மல்லிகைச் சரம்
கை தட்ட வந்தவன் கைகளுக்கு சரம் தொடுக்க வாய்ப்பு. எந்த வித முன் தயாரிப்புகளுமின்றி இந்த வார வலைசரத்தை தொடுக்க இருக்கிறேன். எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பு இன்னுமொரு எதிர்பாரத மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. வலைச்சரத்தின் 250வது சரமிது. இதுவரை இந்த வலைச்சரத்தை சிறப்பாக செய்து வந்த அனைவருக்கும் என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். சிந்தாநதி,பொன்ஸ் மற்றும் அழைப்பு அனுப்பிய முத்துலட்சுமி அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. சில தகவல் பரிமாற்ற குளறுபடிகளில் நண்பனுக்கு பதிலாக நான் வலைச்சரம் தொடுக்கிறேன்
அவரவர் நிலத்தில்
உதிரிப்பூக்களாய் மணம் வீசும்
வலைப்பூக்களை
தமிழ் கொண்டு
தொடுக்கிறேன்
சரமாய் வலைச்சரமாய்.
வலைச்சரத்தின் விதிகளின் படி என்னைப்பற்றியும் என் பழைய பதிவுகளைப் பற்றியும் விளம்பரபடுத்திக்கொள்ள வாய்ப்பிருந்தாலும் அதிலேதும் எனக்கு நாட்டமில்லை. நான் படித்தவற்றை, படித்தவற்றுள் ரசித்தவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
இந்த வார வலைச்சரத்தை புற்றுநோயால் போராடிக் கொண்டிருப்பினும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து வலை பதிந்துவரும் அனுராதா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்ற வேண்டிக்கொள்கிறேன்
|
|
//அவரவர் நிலத்தில்
ReplyDeleteஉதிரிப்பூக்களாய் மணம் வீசும்
வலைப்பூக்களை
தமிழ் கொண்டு
தொடுக்கிறேன்
சரமாய் வலைச்சரமாய்.//
:))
நச்சுன்னு ஒரு super கவித..
வருக முத்துக்குமரன்...
நண்பனுக்குப் பதிலாவா?
ReplyDeleteநீங்களும் நம்ம நண்பர்தான்:-))))
வலைச்சரத்தை, அடர்த்தியாகத் தொடுத்து வழங்க
வாழ்த்து(க்)கள்.
ஒரு முழமுன்னு அரை முழம் கொடுக்கக்கூடாது,ஆமாம்:-))))
வாழ்த்துக்கள் முத்து ;)
ReplyDeleteநன்றி சென்ஷி, துளசி கோபால், கோபிநாத்
ReplyDelete