07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 3, 2011

கவிதை சரங்களோடு வந்திருக்கேன்..!!

நேற்று சொன்னது போலவே கவிதை சரங்களின் இரண்டாவது பகுதியை அப்படியே கொத்தா புடிச்சு தூக்கிட்டு வந்திருக்கேன். நேரா போய்டுவோம்..

முருகேசன்- சரித்திர சாக்கடைக்கெல்லாம் என்னும் தலைப்பின் கீழ் கணபதியை வேண்டுவது போல ஒரு சில வரிகள் எழுதியுள்ளார். வார்த்தைகளில் அதிக ஜாலம் இல்லாவிடிலும் பக்தி தெரிகிறது. சிறப்பு.

சில்வர்ஸ்டார்- ஹி ஹி. பேர கேட்ட உடனே மிரண்டுட்டீங்களா.? ஓகே ஓகே. இவரின் கவிதைகள் அனைத்தும் சிறியதாக போட்டோக்களில் இருக்கும். என் இரு கண்கள் கவிதை சிறியதிலும் சிறப்பு.

அருண்ஈழத் தமிழரும், ஈனத் தமிழரும்!!! என்னும் தலைப்பின் கீழ் ஒருவித கோபத்தை வெளிபடுத்துகிறார். மரபு வழியில் இயற்றப்பெற்ற கவிதை இயல்பான தமிழ் வார்த்தை பயன்படுத்தி புரிந்துகொள்ளும் நடையில் இருப்பது இன்னும் சிறப்பு.


சுப்ரஜா- தமிழ் திருட்டு என்னும் கவிதையில் நான் எப்படி தமிழை நினைத்து புலம்புறேனோ அவ்வாறே இவரும் புலம்புகிறார். இதை புலம்பல் என்று சொல்லாமல் கோபம் என சொல்லலாமோ.!! எதுவாக இருந்தாலும் கவிதை சூப்பர். என்னங்க.. கவிதை சூப்பரூ..


திருப்பதி- அம்மா என்ற தலைப்பின் கீழ் அவரது அம்மாவை நல்லா கேட்டுகிடுங்க ஜெ., இல்ல அவரது அம்மாவை பற்றிய கவிதை. சிறியது. முற்றிலும் சிறப்பு என்று சொல்லிடமுடியாது. சாதாரண வார்த்தைகள் மற்றும் கோர்வை அமைத்து இயல்பாக இருக்கிறது. 


சசிகுமார்- நிழல்காலம் என்ற கவிதையில் ஒரு சில வரிகள் எழுதியிருக்கார். படிக்கும் போது ஒரு பாடல் போலவே இருக்கிறது. காதல் சொல்லும் வரிகளாக அமைந்துள்ளது.


லக்ஷ்மிநாராயணன்- காகித கப்பல் என்னும் தலைப்பின் கீழ் அருமையாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். வார்த்தைகள் சேர்க்கப்பட்ட விதம் எனக்கு பிடித்திருக்கிறது. நீங்களும் கொஞ்சம் போய் பார்த்து கமண்டடிக்கலாமே!

கண்ணா- யாப்பிலக்கணம் சொல்லித்தருகிறார். கவிதை மூலம். உண்மையில் மிக சிறப்பாக இருக்கிறது. இதுவரை 5 எழுதியிருக்கிறார். இவரை சென்று ஊக்கப்படுத்தி மேலும் எழுத தூண்டுங்களேன்.

தீபச்செல்வன்- சிசுகள் வேகும் அடுப்பு என்று ஒரு அழுகாச்சி கவிதை. உண்மையில் நன்கு உணர்வுப்பூர்வமானது. மிகவும் கவர்கிறுது. எட்டி தான் பாருங்களேன்.

மதன் கார்க்கி- இவர யாருன்னு தெரியல.? அதாங்க நம்ம வைரமுத்து பையன். அவரு எழுதுற பாட்டெல்லாம் இந்த ப்ளாக்ல போடுறாரு யாருக்கு வேணுமோ போய் பாத்துகிடுங்க. எனக்கு பிடித்த என்னமோ ஏதோ பாடல் இங்கே.

இப்ப இதுக்கு ஒரு பினிசிங் டச். மீண்டும் சந்திப்போமா..!!

''முட்டிப்போட்டு மானமிழந்த வாழ்க்கை வாழ்வதை விட, எதிர்த்து நின்று மடிவதே மேல்''- சே குவேரா.

13 comments:

 1. அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் கவிதையில் வல்லுநர்களே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பாஸ்...இன்றைய பகிர்வு ரொம்ப கலக்கல். வித்தியசமாக மரபு, யாப்பிலக்கணம் எனப் பல அற்புதமான கவிதைகளைப் படைக்கும் அன்பர்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.
  புதியவர்களைத் தொகுத்திருக்கிறீர்கள்.

  நன்றி தல.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. உமது ஊக்கங்களுக்கும், தேடி பிடித்து என்னை போன்றவர்களை சரியானவர்களிடம் கொண்டு சேர்த்தமைக்கும் நன்றிகள்...

  ReplyDelete
 5. இந்த Facebook Link-ல் உங்களை பற்றி குறிப்பிட்டு உள்ளேன்... நேரம் இருந்தால் பார்க்கவும்...

  https://www.facebook.com/Kavithaiindia

  ReplyDelete
 6. கவிதைச் சரங்களுக்கு வாழ்த்துச் சரங்கள்

  ReplyDelete
 7. அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி!!! :) :)

  ReplyDelete
 8. தீபச்செல்வன் கவிதைகள் அழுவாச்சிக் கவிதையா.....!

  ReplyDelete
 9. பல புதியவர்கள். நன்றி தம்பி

  ReplyDelete
 10. அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி ...

  ReplyDelete
 11. கவிதை படிக்கிற அதுவும் நம்ம பாணி கவிதை படிக்கற சனமும் இருக்காய்ங்கன்னா புல்லரிக்குது. ரெம்ப நன்றி.

  ReplyDelete
 12. நன்றி என்ற வார்த்தை சொல்லி உங்களிடம் இருந்து என்னை பிரித்து பார்க்க எண்ணவில்லை... எனது பெயர்.. ஜெயராமன் பரத்வாஜ்.. எனது தந்தையின் பெயர் தான் லக்ஷ்மி நாராயணன்...

  ReplyDelete
 13. பாராற்றிய அண்ணன் "கூர்மதியன்" அவர்களுகு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது