பேரன்புடன் ஒரு சரம்
வலைச்சரம் இந்த வாரம் யாராக இருக்கும் என்று ஆவலாக
எட்டிப் பார்க்கும் வாசகர்களுக்கு எனது வணக்கம்.
விதிமுறைகளின்படி என் முதல் சரம் சுயபுராணமா இருக்க
வேண்டும் என்பதால் இங்கே எனது சுயபீத்தல்கள் மட்டுமே
இருக்கும். ஏற்கனவே பலர் வாசித்திருப்பீர்கள்
மீண்டும் அதை நினைவு படுத்தி உங்களை காயப்படுத்த
விரும்பவில்லை. இதுவரை என் பூவை வாசித்திராதவர்கள்
இச்சரத்தின் முதல் பூவின் மூலம் என்னை தெரிந்து கொள்ளலாம்.
ஏனைய நண்பர்களை போலவே எந்த நோக்கமும் இன்றி எழுத
ஆரம்பித்தவன் இன்றுவரை அதையே தொடர்கிறேன். என்
வலைப்பூவை ஆரம்பகாலத்தில் இருந்து வாசித்தவர்கள் இப்போதுள்ள மாற்றத்தை எளிதாக காணலாம். ஆரம்பத்தில் நகைச்சுவையாக
எழுதினேன். அப்போதுதான் நிறைய பேர் என்னை கவனித்தார்கள்
எனக்கு நிறைய நண்பர்கள் தந்த தண்டவாளத்துல ஒண்ணுக்கு
போனா தப்பா? பதிவுதான் என் முகவரி. இதை எழுதும்போது
பயங்கர காமெடின்னு நினைச்சேன், ஆனா இப்ப வாசிச்சா எனக்கே
சிரிப்பு வரமாட்டேங்குது.
வாலிப வயசு1 2 3 4 என்ற நகைச்சுவையும் வெகுவாக எல்லோராலும வாசிக்கப்பட்டது. தெருக்கூத்து பற்றி எழுதியது கிராமத்தையும்
மண்வாசனையும் பிரிந்து நகரத்து புழுதியில் கரைந்துவிட்ட
உள்ளங்களை என் பக்கம் சேர்த்தது. எப்படி என்ற வரிசையில்
அனைவரும் பதிவு எழுதிக் கொண்டிருந்த நேரம் வித்யாசமாக
வறட்டி தட்டுவது எப்படி? என்று நகைச்சுவையாக பதிவு போட
கிராமத்து நினைவுகளை கிண்டி கிளறி நோண்டி விட்டதாக பலர்
குற்றம் சாட்டினார்கள். மேலதிகமா ஒரு அம்மணி மாட்டு
சாணியவே பாத்ததில்லன்னு பின்னூட்டத்துல சொன்னாங்க.
இப்படி நகைச்சுவையா எழுதிட்டு இருந்தப்பதான் கொஞ்ச நாள்ல
போர் அடிச்சது(மேட்டர் இல்லன்றத இப்படியும் சொல்லலாம்)
ஆங்கிலப் படங்கள் பாத்துட்டு உதார் விடறது. சிறுகதை எழுதறதுன்னு
வேற பக்கம் போனேன். பள்ளில படிக்கும்போதே ஆங்கிலப்படங்கள்
அதிகமா பார்ப்பேன் அதுல்லாம் காட்சில்லா, ஜுராசிக் பார்க் மாதிரி
இங்க ரசனை வேற மாதிரி போய் நிஜங்களின் நிழல்களை உணர்த்தும்
படங்களை பார்க்க ஆரம்பிச்சேன். அப்படி பார்த்த படம் த்ரீ பரியல்ஸ்
(three Burials) நட்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து
எடுத்திருக்கும் படம் உலகத்துலயே இது ஒண்ணுதான்.
படைப்புகள்ல எனக்கு மிகவும் பிடித்தமானது சிறுகதைகள்தான்
சொல்ல வரும் கருத்தை, உணர்வை காட்சிப்பூர்வமா பதிவிக்க
சிறுகதையால் மட்டுமே முடியும்னு நம்பறேன். அந்த வகைல
என்னோட சிறுகதைகளுக்கு ஓரளவு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்
வாசகர்கள். எழுதின சிறுகதைகள் எல்லாமே சொந்த வாழ்விலும்
நேரிலும் பார்த்த அனுபவங்களே, ஒன்று கூட கற்பனை அல்ல.
எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி இருந்தாலும் எனக்கு
பிடிச்சதா மாணிக்கம் பொண்டாட்டி, பூனைகளுடன் உறங்கும்
கோபால் மற்றும் அன்பின் நிராகரிப்புகள் என்ற மூன்று கதைகள்.
சமீபத்தில் எழுதிய ரகசிய தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்
கூட புதிய முயற்சியாக trans gender சப்ஜெக்டை எடுத்திருந்தேன்.
இவை எல்லாம் சிறந்த கதைகள் என்று சொல்ல முடியாது
ஆனால் நல்ல துவக்கம் என்று சொல்லலாம்.
எனக்கு எல்லா விஷயத்திலும் சீக்கிரமே சலிப்பு வந்துவிடும்
ஆனால் சலிப்பு வராத விஷயம் இசை, சினிமா, புத்தகங்கள். இங்க
புத்தகங்கள் அதிகமா கிடைக்காட்டியும் நண்பர்கள் மூலமா
புத்தகங்கள் கிடைச்சது. புயலிலே ஒரு தோணி படிச்சதுக்கு
அப்புறம்தான் என்னோட வாசிப்பும் சரி எழுத்தும் சரி வேறு
தளத்துக்கு மாறுச்சு. அற்புதமான நாவல் பிறகு அய்யனாரிடம்,
ஆசிப்பிடமும் ஆட்டையை போட்டு படித்த நூல்களை வலைப்பூவில்
நூல்நயம் என்ற பிரிவின் கீழ் பீற்றிக்கொண்டதை பார்த்து
எலக்கியவாதி என்று ஊர் தூற்றியது உலகறிந்த கதை. அந்த
நூல் அறிமுக பதிவுகளில் எனக்கு பிடித்தது சதுரங்க குதிரை
கவிதை முயற்சி எல்லாமே சொதப்பலாதான் முடிஞ்சிருக்கு
ஆனால் அக்கா பிறந்தநாளுக்காக எழுதின கவிதையான
பேரன்பு கொண்டவள் என்ற கவிதைதான் எழுதியதிலேயே
சிறந்ததுன்னு சொல்வேன். தயவு செய்து கவிதை லேபிள் க்ளிக்கி
வேறெந்த கவிதையும் படிச்சிங்கன்னாஎன்னோட
இமேஜே காலியாகிடும்.
பத்து சுட்டிகளுக்கு மேல கொடுக்க கூடாதுன்னு பாத்தேன்.
பில்டிங்காச்சும்ஸ்ட்ராங்கா குடுப்பமேன்னு ஆர்வத்துல
அதிகாயிடுச்சு.
|
|
வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete///என் வலைப்பூவை
ஆரம்பகாலத்தில் இருந்து வாசித்தவர்கள் இப்போதுள்ள மாற்றத்தை
எளிதாக காணலாம்////
"மேலதிகமா" எப்ப இதுபோல் வார்த்தைகளை உபயோகப்படுத்த ஆரம்பிச்சிங்களோ அப்பொழுதே தெரிகிறது இதுக்கு யார் காரணம் என்று:)
டம்பி
ReplyDeleteசைக்கிள் கேப் ல புல் டோசர் ஓட்டிட்டியே :)
வாழ்த்துக்கள் ராசா ;))
ReplyDeleteநன்றி இளா!
ReplyDeleteலே குசும்பர்
வாழ்த்துக்கு நன்றி?
யார் காரணமா இருந்தாலும் என்னோட முயற்சின்னு ஒண்ணு இருக்கு அத மறந்துடாதிங்க குசும்பர்.
அய்ஸ்
வாய்யா அவனவன் ஏரோப்ளேனே ஓட்டறான் நான் புல்டோசர் ஓட்டினா தப்பா?
நீங்க நாஞ்சில் நாடனெல்லாம் படிப்பீங்களா.. தெரியாமப் போச்சே. இனி உங்களை விடக்கூடாது..-))
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDelete//நீங்க நாஞ்சில் நாடனெல்லாம் படிப்பீங்களா.. தெரியாமப் போச்சே. இனி உங்களை விடக்கூடாது..-))//
ReplyDeleteசுந்தர்
நாஞ்சில் நாடனையும் படிப்பேன் அந்த எழுத்தின் வசீகரம் பிடிக்கும். மற்றபடி எல்லாரையும் பிடிக்கும். தரமான எழுத்துன்றது அனுபவத்தை பொறுத்து மாறும். எதிர்காலத்துல எப்படின்னு தெரில. :_)
நன்றி ஜேகே