அருமை நண்பர்களே.. ஒரு வார காலமாக, நான் எழுதி வந்ததை படித்துப் பார்த்து, சொல்லப் பட்ட கருத்துக்களையும், அந்தந்த வலைப் பதிவுலகையும் நீங்கள் படித்தி பயனடைந்திருப்பீர்கள், என நம்புகிறேன். மிகுந்த நன்றிகள், धन्यवाद (ஹிந்தி), thanks, ధన్యవాతములు ( தெலுங்கு ), ધન્યવાદ ( குஜராத்தி ), धन्यवाद ( மராத்தி ),....
அட.. எனக்கு மத்த மொழிகளில் நன்றி சொல்லத் தெரியாது.. ஆனா எல்லா மொழிளையும் சொல்ல ஆசை.. அதுக்குத்தான்
இந்த வலைமனை (இது பிளாக் பக்கம் அல்ல, இருந்தாலும்.... அட, இப்பக் கூட ஒரு அறிமுகம்.. பழக்க தோஷம், விடுங்க..) இருக்குதே.. பாருங்க சமயத்துல உபயோகமா இருக்கும்.
அன்பின் 'சீனா'விற்கும், பி.எஸ்.வீ, வெங்கட் & கும்மி நண்பர்களுக்கும், எனது சிறப்பு நன்றிகள்.
எனது வலைப்பூவை பின்தொடர்பவர்களுக்கும் நன்றிகள்.
மேலும் வாசிக்க...
அ ) அசைபோடும் கவிதைகள் :
நண்பரொருவரு சொல்லுற கவிதைய என்னால உணர முடிஞ்சுது..
ஆனா,
அவரோட காதலியால உணர முடியலைனு நெனைச்சு நெனைச்சே வருந்தறாரு.
அவரு சொன்ன அந்தக் காதலி நீங்களா இருந்தா அவரோட மனசு விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.
அதான் அவருக்கு நல்லது.
வெகு சமீபத்தில் படிச்ச சூடான கவிதை 'கலாய்ப்பு' நிகழ்ச்சி, உங்கள் பார்வைக்காக. முதலாமவர் போட்ட காதல் கவிதைய, இரண்டாமவர் 'இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு.. அல்ல... அல்ல... அல்ல...", அப்படி சொல்லிட்டே
பட்டைய கெளப்பினாரு. வல்லவனுக்கு வல்லவன் உண்டுங்கற மாதிரி அந்த ரெண்டாமவர, மூனாவதா ஒரு ஆளு அதே பாணில அதே டிஸ்கி போட்டு,
மொக்கிட்டாரு , படிச்சுப் பாருங்க.
சினிமால வந்த ரெண்டு மூணு கவிதைகளை சுவைபட படம் போட்டு சொல்லி இருக்காரு நண்பர் சரண் வெங்கட்.
இதுலே எனக்கு ரொம்பப் புடிச்சது நம்ம பன்னிகுட்டி ராம்சு..
சாரி..
சாரி..
ஆக்சுவல் கவுண்டர் சொன்னதுதான்.
கடைசியா சரம் வெங்கட்
சொன்னாரு பாருங்க,
அவரோட, காமெடி கவிதை .......சூப்பருதான்.
ஆ) ஆன பயன், யாதெனில் :
வலைமனையில் நான் எழுத ஆரம்பித்து என்ன நன்மைகள் பெற்றேன் ? '
ஒண்ணுமில்லை, சரியாச்சொல்லன்னும்னா, நேரத்த வீணாக கழித்து, வீட்டிற்கு ஒரு உபயோகமும்செய்யுறதில்லை ',
என்னோட மனைவியின் பதிலது.
என்னைக் கேட்டால் அதைப் பத்தி ஒரு தொடர் பதிவே எழுதிடுவேன்.
தமிழ்ல கிறுக்குகிற நண்பரொவர்,
வலைமனையினால் தான் புதிய நண்பர்கள் பெற்று,
தன்னுடைய நட்பு வட்டாரம் விரிவடைந்தது என்று சொல்லுகிறார்.
தமிழ், ஆங்கில மொழி மட்டும் அல்லாது கணினி மொழியும் தெரிந்த பலருள் இந்த 'இவனும் ஒருவன்' சொல்கிறார்,
நட்புமட்டுமின்றி மேலும் மூன்று பயன்கள் தனக்கு கிடைப்பதாக. நீங்கள் பெற்ற பயன் உங்களுக்கே வெளிச்சம்.
இ ) இன்றைய நாயகர் :
- இந்த வலைப்பூவில் நண்பர் எஸ்.கே. அவர்கள் கணணி மென்பொருள் அடோப்ஃபிளாஷ் பற்றி, தொழில்நுட்பம் என்ற வரிசையில் எழுதி இருக்கிறார். பொறுமையாக அது பற்றி பகிர்ந்தமைக்கு நாம் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளோம். நீங்கள் சென்று பார்த்து, படித்து பயன் பெற வேண்டி அவரை இங்கு சிறப்பு வரிசையில் அறிமுகம் செய்கிறேன். படத்தோடு உள்ள தொடர்பு, புரிகிறதா ? பின்னூட்டத்தில் சொல்லவும்.
PS - ஒரு தகவல்....
கையால் எழுதும் முறை மட்டுமே இருந்த காலத்தில்.. எழுதியவற்றில், ஏதாவது விட்டுப் போயிருந்தால், கடைசியில் அதைப் பற்றி குறிப்பிடுவதுண்டு. அதை, போஸ்ட் ஸ்க்ரிப்ட் (பி.எஸ்.) என்பர் (ஹி.. ஹி.. 'பின்குறிப்பு' .. நம்ம பில்ட் அப் எப்புடி ?). அதேபோல நான், வலைச்சரத்தில் எழுதுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே எல்லா பதிவுகளையும் எழுதி தயார் நிலையில் வைத்திருந்தேன். அவற்றைத்தான், கடந்த ஏழு நாட்களாக, நீங்கள் படித்தது (மகிழ்ந்தது !). அன்றைய தினத்தில், இன்றைய 'கும்மி' வலைப்பூ பிறந்திருக்கவில்லை. ஆதலால், அதனை பற்றி சொல்ல இயலவில்லை. ஆகவே பி,எஸ் ஆக இங்கு சொல்லி இருக்கிறேன்.
கும்மியில் வந்த இடுகைகளுக்குள் எனக்கு மிகவும் பிடித்த மூன்று பின்வருவன...
- கும்மிஎன்றால் என்ன?.. அட இதுதான்
- எதிர்பார்ப்பு பற்றி வந்ததிது.
- கும்மி மக்களைப் பற்றிய இலக்கணம் மாறாத குறள் வெண்பாக்கள்
...
நன்றி ! மத்ததலாம் எப்பவேனாலும் பேசிக்கலாம் இங்க இருப்பேன் நான்
மேலும் வாசிக்க...
அ) அருமையான ஆற்றல்கள் :
படைப்பாற்றல் : உங்களுக்குள் புதைந்திருக்கும் தனித் திறமைகைளில் சிலவற்றை வெளிக்கொணரும் எண்ணத்தில் '
எங்கள்'
வலைச்சர நண்பர்கள் '
இது நம்ம ஏரியா'
னு சொல்லிக் கிட்டு வாசகர்கள வெச்சு கலக்குறாங்க.
எனக்குள் இருக்கும் திறமைகளைக் கூட அவர்களால் வெளிக்கொணரப் பட்டது.
நம்ப முடியலன்னா வாங்க.
இந்தக் கடை எப்பவுமே தொரந்துதான் இருக்கும்.
நீங்களும் அதோட ஐக்கியமாகிடுவீங்க.
நினைவாற்றல் :
இந்த ஆற்றல் குறைந்திருந்தால் பிரச்சனைதான்.
தேர்வெழுதும் மாணவர் முதல் வீட்டில் /
நம் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப முக்கியம்.
நண்பரொருவர் இயற்கைப் பொருட்கள் நினைவாற்றலை கொடுக்கும்னு சொல்லுறாரு பாருங்க.
அட அதுக்குக் கூட ஒரு எல்லை இருக்குதாம் சொல்லுறாரு வேற நண்பர்.
அவர் சொல்வதைப் பார்த்தால்,
நினைவாற்றல் அதிகமா இருந்தாலும் கஷ்டம்தானாம்.
நம்பலேன்னா இதப் படிச்சுப் பாருங்க தெரியும் சங்கதி.
செயலாற்றல் : "
சந்தோசம் உடம்பில இல்ல உள்ளத்திலதான் இருக்கு" -
சொல்லுறாரு சோமசுந்தர்.
அட ஆமாம்...
மனசில,
செயல் படுத்தணும்னு உறுதியா இருந்தா ஒடம்புக்கு அபரிமிதமான ஆற்றல் வந்துடும்னு நிருபிச்சிட்டாறு,
ஒரு செயல் வீரர்.
எதுக்கும் சோர்வடையாம முயற்சி செஞ்சா,
பலன் கண்டிப்பா கெடைக்கும்.
ஆ) ஆஹா இயற்கை / மூலிகை மருத்துவம் :
இயற்கையா குணமாகக் கூடிய நோய் வந்தா முடிஞ்சவரை வேதியப் பொருட்கள் அடங்கிய மாத்திரை,
மருந்துகளை தவித்து இயற்கை
மூலிகை மூலம் உடலைப் பேணுவோம்னு சொல்லுறாங்கே எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரு.
ஒருத்தரு,
இந்த பிணி வந்தா இந்தந்த காய் கனிகள் மற்றும் இயற்கை பொருட்களைக் கொண்டு தீர்வுகாணும்படி சொல்லுறாரு.
அடுத்தவரு இந்த மாதிரி எழுதி இருக்காரு..
எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருந்திச்சி..
நீங்க ஒரு தடவை படிச்சுப் பாருங்க..
சமயத்துல ஒங்களுக்கும் பயனுள்ளதா இருக்கலாம்.
இ ) இவர் சொன்ன பின்னூட்ட நுட்பம் :
- இந்தாளு இருக்குறாரே எல்லாருகிட்டேயும் பிரியமா இருக்குறவரு. அவரு பின்னூட்டத்துல எப்படி புகுந்து விளையாடுறதுன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு எழுதினதை பிடிச்ச / பாத்த எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சி. அது மட்டும் இல்லை.. இந்த பதிவுக்கு அவர்சொன்னத வெச்சு பின்னூட்டம் போட்ட எல்லாருக்கும் சூப்பரா ஸ்டைலா தலைப்புப் படம்செஞ்சு கொடுத்தாரும். என்னோட வலைப் பதிவுல இருக்குறது அவரு பரிசளிச்ச படம்தான். அதே பிரியத்தோட அவருக்கு பின்னூட்டம் போட்டுட்டு வாங்க,
....... மத்ததலாம் அப்புறம் பாக்கலாம்.
மேலும் வாசிக்க...