07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label முத்து சிவா. Show all posts
Showing posts with label முத்து சிவா. Show all posts

Sunday, June 22, 2014

பிரபல பதிவர்களுடன் கவுண்டர்!!!

குறிப்பு : இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்கே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. கவுண்டர் பதிவென்பதால் அவர் பாணி வசனங்கள் சில தவிர்க்க இயலாததாகிவிட்டது.

கவுண்டரும் செந்திலும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில பத்து மணிக்கு அன்னிக்கு ரிலீஸான ஒரு புதுப்படத்துக்கு

தியேட்டருக்கு போறாங்க. கவுண்டர் ஸ்லாங்குல தொடருங்க.

கவுண்டர் : டேய் மண்டையா... நீ சொன்னேங்குறதுக்காக இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மொத மொறையா ஒரு படத்த மொத ஷோ பாக்க வந்துருக்கேன். மவனே இதுல எதாவது நடந்துச்சி நடு மண்டையப் புடிச்சி கடிச்சி வச்சிருவேன்.

செந்தில் : சும்மா பொலம்பாம சீக்கிரம் வாங்கன்னே... மொத ஷோ வேற கூட்டம் வேற அதிகமா இருக்கும். டிக்கெட் கிடைக்காம எதுவும் போயிடப்போவுது.

(தியேட்டர் வந்ததும் கவுண்டர் வெளியில பாக்குறாரு யாருமே இல்லை)

கவுண்டர் : டேய் படம் போட்டாங்க போலருக்கு சீக்கிரம் போய் டிக்கெட் எடுத்துட்டு வாடா...

செந்தில் : இதோ வந்துட்டேன்னே.... (இரண்டு நிமிடத்தில் செந்தில் டிக்கெட் எடுத்துட்டு வர ரெண்டு பேரும் உள்ள போறாங்க. தியேட்டர் கதவ திறந்து உள்ள போகும் போது

கவுண்டர் : டேய் மண்டையா.. என்னடா ஒரே கருங்கும்முன்னு இருக்கு (ன்னு சொல்லிட்டு கண்ண மெல்ல கசக்கிட்டு தியேட்டர் உள்ள சுத்தி சுத்தி பாக்க மொத்தமே ஒரு நாலு பேரு அங்கங்க உக்காந்துருக்காங்க)

கவுண்டர் : (செந்தில் பின்னந்தலையப் புடிச்சி) டேய் பெருச்சாளி... இந்தப் படத்துக்கு தான் கூட்டம் அலை மோதுதா? இதுல டிக்கெட் கெடைக்காதுன்னு வேகமா வேற வரச்சொல்லுற

செந்தில் : ஐ ஆம் வெரி சொரின்னே...

கவுண்டர் : வீட்டுக்குவா நாயே மம்பட்டிய எடுத்து நடுமண்டைய கொத்தி வச்சிடுறேன்.. (ஹை பிட்ச்ல) ஆமா யாருமே வராத இந்தப் படத்துக்கு காலங்காத்தால வந்து உக்காந்துருக்கானுகளே யாருடா இவனுக... வா பாக்கலாம்...

முதல்ல ஒருத்தர  பாக்குறாங்க..

கவுண்டர் : அய்யா பேர் என்னங்க?

போ.ஆ.செ : போரூர் ஆனா செந்தில் ங்க

கவுண்டர் : நீ ஆனா செந்திலா வேணாலும் இரு.. இல்லை ஆவன்னா செந்திலா வேணாலும் இரு.. அதென்ன விடியக் காலையிலயே தியேட்டர் பக்கம்?

போ.ஆ.செ : நான் இந்தத் திரைப்படத்தை சென்ற வாரமே பார்க்க வேண்டும் என்று இருந்தேன்.

கவுண்டர் : இன்னிக்குத் தான் படத்தையே ரிலீஸ் பன்னிருக்கானுக.. இதுல நீ போன வாரம் எப்புடி பாக்கனும்னு இருந்த... ?

போ.ஆ.செ : அட விடுங்கண்ணே வழக்கமா இதே டயலாக் எழுதி பழகிடுச்சி.. அதாவது இந்தப் படத்திற்கு நான் வருவது என முடிவெடுத்து ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு  வந்து கொண்டிருக்கையில் என் நண்பர் ஒருவர்....

கவுண்டர் : யப்பா.. முடியலடா சாமி...நா கெளம்புறேன் நீ ஆள விடு

போ.ஆ.செ : அண்ணே போறதுக்கு முன்னால ஒரு தத்துவம் சொல்றேன் கேட்டுட்டு போங்க..

கவுண்டர் : சொல்லு ஆனா தத்துவம் நல்லா இல்லைன்னா இவன் உன் மூக்க கடிச்சி வச்சிருவான் பரவால்லையா

போ.ஆ.செ : சரி. சொல்றேன் கேளுங்க " முன்னேற்றம் என்பது வாழ்க்கையில் நல்லவனை விட வல்லனுக்கே இயல்பாக அமைகிறது. அதனால் நீயும் வல்லவனாகவே இரு"

கவுண்டர் : எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே இரு... டேய் மண்டையா ரொம்ப நாளா யார் காதையாவது கடிக்கனும்னு சொல்லிக்கிட்டு இருந்தியல்ல... கடிச்சி வச்சிட்டு வா...

அடுத்து ரெண்டு வரிசை தள்ளி ஒருத்தர் ரெண்டு குயர் டிம்மி பேப்பர் வச்சி வேக வேகமா எழுதிகிட்டு இருக்காரு

கவுண்டர் : டேய் நாம தியேட்டருக்குள்ள வந்தோமா இல்லை எதுவும் பள்ளிக்கூடத்துக்குள்ள வந்துட்டோமா என்னடா இது? எழுதிகிட்டு இருக்கவர கூப்பிட்டு

கவுண்டர் : தம்பி படம் அங்க ஓடிகிட்டு இருக்கு நீ பாட்டுக்கு இங்க பேப்பர்ல எழுதிகிட்டு இருக்கியே அப்புறம் எதுக்கு படத்துக்கு வந்த? யாருப்பா நீ?

செ.கு : என் பேரு பீப்பீ செந்தில் குமாருண்ணே.. நா படத்துக்கு விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்...

கவுண்டர் : என்னது விமர்சனம் எழுதிகிட்டு இருக்கியா? படம் ஆரம்பிச்சி இன்னும் 10 நிமிஷம் கூட ஆவல அதுக்குள்ள விமர்சனமா?

செ.கு : அட நீங்க வேற... நா எழுதிகிட்டு இருக்கது அடுத்த வாரம் ரிலீஸ் ஆகப்போற படத்துக்கு.

கவுண்டர் : என்ன அடுத்த வாரம் ரிலீஸ் ஆவப்போற படத்துக்கா.. அடப்பாவி.. அப்போ இந்தப் படத்துக்கு?

செ.கு : அதப் போன வாரமே எழுதிட்டேன்..

கவுண்டர் : எங்க குடு பாப்போம்... ன்னு சொன்னதும் செந்தில் குமார் ஒரு அம்பது பக்க நோட்டு புத்தகத்த எடுத்து குடுக்குறாரு.. கவுண்டர் அதப்பத்து ஷாக் ஆகி

கவுண்டர் : அடங்கப்பா.. இது என்னடா படத்தோட ஸ்கிரிப்ட விட பெருசா இருக்கும் போலருக்கு...  "தம்பி... அது என்ன எனக்குப் பிடித்த வசனங்கள்னு போட்டு படத்துல உள்ள எல்லா வசனத்தையும் எழுதிருக்க? ஆமா அப்புறம் இது என்ன பாட்டா செருப்புல விலை போடுறமாதிரி மார்க் 2.25, 2.35 ன்னு.. அத ரவுண்டா குடுத்தா உங்க லட்சியத்துக்கு எதாவது இழுக்கு வந்துருங்களா...

செ.கு : அதெல்லாம் விடுங்க.. டைரக்டர்கிட்ட சில கேள்விகள் கேட்ருக்கேன் பாருங்க... யாராலயும் பதில் சொல்ல முடியாது

கவுண்டர் : டைரக்டர்ட்ட நீ கேள்வி கேக்குறது இருக்கட்டும்.. நா உன்ன ஒரு கேள்வி கேக்குறேன். "நீ படம் பாக்க வந்தியா இல்லைப் பரிட்சை எழுத வந்தியா?" உன் பக்கத்துல நிக்கிறதே டேஞ்ஜர்... நா வர்றேம்ப்பா.." ன்னு அடுத்த ஆளப் பாக்க நகர்றாரு... அப்போ செந்தில்


செந்தில் : அண்ணே இதுல ஒரு ஒற்றுமையப் பாத்தீங்களா

கவுண்டர் : என்ன நாயே?

செந்தில் : மொதல்ல பாத்தோமே அவர் பேரும் செந்திலு... அடுத்து பாத்தோமே அவர் பேரும் செந்திலு.. ஏன் பேரும் செந்திலு... எப்புடி?

கவுண்டர் : அட அட அட.. என்னா ஒரு ஒற்றுமை.. நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிகிட்டு பக்கத்துலயே நீ உக்காந்துக்க... உனக்குப் பின்னால வர்ற சந்ததிகள் அதப் பாத்துப் படிச்சி தெரிஞ்சிக்கட்டும்.

அடுத்து ரெண்டு வரிசை தாண்டி ஒருத்தர் ரொம்ப சீரியஸா படம் பாத்துக்கிட்டு இருக்காரு... ஹீரோயின் வரும்போது மட்டும் சிரிக்கிறாரு. மத்த நேரத்துல சீரியஸா உக்காந்துருக்காரு

கவுண்டர் : டேய் மண்டையா யாருடா அது...வித்யாசமான கேரக்டரா இருக்கு. வா போய் பேசிப்பாக்கலாம்னு அவர் பக்கத்துல போய் "சார்" ங்குறாரு உடனே

அவர் : பீப் பீப் பீப்....ன்னாடா வேணும் உங்களுக்கு ( பீப் பீப் - சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள்)

கவுண்டர் : ஒண்ணுமில்லீங்... அது என்னங் படத்துல லேடீஸ் வரும்போது மட்டும் வாய நாலு இஞ்ச் நல்லா தொறக்குறீங்.. மத்த நேரத்துல மொறப்பா இருக்குறீங்ன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேங்

அவர் : பீப் பீப்... அதெல்லாம் என்ன பீப் க்கு உன்கிட்ட சொல்லனும்...பீப்..  நா யாரு தெரியுமா.. பீப் பீப் போயிடு..

கவுண்டர் செந்திலைப் பார்த்து

கவுண்டர் : டேய் சென்சார் போர்டு மண்டையா இநத அளவு காதுல தேன் வந்து பாயுற மாதிரி பேசுறாரே யாருடா அது?

செந்தில் : அது தான்னே அவரு

கவுண்டர் : அவரா? ஓ..... அவ்வுறா... சரி சரி வா போகலாம்னு திரும்புறவறரு டக்குன்னு ஷாக் அடிச்சி நிக்கிறாரு

கவுண்டர் : (ரொமான்ஸ் மூடுல) டேய் பீரங்கி வாயா.. அங்கப் பாருடா... இந்த ஷோவுக்கு கூட  ஒரு யங் கேர்ள் வந்துருக்கு... வாவ் வாட் ய பாப் கட்டிங்? பின்னாலருந்து பாக்கும் போதே  அந்த அழகு தெரியுதுடா

செந்தில் : நானும் வட இந்தியாவுலயும் பாத்துருக்கேன் தென் இந்தியாவுலயும் பாத்துருக்கேன்.. இப்புடி ஒரு ரங்கோலி கட்டிங்க நா பாத்ததே இல்லியே..

கவுண்டர் : "வா முன்னால போய் பாக்கலாம்"..ன்னு ஆசையா முன்னால போய் மூஞ்ச பாக்குறாரு... முகத்த பாத்ததும் டக்குன்னு ஷாக் ஆயி

கவுண்டர் : இய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. அடடடா.... பேக்குலருந்து பாத்து ஏமாந்துட்டியேடா.... ய்ய்ய்யய்ய..சோ... டேய் அம்மா வாட்டர் மண்டையா அவன் பேரு என்னன்னு கேளுடா..

செந்தில் : ஹலோ அண்ணேன் கேக்குறாருல்ல.. உங்க பேரு என்னனு சொல்லுங்க..

பி.பி : யோ..யோ...தி ஈஸ் பி.பி.  ரேம்போக் மாடல்...

கவுண்டர் : டேய்.. ப்ரொஜெக்டர் மண்டையா... இந்தத் தம்பிய பொத்துனாப்புல பின் சீட்டுக்குத் தூக்கிட்டு வா... ரொம்ப நாளா ஆக்சன் படம் பாக்கனும்னு சொன்னியல்லோ... இன்னிக்கு காட்டுறேன்.


**********************************X********************************************

சரி இந்தப் பதிவோட முடிச்சிக்குறேன். ஒரு வாரமா நம்ம மொக்கையெல்லாம் தாங்கிட்டு வன்முறையில எதுவும் ஈடுபடாம இருந்தமைக்கு மிக்க நன்றி.

வலைச்சர ஆசிரியர் பொறுப்பை வழங்கியதற்கு சீனா அய்யாவிற்கும், வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அனைத்துப் பதிவுகளுக்கும் ஊக்குவித்து பின்னூட்டமளித்த அனைவருக்கும் குறிப்பாக, அய்யா துரை செல்வராஜு, அய்யா தளிர் சுரேஷ், சொக்கன் சுப்ரமணியன்ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றியுடன்,

வீ.முத்துசிவா





மேலும் வாசிக்க...

Saturday, June 21, 2014

இங்கிலீஷ்காரன்!!!

கொஞ்ச நாளுக்கு முன்னால ரீமேக்குன்னா என்னன்னு தெரியாது. எந்த சீன எங்கருந்து சுடுறாய்ங்கன்னு தெரியாது. எதோ நல்லா இருந்தா கைதட்டிட்டு போய்க்கிட்டே இருந்தோம். ஏன்னா தமிழ்ப் படங்களைத் தவிற வேற படங்கள் நமக்கு அவ்வளவு பரிட்சையம் இல்லை. ஒரு சில பேரு மட்டும் தான் இங்கிலீஷ் படங்கள் மட்டும் பாப்பாங்க. ஆனா இப்போ அப்புடி இல்லை. அனைத்து மொழிப் படங்களையும் நம்மாளுங்க பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்கருந்து எத சுட்டாலும் எவனாது ஒருத்தன் கண்ணுலயாது மாட்டிரும். ஒரு சீன்னாலும் சரி ஒரு சீன்ல ஒரு ஷாட்னாலும் சரி எத எத எங்கருந்து ஆட்டையப் போடுறாய்ங்கன்னு அப்படியே சொல்லிருவாய்ங்க. ஒரே ஒரு ஃபோட்டோவ மட்டும் ரிலீச் பண்ண நம்ம இளைய தளபதியோட "யோகன் - அத்தியாயம் ஒன்று" நின்னு போகக் காரணமே இந்த மாதிரி விஷயத்தாலதான்.

இன்னிக்கு தமிழ் மட்டும் இல்லாம பிற மொழிப்படங்களையும் பார்த்து நமக்கு விமர்சனங்களை வழங்கும் சில பதிவர்களை பாக்கலாம்.

 நம்மூர்ல உள்ள நுழையும் போதே கோடிகள்ல சம்பளம் வாங்குற ஹீரோக்கள் இருக்க இன்னும் கேரள சூப்பர் ஸ்டார்களே லட்சங்களில் தான் வாங்கிட்டு இருக்காங்களாம்.பிரம்மாண்டம் மட்டுமே கம்மியா இருக்குமே தவிற கதைகள்ல மலையாளப் படங்களை அடிச்சிக்க முடியாதுன்னு மறுபடியும் நிரூபித்த ஒரு மெகா ஹிட் க்ரைம் த்ரில்லர்  படமான த்ரிஷ்யம் விமர்சனம் இங்கே.  

மலையாளப்  படங்களயாவது நமக்கு ஓரளவுக்குத் தெரியும். மம்முட்டி மோகன்லான், சுரேஷ் கோபின்னு ஒரு சில நடிகர்களையும் தெரியும். மீரா ஜாஸ்மீன், பாவனா, நஸ்ரியான்னு சில நடிகைகளையும் தெரியும். (யார்ரா அது சகீலா பேர தேடுறது) ஆனா நமக்கு சுத்தமா பரிட்சையமே இல்லாத ஏரியா கன்னடம். குத்து ரம்யாவத் தவற நமக்கு (எனக்கு) அங்க வேற யாரயும் தெரியது. அப்படிப்பட்ட கன்னடப் படங்களிலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க் வைச்ச படம் லூசியா. பல தமிழர்கள் பார்த்த முதல் கன்னடப் படமும் அதுவாத்தான் இருக்கும். லூசியாவின் விமர்சனம்  இங்கே.

அடுத்து நம்மை விட ஒரு படி மேலிருக்கும் தெலுங்குப் படங்களில் சமீபத்தில் வெளிவந்து ஹிட்டடித்த ரேஸ் குர்ரத்தின் விமர்சனம் அண்ணன் அட்ரா சக்கயின் கைவண்ணத்தில்.

அண்ணன் விமர்சனத்துல என்ன சொல்ல வர்றாருன்னா... ஹலோ அவரு என்ன சொன்னா என்ன? எல்லாரும் அவர் விமர்சனத்துல போடுற ஹீரோயின் ஸ்டில்லப் பாக்கத்தானே போறீங்க.. பாத்துட்டு பேயாம வாங்க.

ஜெய் சன்னா கேசவ ரெட்டி என்னும் ஒரே சீன்ல தமிழ்நாட்டையே கலங்கடித்த பாலகிருஷ்ணாவோட ஆக்சன் அவதாரத்த பத்தி நம்ம யுவர்கிருஷ்ணா விளக்குறாரு.  பாலகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் ப்ளாக் பஸ்டர் LEGEND இன் விமர்சனம்.

பதிவிலிருந்து ஒரு பகுதி உங்களுக்காக

இங்கே ‘தல’யோட பைக்கை காட்டினாலேயே விசில் அடிக்கிறார்கள். ‘தல’க்கு மட்டும்தான் பைக்கே ஓட்டத்தெரியும் என்று தமிழர்களுக்கு அப்படியொரு நம்பிக்கை. பாலைய்யா பைக், கார், ரயில், குதிரை, ஹீரோயினையெல்லாம் அசால்டாக ஓட்டுகிறார். ப்ளைட் மற்றும் கப்பல் ஓட்டக்கூடிய காட்சிகள் இல்லாததுதான் படத்தின் ஒரே குறை.

 ஆந்திராவின் இளையதலைமுறை ரசிகர்கள் இவரது நடனத்தை காமெடிக் காட்சியாகதான் பார்க்கிறார்கள். இந்த வரலாற்று சோகத்தையும் முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறது லெஜண்ட். இப்படத்தில் ஆடுபவர் பாலகிருஷ்ணாவா அல்லது ஜூனியர் என்.டி.ஆரா என்று கையை கிள்ளி பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது முதுமையையும் தாண்டி ரிஸ்க் எடுத்து, டூப் போடாமல் அசுரத்தனமான அசைவுகளை அனாயசமாக செய்திருக்கிறார்.

அப்புறம் போன வாரம் ரிலீஸ் ஆச்சு நம்ம விஜய்யின் "துப்பாக்கி"யோட ரீமேக்கான அக்சய் குமார் நடிச்ச "ஹாலிடே". எங்க ரீமேக்குக்கே ரீமேக்கா...  ரெண்டு படத்துக்கும் உள்ள வித்யாசங்கள் என்ன என்ன? அப்புடின்னு இங்க ஒருத்தர் வரிசைப்படுத்திருக்காரு. அவர் சொன்ன ஒரு முக்கியமான பெரிய வித்யாசம் இதோ 

"துப்பாக்கியில் "I AM WAITING" என்று சொல்லிவிட்டு விஜய் கழுத்தை இடதுபுறமாக வெட்டுவார்.. அக்ஷய் கழுத்தை வலது புறமாக வெட்டுவாராம்"
படிச்சிட்டு நா அப்புடியே ஸாக் ஆயிட்டேன்

அடப்போங்கப்பா.. நீங்கல்லாம் சும்மா ஜூஜூபி... என்னய்யா தெலுங்குங்குறீங்க, மலையாளம்ங்குறீங்க கன்னடம்ங்குறீங்க நாங்கல்லாம் கொரியா படங்களையே பாக்க ஆரம்பிச்சிட்டோம்.  THE MAN FROM NOWHERE /2010/ கொரியா/அவன் யார்?  

இப்புடி ஒரு தலைப்பு வச்சதுமே தெரியும் அவர் யார்?ன்னு. நா சொல்லித்தான் தெரியனுமா.. அவரு இந்தப்படத்தோட கதையப் பத்தி அவுரு என்ன சொல்றாருன்னா

"ஒரு காட்டுத்தனமான அமைதியான ஆள்.... அவன் யாருன்னே யாருக்கும் தெரியாது..?.. அவன் ஒரு  புரியாத புதிர்... அவனுக்கு இரக்கம் என்பதே இல்லை. யாரிடமும் பேசமாட்டான்.. தனிமைதான் அவன் வாழ்க்கை...

எல்லோருக்கும் அவன் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் இருக்கும் அது மட்டுமல்ல...  படத்தில் நடிக்கும்  அத்தனை கேரக்டர்கள் முதற்கொண்டு அவன் யார் என்று அறிந்துக்கொள்ள ஆசை..." அப்டின்னு அவரு சொல்றாரு. எதுக்கும் அதான் கதையான்னு நீங்களும் ஒருதடவ பாத்து கன்ஃபார்ம் பன்னிக்குங்க.

அடுத்து லேட்டஸ்டாக ரிலீஸ் ஆகி பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஆங்கிலப் படமான  How to Train your Dragon-2 இன் விமர்சனம். வெறும் விமர்சனமாக மட்டும் இல்லாம படத்தைப் பற்றிய பல டெக்னிக்கல் விஷயங்களையும் சுவரஸ்யமா சொல்லிருக்காரு கருந்தேள்.


ரைட்டு கிட்டத்தட்ட ஆறு நாள் ஓட்டியாச்சி..

அடுத்த பதிவு "பிரபல பதிவர்களுடன் கவுண்டர்"... காத்திருங்கள்!!!






மேலும் வாசிக்க...

Friday, June 20, 2014

எதிரும் புதிரும்!!!

நம்மூரைப் பொறுத்த வரைக்கும் சினிமாவிலோ இல்லை அரசியலிலோ போட்டின்னு வந்துட்டா அது எப்பவுமே  ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டுமே இருக்கும். பல பேரு போட்டியில இருந்தாலும் மொத்த கூட்டமும் ரெண்டே பங்கா பிரிஞ்சி ரெண்டு பேரு பின்னால நின்னு, போட்டில இருக்க மத்த எல்லாரயும் அல்லகைஸா அப்படியே சுத்தி  நின்னு வேடிக்கை பாக்க வச்சிருவோம். எம்ஜியாரா சிவாஜியா, திமுகவா இல்லை அதிமுகவா ரஜினியா கமலா,  சச்சினா கங்குலியா, அஜித்தா  விஜய்யா இப்புடி பாலமன் ஆப்பைய்யா பட்டிமன்ற தலைப்பு மாதிரி வச்சிக்கிட்டு  தான் நாம பொழுத ஓட்டிகிட்டு  இருக்கோம். இப்டி இருந்தாதான் நல்லாவும் இருக்கு. இல்லை ஜெமினி கணேசனா  முத்துராமனா ன்னு ஒரு தலைப்பு வச்சா ஒரு கிக் இருக்குமா இல்லை அர்ஜூனா சரத்குமாரான்னு தலைப்பு வச்சா  யாரும் பக்கத்துல இருப்பாய்ங்களா.. வெறிச்சி ஓடிர மாட்டாய்ங்க. சரி இன்னிக்கு இந்த மாதிரி எதிரும் புதிருமா இருக்க சில பிரபலங்களை பற்றின பதிவுகளப் பாக்கலாம்.

எம்ஜிஆரையும் சிவாஜியையும் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு இப்போதுள்ள பதிவர்கள் யாரும் இல்லை. அதனால் முத்த பதிவர் தருமி அவர்கள் எம்ஜிஆரையும் சிவாஜியையும் கொஞ்சம் ஓப்பிடுகிறார். ஏன் எம்.ஜி.ஆருக்கு சிவாஜியோட மரியாதை அதிகம் கிடைக்குதுன்னு ஒரு நகைச்சுவையாவும் ஒரு ஆராய்ச்சி பண்ணிருக்காரு அவரது ஆராய்ச்சி முடிவு என்ன சொல்லுதுன்னா

சிவாஜியின் பெயர் கணேசன் என்று முடிகிறது; இதனால், (சிவாஜி)கணேசன் நடித்தான்;(சிவாஜி)கணேசன் கொன்னுட்டான்’டா… இப்படித்தான் சொல்ல எளிதாகிறது. அடுத்த பெயரைச் சொல்லிப் பாருங்கள்: எம்.ஜி.ஆர். நடித்தார் என்பதுதான் எளிதாக வரும். நல்லா வாள் சண்டை எம்.ஜி.ஆர். போட்டான் என்றால் நல்லாவா இருக்கு.ஆக, கண்டுபிடிச்சது என்னென்னா, பெயரின் விகுதியை ‘அர்’, ‘ஆர்’ என்பதுபோல வைத்தால் பின்னால் கூப்பிடுபவர்கள்

எம்ஜிஆர் சிவாஜிக்களுக்கு பிறகு ரஜினி கமல்ல தொடர்ந்து இப்போ அஜித் விஜய் ஃபைட்டு தான் இப்போ உச்சத்துல இருக்கு

இவங்க ரெண்டு பேரு படமும் ஒண்ணா ரிலீஸ் ஆகுற அன்னிக்கு அட்லீஸ்ட் ஒரு நாலு பேராவது குத்திக்கிட்டு செத்து போயிடுறாய்ங்க. படம் பாக்கப் போறப்போ கத்தில என்னடா விளையாட்டு. அஜித் ஃபேன்ஸ் விஜய்ய அசிங்கமா பேச, விஜய் ஃபேன்ஸ் அவனுங்கள அசிங்கமா பேச ரெண்டுபேருக்கும் ஒரே எண்டர்ட்டெய்ண்மெண்டு தான் . தல கவுண்டர் சொல்ற மாதிரி 'beautiful game". அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள் இவங்க பன்ற அலும்பப் பாருங்க.

ஆனா ரெண்டு தரப்புமே அவங்க  அவங்க சைடுல நாங்க எதுக்கு இவருக்கு ரசிகரா இருக்கோம் அப்புடிங்குறதுக்கு பல காரணங்கள் வச்சிருக்காங்க.
இதுல ந்ம்மூர் அரசியல்வாதிகள் கட்சித்தாவல் பண்ற மாதிரி இவங்களும் டைம் கிடைக்கும்போது இங்கருந்து அங்கயோ இல்லை அங்கருந்து இங்கயோ மாறிகிட்டு தான் இருக்காங்க. எங்க கம்பெனில ஒரு அஜித் ஃபேன "ஆஞ்சனேயா" படத்த சொல்லி எதோ கிண்டல் பண்ணும் போது "ஹலோ.. ஆஞ்சனேயா வரும்போது நா விஜய் ஃபேன்ங்க"ன்னான்... அவனாடா நீயி.. நல்ல வேளை நாங்க எப்பவும் உஷா ஃபேன் தான்.

அஜித் அவரோட ரசிகர்கள் சிலரது பார்வையில். அஜித் ஒரு ஆச்சர்யக்குறி ன்னு நம்ம சக்கரக்கட்டி சொல்றாப்ளே. அப்போ விஜய் என்ன கேள்விக்குறியான்னு கேக்கக்கூடாது. வழக்கமா கோயிலுக்குத்தான் 'தல' வரலாறுன்னு ஒண்ணு இருக்கும். ஆனா இவங்களோட தல வரலாற கொஞ்சம் பாருங்க.

விஜய் ஃபேன்ஸ் மட்டும் என்ன சும்மாவா... எனக்கு ஏன் விஜய்ய புடிக்கும் அப்டின்னு நம்ம அகாதுகா அப்பாட்டக்கர் சொல்றாரு கேட்டுக்குங்க. உங்களுக்கு மட்டும்தான் தல வரலாறு உண்டா, எங்களுக்கு ஒரு தளபதி வரலாறு இல்லையா... இக்கடச் சூடு

அப்போ அஜித்துன்ன என்ன சும்மாவா... அவரோட பாப்புலாரிட்டி என்ன தமாசா அப்டின்னு என்கிட்ட கேட்காதீங்க. நம்ம சிவகாசிக்காரன்கிட்ட கேளுங்க அவரு பதில் சொல்லுவாரு. சரி மொத்தமா என்னதாம்ப்பா சொல்ல வர்றீங்க.. அஜித்தா விஜய்யா .. இதப் படிச்சிட்டு  நீங்களே ஒரு முடிவு பண்ணிக்குங்க.

அட என்னங்க தனித்தனியா கம்பேரிசன் போட்டுக்கிட்டு இப்போ நா போடுறேன் பாருங்க ஒரு கம்பேரிசன் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் சிம்பு - தனுஷ் ன்னு மொத்தச் சண்டையையும் போட்டுட்டு கடைசியா என்ன தீர்ப்பு குடுக்குறார்னா

        எந்திரனில் சிட்டி ரோபோ சொல்வது இந்த நடிகர்களின் சண்டையை 
                                         " யாராலும் அழிக்க முடியாது"

சச்சின் vs Rest

அது என்னப்பா இவருக்கு மட்டும் multiple opponents ன்னு பாக்குறீங்களா.. நேரத்துக்கு ஏத்தாமாதிரி இவரோட ஆப்பொனெண்டுங்களும் மாறிடும். திடீர்னு சச்சினா கங்குலியாம்பாய்ங்க. இல்லை சச்சினா ட்ராவிட்டாம்பாயிங்க.  இல்லை கண்டம் விட்டு கண்டம் தாண்டி சச்சினா லாராவாம்பாய்ங்க. அதனாலதான் அப்டி.

கிரிக்கெட்டுல சச்சினுக்கு முன் சச்சினுக்கு பின் என சச்சினோட செல்வாக்கை பத்தி அருண் குறிப்பிட்டுருக்காரு.  அட போங்கப்பா எல்லாரும் சச்சின் சச்சின்குறீங்க...மத்தவங்களையெல்லாம் யாரும் கண்டுக்கவே மாட்டீங்களாப்பா,... எனக்கு ஏன் அவரப் புடிக்கல தெரியுமா ன்னு ஒருத்தர் அவர் தரப்பு காரணங்களச் சொல்றாரு.

ஹலோ என்னப்பா இது..  சச்சினா கங்குலியா? ன்னு ஒரு சண்டையா? ஆக்சுவலா ஒருத்தரோட இன்னொருத்தர கம்பேர் பண்ணவே கூடாதுங்குறாரு நம்ம பாலா அண்ணேன். அவரு சொன்னா கரீக்டாதாம்பா இருக்கும்.

அடுத்து இந்த திமுக அதிமுகக்களப் பத்தி எதாவது பேசுவோமா.. ஹலோ ஹலோ ஏன் சார் கல்லெடுக்குறீங்க... ப்ளீஸ் இருங்க எதா இருந்தலும் பேசித் தீத்துக்குவோம். வன்முறை கூடாது.


மேலும் வாசிக்க...

Thursday, June 19, 2014

ஒரு ஊர்ல ஒரு பாட்டி!!!

அட என்னப்பா எப்பப்பாத்தாலும் ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஒரு ஊர்ல ஒரு பாட்டின்னே கதைய ஆரம்பிக்கிறீங்க. வேற யாருமே உங்க கண்ணுக்கு தெரியாதா? உருண்ணா நாலு கெழவிங்க இருக்கத்தான் செய்யும். தென்னை மரம்னா குளவி இருக்குறதும் ஊருன்னா நாலு கெழவி இருக்குறதும் சகஜம்தானப்பா. அதுக்குன்னு எப்பப்பாத்தாலும் ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்துச்சி அது வடை சுட்டுச்சின்னுட்டு. ரொம்ப வருஷமா அந்தப்பாட்டி வடைய மட்டுமே சுட்டுகிட்டு இருக்கு. ஒரு பீட்சா, பர்க்கர், ஸ்பிரிங் ரோல்ன்னு கொஞ்சம் வித்யாசமா சுட்டாத்தானே வியாபாரம் டெவலப் ஆவும். ஆகவே யுவர் ஹானர், நா எதுக்கு இப்புடி மொக்கை போடுறேன்னா, இன்னிக்கு நாம பாக்கப்போவது சில சிறுகதைகள்.

எங்க எல்லாருக்கும் பெரியண்ணா ஒருத்தர் இருக்காரு. பேரு வினையூக்கி செல்வா. நெட்ட கண்டுபுடிக்கிறதுக்கு முன்னாலயே blog எழுதுனவரு. வலைச்சரம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே நிறைய வலைய பிண்ணுனவரு. சுருக்கமா சொல்லனும்னா பதிவுலகத்துல இவரு போதிதர்மன் செட்டு. இன்னும் சுருக்கமா சொல்லப்போனா ஆதாம் ஏவாள் காலத்துலருந்தே பதிவெழுதுற the one & only வினையூக்கி செல்வா.

ஒரு பக்கக் கதை, ஒரு நிமிடக் கதை, ஒரு வருடக் கதைன்னு வகை வகையா கதைங்கள எழுதித் தள்ளிருக்காரு. கிட்டதட்ட இவர் எழுதுன சிறுகதைகள் மட்டும் ஒரு 200 ah தாண்டும். ஆனா ஒரு பக்கம் எழுதுனாலும் சரி ஒன்பது பக்கம் எழுதினாலும் சரி இவரோட கதைகங்க நமக்குள்ள பெரிய தாக்கத்த ஏற்படுத்தும். பெரும்பாலும் இவரோட சஸ்பென்ஸ், திகில் கதைகள் செமயா இருக்கும்.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி தொலைச்சிட்டு இன்னுமும் தேடிகிட்டு இருக்க அந்த மலேசியா விமானத்த மையமா வச்சி அண்ணன் எழுதிய  காணாமல் போகிற விமானங்கள் "ஒரு வேள அப்டி இருக்குமோ"ன்னு நம்மள யோசிக்க வைக்கும். தொலைந்து போன விமானங்கள்

இதுவரைக்கும் நீங்க ஹைக்கூ கவிதைன்னு ஒரிரு வரி கவிதைதான் கேள்விப்பட்டுருப்பீங்க. ஆனா ஹைக்கூ கதை கேள்விப்பட்டதில்லையே.. ரெண்டு பாராவுல ஒரு கதை..  ஒரு குட்டிக்கதை - கொஞ்சூண்டு திகில் இருக்கலாம் எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா?


நம்ம பக்கத்து வீட்டுல எதாவது சண்டை நடந்தா நாம உடம்பு நம்ம வீட்டுலயும் நம்மளோட காது பக்கத்துவீட்டு சுவத்துலயும் இருக்கும். அங்க என்ன நடக்குதுங்குறதுல தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வம். அப்படி ஒட்டுக்கேட்டு மாட்டிக்கிட்ட ஒருத்தர பத்தின திகில் கதை பக்கத்து வீட்டுப்பெண்


வினையூக்கியின் கதைகள் இதுங்க வெறும் ட்ரெயிலர் தான். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதத்துல நமக்கு டெரர கெளப்பும்.

" நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான். ஆனா கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான் ஆனா கைவிட்டுடுவான்" ங்குறா தத்துவத்த பேஸ் பண்ணி நம்மூர்ல சாமியார்கள் எப்படி உருவாகுறாங்கங்குற கதைய நம்ம சிவகாசிக்காரன் அவரோட ஸ்டைல்ல சொல்லிருக்காரு  புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி  குறிப்பா அதுல நம்மாளுங்க எப்படி பொண்ணு பாக்குறப்போ போடுர கண்டிஷன்ஸ செமையா சொல்லிருக்காரு.

உதாரணமா 26 வயசுல பொண்ணு தேட ஆரம்பிக்கும் போது 1. படிச்ச பொண்ணா வேணும் 2. அழகான பொண்ணா வேணும் 3. வேலையில இருக்க பொண்ணா வேணும் 4. பணக்கார பொண்ணா வேணும் அப்புறம் கொஞ்ச நாள்ல 1.படிச்சிருந்தா போதும். 2 அப்டியே அழகாவும் இருக்கனும். வேலைக்கு போனா போகலாம். மனுசனுக்கு காசா முக்கியம். பணக்காரரா இருக்கனும்னு அவசியம் இல்லைன்னு கொஞ்சம் இறங்குவாங்க. அப்புறம் கொஞ்ச நாள்ல அழகுங்குறது மனசுல தான் இருக்கு முகத்துல இல்லை. அதனால படிச்சிட்டு வேலைக்கு போற பொண்ணா இருந்தா பரவால்லைன்னு கொஞ்சம் இறங்குவாங்க இன்னும் கொஞ்ச நாள்ல  வேலை என்னப்பா வேலை.., குடும்பப்பொண்ணுங்க வேலைக்கு போனா நல்லாவா இருக்கும். பொண்ணு ஒரு பத்தாப்பு படிச்சிருந்தா  போதும்னு டன்னுலருந்து கிலோவுக்கு கொறைச்சிப்பாங்க. அதுக்கும் அப்புறம் வெறும் பொண்ணு மாதிரி இருந்தாப் போதும்பாங்குற நிலமை ஆயிடும்.
 

சாமி சத்தியமா நா ரவுடிய்யான்னு கெஞ்சி கதறுத நாம பாத்துருக்கோம். ஆனா சாமி சத்தியமா நா செத்துட்டேன்யான்னு ஒரு ஒருத்தன் கதறுத கேள்விப்பட்டுருக்கோமா... இங்கப் பாருங்க.. யோவ் என்ன ஒருத்தன் கொன்னுட்டான்யா.. நா செத்துட்டேன்... தயவு செஞ்சி ஒரு கேஸ் எழுதுன்னு ஒருத்தர் வந்து போலீஸ் ஸ்டேஷன்ல கதறுறாரு...  ஒரு தமாஷான பேய்க்கதை


பேய் இருக்கா இல்லையா... நம்பலாமா நம்பக்கூடாதாங்குற சந்தேகம் நம்ம பலபேருக்குள்ள இருக்கு. என்னதான் பேய் பிசாசெல்லாம் இல்லைன்னு அடிச்சி பேசுனாலும் நடு ராத்திரில உச்சா வரும்போது தான் அடிவயித்துல ஒரு பீதி நமக்கு கிளம்பும்.  என்னதான் சயிண்டிஃபிக்கா பல காரணங்கள எடுத்து வச்சாலும் பல சம்பவங்கள் இன்னும் விளக்கப்படாம தான் இருக்கு. அப்படி ஒரு உண்மையான பேய்க்கதை உங்களுக்காக.

அதுவும் நம்ம நடுராத்திர பஸ்லருந்து இறங்கி நம்ம வீட்டுக்கு போகும்போது இருக்க பயம் இருக்கே... பஸ்ஸ்டாப்புல இறங்கி நம்ம வீட்டுக்கு போற வழியில வீடு எதுவும் இல்லைன்னா டர்ர்ர்ரு தான். வடிவேலு மாதிரி வழில பாக்குறவிங்கள "அண்ணேன்... கா காலெங்கண்ணே"ன்னு கேட்டுட்டு ஓட வேண்டியதுதான். அப்படிப்பட்ட இன்னொரு உண்மைப் பேய்க்கதை

இருக்கா இல்லையாங்குற கன்பீசன வரவைக்கிற  ஒரு மாதிரியான பேய்க்கதை.


என்னப்பா ஒரே பேய்க்கதையா ஓடிக்கிட்டு இருக்கு. பேய்க்கதைங்கன்னா எனக்கு சின்ன வயசுலருந்தே அலர்ஜின்னு சொல்றவங்களுக்காக இன்னொரு ஜாலியான ஒரு சின்ன டச்சிங்கான கதை. வாழ்க்கைங்குறது வெறும் காசு, பணம், துட்டு ,மணி மணி மட்டும் இல்லை அதுக்கும் மேல உறவுகளுக்குத் தான் முக்கியத்துவம் தரணும்ங்குறது உணர்த்துற மாதிரி ஒரு நெகிழ வைக்கும் கதை

இல்லை.. நேக்கு அந்த மாதிரியெல்லாம் இல்லை... நீங்க தப்பா புரிஞ்சுண்டேல் நா இந்த மாதிரி சின்ன சின்ன கதையெல்லாம் படிக்க  மாட்டேன். பெரிய பெரிய நாவலாத்தான் படிப்பேன்னீங்கன்னா நம்ம தேவிகுமாரோட  The Celestial Hunt படிங்க. சூப்பரான சயின்ஸ் ஃபிக்சன் கதை.

ஓக்கே... நாளைக்கு வேற ஒரு செட்டப்போட உங்களை சந்திக்கிறேன்.  ஹலோ... பதிவுங்களச் சொன்னேன்...



மேலும் வாசிக்க...

Wednesday, June 18, 2014

எப்படி எப்படி? அது எப்படி எப்படி?

இந்தப் பதிவ எப்புடி ஆரம்பிக்கிறதுன்னே தெரியல. எப்புடி எப்புடியோ எழுதனும்னு நெனைச்சேன் கடைசில இப்புடி வந்து மாட்டிக்கிச்சி. எப்புடி இந்தப் பிரச்சனை எனக்கு வந்துச்சின்னு  கேட்டீங்கன்னா எப்புடி பதில் சொல்றது? ஏன்னா இது எப்புடி எப்புடின்னு  வர்ற பல எப்புடிக்களப்  பத்தின பதிவு. எப்பூடி மொத பாராவே மண்டைகாயிதா.... யாருப்பா அது கல்ல எடுக்குறது.. சாந்தி சாந்தி..

நாம எல்லாருக்குமே தெரியும் கேள்வி கேக்குறது ஈஸி ஆனா பதில் சொல்றதுதான் கஷ்டம்னு? ஆனா அத்தனை கேள்விக்கும் நம்ம பதிவுலகத்துல பதில் கொட்டிக்கெடக்கு. உதாரணத்துக்கு உங்களுக்கு படம் எடுக்க ஆசை வந்துருச்சி. தமிழில் படம் எடுப்பது எப்படி? அப்புடின்னு நம்ம பாலா பக்கங்கள் பாலா அண்னன்கிட்ட கேளுங்க. உங்களுக்கு என்ன டைப் படம் எடுக்கனுமோ அத்தனைக்கும் அண்ணேன் ஐடியா வச்சிருக்காரு.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு திகில் படம் எடுக்கனும்னு ஆசைவந்துருச்சின்னு வச்சிக்குங்க. அண்ணன்கிட்ட கேக்குறீங்க.. இப்போ பாருங்க எப்புடின்னு

"திகில் படத்தை பொறுத்தவரை ஒரே கதைதான். ஒரு பங்களா. அது நடுக்காட்டுக்குள் இருக்கிறது. யாருமே வராத அந்த இடத்துக்கு, ஒரு ஐந்து பேர் கொண்ட குழு, மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்(டவுசர் மற்றும் பனியனுடன்) வந்து தங்குவார்கள். அங்கே ஏதோ ஒன்று இருக்கிறது. அப்பப்போ வந்து அனைவரையும் பயமுறுத்துகிறது. பின்னர் ஒவ்வொருவராக கொல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் தப்பிப்பார். பிறகு அவர் ஒரு சாமியாரிடம் செல்வார். சாமியார் உதவியுடன் பேயிடம் விசாரித்தால் அது தன் கதையை சொல்லும். அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெண் இதே பங்களாவில் வைத்து கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பாள். அதற்கு இந்த ஐந்து பெரும் உடந்தை. பிறகென்ன, மிச்சமிருக்கும் அந்த ஒருவனையும் கொன்றுவிட்டு பேய் சாந்தி அடையும். படத்தில் பேயை விட, அதில் வரும் சாமியார், வேலைக்காரி ஆகியோர் மிக டெரராக இருக்கவேண்டும். பேயாக வருபவர் கவர்ச்சி நடிகையாக இருப்பது மிகமுக்கியம். பெரும்பாலும் படத்துக்கு வருபவர்கள் அந்த கற்பழிப்பு காட்சிக்காகத்தான் வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்க"

ரைட்டா.. இல்ல படம் எடுக்க உங்களுக்கு செட் ஆவல. சும்மா வீட்டுல உக்காந்து பாத்த படத்துக்கு விமர்சனம் மட்டும் எழுதனும்னு ஆசைப்பட்டா அதுக்கும் அண்ணனே வழி சொல்லுவாரு. எப்புடியா? இங்க ஒரு சேம்பிள் பாருங்க.. உதாரணமா நீங்க ஒரு ஒலகத்தர விமர்சகரா ஆக ஆசைப்படுறீங்கன்னு வச்சிக்குவோம்

"இந்த வகை விமர்சனங்கள் உங்களை பதிவர்கள் மத்தியில் அறிவு ஜீவி என்ற இமேஜை ஏற்படுத்தும். பதிவுலக கமலஹாசன், மணிரத்னம் என்ற அடைமொழிகள் கூட கிடைக்கலாம். உலகத்தர விமர்சனங்கள் எழுத உங்களுக்கு தேவையான தகுதி, நீங்கள் தமிழ் படங்களை அறவே வெறுப்பவராகவோ அல்லது வேறு மொழி படங்களை மட்டும் பார்ப்பவராகவோ இருக்க வண்டும். குறிப்பாக ஐரோப்பிய படங்களை பார்க்க வேண்டும். எனக்கு வேறு மொழி படங்கள் எல்லாம் புரியாதே? என்று நினைக்கிறீர்களா? கவலையை விடுங்கள். நீங்கள் எழுதும் விமர்சனத்தை படித்துவிட்டு, அந்த படங்களை தேடிப்பிடித்து பார்ப்பவர்கள் 1 சதவீதம் கூட கிடையாது. ஆகவே நாம் சொல்வதுதான் கதை. நாம் சொல்வதுதான் கருத்து"

அதுவும் இல்லை.. அண்ணன், தம்பி, அமெரிக்க மாப்பிள்ளை எதுவுமே வேணாம் .நா ஸ்ட்ரெய்ட்டா ஒரு புரட்சிப்பதிவரா ஃபார்ம் ஆயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்னு புரட்சிப்பதிவர் ஆவது எப்படி? ன்னு கேட்டா அதயும் அண்ணனே பாத்துக்குவாரு..

இல்லைப்பா நமக்கு இந்த சினிமா, பதிவு, விமர்சனம் இதெல்லாம் செட் ஆவாதுbaa.. நா பேசாமா ஒரு நல்ல பொண்ணா பாத்து லவ் பண்ணி காதல் மன்னன் அஜித் மாதிரி ஆவனும்னு ஒரு முடிவு பண்ணீங்கன்னு வைங்க.. நேரா குடு குடுன்னு நம்ம தகவல் உலகத்துக்குப் போங்க.போய் நா காதல் மன்னன் ஆவனும்baa..  அதுக்கு இன்னாbaa பண்றதுன்னு கூச்சப்படாம கேளுங்க.

அவரு இந்த மாதிரி சில வழிகள உங்களுக்குச் சொல்லுவாரு

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்.. 


2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

சரி மொதத் தடவ லவ் யாருக்கு செட் ஆயிருக்கு? ஆவாது. கண்ணா பின்னான்னு லவ் பண்ணதுல அங்கங்க அடிபட்டு  மூஞ்சு முகரையெல்லாம் வீங்கிப் போயிரும். அப்போ போய் நம்ம டான் அசோக் கிட்ட ஒழுங்கா லவ் பண்றது  எப்புடின்னு? ன்னு கேளுங்க. அவரும் நமக்கு கீழுள்ள மாதிரி ரெண்டு மூணு பாயிண்ட சொல்லி நமக்கு கான்ஃபிடன்ஸ ஏத்தி விடுவாரு.

1) "நம்ம முகரைக்கெல்லாம் சுமாரான ஃபிகரு தான் கிடைக்கும்"னு நமக்கு நம்மளே முடிவு பண்ணிட்டு டைரக்டா சுமாரான ஃபிகருக்கு ட்ரை பண்ணக் கூடாது. ஆக்சுவலா எல்லா பசங்களும் இப்படி நினைக்கிறதுனால செம ஃபிகரைவிட தமிழ்நாட்டுல சுமாரான ஃபிகர்களுக்குதான் போட்டி அதிகம். இது நாட்டுக்கே ரொம்ப கேடான விசயம். போட்டி அதிகம்ன்றதால ஒரு சுமாரான ஃபிகர் தன்னத்தானே செம ஃபிகர்னு நினைச்சுக்கக் கூடிய கொடூரமான உயிர்க்கொல்லி அபாயங்கள் இதுல இருக்கு! அப்புறம் அந்த கொடுமையையும் நீங்கதான் அனுபவிக்கனும்.

காதலிக்கனும்னா நம்ம முகரை ஒரளவு சுமாராவது இருக்கனும். இல்லையா நம்ம உடம்ப பழனிப்படிக்கட்டு மாதிரி பல கட்டிங்க்ஸுகள வளத்து வச்சிருக்கனும். நம்ம மூஞ்சியப்பத்தி பேசப்போனா வடிவேலு சொல்றமாதிரி " அதான் நெக்ஸ்டுங்குறேன்ல்லப்பா"ன்னு அடுத்த ஆப்சன் தான். சரி எப்புடி உடம்புல பல கட்டிங்க்ஸ் வரவைக்கிறது? அதுக்கு நம்மகிட்ட கொஞ்சம் ஐடியா இருக்கு.  நம்ம ஏரியாப் பக்கம் கொஞ்சம் வந்துட்டுப்போனீங்கன்னா ஆறே வாரங்களில் சிகப்பழகு மாதிரி ஆறே வாரங்களில் சிக்ஸ் பேக் வாங்கி மாட்டிலாம். அப்புறம் என்ன லவ்வு லவ்வு தான் கவ்வு கவ்வு தான்.

ஒரு சேம்பிள் வழி.

லீவ் நாள்ல  எந்த வேலையும் இருக்காது. அது மாதிரி சமயங்கள்ல கலோரிய செலவு பண்ண வடிவேலு பாணிய பின்பற்றலாம்.  நேரா மதுரைக்காரய்ங்க எவண்டயாவது வம்பிழுங்க. அம்புட்டு பயலும் வகுத்துலயே மிதிச்சி வயித்துல  உள்ள மொத்த கொழுப்பையும் அரைமணி நேரத்துல எடுத்து ஃபேச ப்ரஷ் ஆக்கி விட்டுருவாய்ங்க. ஒரு நாள் முழுக்க செய்ய வேண்டிய வேலைய அரைமணி நேரத்துல முடிச்சிவிட்டுருவாய்ங்க. அப்டி இல்லையா நம்ம கலகலப்பு  மண்டை கசாயம் ஸ்டைல ஃபாலோ பண்ணுங்க. கிச்சன்ல இருக்க சாமனையெல்லாம் ஒண்ணு ஒண்ணா எடுத்து ஹால்ல வைங்க. அப்புறம் ஹால்ல வைச்ச சாமானையெல்லாம் எடுத்து பெட்ரூம்ல வைங்க. திரும்ப பெட்ரூம்ல வச்ச சாமனையெல்லாம் எடுத்து கிச்சன்லயே வச்சிருங்க. மேட்டர் ஓவர்.

எல்லாமே கடுப்பாகீதுபா.. நா பேசாம ஒரு எம்.எல்.ஏவாவோ இல்லை எம்.பியாவோ ஆயி மிச்ச காலத்த ஓட்டிக்கிறேன்னு நினைக்கிறீங்க. தப்பில்லை. ஆனா நாம எலெக்ஷன்ல நின்னா நம்ம வீட்டுல உள்ளவிங்களே நமக்கு ஓட்டுப் போடமாட்டாயிங்க. வேற என்ன வழி.. கள்ள ஓட்டுத்தான். அது எப்புடிப் போடுறது? கைவசம் நிறைய ஐடியா இருக்கு. 

என்னடா இது நமக்கு அரசியலும் சரிப்பட்டு வரமாட்டேங்குதுன்னு வைங்க. ஃபேமஸ் ஆக ஒரே வழி எதிர்ப்பு வாதி ஆகுறது. எத எதிர்க்குறதா? அட எதயுமே ஆதரிக்கக் கூடாது அதான் எதிர்ப்பு வாதி ஆக மொத கண்டிஷன். அப்பதான் என்ன நடந்தாலும் சுனாப்பானா போப்போன்னு போய்க்கிட்டே இருக்கலாம். 

இல்லைன்னா இணையத்துல பேசாம தமிழ்ப் போராளி ஆயிட வேண்டியதுதான்.  அது எப்புடின்னு கீழ பாருங்க.


"நீங்கள் சோத்துக்கே வக்கில்லாமல் வீட்டில் மூதேவி என திட்டு வாங்கும் இளைஞனாய் இருந்தால் முதல் தலையாய கடமையாய் பேஸ்புக்கில் ஒரு கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள் (உங்களுக்கு ஏற்கனவே ஒரு கணக்கு இருந்தாலும் பரவாயில்லை..).

வீட்டில் எவ்வளவு நல்ல பெயர் உங்களுக்கு வைத்திருந்தாலும் அதை ப்ரொபைல் பெயராக வைக்க கூடாது. உங்கள் ப்ரொபைல் பெயரை பார்க்கும் போதே அது போலி ப்ரொபைல் என்று.. சாரி.. போராளி ப்ரொபைல் என்று தெரியவேண்டும். (எ.கா) வீரத்தமிழன், சிங்கத்தமிழன், கரடிதமிழன், அழகியடமில் மகன். அல்லது உங்கள் பெயரோடு டைகர், புலி ஆகிய அடைமொழிகளை சேர்த்துக்கொள்லாம். சுரேஷ் டமில் புலி, ரமேஷ் தமிழ் டைகர், என இருந்தால் நல்ல ரீச் கிடைக்கும். கொட்டை எடுத்த புளியாக நீங்கள் இருந்தாலும் புலி என போட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் புலி எதுவும் முகநூலில் இல்லை! "

எப்புடியோ... இன்னிக்கு எப்புடிய வச்சே ஓட்டியாச்சி.
மேலும் வாசிக்க...

Tuesday, June 17, 2014

சரவெடிப் பதிவர்கள்!!!

நண்பர்களுக்கு வணக்கம்... முதல் முதலா சரவெடிப் பதிவர்களோட ஆரம்பிப்போம்...நான் பதிவுலகத்துக்கு வர்றதுக்கு காரணமே என்னுடைய நண்பர் டான் அசோக் தான். (அந்தக் கொடுமையைப்  பன்னது அவுரு தானான்னு நீங்க கைய மடிச்சி விடுறது  தெரியிது )  அதுமட்டுமில்லாம பதிவுலகதுல என்னோட குருநாதரும் இவருதான். இவரோட ஆரம்ப கால சில பதிவுகளை base ah வச்சிதான் இப்ப வரைக்கும் நான் பதிவெழுதிகிட்டு இருக்கேன்.

நாம நம்ம பாஸுங்ககிட்ட ரப்படி வாங்கிகிட்டு இருக்கும் போது ஒரு ஃபோன் வரும். அதயே சாக்கா வச்சி ஃபோன பொத்துனாப்புல காதுல வச்சிகிட்டே வெளிய வந்தோம்னா "சார் HDFC லருந்து ப்ரீத்தி பேசுறேன் சார்..." ஒரு குரல். அது என்ன்னனே தெரியல இந்த பேங்க்லருந்து பேசுறவிங்க பேருங்க ப்ரீத்தி, ப்ரியா, ரம்யா இந்த மூணு பேருல ஒண்ணாத்தான் இருக்கும். அதுவும் அந்த கொரலு இருக்கே... இன்பத்தேன் வந்து பாயுது காதினிலேங்குறதுக்கு அர்த்தமே நமக்கு அப்பத் தான் புரியும்.

"சார் HDFC ல உங்க அருமையான ரிட்டர்ன்ஸ்வர்ற மாதிரி ஒரு சேவிங்ஸ் ப்ளான் இருக்கு... அதப்பத்தி ஒரு ரெண்டு நிமிஷம் உங்ககிட்ட பேசலாமா சார்.... "

"நல்லாப் பழகுங்கவே... பேசுறதுல என்ன இருக்கு" ன்னு அஞ்சி நிமிஷம் அதுகிட்ட கடலை போட்டுட்டு சாரி மேடம் இப்போ என்னால invest பண்ண முடியாது.. ஒரு 6 months கழிச்சி வேணா பண்றேனே"ன்னு  சொன்ன உடனே அந்தப்புள்ள மனசுல " அப்புடியேதஞ்சாவூருல ஆயிரம் ஏக்கருக்கு சொந்தக்கார வெண்ணையாரு இவரு.. ஆமா இப்பவே இவரால கிழிக்க முடியலையாம்.  ஆறு மாசம் கழிச்சி அறுவடை  பண்ணிட்டாலும்.. " ன்னு திட்டிகிட்டே வைக்கும்..

அப்டியே எஸ் ஆயிட்டோம்னா தப்பிச்சோம்.. இல்லை அந்த கொரலுக்காக ஒரு ப்ளானப் போட்டு  வைப்போம்னு வலையில விழுந்தோம் அம்புட்டுத்தேன்... ஃபார்ம்ல சைன் வாங்குற வரைக்கும் தான் அந்தப்  புள்ள பேசும். வாங்குனதுக்கு அப்புறம் மலையூர் மம்புட்டியான்கள் தான் பேசுவாய்ங்க.. சார் பில்லு இன்னும் கட்டல சார்" "சார் உங்க அக்கவுண்ட்ல பேலன்ஸ் கம்மியா இருக்கு சார்" " இன்னிக்குள்ள பில்லு கட்டலன்னா உங்களுக்கு ஐநூறு ரூவா late fee போட்டுருவாங்க சார்"னு ஒரே அபாய சங்குளாத்தான் ஊதுவாய்ங்க. அப்படிப்பட்ட ஒரு மேட்டர ரொம்ப சிம்பிளா ஒரே பக்கத்துல நம்மாளு காலாய்ச்சிருக்காரு பாருங்க.. நான் HDFCல இருந்து பேசுறேன்...


அப்புறம் நம்மாளுங்க கிட்ட இருக்க இன்னொரு விஷயம் இந்த லேடீஸ் செண்டிமெண்ட். பஸ்ல பாத்தா  லேடீஸ் சீட்டுன்னு தனியா இருக்கு.. ட்ரெயின்ல பாத்தா லேடீஸ் கம்பார்ட்மெண்டுன்னு தனியா இருக்கு...  ஆனா நமக்கு என்ன சார் இருக்கு? நம்மல்லாம் பாவம் இல்லையா சார்... நம்ம நின்னா கால் வலிக்க்காதா  சார்..  சார் லேடிஸ் வர்றாங்க வழி விடுங்க.. சார் லேடீஸ் வர்றாங்க இடம் கொடுங்க.. சார் லேடீஸ் இருக்க  வீடு...கொஞ்சம் சத்தம் போடாம இருங்க அப்டி இப்டின்னு இந்த  லேடீஸ் செண்டிமெண்ட்ட வச்சிக்கிட்டு  நம்மாளுங்க பண்ற ரவுசுக்கு ஒரு அட்டகாசமான பதிவு  லேடீஸ் வர்றாங்க கிளம்பு!!

இதுமட்டும் இல்லை நம்ம ராகுல் காந்தி இவர்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படுறார் பாருங்க.. ராகுல் 'பாய்'யும் இரண்டு 'நாய்'யும்! இந்த பதிவ விட எனக்கு  "ராகுல் பாயும் ரெண்டு நாயும்" ங்குற டைட்டில் தான் ரொம்ப புடிக்கும்..
இவரின் நகைச்சுவை பதிவுகளுக்கு மட்டுமில்லை.. இவரின் சிறு கதைகளுக்கும் நான் ரசிகன். இவரோட "நாய் வாத்தியார்" என்னுடைய all time favorite. 

டான் அசோக்கின் பதிவுகளுக்கு பிறகு நான் அதிகம் ரசித்து வாசித்த வலைப்பதிவு "விசா பக்கங்கள்". அது  என்ன "வாசித்த"ன்னு past tense ல பேசுறேனேன்னு பாக்குறீங்களா.. நா படிக்க ஆரம்பிச்ச நேரம் அவர் வலையவே இழுத்து மூடிட்டு எங்கயோ பொய்ட்டாரு. ரெண்டு வருஷமா பதிவுகளையே காணும். ஆனால்  அசால்ட்டாக காமெடி பண்றதிலும், கலாய்க்கிறதிலும் இவர அடிச்சிக்க ஆளே இல்லை

ஏழாம் அறிவு படத்துக்கு இவர் எழுதியிருக்க விமர்சனத்த மட்டும் படிங்க. இவர் எப்படின்னு அது ஒரு  பதிவுலையே புரிஞ்சிப்பீங்க. அந்த பதிவிலிருந்து ஒரே ஒரு சாம்பிள் மட்டும் உங்களுக்காக இப்போ

நோக்கு வர்மம். அப்படின்னா என்ன சார்? கண்ணால பாத்தே எதிரிய தன்னத்தானே அழிச்சுக்க வைக்கிறது. அதானே. தமிழ்நாட்டுல இன்னைக்கு நோக்கு வர்மம் இல்லேன்னு யாரு சொன்னா? தமிழ்நாட்டுல இருக்குற ஒவ்வொரு பொண்ணும் நோக்கு வர்மத்துல நொங்கெடுப்பாங்க. கில்லாடிங்க. நீங்களே யோச்சு பாருங்க. அவங்க சும்மா தான் பாக்குறாங்க. ஆம்புளைங்க நாங்க லவ் லவ்வுன்னு எங்கள் நாங்களே

அழிச்சுக்குறதில்லையா? இதுக்கு பேரும் நோக்கு வர்மம் தான் சார்.


அதே மாதிரி ரவுசோடவும் வில்லத்தனத்தோடவும் அவர் "கோ" படத்துக்கு எழுதிய விமர்சனத்தப் பாருங்க கோ...போடாங்'கோ'....இந்தப்பதிவிலிருந்தும் ஒரு சாம்பிள் உங்களுக்காக

கோ' என்று படத்திற்கு ஏன் பெயர் வைத்தார்கள்? படத்தின் பெயர் 'கோ' என்றதும் படத்தில் ஹீரோவின் பெயர் கோதண்டபாணி அல்லது கோமகன் என்றும்

கோ..கோ..கோ..கோ..கோதண்டபாணி
வா..வா...வா...வா...இது நம்ம பாணி

என்று அதிரடியாக ஒரு ஓப்பனிங் சாங் திறக்கும் என்று எதிர்பார்த்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை. திரைப்படத்தின் ஹீரோ எப்படிப்பட்டவர் என்றால் தன் கண் முன்னே தன் மனைவியை யாராவது பலாத்காரம் செய்தால் கூட உடனடியாக ஸ்டில் கேமராவை தேடிக்கொண்டு வந்து கட்டிலின் நாலா புறமும் சுற்றிச்சுழன்று முயல் குட்டி போல் கட்டிலுக்கு அடியில் ஊர்ந்து மல்லாக்க படுத்து பல ஆங்கிளில் புகைப்படம் எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் ரகம்."

அடுத்த சரவெடிப்பதிவர்  கேடிபில்லா  இளஞ்செழியன். ரெண்டு வருஷமாத்தான் பதிவெழுதுறார்னாலும் ஒவ்வொரு பதிவும் நெத்தியடி பதிவா எழுதி பட்டைய கிளப்புறவரு. வடிவேலு சொல்றமாதி இந்த நக்கலு, நைய்யாண்டி எடக்கு, மடக்குன்னு எல்லாமே கலந்து விட்டு பிண்ணி பெடலெடுக்குறவரு. நம்ம ஊர்ப்பக்கம் பயலுகல நாலு பேருக்கு முன்னால கேள்விகேட்டு அசிங்கப் படுத்துறதுக்குன்னே சிலபேரு திரிவாய்ங்க.. நம்ம பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல வர்ற மங்கூஸ் மண்டையன் மாதிரி.

அதுவும் இப்போ இருக்க ஆளுங்க ஒரு புது ட்ரெண்ட் கண்டு புடிச்சிருக்காய்ங்க.. "நாலு பேரு இருக்க இடத்துல "தம்பி ஆமா நீங்க என்ன சம்பளம் வாங்குறீங்க".. நாம ஒரு பெருமையா இருக்கட்டுமேன்னு "ஒரு fifty thousand uncle"ன்னு சொல்லுவோம். உடனே ஒரு ரியாக்சன் விடுறாய்ங்க பாருங்க... "என்னப்பா வெறும் fifty thousand தானா? என்னோட சன் Australia ல இருக்கான்.. monthly 2.5 lakhs வாங்குறான்... யாப்பா டேய்.. உன் பையன் சம்பளத்த நாலு பேருகிட்ட சொல்றதுன்னா சொல்லிட்டு போ... இதுக்கு ஏன்யா எங்க உசுற வாங்குற. அந்த மாதிரி டயலாக் சொல்றவய்ங்கள பாக்கும் போது எனக்கு தோணுறது மனதை திருடிவிட்டாய் படத்துல வடிவேலு சொல்ற டயாலாக் தான்  "afterall 20 க்ரோர்ஸ் loss ma. அதுக்கு போயி சின்னப்புள்ள அழுகுற மாதிரி அழுதுகிட்டு இருக்காரு... எங்க ஃபேமிலிய பொறுத்த வரைக்கும் 20க்ரோர்ஸ்ங்குறது இந்த பேரருக்கு டிப்ஸ் குடுக்குற மாதிரி...."

இந்த மாதிரி மங்கூஸ் மண்டையர்கள் பசங்கள ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்குன் என்னென்னல்லாம்கொடுமை படுத்துறாங்கங்குறத நம்மாளு விளாவாரியா எழுதிருக்காரு.. இதப்படிச்சி சத்தியமா உங்களால சிரிக்காம இருக்க முடியாது.. ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் இந்த அனுபவம் கண்டிப்பா இருந்துருக்கும். "அன்புள்ள மங்கூஸ் மண்டையன்களுக்கு"..

சமீபத்துல facebook la ஒரு வாசகம் படிச்சேன். நம்மூர்ல மட்டும் தான் ஒருத்தன் கூட ட்ராஃபிக்ல நிக்கவும் மாட்டான். ஆனா ஒருத்தன் கூட எங்கயும் சரியான டைமுக்கும் போகமாட்டான்னு. எவ்வளவு உண்மை இது. இந்த சிக்னல் போடுறதுக்கு முன்னாடி வண்டில இருக்கவியிங்க மூஞ்ச பாக்கனுமே.. எதையோ நாலு நாளா அடக்கி வச்சிருந்து அவசரமா போற மாதிரி செகப்புலருந்து பச்சைக்கு மாறுறதுக்குள்ள காலால தள்ளிக்கிட்டே
பாதி ரோட்ட க்ராஸ் பண்ணிருவாய்ங்க. மத்தவன்லாம் எப்புடி போவான்ங்குற ஒரு அடிப்படை அறிவுகூட இல்லாதவங்க. சில வெளிநாடுகள்ல கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் எவனுமே இல்லைன்னா கூற சிக்னல் சிகப்புல இருந்தா நின்னு பச்சையா மாறுனப்புறம் தான் போவானுங்க. நாமலும் இருக்கோமே.. இந்த மாதிரி சில ட்ராஃபிக் அலும்புகள சுவையாக தொகுத்து செம ரகள பண்ணிருக்காரு... ஓரம்போ ட்ராஃபிக் கலாட்டா..

லவ் பண்ணும் போது நம்ம பசங்க பண்ற அலும்புகள செம ரகளையா சொல்லியிருக்க இன்னொரு பதிவு லவ் பண்ணுடா மவனே...


இன்னிக்கு இதோட முடிச்சிக்குவோம்.. மிகக் குறைந்த பதிவுகளையே இன்னிக்கு அறிமுகம் செய்திருந்தாலும் அனைத்து பதிவுகளும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்ங்குற நம்பிக்கையோட கிளம்புறேன்.

மேலும் வாசிக்க...

Monday, June 16, 2014

ஆரம்பம்!!!

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். வலைச்சர பொறுப்பாசிரியராக ஒரு வார காலம் பணியாற்ற அழைத்த அய்யா சீனா அவர்களுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும் நன்றிகள் பற்பல. பதிவுலகிற்கு வந்த ஐந்தாண்டுகளில் எனக்குக்  கிடைத்த முதல் அங்கீகாரமாக இதை ஏற்று முடிந்த வரை பணியை சிறப்பாகத்  தொடர முயல்கிறேன்.

சீனா அய்யாவிடமிருந்து அழைப்பு வந்த உடனே நா கேட்ட முதல் கேள்வி "அய்யா பேச்சு வழக்கில் பதிவுகள் எழுதலாமா?" ங்குறதுதான். "ஆமா தூய தமிழ்ல தான் எழுதனும்னு சொன்னா மட்டும் அப்டியே வெண்பாவா எழுதித் தள்ளிடப் போறியா... எப்டியாது எழுதித் தொலை" அப்டின்னு மனசுல இருக்கத வெளில  சொல்லாம "உங்க விருப்பம் எப்டியோ அப்படியே எழுதுங்க" என்றார். அதுவே பெரிய தைரியத்த குடுத்துச்சி. ஏன்னா பேச்சுவழக்கில் இல்லாம நா எழுதுன சில பதிவுகள இப்போ படிக்கும் போது இது நா எழுதுன  மாதிரியே இல்லியேன்னு ஃபீல் பண்ணிருக்கேன்.

என்னைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம். எனக்கு சொந்த ஊர் பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல உள்ள மதுக்கூர். இப்போ சென்னையில ஒரு தனியார்  நிறுவனத்துல வேலை பாத்துகிட்டு இருக்கேன். 2009ல நண்பர் ஒருவர் மூலமா வலையுலகத்துக்கு வந்து  "அதிரடிக்காரன்" ங்குற பேர்ல இதுவரைக்கும் 200க்கும் அதிகமான பதிவுகளை எழுதியிருக்கேன்.
பெரும்பாலும் சினிமா தொடர்பான விமர்சனங்களும், நகைச்சுவைப் பதிவுகளுமே அதிகம். சினிமா விமர்சனமா இருந்தாலும் சரி அல்லது வேறு எதேனும் அனுபவப் பதிவா இருந்தாலும் சரி, சொல்ல வந்த விஷயத்தைத் தாண்டி ஏதோ ஒரு இடத்தில் படிப்பவர்களுக்கு ஒரு சிரு புன்னகையையோ அல்லது சுவாரஸ்யத்தையோ வரவழைக்க வேண்டும் என்ற முயற்சியோட எழுதிக்கிட்டு இருக்கேன். சிரிப்பு வரவைக்க முயற்சி தான். சிரிப்பு  வரலன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

நகைச்சுவை மன்னன் கவுண்டரின் தீவிர ரசிகனாதாலல் பெரும்பாலும் பதிவுகளில் அவர் பயன்படுத்திய  வசனங்களையும் அவர் ஸ்டைல் காமெடிகளையுமே முயற்சிக்கிறேன். கவுண்டமணின்னு ஒருத்தர் இருந்தா செந்தில் ஒருத்தர் அடி வாங்கித்தானே ஆகனும். அந்த மாதிரி இதுவரைக்கும் பல முறை பதிவுகளில்  அடிவாங்கியிருப்பது விஜய்யும் சிம்புவும் தான். நா ரொம்பவும் ரசிச்சி எழுதுறது கவுண்டரை மையமா வச்சி  வர்ற பதிவுகளைத் தான்.

ஒரு சில சாம்பிள்கள் இதோ...

கவுண்டரின் அ.இ.ஆ.மு.க (அகில இந்திய ஆம்ளைஸ் முன்னேற்ற கழகம்)


எந்திரனில் கவுண்டர் நடித்திருந்தால்



பதிவுலகில் பெரும்பாலனவங்களுக்கு இப்படி ஒரு வலைப்பதிவு இருப்பதே இன்னிக்கு தான் தெரியும். ஏன்னா  ரொம்ப நாளா பதிவுலகத்துல இருந்தாலும், பதிவுலகில் நெருங்கிய நண்பர்கள்னு எனக்கு யாருமே இல்லை.  ஒரு சிலர்கிட்ட பேசிருக்கேன். ஆனா நெருக்கமான நட்புங்குறது இல்லை. இது என்கிட்ட உள்ள மிகப்பெரிய  குறை. வலைப்பதிவர்கள் சந்திப்புக்குக்கூட போனதில்லை. ரெண்டு தடவ போகலாம்னு முயற்சி செய்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால கடைசில போக முடியாம போயிடுச்சி.


பெரும்பாலும் பதிவுகளில் நடக்குற விவாதங்கள்லயும் நான் பங்கெடுத்துக்கிட்டது இல்லை.  கொஞ்ச நாளுக்கு முன்னால "கமெண்ட் கூனியா" ன்னு ஒரு வியாதி  நம்ம பதிவுலகத்துல இருந்துச்சி.  அதாவது பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் கமெண்ட் போடுவதே அந்த வியாதி.  "மொத வெட்டு" " த.ம.1"  "me the first" "வடை எனக்கு" கமெண்ட் போடனும்ங்குறதுக்காக என்னென்னவோ போட்டுக்கிட்டு இருந்தாங்க. இந்த மாதிரி கமெண்ட் போடுறவங்க உண்மையிலயே எத்தனை பேர் பதிவ முழுசா படிக்கிறவங்கன்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்

சில பதிவுகள்ல நாற்பது அம்பது கமெண்ட்ட பாத்துட்டு போய் பாத்தா அங்க இருக்க பதிவுக்கும் அந்த கமெண்டுகளுக்கும் சம்பந்தமே இருக்காது. சிலர் அவங்க அந்த week end எங்க போகலாம்னு கூட அந்த பதிவுலயே டிஸ்கஸ் பண்ணிருந்தாங்க. பொதுவா ஒரு பதிவுல எவ்வளவு கமெண்ட் இருக்கோ அந்த அளவு அந்தப் பதிவு சுவாரஸ்யமாகவோ இல்ல விவாதத்திற்குறிய கருத்துக்கள் அடங்கியிருப்பதாகவோ தான் அர்த்தம். ஆனா நமக்கு அது வேற.. நம்ம SMS சர்வீஸ் மாதிரி ஆட்களை தொடர்பு கொள்றதுக்கு கமெண்ட் பாக்ஸூம் ஒரு வழி


எனக்கு நடந்த ஒரு சின்ன சம்பவம்.  ஊர் பெயரை முதலில் கொண்ட ஒரு பதிவர் (திண்டுக்கல் அண்ணே.. நீங்க இல்லை.. ஹி ஹி ). ஒரு நாள் அவரோட பதிவு ஓண்ண படிச்சிட்டு ஒரு கமெண்ட் போட்டேன். அடுத்த 10 நிமிடத்தில் அவர்கிட்டருந்து என்னோட ஒரு பதிவுக்கு ஒரு கமெண்ட் "வந்துட்டேன்,, இனி டெய்லி வருவேன்" ன்னு. என்னடா பதிவுக்கும் இந்த கமெண்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லியேன்னு யோசிச்சிட்டு விட்டுட்டேன். திரும்ப மறுநாள் அவரோட இன்னொரு பதிவுக்கு எதேச்சையா கமெண்ட் போட அடுத்த 10 வது நிமிஷத்துல என்னோட இன்னொரு பதிவுக்கு அதே போல சம்பந்தமில்லாத இன்னொரு கமெண்ட் அதே பதிவர்கிட்டருந்து வந்துருக்கு. ரைட்டு..

ஆஹ்க நம்ம ஒண்ணு போட்டா நமக்கு ஒண்ணு வரும். சூப்பர். இப்டியே போனா நம்ம போட்ட பதிவு நல்லாருக்கா இல்லையான்னே  நமக்கு சந்தேகம் வந்துடுமேன்னு நெனைச்சி பதிவு புடிச்சவங்க போட்டா போடட்டும் இல்லைன்னா  இருக்கட்டும்னு மிகவும் பிடித்த பதிவுகளுக்கோ இல்லை பதிவுகளுக்கு மாற்றுக்கருத்தோ , விவாதங்களோ இருந்தாலொழிய கமெண்ட் போடுறத நிறுத்திட்டேன்.  இப்புடியெல்லாம் ஓவரா பண்ணா உங்கூடல்லாம் யாருடா நட்பா இருப்பான்னு தானே யோசிக்கிறீங்க. உங்க மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ணிட்டேன். 

என்னுடைய பதிவுகள்ல கதைகள், காமெடிப்படங்கள், அனுபவங்கள்னு என்னதான் எழுதினாலும் சினிமா விமர்சனங்கள் மூலமே பெரும்பாலும் அறியப்படுகின்றேன்.அவற்றில் சில..

 

மேலும் நண்பர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட சில பதிவுகள் 





இந்த மாதிரி அடுத்தவங்களை உரண்டை இழுக்குற பதிவுகளையே எழுதிக்கிட்டு இருந்த என்னை கொஞ்சம் மாத்துனது நண்பர் விமல் தியாகராஜன். சமூகத்திற்கு சில விழிப்புணர்வு கருத்துக்களையும், பாசிடிவ் விஷயங்களையும் பகிர்ந்துகொள்வதற்காக அவரால் நடத்தப்படும் www.bepositivetamil.com என்னும் மாதாந்திர e-magazine ல எனக்கும் ஒரு பகுதி எழுத வாய்ப்பளித்திருக்கிறார். ஓவ்வொரு இதழிலும் இளைஞர் பகுதியில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்றேன். "இதெல்லாம் நாஞ்சொன்னா சிரிச்சிருவாய்ங்கப்பா" ன்னு சொல்லியும் என் மேல நம்பிக்கை வச்சி எழுதச் சொன்ன அவருக்கும் நன்றிகள். நேரமிருக்கும்போது நீங்களும் படிச்சி உங்க கருத்துக்கள சொல்லுங்க. 

சரி.... அடுத்த பதிவிலிருந்து பதிவர்கள் அறிமுகங்களைப் பார்க்கலாம்.  அடுத்து உங்களை சந்திக்கவிருப்பவர்கள் சரவெடிப் பதிவர்கள்!!! காத்திருங்கள்!!


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது