07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 4, 2014

குழந்தை எழுத்தாளர்கள்


 
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இந்த பதிவு மற்ற வலைப்பூ எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் பதிவு இல்லை. மாறாக குழந்தைகளையும் எழுத்து உலகத்திற்குள் பயணிக்க ஊக்குவிக்கும் பதிவாகும்.

என்னைப் பொறுத்தவரை எழுதும் பழக்கம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறையினருக்கும் அதை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் நாம் எல்லோரும் நம்முடைய குழந்தைகளை எழுதுவதற்கு ஊக்குவிப்போம். அவர்களை ஊக்குவிப்பதற்கு குழந்தை எழுத்தாளர்களைப் பற்றி சொல்லி அவர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கலாம். சரி, முதலில் இரண்டு பிரபலமான குழந்தை எழுத்தாளர்களை பார்க்கலாம்.

மேல உள்ள படத்தில் தோன்றுபவரின் பெயர் - ஹர்ஷிதா மேக்டம் (இவரைப் பற்றிய செய்தியை நான் பத்திரிக்கையில் படித்து மிகவும் வியந்து போனேன்). இவர் 12 வயதில் முதல் நாவலையும் 14 வயதில் மற்றொரு நாவலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்த இரண்டு நாவல்களுமே ஆங்கில நாவல்கள் தான். முதல் நாவலின் பெயர் “ரூபி ரஷ்” இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் நாவலாகும். லண்டனை கதைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். மற்றொரு நாவல் 'அல்மோஸ்ட்... டெஸ்பெரேட்' என்ற ஃபிக்ஷன் த்ரில்லர் நாவல். இது ஸ்வீடனை கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். இதில் முக்கியமான விஷயம்,அந்த இரு நாடுகளுக்கும் அவர் சென்றதில்லை என்பது தான். பள்ளிக்கூடம் போய் படிக்கிற வயதில் எப்படி இந்த ஆர்வம் வந்தது என்று கேட்டால், அவருடைய தந்தை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ‘வாசிப்பு என்பது வரம்’ என்று சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். பிறகு அந்த வாசிப்பே அவரை எழுத தூண்டியிருக்கிறது.
 
 
 

மற்றொரு குழந்தை ஸ்காட்லாண்ட்டைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி மார்த்தா பேய்ன் (‘Martha Payne’) அவர் தன்னுடைய வலைப்பூவான NEVERSECONDSவில் ஆரம்ப நிலை பள்ளிக்கூடத்தில் வழங்கப்படும் மதிய உணவினை பற்றி எழுதி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அந்த வலைப்பூ தற்சமயம் பத்து மில்லியன் ஹிட்ஸ்ஸை கடந்து சாதனை புரிந்து வருகிறது. இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும்போது அவருக்கு ஒன்பது வயது தான். ஆரம்பத்தில் அவருக்கு இந்த வலைப்பூவை தொடரமுடியாதபடி பள்ளியிலிருந்து பிரச்சனை ஏற்பட்டிருக்கு, ஆனால் அவருக்கு ஊடகத்துறையும், மக்களுக்கு ஆதரவளித்ததைத் தொடர்ந்து, அவர் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
 

எனக்குத் தெரிந்து நம் வலைப்பூ நண்பர்கள் வட்டத்தில் இருந்து திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் மகளான செல்வி. ரோஷினி வெங்கட் மட்டும் தனியாக வலைப்பூவை ஆரம்பித்து அதில் படங்களை வரைந்து கொண்டு வருகிறார். வெளிச்சக்கீற்றுகள்

பெரியவர்கள் நாம் உற்சாகம் அடைவதற்கு, மற்றவர்களின் பாராட்டுக்கள் தேவையாக இருக்கிறது. அப்படியிருக்க குழந்தைகளின் படைப்புகளை கண்டிப்பாக நாம் பாராட்டினால் தான் அவர்கள் மேன்மேலும் தங்களை வளர்த்துக்கொள்வார்கள். அதனால் வேறு எந்த குழந்தையாவது வலைப்பூவையில் (தமிழிலோ,ஆங்கிலத்திலோ) எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது வரைந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் சொல்லுங்கள், நான் அவர்களையும் இந்த பதிவில் சேர்க்கிறேன்.

சென்ற ஆண்டு இங்கு சிட்னியில் ‘உலகத் தமிழ் இலக்கிய மாநாடு” நடைபெற்றது, அதில் தமிழ் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை மாநாட்டு மலரில் வெளியிட்டார்கள். அதில் எங்கள் பள்ளியிலிருந்து 6 குழந்தைகளின் கட்டுரைகள் வெளிவந்தன. இரண்டு குழந்தைகள் தாமாதமாக கட்டுரைகளை படைத்தமையால் மலரில் வெளியிடப்படவில்லை. இந்த 8 பேரின் கட்டுரைகளையும் நான் என்னுடைய வலைப்பூவில் வெளியிட்டிருந்தேன். அந்த கட்டுரைகள் இதோ:







 
முடிந்தால் இன்று மாலையே மற்றொரு பதிவில் வேறு சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.

மற்றொரு குழந்தை எழுத்தாளர் - நம் பதிவுலக சகோதரி ராஜி அவர்களின் மகள் தூயாவின் எழுத்துக்களில் - தேவதையின் கனவுகள் 


மற்றுமொரு குழந்தை எழுத்தாளர் - நம் பதிவுலக சகோதரி ஏஞ்சலின் அவர்களின் மகளின் கைவண்ணத்தில் - Flowers Crafty Room

இப்படி குழந்தைகளின் வலைப்பூக்களை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

37 comments:

 1. குழந்தைகளையும் எழுத்து உலகத்திற்குள் பயணிக்க ஊக்குவித்து இன்றைய பதிவினை வழங்கியமை - அருமை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 2. ஹலோ என் பொண்ணு தூயாவும் தேவதையின் கனவுகள்ன்ற வலைப்பூ எழுதுறா. ஒழுங்கா அதையும் சேர்த்துக்கோங்க. இல்லாட்டி நீங்க தூங்கும்போது உங்க எதிர்க்க நிக்குறவங்க உங்க கண்ணுக்கு தெரியக்கூடாதுன்னு சாபம் விட்டுடுவேன்.
  இணைப்பு: http://kannaninthozhi.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மகளும் வலைப்பூவில் எழுதுவதைக் கண்டு மிக்க மகிழ்ச்கி சகோ. அவர்களின் வலைப்பூவையும் இணைத்து விட்டேன்.

   அதனால பெரிய பெரிய சாபம் எல்லாம் கொடுக்காதீங்க.

   Delete
 3. அறிமுகங்கள் அருமை ..குழந்தை எழுத்தாளர் ஹர்ஷிதா புத்தகம் என் மகள் கிட்ட இருக்கு .மார்த்தா பற்றியும் அவள் சொல்லித்தான் எனக்கும் தெரியும் ..இங்கே உள்ள பள்ளிகளில் பிள்ளைகளை பொது அறிவு கிடைக்கனும்னு தினமும் நியூஸ் ரவுண்ட் பார்க்க சொல்வாங்க .எனவே அனைத்தும் அவர்களுக்கு தெரியும் .
  என் மகளிடம் பணத்தை கொடுத்து எதையாகிலும் வாங்கிக்க சொன்னா முதலில் அவள் தேர்வு புத்தகங்கள் தான் :)
  நல்ல அறிமுகங்கள் தூயா ,மற்றும் ரோஷினி எங்க அனைவருக்கும் நல்ல பரிச்சயம் ..

  ReplyDelete
  Replies
  1. "//என் மகளிடம் பணத்தை கொடுத்து எதையாகிலும் வாங்கிக்க சொன்னா முதலில் அவள் தேர்வு புத்தகங்கள் தான் :)//'

   உங்கள் மகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

   Delete
 4. குழந்தைகளின் ஆற்றல் அதிசயிக்க வைக்கிறது. முடிந்தவரை வீட்டில் பெரியவர்களும் குழந்தைகளுடைய திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான சூழ்நிலையை உருவாக்கித்தரவேண்டும் என்று நினைக்கிறேன். தெரிந்திராத தகவல்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் நினைப்பது முற்றிலும் சரியே.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

   Delete
 5. குழந்தைகளின் திறமைகளை புரிந்து கொண்டு அவர்களையும் படைப்பாளிகளாக செதுக்கலாம்! அருமையான பகிர்வு! தூயாவின் வலைப்பூ சென்றிருக்கிறேன்! ரோஷிணியின் பக்கம் சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

   Delete
 6. குழந்தை எழுத்தாளர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தி அவர்களை பெருமைப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்! அந்த எட்டு கட்டுரைகளையும் அவசியம் படிப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   அவசியம் படியுங்கள். அந்த கட்டுரைகள் அனைத்தும் பெரியவர்களின் உதவியில்லாமல் படைத்த கட்டுரைகளாகும்.

   Delete
  2. குழந்தை எழுத்தாளர்களின் எட்டு படைப்புகளையும் படித்தேன். அவைகளைப் படிக்கும்போது ஐந்தாவது அல்லது ஆறாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளால் எழுதப்பட்டதாக தோன்றவில்லை. அந்த அளவிற்கு பெரியவர்கள் எழுதும் கட்டுரை போல் இருந்தது என்பதே உண்மை.

   அதுவும் அவை அனைத்தும் பெரியவர்களின் உதவியில்லாமல் படைத்தவை என அறியும்போது எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. இரண்டு படைப்புகளில் தேசியக் கவி பாரதியை கவிஞர்கள் டொரத்தி மெக்கெல்லர் மற்றும் ஷெல்லியோடும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரைகள் வியக்க வைத்தன.

   வாழ்த்துக்கள் அந்த குழந்தைகளுக்கு! அவைகளை பகிர்ந்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

   Delete
  3. தாங்கள் எல்லாக் கட்டுரைகளையும் படித்ததைக் கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா. அவர்கள் அனைவரும் தமிழ் பள்ளியில் ஐந்தாம் மட்டும் ஆறாம் வகுப்பு படிக்கிறவர்கள். ரெகுலர் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள். நாங்கள் ஒரு ஆய்வுக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்று தான் சொன்னோம். மற்றபடி அவர்களே இணையத்திலிருந்து தேடியும், நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்தும் தயார் செய்தார்கள். மேலும் அவர்களுக்கு அந்த சமயம் பள்ளி விடுமுறை காலமானதால் எளிதாக செய்ய முடிந்தது.

   Delete
 7. என்னைப் பொறுத்தவரை எழுதும் பழக்கம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறையினருக்கும் அதை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் ஆசை.
  ஒரு தமிழனாக இருந்து தங்களின் ஆசையை பார்த்து பெருமைப்படுகிறேன்.
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் பெருமைப்படுவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி நண்பரே.

   Delete
 8. எழுத்து ஒரு கொடை. கைத் தொலை பேசியே உலகம் என்று இருக்கும் இக்காலகட்டத்தில் அரட்டை என்னும் பெயரில் தமது காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் தமது திறமையை எழுத்துக்களால் வெளிக்கொண்டு வருகின்ற இக்குழந்தைகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இவர்கள் எழுத்துலகில் பெரும் புகழ் ஈட்ட வேண்டும் என்று பாராட்டுகின்றேன். இதனை பதிவில் கொண்டு வந்த உங்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரி.
   தங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 9. ஆர்வம் கொண்டவர்கள் மிகக் குறைவு! ஆண்ட்ராய்டின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, எல்லாமே கைபேசி என்றாகிவிட்டது. ஆர்வமுடன் செயல்படுபவர்களை வாழ்த்தி, பாராட்டித்தான் ஆகவேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ரவி கிருஷ்ணா சார்.

   Delete
 10. ஒ!! ராஜியக்கா பொண்ணும் எழுதுறாங்களா?
  படிச்சுட வேண்டியது தான். நல்ல விஷயம் சொன்னீங்க சகோ
  நானும் முயற்சி நிறைமதிக்கு ஏற்படுத்த முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ராஜியக்கா பெண் மட்டும் இல்ல, சகோதரி ஏஞ்சலின் அவர்களின் பெண்ணும் எழுதுகிறார்கள்.

   நீங்களும் இப்பவே நிறைமதிக்கு பயிற்சி அளியுங்கள்.

   Delete
 11. வணக்கம் சகோதரர்
  குழந்தைகள் எல்லாம் புத்தகம் எழுதுறாங்க. அந்த புத்தகத்தைக் கூட நாம இன்னும் படிக்கலனு வெட்கமா இருக்கு சகோ. வலைப்பதிவில் நம்மவர்களின் இரு குழந்தைகள் எழுதி வருகிறார்கள் எனும் செய்தியைப் பகிர்ந்தமைக்கு அன்பான நன்றிகள். இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் வெட்கமாகத்தான் இருக்கு சகோ. கூடிய விரைவில் அவருடைய புத்தகத்தை படிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
   கண்டிப்பாக நான் படிக்க வேண்டும், ஏனென்றால் அந்த மாணவி வெளிநாடுகளுக்கு போகாமலே லண்டன்,ஸ்விடன் நாடுகளையெல்லாம் கதைக்களமாக அமைத்திருக்கிறார். நானோ ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு, இன்னும் இந்தியாவையே கதைக்களமாக வைத்துத் தான் கதைகளையும், நாடகங்களையும் எழுதுகிறேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 12. குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதே பெரிய விதயம்! ஆனால் நீங்கள், குழந்தை எழுத்தாளர்களே இருக்கிறார்கள் என்று காட்டியிருப்பது, உள்ளமெங்கும் பூரிப்பைத் தருகிறது!

  ஓரிரு நிமிடங்களுக்கு முன்புதான், தமிழ் ஒருபொழுதும் அழியாது; எல்லாத் துறைகளிலும் அடுத்தடுத்து ஆளுமைகள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்; எந்த ஒரு தனிமனிதரையும் தமிழன்னை நம்பியிருக்கவில்லை என்று பதிவிட்டுவிட்டு வந்தேன். பார்த்தால், என் கூற்றுக்கு உரம் சேர்க்கும் வகையில் அடுத்த தலைமுறை பற்றி நம்பிக்கை ஊற்றெடுக்கும் வகையில் இங்கே இப்படி ஒரு பதிவு! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் இந்த பதிவை கண்டிப்பாக போய் படிக்கிறேன் ஐயா.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 13. குழந்தை எழுத்தாளர்கள் பற்றிய பதிவில் புதிய தகவல்கள் ...
  நன்றி!



  தமிழ்மணம் வாக்கு 3.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 14. அருமை சகோ ! குழந்தை எழுத்தாளர்கள் உருவாகி விட்டார்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. இதை தொடர்ந்து இன்னும் குழந்தைகள் எழுதுவார்கள் என்று நம்புகிறேன். தங்கள் ஆசை நிறைவேறும் வாழ்த்துக்கள் சகோ ...!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக இன்னும் நிறைய குழந்தைகள் எழுத ஆரம்பிப்பார்கள் என்று நம்புகிறேன்.

   தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 15. சிறந்த அறிமுகங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 16. குழந்தை எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா.

   Delete
 17. குழந்தைகளை ஊக்குவித்து எழுத்துலகத்திற்க்கு கொண்டுவரும் தங்களின் முயற்சி திருவினையாகட்டும்.
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   Delete
 18. என் மகளின் கைவண்ணத்தில் உருவான சில ஓவியங்களை மட்டும் அவளது பக்கத்தில் வெளியிட்டு வருகிறோம்....... அப்பக்கத்தினையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது