அசை போட்டேன்!
நம் தமிழ்மணத்தை பொறுத்த வரை மிக பெரிய ப்ளஸ் ஏதுனா உலகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அதை குறித்த பதிவு கண்டிப்பாக இருக்கும். அதை பற்றிய புரிதல் நமக்கு இல்லாத போதிலும் அந்த தலைப்பைக் கொண்டு வரும் பதிவுகளை படித்தாலே போதும். எதிர்வினை பதிவுகளும் வரும். நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களை பொறுத்தது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய தலைப்புகள் என்று பார்த்தால் இட ஒதுக்கீடு, சேது கால்வாய் திட்டம், தமிழ் வழிக் கல்வி, பொருளாதாரா ஏற்றத் தாழ்வுகள் என்று அடுக்கி கொண்டே போகலாம்.
- என்பது என்னவென்று உங்களுக்கே தெரியும். அதுனால அது வேண்டாம்.
இது போன்று மிக பரந்து விரிந்த இந்த தமிழ் பதிவுலகில் நானும் இருப்பது என்றுமே ஆனந்தம் தரும் விசயம் தான். அந்த ஆனந்ததுக்கு மேலும் இன்பம் சேர்க்கும் விதமாக அமைந்தது இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. இடம் அளித்த வலைச்சரம் குழுவினருக்கு என் நன்றிகள்.
இந்த வாரத்தில் 2006ம் ஆண்டில் இருந்து வெளி வந்த பதிவுகளாக தர வேண்டும் என்று எண்ணியப்படியே (பத்ரியின் ஒரு பதிவை தவிர்த்து - 2005) அந்த வருடத்தில் இருந்தே பதிவுகள் எடுத்து சரம் தொடுத்தேன். கூடவே நான் தொடுத்த பதிவுகள் எல்லாம் அந்த நேரத்தில் நான் யோசித்த போது என் நினைவுக்கு வந்த பதிவுகள். அவற்றை விட குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பதிவுகள் கண்டிப்பாக விட்டு போய் இருக்கும். குறுகிய கால அவகாசம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் விடு பட்டு போனதற்கு என் வருத்தங்கள்.
இந்த வாரத்தில் நான் கொடுத்த வலைச்சுட்டிகள் சிலருக்கு முதுகை தட்டிக் கொடுத்தது போலவும், சிலருக்கு முதுகை சொறிந்து விட்டது போலவும் இருந்து இருக்கலாம். என்னை பொறுத்த வரையில் இரண்டிலும் உண்மை இல்லை. தட்டிக் கொடுக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவனும் இல்லை, சொறிந்து விட வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு தோன்றியவற்றை வகை பிரித்து பதிவாக்கினேன். ரசித்து இருந்தால் நன்றிகள். ரசிக்கும்படி இல்லையென்றாலும் நன்றிகள் + வருத்தங்கள்.
எனக்கு பிடித்த பதிவுகளை மறுபடியும் படித்து அசை போட வைத்தற்க்கு வலைச்சரத்துக்கு மீண்டும் நன்றிகள் பல!
ஆசிரியரா இருந்துட்டு புத்திமதி சொல்லாமல் போன எப்படி? அப்படிங்குற கேள்வியை தவிர்க்க - வருகின்ற எல்லா பதிவுகளையும் முடிந்த அளவு தவறாமல் படியுங்கள், படித்தவுடன் என்ன தோணுகிறதோ அதை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.
|
|
\\என்ன தோணுகிறதோ அதை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.\\
ReplyDeleteஇந்த வாரம் நல்லதொரு வாரம் ;)
வாழ்த்துக்கள் ;)
//நம் தமிழ்மணத்தை பொறுத்த வரை மிக பெரிய ப்ளஸ் ஏதுனா உலகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அதை குறித்த பதிவு கண்டிப்பாக இருக்கும்///
ReplyDelete- என்னது தமிழ்மணம் பார்த்தா நாடு நிலைமையை தெரிஞ்சுக்கிறன்னு? பதிவர்கள் கிண்டலடித்தை எங்கோ பார்த்த ஞாபகம்கூட-
அயல்நாடுகளில் வாழும் நம்மை போன்றேருக்கு எல்லா சேதிகளுமே இங்க வந்தா கிடைச்சுடும்ங்கறது உண்மைதானே! -
இப்படி ஓசைப்படாம,ஆசிரியர் வந்துட்டுப்போறதை இப்பத்தான் பார்த்தேன்.
ReplyDeleteகண்டுகொண்டதுக்கு நன்றி சிவா.
நானும் நாட்டுநடப்பை இங்கே தமிழ்மணத்தில்தான் தெரிஞ்சுக்கறேன்.
நல்லா இருந்திச்சி உங்க வாரம். வாழ்த்துக்கள்
ReplyDelete@ கோபி!
ReplyDeleteநன்றி சகா!
தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்தியதற்கு உனக்கு மீண்டும் ஒரு ஸ்பேஷல் நன்றி
@ ஆயில்யன்!
ReplyDeleteத.ம பார்த்து தான் நாட்டு நடப்பை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை. ஆனால் நாட்டில் நடக்கும் எந்த ஒரு விசயத்தையும் பத்திரிக்கைகளை விட மிக விரிவாக அலசப்படுவது த.ம. தான் என்பது என் நம்பிக்கை.
@துளசி கோபால்!
ReplyDeleteஉங்களை கண்டுக்காம இருக்க முடியுமா என்ன?
யானை வந்தா ஒசை அதிகமா இருக்கும். புலி தானே அதான் சத்தம் போடாம வந்துட்டு வேலை முடிச்சதும் ஒடிப் போயிடுச்சு :)
@ பேபி பவன்!
ReplyDeleteநன்றி குழந்த! :)
//நல்லாவே அசை போட்ருக்கீங்க :)//
ReplyDeleteவேதா!
ஒரு ரைமிங்கா இருக்குட்டுமே என்று தலைப்பு வச்சா.. நீங்க ஏதோ மாடு அசை போட்ட மாதிரி வந்து சொல்லிட்டு போறீங்களே!
எதா இருந்தாலும் நன்றி!