07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 25, 2015

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப்போவமா?,

ஏதிலிக்கு வாழ்த்துக்கள் தந்து  திரட்டியில் வாக்கு இட்டு வரவேற்ற வலையுறவுகளுக்கு நன்றிகள் சொல்லி !

அடுத்த பகிர்வாக உங்களை வலைச்சரம் ஊடாக நாடி வரும் தனிமரம் .


எழுதிக்கிழிச்ச நேரத்தை பிரியோசனமாக   பேசாமல் கடையில் கணக்கு எழுதினாலும் சம்பளமாக கொஞ்சம் காசு கிடைக்கும்! உனக்கு பிடிச்ச படம் பார்க்கலாம் போய் வேலையைப்பாரு!

 எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான் பாடியவன் பாட்டைக்கெடுத்தான் உனக்கு எழுத்தும் கைகொடுக்காது, பாட்டும் சோறு போடாது .!போய்த்தொலை உதவாக்கரையே !!என்று தான் என் நண்பனுக்கு என் முன்னால் தொழில் நிமித்தம் சந்தித்த போது அர்ச்சனைப்பூக்கள் போல அவனை நோக்கி    தூவிய பூக்கள்.

அவன் வாங்கியபோது அவன் வயது18  !! தனிமரம் என்னைவிட இரண்டு வயது குறைவு!!

ஆனாலும் எழுதும் ஆர்வம் அவனை முகம் தொலைய வைத்தது! அதனை அவன் விரும்பியவாறு தனிமரம் வலையில்தொடரக  எழுதியது போது ராகுலின் வயது  31 அப்போது 2011 இல் !அதுவரை  ராகுல் போல தனிமரம் நேசனுக்கு வலையில்  தொழில்நுட்ப உதவி புரிய நாற்று நிரூபன் போல ஒரு நல்ல வழிகாட்டி கிடைக்கவில்லை!! அது நேசனின் தனிப்பட்ட அவலச்சூழ்நிலை.தனிமரம் 2010 கார்த்திகை மாதம் நேசன்-கலை  என்று சொந்த வலை தொடங்கினாலும் தனிமரம் என்று இன்றும் வலையில் இருக்கவும் !

தனிமரம் என்று மீண்டும்  வலைச்சர ஆசிரியர் மேடையில் இருக்க ஏதிலிக்கு முகம் தந்த குரு இவனை அன்பில் பணிகின்றேன்!நாற்று நிரூபன் உருவாக்கிய ஈழத்து/புலம்பெயர் பதிவாளர்கள் பட்டியல் அதிகம் !இந்த சாதனையை இனி ஒருவராலும் வலையில்/திரட்டியில் / இலங்கை தமிழ்க்கூட்டமைப்புபோல நாற்று நிரூபன் போல உருவாக்க முடியாது.!! அப்படி உருவாக்க முடிந்தால் தனிமரமும் சாதாரண ஊழியன் போல பின் வருவேன்! ஆனாலும் நிரூபன் வழிகாட்டிய ஆட்சியில்  இன்னும்  வலை/முகநூலில் /கூகில் பிளஷ்  என்று இருப்போரில் தனிமரமும் ஒருவன்!!!!!
 நிரூபனின் நிஜமுகம் இதுதான் ஆனால் பாஸ்க்கு எழுத்துப்பிழை என்றால் வரும் கோபம்  பொங்கி வரும் காவேரி[[[[!


 ஆனாலும் ஒரு  கதையை இலங்கை ஜனரஞ்சக  பத்திரிக்கை ஒன்றில்  தொடர் கதையாக  எழுத ராகுல்   பட்ட  அவமானம் புலம்பெயர்  பிரெஞ்சுக்காதலி அறியாத ஒன்று!

2000 ஆண்டில்  எனக்கு கொழும்பில்  கிடைத்த ஓசிக் காப்பியும் ஒரு கொத்து பாரோட்டாவுக்கும்  ஈடாக இன்னும் ஆயிரம் ஈரோ பாரிசில் உழைப்பு என்று வருமானத்திலும் கிடைக்காத திருப்தி.   ஆனாலும் பிரெஞ்சுக் காதலியைவிட தனிமரம் எனக்கு அதிக நட்பை வலையில் பெற்றுத்தந்த தொடர் இது .அவனை நட்பாக்கியதால் நான் பெற்ற அன்புச்செல்வம் அதிகம் வலையில். ஆனாலும் ராகுலை   அவன் பாதையில் போகவிட்டு பல கும்மி அடிக்கின்றேன் என்  வெட்டிப்பொழுதில்.வலையில் முகநூலில்.இன்றும்!!


ராகுல் நட்பை பெற உதவியது விற்பனைப்பிரதிநிதி வேலை.!!


 வாங்க அடுத்த கடைக்கு போவம் இப்படித்தான் சில கடையில் தினமும் கேட்கும் ஒப்பாரியை மறந்து அலைந்த அந்தக்காலத்தில் இப்படித்தான் நானும் சிரித்தேன் !!

ஆனாலும் இவர் போல என்னால் சிரிக்க முடியாது!! தொழில் நுட்ப அறிவிலும் .குறள் ஞாபகத்திலும் ,ஏன் வலையில் பலரை வாழ வைக்கும் அன்னை போல இவர் . தமிழ்மணம் திரட்டியில் இணைத்துக்கொடுத்த புதிய பதிவாளர்கள் பட்டியல் அதிகம்.

 இவருக்கு நான் அறிமுகம் கொடுக்கவில்லை அன்போடு நன்றிகள் மட்டுமே இவர் வாழும் ஊர் கடந்து வருடம் தோறும் போகின்றேன் இன்னும் ஐயன் அவருக்கு எனக்கு ஐயப்பன்  இவரை சந்திக்க காலம் கூடிவரவில்லை!


http://dindiguldhanabalan.blogspot.com/p/followers.html.

தனபாலன்  இருக்கும் நகர் போக முன் நான் போன இந்த ஊருக்கு தமிழ் சினிமா இன்னொரு முகவரி கொடுத்தாலும் இதை ரசியுங்கோ!

அதிகம் திரட்டிகள் பற்றி அலட்டுவது இல்லைப்போலும் http://www.thilai.blogspot.in/2015/07/blog-post_5.html.

 கப்பல் வரும் கரை சேர்க்கும் என்று பொன்னியின் செல்வன் கதையை இன்னொரு வடிவில் எழுதிய காவிரிமைந்தன் கதை எத்தனைபேர் வாசித்திருப்பார்கள்!! அது போல ஈழத்தில் கப்பல் இலங்காராணி முதல் இறுதி யுத்தத்தில் இந்திய கப்பல் , ஐரோப்பா  கப்பல் , ஏன் அமெரிக்கா கப்பல் வரும் என்று உயிர் விட்ட கதை எல்லாம் இன்னும் மழைதான் இதையும் வாசியுங்கோ!

வணக்கம் அடுத்த அழைப்பில் காத்து இருக்கும் நீங்க யார் எங்கிருந்து பேசுகின்றீர்கள் நான் தனிமரம் நேசன் பாரிசில் இருந்து என்று இன்று இணைய வானொலிகளில் உரையாடினாலும் இவரின் பதிவு இன்னும் தனித்தொடர் எழுத உந்து சக்தி தருகின்றது!

http://gopalkrishnaniyer.blogspot.fr/2015/08/blog-post_15.html

ஏன் சிறப்பாக எழுதும் பலர் தமிழ்மணம், இட்லி . என்று திரட்டியில் இணையாமல் இருப்பது இவரின் பதிவுகள் இன்னும் பல சிகரம் தொட என் வாழ்த்துக்கள். இப்போதுதான் இவரின் பக்கம் தனிமரம் உலாவுகின்றேன்.


இந்த பாடல் கேட்க ஆசை தான் ஆனாலும் இன்னும் இவர் வலையில் செதுக்க வேண்டிய கட்டமைப்பு இன்னும் அதிகம் !

முகநூலில் இருப்பை நிலைநாட்டுவதை விட வலையில் எழுதிவைத்துப்போனால் வரும்காலம் கூகிலில் தேடும் போது உங்க வலையும் வரும் என்பதை படிக்காத தனிமரம் சொல்லி வைக்கின்றேன். எனக்கு அதிகம் தொழில்நுட்பம் படிக்காத வெட்டிப்பயல்!


என்ன கணக்குப்பிள்ளை இன்று என்ன புத்தகம் படிதாய் அதில் ஒரு வாசகம் ஒழுங்கா விளங்கும் வண்ணம் முன்னால் போய் கரும்பலகையில் எழுது என்று பல ஆசிரியர்கள் பின்வருசை மாணவர்களின் சுயத்தை சோதிப்பார்கள் . இவர் முகநூலில் அதிகம் கிறுக்கினாலும் வலை மட்டுமல்ல முகடு என்று சஞ்சிகையும் வெளியீட்டுக்குழுவில் இருக்கும் குரு!

இப்படியே இவர் நண்பனை கண்டால் அவர் தீராத நதி என்பார் இவரும் இருப்பது பாரிசில் ஆனால் இன்றுவரை நானும் இவரை கண்டதில்லை இப்படிக்கடக்க!



வாழ்க்கை ஒரு வட்டம் நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லியது இந்த அக்காச்சியும் நதியா ரசிகையாம் இன்னும் பாட்டி பேர்த்தி பாசம் மறக்க முடியுமா!இப்ப ஏனோ வலைக்கு அதிக விடுமுறை ஆனாலும் முகநூலில் உலாவலாம்.


இன்று சினேஹா அரபுலம் பார்க்க கூப்பிடுகின்றா ஏன் தூக்கம் தொலைத்தேன் ஏன் இந்த  தூக்க மயக்கம்!!  

 நாளை சந்திப்போம்

நட்புடன் தனிமரம்.



37 comments:

  1. அனைவரும் நான் அறியாத புதிய பதிவர்கள். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டேன். நேரம் கிடைக்கும் போது போய்வருகிறேன். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  2. வணக்கம் தனிமரம் நண்பரே!!
    தாங்கள் என் தளத்திற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி !! இங்கு அறிமுகம் எல்லாம் எனக்கு புது முகங்கள்தான் ! அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!!

    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  3. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  4. இனிய தளங்களின் அறிமுகம்..
    இன்றைய அறிமுக தளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  5. தாங்கள் அறிமுகப்படுத்திய தளங்களுக்குச் சென்றேன். நீங்கள் எங்களை அழைத்துச்செல்லும் விதம் நன்று. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  6. தனி மரம் அறிமுகப்படுத்தும் நனிமரம்(பதிவர்கள்) வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  7. தனபாலன் சார் தவிர பிறர் எனக்கு புதுமுகங்கள்! சென்று பார்க்கிறேன்! சிறப்பான அறிமுகம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  8. வலையுலகின் அன்னையென நீங்கள் குறிப்பிட்டது திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு சாலப் பொருந்தும்...சக பதிவர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு இணை அவரே... அனைத்து அறிமுக வலைப்பூக்களுக்கும் வாழ்த்துக்கள்! எண்ண ஓட்டங்களை சரியோ தவறோ வெளிப்படுத்தவும் அறிவார்ந்த பதிவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும் வலைத்தளம் எனக்கு பெரிதும் உதவுகிறது... வலைச்சரத்தின் பணி போற்றத்தக்கது. உங்கள் ஆசிரியப் பணி சிறப்படைய புலம்பெயர் ஈழத் தமிழச்சியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  9. அருமையான அறிமுகங்கள். டிடி சகோவை அன்னை எனக்கூறியது முற்றிலும் பொருத்தமே. அழகான விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள். நன்றி நேசன் பகிர்வுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  10. தலைப்பைப் போல அறிமுகப்பதிவர்களும் சிறப்பு.
    வாழத்துகள் அனைவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  11. தலைப்பே அசத்தல் சகோ!
    ஆமாம்! பூக்கள்விட்டுப் பூக்கள்தாவி மூழ்கத்தான் வேண்டும்!
    நேரக் குறைபாடுதான். பார்க்கின்றேன்!

    இன்றைய இனிய அறிமுகப் பதிவர்களுக்கும்
    உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  12. வணக்கம்,
    பூக்கள் விட்டு பூக்கள் தாவி,,,,,,,,
    அருமை, அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  13. அன்புள்ளள அய்யா,

    ‘பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப்போவமா?’
    - என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது அறிஞர் அண்ணாவிற்கு கலைஞரின் கவிதாஞ்சலி!

    பூவிதழின் மென்மையினும் மென்மையான
    புனித உள்ளம்- - அன்பு உள்ளம்
    அரவணைக்கும் அன்னை உள்ளம்! - அவர்
    மலர் இதழ்கள் தமிழ் பேசும்
    மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-!
    விழிமலர்கள் வேலாகும் - வாளாகும்
    தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!
    கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது;

    கைமலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை
    அம் மலரே எதிரிகளை மன்னித்து
    நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்
    மக்களாட்சி மலர் குலுங்க
    சமதர்மப்பூ மணக்க
    தாய்மொழித் தமிழே வாழ்வுப் பொழிலாக
    ஆடிவரும் தென்றல்
    நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்
    தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே - தினம்,
    பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்.....

    அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக் குவியல்!

    நன்றி.
    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் பாடல் கருத்துரைக்கும்.

      Delete
  14. வணக்கம் நண்பரே இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  15. சிறப்பான அறிமுகங்கள்...
    வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  16. டிடியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் புதியவர்களே! அழகான அறிமுகம்...நேசனின் நேசத்துடன்....

    அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  17. பலர் எனக்கு புதியவர்கள் ... நீருபன் எனக்கு பங்காளி ... என் பிளாக் காணாமல் போனப்ப கண்டுபிடித்துகொடுத்தார்.

    ReplyDelete
    Replies
    1. வாய்யா வாத்தி நலமா ஆமா நீ இப்ப முகநூலில் பிசி !என்றாலும் இங்கு வந்தது சந்தோஸம்!

      Delete
    2. அனாலும் அவர் உன் தோட்டத்தில் வாய்க்கால் தகராறு செய்த செய்தியும் அறிவேன்[[ கொழுதிப்போடிவோம் அல்ல! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      Delete
  18. இங்கே அறிமுகமான வலைத்தள சொந்தங்களுக்கும் அறிமுகப் படுத்திய
    சகோதரனுக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்காச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது