07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தம்பி. Show all posts
Showing posts with label தம்பி. Show all posts

Sunday, June 5, 2011

வலைச்சரத்தில் இறுதியாக-நண்பேன்டா.!!

எனக்கு வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியர் அழைப்பு வந்திருப்பது என்னை சுற்றிய வட்டாரத்திற்கு சிறிது நாட்கள் முன்னரே தெரியும். அப்போது விளையாட்டாய் பதிவர் ரேவாவிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றேன். ஓவர் எக்ஸைடட் ஆன அவர் பேசதொடங்கினார்.

ரேவா: ஏ.! நீ நல்லா பண்ணுவ.. புது புதுசா நிறைய பேர அறிமுகபடுத்தி கெத்து காட்டு..

நான்: புதுசா.? அதுக்கு நான் எங்க போறது.? எனக்கு யாரையுமே தெரியாதே.. ஹி ஹி

ரேவா: போடா லூசு..! இப்படிலாம் பேசாத.. நீ பெஸ்ட் ஆ பண்ணுவ.!!

நான்: ஹி ஹி

ரேவா: என்னடா சிரிப்பு.? ஒரு சகோவா நல்லது பண்ணலாம்னு பாத்தா சிரிக்கிற..

நான்: நல்லதா.? ஹி ஹி.. என்ன நல்லது பண்ண போற.?

ரேவா: இரு ஒரு சில ப்ளாக்கர்ஸ் லிஸ்ட் தர்றேன்..

நான்: சரி சரி கொடு..

ரேவா: இளயுகன் என்று ஒரு பதிவர் அவர் போகும் பயணத்தை பத்திலாம் சொல்லுறாரு.

நான்: சூப்பரு ரேவா.. பாத்தேன் அதுல கென்யாவை பயணம் சூப்பரு.

ரேவா: ஆமாம் ஆமாம்.. அடுத்து கிறுக்கன பத்தி சொல்லபோறன்.

நான்: கிறுக்கனா.? அட போ.. நீ வேற.. சென்னைக்கு வந்து கீழ்பாக்கத்துல போய் சொல்லு.

ரேவா: டே.!! இவரு தொழில்நுட்ப கிறுக்கன் டா. பேஸ்புக் சென்ட் பட்டன் பத்தி சொல்லுறார்.

நான்: பேஸ்புக் பத்தி எனக்கு தெரியாததா..?

ரேவா: ஆமாம் பெரிய விஞ்ஞானி.. மத்தவங்களுக்கு சொல்லலாம்ல..

நான்: ம்ம் சரி.. இப்போ நானு.. அனீஷ் என்ற பதிவர் மழைக்காதல் பத்தி சொல்லுறாரு.

ரேவா: மழை காதலா.? அப்படீனா.?

நான்: உனக்கு தெரியாததா காதல பத்தி.. எல்லாத்தையும் என்னையே கேப்ப போய் படி.

ரேவா: சரி சரி.. ஐபிஎல் போட்டியால சர்வதேச கிரிக்கெட்ட வீரர்கள் துறக்கிறாமே.!! நம்ம வைரை சதீஷ் சொல்லுறாரு.?

நான்: ஏன் இவ்வளவு சீக்கிரமா சொல்லுறாரு.? அத பழைய நியூஸ் ஆச்சே.!1

ரேவா: சரி சரி ஓவரா பேசாத.. பெம்மு குட்டி ப்ளாக் தெரியுமா.?

நான்: தெரியும் ஒரே ஒரு சிறுகதைய மட்டும் தொங்கி படிச்சிகிட்டு கிடக்குமே அதானே.!

ரேவா: ஆமாம்.. அவர கொஞ்சம் எழுத சொல்லேன்.

நான்: நீ முதல்ல போய் அந்த பதிவ படி..

ரேவா: சரி சரி.. அசிங்கபடுத்தாத..

நான்: நந்தலாலா இணைய இதழ் தெரியுமா.?

ரேவா: தெரியும் டா.. அது சூப்பரு..

நான்: ஆமாம்.. எக்கசக்க கவிஞர்கள்.. எனக்கே கண்ண கட்டுது.. சூப்பரா இருக்கு.

ரேவா: ஈரிகள் என்று ஒரு ப்ளாக் இருக்கு பாத்தியா.?

நான்: எனக்கே வா.. பாத்தேன் பாத்தேன்.. இப்போ இருக்குற பள்ளிய பத்தி அந்த பதிவு வருத்தமா இருக்கு.

ரேவா: ஆமாம்.. என்ன பண்ண.? நம்மால என்ன பண்ண முடியும்..

[பலே பிரபு இடையில் புகுந்தார்]

பிரபு: மாப்ள..!! நாழிகைனு ஒரு ப்ளாக் பாத்தன் டா..

நான்: அதுல என்னடா இருக்கு.?

பிரபு: அத நிறைய பேர் சேர்ந்து எழுறாங்கனு நினைக்கிறேன்.

நான்: ஓ அப்படியா.. இப்ப தான் பாத்தேன். தல அஜீத்த பத்தி ஒரு பதிவு. ஏற்கனவே தெரிந்த விசயம் தான். ஓகே பரவால. நல்லா தான் எழுதுறாங்க.

பிரபு: ஆமாம் மாப்பு..

நான்: சரி ரேவா நான் எழுதபோறேன்.. பிரபு டாட்டா..

அவுங்களுக்கு மட்டும் டாடா இல்ல உங்களுக்கும் தான். ஒருவார வலைச்சரத்தில் என்னால் முடிந்த சிலவற்றை செய்துள்ளேன். ஒரு சிறிய அளவாவது இது உங்களுக்கு பயன் தரும் அளவிற்கு இருந்திருக்கும் என நம்புகிறேன். இதோடு வலைச்சரத்தில் எனது பங்கு முடிகிறது. 14 பதிவு போட வேண்டும் என்று வந்தேன். அதிக வேலை பளுவால் முடியவில்லை. 13 பதிவுகளோடு முடிக்க போகிறேன். நன்றி வணக்கம்.!!!

கடைசியாக எனக்கு பிடித்த மற்றும் எல்லாருக்கும் பிடித்த வரிகள்,

''உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் உங்களால் குமுறிக் 
கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே'' - சே குவேரா
மேலும் வாசிக்க...

என்ன வேணா சொல்லுவேன்.!!

இது என் இடம் என்பதால் நான் இப்போ என்ன வேணா சொல்லுவேன். அப்படீனு என் மனசுக்குள்ள தோணியதால இங்க ஒரு கூட்டத்தை கூட்டி வந்திருக்கேன். அந்த கூட்டத்தை இப்போ உங்களுக்கு காட்டுறேன்.!!

நின்னா செல்போனு, நடந்தா செல்போனுனு எல்லாரும் இப்போ செல்போன் மயமா திரியிறோம். அப்படி திரியும் நமக்கு உபயோகமா ஒரு பதிவு போட்டிருக்கார் இந்த பதிவர். கொஞ்சம் எட்டி பாத்து தெரிஞ்சுகிடுங்க.

திமுக-அதிமுக கூட்டணி. இப்படி அமைந்தால் எப்படி இருக்கும். செமயான ஒரு டாபிக் வைத்து சூப்பரான ஒரு பதிவு. நச்சென்று எழுதியிருக்கிறார் பதிவர் அதிரைக்காரன்.

முன்னேற்றம் என்ற பதிவின் மூலம் ஓய்ந்திருக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்து முனைபடுகிறார் பதிவுலகின் புத்தம் புது குழந்தை. இரண்டே பதிவோடு வரவேற்கிறார் பதிவர் மாதவரங்கன்.

காதல் வலியை சித்தரிக்கும் ஒரு கவிதை படைப்பு. கல்லுக்குள் ஈரம் என்னும் பதிவை எவனோ ஒருவன் எழுதியிருக்கிறார். மரியாதை இல்லாமல் எழுதிவிட்டேன் என்று நினைக்காதீர்கள். அவர் பெயரே அப்படிதான். இந்த பதிவுக்கு போட்டோ சூப்பர்.

சிறப்பான நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் என வரிசைபடுத்துகிறார் இந்த பதிவர். அங்கு சென்று உங்களுக்கு பிடித்த தெரிந்த புத்தகங்களையும், ஏதாவது விடுப்பட்டாதா இருந்தாலும் சொல்லலாமே.!!

ஆவி அழைக்கிறது என்று ஒரு தொடர்கதை எழுதுகிறார். அவருடைய கலரிங் சென்ஸ் பேக் க்ரவுண்ட் கலர் கண்ணை கெடுத்திடும் போல் இருந்தாலும் அவருக்கு போய் ஆதரவு தரளாமே.!!

தேவாரம் மற்றும் திருமுறை பாடல்களுக்காக மட்டும் தொடங்கப்பட்ட வலைப்பூ. இங்கு தேவாரம் மற்றும் திருமுறை பாடல்களை கேட்கலாம் தரவிறக்கம் செய்யலாம்.

ஒசாமாவை வைத்து செம கற்பனை நடத்தியிருக்கிறார். பதிவர் ஷிஹாப்தீனின் இம்முயற்சி பாராட்டத்தக்கது. எப்போதும் சீரியஸாவே இல்லாம இப்படியும் இருப்பது கொஞ்சம் நல்லது தானே.!!

அடுத்த பதிவுல சந்திப்போமா.!!?

"உண்மையான புரட்சி உருவாக்கப்படுவது உன்னதமான காதல் மூலமாகவே"-சே குவேரா
மேலும் வாசிக்க...

மிக்ஸியில் போட்டு அரைச்சிட்டோம்ல.!!

ஹலோ.! என்னடா பதிவு தலைப்புனு யோசிக்கிறீங்களா.? அதாங்க மிக்ஸியில் எல்லா பொருளையும் போட்டா ஒரே கலவையா வரும்ல அது மாதிரி வித்யாசமான பதிவர்கள போட்டு மிக்ஸிங் அடிச்சிருக்கேன். நேரா போய்டுவோம்.

விஜயகாந்தை கூடுதல் பாதுகாப்பு ஏற்க சொல்லி அவரது தொண்டர்கள் சொல்வதாக நம்ம பதிவர் அன்புதாசன் கூறுகிறார். அந்த லெப்டு கால சுவத்துல வச்சு ரைட்டு காலால சுத்தி சுத்தி அடிக்கிற ஸ்டைலு மறந்துட்டாங்க போல.

இந்த வலைப்பூ சற்று வித்யாசமானது. பலதரப்பட்ட செய்திகளை படித்து அதை விமர்சிப்பது போன்று அமைந்தது தான் இந்த ஆணிவேர் வலைப்பூ. இது உண்மையில் ஒரு சிறப்பான யுக்தி. அரசியல்வாதிகளுக்கு அறிவுரை போன்ற அவரது பதிவு உண்மையில் சிறிது நகைப்பு.

இந்திய கருப்பு பணத்தை அயல்நாட்டில் கொண்டுள்ள 15பேர் பட்டியல் இருக்கிறது. வராகன் என்னும் பதிவர் குறிப்பெடுத்து வெளியிட்டிருக்கார். போய் எல்லாரையும் வசை பாட ஆரம்பிக்க வேண்டியது தானே!

இறைவன் யேசு பற்றிய முழு வலைப்பூ என்றே சொல்லலாம். முற்றிலும் அவரை பற்றிய சிந்தனை ஓட்டமாகவே இருக்கிறது. உலகத்தை என்ன பாதுகாக்கும் என்று அவர் பாணியிலே சொல்கிறார்.

INAS என்ற பதிவர் அபேகஸ் உபயோகபடுத்தி நொடிபொழுதில் விடையை சொல்லும் மாணவர்களின் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அருமையாக இருக்கிறது. போய் பார்க்கலாமே.!!

ஒரே ஒரு பதிவு. நச்சென்று மனிதகடவுள் டாக்டர்களை விமர்சிப்பது போல இருக்கிறது. குறைகளை சொல்லி தீர்வு கிடைக்குமா என்று ஏங்குகிறார். கடலாமை பதிவரை கொஞ்சம் போய் ஊக்குவியுங்க.

இது ஒரு வித்யாசமான வலைப்பூ. இந்த வலைப்பூ மக்கள் எழுதுவதை நிறுத்திவிட்டனர். இது சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்தியது. தொடங்கிய சில நாட்களிலே கைவிட்டு விட்டனர் போலும். ஆதிகால மனிதன் மொழியை விளக்குகின்றனர்.

செழுங்காரிகையாக தமிழை சொல்லிக்கொடுக்க வருகிறார். இங்கு இருக்கும் பலருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொன்றிர்க்கும் குறள் வைத்து சொல்லிகொடுப்பது மேலும் சிறப்பு.

கிச்சா என்ற பதிவர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பின்னர் நடந்த ஒரு நிகழ்வை நக்கலடித்து ஒரு சிறிய பதிவு போட்டிருக்கார். வேலை இல்லாதவர்கள் இவர் பதிவை படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

''கியூப புரட்சி நிலைக்குமா இல்லையா என்று எனக்கு தெரியாது. அப்படி நிலைக்காமல் போனால் என்னை என்னை அகதிகளிடத்து தேடாதே.! என் கை துப்பாக்கியை எடுத்துக்கொண்டு விடாமல் எதிரிகள் முகாமில் போர் செய்துகொண்டிருப்பேன்''-சே குவேரா
மேலும் வாசிக்க...

Saturday, June 4, 2011

பிச்சைதட்டு தங்கங்கள்.!!

ஒற்றை வார்த்தை சித்தரிக்கா
என் ஒரு வார உழைப்புதனை..
காரணம் கேட்டீரோ.!!?
காரணம்-நான் உழைக்கவில்லை..

இறுதி நாள் இன்பமாகுமா.?
பிச்சை தட்டு கொண்டிருக்கேன்
பலதரம் அதிலே கொட்டிருக்கு.!!
அத்தனையும் பிச்சைதட்டு தங்கங்கள்..

அக்ஷ்சயபாத்திரம் கொண்டுள்ளார்
மணிமேகலா பதிவரவர்
முதிர்கொண்ட வாழ்க்கையென்னும்
வாழ்க்கை ஓட்டம் சித்தரிக்கும்
நரையின் வழியோடி கொண்டுள்ளார்.!!

அடுத்து வந்த வள்ளலிங்கே அபி.. அபி..
கமல் சொல்லும் அபிராமி அற்ற அபி 
திண்ண திண்ண கேக்குதுங்க
எங்க ஊரு புரோட்டா
அபி போட்டு கடுப்பேத்தும்
கொடநாடு புரோட்டா இங்கே ருசிக்குதே.! 
என்னை அழைக்குதே.!!

உயிர்தமிழில் தமிழ்நிலா என்றொருவருண்டு
விவரிக்கிறார் அனைத்தும்
மதன் கார்க்கி பற்றி தொகுப்பாக
பாட்டோடு லயிக்க வைக்கும் 
பண்கொணர் தொகுப்பிது.!!

காற்றோடு தேடுகையிலே
சுரன் என்ற பதிவர் கண்முன்னே!!
தமிழகமே தலைவணங்கும்
ஒற்றை ஸ்டைல் மன்னனை 
சாடி பேசி என் நெஞ்சடைப்பை தீர்த்திட்டார்.!!

விசித்திர பேர் கொண்ட பதிவர் இவர்
என்ன பெயரெண்டு போய் காணும்..
தேசிய விருது பற்றிய பதிவொன்று
அதில், 
அவரது பட்டியல் சிலவுண்டு.!!

ஊரானாக ஒரு பதிவர்
கோப கனலாக அங்கொன்று கண்டேன்
இதை மனதில் கொள்வீரா.?
அற்று மறுத்து பேசுவீரா.?

வேறுபாடு பதிவொன்று
அதை எழுதியவரோ 'இடைவெளிகள்'
அக்காலந்தொட்டு இக்காலவரை 
நிதர்சனம் ஒன்றை கையிலேந்தி
நால்வரியில் நச்சென்று.!!

சகமனிதனாக இங்கொருவர்
ஏத்துகிறார் வேலுமணியை
கேட்டழிந்த கேள்வியொன்று 
15 வருட புத்தகத்தில்.!!
இன்றோ பதிலாக முட்டியதே
மட்டற்ற சிறப்பு சொல்லும் 
தமிழகத்தின் புதிய ஆட்சி.!!

பிச்சை பாத்திரம் தீர்ந்திடிட்டு
தேடி போகிறேன் அடுத்த தெரு.!!
கிடைத்த பின்னே சேர்ந்திடுவோம்
கூடி உண்ண அனைவருமே.!!

''நண்பர்கள் அற்றது சோகம் தான். ஆனால், பகைவர்கள் அற்றது அதைவிட பெரிய சோகம்''-சே குவேரா
மேலும் வாசிக்க...

படைப்பாளிகளின் படையெடுப்பு!!

ஹலோ.!! வலைச்சரத்துல நமக்கென்று ஒருவாரம் என்றதும் நாம இதுவரைக்கும் என்ன என்ன படிச்சோம். என்ன என்ன எட்டி பாத்தோம்னு பாத்தா ஹி ஹி பாதி படைப்புகளா இருக்கு. என்ன செய்ய..? நான் ஒரு பிரபலமான கவிஞன் என்பதால் நான் தேடிபோகும் இடமும் அப்படி கிடக்கு. சரி பின்ன என்ன செய்யலாம்.? ஒன்றும் பெரிதாய் இல்லை. நான் படிச்சதெல்லாம் அப்படியே அல்லாக்கா தூக்கிட்டு வந்து இங்க மல்லாக்க படுக்க வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

Lali- தண்டசோறு என்னும் கவிதை தலைப்பை பார்த்தும் இவுங்க ப்ளாக்குக்கு ஓடினவன் நான். ஏதோ என் பெயரிலே ஒரு கவிதை இருப்பது போன்ற உணர்வு. ஆனால் அங்கே போனால் தண்டசோறை கூட வேகம் கொள்ள செய்யும் வரிகளாக இருந்தது. பாவும்.!! ஆனால் அந்த வரிகளால் என்னை வேகம் கொள்ள செய்யமுடியவில்லை.ஹி ஹி.

சுல்தான்- முத்தம் பற்றிய கவிதை. படிக்கும் போது உண்மையிலே காட்சி கண் முன்னே வந்து ஓடுது. என்னை உருவகபடுத்தியானுலாம் நீங்க கேட்க கூடாது. அப்பரம் நான் இல்லனுலாம் சொல்லமாட்டேன்.

செல்வம் முனியாண்டி- ஒரு இரவு என்னும் தலைப்பில் ஒரு சிறிய காதல் கவிதை. வெறும் எஸ்.எம்.எஸ்.,களாக போட்டு தாக்கும் ப்ளாக் இது. சற்று எட்டி பாருங்கள்.

சௌமியா- ஜப்பான் நகர் (அ)வலம் என்னும் கவிதையில் சப்பானில் நிலநடுக்கம், சுனாமி வந்தபோது இருந்த நிலையை ஒருவித சோகத்தோடு விவரிக்கிறார். சிறப்பு.

செந்தில் கீதா- கண்ணீர். இந்த கவிதை என்றோ எங்கோ பார்த்த ஒரு புகைபடத்தை ஞாபகபடுத்துகிறது. அதாவது அந்த புகைபடத்தில் மழையில் நனையும் போது ஒருவன் அழுவது போலிருக்கும். அந்த படம் கவிதையாக இருக்கிறது.

கிருபா- சுதந்திரம் என்னும் தலைப்பின் கீழ் பறவை மற்றும் மனிதர்களின் சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்புகிறார். அருமையாக எளிமை நடையில் அமைத்திட்ட வார்த்தைகள். சிறப்பாக இருக்கிறது.

தேவாதிராஜன்- வேண்டும் இதுவே நமக்கு வேண்டும் என்னும் கவிதையில் மனிதர்களுக்கு என்ன வேண்டும் என்று பட்டியலிடுகிறார். இதில் எனக்கு சில முரண்பாடுகள் இருக்கின்றன. உங்களுக்கு எப்படி.?

பூமகள்- அறிமுகமில்லாதவள் என்னும் இவரது கவிதை சற்று சிறப்பு அதிகமாக பொருந்தி இருக்கிறது. நச்சென்று ஒரு கருத்து இந்த கவிதை சொல்லி நிற்கிறது. என்ன என்று சொல்லுங்க பாப்போம்.!!?


வலிப்போக்கன்- நீ என்ன ஆளு.? என்னும் தலைப்பின் கீழ் இவரது கவிதை சற்று நடை தளர்ந்து இருப்பது போல உணர்கிறேன். மனிதனின் இயல்பை கூறி நிற்கிறது இந்த கவிதை.

இப்போதைக்கு இவ்வளவு தான். அப்பரமா பாப்போமா.?

''ஒற்றை புரட்சியின் முடிவு ஒருவனுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கவேண்டும் அல்லது வீரமரணமாக வேண்டும்''-சே குவேரா
மேலும் வாசிக்க...

Friday, June 3, 2011

கவிதை சரங்களோடு வந்திருக்கேன்..!!

நேற்று சொன்னது போலவே கவிதை சரங்களின் இரண்டாவது பகுதியை அப்படியே கொத்தா புடிச்சு தூக்கிட்டு வந்திருக்கேன். நேரா போய்டுவோம்..

முருகேசன்- சரித்திர சாக்கடைக்கெல்லாம் என்னும் தலைப்பின் கீழ் கணபதியை வேண்டுவது போல ஒரு சில வரிகள் எழுதியுள்ளார். வார்த்தைகளில் அதிக ஜாலம் இல்லாவிடிலும் பக்தி தெரிகிறது. சிறப்பு.

சில்வர்ஸ்டார்- ஹி ஹி. பேர கேட்ட உடனே மிரண்டுட்டீங்களா.? ஓகே ஓகே. இவரின் கவிதைகள் அனைத்தும் சிறியதாக போட்டோக்களில் இருக்கும். என் இரு கண்கள் கவிதை சிறியதிலும் சிறப்பு.

அருண்- ஈழத் தமிழரும், ஈனத் தமிழரும்!!! என்னும் தலைப்பின் கீழ் ஒருவித கோபத்தை வெளிபடுத்துகிறார். மரபு வழியில் இயற்றப்பெற்ற கவிதை இயல்பான தமிழ் வார்த்தை பயன்படுத்தி புரிந்துகொள்ளும் நடையில் இருப்பது இன்னும் சிறப்பு.


சுப்ரஜா- தமிழ் திருட்டு என்னும் கவிதையில் நான் எப்படி தமிழை நினைத்து புலம்புறேனோ அவ்வாறே இவரும் புலம்புகிறார். இதை புலம்பல் என்று சொல்லாமல் கோபம் என சொல்லலாமோ.!! எதுவாக இருந்தாலும் கவிதை சூப்பர். என்னங்க.. கவிதை சூப்பரூ..


திருப்பதி- அம்மா என்ற தலைப்பின் கீழ் அவரது அம்மாவை நல்லா கேட்டுகிடுங்க ஜெ., இல்ல அவரது அம்மாவை பற்றிய கவிதை. சிறியது. முற்றிலும் சிறப்பு என்று சொல்லிடமுடியாது. சாதாரண வார்த்தைகள் மற்றும் கோர்வை அமைத்து இயல்பாக இருக்கிறது. 


சசிகுமார்- நிழல்காலம் என்ற கவிதையில் ஒரு சில வரிகள் எழுதியிருக்கார். படிக்கும் போது ஒரு பாடல் போலவே இருக்கிறது. காதல் சொல்லும் வரிகளாக அமைந்துள்ளது.


லக்ஷ்மிநாராயணன்- காகித கப்பல் என்னும் தலைப்பின் கீழ் அருமையாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். வார்த்தைகள் சேர்க்கப்பட்ட விதம் எனக்கு பிடித்திருக்கிறது. நீங்களும் கொஞ்சம் போய் பார்த்து கமண்டடிக்கலாமே!

கண்ணா- யாப்பிலக்கணம் சொல்லித்தருகிறார். கவிதை மூலம். உண்மையில் மிக சிறப்பாக இருக்கிறது. இதுவரை 5 எழுதியிருக்கிறார். இவரை சென்று ஊக்கப்படுத்தி மேலும் எழுத தூண்டுங்களேன்.

தீபச்செல்வன்- சிசுகள் வேகும் அடுப்பு என்று ஒரு அழுகாச்சி கவிதை. உண்மையில் நன்கு உணர்வுப்பூர்வமானது. மிகவும் கவர்கிறுது. எட்டி தான் பாருங்களேன்.

மதன் கார்க்கி- இவர யாருன்னு தெரியல.? அதாங்க நம்ம வைரமுத்து பையன். அவரு எழுதுற பாட்டெல்லாம் இந்த ப்ளாக்ல போடுறாரு யாருக்கு வேணுமோ போய் பாத்துகிடுங்க. எனக்கு பிடித்த என்னமோ ஏதோ பாடல் இங்கே.

இப்ப இதுக்கு ஒரு பினிசிங் டச். மீண்டும் சந்திப்போமா..!!

''முட்டிப்போட்டு மானமிழந்த வாழ்க்கை வாழ்வதை விட, எதிர்த்து நின்று மடிவதே மேல்''- சே குவேரா.
மேலும் வாசிக்க...

Thursday, June 2, 2011

கவிதைகளா எழுதுறாங்களாமாம்..!!

நானும் புதுசா பண்ணுவோம் புதுசா பண்ணுவோம்னு எங்கெங்கோ தேடி திரிஞ்சாலும் மைண்ட்ல ஒரே வாய்ஸ் தான். கவிதைகள விட்டுடாதடா கூர்னு கூவிகிட்டே கிடக்கு. இருந்தாலும் கவிதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம்னு முதல்ல நான் நினைத்திருந்தாலும் என்ன செய்ய கவிதை என் கூடவே புறந்திடுச்சே.! என்ன தான் நான் கவிதைய தூக்கி எறிய பாத்தாலும் நான் ஒரு அதிரிபுதிரி கவிஞன் ஆதலால் கவிதை என்னை விடமாட்டேங்குது. ஹி ஹி.

கவிபாரதி- மறந்ததோடு விட்டுவிடு என்னும் தலைப்பின் கீழ் ஒரு காதல் கவிதையை எழுதியிருக்கிறார். இயல்பாக அமைக்கப்பட்ட வார்த்தைகளில் இந்த கவிதை மிக சிறப்பு என்று சொல்லமுடியாவிடிலும் சிறப்பு என்று சொல்லிக்கொள்ளலாம்.

ja.franklin kumar- சிதைவுகள் என்று அவர் எழுதியிருக்கும் இக்கவிதையை கண்டிப்பாக அனைவரும் படித்தாக வேண்டும். கோபத்தை பக்காவாக சொல்லியிருக்கிறார். படிக்கையில் கோபம் புலப்படாத வகையில்-அதை கோபம் என உணரவைத்திருப்பது சிறப்பு.

நீலநிலா- நீல நிலா இதழில் வெளியான கவிதைகள் என்னும் தலைப்பில் சிறு சிறு கவிதைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு படைப்பாளிகளின் கவிதை இது.

விஜய்- கல்லூரிப் பிரிவு என்னும் கவிதை தலைப்பில் கல்லூரியின் இறுதி கனத்த வார்த்தைகளை குறிப்பிடுகிறார். மிக்க சிறப்பு. ஒருமுறை என் கல்லூரியின் வாழ்க்கை ஞாபகம் வருகிறது.

புலவர் சா இராமானுசம்- எதையும் தாங்குவோம் என்னும் தலைப்பின் கீழ் அருமையாக கச்சத்தீவினை கொடுத்ததன் கோபத்தை வெளிப்படுத்துகிறார். மரபு வழியில் அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது வார்த்தைகள்.


அம்பாளடியாள்- அக்கா அக்கா மயிலக்கா என்னும் இக்கவிதை ஒரு பாடல் போல இருக்கு. சிறியதாக இருந்தாலும் படிக்க நல்லாவே இருக்கு. இத படிச்சிட்டு ஒரு குத்தாட்டம் கூட போடலாம். ஹி ஹி. 

யாழினி- நீ மட்டும் சொந்தம் என்னும் கவிதையின் தனக்கு யாருமே சொந்தமில்லை நீ மட்டும் தான் சொந்தம்னு அன்பு மழையை பொழியிராறு. காதல் வந்தாலே இப்படி ஆயிடும் போலிருக்கு.


உமர்- இவரு ரொம்ப குறிப்பிடத்தக்கவர். 2003ல வலைப்பூ தொடங்கி விட்டுட்டார். பல வருடங்களுக்கு பிறகு இந்த 2011ல அவருக்கு ஏதோ தோணியிருக்கு போல. நமக்கும் வலைப்பூ இருக்கனு வந்துட்டார். சீறப்படும் சமச்சீர் கல்வி என்னும் தலைப்பில் ஜெ., ஆட்சியில் சமச்சீர் கல்வி நிலை குறித்து பேசுகிறார்.


அருள்- சிகரெட் புகைவழியே வந்தேறிய பாடல் என்னும் தலைப்பில் அருமையான கவிதை. கிட்டதட்ட இதில் எல்லா கவிதைகளும் அதீத நேர்த்தியோடு இருக்கிறது. 


கீதா- பரிதாப வாழ்க்கை யாருக்கடி.? என்னும் கவிதையில் இக்கால குழந்தைகள் இழக்கும் சந்தோசங்களை பற்றி விவரிக்கிறார். அப்படியே என்னை மெய்சிலிர்த்து என் கிராமத்துக்கு அழைத்து சென்றுவிட்டார். கண்டிப்பாக பாருங்கள்.


இப்போது இதோட முடிச்சுகிடுறன். மேலும் ஒரு சில கவிஞர்களோடு உங்களை நாளை சந்திக்கிறேன். நன்றி.!!


''வாழும் வாழ்க்கை உன் வெற்றியை கொண்டாடி வாழாதே, தோல்விகளில் இருந்து மீண்டு வந்து வாழு''-சே குவேரா
மேலும் வாசிக்க...

இளையராஜாவின் விழுதுகள்.!(எங்கே விழுறாங்க.?)


வணக்கம்.!!

ஆல் ஹாய்.!! நோ பாய்னு விடாம துரத்திகிட்டு இருக்கிறேனு கடுப்பாயிடாதீங்க. நமக்கு பொழப்பே இது தான. பலர் வெயிலுக்கு வாட்டப்பட்டுகிட்டு இருப்பீங்க. சிலர் குளுருல பொங்கிகிட்டு கிடப்பீக. உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தா ஒரு பதிவு போடலாம்னு நினச்சேன். அதான் என்ன பண்ணலாம்னு குப்புற படுத்து யோசிச்சப்ப இங்கிட்டு நிறையா ராஜா ரசிகர்கள் இருப்பீங்கன்னு தெரியும் அதாங்க இளையராஜா. சரின்னு அவர பத்தி போட்டே உங்கள கூல் பண்ணிடலாம்னு வந்துட்டேன்.

அவரபத்தி நான் என்ன எழுத போறேன்.? அப்படி எழுதுற அளவுக்கு நான் ஒண்ணும் அதிபுத்திசாலி இல்லையே.! யாராவது எழுதி இருப்பாங்கல. அத இங்க இப்போ உங்ககிட்ட பகிர்ந்துகிடலாம்னு வந்துட்டேன். அப்பரம் என்ன மேட்டருக்குள்ள போவோம்.

எண்பதுகளில் பிபிசி-யில் இளையராஜா INDIA 24 hours எண்ணும் நிகழ்ச்சியில் இசையமைத்து பற்றியும் அதன் 17 இசை கோர்வைகளையும் தருவதாக இங்கே  மனசாளி என்பவர் பதிவிட்டுள்ளார். ஒருவர் தருகிறேன் என்று சொல்லிவிட்டால் விடலாமா.? உடனே ஓடுங்கள்.

ராஜாவின் இசையை கேட்டு மட்டும் தான் லயித்திருக்க முடியுமா.? ஏன் அவரின் முகத்தை ஓவியமாக தீட்ட மகிழ கூடாதா.? 6ஏ நிமிடங்களில் அவரது முகத்தை அருமையாக வரைந்திருக்கிறார் தமிழ் பறவை. முன்பே பலர் பார்த்திருப்பீர்கள். இருப்பினும் பாக்காத சிலருக்காக. இதுவும் இவர் வரைந்ததே. அருமையாக இருக்கிறது நண்பரே.!

இப்ப நான் சொல்ல போறவர் ராஜாவின் இசையோடவே திரியிறவர். நிறைய ராஜா பற்றிய பதிவுகள் இட்டிருக்கிறார். நீங்க இங்க போனீங்கனா ரவி ஆதித்யா உங்கள இசையில முக்கி எடுத்திடுவார்.

இளையராஜாவை பத்திய பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. அதில் இவரை பற்றிய 'இசைஞானி இளையராஜா' என்னும் புத்தகத்தை பதிவர் ராஜா பகிர்ந்துகொள்கிறார். எல்லார்கிட்டயும் எக்கசக்கமா இருக்கும். இருந்தாலும் இதையும் போய் எடுத்துக்கோங்க. ராஜானா கசக்குதா.?

அழகர்சாமியின் குதிரைக்கு முன்பு பதிவர் ராஜேஷ்குமார் ''ராஜா சகாப்தம் முடிந்து விட்டதா? ஒருவேளை ராஜா ஓய்வு பெற எண்ணினாலும் ஒரேஒரு படம் நச்சென்று அடித்து அதிரவைத்துவிட்டு ஓய்வு பெறட்டுமே.'' என்ற இறுதி வரிகளோடு ஒரு பதிவு போட்டிருந்தார். அதை போய் தான் பாருங்களேன்.  


கடைசியா எனக்கு பிடித்த ஒரு ஸ்பெஷல் பதிவரின் பதிவு. இதை ராஜாவின் இசையின் ஒரு ஒப்பீடுனு சொல்லலாமா.? இல்ல எப்படி சொல்லணும்னு தெரியல. எப்படியோ சொன்னா சரி தான். இது தான் அந்த பதிவு. போய் எல்லாரும் பாருங்க.

அப்பரம் என்ன.? இப்படியே நான் சுட்டிய கொடுத்துட்டே இருப்பன் வேலையெல்லாம் பாக்காம ராஜாவோட ஐக்கியம் ஆகலாம்னு பாத்தீங்களா.? போங்க பாஸ் போய் சோலிய பாருங்க.

''ஆச்சர்யம் கொள்ள வைக்கும் நம் இறப்பையும் நாம் வரவேற்கலாம். நமது போரின் அழுகை சத்தம் உறங்கிகொண்டிருந்த ஒருவனின் காதுகளில் பாய்ந்து போரிட தொடங்க செய்யும்போது''-சே குவேரா
மேலும் வாசிக்க...

Wednesday, June 1, 2011

பொடியன்களா மாறிடுவோமா.?


நேற்று இரவே அவசர வேலையாக வெளியூர் சென்றதால் காலையில் பதிவிட முடியவில்லை.. மன்னிக்கவும்..

சிறுவர்கள்.! அதாங்க என்னை போன்றவர்கள். அவர்களை பற்றிய பதிவு தான் இது அப்படினு சொல்லமாட்டான். அவங்க சம்பந்தமான பதிவு தான் இது. அப்படினும் சொல்லமாட்டன். அவங்க இருக்குற பதிவு தான் இது. அப்படியும் சொல்லமாட்டன். இத எப்படி தான் சொல்லுறதுனு தெரியலங்க. நீங்களே படிச்சு புரிஞ்சிகிடுங்க.

எனக்கு மிகவும் பிடித்த பதிவர்களில் ஒருவரான நம் நாய்க்குட்டி மனசு தாலாட்டுக்கு வரியோ, இல்ல வார்த்தைகளோ தேவையில்ல ராகம் மட்டுமே போதும்னு சொல்லி தான் ஒரு தாலாட்டு எழுதியிருக்காங்க. ஒருமாதிரி நல்லாவே இருக்கு. இங்கிட்டு போய் கொஞ்சம் பாருங்களேன்.

பொடியன்களா இருக்கும் போது எக்கசக்க பாடல் பாடியிருப்போம். எல்லாம் இப்போ நமக்கு ஞாபகம் இருக்கிறது இல்ல. ஆனா அதை கொஞ்சம் ஞாபகபடுத்தி சுண்டிவிட இங்க ஒருத்தர் கோவை கவியாக நமக்கு வழி செய்கிறார். சிறுவர் பாடல்களை போட்டு தாக்குகிறார்.

இவரும் சிறுவர் பாடல்கள் தான் எழுதுகிறார். ஆனால் அமுது தமிழ் என்று தமிழை பற்றிய சிறுவர் பாடல். கொஞ்சமா இருந்தாலும் நச்சுனு தான் இருக்கு. சும்மா போய் படிச்சிட்டு தான் வாங்களேன்.

இன்னும் இப்போ பலருக்கு ஞாபகம் இருக்க கூடிய சின்ன வயசு பாடல்னா அது ''டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்'' என்னும் பாடல் தான். அந்த பாடலை பற்றியே ஒரு சில குறிப்புகள் தருகிறார்.

முன்னரே நம்ம நாய்குட்டி மனசு அவர்களின் தாலாட்டை படிச்சிருப்பீங்க. இப்ப இன்னொரு தாலாட்டு நம்ம பதிவர் மகேந்திரன் எழுதுகிறார். இது ஒரு இயல்பான தாலாட்டு. ஒரு விதமான காதில் ஒலிப்பது போலே இருக்கு.

இப்ப நான் சொல்ல போறவர் இங்க ஒரு பாச மழையை பொழியிறாரு. இந்த தாலாட்டை அவர் எழுதுறதுக்கு சில நாட்கள் முன்னர் தான் அவருக்கு குழந்தை பிறந்திருந்தது. தாலாட்டை படிங்க. அப்படியே கூடிய விரைவில் முதல் பிறந்தநாள் கொண்டாடபோகும் அவர் குழந்தை அபி.,க்கு ஒரு வாழ்த்தை போடுங்க.

சின்ன குழந்தைகளுக்கு அவருக்கு பிடித்ததான கதைகளை பற்றியும், எழுத்தாளரை பற்றியும் இங்கே பதிவர் RV விவரிக்கிறார். இங்கு போய் பார்த்து படித்து தெரிஞ்சிக்கோங்க. பலர் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கத்தை விட்டு இருப்பீங்க. இனிமேலாவது கதை சொல்லுங்கப்பா.

பிறகு சிறுவர்களுக்கு பிடிக்கும் குறும்படங்கள் பற்றிய ஒரு பதிவு. பதிவர் உதயசந்திரன் இரண்டு அனிமேட்டட் குறும்படங்களை பகிர்கிறார். மேலும் சில பதிவுகளில் இது போல படங்களை பகிர்ந்திருக்கிறார். இப்ப என்ன செய்றீங்கன்னா நேரா போய் அதெல்லாம் பாக்குறீங்க.

உலக சிறுவர் நூல் நாள். என்னது இதுக்கெல்லாம் நாளா.? அட கீழ விழுந்தா கொண்டாடுறோம், எழுந்து நின்னா கொண்டாடுறோம் இதுக்கு கொண்டாட கூடாதா. இந்த நாளை பற்றி ஒரு சிறு குறிப்பு தருகிறார் இப்பதிவர். போய் பாருங்க.

சிறுவர்களுக்கு பிடிக்கும் வகையில் கணிணி திரையை மாற்றி கணை கவரும் வண்ணம் வைக்க இங்கே பதிவர் Still ஐடியா சொல்லுறாரு. இங்கே போய் அவரு சொல்லுறத தரவிரக்கம் செஞ்சு வீட்டுல இருக்குற குட்டீஸ அசத்துங்க.

அடுத்து. நம்ம பேமஸ் பதிவர். தனிகாட்டு சிங்கம். எல்லையில்லா காட்டாறு. பதிவர் வந்தேமாதரம் சசி அவர்களின் பதிவு. ஹி ஹி.!! என்னன்னு கேக்குறீங்களா.? கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல சும்மா இல்லாம 'ஈ' ஓட்ட சொல்லுறாரு. நமக்கு தான் ஆபிஸ்ல 'ஈ' ஓட்டுறதுனா ரொம்ப பிடிக்குமே. இங்க போய் பாருங்க. நீங்களும் என்னை போலவே 'ஈ' ஓட்டுங்க.

''நான் இறந்த பிறகு , என் துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள் . 
அப்போதும் தோட்டாக்கள் 
சீறிப் பாயும்!''-சே குவேரா
மேலும் வாசிக்க...

Tuesday, May 31, 2011

கைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.!


ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது. என்ன அது.? பெரிய தங்க மலை ரகசியம் இல்ல என்பதால் உங்களிடம் இத நான் சொல்லிடுறன். அதாவது ஒரு பென்சில எடுத்து எப்படியாவது ஒரு ஸ்பூன(spoon) வரைந்திடணும். எனக்கு வரையறது பிடிக்கும். ஆனா வரைய தெரியாதே.! சரி வரைய தெரியாட்டி பரவால போய் மத்தவங்க வரைந்ததாவது பாக்கலாம்னு நான் எட்டி பாத்தத பத்தி பாப்போமா.? இதில் அறிமுகம் என்று பார்த்தால் அது பதிவாக தான் இருக்கும் பதிவராக இருக்காது என நினைக்கிறேன். பலர் மிக பிரபலமானவர்கள்.

வரைதல பத்தி எழுதணும்னு எனக்கு தோன்றியதும் முதலில் நான் எட்டி பாத்தது இவர் ப்ளாக்கை தான். ஒவ்வொரு வரைதலும் அவ்வளவு நேர்த்தியாக சிறப்பாக இருக்கும். இவரின் வரைதலை பாத்து நீங்களும் கமண்டடிக்களாமே.!! பாக்கணுமா.? இங்கிட்டு போங்க. இத பாக்காம விட்டுட்டா நீங்க எதையோ மிஸ் பண்றீங்கன்னு தான் சொல்ல முடியும்.

அடுத்து என் கை நேராக தேடி போனது தோழி ப்ரியாவை தான். நான் முதலில் பதிவுலகம் வந்தபோது பார்த்த முதல் ஓவியர் இவர். நேசித்து வரைகிறேன் என்னும் பதிவில் அவர் போட்டிருக்கும் அந்த ஓவியங்கள் உண்மையில் சிறப்பாகவே இருக்கு. போய் பாக்குறதால நாம ஒண்ணும் குறைந்திட மாட்டோமே.! போய் தான் பாக்குறது.

கூல்.. அட நான் உங்கள சொல்லலங்க. பதிவர் பெயர சொன்னேன். இவருடைய இந்த ப்ளாக்கில் என்னாத்த எழுதுராருனு ஒண்ணுமே புரியல. ஏனா அவர் ஒண்ணுமே எழுதுறது இல்ல. இதில் முழுக்க முழுக்க ஓவியங்கள் மட்டுமே திரியுது. இந்த ஓவியங்களை பார்த்து அவரை கொஞ்சம் ஊக்குவியுங்களேன். உங்களுக்கு தெரியாததா ஊக்குவிக்க. கமான் ஸ்டார்ட்.!!

காஞ்சி காமாட்சியம்மனை பாக்கணுமா.? வாங்க நான் கூட்டிட்டு போறேன். ஏ.! ஏ.! யாருயா அது மூட்டையெல்லாம் கட்டுறது.? எல்லாம் என்னய போலவே இருக்கீங்களே.! நான் சொன்னது அந்த சுட்டி மூலமா கூட்டிட்டு போறேன்னு. இங்க போய் பாருங்க.

சரி இப்ப ஒரு ஒப்பீடு போப்போம். அதாவது வரைந்ததுக்கும், போட்டோவுக்குமான ஒப்புமை. அந்த ஒப்புமையில் எது நல்லாயிருக்குனு பாக்கலாம். ஆனா எனக்கென்னவோ இங்க எல்லாமே நல்லா இருக்குற மாதிரி தான் தெரியது. உங்களுக்கு.?

இப்படி இதுமாதிரி பாத்து பாத்துகிட்டு இருந்த நான். ஒரு நாள் நானும் கத்துகிடலாம்னு ஒரு வேகத்தோட புரட்டுன பக்கம் தான் இந்த பக்கம். இங்க ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் புரியுது ஆனா என்ன என்று தான் புரியல.

சரி நமக்கு சாதாரண வாழ்க்கையில இதெல்லாம் தேறாது. நம்ம கம்ப்யூட்டர்லயாவது முடியாதுனு தேடி போன இடம் இதுதான். இதுலயும் கம்ப்யூட்டர்ல எப்படி படத்தை ட்ராயிங்கா மாத்தனு சொல்றாங்க.

ஆனா எனக்கு இதெல்லாம் தெரியாது. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட டா கூர் னு.!! என்னை நானே தேத்திகிட்டேன். இப்ப என்னால என்ன செய்ய முடியும். எல்லாரையும் கைய வச்சுகிட்டு வரையாம சும்மா இருங்கனு சொல்லிகிட்டு திரிய வேண்டியது தான். பின்ன என்ன அடுத்த பதிவுல சந்திப்போம். வர்ட்டா.!?

''கொடூரமான தலைவர்கள் மாற்றப்படுவது நல்ல தலைவர்களை கொடூரமானவராக மாற்றுவதற்கே.!''-சே குவேரா
மேலும் வாசிக்க...

வரலாறு மிக முக்கியம் தம்பி.!!


வரலாறு.! அப்படினா என்ன.? இன்னும் 100 வருசம் கழித்து மக்களெல்லாம் என்னை பத்தி படிப்பாங்களே அப்போ என் வாழ்க்கை தான் வரலாறு. அதில் நான் தான் வரலாற்று நாயகன். ஹி ஹி.. இப்படி எவ்வளவோ பில்டப் கொடுத்துகிடலாம். ஏன்னா இது இப்போ என் ஏரியா.!! ஹி ஹி. சரி என்னடா இவன் இப்ப வரலாற பத்தி பேசிட்டு இருக்கானே அப்படினு நீங்க யோசிச்சா நான் சொல்றேன் இந்த பதிவு வரலாறுக்காக மட்டும் தான்.

எனக்கு பழையன, பழமை இதிலெல்லாம் ரொம்ப ஆர்வம். அப்படி என்னை போலவே ஆர்வம் வாய்ந்த சில சகாக்களின் பதிவுகள் தான் ஒரு சிறிய வரலாற்று தொகுப்பு.

முதலில் பிரபல பதிவர் மைந்தன் சிவா பக்கம் போவோம். இவர் சமீபத்தில் அசோக பேரரசர் பற்றிய ஒரு பதிவு போட்டிருக்கார். இன்னும் இங்கிருக்கும் சிலருக்கு அசோகர் இருந்தார் என்று மட்டுமே தெரிந்த நிலையில் இந்த பதிவினை சற்று எட்டி பார்த்து இன்னும் விளக்கிக்கொள்ளலாமே.!

ஈரானில் இருந்த கண்டோவன் என்னும் கிராமத்தை பற்றிய வரலாறை தருகிறார் நண்பர் அசோக். இங்கே எல்லா வீடுகளும் மலையில் குடைந்தது, கூம்பு வடிவில் தான் இருக்குமாம். படங்களோடு பதிவு பக்கா.!!

அடுத்து பிரபல பதிவர் மாணவன். நோபல் பரிசு இல்ல நோபல் பரிசு- அது எப்படி உருவாச்சு, ஆல்ஃப்ரட் நோபல் பற்றிய பதிவு. சும்மா சொல்லகூடாது நல்லாவே எழுதியிருக்காரு. போய் படிங்க. ஆனா என்கிட்ட நோபல் பரிசுன்னா என்னனு கேக்கலாம் கூடாது.

நம்ம தலைவர். சமீபத்துல மறைந்த மனிதர். மிகவும் திறமைசாலி. ஒசாமா பின்லேடனை பற்றி தெரிஞ்சுகிடணுமா.? ஹி ஹி. நான் சொல்லமாட்டேன். ஆனா ஒருத்தவங்க கூவி கூவி சொல்லிகிட்டு இருக்காங்க இங்க போய் பாத்துக்கோங்க.

உலகையே தமது இசையால் கவர்ந்த ஒருவர். தமிழகத்திலிருந்து சென்று இரண்டு ஆஸ்கர் விருதை அள்ளி வந்த ஏ.ஆர்.ரஹ்மான். அவரை பற்றி நம்ம தமிழ்வாசி பிரகாஷ் சொல்லுறாரு. இங்கிட்டு வந்து அத கொஞ்சம் பாருங்க.

லியோ டால்ஸ்டாய் கடிதங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நண்பர் வழிபோக்கன். லியோ டால்ஸ்டாய் பத்தி இங்கு நான் சொல்லி தெரியவேண்டும் என்ன அவசியம் நம்மவர் யாருக்கும் இருக்காது என நண்புகிறேன். இங்கு போய் படியுங்கள். மறக்காமல் எல்லா கடிதங்களையும் படியுங்கள்.

பேரழகி க்ளியோபாட்ரா. பிலாசபி பிரபா நோ நோ.!! கம்ப்யூட்டர் விட்டு தள்ளி போங்க. அவரை பற்றி வரலாற்று பதிவு. பாக்கும் போது எனக்கே கண்ணுகட்டுது. மனுசன் போன வருசத்தில இருந்து தொடர்ந்து எழுதுகிறார். இதுவரை 47 பகுதிகள் எழுதியிருக்கிறார். இதுல இன்னும் வேற எழுதுவாறாம். ம்ம்.. நெல்லைசாரலில் இருக்கும் இதன் முதல் பகுதி இதுல இருக்கு. அங்க போயி மத்த எல்லா பகுதியையும் படிச்சுக்கோங்க.

வைரம்.!! அட இது யாரோ ஒருவரின் பெயர்னு நினச்சுடாதீங்க. உண்மையான வைரம் தான். அதான் ஜொலிக்குமே அதேதான். அதை பற்றி ஒரு சில சுவாரஸ்ய தகவல்களோடு கமான் கமான்னு கூப்பிடுறாரு அபு அஜ்மல். வைரத்தை பத்தி தெரிஞ்சுக்க உங்களுக்கு கசக்குமா என்ன.? இங்க போய் பாருங்களேன்.

கிரிக்கெட் உலகில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் இருப்பவர் இலங்கை அணியின் முத்தையா முரளிதரண். அவரை பற்றிய ஒரு சில குறிப்புகள் இங்கே இருக்கிறது. என்னை போலவே முரளியை புடித்தவர்களும், இல்லை விரும்பாதவர்களும் கூட போய் பாக்கலாம். முரளி கோச்சிகிட மாட்டார்.

கேட்பாரற்று கிடக்கும் ஒண்ணை தூக்கி தலையில வச்சுகிட்டு பேசுறார். வேற ஒண்ணும் இல்லைங்க நம்ம தமிழை தான். அருள்மொழிவர்மன் சங்க இலக்கியம், தமிழ் மொழியின் வரலாற்றை காட்டு கத்தாக கத்திகொண்டு இருக்கிறார். வந்து பாருங்களேன்.

இந்த வரலாற்று பகுதியின் கடைசியில் இப்போ நாம உண்மையில் ஒரு சரித்திர நாயகனை பாக்க போறோம். நான் முதலில் படித்து மயங்கிய சே குவேரா தான் அது. அவரை பற்றி நண்பர் வருணன் தொடர்ந்து எழுது வருகிறார். சற்று எட்டி பாருங்கள்.!! மனக்கதவு தட்டி திறக்கும்.

சரி இப்ப இம்புட்டு தான். அடுத்த பதிவுக்கு சீக்கிரமே ஓடுவோம்.!!

''ஒன்றை நீ அடைய எண்ணினால் முதலில் நீ அனைத்தையும் இழக்க வேண்டும்''-சே குவேரா
மேலும் வாசிக்க...

Monday, May 30, 2011

இவுங்க மேல எல்லாம் எனக்கொரு பாசம்.!!


பதிவுலகில நான் காலடி எடுத்து வைத்த நொடியிலிருந்து இப்போது வரைக்கும் நிறைய பதிவர்களின் பதிவுகளை படித்திருக்கேன். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை என்ற பெயரில் எனக்கான சில ரசனைகளில் சில பதிவர்கள் என்னை மிகவும் கவர்ந்தனர்.

அப்படி கவர்ந்தவர்களை இங்கே பகிர விரும்புகிறேன்.


முதலில் பிலாசபி பிரபாகரன். இவரிடத்தில் என்ன பிடிக்கும்னு கேக்குறீங்களா.? ஹெல்ப்பிங். அதாங்க உதவுறது.!! அதுக்குனு அவரு முக்குல மூணு அனாதை ஆசிரமம் நடத்துறாரு, அந்தாண்ட நாப்பது பசங்கல படிக்க வைக்கிறாருனு நினச்சுடாதீங்க. எனக்கு ப்ளாக் எப்படி இருக்கணும்னு சொல்லிகொடுத்த குரு அவரு. ரொம்ப புல்லரிக்குதா பிரபா.?

அடுத்து ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி. இவுங்க கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டேனு தான் சொல்லணும். எவ்வளவோ நல்ல விடயங்களை கத்துகிட்டு இருக்கேன். அது பதிவுலகில் மிக அவசியம் இல்லாட்டியும் என் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது. தேங்க்ஸ் ஆனந்தி. இவுங்க பதிவை விட தலைப்பும், படமும் சூப்பரா இருக்கும்.

அப்பரம் யாரு.? கிடு கிடுனு உச்சத்துக்கு போன நிரூபன் தான் அது. உடனே கத்தி கம்ப தூக்கிட்டு வந்திடாதீங்க நிரூ. ஏனா அவருக்கு புகழ்ந்தா பிடிக்காது. அவரு இன்னும நாற்றாவே இருக்கிறாராம். சரி, இவருகிட்ட என்னை போல கமண்ட்டு போடுறது ரொம்ப பிடிக்கும். ஆனா அவரு சொல்லும்போது அவர போலவே நான் கமண்ட் போடுறன்னு சொல்லுவாரு. ஹி ஹி. இவரோட குழந்தை பருவ நிகழ்வுகள் அனைத்தும் அவரு சொல்லும்போது ரொம்ப பிடிக்கும்.

கல்பனா.!! எனக்கு இவருகிட்ட பிடித்ததுனு பாத்தா கொஞ்சம் வித்யாசம் தான். அதாவது இவங்களோட கவிதைக்கு இவங்களோட TAG ஒண்ணு போடுவாங்க. அது ரொம்ப பிடிக்கும். பதிவுலகில் சுத்தி வரும் பாச மலர்னே(மலரா.!?) சொல்லலாம்.

பன்னிகுட்டி ராம்சாமி- இவர தெரியாதவரோ.! இல்ல இவரு ப்ளாக் பக்கம் எட்டி பாக்காதவறே இருக்கமாட்டாங்க. ஆளு கொஞ்சம் காமெடியா எழுதினாலும் என்கிட்ட கொஞ்சம் சீரியஸாவே பேசுவாரு. எனக்கு இது தாங்க புரியவே மாட்டேங்கது. இவர எனக்கு எதுக்காக பிடிக்கும்னே தெரியலங்க.!!

நாஞ்சில் மனோ + சிபி- இவுங்க ரெண்டு பேருகிட்டயும் புடிச்சது ஒண்ணே ஒண்ணுதான். சாலியா பேசுறது. என்ன டெரரா பேசினாலும் சாலியா எடுத்துப்பாங்க. இவுகள எந்த லிஸ்ட்ல சேக்குறதுனே தெரியலங்க. ஆனா இப்ப சிபி கொஞ்சம் சீரியஸா மாறிகிட்டே கிடக்காரு. வேணாம் சிபி.. வேணவே வேணாம்..

ராஜ நடராஜன்- ரொம்பவே சீரியஸாவே பதிவு போடுறவரு. இவர பத்தி எனக்கு அதிகமா தெரியாது. இருந்தாலும் ஒருவரின் பதிவுகளை மட்டுமே வைத்து எனக்கு மிகவும் பிடித்தவரானவராக இவரை நச்சென சொல்லலாம். சூப்பர் ராஜ நட.

கயல்விழி- ரொம்ப பேமஸ் இல்லாத ஒரு பதிவர். ஆனா அவருடைய கவிதைகள் எல்லாம் பக்காவா இருக்கும். சரியான வார்த்தை அமைப்பு, சரியான வரி அமைப்புனு எல்லாமே பக்காவா எழுதுவாங்க. படிப்பு, எக்ஸாம்னு  ரொம்ப படிக்கிறவங்க அதனால பதிவுலகில் அதிகமா சுத்தாதவங்க. எக்ஸாம் முடிஞ்சதும் ஒரு பெரிய ரவுண்டு வருவேன்னு சொல்லி இருக்காங்க. 10வது 12வது ஸ்டேட் ரேங்க் எல்லாம் வாங்கினவங்க. ஹி ஹி..

பலே பிரபு- ஹி ஹி.. ஆமாம் இவர எதுக்காக எனக்கு பிடிக்கும்.? அது ஒண்ணுமில்ல நாங்க ரெண்டு பேரும் ஒரு நல்ல நண்பர்கள். எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பாரு. நடந்து முடிந்த இறுதிகட்ட தேர்வில் 88.5% மார்க் எடுத்தாராம். என்ன செய்ய ஒரு வாழ்த்தை சொல்லிகிடுவோம். அடுத்ததா என் பக்கம் வேற வர்றாரு. அதாவது எதிர்கால புதிய தலைமுறை இதழே இவர நம்பி தான் இருக்கு. ஹி ஹி. அப்பரம் அவருகிட்டயே கேட்டுகிடுங்க.

எல்.கே.,- என்ன பதிவு எழுதினாலும் முதல் ஆளா வந்து ஊக்குவிக்கிறவரு. இவருடைய கடவுள் நம்பிக்கைகள், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவது, மெச்சூரிட்டியான கவிதை எல்லாமே சூப்பரு.

ரஜீவன்- இவரு நம்ம ஓட்ட வடை. ரொம்ப திறமையான ஆட்டக்காரர். ஆட்டக்காரரா? ஹி ஹி. விடுங்க விடுங்க. மாத்தி யோசிக்கிறன் மாத்தி யோசிக்கிறன்னு எல்லாத்தையும் மாத்திடுவாரு போல. அப்படி பட்டவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்னு சொல்றதோட நிறுத்திகிடுறன்.

ரேவா- இவரோட எனக்கு ஆரம்ப காலத்துல ஒரு ஒட்டலு உரசலாவே ஓடிகிட்டு இருந்தது. காரணம்.? இவரது பதிவுகள் எல்லாமே காதல் கவிதைகள். எனக்கு காதல் கவிதைகள்னு சொன்னாலே உவ்வேனு இருந்தது. அதுக்குபிறகு அதன் கருத்தை விடுத்து, ஒருவரின் எழுதுதலுக்கு முக்கியத்துவம் தரணுமே என்னும் என் அறிவுக்கண்ணை திறந்தவர்.

இவர்களை தவிர்த்து ரசிகன் சௌந்தர், தோழி பிரஷா, கலியுகம் தினேஷ், வானம் வெளித்த பின்னும் ஹேமா, நாய்க்குட்டி மனசு, பச்சைத்தமிழன் பாரி போன்றோரையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. சௌந்தரின் நக்கலு, பிரஷா-வின் கவிதைகள், தினேஷ்-ன் சித்தர் புத்தி(ஹி ஹி), ஹேமாவின் அக்கரை, நாய்க்குட்டி மனசு அவர்களின் பாசம், பாரி ஏதோ பதிவு போடுறோம்னு நினச்சுகிட்டு காமெடி பண்றது என அனைத்தும் பிடிக்கும்.

இன்னொருவரையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் பதிவுலகின் புதிய எழுச்சி. எழுத்தில் கார்மேகம் மழை போல பொழிவார். அறிவானவர், வடிவானவர், அர்த்தமுள்ளவர். யாருனு கேக்குறீங்களா.? இங்க போய் பாருங்க.


''இன்று என்னை பற்றிய அறிமுகம் நாளாதலால்-இது ஒரு எக்ஸ்ட்ரா இடுக்கை. இதில் அறிமுகம் என்று பெரியளவில் சொல்லமுடியாது. இருப்பினும், என் மன வெளிபாடை வெளிபடுத்துகிறேன். அவ்வளவே.!!''


''இது ஒரு சாதாரண விளையாட்டில்ல, ஆயுதங்களுக்கு இடையே நடக்கும் புரட்சி''-சே குவேரா

மேலும் வாசிக்க...

குடு மார்னிங் ஆபிஸர்ஸ்.!!

வலைச்சரம்--!! ஒரு வார ஆசிரியர்.!! நான் தான் நானே தான். எங்க ஆபிஸ்ல கூட யாரும் என்ன மதிக்காதபோது எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த சீனா ஐயா முதல்கொண்டு அனைவருக்கும் எனது நன்றிகள் மட்டும் சொல்லிகிடுறன். இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம் என் கையில சிக்கி படாத பாடு பட போகுது.

வலைசரத்தில் எனக்கு பிலாசபி பிராபகரின் பங்கு ரொம்ப பிடிச்சது. அவரை போலவே பர்சனல் இன்ட்ரோ இல்லாம நாமும் ஒரு நாள் ஆசிரியராக ஆகும் போது செய்யணும்னு இருந்தேன். ஆனா என்ன செய்ய.? இப்ப எனக்கு வாய்ப்பு வந்த போது நான் ஒண்ணும் பெரிய ஆளா இல்லையே.! அதனால என்ன பத்தியும் ஒரு 'பிட்'அ போடுறது தான் பெஸ்ட்னு தோணுது.!(ஏன் யா நான் சரியா பேசுறேனா.?)

முதலில் நான் இங்கு வந்த போது என் பெயரில் கூர்மதியன் என வரக்கூடாது கூர்மதியான் என வரவேண்டும் என பலரும் சொன்னர். அது எனக்கு தெரியாமல் இல்லை. ஆனால் என் பெயர் எதற்காக இப்படி வந்ததோ அதை மரபுக்காக மாற்ற விரும்பவில்லை. எதற்காக வந்தது.? அதை அண்ணன் எல்.கே., அழைப்புக்கு இணங்க என் பெயருக்கான புராணம் என்று எழுதி முடித்தேன். இலக்கணமோ இலக்கியமோ.!! கூர்மதியன் என்றே இருக்கட்டும்.

அப்பரம் நான் ரொம்ப ஃபீல் பண்ணி எழுதின பதிவுனா அது எங்க ஸ்கூல பத்தினு சொல்லலாம். ஸ்கூல்..!! என் பள்ளி அழுவதை கண்டேன் என்னும் அந்த பதிவு-மனதில் ஒருவித சோகத்தோடே எழுதினது.

வேலை விசயமா அடிக்கடி வெளியில சுத்துவேன் அப்படி ஒரு நாள் வேலை விசயமா போயிருந்தப்போ அங்க பார்த்தது ரொம்பவே நல்லா இருந்தது.  இதெல்லாம் எங்கயா போச்சு என்னும் பதிவில் அதை பற்றி குறிப்பிட்டிருப்பேன்.

அடுத்ததா அரசியல்..!! அரசியல்னா எனக்கு உயிர்னு கூட சொல்லலாம். CRICKET EXPERTனு சொல்றாங்களே அது போல எல்லா மனிதர்களுக்கும் நான் ஒரு POLITICS EXPERT-ஆக தெரியணும்னு எனக்கொரு ஆசை. ஏதோ எனக்கு தெரிந்த விடயங்களை கொண்டு கலைஞரும், திருவாரூரும், தேர்தலும்னு ஒரு பதிவு போட்டேன்.

அதே சமயம் எனக்கு அப்பப்போ கவிதைகள் எழுதுறது ரொம்ப பிடிக்கும். இப்ப கொஞ்ச நாளா அதிக ஆணி என்பதால் எழுதாம இருந்தேன். நான் எழுதியதில் எனக்கு பகிரகூடிவை என்று பார்த்தால், நான் கண்ட மீசையின் பெயர் என்ன.?, எனக்காக என்னை பிரிந்தால்.!, அதை நானும் அனுபவித்திருக்கிறேன் இருப்பினும்.!? போன்றவை. அரசியல் கவிதைகள்னு கூட எழுதிகிட்டு திரிவேன். அப்படி எழுதியதில் கலைஞரே-நீ ஒரு உத்தமன் என்னும் பதிவு ஒரு வித வருத்தத்தோடே எழுதியது.

இப்படி என்னுடைய பதிவுகள் மூலம் என்னை பத்தி சொல்லணும்னா சொல்லிகிட்டே போவேன். ஆனா கேக்குறதுக்கு யாராச்சும் இருக்கணும்ல. அதனால இதோட ஸ்டாப்பிக்குறேன்.!! இனி ஒன் வீக் வலைச்சரம் என் கட்டுப்பாட்டுல. யாராச்சும் உள்ளாக்க பூந்து இம்சிச்சீங்கோ போட்டுதள்ளிடுவன்.

''நம் செயலுக்கு ஒத்துவராத மற்றவர்கள் வார்த்தைகள் நமக்கு முக்கியமற்றது''-சே குவேரா
மேலும் வாசிக்க...

Wednesday, December 26, 2007

இலக்கியச்சரம்

நாமல்லாம் ஏதோவொரு வகையில் நேரத்தை வீணாக்கிட்டு
இருக்கோம் எழுதுவதை கொஞ்சம் சிரத்தை எடுத்து இன்னும்
மெருகேற்றினால் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் திறமை
போல் நமக்கும் வரும். தேவை நல்ல நூல்களின் வாசிப்புதான்.
எழுத்து அவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல விரிவான
வாசிப்புதளம் உள்ள எவரும் எழுதலாம். அந்த வகையில்
வலையில் இலக்கியத்தரத்துக்கு சற்றும் குறையாமல் எழுதி
வருபவர்களும் அப்படி எழுத முயற்சிப்பவர்களையும் இரண்டு
சரமாக தொகுக்கலாம்.

ஹரன்பிரசன்னா

புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், சிறுகதைகள்,
கவிதைகள் என்ற பிரிவில் வலைப்பதிவுலகில் தனி ஆளுமை
கொண்டவர் ஹரன் பிரசன்னா. இவரின் எந்த பிரிவுகளின் கீழ் பதிவு
எழுதினாலும் அதன் தீவிரத்தை வாசகருக்கு உணர வைப்பார்.
வெறுமனே சுவாரசியம் கொண்டு எழுதப்படும் பதிவுகள் வெகு
சீக்கிரம் மறந்துவிடக்கூடும் ஆனால் இவரின் சில சிறுகதைகள்
வலைப்பதிவர்ளின் படைப்புக்களுக்கு மத்தியில் சிறந்தது என
தைரியமாக கூறுவேன். இவர் எழுதிய மொத்த சிறுகதைகளையும்
படிக்கலாம் இங்கு. எனக்கு மிகவும் பிடித்த என் அனுபவத்தை
படம்பிடித்தது போல அமைந்த சொக்கலிங்கத்தின் மரணம்.
சிறுகதை என்ற வடிவத்திற்கு மிகவும் அவசியமானது என்று
இரண்டு விஷயங்களை கூறலாம் ஒன்று மொழிநடை இரண்டு
பேச்சு வழக்கு இவை இரண்டும் தெளிவாக பயணம் செய்தால்
வாசகனும் எழுத்தின் பின் செல்வான். இவை எல்லாமும்
ஒருங்கே பெற்றவர் ஹரன் ப்ரசன்னா. மேலும் இவர் எழுதி
புகழடைவார் என்பது உண்மை.

சன்னாசி

சன்னாசியின் எழுத்து நுட்பமானது மீள் வாசிப்புகளின் மூலம்
மட்டுமே புரிந்து கொள்ள முடியும் தன்மை உடையது. இதை
நம் பலவீனம் என்றுதான் நினைக்க இயலும். நம்போன்ற சக
மனிதனின் கற்பனைகளை புரிந்துகொள்ளா மனம் பின் எப்படி
சொல்லமுடியும். எனக்கும் இன்னும் பல கவிதைகளும், பலப்பல
புனைவுகளும் புரியவில்லை. இதைத்தான் தனித்துவம் என்று
சொல்லலாம். நான் வாசித்து தெரிந்து கொண்ட வகையில்
தமிழ்மண வாசகர்களுக்கு புனைவு என்ற வடிவத்தை அறிமுக
படுத்தியவர் இவர்தான் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு
மனிதனுக்கும் குரல், முகம் போன்றவை எப்படி தனித்துவமான
அடையாளத்தை தருகிறதோ அதேபோல் ஒவ்வொரு
எழுத்துக்கும் தனித்துவமான அடையாளம் உள்ளது, யாரும்
யாருக்கும் சளைத்தவர் அல்லர். நாம்தான் முகத்தையும்
குரலையும் கவனிப்பது போல அவற்றை கவனிப்பதில்லை.
கவிதைகள் என்று பரவலாக வாசிக்கப்படும் உரைநடைகளுக்கு
மத்தியில் இவரின் பல நுட்பமான கவிதைகள் கவனிக்கப்படாமலே
போயிருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சுட்டி இங்கே கொடுக்கலாம்
என்றாலும் அந்த சுட்டி கூட உங்களால் சொடுக்கப்படாமல்
போகும் அபாயம் இருக்கிறது அதனால் கவிதையையே இங்கு
பகிர்கிறேன்.

கடிகாரங்களைத் திருடுதல்
-சன்னாசி

தூங்கும் சிறுவனின் வலப்பக்கம் தொங்குகிறது
கடிகாரம்
தூக்கம் கலையாமல் கடிகாரத்தைத் திருடித்
தலையணையடியில் ஒளிக்கிறது சிறுவனின் வலக்கை
விழித்தபின் அதிர்கிறது இடக்கை திருடப்பட்ட
கடிகாரத்தைச் சுவரில் கண்டு

சிமிட்டும் கண்களில் சூழ்கிறது புதிர்
தாவரப் புதர்களை விலக்கிச் செல்கிறான் சிறுவன்
தன் தோட்டத்து மரங்களிலொன்றின்
காலடியில் அமர்கிறான் ஒரு செடியைப் பிடுங்கி
தண்டைக் கடிக்கிறான்; நெறிந்து உடைபடுகிறதொரு
நொடி
சோகையாய் அசைகின்றன செம்பருத்திப் பூக்கள்
இலைமேல் ஊரும் கரும்புழுவொன்று சுருள்கிறது

சாலையில் நடக்கும் சிறுவனைச் சுற்றிலும்
மோதிக்கொள்கின்றன பேருந்துகள்
கனரக வாகனங்கள் பாதசாரிகள் பெயரற்ற
நிர்ணய வகுபாட்டில் சிக்கிய துகள்கள்
முடிவற்ற பெயரின்மைகளின் எடை
பாய்ந்துகொண்டேயிருக்கும் ஆபரணம்பூண்ட கல் யாளிகள்
அவைமேல் உறைந்திருக்கும் வெயிலின் சாயைகள்
தாவரப் புதர்களை விலக்கிச் செல்கிறான் சிறுவன்
மணிக்கட்டில் நொண்டிச்செல்கிறது திருடப்பட்ட கடிகாரம்
ஒரு கல்லிடறலில் மோதிக் கீறல்விடுகிறது
காலில் கட்டிய கடிகாரச் சலங்கை

தான் நுழையவிரும்பா இக்கவிதையுள்
எவரோ தன் கணத்தை எறிகிறார்கள்.

அற்புதமான கவிதை என்று சொல்லமுடியாவிட்டாலும், மிக
அற்புதமான கற்பனை.

அய்யனார்

பெயரைப் போல அல்ல இவர். சன்னாசியை போலவே இவரும்
தனித்துவம் நிறைந்த எழுத்துக்கு சொந்தக்காரர். கவிதைகள்
பெண் கவிஞர்களுடன் போட்டி போடா முயல்வதாக இவரிடம்
ஒரு குற்றச்சாட்டு வைத்தவன் நான். பின் தவறு என் பக்கம்
என்றுணர்ந்தேன். படைப்பாளி தன் கற்பனையை பதிவிக்க தமிழில்
உள்ள வார்த்தைகளைக்கூட தேர்ந்தெடுக்கவியலா சூழல்
தமிழில் மட்டுமே உள்ளது. இதைப்பற்றி நாஞ்சில் எழுதிய
மங்கலம் குழூஉக்குறி இடக்கரடக்கல் கட்டுரையை படித்தால்
வெகுசன பத்திரிக்கைகள் கவிதைக்கு கட்டியிருந்த வேலியை
புரிந்து கொள்ளலாம். இவரின் மொழி மிக கடினமான ஒன்றுதான்
ஒப்புக்கொள்ளலாம் ஆனால் ஒதுக்கக்கூடிய ஒன்றல்ல. இவரின்
தலைப்புக்கள் ஒன்றே போதும் திறமையை சொல்ல. எனக்கு
பிடித்த பதிவாக
அடர் கானகப் புலிகளின் குகை திரும்பல்கள்
புனைவுகளில் கவர்ந்ததாக உண்மை சிதைவுகளாலானது அது
எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க
முடியும். என்ற புனைவை சொல்லலாம். பொதுவாக
புனைவுகளின் சுயத்தன்மை நிறைந்திருப்பதாக இருந்தாலும்
எவரும் பொருத்திப் பார்க்க முடிவதுதான் சிறப்பான
அனுபவத்தை தரவியலும். மொழி, வார்த்தைக் கட்டுப்பாடுகளை
களைந்து வாசித்தால் சிறப்பான எதிர்காலம் உள்ளது. இவர்
நாவல் எழுதினால் சிறப்பாக வரும் என்பது என் எண்ணம்.
சினிமா விமர்சனங்கள் குறிப்பிடக்கூடிய ஒன்று சமீபத்தில
எழுதிய பூமியிலிருக்கும் குட்டி நட்சத்திரங்கள் அனைவரது
பாராட்டையும் பெற்றது.

டிசே தமிழன்.

இவரும் புனைவின் வழி நடப்பவர்தான் ஆனால் மற்ற
இருவர்களை போல அத்தனை கடினமாக இருக்காது.
அத்தனை சுலபமாகவும் இருக்காது. இயல்பாக இருக்கும்
என்று கூட சொல்ல முடியாது. பன்முகத்தன்மை கொண்டவர்.
இவரின் இந்த பதிவை பார்த்தவை/வாசித்தவை பற்றிய சில
பகிர்தல்கள் படித்தால் புரியும். அதிகம் விளக்க வேண்டிய
அவசியமில்லாமல் நகரம், உலகசினிமா, உள்ளூர் சினிமா
நகைச்சுவை, இலக்கியம்னு எல்லாமும் கலந்து கட்டி
அடிச்சிருப்பார். பதிவு பெருசா போகுதே என்ற கவலை
அவருக்கு ஒருபோதும் இருந்திருக்காது. விருப்பமுள்ளவன்
வாசித்தே தீருவான். நனவுகளின் பலிக்காலம் என்ற பதிவை
படித்தவுடன் யாருடனும் பேசவே முடியாத பாரம் நெஞ்சை
அழுத்தியது நிறைய அலைகளை உருவாக்கிய கவிதை.

இப்பதிவில் உள்ள எழுத்துக்கள் யாவும் முழுக்க என் புரிதல்
சார்ந்தது. பல பதிவர்கள் பெயர் கண்ணுக்கு தெரிந்தே விட்டுப்
போயிருக்கிறது. அடுத்த பதிவில் தொடர்வேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, December 25, 2007

முத்துச்சரம்

எப்பவும் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி
பெரியவங்களுக்கு மரியாதை செலுத்தணும்னு சொல்வாங்க.
நானும் ரொம்ம்ப மரியாதையான பையன் அதனால வலைப்பூ
உலகத்துலயும் நிஜ உலகத்துலயும் கலந்து இங்கே இயங்கிக்
கொண்டிருக்கும் எழுத்தாளர்களை பார்க்கலாம்.


துளசிதளம் துளசிகோபால்


இவங்ககிட்ட இருக்கும் முக்கியமான விஷயமே உற்சாகம் என்ற
ஒரு வார்த்தைதான். இவர் பதிவை வாசிக்கும்போது அவங்க
நேர்லயே பேசற மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி வலைப்பதிவுல
இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் பூ இவருடையது.
நான் வலைப்பூ எழுத வந்த புதிதில் பின்னூட்டமிட்டு
ஊக்கப்படுத்தியவர் எனக்கு மட்டுமல்ல இன்றுவரை புதிதாக வந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் பின்னூட்டமிட்டு
உற்சாகப்படுத்துவார். வருங்காலத்துல குழந்தைகளுக்கு
பாட்டிகள் கதை சொல்லி சந்தோஷப்படுத்த மாட்டாங்க அந்த
குறையை துளசிதளம் தீர்க்கும். முயற்சி செய்தால் நியூசிலாந்து
பகுதி மற்றும் வீடு "வா வா"ங்குது தொடர்களை புத்தகமாக
வெளியிடலாம். பேதம் பார்க்காமல் அன்பு பாராட்டும்
இவரைப்போல இன்னொருத்தர் இருக்கார். அவரைத்தான் அடுத்து
நாம பாக்கபோறோம். I am very happy to welcome Mrs.வல்லிசிம்ஹன்.
(நேத்து காபி வித் அனுவ பத்தேன் அந்த எபெக்ட்)

வல்லிசிம்ஹன்

இவங்க பதிவை அதிகமா வாசிச்சது கிடையாது ஆனா என்னை
மாதிரியே எழுத்துலயும் வளர்ந்த குழந்தை. எப்படி தேடினாலும்
எழுத்தில் அன்பை மட்டுமே காணமுடியும். இவரை நேரில்
சந்தித்தபோது குழந்தையிடம் பேசியது போல அனைவரிடமும்
பேசியது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. பெரும்பாலும்
ஆன்மீக பதிவுகள் மட்டுமே எழுதுவார். நன்றாக புகைப்படம்
எடுப்பவர். எந்த பதிவுக்கு சுட்டி கொடுக்கறதுன்னு தெரில.
முழுவதும் அப்படியே படிக்கலாம் எல்லாமே சின்ன சின்ன
பதிவுகள்தான்.

கீதா சாம்பசிவம்

மற்ற இரு பதிவர்கள் மாதிரி இவங்க கிடையாது. கொஞ்சம்
இல்ல நிறையவே லூட்டி அடிப்பாங்க. எல்லாமே ரசிக்கிற
மாதிரி இருக்கும். திரும்பி பார்க்கிறேன் (கழுத்து வலியோடு)
இந்த தலைப்பை ரொம்பவே ரசித்தேன். தலைவின்னு சொல்லி
இவங்க படுத்துன பாடு மறக்கவே முடியாது. இவங்களுடைய
பதிவையும் நெடுநாளா வாசிக்கல. அதனால எந்த பதிவை
சிலாகிச்சு எழுதறதுன்னு குழப்பமா இருக்கு அதனால பூவின்
சுட்டிய சொடுக்கி பாருங்க பயங்கரமான சுவாரசியம் உள்ள
பதிவர். ஆன்மீக பதிவுகள் அதிகமா இவரும் எழுதுவார்.
ஏன் இந்த மாதிரி பெரியவங்க எல்லாம் ஆன்மீக பதிவுகள்
மட்டும் நிறைய எழுதறாங்கன்னு தெரில. :)

டோண்டு ராகவன்

வலைப்பூக்களில் மிகவும் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் இவர்
என்றாலும் மிகவும் பழுத்த அனுபவசாலி. இவரிடமிருந்து
கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முதலில்
சொல்ல வேண்டியது மொழிப்புலமை இரண்டாவது அத்தொழிலில்
கொண்டிருக்கும் நேர்த்தி. CPWD அனுபவங்கள் மற்றும் IDPL
நினைவுகள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. மத்திய
அரசு ஊழியர், அரசியல் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்,
மூத்த வலைப்பதிவர் இப்படி பன்முக புலமை பெற்றவர்
இவரின் பிடிவாதகுணம் வியப்பான விஷயங்களில் ஒன்று.

டாக்டர் டெல்பின்

முதலில் இவங்கள பத்தின பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை
ஆனால் எதேச்சையாக இவரின் அபாயத்து பாட்டி என்ற பதிவுதான்
என்னை மிகவும் கவர்ந்தது. வலைப்பூக்களில் மருத்துவ
விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக பதிவுகள் எழுதுவதை அனைவரும்
வரவேற்க வேண்டும். அடுத்ததாக இவர் வலைப்பூவின் தலைப்பு
"இலையிதிர்காலம்" கேட்கவே அழகான பல வடிவங்களை
மனதுக்குள் ஏற்படுத்தும் வார்த்தை.

தருமி

பேராசிரியர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், அனுபவசாலி,
அரசியல் விமர்சகர், மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்,
நல்லவர், வல்லவர், மதுரைக்காரர், கேள்வி கேட்பதில் வல்லவர்
(பதிலும் தெரிந்தே இருக்கும்) இப்படி நிறைய சொல்லலாம்.
புதிதாக வலைப்பதிய வருபவர்கள் காமா சோமா என்று பதிவு
எழுதாமல் மூத்த வலைப்பதிவர்களை பார்த்து உபயோகபூர்வமாக
எழுத வேண்டும். ஏன் சொல்றேன்னா இவருடை வலைப்பூ
பார்த்த பிறகுதான் பதிவு எழுதுனோம்னா அதுல பிரயோஜனமா
எழுதனும் அட்லீஸ்ட் சுவாரசியமாவாச்சும் எழுதனும். ரெண்டும்
இல்லாம நாலு பேர் மட்டும் ரசிக்கற மாதிரி கும்மிகள் அடிக்கறது
அந்த நேரத்துக்கு வேண்டுமானால் சுவாரசியமா இருக்கலாம்.
பின்னால நாம் என்ன எழுதிருக்கோம்னு பாக்கும்போது
"ஒண்ணுமில்லன்னு" தோணிட கூடாது. இந்த அனுபவம் இவர்ட்ட
கத்துகிட்டதுதான்.

இன்னும் அபிஅப்பா, கண்மணி டீச்சர், இலவசகொத்தனார்,
பெனாத்தல் மற்றும் அண்ணாச்சி அவர்கள் விடுபட்டுள்ளார்கள் அவர்களுக்கும் என் முதற்கண் மரியாதைகள். பதிவு ரொம்ப
பெருசா போச்சு அதனால அடுத்த பதிவுல எழுதறேன். :))
மேலும் வாசிக்க...

Sunday, December 23, 2007

பேரன்புடன் ஒரு சரம்

வலைச்சரம் இந்த வாரம் யாராக இருக்கும் என்று ஆவலாக
எட்டிப் பார்க்கும் வாசகர்களுக்கு எனது வணக்கம்.
விதிமுறைகளின்படி என் முதல் சரம் சுயபுராணமா இருக்க
வேண்டும் என்பதால் இங்கே எனது சுயபீத்தல்கள் மட்டுமே
இருக்கும். ஏற்கனவே பலர் வாசித்திருப்பீர்கள்
மீண்டும் அதை நினைவு படுத்தி உங்களை காயப்படுத்த
விரும்பவில்லை. இதுவரை என் பூவை வாசித்திராதவர்கள்
இச்சரத்தின் முதல் பூவின் மூலம் என்னை தெரிந்து கொள்ளலாம்.

ஏனைய நண்பர்களை போலவே எந்த நோக்கமும் இன்றி எழுத
ஆரம்பித்தவன் இன்றுவரை அதையே தொடர்கிறேன். என்
வலைப்பூவை ஆரம்பகாலத்தில் இருந்து வாசித்தவர்கள் இப்போதுள்ள மாற்றத்தை எளிதாக காணலாம். ஆரம்பத்தில் நகைச்சுவையாக
எழுதினேன். அப்போதுதான் நிறைய பேர் என்னை கவனித்தார்கள்
எனக்கு நிறைய நண்பர்கள் தந்த தண்டவாளத்துல ஒண்ணுக்கு
போனா தப்பா? பதிவுதான் என் முகவரி. இதை எழுதும்போது
பயங்கர காமெடின்னு நினைச்சேன், ஆனா இப்ப வாசிச்சா எனக்கே
சிரிப்பு வரமாட்டேங்குது.

வாலிப வயசு1 2 3 4 என்ற நகைச்சுவையும் வெகுவாக எல்லோராலும வாசிக்கப்பட்டது. தெருக்கூத்து பற்றி எழுதியது கிராமத்தையும்
மண்வாசனையும் பிரிந்து நகரத்து புழுதியில் கரைந்துவிட்ட
உள்ளங்களை என் பக்கம் சேர்த்தது. எப்படி என்ற வரிசையில்
அனைவரும் பதிவு எழுதிக் கொண்டிருந்த நேரம் வித்யாசமாக
வறட்டி தட்டுவது எப்படி? என்று நகைச்சுவையாக பதிவு போட
கிராமத்து நினைவுகளை கிண்டி கிளறி நோண்டி விட்டதாக பலர்
குற்றம் சாட்டினார்கள். மேலதிகமா ஒரு அம்மணி மாட்டு
சாணியவே பாத்ததில்லன்னு பின்னூட்டத்துல சொன்னாங்க.

இப்படி நகைச்சுவையா எழுதிட்டு இருந்தப்பதான் கொஞ்ச நாள்ல
போர் அடிச்சது(மேட்டர் இல்லன்றத இப்படியும் சொல்லலாம்)
ஆங்கிலப் படங்கள் பாத்துட்டு உதார் விடறது. சிறுகதை எழுதறதுன்னு
வேற பக்கம் போனேன். பள்ளில படிக்கும்போதே ஆங்கிலப்படங்கள்
அதிகமா பார்ப்பேன் அதுல்லாம் காட்சில்லா, ஜுராசிக் பார்க் மாதிரி
இங்க ரசனை வேற மாதிரி போய் நிஜங்களின் நிழல்களை உணர்த்தும்
படங்களை பார்க்க ஆரம்பிச்சேன். அப்படி பார்த்த படம் த்ரீ பரியல்ஸ்
(three Burials) நட்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து
எடுத்திருக்கும் படம் உலகத்துலயே இது ஒண்ணுதான்.

படைப்புகள்ல எனக்கு மிகவும் பிடித்தமானது சிறுகதைகள்தான்
சொல்ல வரும் கருத்தை, உணர்வை காட்சிப்பூர்வமா பதிவிக்க
சிறுகதையால் மட்டுமே முடியும்னு நம்பறேன். அந்த வகைல
என்னோட சிறுகதைகளுக்கு ஓரளவு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்
வாசகர்கள். எழுதின சிறுகதைகள் எல்லாமே சொந்த வாழ்விலும்
நேரிலும் பார்த்த அனுபவங்களே, ஒன்று கூட கற்பனை அல்ல.
எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி இருந்தாலும் எனக்கு
பிடிச்சதா மாணிக்கம் பொண்டாட்டி, பூனைகளுடன் உறங்கும்
கோபால் மற்றும் அன்பின் நிராகரிப்புகள் என்ற மூன்று கதைகள்.
சமீபத்தில் எழுதிய ரகசிய தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்
கூட புதிய முயற்சியாக trans gender சப்ஜெக்டை எடுத்திருந்தேன்.
இவை எல்லாம் சிறந்த கதைகள் என்று சொல்ல முடியாது
ஆனால் நல்ல துவக்கம் என்று சொல்லலாம்.

எனக்கு எல்லா விஷயத்திலும் சீக்கிரமே சலிப்பு வந்துவிடும்
ஆனால் சலிப்பு வராத விஷயம் இசை, சினிமா, புத்தகங்கள். இங்க
புத்தகங்கள் அதிகமா கிடைக்காட்டியும் நண்பர்கள் மூலமா
புத்தகங்கள் கிடைச்சது. புயலிலே ஒரு தோணி படிச்சதுக்கு
அப்புறம்தான் என்னோட வாசிப்பும் சரி எழுத்தும் சரி வேறு
தளத்துக்கு மாறுச்சு. அற்புதமான நாவல் பிறகு அய்யனாரிடம்,
ஆசிப்பிடமும் ஆட்டையை போட்டு படித்த நூல்களை வலைப்பூவில்
நூல்நயம் என்ற பிரிவின் கீழ் பீற்றிக்கொண்டதை பார்த்து
எலக்கியவாதி என்று ஊர் தூற்றியது உலகறிந்த கதை. அந்த
நூல் அறிமுக பதிவுகளில் எனக்கு பிடித்தது சதுரங்க குதிரை

கவிதை முயற்சி எல்லாமே சொதப்பலாதான் முடிஞ்சிருக்கு
ஆனால் அக்கா பிறந்தநாளுக்காக எழுதின கவிதையான
பேரன்பு கொண்டவள் என்ற கவிதைதான் எழுதியதிலேயே
சிறந்ததுன்னு சொல்வேன். தயவு செய்து கவிதை லேபிள் க்ளிக்கி
வேறெந்த கவிதையும் படிச்சிங்கன்னாஎன்னோட
இமேஜே காலியாகிடும்.

பத்து சுட்டிகளுக்கு மேல கொடுக்க கூடாதுன்னு பாத்தேன்.
பில்டிங்காச்சும்ஸ்ட்ராங்கா குடுப்பமேன்னு ஆர்வத்துல
அதிகாயிடுச்சு.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது