07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 1, 2015

காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள்

முதல் நாளிலிருந்து என்னுடன் ஆர்வமாக பயணிக்கும் அனைவருக்கும் வணக்கங்கள் .

எழுத்துக்கள் வரம் . சிந்திப்பவர்களோ , படிப்பவர்கள் அனைவருமே எழுத்தாளர்கள் ஆகி விடுவதில்லை . ஆனால் , எழுத்தாளர்கள் அனைவரும் படிக்கிறார்கள் . அதுவே எழுத்தின் மூலங்களாக அமைகின்றன .

எழுத்துக்களிலும் கொஞ்சம்
 நகைச்சுவை சர்க்கரைத்தூவித் தர கசப்பான உண்மைகளும் இனிப்பாக உள் இறங்குகின்றன . நம்முடைய கலைவாணர்  என்.எஸ்.கே , விவேக் கடைப்பிடிக்கும் காமெடி ஊரறிந்த ரகசியமல்லவா .. அதிலும் பெண்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கம்மி என்றும் சொல்லக்கேள்விப்படுகிறோம் .

எல்லாவற்றிலும் விட்டுத்தந்து அழகுப்பார்த்தவள் பெண் , நகைச்சுவையும் வெளியில் காட்டாமல் வீட்டினுள் காத்து , அழகுப்பார்ப்பவள் .. எத்தனை மனைவி ஜோக் , சமையல் ஜோக் வந்திருக்குப்பாருங்க ..ஆனால் கணவன் ஜோக் , மனைவி எழுதியதாக கேள்விப்படறோமா .. அங்க இருக்குங்க பெருந்தன்மை .. (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ .. வந்துடறேன் விஷயத்துக்கு )

நான் பேஸ்புக்கில் பார்த்து வியந்தப்பெண் , இத்தனை அழகாக இயல்பான , யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையை எழுத முடியுமா பதிவுகளாக என ஆச்சர்யக்கடலில் என்னை தொபுக்கடீர் என்று தள்ளியப்பெண் இவர் .
ஸ்ரீதேவி செல்வராஜன் . கனவுத்திருடி இவரது வலைப்பூ ..(ஏற்கனவே இங்கு அறிமுகம் போலிருக்கிறது . ;)

வலைப்பதிவராகவும் சக்கைப்போடு போடுகிறார் . ஜாலிப்போஸ்ட் என்ற பெயரில்
தான் குடியிருக்கும் வீட்டிற்கு கீழே வசிக்கும் பாட்டியுடனான இவரது உரையாடல்கள் கடைசியில் வைக்கும் ட்விஸ்ட்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கும் . படிச்சுப்பாருங்களேன் , அசந்துப்போவீங்க ..

பாட்டியுடன் ஒரு உரையாடல்

அட என்னப்பா இந்தப்பொண்ணு ஜாலியாத்தான் எழுதுமா என்றால் , சரக்கொன்றை என்றப்பெயரில் கவிதைப்போல உரை நடை தந்து உற்சாகமூட்டுகிறார் .

 சரக்கொன்றை


iயல்பாக விமர்சித்திருக்கும் பாகுபலி விமர்சனம் .. நல்ல அலசலாக தேர்ந்த எழுத்தாளராகப்பட்டது எனக்கு .

பாகுபலி விமர்சனம் , இவருக்கு சினிமாவும் எழுதி கலக்க  வருகிறதே  என்று  படிக்க வைத்தது .

காளி என்ற தலைப்பில் இவரின் கவிதைக்கண்டு மிரண்டுத்தான் போனேன் .

கதைச்சொல்லி என்ற இலக்கிய இதழில் கதைகள் எழுதும் எழுத்தாளராகவும் அவதார ஏற்றுள்ள ஸ்ரீதேவியை வலைச்சரம் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்தது .. அனன்யா மஹாதேவன் , அனன்யாவின் எண்ண அலைகள் என்ற இவரது வலைப்பூ .. நம்மை வளைத்துக்கொள்ளும் பூ ..

கொஞ்சம் வளவள எழுத்துக்களுக்கு சொந்தக்காரார் தான் ஆனால் , அத்தனையும் காமெடி முத்துக்கள் ..

ஒரு பதிவோடு நீங்க படிச்சிட்டு வெளில வரலாம்ன்னு நினைச்சா ஏமாந்து தான் போவீர்கள் ..

இங்கே பாருங்களேன் , பில்டர் காபி போட்டுக்குடிப்போம் ..சரி ..சரி போட்டுத்தந்தால்  குடிப்போம் , அதையே ஒரு பதிவாக மணக்க மணக்க விட்டிருக்கிறார் ..

பில்டர் காபி - பதிவு
தனது கணவரை ரங்கஸ் எனக்குறிப்பிடுபவரது அன்னியோன்யமும் அழகாக வெளிப்படுகிறது இப்பதிவில் .

லஷ்மி என்றப்பெண்மணி , ஒரு மன வளர்ச்சிக்குன்றியக்குழந்தையைக்காப்பாற்ற , ஏழாவது மாடியில் , சின்ன கான்கிரீட் பாத்தியில் நடக்க முடியுமா .. இவர் பதிவைப்பாருங்களேன் ..

லஷ்மி ... அனன்யா அம்மாப்பற்றியப்பதிவு

மெய்சிலிர்க்கும் அனுபவம் அனன்யா எழுதியவை .

டிவி ப்ரோகிராம் பார்த்து நாம சிரிப்போம் .. அதையே நகைச்சுவை ததும்ப ததும்ப பதிவாக்கினால் , அழகாக ஜொள்ளர்கள் - ஆடியன்ஸ் என்று காமெடிக்களம் அமைத்துக் கதகளி ஆடியிருக்கிறார் , இந்த காமெடி க்வீன் ..

இந்தப்பதிவில் ..

டிவிப்ரோகிராம் ..அலப்பறை  ஆசம் ..

எந்த இமேஜ்க்கும் கட்டுப்படாமல் ..இவர் எழுதியிருக்கும்

விஜயவாடா விசும்பல்ஸ் படிங்க கலக்கல் தான்

விஜயவாடா விசும்பல்கள்..

இவர்களது பதிவுகள் அனைத்துமே எழுத்தின் இனிமையை , ஆர்வத்தை தூண்டுபவையே ..

நம் வலைச்சரம் சார்பாக 2009 முதல் வலைப்பதிவராக உள்ள அனன்யாவை  வலைச்சரம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடருவோம் ..அடுத்தப்பதிவர்களோடு ..

அன்புடன்

சுமிதா ரமேஷ் .






36 comments:

  1. வணக்கம் சகோ!! தங்கள் எழுத்து பேசுவதுபோலவே இருக்கிறது! இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!! நன்றி!!

    அன்புடன் கரூர்பூபகீதன்!!

    ReplyDelete
  2. வணக்கம் மா நல்ல நடையில் உங்களின் எழுத்து வசீகரிக்கின்றது....உங்களுக்கும் அறிமுக நகைச்சுவைப்பதிவர்களுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அன்புள்ள சகோதரி,

    ஸ்ரீதேவி செல்வராஜன் அவர்களின் வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துகள்...!
    தொடர்கிறேன்..,.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி .. சகோ , மகிழ்ச்சி படித்தே , ரசித்தேன் , பகிந்தேன் .. :)

      Delete
  4. ரெண்டு ஹி.. ஹி.. ப் பெண்களுமே எனக்கு அறிமுகமானவர்கள் என்பதில் மகிழ்ச்சி. அனன்யாவின் நகைச்சுவை வெகு அனாயாசமானது. போகிற போக்கில் அள்ளித் தெளிக்கிற சிரிப்பு அது. ஸ்ரீதேவி நகைச்சுவையோட சேத்து வேற பல ஏரியாக்கள்லயும் வூடுகட்டி அடிக்கறாங்கன்றத உங்க அறிமுகத்துலயே சொல்லிட்டீங்க. ரெண்டு பேருக்கும் மகிழ்வான நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஸ்ரீதேவி செல்வராஜன் - கார்த்திக் புகழேந்தியின் வற்றா நதி புத்தக வெளியீட்டின்போது சந்தித்தேன். அதற்குப் பின்னர் தான் முகநூல் நட்பு வட்டத்தில் இணைந்தேன். என்ன ஆயிற்றோ தெரியவில்லை, சில நாட்களாக அவரது பதிவுகள் என்னுடைய டைம்லைனில் வரவில்லை. தெரிந்தோ தெரியாமலோ unfriend செய்திருக்கிறார் ;)

    அனன்யா மகாதேவன் - நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர். எப்படி இவ்வளவு சரளமாக ஒருவர் நேரில் நின்று காமெடியாகப் பேசுவதுபோல் இருப்பது ஆச்சரியம். ப்ளாக், பேஸ்புக் என்றில்லாமல் நேரிலும் நன்றாகப் பழகக்கூடியவர். சொந்தத் தம்பி போலப் பாவித்து என்னை வாடா போடா என்று அழைப்பவர்.

    சென்ற பதிவில் அறிமுகம் எதுவும் இல்லையா என்று கேட்டுவிட்டேன். :)

    ReplyDelete
    Replies
    1. புரிந்தது .. வாழ்த்துகள் உங்களுக்கும் .

      Delete
  6. தங்களை வலைச்சரம் மூலம் அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

    இன்றைய அறிமுகங்களில் இருவர் அறிவோம். ஏனையோரை அறிந்து கொண்டோம். அனைவருக்கும் வாழ்த்துகள்!

    கீதா: அனன்யா அவர்களை நல்ல அறிமுகம் உண்டு. அவர் ப்ழகுவதில் அவ்வளவு இனிமையானவர். காமெடி க்வீன் தான். சகோ கீதா சாம்பசிவம் அவர்களை வலைத்தளம் மூலம் அறிவோம். மிகவும் நகைச்சுவையாகவும், பல தகவல்கள் பின்னூட்டங்களில் தந்தும் அசத்துவார்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி , தொடர்ந்திருப்போம்

      Delete
  7. புதிய தளங்களின் அறிமுகங்கண்டு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. தேங்க்யூ .. மகிழ்ச்சி

      Delete
  8. வணக்கம், அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கமும் , நன்றியும் :)

      Delete
  9. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ஸ்ரீதேவி செல்வராஜன் வலைப்பூ Awesome!! நன்றி

    ReplyDelete
  12. சுமிதா மேம்...

    தங்களை வலைச்சரம் மூலம் வலைப்பதிவர் என்று அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி... கலக்குங்க.. அனன்யா ஏற்கனவே வலைப்பதிவில் பரிச்சயமானவர்... ஸ்ரீதேவி வலைப்பதிவர் என்று உங்கள் அறிமுத்தால் தான் தெரியும்...

    ReplyDelete
  13. வணக்கம் சகோ டிவிப்ரோகிராம் ..அலப்பறை இணைப்பு கிடைக்கவில்லையே....
    இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. எதோ மிஸ் ஆச்சூ ..மன்னிச்சூ :)

      Delete
  14. புது அறிமுகம் கிட்டியது.. நன்றி

    ReplyDelete
  15. புது அறிமுகம் கிட்டியது.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. சார் , உங்களுக்கா ..ஆச்சர்யம் தான் :) தேங்க்யூ

      Delete
  16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. யாவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. இருவர் அறிந்தவர்கள் மற்றவர்தளத்தில் இனி இணைகின்றேன் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  19. அனன்யா அவர்களின்பதிவுகள் வாசித்திறுக்கிறேன்! ஸ்ரீதேவி செல்வராஜன் தளம் சென்றதில்லை! சென்று பார்க்கிறேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! அனன்யா தளம் சென்றேன். கருத்திட முடியவில்லை எதுவோ சிக்கல்.. படித்து ரசித்தேன்.. கனவுத் திருடியும் அருமை. மற்றவர் தளங்களுக்கு இனிமேல் தான் செல்ல வேண்டும்..அருமை அறிமுகம். தொடருங்கள் சுமி!

    ReplyDelete
  21. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. புதிய தளங்களைக் கண்டோம். அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது