07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 30, 2015

நேசன் சென்று வருக... குஷி பண்பலை ஆர்.ஜே. சுமிதா ரமேஷ் வருக.. வருக..


வணக்கம் வலை நண்பர்களே...

இன்றுடன் முடிகிற வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த "தனிமரம் நேசன்" அவர்கள் மிகுந்த ஆர்வமுடனும், பொறுப்புடனும் தமது பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.

மொத்தம் ஏழு பதிவுகள் எழுதிய அவர் 230-க்கும் மேலே மறுமொழிகள் பெற்றும், சுமார் 1200 பக்கப்பார்வைகளுக்கும் மேலே பெற்றும் உள்ளார். அவரை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "சுமியின் கிறுக்கல்கள்" எனும் வலைப்பூ பதிவர் சுமிதா ரமேஷ் அவர்கள் ஆர்வமுடன் இசைந்துள்ளார். 

இவரப் பற்றி சொல்வதென்றால் சுமார் பதினைந்து வருடங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கணவருடனும், இரு குழந்தைகளுடனும் வசித்து வருகிறார். கணினி பட்டதாரியான சுமிதா ஆரம்ப காலங்களில் ஆசிரியராக பணியாற்றியவர். தனது பேச்சுத் திறமையால் துபாயில் நடைபெற்ற விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் விசு ஐயாவிடமிருந்து "பப்ளிக் ஸ்பீக்கிங்ல் சிறந்தவர்" என்ற பாராட்டைப் பெற்றுள்ளார். இவ்வாறு பேச்சாற்றலில் சிறந்து விளங்கிய இவர் பின்னர் குஷி பண்பலை 24 x 7 இணைய வானொலியில் ஆர்.ஜே வாக சேர்ந்து தனது கணவருடன் இணைந்து வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற நிகழ்ச்சியை வழங்கியுள்ளார். பின்னர் பலப் பல நிகழ்ச்சிகள் வழங்கியும், அதன் பலனாக நிகழ்ச்சி மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது தொடர் பணிக்கு ஓய்வளித்து விட்டு ஆர்.ஜே வாக மட்டும் பணியாற்றி வருகிறார். 

வலைப்பதிவராக, வலைச்சாகரத்தில் சமீபத்தில் இணைத்துக்கொண்ட சுமிதா ரமேஷ் முக நூல் பதிவராகவும் பல கட்டுரைகளை எழுதிவருகிறார். மேலும் கவிதை , கட்டுரைகள் , கதைகள் , விமர்சனங்கள் என்ற விசாலப்பார்வையை விரிவுப்படுத்தியப்படியே எழுத்தார்வத்துடன் வலம் வருகிறார்.

சுமிதா ரமேஷ் அவர்களை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி வருக.. வருக... என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் நேசன்,
நல்வாழ்த்துக்கள் சுமிதா ரமேஷ்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...

11 comments:

 1. Replies
  1. தேங்க்யூ பிரகாஷ் , மகிழ்ச்சி ..

   Delete
 2. நேசன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
  சுமிதா ரமேஷ அவர்களுக்கு சிவப்பு கம்பளம்.

  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. தேங்க்யூ .. மகிழ்ச்சி

   Delete
 3. அன்பின் நேசன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்..
  சுமிதா ரமேஷ் அவர்களுக்கு நல்வரவு..

  ReplyDelete
 4. நேசன் நண்பருக்கு நல் வாழ்த்துகள!!
  சுமிதா ரமேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள்!!

  அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி .. நன்றி ..

   Delete
 5. நேசன் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதுடன் சகோதரியை வாழ்த்தி வரவேற்கிறேன்...
  இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி .. மகிழ்ச்சியுடன் இணைகிறேன் .

   Delete
 6. வாழ்த்தியோருக்கு நன்றிகள்.சுமிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய நேசனுக்கும் வரும் வாரத்திற்கு பணியாற்ற உள்ள சுமிதா ரமேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது