நம் தமிழ்மணத்தை பொறுத்த வரை மிக பெரிய ப்ளஸ் ஏதுனா உலகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அதை குறித்த பதிவு கண்டிப்பாக இருக்கும். அதை பற்றிய புரிதல் நமக்கு இல்லாத போதிலும் அந்த தலைப்பைக் கொண்டு வரும் பதிவுகளை படித்தாலே போதும். எதிர்வினை பதிவுகளும் வரும். நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களை பொறுத்தது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய தலைப்புகள் என்று பார்த்தால் இட ஒதுக்கீடு, சேது கால்வாய் திட்டம், தமிழ் வழிக் கல்வி, பொருளாதாரா ஏற்றத் தாழ்வுகள் என்று அடுக்கி கொண்டே போகலாம்.
- என்பது என்னவென்று உங்களுக்கே தெரியும். அதுனால அது வேண்டாம்.
இது போன்று மிக பரந்து விரிந்த இந்த தமிழ் பதிவுலகில் நானும் இருப்பது என்றுமே ஆனந்தம் தரும் விசயம் தான். அந்த ஆனந்ததுக்கு மேலும் இன்பம் சேர்க்கும் விதமாக அமைந்தது இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. இடம் அளித்த வலைச்சரம் குழுவினருக்கு என் நன்றிகள்.
இந்த வாரத்தில் 2006ம் ஆண்டில் இருந்து வெளி வந்த பதிவுகளாக தர வேண்டும் என்று எண்ணியப்படியே (பத்ரியின் ஒரு பதிவை தவிர்த்து - 2005) அந்த வருடத்தில் இருந்தே பதிவுகள் எடுத்து சரம் தொடுத்தேன். கூடவே நான் தொடுத்த பதிவுகள் எல்லாம் அந்த நேரத்தில் நான் யோசித்த போது என் நினைவுக்கு வந்த பதிவுகள். அவற்றை விட குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பதிவுகள் கண்டிப்பாக விட்டு போய் இருக்கும். குறுகிய கால அவகாசம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் விடு பட்டு போனதற்கு என் வருத்தங்கள்.
இந்த வாரத்தில் நான் கொடுத்த வலைச்சுட்டிகள் சிலருக்கு முதுகை தட்டிக் கொடுத்தது போலவும், சிலருக்கு முதுகை சொறிந்து விட்டது போலவும் இருந்து இருக்கலாம். என்னை பொறுத்த வரையில் இரண்டிலும் உண்மை இல்லை. தட்டிக் கொடுக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவனும் இல்லை, சொறிந்து விட வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு தோன்றியவற்றை வகை பிரித்து பதிவாக்கினேன். ரசித்து இருந்தால் நன்றிகள். ரசிக்கும்படி இல்லையென்றாலும் நன்றிகள் + வருத்தங்கள்.
எனக்கு பிடித்த பதிவுகளை மறுபடியும் படித்து அசை போட வைத்தற்க்கு வலைச்சரத்துக்கு மீண்டும் நன்றிகள் பல!
ஆசிரியரா இருந்துட்டு புத்திமதி சொல்லாமல் போன எப்படி? அப்படிங்குற கேள்வியை தவிர்க்க - வருகின்ற எல்லா பதிவுகளையும் முடிந்த அளவு தவறாமல் படியுங்கள், படித்தவுடன் என்ன தோணுகிறதோ அதை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.
மேலும் வாசிக்க...
தொடர் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருவது நம்ம டீச்சர் துளசி கோபால் தான். தொடர்ந்து தொடர் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே! அவரின் நியூஸிலாந்து பற்றிய தொடர் அந்த நாட்டை பற்றி தெரிந்துக் கொள்ள படிக்க வேண்டியது. அதே போல் அவரின் இந்த தொடரையும் படிச்சு பாருங்களேன். லேபிள் கொடுக்காதா காரணத்தால் ஒவ்வொரு பதிவாக போய் தான் படிக்க வேண்டியது இருக்கும்.
துளசி கோபால் - எவ்ரிடே மனிதர்கள்ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவலுக்கு இணையாக விறுவிறுப்பாக செல்வன் எழுதிய இந்த தொடர் எனக்கு பிடிச்ச தொடர் கதையில் ஒன்று.
செல்வன் - அஞ்சேல் எனாத ஆண்மைதுறை சம்பந்தப்பட்ட தொடர்களில் வடவூர் குமார் தன் கட்டுமானத்துறையை குறிந்து எழுதிய தொடர்.
வடவூர் குமார் - மின் தூக்கி மேம்பாடுதேவ் வின் அனைத்து கதைகளுமே நம் வாழ்வோடு பொருத்தி பார்க்கும்படி அமைவது மிகவும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அவரின் இந்த நண்பனின் காதலி தொடரை படித்து பாருங்களேன்.
தேவ் - நண்பனின் காதலிபங்கு துறை பற்றி நம்ம செல்லமுத்து குப்புசாமி எழுதிய தொடர் பதிவுகள் எல்லாம் ரொம்ப எளிமையாக இருக்கும். சாமானியரும் புரிந்துக் கொள்ள கூடிய வகையில் உதாரணம் கூறுவது அவரின் தனித்திறமை. இப்பொழுது நம்ம மங்களுர் சிவாவும் பங்கு துறை பற்றி பதிவு எழுதி வருகின்றார்.
செல்லமுத்து குப்புசாமி - ராகுல் திராவிட் - பங்கு முதலீட்டுத் தத்துவம்வெட்டிப்பயலில் இந்த தொடர் கண்டிப்பாக சாப்ட்வேர் துறையில் நுழைய உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
வெட்டிப்பயல் - சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்கஒரு தொடர் எழுதுவது என்பது எவ்வளவு கஷ்டமான விசயம் என்பது எனக்கு தெரியும். அதையும் மீறி ஆர்வக் கோளாறுல ஆரம்பிச்சு இன்னமும் தொடர முடியுமா நிக்குது என் கன்னி வெடி தொடர். அதை முடிச்சுட்டு ஹைத்தி, சூடான் பற்றிய தொடர்கள் எழுதலாம் என்று எண்ணம், பாக்கலாம்.
நாகை சிவா - கண்ணி வெடி
மேலும் வாசிக்க...
எஸ்.கே. வின் ஆன்மிகம், மருத்துவ பதிவுகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் இந்த பதிவு செம ஜாலியா எழுதப்பட்டது. அவரு ஒரு மருத்துவர் அவரே அனுபவி ராசா அனுபவினு சொல்லுவதை படியுங்கள்
வி.எஸ்.கே. வின் - அனுபவி ராசா அனுபவிஏது ஏதுக்கோ டம்மிஸ் போடுறாங்க, ஆனா நம்மள மாதிரி இளசுகளுக்கு ஜொள்ளு பாண்டி போடும் டம்மிஸ்ச பாருங்க
ஜொள்ளு பாண்டியின் - ஜொள்ளு பார் டம்மிஸ்நம்மை எல்லாம் ஆபிஸ் ல வேலைக்கு சேர்த்ததே பெரிய விசயம். இதுல தமிழ் பதிவுகள் போக மீதி நேரம் இருக்கும் போது பொழுதை எப்படி கழிக்கலாம் என்று நம்ம சந்தோஷ் சொல்லுறாரு.
சந்தோஷ் - வெட்டியாய் பொழுதை கழிப்பது எப்படி?வெட்டியின் கோழி அட்டகாசங்கள் படித்தால் நம் கல்லூரியிலோ, பள்ளியிலோ இது போல் ஒருவன் நம்மோடு இருந்தது நினைவுக்கு வரும்.
வெட்டிப்பயல் - கோழியின் அட்டகாசங்கள்டி.ஆரை எப்படி எல்லாருமே ஜாலியா கலாய்ப்பாங்களோ அதே போல் ஒரு நிலையை நோக்கி நம்ம சொம்பும் சீ சிம்புவும் போறது எல்லாருக்கு தெரிஞ்ச செய்தி தான். நம்ம ஜி எப்படி அவரை ஜாலியா கலாய்க்குறாருனு பாருங்க
ஜி - லொள்ளு சபா "பல்லவன்"சொந்தங்களில் நமக்கு ஒரு நண்பர் எப்படியாச்சும் ஒருத்தர் இருப்பார். அது போல் நம்ம சவுண்ட் பார்ட்டிக்கு அமைந்த சொந்தத்தில் நண்பரின் ஜாலியான கலாட்டா
உதய் - வாசுவும் வெடைக்கோழியும்நாம் கல்லூரியில் படிக்கும் போது ஒரு கல்லூரி பாடல் எல்லா கல்லூரிக்கும் இருக்கும். ஒரே பாட்டா இருக்கும் ஆனால் அந்த அந்த கல்லூரிக்கு ஏற்ப வார்த்தைகளை போட்டு மாற்றி இருப்பார்கள். அது போல நம் கப்பி இங்கு பாம்ம்ம்ம்... பீம்ம்ம்ம்ம்ம்... மற்றும் சல புல சல புல ராகங்களை எடுத்து வைக்கிறார்.
கப்பிபய - கல்லூரி பாடல்
மேலும் வாசிக்க...
தமிழ்மணத்தை விட்டு சற்று விலகி இருக்கும் ஆனால் அடிக்கடி தமிழ்மணத்துக்கு வந்து போகும் சிலரை பாக்கலாம்.
விக்கியின் தண்டரோ, இது கண்டதையும் சொல்லும், ஆனால் உருப்படியாக சொல்லும். இவரை பத்தி சொல்லனும் என்றால் ஒரே வரியில் புதுமை விரும்பி. எல்லாத்தையும் எழுதுவார், கவிதையை தவிர :) நான் விரும்பி படிக்கும் பதிவர்களில் ஒருவர். இவர் பதிவுகளில் குறிப்பிட்டு ஒரு பதிவு சொல்வது கடினம். இவர் தொடர்ந்து தலைப்பிட்டு எழுதும் "நினைத்தேன் எழுதுகிறேன்" தான் என் முதல் விருப்பம். நீங்களும் அதை பாருங்களேன்.
விக்கி யின் - நினைத்தேன் எழுதுகிறேன்உமாநாத்(விழியன்)- இவர் கதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள், புகைப்படங்கள், புத்தக விமர்சனம், இலக்கியம் என எல்லாத்திலும் கலக்கும் பதிவர். இவரை நேரில் சந்தித்த பிறகு தான் இவரின் வலைப்பூ அறிமுகம். பகத்சிங் அள்ளிய ஒரு பிடி மண் பகத்சிங் க்கு கடிதம் எழுதுவது போல் இவர் இட்ட பதிவு உங்கள் பார்வைக்கு.
விழியனின் - மண்ணின் மைந்தனுக்கு ஒரு பிடி மண்ணின் கடிதம்வேதா - இவர் கதைகள், கவிதைகள், நாட்டு நடப்பு, ஆன்மிகம் என பல வித முகங்களை காட்டுபவர். சொல்ல வருவதை சில சம்பவங்களுடன் கோர்த்து விவரிப்பதில் வல்லவர். மார்கழி மாதம் நெருக்கும் இந்த நேரத்தில் மார்கழி மாத கோலங்களையும், திருபாவையை(பாடல் + பொருள்) பற்றியும் பேசுகிறார் இந்த பதிவில்
வேதா - மாதங்களில் நான் மார்கழி(பாடல் 1-5)ட்ரீம்ஸ் - இவர் கன்னாபின்னானு கவிதை எழுதுவார். அதுக்கு மிக அழகாக படம் எடுத்து போடுவார், அதை காணவே இவர் பதிவுக்கு முன் அடிக்கடி போவது உண்டு. இப்பொழுது ப்ளாக் யூனியன் மூலம் பழக்கமும் கூட. நம்மள போலவே மல்லாக்க படுத்து விட்டத்தை வெறித்து பார்த்து ரொம்ப யோசிப்பவர் என்று நினைக்குறேன். இவரின் தீபா என்ற பதிவு, என்ன அழகு னு நீங்களே போய் பாருங்க.
ட்ரீம்ஸ் - தீபாஷாம் - நாட்டமை என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். இவரின் TBI & R கலாட்டாஸ் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும்.
ஷாம் - TBIபி.குறிப்பு : இதை தவிர தமிழ்மணத்தில் சேராத பல பதிவர்கள் உள்ளார்கள். சிலர் தங்கிலிஷ், சிலர் முன்பு அவ்வாறு எழுதி பின் தமிழுக்கு மாறியவர்கள். 2006 யில் வெளிவந்த பதிவுகளாக கொடுக்க விழைந்த காரணத்தால் அவர்கள் பதிவுகளை குறிப்பிட முடியவில்லை.
மேலும் வாசிக்க...
எங்க தல கைப்புள்ள இப்ப தான் புதுசா ஆப்பு வாங்குறார் என்று யாரும் தப்பா நினைச்சுக் கூடாது. அனைத்து ஆப்புகளையும் தனக்கே என வாங்க பிறந்த தியாக செம்மல். அந்த தியாக செம்மல் தன் இள வயதில் பெற்ற ஆப்பை காண... நல்ல ஒரு ஒளிமயமனா ஆப்பு இது.
கைப்புள்ள யின் - வச்சான்ய்யா ஆப்புசென்னையில் மழைக்காலம் எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை தன் வழக்கமான நகைச்சுவையில் சொல்கிறார் நம்ம தேவ், கிண்டாலாக சொன்னாலும் அதில் ஒரு சமூக கருத்தையும் வச்சு இருக்கார் நம்ம போர்வாள்.
தேவ் வின் - மனதோடு மழைக்காலம்நம்ம தளபதியின் யின் டிபிக்கல் கைப்புள்ளையின் சங்கம் பிராண்ட் காமெடி
நாமக்கல் சிபி யின் - காமெடி வியாழன்கல்யாணத்துக்கு தாலி எம்புட்டு முக்கியமோ அம்புட்டு முக்கியம் கல்யாண வீட்டில் சீட்டாட்டம் ஆடுவது. அதை நம்ம விவசாயி எப்படி சொல்லி இருக்காருனு பாருங்க. தலைப்புக்கு ஒரு தனி விளக்கமே கொடுத்து இருப்பார்.
இளா வின் - 3*(13*4)+6=0 நம்ம தம்பி கதிரு ஒரு நியாயமான கேள்வி கேட்குறான். ஆனா தலைப்பை பாத்துட்டு இது அவன் பண்ணிய கூத்து தானானு என்னையவே கேட்க கூடாது சொல்லிட்டேன்
தம்பி - தண்டவாளத்தில் ஒன்னுக்கு போனா தப்பா?நாம் இலவசமாக பயன்படுத்திக் கொண்டு ப்ளாக்கருக்கு கட்டணம் வசூலிச்சா என்ன ஆகும். இப்படி தான் ஆகும் னு நம்ம வெட்டிக்காரு சொல்லுறாரு.
வெட்டிப்பயல் - என்னது இலவசம் இல்லையா?நம்ம ராயல் மதுரக்கார பய னு நமக்கு எல்லாம் தெரியும். மதுரக்கார பசங்க வீரத்துக்கு சொல்லவா வேணும், அப்படி ஒரு வீர தீர சாகசம் தான் இந்த பதிவு
இராமின் - பேய், பிசாசு, ஆவீஇன்றைய இளைஞர்களின் சார்பாக யுவதிகளிடம் ஜில்லுனு 5 சந்தேகங்களை முன் வைக்குறார் நம்ம ஜொள்ளின் ஜொள்ளன். எல்லாமே நியாயமான சந்தேகமாக தான் இருக்கு.
ஜொள்ளுப்பாண்டி யின் - ஜில்னு 5 டவுட்ஸ்பள்ளி, கல்லூரியில் பசங்களை அப்பன், ஆத்தா வச்சு பெயரை வச்சு கூப்பிடுவதை விட பட்ட பெயர்களால் அழைக்கப்படுவர்கள் தான் அதிகம். அது போல சில பட்ட பெயர்களுக்கு விளக்கம் கூறும் நம் கயவன் கப்பியின் பதிவு.
கப்பிபய - பேர் சொல்லும் பிள்ளைகள்பாக் நம்மை விட்டு பிரிந்ததால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பை விவரிக்கும் பதிவு. கொஞ்சம் பொறுமை தேவை. அப்புறம் என்ன திட்டக் கூடாது சொல்லிட்டேன்
நாகை சிவா வின் - பாக். பிரிந்ததால்
மேலும் வாசிக்க...
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அந்த தானத்தை விட பல படிகள் உயர்ந்தது உறுப்புகள் மற்றும் ரத்த தானம். ரத்த தானம் & கண் தானத்தை தவிர்த்து வேறு உறுப்பு தானத்தை நாம் சிந்தித்து உள்ளோமா? சிந்திக்க
இராமநாதனின் - ஆதலால் தானம் செய்வோம்சாதிகளை ஒழிப்போம் என்று பேசிக்கொண்டே நமக்கும் நம் பிள்ளைகளும் இன்னும் சாதி சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம், கிடைக்கும் ஒதுக்கீடுகளை அனுபவித்துக் கொள்ளவும் சில முயல்கிறார்கள்(அவர்களுக்கு அது தேவைப்படாத போதும்). எங்கிருந்து சாதி ஒழிப்பை ஆரம்பிக்க போகிறோம் என்று சிந்திக்க
முகமூடி யின் - சமூகநிதிநாடு எனக்கு என்ன செய்தது, நான் ஏன் நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு சில சமயத்தில் ஏற்பட்டு இருக்கலாம். அதைக் குறித்த சிந்தனை
செல்வனின் - நான் என்ன செய்தேன் நாட்டுக்குநம் இந்தியாவில் ஏதுவுமே மாறவில்லை. பணக்காரன் பணக்காரனாகவே இருக்கான், ஏழை ஏழைகளாகவே இருக்கான். வாய்ப்புகள் அனுபவித்தவனுக்கே மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கிறது. வாய்ப்புகள் மறுக்கப்பட்டவனுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்ற அவலநிலை இன்றும் உள்ளது. இதை மாற்ற இளைஞர்களின் பங்கு என்ன? இந்த இடைவேளியை குறைக்க அவர்களின் பங்கை குறித்து சிந்திக்க
குமரனின் - இரண்டு வித இந்தியாபெரிய பதவியில் இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சட்டத்தை மீறினால் எவ்வளவு கூப்பாடு போடுகிறோம், ஆனால் நம் அருகிலே சட்டத்துக்கு புறமாக ஏரிகள், நிலங்களை அபகரிப்பவர்களை, விதிமுறைக்கு மீறி பல அடுக்கு மாடிகளை கட்டுவர்களை கண்டு நான் என்றாவது சிந்தித்தது உண்டா?
பத்ரி யின் - சட்டம் ஒழுங்கும் இந்தியர்களும்செய்த தவறுக்கு தண்டனையாகவோ, செய்தா தவறுக்கு தண்டனையாகவோ நாட்களை எண்ணிக் கொண்டே வாழ்ந்து வரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதே செய்து வந்த நாம் அவர்களையும் இருக்கும் வரை ஒரு மனிதராக மதிக்க சிந்தித்து உள்ளோமா?
மங்கையின் - Stop Aids, Keep the promiseமேல் சொன்னது எல்லாம் சிந்தித்து நம் சமூகத்தை சீர்படுத்து. நம்மை நாமே சீர்படுத்து
நாகை சிவா - சிந்தனைத் துளிகள்
மேலும் வாசிக்க...
ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் இருந்து மலைக்கு செல்லும் இந்த நேரத்தில் அந்த ஐயப்பனுக்கு சரணம் சொல்லி நம்மை ரட்சிக்கவும், மன்னிக்கவும் வேண்டுவோம்.
குமரனின் - சுவாமியே சரணம் ஐயப்பாகோபுர தரிசனம் கோடி தரிசனம், தரிசனம் பண்ண தயாரா?
இராமநாதனின் - கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டுசினிமாவின் வாயிலாக பலரையும் சென்று அடைந்த பாடல் -
முத்தைத்தரு பக்தித் திருநகை. அந்த பாடலுக்கு விளக்கம் அறிய
வி.எஸ்.கே. வின் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 3தீபத்திருநாளை பற்றிய சிறு வீடியோவுடன், சைவம் & வைணவம் ஒற்றுமையையும் பேசுகிறார் இந்த பதிவில்.
கண்ணபிரான் ரவிசங்கரின் - கார்த்திகை தீபம் மின்னுதேகழுகு மலையை பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? தெரிந்துக் கொள்ள நம்ம முருகனடியார் சொல்வதை கேளுங்க. அந்த தொடர் முழுவதையும் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
ஜி.ரா. வின் - கழுகுமலை தன் ஆன்மிக பயணத்தில் தன் குலதெய்வமான பரவாக்கரை மாரியம்மனை பற்றி கூறுகிறார்
கீதா சாம்பசிவம் வின்- புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரிஎங்கள் ஊரில்(நாகப்பட்டினம்) உள்ள ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலின் மிகவும் விசேஷமான செடில் உற்சவத்தை பற்றிய பதிவு. என் இஷ்ட தெய்வம் என்பது ஒரு உபரி தகவல்.
பத்ரி யின் - மாரியம்மன் செடில்எங்கள் ஊரில்(நாகப்பட்டினம்) உள்ள 108 திருப்பதில் ஒன்றான ஸ்ரீ செள்ந்தராஜ பெருமாள் ஆலயத்தை பற்றிய என் பதிவு.
நாகை சிவாவின் - திருநாகை அழகியார்
மேலும் வாசிக்க...
மனைவி ஒரு மந்திரம் னு சொல்லி கேட்டு இருப்பீங்க. இங்க ஒருத்தர் மனைவியை பல விதமா ஒப்பீடு பண்ணுகிறார். இவர் தற்சமயம் எழுதிக் கொண்டு இருக்கும் தொடருக்கு அச்சாரமே இந்த பதிவு தான் என்பது உபரி தகவல்
பெனாத்தல் சுரேஷ் - M.Sc Wifeology யாரு யாருக்கோ கடிதம் எழுதுவாங்க. இங்க நம்ம ஆளு விநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கார். அந்த கலக்கல் கடித்தை பாருங்க
டுபுக்கு - அன்புள்ள விநாயகம்சர்தாஜி ஜோக் படிச்சு மகிழ்ந்து இருப்போம், இது நிஜ சர்தாஜி அனுபவங்கள்
பெனாத்தல் சுரேஷ் - சர்தாஜி - இது நிஜம் அய்யாநம்ம கூட்டாளிக ஒரு இடத்துல கூட்டமா சேர்ந்தா அந்த இடத்துல கேட்க கிடைக்கிற சில 'ஒன்-லைனர்'கள இங்க உங்களுக்காக
கொங்கு ராசா - ஒன் லைனர்ஸ்கவிதை எழுதுற கோஷ்டி இருக்கும், அதை திறனாய்வு செய்ற கோஷ்டியும் இருக்கும். கவுஜு எப்படி எழுதுவது என்பது பத்தி நமக்கு என்ன கவலை. அதை எப்படி திறனாய்வு செய்றோம் என்பது தானே திறமை. அந்த திறமையை பெற படிக்க வேண்டிய பதிவு தான் இது
இலவச கொத்தனார் - மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வுபெனாத்தலாரின் கண்ணீர் கதையை நீங்க படிச்சு இருக்கீங்களா?
பெனாத்தல் சுரேஷ் - அட்லாஸ் - வாலிபன்? கைப்புள்ள யின் கை யாருனு தெரியுமா உங்களுக்கு? அவரு கழுதை புலி யிடன் கடி வாங்கிய கதை தெரியுமா? தெரிஞ்சுக்க படிங்க
கைப்புள்ள - 'கை' திடீர் மாயம்நம்ம டுபுக்கு அண்ணனே சலங்கை ஒலி ஜெயப்பிரதா கேட்ட வழி கேட்குறார், எதுக்குனு போய் பாருங்க, பார்த்த பிறகு நீங்களும் வெண்டைக்காய் நிறையா சாப்பிட ஆரம்பிப்பீங்க.
டுபுக்கு - ஞாபகம் வருதேநம்ம தல கச்சேரி பண்ணின கதை தெரியுமா உங்களுக்கு? மிஸ் பண்ணமா கேளுங்க(படிங்க) இந்த கச்சேரியை.
தேவ் - கச்சேரிங்கோ தல கச்சேரிங்கோ நமக்கு நாமே சொறிந்துக் கொள்ளும் பகுதி!
கட்சினு இருந்தா கட்டுப்பாடு இருக்கனும்
கழகம் இருந்தா கலகம் இருக்கனும்
கூட்டணி னு இருந்தா குழப்பம் இருக்கனும்
சங்கம் னு இருந்தா செயற்குழு இருக்கனும்ய்யா
அப்படிபட்ட செயற்குழு தான் இந்த பதிவு
நாகை சிவா - செயற்குழு கூட்டம்
மேலும் வாசிக்க...
ஒரு சில பதிவுகளை படிக்கும் போதே இவங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கேனு நமக்கு தோணும். அது போல எனக்கு தோன்றிய சில பதிவுகள். மிஸ் பண்ணாம பாருங்க கண்டிப்பா நீங்களும் அது போல தான் பீல் பண்ணுவீங்க.
கப்பி பயலின் - நாகை சிவாவின் கட்டளைக்கிணங்க!!கப்பியின் ஒரு பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டத்துக்கு எதிர்வினையா இந்த பதிவை உடனே போட்டார் நம்ம ஜாவா பாவலர். சரியான ரவுசாக இருந்தாலும் அவரை பின்னூட்டத்தில் கலாய்த்ததில் நான் என்ன சொன்னேனோ அதையே அவர் திரும்ப கூறியது தனிக் கதை. அது என்னனு நீங்களே பாருங்க.
இராமநாதனின் - காலம் மாறுகிறது - ஒரு கேள்வி டாக்டரின் இந்த பதிவை படிச்ச பிறகு நாம் கவுண்டமணி நிலைமைக்கு மாறி எப்படிய்யா(டா) உனக்கு இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்க தோணுது? தோணும். ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு சமம். அந்த கேள்விய நீங்களே என்னனு போய் பாருங்க.
நாமக்கல் சிபி - இன்றைய ஸ்பெஷல் (TMICT) தமிழ்மணத்தில் போன வருடம் எதை எதை எப்படி செய்யனும் என்பதை பற்றி ஆள் மாத்தி ஆள் பதிவு போட்டங்க (என்னையும் சேர்த்து தான்) அதை எல்லாத்தையும் தொகுத்து ஒரு பக்கத்தில் இந்த பதிவில் இருக்கு. அதிலும் தர்ம அடி வாங்குவது எப்படி? கொடுப்பது எப்படி? எப்படிங்கள் இருந்து தப்பிப்பது எப்படி? னு அனைத்து எப்படிகளும் செம ரவுசு தான். எல்லாத்தையும் விடாம படிச்சு பாருங்க.
ஜொள்ளு பாண்டி - Bikini ல ஒரு பிகர்குசும்பனுக்கு அண்ணன் நம்ம பாண்டி. என்னத்த சொல்ல நீங்களே போய் பாருங்க அதை. வயது வந்தவர்கள் மட்டும்.
இராமநாதன் - How Big is Your P*nis? தலைப்பை பார்த்து ஒதுக்கிடாதீங்க. எஸ்.ஜே. சூர்யா ரகம் தான். டாக்டர் ராம்ஸ், டாக்டர் பிரகாஷ் ஆக முயற்சி செய்கிறாரோ என எண்ண வைக்கும் தலைப்பு தான். ஆனால் நம் வாழ்வில் ஒரு அங்கம் ஆகி விட்ட ஒரு பொருளை வைத்து அலசிய ஒரு விஞ்ஞானப்பூர்வமான அலசல். அப்படி எதை பற்றிய அலசல் என்பதை போய் பாருங்க.
இம்புட்டு சொல்லிட்டு நம்மள நாமளே சொறிஞ்சிக்காட்டி எப்படி? அப்படியே நம்ம ரவுசையும் ஒரு எட்டு எட்டி பாத்துடுங்க.
நாகை சிவா - இதுவும் மரணம் தான்...தேன் கூடு போட்டியில் கலந்துக் கொள்ள போட்ட பதிவு இது. மரணத்தில் என்னய்யா ரவுசு கேட்குறீங்களா... போய் தான் பாருங்களேன்.
மேலும் வாசிக்க...
ஹேய்ய்ய் வந்தனம் வந்தனம், என்னை பாத்ததும் ஒடுற ஜனம் எல்லாம் கொஞ்சம் நிக்கனும்.
நான் வழக்கமா போடுற மொக்கை கிடையாது இது. அதுனால கவலை வேண்டாம். ஏன் அங்கயே நிக்குறீங்க, இது நம்ம ஏரியா இல்ல, உள்ள வாங்க.
எந்த நம்பிக்கையில் தைரியத்தில் நம்மளை இங்கன கூப்பிட்டாங்க என்று தெரியல. எதா இருந்தாலும் அவங்க தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் ஒரு நன்றி.
போன வாரம் சும்மா சரவெடியா வெடிச்சு சரம் தொடுத்த G3 போற போக்குல அஃக்குள் அணுகுண்டை வைக்குற மாதிரி ஒரு
போஸ்ட் ட போட்டுட்டு போயிட்டாங்க. மெய்யாலுமே மெர்சலாயிட்டேன்.
சரி ஆனது ஆச்சே போகட்டும். இன்னிக்கு நம்ம "அறு"முகத்தை எல்லாம் சொல்ல போவது இல்லை. ஏற்கனவே தேவைக்கு அதிகமாவே பல இடத்தில் கூவியாச்சு.
நாம் தொடர்ந்து ஸ்லோவா கல்லா கட்டுவது -
ஏதோ சொல்கிறேன் ல.
இது போக கூட்டத்தோட கல்லா கட்டும் மற்ற இடங்கள் -
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்,
சுவரொட்டி,
ப்ளாக் யூனியன்,
தேன்கிண்ணம் (நேத்துல இருந்து)
இந்த வார வலைச்சரத்தில் சோகம் இருக்காது, கவுஜு இருக்காது, காதல் இருக்காது, அரசியல் இருக்காது (முடியுமா) சாதி, மத பூசல்கள் இருக்காது. வேற என்ன தான் இருக்கும். அதையும் தான் வந்து இந்த வாரம் வருகின்ற போஸ்ட்ல பாத்துட்டு போயிடுங்களேன்.
2004, 2005 யில் வந்த பதிவுகள் எல்லாம் தமிழ்மணத்தின் பரண் என்ற பகுதியில் வருது. 2007 ல் வந்த பதிவுகளை பெரும்பாலும் நீங்க படித்து இருப்பீங்க. அதனால் இந்த வாரம் முடிந்த அளவு 2006 ம் ஆண்டில் வந்த சட்னு என் நினைவுக்கு தோன்றிய பதிவுகள் பவனி வரும்.
கயவனின் ஆசிர்வாதங்களுடன் இந்த வார களத்தில் நான்
மேலும் வாசிக்க...