07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 30, 2015

அவன் இன்றி வேற ஆறுதல் இல்லை!.

இணையத்தின் ஊடே வீட்டில் வலையுறவுகளை கொண்டும் வரும் சேவையை செய்வது திரட்டிகள்தான். நாளாந்த பத்திரிக்கை போல !. தனிமரம் 2010 வலையில் அறிமுகம் ஆனபோது இருந்தவை தமிழ்மணம்,இன்ட்லி, தமிழ்வெளி ,தமிழ்-10 என்று! ஆனால் அவைகள் பொருளாதார தடையால் நலிந்து போக   இன்று ஏதோ அதிகம் பதிவர்களை இணைப்பது தமிழ்மணம்தான்!

அதில் இந்திய-ஈழம், மதவாத போட்டியில் பிரிந்து போனவர்கள் பட்டியல் பல. அதனை புதிய பதிவர்கள் அறிய வேண்டும் !


ஆனால் தமிழ்மணம் இன்று புதிய பதிவர்களை உள்வாங்கின்றாதா?, என்பது நான் அறியேன் !அது பற்றி தனிமரம் வலைச்சித்தர் டிடியிடம் கேட்கும் ஆசையில்!நேரம் காலம் வரைவில்லை.  ஆனாலும் தமிழ்மணம் அதன் தர வரிசை, சூடான இடுகை, பற்றி எல்லாம் அதிகம் நான் அறியேன்.! இருந்தாலும் தமிழ்மணம் திரட்டியில் வரும் பதிவுகளை  கணனியில் வாசிக்கும்போது  பதிவுகளுக்கு வாக்கு இட்டுப்போவதை இன்று வரை ஜனநாயக கடமையாக செய்கின்றேன்!

ஏனா நான் முதலில் வாழ்வில் போட்ட  கள்ள ஓட்டு ஒரு சட்டதரணி அரசியல்வாதிக்கு!  இப்ப  அவர் இலங்கை மும்மொழி   ஊடகத்தில் அடிக்கும் கூத்தை நினைக்கையில் வெறுப்பாக இருப்பது போல சில திரட்டிகள் காணமல் போனதுக்கும் நாமும் ஏதோ ஒருவகையில் காரணம்  தான்!


 ஒற்றுமை இன்மை, போட்டி மனோபாவம் ,ஈகோ, விட்டுக்கொடுப்பு இன்மை வளர்ச்சிக்கு உதவாமை என்பன! அதில் தனிமரமும் அடங்கும் என்பதை வெள்ளிட மலையாக கூறிக்கொள்கின்றேன்.

சில வட்டத்தை பிரிந்தது ஈழத்து  சில பாடல் பதிவுக்கு திரட்டியில்  ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்பது அன்றி என் தனிமரம் வலையை வளக்க வேண்டிய தேவையில் அல்ல.

 காரணம் தனிமரம் என் போக்கில் போகும் ஒரு வழிப்போக்கன் அன்றி தொடர்ந்தும் இணையத்தில் இருக்கும் ஆப்பீஸ்ஸர் அல்ல !


எனக்கு புதியவர்களை பிடிக்கும். புது விடயம் தேடி ஓடும் ஒரு வாசகன் தான்!மொய்க்கு மொய் வை என்று இன்று வரை யாரையும் வேண்டியது இல்லை. என் உணர்வை எழுதுகின்றேன்!

 பிடித்தால் வாசிக்கவும் இல்லையேல் அடுத்த பதிவரை நாடி ஓட இங்கே ஆயிரம் பதிவர் இருக்கு.ஆனாலும் நட்பு என்று வந்தால் தனிமரம் ஒரு தோப்புதான் திரட்டியைவிட!

 இன்றும் நாஞ்சில் மனோ, செங்கோவி.தமிழ்வாசி, கணேஸ் அண்ணாச்சி  வலையில் வந்த கிராமத்துக்கருவாச்சி கலை, அதிரா ,ஹேமா, அஞ்சலின், சசிகலா,நேற்று இணைந்த அக்காச்சி கீத்தா ரவி என்றாலும் எப்போதும் பொதுவெளியில் தனிமரம் ஒரே பார்வைதான் வெளிப்படையாக பேசுங்கள்! பம்முவதும் ,வட்டத்துக்குள் நிற்பதால் தேங்குவது தமிழ்வலையுலகு அன்றி தாங்கள் அல்ல!

 திரட்டிகளின் சேவையைப்போல பதிவர்களுக்கு மேடை தருவது வலைச்சரம் அதனை எல்லோரும் சேர்ந்து முன்னோக்கி நகர்த்துவோம்!

  வாருங்கள் இன்றும் சிலரை நினைக்கின்றேன் காரணம்  இவர்கள் போல நான் படிக்கவில்லை எழுத என்பதால் !வலையில் தனிமரம் படிக்காதவன் ஆனாலும்.! கம்பனை  முழுமையாக கல்லாதவன்!   கம்பன் பற்றி அலச இங்கே-


என் அரசன் இங்கே -http://manidal.blogspot.fr/2006/05/blog-post_05.html.

கம்பன் போல மாதவியின் கதை தனித்துவம் ஆனாலும் இந்தப்பந்தல் வாசகனாக 2005 இல் இருந்து மேய்கின்றேன் இப்போது இவர் கொஞ்சம் தேங்கிவிட்டார் எனலாம் புதிய வருகையான முகநூல் ,டுவிட்டர், இத்தியாதி!http://madhavipanthal.blogspot.fr/2014/05/kalthondri.html.!

.இப்படி இத்தியாதி இருப்பதில் எது சிறப்பு என்று கேள்ள்வி கேட்டகும் இவர்!


நட்புக்கு நான் என்றும் சாமானியன்!http://chellappatamildiary.blogspot.com/2015/06/blog-facebook.html

இப்படி எல்லாம் கேட்க நீ என்ன புத்தகம் படித்தாய் சிரிக்க என்று கேட்டால்! தனிமரம் இன்னும் நூல் படிக்கவில்லை! ஆனால் வாசித்தேன்.

 எங்கே இங்கே  http://thillaiakathuchronicles.blogspot.com/2015/02/Sarithayanam-Sirithayaname.html. வாசித்துக்கு சாட்சி. ஐயா நான் சட்டம் படிக்கவில்லை சட்டம் தெரிந்து இருந்தால் தனிமரம் ஏன் ஏதிலியாக இருக்கப்போறன்?,.

 அந்தக் கவலையைப்போக்கும் இவரின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்!

பல பதிவு வாசிக்க இருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சட்டம் படிக்க ஆசை! ஆனாலும் உத்தமவில்லன் என்று யாரோ என்னையும் முகநூலில் குத்தும் செய்தி வருகுது[[[[[ ஜாலிகாக!

அண்ணாச்சி மற்றவர்களின் பதிவுகளை கொஞ்சம் உள்வாங்கி பின்னூட்டம் இட்டால் இன்னும் பலரை சென்றடையலாம். என்ற ஒரு சிறு ஆலோசனைச் சொல்லிய வண்ணம் படிக்காதவன் ஐயா தனிமரம்  குறை நினைக்காத!http://vriddhachalamonline.blogspot.fr/2015/02/blog-post_93.html.


இதை எல்லாம் விமர்சனம்  செய்யலாமா பொதுவெளியில் என்றால் என்ன செய்வது வேலைதேடி வந்தால் கேள்விக்கு   பதில் சொல்லித்தானே வேலை வாய்ப்பு பெறமுடியும் அப்படி நான் சொல்லவில்லை.


 இவரின் தளம் இப்ப ஏன் புதிய பதிவுகள் வராமல் இருக்கு மாதம் ஒன்று சரி எழுத நேரம் இல்லையா அல்லது வேற ஏதாவது காரணமா! வத்தி வைச்சாச்சு!ஹீhttp://vriddhachalamonline.blogspot.fr/2015/02/blog-post_93.html.

  இவர்  பரிசலில் நீந்திய காலத்தில் தனிமரம் பதிவராக வலம் வரவில்லை !


ஆனாலும் மூத்த படகு ஏனோ முகநூலில் மட்டும் முடங்கிவிட்டது தனிமரத்தோடு!http://parisalkaaran.blogspot.fr/2015/01/blog-post_91.html.

. நினைவில் பலர் இனியாபோல என்றாலும் விக்கிமீடியாவில் எழுதுவதுக்கும்  ஒரு தகுதி , பொறுமை, திறமை வேண்டும் !இவரிடம் அது அதிகமாகவே இருக்கு .லிங்கம் என்றால் சுயம்பு அதுவும் இவர் ஜம்பு   என்றால் அனுமான் என்று கேட்ட ஞாபகம்   !ஐயா பஞ்சு டயலாக் ! சார் பிழை என்றால்  மன்னிச்சு[[[[




- இங்கே-http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_16.html. ஐம்புலிங்கம் ஐயா கத்தி கொண்டுவரமாட்டார் அவரின் அனுபவத்தில் பார்த்த விடலைப் பையன்கள் பலர் !அதில் தனிமரமும் ஒரு வெட்டிப்பயல்! ஹீ அவர் கத்தி எடுத்தால் நான் கதிவேலன் `மகன் என்று சொல்ல ஆசை ஆனாலும் இப்படியா[?,

!http://malarinninaivugal.blogspot.com/2014/02/blog-post_13.html.


வலையில் பலரை சாமானியன் தனிமரம்  புதிதாய் வாசிக்கின்றேன் ஊமைக்கனவுகள், குழல் இன்னிசை, எங்கள் பிளாக், முகுந்தன் அம்மா, இப்படி பலர் என்றாலும் !எல்லாரையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யும் அளவுக்கு நேரச்சிக்கள் இருப்பது பலருக்கும் புரியும்

! ஏதோ படிக்காத வழிப்போக்கன் தனிமரத்தையும் இவ்வாரம் வலைச்சரத்துக்கு அழைத்த பெரியவர் யாதவன் நம்பிக்கும் கோடி நன்றிகள் .

அத்துடன் என் வலைச்சரப்பணியை தன் பல்வேறு பணிகளுக்கும் இடையிலும் கைபேசியில் அழைத்து பாராட்டிய பதிவர் புதுவை வேலுக்கு என் நன்றிகள் பல. மனதில் பட்டதை எழுதிவிட்டேன் யாரையும் புன்படுத்துவது என் நோக்கம் அல்ல!

 ஏனா தனிமரத்தில் கீறுவது சாமானிய மணிதர்கள் ஆய்வாளர்கள் சொல்வது கல்வெட்டு என்பதை சொல்லி என் கற்பனை வளத்தை விரியம் பெற வைத்ததுக்கு சாமானியன் தனிமரம் நேசனின் நன்றிகள்.


பல்வேறு பணிகளுக்கும் இடையில் சாமானிய வழிப்போக்கன் தனிமரத்தின் வலைச்சர மேடைக்கு பின்னூட்டம் இட்டு திரட்டியில் வாக்கு போட்டு பதவி உயர்வு தந்த மேன்மக்களுக்கும் நன்றிகள், இவ்வாரம் வர ஆசையிருந்தும் கைபேசியில் சிக்கல், கணனியில் சிக்கல்,இணையம் வேலை செய்யவில்லை,தனிப்பதிவு போட்டு இருக்கலாமே தனிமெயில் அனுப்பி உசுப்பி இருக்கலாமே  என்று மொக்கை சொல்லிய முகநூல் உறவுகளுக்கும், நன்றி!

அட தனிமரமா இவ்வாரம் வெட்டி அவன் பக்கம் போகமாடோம் என்று கைபேசியில் வலைச்ச்சரம் படித்து கருத்திடா நம்மவர்களுக்கும் நன்றிகள்.

இவ்வாரம் புதியவர்கள் பலரை அறிமுகம் செய்ய உதவிய முகநூல்/வலை நட்பு துளசி.கா வுக்கும் ,தஞ்சையம்பதி  வலைப்பதிவர் துரை செல்வராஜீவுக்கும் நன்றிகள் சொல்லிய வண்ணம் விடைபெறுகின்றேன்!


மீண்டும் தனிமரம் வலையில்
சந்திப்போம் என்ற
நம்பிக்கையில்!

தனிமரம் நேசன்
பாரிஸ்.
.                         








30 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பல தளங்களுக்கு ஓட்டுப்பட்டை இணைப்பு செய்து கொடுத்து விட்டேன்... தமிழ்மணம் தற்சமயம் புதிய தளங்களை ஏற்றுக் கொள்வதில்லை... விரைவில் ஏற்றுக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் முதல் வருகைக்கும் விளக்கத்துக்கும்.

      Delete
  2. புதிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களின் மனதில் பட்ட பல செய்திகளை எவருடைய மனமும் நோகா வண்ணம் பகிர்ந்துகொண்ட முறையும், துணிவும் பாராட்டத்தக்கது. என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. இன்றைய தேதியில் தமிழ் விக்கிபீடியாவில் 225 கட்டுரைகள், ஆங்கில விக்கிபீடியாவில் 75 கட்டுரைகள். நண்பர்களின் தூண்டுகோலே விக்கிபீடியாவில் என் பதிவுகளுக்குக் காரணம். அன்புக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  3. வணக்கம் சகோ!! திரட்டியை பற்றி அழகாக சொல்லியிக்கீங்க! நான் இன்னமும் இனைக்கவில்லை! கூடிய விரைவில் இனைத்துவிடுகிறேன் இன்று அறிமுக பதிவர்களில் இருவர் என்தளம் வந்து பாராட்டியிருக்கிறார்கள்!! அவர்களுக்கும் மற்றபதிவர்களுக்கும் அருமையாக தொகுத்துதந்த தங்கள் சிறப்பான பணிகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றி!!

    அன்புடன் கருர்பூபகீதன் நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ இவ்வாரம் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  4. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சிறப்பாக ஒரு வார ஆசிரியர் பணியை நிறைவு செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  5. எனது புதிய தளமும்
    தமிழ் மணத்தில்
    இணைக்கப்படவில்லை...
    வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை
    சிறப்பாகச் செய்தமையைப் பாராட்டுகிறேன்!

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  6. தனிமரத்தின் தாலாட்டுத் தமிழை கேட்ட பின்பு, செடிகளாக வேர் விட்டு முளைக்கத் துவங்கி விட்டன! நாளைய மரங்கள் யாவும் அதனருகில்! அவைகளுக்கு அன்பு/நட்பு என்னும் நீர் வார்த்து வளரச் செய்வோம்.
    இன்றுமுதல் நண்பர் நேசன் அவர்களே நீவீர் தனிமரம் அல்ல!
    பூத்துக் குலுங்கும் கனிமரம். ஆயிரமாயிரம் பறவைகள் வந்து
    உமது சிறப்பை பாயிரம் பாடி வரவேற்கும்.
    வாழ்த்துகள்!
    அறிய பணியை அள்ளித் தந்தமைக்கு ஆனந்த வாழ்த்துகள்.
    சிறப்பான அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் எமது நல்வாழ்த்துகள்!

    த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டுக் கருத்துரைக்கும்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  7. இன்றைய அடையாளபடுத்தலில் ஒரு சிலர் அறியப்பட்டவர்கள்..மற்றவர்களையும் நேரம் கிடைக்கும் போது தொடர்கின்றோம்...தங்கள் பணி சிறப்பாக முடிவடைகின்றது...

    அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  8. தனியாக வளரும் மரம் தான் பின் தோப்பாகும் போல் இங்கே ஒரு தோப்பையே இவ்வாரம் முழுக்க உருவாக்கிய உமக்கு வாழ்த்துக்கள்.
    அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    தங்கள் பணி சிறப்பாக முடிவடைகிறது. மீண்டும் தங்கள் தளத்தில் தொடர்வோம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேஸ்வரி வருகைக்கும் பாராட்டுக் கருத்துரைக்கும்.

      Delete
  9. அருமை சகோதரரே!
    உள்ளத்தில் உள்ளதெல்லாம் கொட்டித்தீர்த்தாச்சா..:)

    நல்ல தொகுப்பு! சிறந்த பதிவர்கள் அறிமுகம் இன்றும்!
    வித்தியாசமான முறையில் தங்களின் பதிவுகளும் தொகுப்புமாக
    இவ்வார வலைச்சரத்தை அழகு செய்தீர்கள்!

    சிறப்புடன் பணி நிறைவு செய்தமைக்கு உளமார்ந்த
    பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் சகோ!
    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளமதி இவ்வாரம் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  10. அருமை.. அருமை.. வேறொன்றும் சொல்வதற்கில்லை..

    நல்ல பல தளங்களின் தொகுப்பு..
    தங்கள் வழிநடையில் என்னையும் நினைவு கூர்ந்ததற்கு மகிழ்ச்சி..

    என்றென்றும் வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  11. மனதில் உள்ளதை உள்ளபடி சொல்ல எத்தனை பெயரால் முடியும்....
    இதோ உங்களுடன் சரிசமமாக உட்கார வைத்து உரையாடியது போல இந்த வாரம் முழுக்க பதிவர் அறிமுகங்களும் உரையாடலும் அமைந்ததாக நினைக்கத்தோன்றுகிறது.
    அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிங்க பாராட்டுகள்.

    ReplyDelete
  12. நன்றி சசிகலா இவ்வாரம் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும்.பாராட்டுக்கும் .

    ReplyDelete
  13. நமக்கு அறிமுகமான பல பதிவர்களை அழகான முறையில் இங்கு அறிமுகம் செய்தீர்கள்.
    ஆசிரியப் பணிக்காக பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  14. எனது
    "நிஜாம் பக்கம்" தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    (இணைப்பு இல்லையே நண்பரே?)

    ReplyDelete
    Replies
    1. http://nizampakkam.blogspot.fr/2013/12/kuma11-119.html

      Delete
    2. தவறுக்கு மன்னிப்புக்கோருகின்றேன் சகோ! சரி செய்துவிட்டேன் என நம்புகின்றேன் நிஜாம்.

      Delete
  15. வணக்கம் !
    இன்று அறிமுகமான அனைவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete
  16. இன்றும் சில புதிய தளங்கள்! அறிமுகத்திற்கு நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நானும் உங்கள் நண்பன் தான் சகோ!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது