleteவருக!மணம் மிகு சரம் தொடுத்துத் தருக!
ReplyDeleteநன்றி ஐயா .. மகிழ்ச்சி
DeletePala thiramai kaiel vaithu irukega vaalthukal. puthiyathalaimurai katurai padithu irukan.
ReplyDeleteநீங்களும் வலைப்பதிவர் என அறிந்து மிக மகிழ்ச்சி.
ReplyDeleteநானும் தான்.
வாழ்த்துகள்.