இணையவழி இதய உணர்வுகள் பகிரும் அன்புத்தோழமைகளுக்கு ..
➦➠ by:
சுந்தரி கதிர்
இணையவழி இதய உணர்வுகள் பகிரும்
அன்புத்தோழமைகளுக்கு ..
Dr.சுந்தரி கதிரின்
இனிய வணக்க வந்தனங்கள்......இணையத்தில்
இதழ் விரித்து பூத்திருக்கும் வலைப்பூவெடுத்து தொடுத்து ..வலைச்சரம்
அலங்கரித்து...ஆசிரியராய்..வாரம் ஒன்று அமர...சிம்மசானமிட்டு வரவேற்கும் .....
வலைச்சர ஆகம பிதாக்களுக்கு
நன்றி நவின்று ..அன்னைத்தமிழ் வணங்கி...தொடங்குகிறேன்....என் அறிமுக
அடையாளத்தை...
எனது பெயர் : : ...Dr.சுந்தரி
கதிர்
படிப்பு : : பல்மருத்துவம்//மருந்தாளுமை///மருத்துவ
மேலாண்மை
பிறப்பிடம் : சங்கம்
வளர்த்து மொழிமேன்மை செய்த மதுரை
வசிப்பிடம்...மரியாதை
மணக்கும் கொங்கு நாடு ..கோவை
மொழியும் மொழிசார்ந்த இடமும்
என
தனியென்று அவனியில் ஓர் பூமி
கிடைக்காதா....
கன்னியென காலூன்றிய தாய்
தமிழுக்கு...மகவாய் செல்லக் கொலுசிட்டு ...சிங்காரநடைநடக்க...தாகமெடுக்கும்
மொழிப் பிரிய பிள்ளைகளில்
நானும் ஒருகைகுழந்தை
பெற்றதாய் பாலூட்ட....வளர்த்த
அன்னை அமுதூட்டிய பசியாய்
நித்தம் எனக்குள் மொழி விழித்து
கவி வித்திட்டது
வரலாற்று கதைகளும் ....இலக்கியமேன்மைகளும்
பதினைந்தாம் வயதில் பத்தாம்வகுப்பு
வினாவிடை பகுதியில்..கதை/கவிதை என வர......கவி எடுத்து தொடங்கியது என் மொழிப்பயணம்
தொடர்தொட்ட பயணம் கல்லூரி
காலங்களில் கவின் சிறகு விரித்து சிம்மாசனமிட ......கல்லூரி
ஆஸ்தான கவியாய்...வல்லரசு///2010
ல் இந்தியா//வறுமை//காதல் எனும் தலைப்புகளில் பொங்கிப் பெருகி அணையுடைத்து.....கவிக்குயிலாய்....வலம் வர
இடைதொட்ட மொழி..திருமணம்//குடும்பம்
என கொஞ்சம் இளைப்பாற.....
முகநூலில் ...மீண்டும் 10 வருடங்கள்
கழித்து திரிதூண்டி இன்று என்னில் அனலெடுத்தது
படம் ஒன்று எடுத்து பொங்கியமொழியை
அதனுள் திணித்து என் பாதை செப்பனிட்டு நடைபயில்கிறேன் தினமும்
அனலெடுத்த கவி நெருப்பை தோழி..மீரா கைவண்ணமாய்...சுந்தரநேசமாய் சுடரேற்றினாள்..ஏற்றுகிறாள் நித்தம் என் வலைப்பூவில் என் நேச நெருப்பூவை
அங்கீகாரமாய் அவைஎழுந்த மொழி..
1. முதலாய் நான் என்றும்
2.அடுத்து என்னை சிகரமேற்றி சவாலுக்கு அழைத்து சிலம்புக்காப்பியம்
சிலப்பதிகாரம்.....நண்பர் ஒருவர் எழுதசொல்லி மொழி தூண்ட
நீள்பெரும் காப்பியத்தை சிறு
கமண்டலத்துக்குள் அடைக்கும் முயற்சியாய் ...ஒருகவிக்குள் ...கண்ணகி
சொல் வழி எடுத்தாள...வரவேற்று வாழ்த்து வழங்கினர்.. எம் தாய்மொழியாளர்கள் ...தின இதழ்
எனும் பத்திரிக்கையில் வெளிவந்தும் பெருமைபெற்றது
3. அடுத்து கிடைத்த பெரும் வெற்றி,,,,அரசியல்
பார்வையாய்
மாண்புமிகு தமிழக முதல்வர்
அம்மா...ஜெ .ஜெயலலிதா அவர்கள் செப்டம்பர் 27 ..2014 ல்...சிறை சென்ற
போது ...கொந்தளிக்கு மக்கள் உணர்வை ....என் மன
நெருப்பெடுத்து கவி தொடுத்தேன் ....
””தவறு தான்....தப்பு இல்லை”” என்று .....எழுதி நிமிர்ந்த நிமிடத்தில் படபடவென லைக்களும் கமெண்ட்களும்
குவிய ....நிறைய மக்கள் தன் மன உணர்வென ...ஷேர் செய்தார்கள்
அரை மணி நேரத்தில் 1500 ஷேர்களும் ....2000 லைக்களுமாய்
வந்து குமிய ...உடனே எடுத்து..தின இதழ் நாளிதழ் வெளியிட ...மொத்தம் 5651 லைக்ஸ்
மற்றும் 5831 ஷேர் ஆகியது.....
தமிழக முன்னனி அதிமுக தலைவர்கள்
பலர் அழைத்து வாழ்த்துச் சொல்லி
3 அடுத்து வாழ்த்துக்கள் பதிவு....எனக்கு
பிடித்த என் தமிழ் மொழியிது...நட்புகளின் திரு நாளில்..நான் தெரிந்த
அவர்தம் குணமணங்களை உள்வாங்கி உயிர்சொல்லெடுத்து நான் விரும்பி தொட்டணைத்து மனதார வாழ்த்தும்
பதிவுகள் இது
எழுதியவுடன் பெரும் சிகரம்ஏறிய இளைப்பு தரும் பதிவும் இது
முத்தமிழ் அறிஞர்..மொழிஉயிர்வாழ்
காப்பாளர்....தாய்மொழிநேசிப்பின் தரணி அடையாளாமாய் வாழும் கலைஞரின் ...93 வது அகவை
க்கு நான் எழுதிய வாழ்த்து பா...என் வாழ்த்து மொழிகளுக்கு நான் சூட்டிய மணிமகுடம்``
4 அனைவருக்கு எழுதுகிறாயே ...எனக்கு
ஓர் மொழியில்லையா எனச் சிறு பிள்ளையாய் சிணுங்கிய என் கணவருக்கு....தான் தான்
என் காப்பிய செழுமையின் கருப்பொருள் என்றறியாத என் முதல் குழந்தைக்கு நான் தொட்டு தாலாட்டும்
நிகழ்மொழி
5..அடுத்து சுந்தரநேசமாய்...என்னை எழிலாடிய
மொழி....
கத்திமேல நடக்கும் பயணமாய்....மோகம் காமம்
எனும் சொல்லுதிர்க்காது...காதலை களவென்று சொல்லி உணர்வாள....உணர்வுபாதைசென்று...உயிர்திருடி....உணர்வெட்டி
நின்று எழுதி ......இன்பத்துப்பால் புனிதத்தை..இலைமறைகாய்
பொருளுரைத்து ....எடுத்தாண்டது என்னின் மொழி
எப்படி இப்படி..எட்டி நின்று....கண்ணியமாடி ..களவு செப்புகிறீர்கள்
என்றே பலர் வியப்பாட......முகநூலில்...ரொமான்ஸ் ராணி என்று பலர் பட்டமிட
மேலும்
தாய்மையும் ..நட்புமாய்....
மழலையும்..மழையுமாய்
காதலும் காப்பியமுமாய்
இயற்கையும் இறையுமாய்
பெண்மையும் பொய்மையுமாய்
முதுமையும் வாழ்வியலுமாய்
வலியும் வாழ்த்துமாய்
தனிமையும் ..நேசமும்
சூடி ..நிகழ்வாடும் யாதார்த்த வழிகளில்
· Sundari
இன்று தங்களுடன் இமையணைத்த
நிம்மதி தொடக்கபூவாய்
என் வலைப்பூ வழி அரும்பிட ....
தொடருவோம்...நாளை முதல்
நான் படித்து நெகிழ்ந்து கருத்திட ..மணந்துகாத்திருக்கும் மற்ற பூக்களின் அறிமுகங்களை...என் விழி
வழி பார்வையெடுத்து......
வலைச்சர மொழியணைத்த வாகை
சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை வணக்க நன்றி கூறி...
வரும் வாரம்....மூவிரு நாளாய் ...வலைச்சர
ஆசிரியராய் வலம் வரும் என்னை ஆசீர்வதித்து கைகுலுக்குங்கள்...
அன்பினிய அரும்பூக்களே..!!!!!!!!
|
|
சுய அறிமுகம் நன்று... தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றி சார்!! தொடர்ந்து வாசித்து கருத்திட வேண்டுகிறேன்!!
Deleteஇந்த வாரம் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் சுந்தரி கதிர் அவர்களே! தங்கள் பணி சிறக்க வாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வரும் பதிவுகளை வாசித்து கருத்து தெரிவிக்கவும்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇனிய கவிதையோடு கூடிய சுய அறிமுகம் அருமை. ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ!! தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவிக்கவும்
Delete.
கவிதை மழையாய் சுய அறிமுகம் நன்று சுந்தரி !.
ReplyDeleteமிக்க நன்றி!! அன்பும் மகிழ்ச்சியும் !!
Deleteஇந்த வாரம் வலைச்சரத்தில் பணியேற்றிருக்கும் Dr.சுந்தரி கதிர் அவர்களுக்கு நல்வரவு..
ReplyDeleteஇனிய அறிமுகம்.. தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!...
ம்க்க நன்றி சார்.
Deleteஅடடே!..சுந்தரி கதிர்..நீங்கள் வலைப்பூ ஆரம்பித்த செய்தியை இப்போதே அறிவேன்..சிறப்பானதொரு வலைச்சரம் தொடுக்க வாழ்த்துகள்.. மகிழ்ச்சி..
ReplyDeleteமிக்க நன்றி சகோ!! அன்பும் மகிழ்ச்சியும்!!
Deletehttp://www.madhumathi.com/2012/10/sundharikathirkavithaigal.html
ReplyDeleteமுதலாய் வலைப்பூவில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ!!
Deleteஆசிரிய அவதாரம் எடுத்து அழகு தமிழ் நடையை இணைய வழியில் வலைச்சரத்தில் தொகுத்து ஒரு வாரம் முழுதும் தமிழ் பிரவாகத்தில் எங்களை மூழ்கி திளைத்திட வந்திருக்கும் டாக்டர் சுந்தரி கதிருக்கு வாழ்த்துக்கள்..!
ReplyDeleteமிக்க நன்றி சார். அன்பும் மகிழ்ச்சியும்.
Deleteஅருமை. இன்னும் நிறைய தலைப்புகளை தொட்ற்றுக்கலாம். வாழ்த்துக்கள். - கிருஷ்.இராமதாஸ், துபாய் [பெரம்பலூர்].
ReplyDeleteகருத்தை ஏற்றுக்கொள்கிறேன். பதிவு மிக நீளமாக வந்துவிடுமே என்பதை கவனத்தில் கொண்டே வெகு சில தலைப்புகளை குறிப்பிட்டுள்ளேன். அனைத்து தலைப்புகளுக்கு கீழ் உள்ள பதிவுகளை , தொடர்ந்து என் வலைப்பூவில் வாசித்து மகிழுங்கள். நன்றி.
Deleteஇத்தனை நாள் என் கண்ணில்படாமல் இருந்திருக்கிறீர்கள், உங்கள் ஆசிரிய பணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் சிலப்பதிகாரப்பதிவுக்குச் சென்றுவந்தேன் கவிதையில் வலை உலகைக் கலக்குபவர்களில் நீங்களும் ஒருவர். மீண்டும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சார். தங்களை போன்றோரின் ஊக்குவிப்பே என்னை மேலும் சிறந்த படைப்புகளை தர வழி செய்கிறது. தொடர்ந்து வாசித்து விமர்சிக்கவும்.
Deleteதொடர்ந்து உங்களின் பதிவுகளை கவிதைகளை ருசித்து வரும் எனக்கு தங்களின் இந்த புதிய உயர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது தோழி... சிறப்பாக செயல்படுவீர்கள் என்று தெரியும்.. உங்களின் தொகுப்புகளுக்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.. வாழ்த்துக்கள் தோழி.. வாழ்க வளமுடன்..
ReplyDeleteமிக்க நன்றி தோழமையே அன்பும் மகிழ்ச்சியும் !!
Deletevaalthukkal thaangal thamilukku sevai sirapudan thikala ellaam valla em perumaan murukanai piraathikkinren
ReplyDeleteமிக்க நன்றி தோழமையே அன்பும் மகிழ்ச்சியும் !!
Deleteநல்ல அறிமுகம். தங்களது பதிவுகளைப் படித்ததில்லை. அறிமுகப்பதிவு மூலமாக வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியப்பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாசித்து தங்கள் மேலான கருத்துகளை தெரிவுக்கவும். நன்றி!!
Deleteமனமார்ந்த வாழ்த்துக்கள் மா.. உங்கள் பணி சிறப்புடன் தொடரட்டும்..
ReplyDeleteமிக்க நன்றி மேம். அன்பும் மகிழுச்சியும்.
Deleteவாழ்த்துகள் தொடர்ந்து சந்திப்போம்.
ReplyDeleteமிக்க நன்றி!!
Deleteaga ena oru kavithai nadai ungal elutha thani sirapu 10 maathil ungal blog il sikarathai thotu vitergal sirai payanam unmaiai etharthamaga soli irukega. vaalthukal.
ReplyDeleteமிக்க நன்றி!! தங்களை போன்றோரின் உற்சாக வார்த்தைகள் மேலும் என் எழுத்தை மெருகேற்றும்.
Deleteவாழ்த்துக்கள் சகோ! உங்கள் வலைப்பூ வாசித்தது இல்லை! இன்றுதான் அறிந்தேன்! சென்று வாசித்து வருகிறேன்! இந்த வார வலைச்சரத்தை சிறப்பாக தொகுக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ!! தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவிக்கவும்!!
Deleteகவிதை நடையில் சுய அறிமுகம் மிக நன்று.உங்கள் பதிவுகளை இதுவரை வாசித்ததில்லை. வாசித்த பிறகு கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன். வலைச்சர ஆசிரியர் பணியைச் செவ்வனே நிறைவேற்ற வாழ்த்துக்கள் சுந்தரி கதிர்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. வாசித்து கருத்துதெரிவிக்கவும்.
Deleteசிறப்பான சுய அறிமுகம். உங்கள் பதிவுகளை இதுவரை வாசித்ததில்லை. வாசிக்கிறேன்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!! வாசித்து கருத்திடவும். நன்றி!!
Deleteசுய அறிமுகம் மிக்க நன்று Dr.சுந்தரி, வலைச்சர ஆசிரிய பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி!!
Deleteகவியே கவிப்பூச்சூட போகிறதா
ReplyDeleteபூக்களே அலங்கரிக்கப் புறப்பட்டதா
இசையே இசைவாக மீட்டுகிறதா
பூஞ்சாரலே புகழ்ச்சாரல் பொழிகிறதா
வண்ணமே ஒளியூட்டப் பயணமா
வானவில்லே வரவேற்கிறதா
சுந்தரத்தமிழே சுழலப் போகிறதா
விழி வீச்சினசைவு வீரியத்தை காண
வழி மேல் காத்து நிற்கிறோம்
பொங்கட்டும் பரவட்டும் திக்கெட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் நலமுடன்
வாழிய புகழுடன்
அன்புத் தோழமையே
மிக்க நன்றி!!
Deleteவாழ்த்துக்கள்... கலக்குங்க சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteஇனியதாக சுய அறிமுகம். பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி!!
Deleteவலைச்சரம் பணி சிறக்க வாழ்த்துக்கள். தமிழ்மணம் தொடர்ந்து வாசிப்பவன் நான். உங்கள் வலைத்தளம் இதுவரை எனக்கு அறிமுகம் இல்லை என்பது, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. யோசித்துப் பார்த்ததில், நீங்கள் கவிதைகள் மட்டுமே படைத்து, கட்டுரைகள் அதிகம் எழுதாததுதான் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி!! தொடர்ந்து வாசியுங்கள்.
Deleteவாருங்கள் டாக்டர் சுந்தரி கதிர்!
ReplyDeleteவரவேற்பும்
வாழ்த்துகளும்...!
மிக்க மகிழ்ச்சி! நன்றி!!
Deleteமுகநூலில் அடிக்கடி தங்களைக் காண்பதுண்டு. வலைப்பதிவர் என்பதை இப்போது தான் நான் அறிவேன்... வாழ்த்துக்கள்....
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! நன்றி!!
Deleteதமிழால் இனிக்கும் வரிகள் தந்து
ReplyDeleteகவியால் களிக்கும் கற்பனை ஏந்தி
வார்த்தையதில் வண்ண எண்ணம் கலந்து
வலைத்தளத்தில் கலை வலை பரப்பி
வாசகனாய் என்தமிழ் பேச சரம் கட்டி
யாசகமாய் செந்தமிழ் நேசக் கரம் நீட்டி
பாசமாய் தேன்தமிழ் பாட ஆசை ஊட்டி
நேசமாய் சுந்தரத்தமிழ் தேட பாதை காட்டி
தமிழை பூசித்த தமிழே
தமிழே புசித்த தமிழே
தமிழை ரசித்த தமிழே
தமிழே வாசித்த தமிழே
கதிரவனே தேடி வந்த எங்கள் சுந்தரி
கதிராய் ஒளிரட்டும் உங்கள் ஆசிரியைபணி.....
வாழ்த்துக்கள்...
-ஆடலரசன்@Natarajan
ஆடலரசின் எண்ணங்களும் கவிதைகளும் http://www.facebook.com/Aadalarasin.Ennangal.Kavithaigal
மிக்க மகிழ்ச்சி! நன்றி!!
Deleteஅடடா! உங்கள் வலைபதிவை இதுவரை அறியாமல் இருந்த்விட்டேனே. இனி தொடர்கிறேன்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! நன்றி!!
Deleteஅருமை!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! நன்றி!!
Deleteகாணும் காட்சிகளில் எல்லாம் உணர்வு புகுத்தி நொடிப் பொழுதில் கவியாகும் உன் மொழிக்கு தகுந்த அங்கீகாரம் வலைச்சரத்தில்... தனக்கென தனி பாணி அமைத்து இவளின் கவிதைகள் 7000 திற்கும் மேல் இவளின் முகநூல் பக்கத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. ஆசிரிய பணி சிறப்பாய் அமைய அன்னையை வணங்கி வாழ்த்துகிறேன் டா.
ReplyDeleteமகிழ்ச்சி டி.
ReplyDeleteஅனைவருக்கும் என் வாழ்த்துகள் டாக்டர்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ! அன்பின் நன்றி ஆசானே !!
ReplyDelete