07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அ.பாண்டியன். Show all posts
Showing posts with label அ.பாண்டியன். Show all posts

Sunday, June 29, 2014

தொடர்கிறது தொடரும் நட்புகள்

வலை உறவுகளுக்கு வணக்கம்!!

அன்பு நண்பர்களுக்கு உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் வலையுலக மூத்த பதிவர் ஐயா சென்னைபித்தன் அவர்கள்
பதிவர் நாள் வாழ்த்து!

  உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் என்று அழகிய கருத்தை எடுத்தியம்பும் திருமதி பக்கங்கள் கோமதி அம்மா அவர்களின் பதிவு இறைவன் படைப்பில் அதிசயங்கள்

அன்பான குணம் கொண்டவர், குழந்தைகள் வளர்ப்பு பற்றி அதிகம் பகிர்ந்து கொள்வார். வல்லமை, மின்னூல் என சுறுசுறுப்பாக இருக்கும் ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்களின் பதிவு உங்களின் பார்வைக்கு எங்க ஊரு… திருக்கண்ணபுரம்

கவிதையில் கெட்டிக்காரர், அன்றாட வாழ்வின் விடயங்களைக் கவியாய் தந்து சிந்தனைகளைக் கிளறி விடுபவர், மனிதநேயம் கொண்ட பண்பாளர் திரு. கவியாழி கண்ணதாசன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன் உண்மை வாழ்வு...

தென்றல் சசிகலா சகோதரி அவர்களின் கவிதைகள் கிராம மணம் கமழும் வார்த்தைகளெல்லாம் எப்படி பிடிக்கிறார் என்பதே வியப்பாக இருக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு பதிவு

பத்திரிக்கைகளில் எழுதி வரும் வேலூர் உஷா அன்பரசு அவர்களின் எழுத்தில் சமுதாய மாற்றத்திற்கான வித்து அடங்கி இருக்கும். திறமைகளைப் பாராட்ட எப்பவும் தயங்க மாட்டார். அவரின் இளகிய குணமும் பாராட்டத்தக்கது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

என்னுயிர் ஓசை கேட்க வாருங்கள் என அழைக்கும் அன்பு சகோதரர் சீராளன் அவர்களின் கவிதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கருத்துரையிலும் கூட கவிதை மழையில் நனைய வைக்கும் ஆற்றல் கொண்டவர் பேசும் நினைவுகள்

சென்னையில் வசிக்கும் ஸ்கூல் பையன் அவர்கள் தனது பயணம் பற்றிய அனுபவத்தைக் குறிப்பிடும் அழகான பதிவு பயணம்!

முத்துச்சிதறல் எனும் வலைப்பக்கம் மூலம் தொடர்ந்து எழுதி வரும் சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் படைப்புகளிலிருந்து உங்கள் பார்வைக்காக ஒன்று அன்பிற்கேது எல்லை?

பல மேடைகளை அலங்கரித்து வரும் ஆரணி பேச்சாளர் திருமதி. பவித்ரா நந்தகுமார் அவர்களின் பேச்சுக்களை நீங்களும் காண வேண்டுமா

அன்மையில் வலைப்பக்கம் தொடங்கி எழுதி வரும் குப்பு சுந்தரம் அவர்களின் அவ்வையும் பாரதியும் பதிவு அவ்வையும் பாரதியும்!

எழுதுகிறேன் அதனால் நான் இருக்கிறேன் எனும் எண்ணம் கொண்ட காரிகன் அவர்களின் பதிவு இசை விரும்பிகள் XVII - சுவர்களைத் தாண்டி....

எம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன் எனும் வாசகத்தோடு எழுதி வரும் நண்பர் மகேந்திரன் அவர்களின் பதிவு

என்னை பற்றி சொல்றதுக்கு எதுவும் இல்லையென்றாலும் உலகமே என்னை திரும்பி பாக்குற மாதிரி கனவு காணும் உங்களில் ஒருவன் என கூறும் கத்திவாக்கம் NSK அவர்களின் பதிவு பயண அனுபவம்


மேலும் வாசிக்க...

தொடரும் நட்புகள்

வணக்கம் நண்பர்களே!

இந்த பதிவில் நான் அறிமுகம் செய்யும் நண்பர்கள் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்களாக இருக்கலாம். இது அறிமுகம் என்பதை விட என்னோடு நட்புகள் பாராட்டும் இவர்களுக்கு நான் காட்டும் நன்றி முகமாக இதை நான் பார்க்கிறேன்.

வணக்கம் உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பார்க்கவும்........ இப்படி ஒரு வசனம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் தளங்களில் சில நிமிடங்களில் பார்க்கலாம். தகவல் தெரிவிப்பவர் யார் என்று உங்களுக்கே தெரியும். ஆம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தான். அவரின் தளத்திலிருந்து ஒரு பதிவு
நம் குற்றங்களைத் திருத்த...

நான் குறிப்பிடும் ஐயா புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். குழந்தை மனசுக்கு சொந்தக்காரர் இவரின் நட்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோசம் எனக்கு. இவரின் எழுத்துக்கள் எதார்த்தங்களை எடுத்தியம்பும் ஆற்றல் கொண்டவைகள் அவர் யார்னு தெரிந்து கொள்ள வேண்டுமா! அவர் தாங்க நாம தமிழ் இளங்கோ ஐயா அவர்கள். அவரின் பதிவு அனைவருக்கும் பயன்படும் பயன்படும் இணையதளங்கள் – 1

காணாமல் போன கனவுகள் தளத்தில் சகோதரி ராஜீ அவர்கள் எழுதிய அவரின் அனுபவப் பகிர்வு மதுரை திருமலை நாயக்கர் மஹால்- மௌன சாட்சிகள்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறார்கள். சங்க இலக்கிய பாடல்களுக்கு அவர் எழுதும் எளிய மாற்றுப்பாடல் மிக அருமை அவரின் பதிவில் ஒன்று
நம்மையும் அறியான் பிறரையும் அறியான்

தினம் ஒரு நகைச்சுவை, தினசிரி கவிதை என கலக்கி வரும் பகவான் ஜி அவர்கள் சிந்தனைகள் மற்றும் சுறுசுறுப்பு உண்மையில் வியக்க வைக்கிறது
இந்த மறதி வரக் காரணம் ,மனைவியிடம் 'கடி 'வாங்கியதாலா ?

சிட்டுக்குருவியின் சிறுகதை எதார்த்தத்தை அள்ளித்தெரிக்கும் ஆற்றல் கொண்டது. அதன் சிறப்பான சிறுகதைகளில் சிக்கிக் கொண்டவர்களில் நானும் ஒருவன் உளுந்த வடை,,,,,,,,,

உலகில் நடப்பவை என்னுடைய பார்வையில் டிபி.ஆர். ஜோசப் அவர்களின் எழுத்துகளின் மயங்கிய மனங்களில் என் மனமும் முதல்வரிசையில் நிற்கும்
நினைவுகள் சுகமானவை!

தனிமரம் தலைப்பிலும் வித்தியாசம் எண்ணங்களிலும் வித்தியாசம் காட்டும் நல்ல எழுத்தாளரின் ஒரு பதிவு இங்கு என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-நன்றிகள்

காலை எழுந்தவுடன் முதலில் படிக்கும் பதிவு ராஜாராஜேஸ்வரி அம்மாவுடையது தான் என்று பதிவுலக சகோதரிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ஆன்மிகத்தில் அழகிய நாட்டம் கொண்ட அம்மாவின் அத்தனை பதிவுகளும் அசர வைக்கும் அதில் ஒன்று
சயனத் திருக்கோல அனுமன்

சகோதரி  அருணா செல்வம் அவர்கள் கதம்ப வலை எனும் பெயர் கொண்ட வலைப்பக்கத்தில் எழுதி வருகிறார். அவர் வைத்த பெயர் போலவே பூக்கங்களின் கதம்பங்களே அவரது தளத்தில் பூக்கிறது
வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்குழந்தை உள்ள பெற்றோரா? படியுங்கள்.

நெஞ்சை வருடிச் செல்லும் கவிதைகள் அடங்கிய அம்பாளடியாள் தளம் அனைவரும் பின் தொடர வேண்டிய வலைப்பக்கம் அதிலிருந்து ஒரு பதிவு
சுவாசிக்கும் நேரத்திலும் இதைத் தான் மனம் யாசிக்கிறது

நண்டு நொரண்டு எனும் வழக்கறிஞர் ராஜசேகரன் அவர்களின் தளத்தில் அழகான விடயங்கள் ஊர்ந்து வலம் வருகின்றன. நாமும் சென்று பார்ப்போம்
ஜாதி ,மதம், தீண்டாமை X சமச்சீர்கல்வி .

கில்லர்ஜி (பேர கேட்டவுடனே சும்மா அதிருதில்ல... ) எனும் வலைத்தளத்தில் இடப்படும் பதிவுகள் புதிய சிந்தனைகளோடு சிரிக்க வைக்கும் பதிவுகளும் நம்மை ஈர்க்கும் அப்படியொரு பதிவு களத்தூர், கண்ணம்மா

எண்ணங்களை எழுத்தோவியாகமாக தரும் தளிர் சுரேஷ் அவர்கள் ஆன்மிகப்பதிவுகளோடு பல்சுவைப்பதிவுகளையும் தந்து கொண்டிருக்கிறார். அவரின் எண்ணங்கள் எல்லாம் உயர்ந்தவையாக இருக்கும். பின்னூட்டம் இடுவதில் புயல் இவர். இவரின் பதிவில் ஒன்று “இரண்டு ரூபாய்!” “இரண்டு ரூபாய்!”

சாமானியன் கிறுக்கல் கூட சமூகச் சிந்தனைகள் கொண்டதாக இருக்குமா! ஆம் நண்பர்களே அவரின் எழுத்துகள் சமூக நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கும் பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் !

சகோதரி அபயா அருணா நினைவுகள் எனும் தனது தளத்தில் கடவுள் நம்பிக்கை பற்றி கூறியுள்ளார். வாங்களேன் படித்து வருவோம்
கடவுள் நம்பிக்கை

ஜே.பாண்டியன் அவர்களின் பதிவுகளில் ஒரு இளமை துள்ளுவதைக் காணமுடியும். நாளைய உலகின் மாற்றம் இப்படியும் இருக்கலாம் என்பதைத் தெரிவிக்கும் கவிவரிகள் இது நிலவில் நீர்

கடல் கடந்து வளரும் தமிழில் விடுபட்ட ஒரு பதிவர்
டென்மார்க்கில் வாழ்ந்து வரும் கோவை கவி அவர்கள் கனவு தேசம் எனும் பதிவில் எப்படி அமைய வேண்டும் எனும் தன் எண்ணங்களைக் கவியாக்கி தந்திருக்கிறார் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு
322. கனவு தேசம்.



மேலும் வாசிக்க...

Saturday, June 28, 2014

வலையுலகில் ஆசிரியர்கள்...

வலையுலகச் சொந்தங்களுக்கு வணக்கம்!

ஆசிரியர் தொழிலுக்கு நான் போக வேண்டும் என்று பத்தாம் வகுப்பு முடித்ததும் முடிவெடுத்தேன். அதற்கும் ஒரு ஆசிரியர் தான் காரணம்.அதன் விளைவே இன்று நான் அரசுப்பள்ளியில் ஆசிரியர். என்னைப் போலவே வலைப்பக்கத்தில் எழுதி வரும் ஆசிரியர்கள் நிரம்ப உள்ளனர். அவர்களில் எனக்கு தெரிந்த பதிவர்களை அறிமுகம் செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

ஆதவனுக்கு அறிமுகம் தேவையா! இது அவருக்கான அறிமுகம் இல்லை. ஏனெனில் இவர் அனைவரும் அறிந்த முகம். இருப்பினும் நான் இங்கு அறிமுகம் செய்வது என் நன்றி முகம் காட்டுவதற்கு. மூங்கில் காற்றின் வழியே இசையென எழுந்து பல நண்பர்களின் மனம் கவர்ந்த ஐயா முரளிதரன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதைப் பெருமையாக கருதுகிறேன்

ஜே.சி.ஐயின் மண்டலப் பயிற்சியாளர்களில் ஒருவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களை இலவசமாக வழங்கிவரும் நிகில் நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவர். சினிமா விமர்சனம் எழுதுவதில் தனி ஸ்டைல். வாசிப்பு மாற்றத்திற்கான வடிகால் என்பதை நம்பும், பள்ளி மாணவர்கள் பள்ளிப்புத்தகம் தாண்டி படிக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்ட பன்முகச் சிந்தனையாளர் திரு. கஸ்தூரிரெங்கன் அவர்களின் பதிவு

மகிழ்நிறை மிகவும் அழகான பெயர் இத்தளத்தில் எழுதுபவர் என் உடன்பிறவா அக்கா மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள். வயதில் இளையவராக இருந்தாலும் எழுத்துக்களில் நல்ல கூர்மை இருக்கும். கவிதைகளில் ஆழம் இருக்கும். அழகான இரு பெண்குழந்தைகளுக்கு தாயான இவரின் கவிதை கண்டிப்பாக உங்களுக்கு இனிக்கும்

கரந்தை தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் புதிய செய்திகளுடன் சிறந்த மனிதர்களை அறிமுகம் செய்யும் சிறந்த மனிதர் இவர். இவரின் எழுத்துகளை நான் கண் கொட்டாமல் பார்ப்பது உண்டு அப்படிப்பட்ட ஒரு பதிவு கோரா

ஓய்வு பெற்ற ஆசிரியர் தேனியை விட சுறுசுறுப்பானவர். பல மக்கள்நல பணிகளைச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருப்பவர். இசையில் சிறந்து விளங்கும் இவர் எண்ணற்ற கிராமிய பாடல்களைக் குறுந்தகதிட்டு சிறப்பு சேர்க்கும் பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் புதுகை மணிமன்றம் தளத்தின் ஒரு பதிவு 

பாலக்காட்டில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் துளசிதரன் மற்றும் அவரது தோழி கீதா அவர்களும் தில்லைக்காத்து கிரோனிக்கல் எனும் தளத்தில் எழுதி வருகிறார். அன்பான குணம் கொண்டவர்கள் இவர்களின் பதிவு

வேர்களைத்தேடி எனும் வலைப்பக்கத்தில் எழுதிவருமான , மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என முழங்கும் இளையவர், தமிழறிஞர்களின் முக்கிய தினங்களை மறவாமல் நினைவு கூறும் கல்லூரி பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களின் பதிவு

தமிழாசிரியர், தேனியின் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர், கனியும் மனம் கொண்டவர் கனியின் சுவை போலும் பேச்சுக்கொண்டவர். சிறந்த சிறுகதை எழுத்தாளர். இவ்வளவு சிறப்பு கொண்ட திரு.குருநாதசுந்தர் அவர்களின் பதிவு 

திண்டுக்கல் மாவட்டம் லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வரும் திரு.கோபி அவர்கள் வயதில் இளையவர் ஆனாலும் இலக்கண, இலக்கிய புலமை வாய்ந்தவர். அவரின் பதிவுகளின் ஒன்று கனவு இலக்கண நூல் அறிவோம்!

வலைப்பக்கம் வேலுநாச்சியர் ஆனாலும் வலைப்பக்கம் உள்ளே தென்றல் அழகான கவிதைகளை நாளும் வடிக்கும் ஆசிரியர் இவரின் எண்ணங்கள் சமூக நோக்கம் கொண்ட ஆசிரியர் கவிஞர் கீதா அவர்களின் பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் கவிஞர் சுவாதி அவர்களின் கவிதைத்துளிகளில் நீங்களும் நனைந்து வரலாம் வாருங்கள் பறவையாக ஆசை....

வலசைப்போகும் கவிக்குயில் புதுக்கோட்டை அரசு பள்ளியில் தமிழ்க் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குயிலின் பெயர் துரைக்குமரன் இவரது எழுத்துகள் செறிந்த எண்ணங்களைக் கொண்டது

இப்படிக்கு இ.ஆரா என்றும் இனியவன் எனும் பெயரில் ஆசிரியர் கிங் ராஜ் அவர்களின் சிந்தனைகள் புதுமையானதாகவும் நடைமுறை வாழ்வோடு பொருந்திப் போவதுமாக இருக்கும் அவரின் பதிவு ஓ...பேய் கூட்டங்களே......


குறிப்பு
நான் மேற்குறிப்பிட்ட நண்பர்களில் ஆங்கிலம், கணிதம் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தமிழில் எப்படி இப்படியெல்லாம் கலக்குகிறார்கள் என்று எண்ணி பல நேரம் வியப்பில் ஆழ்ந்து போவதுண்டு. இவர்களுக்கு நம் அனைவரின் சார்பாக அன்பு கலந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம். உங்கள் எழுத்துக்களால் தான் நாளைய விடியல் இருக்கிறது. நன்றி...




மேலும் வாசிக்க...

Friday, June 27, 2014

கடல் கடந்தும் வளரும் தமிழ்! 2

வணக்கம் நண்பர்களே!
நேற்றைய பதிவின் தொடக்கம் தான் இது. கடல்கடந்து வாழும் தமிழர்கள் தமிழின் வளர்ச்சிக்கு செய்திடும் பங்கினை எண்ணி எனக்கு எப்பவும் அவர்கள் மீது மிகுந்த ஒரு மரியாதை உண்டு. அதன் தொடர்ச்சியாக இன்று ஆண்குயில்கள்!!

என்றுமுள செந்தமிழன் கம்பன் பெயரில் இயங்கும் கம்பன் கழகம் பாரதிதாசன் அவர்களின் வெண்பாவின் வகைகள் பற்றிய பதிவு உதாரணக்கவிதையோடு
மடக்கு அணி வெண்பா! - பகுதி 2

யாழ்பாவாணன் ஐயா அவர்கள் யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என்று அழைத்து தமிழில் கவிதைகள் எப்படி எழுத வேண்டும். அன்றாடம் செயல்களைக் கூட எப்படி கவியாக்க முடியும் என்று எல்லாம் வழிகாட்டுகிறார்
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?

அதிரடியான அரசியல் பதிவுகள், அடிதடினா பூரிக்கட்டை, கருத்துரை இடுவதில் தனி ஸ்டைல் இப்படி அனைத்திலும் தனித்து இயங்கும் அவர்கள் உண்மைகள் வலைப்பக்க மதுரைத்தமிழன் சொல்லாற்றல் அனைவரையும் சிந்திக்கவும் பல நேரம் சிரிக்கவும் வைக்கும்
அவர்கள் உண்மைகள்

பணியின் காரணமாக அயல்நாட்டில் இருந்தாலும் வலையுலகில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி என நடத்திக் கலக்கி வரும் இளைஞர் சிறகடிக்கும் நினைவுகளில் நீந்தி வருகிறார் என்ன தான் சொல்கிறார்னு பார்த்து வருவோமா!
சிறகடிக்கும் நினைவலைகள்-6

தஞ்சையில் பிறந்து குவைத் பணி செய்து வரும் துரை செல்வராஜ் ஐயா அவர்களின் ஆன்மிகப்பதிவுகள் அசர வைக்கும். குழந்தை மனம் கொண்ட ஒரு நல்லவரின் எண்ணங்களில் கண்ணதாசனின் நினைவலைகள்
தஞ்சையம்பதி

படித்தது ஆங்கிலவழிக்கல்வி, பணி புரிவது ஆஸ்திரேலியா. ஆனாலும் தமிழில் கலக்கி வரும் பதிவர், குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுக் கொடுக்கும் ஆசான் உண்மையானவன் சொக்கன் சுப்பிரமணியன் அவர்களின் தமிழும் நானும் பதிவு
தமிழும் நானும்

மதுரைத்தமிழன் கொழுத்திப் போட்ட பத்து கேள்விகளுக்கு திரு.நாஞ்சில் மனோ அவர்களின் பதில்கள்
பத்து கேள்வியும் ஈசியா இருக்கே பரிசில் கிடைக்குமா ?

மனசு பேசுகிறது சே.குமார் அனைத்து விடயங்களையும் அலசிப்பார்ப்பவர் அப்படிப்பட்டவரின் மனதை நெகிழ வைக்கும் பதிவு
மன்னித்துவிடு பாலச்சந்திரன்

சீனியின் கவிதை இவரின் பெயரைப் போலவே இனிக்கும். வெளிநாட்டு வாழ்க்கைப் பற்றிக் கூறும் இவரது குட்டிக்கவிதை எதார்த்தம்
வினோதமான சிறை!








மேலும் வாசிக்க...

Thursday, June 26, 2014

கடல் கடந்தும் வளரும் தமிழ்!


வணக்கம் நண்பர்களே!
பணி நிமிர்த்தமாகவும், மணம் முடித்தும் தன் தாய் மண்ணை விட்டு, சொந்தங்களைப் பிரிந்து கடல் கடந்து வாழ்ந்தும் தமிழினை இறுகப் பற்றிக் கொண்டு, தமிழைச் சுவாசித்து வாழும் வெளிநாடுவாழ் தமிழர்களின் பதிவுகளை இன்று அறிமுகப்படுத்துவதில் அளவில்லா மகிழ்ச்சி.

இவர்கள் வசந்தத்தை களித்திட ஓடிவரும் வேடந்தாங்கல் பறவைகள் அல்ல. வாழுதல் வேண்டி பயணித்த தமிழ்க்குயில்கள். இவர்களின் குரல் தமிழ்பேசும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் வரை தமிழ் வளரும்.

தாய்ப்பாசம் பற்றியே பேசி வரும் பெரும்பாலானோர் மத்தியில் தந்தைக்கும் ஒரு கவிதை தந்து தந்தையின் அன்பினை தம் காவிய எழுத்துகளில் கவி பாடியிருக்கிறார் திருமிகு. இனியா அவர்கள். தனது பெயரைப் போலவே பழகுவதில் கருத்துரை வழங்குவதில் அவர் இனியவர் தான். தன் கவி வரிகளில் படிப்பவர்களின் மனங்களை ஈர்ப்பதிலும் கெட்டிக்காரர் தான்.
அவரது பதிவு: தந்தையை மிஞ்சிய தெய்வமும் இல்லை

அன்னையின் பிரிவால் துயரின் உச்சிக்கே சென்று தோழமைகளின் அழைப்பால் மீண்டும் இணையவானில் வட்டமடிக்க வந்திருக்கும் இளையநிலா என்றும் இளையநிலா தான். அவரின் அன்னையின் பிரிந்த வலிகளைத் தாங்கிய குறும்பா உங்கள் பார்வைக்கும்
அன்னைக்குச் சமர்ப்பணம்!..

படைப்பாற்றல், தோட்டக்கலை, பாடும் திறன் என பன்முகம் கொண்ட ஒரு பதிவர் ஜெர்மனியில் வசித்து வரும் ப்ரியசகி அவர்களின் எழுத்துகளில் ஒரு எதார்த்தமும் குழந்தைத் தனமும் துள்ளி எழும்புவதை நான் கண்டு உணர்ந்திருக்கிறேன். அவரின் தோட்டத்திற்கு நீங்கள் சென்று வர ஆசையா
என் வீட்டுத்தோட்டத்தில்....

மியாவ் மியாவ் என்னஙக பார்க்கிறீங்க! மின்னல் மியாவ் அதிரா அவர்களைத் தான் அழைக்கிறேன் பழகலாம் வாங்க வாங்கனு சொல்லிட்டு எங்க போயிட்டாங்க வாங்க நாம அவங்களை அவங்க சமையல் அறையில் போய் தேடுவோம்
பழகலாம் வாங்க!!.. வாங்க!!!:)

சென்னைத்தமிழில் பேசினால் நமக்கே கிறுகிறுனுகீதுபா என்று சொல்லும் அளவுக்கு நமக்கு இருக்குது ஆஸ்திரேலியா ஆங்கிலத்துடன் ஒப்பிட்டால் எப்படி இருக்கும் இதோ சகோதரி கீதமஞ்சரி அவர்கள் அழைத்துச் செல்கிறார் வாருங்களேன் சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3

தாய் தன் குழந்தையைக் கொஞ்சும் அழகிற்கு ஏது இணை! அவர்களின் அன்பினில் குழந்தைகள் அடங்கிக்கிடக்கும் தொட்டிலில் அப்படியொரு கவிதையை நம் வலையுலக சகோதரி திருமிகு மஞ்சுபாஷினி அவர்கள் தந்திருக்கிறார் படிக்கலாம் வாங்க
அழகே என் அற்புதமே....

ரெசிப்பி, தோட்டமென எப்போழுதும் சுறுசுறுப்போடு இயங்கும் மற்றொரு பெண் பதிவர் திருமிகு ஏஞ்சலின் அவர்களின் பன்முகத்திறனும் பாராட்டதலுக்குரியது அவரின் தோட்டமும் அருகாமையில் தான் நாமும் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா!
காகிதப்பூக்கள்

தன்னை ஈன்றெடுத்த தாய்க்கும் தான் ஈன்றெடுத்த இளைய மகனுக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் அழகிய கவிதை எழுதியவர் யாரென்றால் கிச்சன், கைவினைப் பொருட்கள் கிவியின் கூவல்கள் என்று எப்பவும் படு பிசியாக இருப்பவர் அவர் தான் சகோதரி இமா அவர்கள். அவரின் கவிதை
வாழ்த்தொன்று!

வெல்கம் டூ மகிஸ் பேஸ் என்று அன்புக்குரலில் அழைக்கும் சகோதரி அவர்களின் தோட்டத்தில் வளர்ந்துள்ள ரோஜா மலர்களைப் பார்க்க வேண்டுமென எனக்கு ஆவலாக இருக்கிறதே உங்களுக்கு!
ரோஜா...ரோஜா!

வயதும் அனுபவமும் தரும் பாடங்கள் நிறைய நிறைய. அப்படியொரு வயது தந்த தானம் பற்றித் தன் கவி வரிகளில் சொல்கிறார் திருமதி. உமையாள் காயத்ரி அவர்கள். அவருக்கு வயது தந்த தானம் தான் என்னவாக இருக்கும்
வயது தந்த தானம் - கவிதை

தன் எண்ணச் சிக்கலை எளிமையாய் தன் மன ஆறுதலுக்காகக் கோர்த்திருக்கும் வானம் வெளுத்த பின்னும் ஹேமா அவர்களின் எழுத்துகள் கரையாத ஓவியங்கள் தான்
கரையா வண்ணம்

இன்று கடல் கடந்து தமிழ்ப்பாடும்  பெண்குயில்களின் குரல்களை மட்டும் வலைச்சரத்தில் ஒலிக்க விட்டுருக்கிறேன். நாளை ஆண்குயில்கள். சந்திப்போம். நன்றி..








மேலும் வாசிக்க...

சூரியனுக்கு டார்ச் அடிச்சு பார்த்திடலாமா!

வணக்கம் நண்பர்களே! எனது திருமண வேலையின் காரணமாக வலைப்பக்கம் வருவது தாமதமாகி விடுகிறது. தாமதத்திற்கு முதலில் மன்னிக்கவும்..

சூரியனுக்கு டார்ச் லைட் தேவையா!
மலர்களுக்கு வாசனை திரவியம் தெளிக்க வேண்டுமா!
கார்முகிலுக்கு கருவண்ணம் பூசிப் பார்ப்போமா!!
நிலவுக்கு ஒப்பனைகள் செய்வோமா!!
மழைத்துளியை குளிப்பாட்டிப் பார்ப்போமா!
கம்பனுக்கு தமிழ்க் கற்று கொடுப்போமா!

என்ன்ன்ங்க நான் என்ன சொல்ல வருகிறேனு புரியல தானே!! இதோ நான் அறிமுகம் செய்யும் பதிவுகளை நீங்கள் படிக்கும் போது உங்களுக்கே புரியும்.

பதிவர்கள் மூத்தவர். நமக்கெல்லாம் தமிழ்த் தாத்தா. 70 வயதையும் கடந்த இளைஞர். பாடும் ஆற்றலையும் பாட்டுக்கு மெட்டு அமைக்கும் திறமையும் கொண்ட ஐயா சூரி சுப்பிரமணியம் சிவா ஆமாங்க நாம சுப்பு தாத்தா எழுதின ஒரு பதிவுல பதிவுலக நண்பர்களின் பதிவுகளையெல்லாம் குறிப்பிட்டு அழகான நகைச்சுவை ததும்ப பதிந்துள்ளார். நீங்களும் கொஞ்சம் படிங்களேன்
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் !!

இவரைப் போலவே வயதில் மூத்தவராக இருந்தாலும் கருத்துகளின் என்றும் இளைமையாகத் திகழும் இன்னொரு மதிப்பிற்குரிய ஐயா ஜி.எம்.பாலசுப்பிரமணியன் அவர்கள் கம்பராமாயணம் ஆறு காதைகளையும் ஒரு கவிதையில் சொல்லி முடித்தவர். அப்படிப்பட்ட அவரிடமிருந்து வந்துள்ள ஒரு படைப்பு படித்து ரசித்தேன். நீங்கள் ரசிக்க
எனக்கொரு GIRL FRIEND வேண்டாம்....!

வலைச்சர நிர்வாகி சீனா ஐயா அவர்கள் பற்றி அனைவரும் நன்கறிவீர்கள். ஆனால் அவரின் முதல் கணினி அனுபவம் பற்றி அறிந்திருக்கிறீர்களா?அவரே தனது முதல் கணினி அனுபவம் பற்றி எழுதி அசை போடுகிறார்  நீங்களும் படித்து அசை போடுங்களேன்
எனது முதல் கணினி அனுபவம் -

நல்லவர்கள் அதிகாரிகளாய் அமைவது மிகவும் அரிது. அவர் கல்வியாளராக புதுமைச் சிந்தனையாளராக அமைவது அதை விட அரிது. அதிலும் பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மண்ணில் புதைந்த போன வரலாற்று பொக்கிசங்களை உலகிற்கு அறிமுகம் செய்யும் அதிகாரி கிடைப்பது அதனினும் அரிது. அவர் தான் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு. அருள்முருகன் ஐயா அவர்கள். அவர் மண்ணில் புதைந்து கிடைந்த மைல்கள் துணைக் கொண்டு கண்டறிந்த ராசராசன் பயணம் செய்த பெருவழியை நமக்கெல்லாம் அறிமுகம் செய்யும் அழகான பதிவு
நட்ட கல்லும் பேசுமே…

சிறந்த சிந்தனையாளர்,கல்வியாளர், பட்டிமன்ற பேச்சாளர், தமிழாசிரியர், ஆறாம் திணையாகிய கணினித்தமிழை அனைவருக்கும் வழங்கிடும் பொருட்டு பயிற்சிப் பட்டறைகளை முன்னின்று நடத்துபவர், வளம்மிக்க நாளைய உலகம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்பதை நன்குணர்ந்து அவர்களுக்கு தோள்கொடுக்கும் தோழர். அவர் தான் கவிஞர் திரு. நா.முத்துநிலவன் அவர்கள் வளரும் கவிதை எனும் தனது தளத்தில் மகளுக்கு எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கும்
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!

தொடர்ந்து தனது பதிவுகளில் காஞ்சி பெரியவரின் அற்புதங்களைக் கூறி வருபவரும் சிறுகதைப் போட்டி நடத்தி வலையுலக சிறுகதை தந்தையாக திகழுபவருமான திரு. வை.கோ ஐயா அவர்கள் எழுதிய சாத்திரம் சொல்லும் ஸ்நான வகைகள் - ஐந்து.
ஸ்நான வகைகள் - ஐந்து.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நான்மாடக்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் ஒரு சிந்தனையாளர். மாற்றி யோசிப்பதில் கெட்டிக்காரர். கவிதை, கட்டுரைப் போட்டிகளுக்கு தன் முழு ஆதரவையும் தந்து முன்னின்று நடத்திக் கொடுத்து மகிழ்பவர் ரமணி ஐயா அவர்கள் எழுதிய ஒரு படைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டல்
தினம் நன்மை தடையின்றித் தொடர

பல புத்தகங்கள் படைத்து தன் எண்ணங்களுக்கு தட்டச்சால் உயிர்கொடுத்து வலைப்பக்கத்தில் உலாவ விடும் கவிஞர் இவர். அடிக்கடி விமானம் மூலம் வெளிநாடு என்று பறந்தாலும் கூடவே மடிக்கணினியுடன் பயணம் செய்து தமிழ்க்காற்றைச் சுவாசிக்கத் தயங்குவதில்லை அவர் கவிஞர் இராய செல்லப்பா அவர்கள் தான். அவரின் நல்ல எண்ணங்களை அறிந்து கொள்ள உதவும் ஒரு படைப்பு
பத்து கேள்விகள் - பத்துக்கும் பதில்கள்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான் நம் வாழ்க்கை. இதற்கிடையில் நாம் வாழ எடுக்கும் சிரத்தைகள் எத்தனை எத்தனை? இது பற்றிய புலவர் திரு.சா.ராமாநுசம் அவர்கள் எழுதிய கவிதை அனைவருக்கும் வாழ்க்கைப் பாடம்
பிறப்பு வாழ்வில் ஒரு முறை தான் மேலும் இறப்பு வாழ்வில் ஒரு முறை தான்

பௌத்த சுவட்டைத் தேடித் தேடி தன் வாழ்நாளின் மணித்துளிகளை எல்லாம் செலவிட்டு அறிய கண்டுபிடிப்புகளை அரசாங்கத்திற்கு அறிமுகம் செய்து வருபவருமான, தான் படித்த நூல்களை நம்மோடு அன்போடு பகிர்ந்து கொள்பவருமான முனைவர் பா.ஜம்புலிங்கள் அவர்கள் எழுதிய வரலாற்று கண்டுபிடிப்புகளில் செதுக்க வேண்டிய ஒரு பதிவு
பௌத்த சுவட்டைத் தேடி : பெரண்டாக்கோட்டை

இப்படிப்பட்ட தமிழறிஞர்களை இந்த சிறியவன் அறிமுகம் செய்தது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இவர்களை நான் அறிமுகம் செய்து தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா! என்று நீங்கள் கூறும் வாசகம் என் செவிகளையும் எட்டுகிறது.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம். பணிச்சுமையே என் முன் வந்து பயமுறுத்துகிறது. இருப்பினும் விடுவதாக இல்லை. தொடர்ந்து சந்திப்போம். நன்றி





மேலும் வாசிக்க...

Tuesday, June 24, 2014

புதிய தடங்கள்


அறிமுகப் பதிவர்கள் வலைப்பக்கத்திற்கு வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள் ஏற்கனவே தமிழ்க்கரம் பிடித்து நடை பழகி இன்று வேகமாக ஓடக்கூடியவர்கள் இவர்களின் ஓட்டத்திற்கு என்னால் ஈடுகொடுத்து ஓடமுடியவில்லை என்ற ஏக்கம் கூட எனக்கு உண்டு. இவர்களின் புதிய தடத்தால் வலைப்பக்க வசந்த காலங்கள் தொடரும்..

திரு.மகாசுந்தர் அவர்கள் 2012 ஆம் ஆண்டே வலைப்பக்கம் ஆரம்பித்திருந்தாலும்  புதுக்கோட்டை கணினித் தமிழ்ப் பயிலரங்கத்திற்கு பிறகு தளத்தை வளப்படுத்தி கொண்டு எழுத தொடங்கியுள்ளார். அவரின் எழுத்துப் புலமைக்கும் ஆராய்ச்சி நோக்கிற்கும் சான்றாக அமைந்த இந்த கட்டுரை அறிமுகம் செய்வதில் அளவில்லா மகிழ்ச்சி.
உடைந்த சிலம்பும் உடையாத சிலம்புகளும்..

ஈழத்தில் நடந்த கொடுமைகளைச் சாடும், விடியலுக்கான எதிர்பார்ப்பும் கொண்ட சிறப்பான கவிதையை தந்திருக்கும் நண்பர், கருத்துரையில் கூட இவரின் எழுத்துச் செறிவினைக் காணமுடியும். இவர் யார் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது தானே நண்பர்களே!  இதோ அவரது கவிதை
தமிழ் வருவாள்!

முனைவர் பேராசிரியர் பா.மதிவானன் அவர்கள் இனிது இனிது வலைப்பக்கம் தொடங்கி வலைப்பக்கத்தில் எழுதவும் தொடங்கியுள்ளார். பலரை ஆய்வாளர்களாக மாற்றியுள்ள ஐயா அவர்களின் ஆராய்ச்சி நோக்கிற்கு இந்த பதிவே சான்று
அம்சொல் நுண் தேர்ச்சிப் புலமை நடை

எல்லாமே டூப்பு எனும் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி இருக்கும் திரு.ஸ்டாலின் சரவணன்  எச்சில் எனும் தலைப்பில் வாழ்வின் அனுபவங்களை எதார்த்தமாக சொல்லியிருக்கும் கவிதை
எச்சில்

தலைமையாசிரியர் திருமதி. மாலதி அவர்கள் அவரது பெயரிலேயே வலைப்பக்கம் தொடங்கி தனது எண்ணங்களை எழுத்துகளாக்கி தந்து கொண்டிருக்கிறார். உயிர் எழுத்துகளில் ஓரெழுத்துகளை பட்டியலிட்டு பதிவாக தந்திருக்கிறார் உயிரின் ”“ஓர்”“ எழுத்து

சமூகத்தில் திருமணங்கள் என்ற பெயரில் நடக்கும் ஆடம்பர செலவுகள், அப்படிப்பட்ட செலவுகளை தன் செல்வாக்கை நிலைநாட்ட சம்பந்தப்பட்டவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் செல்வி. ரேவதி அவர்களின் பதிவு
இது அவசியமா?

லட்சிய வெறி கொண்டவராக நீங்கள் உங்கள் லட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.ஜெயலெட்சுமி அவர்கள் ஒரு கவிதைப் பகிர்வின் மூலம் சொல்கிறார். லட்சிய வார்த்தைகள் கூறியவர் பிரிவையும் தாங்கிய பதிவு.
தூங்காமல் இருக்கச்சொன்னவர் ...தூங்கிப்போன நாள்....

தமிழின் நிலை கண்டு ஒரு கல்லூரி மாணவனின் மனக்குமுறல்கள் தமிழ் இனி மெல்ல சாகும் எனும் தலைப்பில் தனக்கான ஆதங்கத்தைச் சொல்லியிருக்கும் பதிவு. புதுகை சீலன் வலைப்பக்கத்திலிருந்து
தமிழ் மெல்ல இனி சாகும்......

குறிப்பு
நான் குறிப்பிட்ட அறிமுகப்பதிவர்களின் பதிவுகள் குறைவு தான் ஆனாலும் அவர்களின் எழுத்துகள் செறிவும் செழுமையும் கொண்டது. ஆனாலும் ஒரு சிலருக்கு எனது வேண்டுகோள் தொடர்ந்து எழுதுங்கள் தங்கள் எண்ணங்கள் எழுத்துகளாக இணையவானில் வலம் வரட்டும். நன்றி.











மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது