07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 3, 2015

நல்முத்துக்கள் - நான்காம் நாளில்

நான்காம் நாள் நல்முத்துக்களுடன் வலைச்சரத்தில் வலம் வந்து வணக்கங்களுடன் பதிவுடன் கூடிய பதிவர்களைப்பார்ப்போம்.

சமீபத்தில் ஒரு நாள்,  ஒரு ஷாப்பிங் முடித்து செம தாகம் பீறிட , அப்போது தான் அந்த வரலாற்று பிழையை செய்தார் என் கணவர். தெரியாத்தனமாக ..அருகிலிருந்த ஒரு நார்த் இண்டியன் ரெஸ்டாரண்ட்க்கு அழைத்துப்போக.. பக்கத்து டேபிளில் இருந்தப்பெண் ஒய்யாரமாய் பலூடா - falooda ஆர்டர் செய்து சாப்பிட்டபடி இருக்க..மெனு கார்டை அலட்சியப்படுத்தி ஸ்ட்ரெயிட்டா ஒரு பலூடா என்றேன் !



என்னவருக்கு ஆச்சார்யத்தில் ,கண்கள் பக்கத்திலிருந்த அரேபியன் gulf ஐ தொட்டு வந்தன. பின்ன ஐஸ்கிரீம் ஐ அவாய்ட் செய்பவள் , எத்தனை யோ முறை அவரது சாய்ஸ்ஐ நிராகரித்தவள் கேட்டதும் , சிரித்தப்படியே ஆர்டர் செய்து சாப்பிட்டும் முடித்து , வீடு திரும்பும் வரையில் ..ஓ..இத்தனை டேஸ்டா பலூடா..சே இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டோமே என்ற குற்ற உணர்வில் கொஞ்சம் புழுங்கித்தான் போனேன்..(ம்க்கும் !! ரொம்ப முக்யம் ந்னு தானே நினைக்கறீங்க :D )

அதிலிருந்து .. எதாவது சாப்பிடறியா என்றால் பலூடா தான் ! பல ரெஸ்டாரண்ட்ல் முயற்சித்தும் தேடலும் சுவையும் அடங்குவேனா என்றது..எங்கெங்கே பலூடா ஆர்டர் செய்யக்கூடாதென்று உணர்ந்தேன் ! கடைசியாக ஓரிடத்தில் மிகவும் சிலாகித்து சாப்பிட்டபோது பையன் , "இப்ப எதுக்குப்பா பலூடா ஸ்பெஷலா அம்மாக்கு/ " என்றான்..அவரோ " புதுக்கார் வாங்கினதுக்கு ட்ரீட் கேட்டா ! அதான் "  என்றதும்.. " கார் வாங்கி செலவு செய்தவங்களை மேலும் செலவாளியாக்கி ட்ரீட் கேக்கலாமா ! " என்றான்..அதற்கும் இவரும் , " ஆமா..நம் கல்ச்சரில் கல்யாணமோ , கிரஹபிரவேசமோ செலவு செய்தவர்களுக்கு மொய்யாக அவர்களுக்கு உதவி செய்யத்தான் சொல்லித்தந்திருக்கிறது  "  என்றார்.

என்னப்பா..ஒரு பலூடாக்குள்ள இத்தனை தத்துவமா..என்ற உங்கள் கேள்விப்புரிகிறது.. வந்துட்டேன் விஷயத்துக்கு...

முருகனை மிஞ்சிய தெய்வனில்லை.. முருகலான தோசைக்கு மிஞ்சின உணமில்லைன்னு ஒருவர் எழுதிருக்கார் !

அட .. செக் குடியரசுக்கு படிக்கப்போனவர் ப்ரகாஷ் சங்கரன் ..இத்தனை சுவைப்பட சமையலையும்..அம்மாவையும்.. தனது வாழ்வையும் செதுக்கியிருக்கிறார் பதிவில்....
இடும்பை கூர் வயறு  என்று பதிவாக்கியிருக்கிறார் .  ஆசம் !



ஐரோப்பிய வாழ் சமூகம் நம் இந்தியாவை எப்படிப்பார்க்கிறது , அதுவும் ஒரு பிரம்மச்சாரியின் பார்வையில்..எத்தனை அழகான கோணம்..அருமையாக விவரிக்கிறார்..

அயல் நாட்டு கலாச்சாரம்  என்ற பதிவுகளில் ..
ஜெமோவின் தீவிர வாசகராக அறிமுகமாகும் பிரகாஷ் , சொல்வனம் இதழில் வெளியான கவிதை குஞ்ஞுண்ணி எறும்பைப்பற்றிய குஞ்ஞுண்ணி மாஷ் பற்றிய கவிதையையும் தந்து ஆஹா ! எத்தனை ரசனை இந்த இளைஞருக்குள் என்று மனதை ஆள்கிறார்.



2015 ள் பதிவுகளை இடாமல் , படிப்பில் பிஸியாகிவிட்டாரோ என்ற எண்ண வைத்த ..இல்லையில்ல மிஸ் செய்ய வைத்த பிரகாஷ் தென்கரை .. என்ற ப்லாக் ஸ்பாட் சொந்தக்காரரே ! நிறைய எழுதுங்கள்..வேண்டும்..என்று வாழ்த்துகிறோம்..வலைச்சரம் சார்பாக வளைக்கரம் கொண்டு ! .

அடுத்தது.. நாச்சியார் இவர் பக்கம் கண்டது , கேட்டது , நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது என்ற கேப்ஷனுடன் வரவேற்கிறார்.. வல்லி சிம்ஹனாக ..நம் திருமதி. ரேவதி நரசிம்மன் அவர்கள் !

அ விலிருந்து ஹாலோவீன் வரை இவரது பதிவுகள் ஆ..ஆ வென ஆச்சர்யப்படுத்துகின்றன.


துபாய் , ஐரோப்பா , ப்ளாஷ்பேக் என பயணமாகும் பதிவுகளுக்கு சொந்தக்காரர்
பயணங்கள் அனைவருக்கும் எதோ ஒரு செய்தியைக்கூறிச்செல்லும் .பல தரப்பட்ட மனிதர்கள் அவர்தம் அனுபவங்கள் என.
அப்படி இவரது ஒரு பயண அனுபவமும்..என்னை மிகக்கவர்ந்தது..அது உங்களுடனும் பகிர்கிறேன்.

சம்சாரம் அது மின்சாரம். கரண்ட் போயி ஷாக் அடிக்கறத ஹாஸ்யமாக எழுதிருக்கிறார்..படிக்கும் நமக்கு ஷாக் இல்லாமல் எழுதியிருக்கிறார்  ... 

ஷாக் ..ஷாக்... ரசிக்கலாம் ..


ராமன் முதல் நரசிம்மன் வரை அத்தனை மூர்த்தியையும் , ஆடிப்பெருக்கு முதல் தீபாவளி வரை அத்தனை பண்டிகைகளுக்கும் இவரது வாழ்த்தும் நம்முடன் வாழ்தலையும் இயல்பாக சொல்கிறார் வார்த்தைகளில்
ஆண்டாளும் அக்காரவடிசலும் என்றப்பதிவு மிகக்கவர்ந்தது..பாருங்களேன்..

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி பதிவிடும் திருமதி ரேவதி நரசிம்மஹனை நாமும் ஆரோக்கியமும் சிறப்புற்று ..பலப்பல பதிவுகள் தரவேண்டுமாய் வாழ்த்துகிறோம்..!

மஹாபாரதத்தில் அர்ஜூனனின் மனைவி , கிருஷ்ணரின் தங்கை சுபத்ரா தேவி.!

இவர் மகன் அபிமன் யூ ..வத்சலா திருமணம் திரைப்படமாகவும் வந்தது..ஏனோ அந்த சுபத் ரா கேரக்டர் ரொம்பப்பிடிக்கும்..கண்ணனுக்கே தங்கையானதாலா தெரியவில்லை !

இங்குமொரு சுபத்ரா .. சுபத்ரா பேசுகிறேன் என்ற வலைப்பூவுடன் பேசுகிறார்.
இவரது சிறுகதை ஒரு நாயகன் ,20,000 ரூ பரிசை வென்றக்கதை , படிக்க படிக்க உருக்குகிறது.. ! அருமையான சிறுகதை..


தமிழும் சமஸ்கிருத மும் என்ற இவரது கூகிள் அகழ்வாராய்ச்சி கட்டுரை அசத்துகிறது..

பேருந்தில் பயணம்..அதில் தந்த பத்து ரூபாய் தனக்குள் தாக்கத்தை விளைத்தது என்கிறார்.. அமேஸிங்..

இது கதையல்ல நிஜம் ...  என்ற பதிவாக .. படிக்கலாம் .
எல்லாத்துறைகளையும் தொட்டு எழுதும் சுபத்ரா விற்கு நம் வலைச்சரம் சார்பாக வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.!
மீண்டும் அடுத்தடுத்த பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன்
அன்புடன்
சுமிதா ரமேஷ் ..

19 comments:

  1. பலூடா புராணம் அருமை..

    இன்றைய தொகுப்பும் அருமை!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி .. :) இங்கே வெயில் தாங்கலை , அதான் ஜில்லுன்னு ஆரம்பம் :)

      Delete
  2. இன்றைய அறிமுக ங்களின் தொகுப்பு அருமை!! அது என்ன பலூடா? அது எப்படியிருக்கும் (சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான்) நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. அச்சோ .. சாப்பிடுங்க .. வித்யாசமா நல்லாருக்கும் :)

      Delete
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வித்தியாசமான உணவு முறையில் தொடங்கி வித்தியாசமான தலைப்புகளைக் கொண்ட பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் . மகிழ்ச்சி

      Delete
  5. கார் வாங்கின ஆத்துக்கா(ர)ருக்கு செலவு வெச்சீங்களாக்கும்... என்னடா இது மரியாதை இல்லாத ஐஸ்க்ரீமாக இருக்கிறதே என்று நானும் பல கடைகளில் பலூங்க தாங்க என்றும் பலூடி கிடைக்குமா என்றும் கேட்டுப் பார்த்து ஏமாந்துட்டேங்க சுமி. எங்க போனாலும் மரியாதையில்லாம பலூடான்னே சொல்றாங்க. ஹி... ஹி... ஹி... என் ப்ரண்ட் சுபத்ராவையும் வல்லிம்மாவையும் இங்க பாத்ததுல மிக்க மகிழ்ச்சி. ப்ரகாஷ் சங்கரன் புதியவர். பார்க்கிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. :) நான் ட்ரீட் கேட்காமல் யார் கேட்பது சார் .. ஆமா சார் , மரியாதையெல்லாம் வட இந்தியக்காரர்களுக்கு தெரியல பாருங்க ..ஹஹ்ஹ்ஹா

      Delete
  6. இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  7. ஃபலூடா போலவே எல்லோரையும் இனிமையாக அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள் சுமி. ப்ரகாஷ் அவர்களைப் பற்றி இன்று தான் அறிந்தேன்.
    சுபத்ரா ஜி யின் பதிவுகளையும் படிக்கிறேன். அகண்ட ஆய்வு நடத்தி இருக்கிறீர்கள்.
    உங்கள் அயராத முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் அம்மா. சுமியின்
    நற்குணம்,தாராள மனம் எல்லாம் வளமுடன் வளர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரேவதிம்மா .. சந்தோஷம் உங்க கமெண்ட்க்கு .. இன்னமும் படிக்க வேண்டியது இருக்கு உங்க ப்லாக்கில் .. :)

      Delete
  8. இத்தனை நாள் நீங்க பலூடா வை மிஸ் பண்ணின மாதிரி , இவ்ளோ நாளா நான் உங்களை மிஸ் பண்ணிருக்கேனே!!!!! இனி follow பண்ணின போச்சு:)

    ReplyDelete
    Replies
    1. மைதிலி .. பரவாயில்லை , நானும் ப்லாகிங்கை மிஸ் பண்ணிருக்கேன் .. விட்டதைப்பிடிச்சுடலாம் :)

      Delete
  9. இன்றைய வித்தியாசமான பதிவுகளின் அணிவகுப்பு அருமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் , மகிழ்ச்சி .. :)

      Delete
  10. பலூடா இங்கேயும் உண்டு))) இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பலூடாப்பிரியையின் பதிவு ஜில்லுன்னு இருக்கு!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது