07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 1, 2011

பொடியன்களா மாறிடுவோமா.?


நேற்று இரவே அவசர வேலையாக வெளியூர் சென்றதால் காலையில் பதிவிட முடியவில்லை.. மன்னிக்கவும்..

சிறுவர்கள்.! அதாங்க என்னை போன்றவர்கள். அவர்களை பற்றிய பதிவு தான் இது அப்படினு சொல்லமாட்டான். அவங்க சம்பந்தமான பதிவு தான் இது. அப்படினும் சொல்லமாட்டன். அவங்க இருக்குற பதிவு தான் இது. அப்படியும் சொல்லமாட்டன். இத எப்படி தான் சொல்லுறதுனு தெரியலங்க. நீங்களே படிச்சு புரிஞ்சிகிடுங்க.

எனக்கு மிகவும் பிடித்த பதிவர்களில் ஒருவரான நம் நாய்க்குட்டி மனசு தாலாட்டுக்கு வரியோ, இல்ல வார்த்தைகளோ தேவையில்ல ராகம் மட்டுமே போதும்னு சொல்லி தான் ஒரு தாலாட்டு எழுதியிருக்காங்க. ஒருமாதிரி நல்லாவே இருக்கு. இங்கிட்டு போய் கொஞ்சம் பாருங்களேன்.

பொடியன்களா இருக்கும் போது எக்கசக்க பாடல் பாடியிருப்போம். எல்லாம் இப்போ நமக்கு ஞாபகம் இருக்கிறது இல்ல. ஆனா அதை கொஞ்சம் ஞாபகபடுத்தி சுண்டிவிட இங்க ஒருத்தர் கோவை கவியாக நமக்கு வழி செய்கிறார். சிறுவர் பாடல்களை போட்டு தாக்குகிறார்.

இவரும் சிறுவர் பாடல்கள் தான் எழுதுகிறார். ஆனால் அமுது தமிழ் என்று தமிழை பற்றிய சிறுவர் பாடல். கொஞ்சமா இருந்தாலும் நச்சுனு தான் இருக்கு. சும்மா போய் படிச்சிட்டு தான் வாங்களேன்.

இன்னும் இப்போ பலருக்கு ஞாபகம் இருக்க கூடிய சின்ன வயசு பாடல்னா அது ''டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்'' என்னும் பாடல் தான். அந்த பாடலை பற்றியே ஒரு சில குறிப்புகள் தருகிறார்.

முன்னரே நம்ம நாய்குட்டி மனசு அவர்களின் தாலாட்டை படிச்சிருப்பீங்க. இப்ப இன்னொரு தாலாட்டு நம்ம பதிவர் மகேந்திரன் எழுதுகிறார். இது ஒரு இயல்பான தாலாட்டு. ஒரு விதமான காதில் ஒலிப்பது போலே இருக்கு.

இப்ப நான் சொல்ல போறவர் இங்க ஒரு பாச மழையை பொழியிறாரு. இந்த தாலாட்டை அவர் எழுதுறதுக்கு சில நாட்கள் முன்னர் தான் அவருக்கு குழந்தை பிறந்திருந்தது. தாலாட்டை படிங்க. அப்படியே கூடிய விரைவில் முதல் பிறந்தநாள் கொண்டாடபோகும் அவர் குழந்தை அபி.,க்கு ஒரு வாழ்த்தை போடுங்க.

சின்ன குழந்தைகளுக்கு அவருக்கு பிடித்ததான கதைகளை பற்றியும், எழுத்தாளரை பற்றியும் இங்கே பதிவர் RV விவரிக்கிறார். இங்கு போய் பார்த்து படித்து தெரிஞ்சிக்கோங்க. பலர் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கத்தை விட்டு இருப்பீங்க. இனிமேலாவது கதை சொல்லுங்கப்பா.

பிறகு சிறுவர்களுக்கு பிடிக்கும் குறும்படங்கள் பற்றிய ஒரு பதிவு. பதிவர் உதயசந்திரன் இரண்டு அனிமேட்டட் குறும்படங்களை பகிர்கிறார். மேலும் சில பதிவுகளில் இது போல படங்களை பகிர்ந்திருக்கிறார். இப்ப என்ன செய்றீங்கன்னா நேரா போய் அதெல்லாம் பாக்குறீங்க.

உலக சிறுவர் நூல் நாள். என்னது இதுக்கெல்லாம் நாளா.? அட கீழ விழுந்தா கொண்டாடுறோம், எழுந்து நின்னா கொண்டாடுறோம் இதுக்கு கொண்டாட கூடாதா. இந்த நாளை பற்றி ஒரு சிறு குறிப்பு தருகிறார் இப்பதிவர். போய் பாருங்க.

சிறுவர்களுக்கு பிடிக்கும் வகையில் கணிணி திரையை மாற்றி கணை கவரும் வண்ணம் வைக்க இங்கே பதிவர் Still ஐடியா சொல்லுறாரு. இங்கே போய் அவரு சொல்லுறத தரவிரக்கம் செஞ்சு வீட்டுல இருக்குற குட்டீஸ அசத்துங்க.

அடுத்து. நம்ம பேமஸ் பதிவர். தனிகாட்டு சிங்கம். எல்லையில்லா காட்டாறு. பதிவர் வந்தேமாதரம் சசி அவர்களின் பதிவு. ஹி ஹி.!! என்னன்னு கேக்குறீங்களா.? கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல சும்மா இல்லாம 'ஈ' ஓட்ட சொல்லுறாரு. நமக்கு தான் ஆபிஸ்ல 'ஈ' ஓட்டுறதுனா ரொம்ப பிடிக்குமே. இங்க போய் பாருங்க. நீங்களும் என்னை போலவே 'ஈ' ஓட்டுங்க.

''நான் இறந்த பிறகு , என் துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள் . 
அப்போதும் தோட்டாக்கள் 
சீறிப் பாயும்!''-சே குவேரா

13 comments:

 1. நீ கலக்கு மச்சி

  ReplyDelete
 2. யோவ் நல்ல மனுஷன்னு சொல்லி இருந்தா சந்தோசப் பட்டிருப்பேன் அத விட்டுட்டு காட்டாறு சிங்கம்ன்னு என்னென்னவோ சொல்றியே நண்பா....ஹா ஹா ஹா

  என்னை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி தம்பி மற்ற அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. தொடரும் "சே" ன் வார்த்தைகள் மனதை நெருடுகிறது !

  ReplyDelete
 4. ஆய்...நம்ம கூட்டாளிக்கு தானும் ஒரு குழந்தை என்று நினைப்பு;-))

  பாஸ், வெரைட்டி சூப்பர். கலக்குங்க சகோ.

  ReplyDelete
 5. நம்மைப் பற்றிய பதிவுகளின் அறிமுகங்கள் சூப்பர்!!!

  ReplyDelete
 6. நல்ல அறிமுகம்..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. உங்கள் அறிமுகத்துக்கு மிக்க நன்றிகள்.. உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன்.........

  ReplyDelete
 8. அன்பு நண்பர் தம்பி.கூர்மதியான் அவர்களே
  என்னை வலைச்சரத்தில் இணைத்தமைக்கு
  மிக்க நன்றி.

  ReplyDelete
 9. அன்பின் ராம்! எப்படிச் சொல்லலாம் ஒரு சின்ன அறிமுகம், ஒரு செல்ல அறிமுகம் என்றும் சொல்லலாமா! கோவைக்கவியை எழுதியுள்ளீர்கள் மனமார்ந்த நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். உங்கள் பயணம் வெற்றிநடை போட எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.-Kovaikkavi.(Vetha. Denmark)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது