07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 7, 2015

வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள்

காலச் சக்கரம் மறுபடி சுழன்று இதோ என் எதிரே ஒரு பூங்கொத்தை நீட்டுகிறதுமுன்பு வை.கோஸார் அவர்களால் எனக்கு வாய்த்த மேடை இன்னொரு தரமும் இப்போது.



ஒவ்வொரு நாளும் கண் மூடித் தூங்குமுன் நன்றி சொல்ல வேண்டியிருக்கும் பலருக்கு.. முதலில் கால தேவனுக்குஇன்றைய தினம் ஏதும் வம்பின்றி கழிந்தது என்றுஅப்புறம் நட்பு.. உறவு.. இப்படி.


என்னை எழுத வைத்த சக்தி எப்போதும் வாசிப்பு ரசனை குன்றாமல் வைத்திருக்கிறதுஎன் எழுத்துக்கள் என் வாசிப்பின் தூண்டுதலில் கிளைத்தவைஅதனால் நேர்த்தியான படைப்பாளிகள் அத்தனை பேருக்கும் முதற்கண் என் மனமார்ந்த நன்றி.  எல்லோருமே பெரும்பாலான படைப்புகளில் தங்கள் திறமையைக் காட்டி ஆனந்திக்க வைத்து விடுகிறார்கள்நமக்குக் கிட்டும் அவகாசத்தில் அவற்றை வாசிப்பதும்பின்னூட்டமிடுவதுமான - மனசுக்குப் பிடித்த - செயலில் ஈடுபடுத்திக் கொள்ளும் போது இந்த உலகம் அழகாகி விடுகிறது.

குறிஞ்சிப் பூ போல அபூர்வமாய்ப் பூக்கிற எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்களும் உண்டு.. எழுதிக் கொண்டே இருந்தாலும் ஒவ்வொன்றுமே மணக்கிற எழுத்துக்காரர்களும் உண்டு. 

இந்த நாளில் நான் மீண்டும் நன்றியுடன் நினைவு கூருகிற இருவர் 

இருவரின் நட்பும் எனக்கு வாய்த்தது என் வாழ்வின் மிகப் பெரிய அதிர்ஷ்டம்.. 




சப்த பிராகாரங்கள் ஸ்ரீரங்கத்திற்கு.. ஏழாம் நிலை கடைசியாய்.. இங்கிருந்து வீதிகள் ஆரம்பம்.. மதில்களும். முதல் நிலையில் அரங்கன் சயனித்திருக்கிறான்..  ஒரு படைப்பாளியும் முதலில் வாசக நிலையில் தான் ஆரம்பிக்கிறான்.. பிறகு என்னதான் தேர்ந்த நிலைக்குப் போனாலும் வாசக நிலை என்பது மாறாதிருப்பது. வாசிப்பு நிற்கும்போது.. பிறர் எழுதும் அற்புத எழுத்துகளை ரசிக்கும் அவகாசம் இல்லாத போது.. சமையலில் கை மணம் போல.. எழுத்தில் ஒரு ரசக் குறைவு நேர்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. பிறரின் நல்ல நல்ல படைப்புகள் நம்மை அறியாமலே நமக்குத் தூண்டுதல்கள்..  ஆகச் சிறந்த படைப்பிற்கு நம்மை அழைத்துப் போகும் வழிகாட்டிகள்.

என் பிளாக் ரிஷபன்  இப்போது அவ்வளவாக எழுதப்படாமல்.. காரணம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..  முகநூலில் மூழ்கிப் போனதும் கூட ஒரு காரணம்.. ஆனால் இதில் செயல்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் அது ஓர் தனி உலகமாய்.. ஆனந்தமாய்..

1.  குஞ்சம்மா  இசை ஸ்பெஷலில் கல்கி இதழில் பிரசுரமான என் சிறுகதை.. நானா எழுதினேன்.. என்று இன்னமும் ஆச்சர்யப்பட வைக்கும் படைப்பு.

2. அரங்கன் திருமுற்றம்  ஸ்ரீரங்கம் பற்றி எழுத எப்போதும் ஆசை.. 
கல்கி அமைத்துக் கொடுத்த மேடை.. பிளாக் அண்ட் வொயிட் கதைகள் வரிசையில் எழுதியது.

3. ஜில்லு  காதலைப் பற்றி எப்போது எழுதினாலும் சுவாரசியம்தான்..

இந்த நாளைய முக நூல் கவிதை ஒன்றையும் பதிவிடுகிறேன்..

பழகிய நதிதான்..
என்ன தாகமோ
சுழலில் இறங்கியவனை
விழுங்கி விட்டது !



நாளை சந்திப்போமா ?!

53 comments:

  1. ஏழுநிலை வீதிகளில் உலா வந்தது போன்றொரு ஆரம்பம்... அருமை ரிஷபன். எடுத்த பணி சிறப்பாய் நடத்திட அரங்கனின் அருளோடு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. முதல் வாழ்த்திற்கு அன்பின் நன்றி..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வணக்கம்!!
    தொடர்கின்றேன் ...
    நன்றி?!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கரூர்பூபகீதன்..வணக்கம்

      Delete
  5. சுய அறிமுகம் நன்று ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. திண்டுக்கல் தனபாலன்..வெகுநாட்களுக்குப் பின் உங்கள் குரல் !

      Delete
  6. மனம் நிறைந்த வாழ்த்துகள்......

    வாரம் முழுவதும் உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு வலைச்சரத்தில் உலா வரப்போகும் குதூகலம் எனக்குள்....

    ReplyDelete
    Replies
    1. கைவிடாத அன்பு உங்களுடையது..குதூகலப் பகிர்வு எனக்கும்

      Delete
  7. அருமை நண்பரே.....!!!

    ReplyDelete
  8. வலைச்சரப் பணியின் முதல்நாளில் தங்களுக்கு நல்வரவு!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜு

      Delete
  9. இந்த வாரம் வலைச்சரம் தொடுக்க வந்தவர் நமது திருச்சிக்காரர் (ஸ்ரீரங்கம்) என்பதில் மிக்க மகிழ்ச்சி. ரிஷபன் சார்! என்னுடைய வாழ்த்துக்கள்! திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் அடிக்கடி உங்களை எனது மானசீக குரு என்பார். வலையுலகில் பிரபலமான மூத்த பதிவர் V.G.K அவர்களுக்கே நீங்கள் குரு என்றால் உங்கள் எழுத்துக்களின் சுவாரஸ்யம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. தொடர்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வை.கோ ஸார் அன்பு மிகுதியால் சொல்வது.. அவர் திறமை அளப்பரியது..நன்றியும் வரவேற்பும்

      Delete
  10. உங்களுடன் சேர்ந்து ஏழு வீதி உலா வரப் போகிறேன் என்பதி மிக்க மகிழ்ச்சி அண்ணா. சிறந்த பதிவுகளை அறிமுகப்படுத்தி அசத்தலாய் ஆரம்பிச்சிருக்கீங்க. தொடர்கிறேன் நானும்

    ReplyDelete
    Replies
    1. உலாப் போகும் நேரம் கனாக் காணுதே..என்று பாடத் தோன்றுகிறது.. வாங்க பால கணேஷ் வணக்கம்

      Delete
  11. வலைச்சர ஆசிரியராய் பணியேற்ற‌மைக்கு மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. வலைச்சர ஆசிரியர் பணிசிறக்க வாழ்த்துக்கள், தங்கள் அறிமுகம் அருமை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ரிஷபன் சார்! வாழ்த்துக்கள்! இந்த வாரத்தின் ஸ்வாரஸ்யம் எனக்குள் வளர்ந்தபடி.....
    வலைப்பூவில் பதிவது தாய்வீட்டில் புழங்கும் மகளின் சௌஜன்யம் போல். இங்கு வாய்ந்துவிட்ட நட்புலகம் அலாதியானது. மனதுக்கு நெருக்கமானது. முகநூல் வலைப்பூவுக்கு ஈடாகாது... ஓவியத்துக்கும் செல்பிக்கும் உள்ள வித்தியாசம்....

    வலைச்சரத்தின் மூலமே பல வலைப்பூக்கள் எனக்கு அறிமுகம். அதன் சேவைக்கு என் பாராட்டுக்களும் நன்றியும்...

    மோகன்ஜி
    வானவில்மனிதன்

    ReplyDelete
    Replies
    1. நம்மில் பலரின் வேடந்தாங்கல் அல்லவா வலைச்சரம்..

      Delete
  14. உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. புதிய பதிவர்களைக் கண்டேன். தங்கள் கவிதையை ரசித்தேன். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  15. சிறுகதை போல , அமைதியான ஓடை நடைபயில்வது போல , சீரான அறிமுகம் , அரங்கன் வாழ் ஸ்ரீரங்கம் போல அழகாக , வாழ்த்துகள் சார் ! மிக்க மகிழ்ச்சி !

    ReplyDelete
    Replies
    1. ரங்கனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை..இல்லையா.. Sumitha Ramesh மேடம்

      Delete
    2. அரங்கன் வாழ் உள்ளமும் , ஊரும் மற்றொன்றிற்கு ஈடாகாதே ... ஆம், கலக்குங்க :)

      Delete
  16. Vanakam valthukal....sirappana arimugam.facebook la devatha Tamil yendra peyaril ungal nanbaraga...blog la ungal parthathum makilchi...www.velunatchiyar.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..நீங்கதானா..மிக்க மகிழ்ச்சி

      Delete
  17. அரங்கன் இன்று வீதி உலா! அதே போல் நீங்களும் வலைச்சர உலா! இன்று ஏழாம் பிரகாரமா? அடுத்தடுத்த பிரகாரங்களுக்காகக் காத்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன பிராகாரமே..!

      Delete
  18. ம்ம்ம்ம்? பிரகாரம்??? பிராகாரம்? எது சரி??? இ.கொ.வைத் தான் கேட்கணும்! :)

    ReplyDelete
  19. பிராகாரம் தான் சரினு மனசிலே படுது! பிரகாரம் என்றால் அர்த்தமே மாறுதே!

    ReplyDelete
    Replies
    1. பிராகாரம்--கோவிலின் சுற்று நடை;
      பிரகாரம்--சொன்னனதைப்போல, சொன்னபடி

      Delete
  20. தங்களின் அறிமுகம் அருமை கவிதையை மிகவும் இரசித்தேன் நண்பரே..
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
  21. வலைச்சர ஆசிரியர் பணிசிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. வலைப்பூவில் உங்கள் பதிவுகளைத் தவறாமல் படிப்பவன் நான் முகநூலில் அவ்வப்போது நான் வரும்போதும் படிப்பதுண்டு. வாழ்த்துக்கள் சுவையான அறிமுக எழுத்துக்களுக்குக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக். அன்பின் நன்றி

      Delete
    2. தங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக். அன்பின் நன்றி

      Delete
    3. தங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக். அன்பின் நன்றி

      Delete
  23. நான் அறிந்த வரையில் , பிராகாரம் என்பது தான் சரி ; மாஹாத்மியம் என்பது போல் ..மாலி

    ReplyDelete
  24. சிறப்பாக இவ்வாரம் வலைச்சர ஆசிரியப் பணி செய்திட நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

  25. உங்களை வலைச்சரத்தில் சில பின்னூட்டத்தில் பார்ப்பேன் இப்போது அதன் ஆசிரியராக இருப்பது மகிழ்ச்சி இவ்வாரம் பயணிப்போம் ! வாழ்த்துக்கள் பணிசிறக்க!

    ReplyDelete
  26. உங்கள் அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  27. ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
    சிறப்பான ஆரம்பம்.

    ReplyDelete
  28. வாழ்துகள்! தங்கள் பணி சிறக்கட்டும்!

    ReplyDelete
  29. சுருக்கமான சுவையான அறிமுகம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் ரிஷபன் சார். முக நூலில் உங்கள் கவிதைகளை விரும்பிப் படிப்பேன் வெகு நாட்கள் கழித்துதான் உங்கள் வலைப்பக்கம் தெரியும. இங்கு குறிப்பிட்டுள்ள கதைகளை ஏற்கெனவே படித்துள்ளேன்.

    ReplyDelete
  31. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரிஷபா.... எழுதுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முழுவதுமாக விட்டுவிட்டாலும் வாசிப்பதை நிறுத்தவில்லை. உங்கள் எழுத்துகள் எளிமையாக தெளிந்த நீரோடையாக விரும்பி படிக்க ஏதுவாக இருக்கும்... உங்கள் எழுத்துகளின் ரசிகையாக அறிமுகமாகி இன்றளவும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறேன்.. மீண்டும் ஒரு முறை மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரிஷபா... ஸ்ரீரங்க கோயில் பிரகாரத்தை கைப்பிடித்துக்கொண்டு சுற்றியது போல் இருந்தது.

    குஞ்சம்மா கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..

    குட்டி குட்டி கவிதைகளால் முகநூலில் எங்கள் எல்லோர் மனதையும் வசப்படுத்தியவர் நீங்கள்.

    தொடர்ந்து வருகிறோம்...

    ReplyDelete
  32. ஆஹா.... நீங்களா!!!! ஏழாம்பிரகாரத்தில் இருந்து ஆரம்பிச்சது எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு!

    மன்னிக்கணும்,கொஞ்சம் தாமதமான வாழ்த்துகளுக்கு:-( ஆனாலும் ரெங்கனை ஸேவிக்க உள்ளே போகுமுன் வந்து கலந்துக்கிட்டது மகிழ்ச்சியா இருக்கு. தரிசனத்துக்குக் காத்திருக்கேன்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது