07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 30, 2011

உரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று



நறுக் - 3 
நிச்சயதார்த்ததிற்கு பிறகு.....
அவள்: அப்பாடி... இதுக்கு தான் ரொம்பநாளா நான் தவம் கிடந்தேன்.


அவன்: நீ என்னை பிரிந்துவிடுவாயா?

அவள்:  ச்சே.ச்சே.. கிடையவே கிடையாது 

அவன்: நீ என்னை விரும்புகிறாயா? 

அவள்: நிச்சயமாக. செய்தேன், செய்கிறேன். இன்னமும் செய்வேன்

அவன்: நீ என்னை ஏமாற்றினாயா? 

அவள்: ச்சே.ச்சே. அதற்கு நான் செத்தே போய்விடுவேன்.. 

அவன்: எனக்கு ஒரு உம்மா கொடுப்பாயா

அவள்: நிச்சயமாக. அது எனக்கு பேரின்பம். 

அவன்: நீ என்னை ஹிம்சிப்பாயா? 

அவள்: ச்சே.ச்சே. நான் அதுபோல ஆள் இல்லை... 

அவன்: நான் உன்னை நம்பலாமா? 

அவள்: உம். 

அவன்: ஹோ டார்லிங்.. 


திருமணத்திற்கு பிறகு அவளும் அவனும் என்ன பேசிக்கொண்டார்கள்?

கடைசியில் பார்க்கவும்..

******
போன பதிவில் உங்கள் ரசிகனைப் பார்த்தோம். இந்தப் பதிவில் ஒரு ரசிகன் இருக்கிறார். பர்மிங்க்ஹாமில் இருக்கும் புதுச்சேரிக்காரர். காதல் ரசிகன் என்று முத்தாய்ப்பாக சொல்லலாம். சின்ன சின்ன தப்புப் பண்ணுவேன் என்று ப்ளாக் சுயவிவரத்தில் சொல்கிறார். அதுவே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஈர்க்கிறது. துரையின் லேட்டஸ்ட் பொய்க்கால் காதலி.

கரந்தையில் பேராசிரியராக இருக்கிறார் ஹரணி. ஹரணி பக்கங்கள் என்ற வலைப்பூவில் தமிழேற்றுகிறார். தூய தமிழில் அழகாக எழுதுகிறார். என்றைக்காவது அத்தி பூத்த்தார்ப்போல நான் நன்றாக எழுதினால் வந்து நல்லாயிருக்கு என்று கருத்துரைப்பார். கடிதம் எழுதுவது பற்றி மடலேறுதல் என்று இவர் எழுதிய பதிவு, அந்தக்காலத்தில் கடிதாசி போட்ட எல்லோருக்கும் உரைக்கும். 

ஆதிரா ஒரு தமிழ் டாக்டர். தமிழுக்கு டாக்டர் இல்லை பைந்தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் பற்றி இருப்பவைகளை அந்தந்த வரிகளை மேற்கோள் காட்டி ஔஷதக் கட்டுரைகள் எழுதும் டாக்டர். அவை எல்லாம் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளியாவது சிறப்பு. நெல்லிக்கனியின் விசேஷ மருத்துவக் குணங்கள் பற்றி தேவலோக அமுதத்துளி என்று எழுதிய பதிவு இங்கே.

சிமுலேஷன் படைப்புகள் என்று எழுதுகிறார் சுந்தரராமன். நிறைய இபாவின் நூல்களை படித்து நூல்நயம் எழுதுகிறார். சில புதிய புத்தகங்கள் என் போன்ற புழுக்களின் கண்களுக்கு தென்படுகிறது. பத்து பதினைந்து சைட் வைத்திருக்கிறார். வலையுலக வலைப்பூ கிருஷ்ணன் போலிருக்கிறது. கர்நாடக சங்கீதம் கரைத்துக் குடித்திருப்பார் போல தெரிகிறது. சினிமாப் பாடல்களில் கர்நாடக சங்கீத மெட்டுக்கள் பற்றி புஸ்தகம் வெளியிட்டிருக்கிறார்.

ரேகா ராகவன் ஒரு பக்க கதை எழுதும் வித்தகர். நிறைய அவரது சிறுகதைகளை பார்த்து வியந்திருக்கிறேன். இருநூறு முன்னூறு வார்த்தைகளில் சாகசமாய் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். ஒரு மாதிரி இண்டர்வியு இங்கே. 

நானும் ஒரு நாள் இலக்கியவாதி ஆகவேண்டும் என்ற பெருந்தீ குபுகுபுவென்று உள்ளே பற்றி எரிகிறது. கீழே இருக்கும் பெரும் பேனாக்காரர்களின் எழுத்துக்களை படித்தால் மனதில் அச்சமும் ஐயமும் எழுகிறது. இரும்படிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலை என்றாலும்... பாழாய்ப் போன மனது கேட்காமல் அவ்வப்போது நான் சைட் அடிக்கும் திருத் தளம்.
 உலக இலக்கியம். என்ற வலைத்தளத்தினில் இந்த இலக்கியச் சேவை புரியும் "அழியாச் சுடர்கள்" ராம் புகழ் இணையதள வரலாற்றில் மங்காப் புகழ் பெற்றிருக்கும்.

******
தி.பிறகு..

திருமணத்திற்கு பிறகு ஆதர்ஷ தம்பதிகளாக இவர்கள் இருவரும் அன்னியோன்யமாக சம்பாஷித்தது கீழிருந்து மேல்.


-

26 comments:

  1. நல்ல அறிமுகங்கள்....இந்த வாரம் புக்மார்க் செய்ய வேண்டிய பக்கங்கள் நிறைய வரும் போல....!

    ReplyDelete
  2. கலக்குது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அம்மாடி!இவ்வளவு தளங்கள் படிக்கறீங்களா?
    இதையெல்லாம் நான் என்னிக்கு படிச்சு எப்ப
    எளக்கியவாதியா ஆவறது?ரொம்ப கஷ்டம் போலருக்கே


    அந்த உரையாடல் மெயில்ல வந்தத சுட்டுட்டீங்களா?

    ReplyDelete
  4. @ஸ்ரீராம்.
    நன்றி ஸ்ரீராம்! ;-)

    ReplyDelete
  5. @கவி அழகன்
    வாழ்த்துக்கு நன்றிங்க.. ;-))

    ReplyDelete
  6. @raji
    இவ்வளவு தளங்கள் எல்லோரும் படிக்கலாம் என்று கொடுத்திருக்கேன் சிஸ்டர்! ஒரே நேரத்தில் இல்லாவிட்டாலும் அவ்வப்போது நான் எட்டிப்பார்க்கும் தளங்கள் இவை.

    உரையாடல் விவகாரம்... டிஸ்கி போட மறந்துவிட்டேன். மன்னித்தருள்க! ;-))

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள். அவ்வப்போது
    போயி படிச்சுப்பாக்கனும்.

    ReplyDelete
  8. அறிமுகங்களின் தெளிவை பார்க்கும் பொழுது , ஆர் .வி .எஸ் எனும் விளையாட்டு பிள்ளைக்குள்ளே இவ்வளவு பெரிய அறிவுஜீவி திமிர திமிர ஒளிஞ்சு இருக்கிறாரா ? இனி பார்த்து நடந்துக்கணும் ...

    ReplyDelete
  9. கலக்கல் அறிமுகங்கள்..

    ReplyDelete
  10. சிறப்பான அறிமுகங்கள் நண்பா
    உன் இலக்கிய வேட்க்கை பெருமிதம் கொள்ளச் செய்கிறது

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள். உரையாடல் கீழிலிருந்து மேல் சூப்பர்! ரேகா ராகவன் தவிர அனைத்தும் புதிய தளங்கள். பொறுமையாக படிக்க வேண்டும்.

    ReplyDelete
  12. திருமணம் முன்/பின் சூப்பர்!
    அறிமுகங்கள் அனைவரும் புதிது! பார்க்கிறேன்!

    ReplyDelete
  13. அறிமுகங்களுக்குப்பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. @Lakshmi
    நன்றிங்க மேடம்! போய் படிச்சுப்ப் பாருங்க.. ;-))

    ReplyDelete
  15. @பத்மநாபன்
    ரொம்ப ஏத்திவிடாதீங்க பத்துஜி! நன்றி. ;-))

    ReplyDelete
  16. @அமைதிச்சாரல்
    நன்றிங்க சகோ! ;-))

    ReplyDelete
  17. @A.R.ராஜகோபாலன்
    நன்றி கோப்லி! ;-))

    ReplyDelete
  18. @கோவை2தில்லி
    நன்றிங்க சகோ! ;-))

    ReplyDelete
  19. @ஜீ...
    நன்றி ஜீ!! ;-))

    ReplyDelete
  20. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க மேடம்! ;-))

    ReplyDelete
  21. அருமையான வலைத்தளங்கள்.. உங்கள் ரசனைக்கு என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. நல்ல வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.... ரேகா ராகவன் [அன்பேசிவம்] எனக்கு வலையுலகை அறிமுகப்படுத்தியவர், என்னை எழுதத் தூண்டியவர்...
    அழியாச் சுடர் ராம் நான் படிக்கும் வலைப்பூக்களில் ஒன்று. மற்றவை புதிது... பார்க்கிறேன்...

    ReplyDelete
  23. நன்றி ஆர்விஸ்

    ReplyDelete
  24. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    புதுஅறிமுகங்கள்தான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  25. //ஆதிரா ஒரு தமிழ் டாக்டர். தமிழுக்கு டாக்டர் இல்லை பைந்தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் பற்றி இருப்பவைகளை அந்தந்த வரிகளை மேற்கோள் காட்டி ஔஷதக் கட்டுரைகள் எழுதும் டாக்டர். அவை எல்லாம் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளியாவது சிறப்பு. நெல்லிக்கனியின் விசேஷ மருத்துவக் குணங்கள் பற்றி தேவலோக அமுதத்துளி என்று எழுதிய பதிவு இங்கே. //

    அன்புள்ள ஆர்.வி.எஸ். எவ்வளவு அழகா அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். இதை நான் பார்க்காமலே இருந்து விட்டேனே. எப்படி நன்றி கூற...
    ஆனந்தமாக... நீங்கள் இருக்குமிடம் தேடி வருகிறது என் நெஞ்சத்து நன்றி மலர்.... விழியோரப் பனித் துளிகளுடன்.. நன்றி@! நன்றி!

    ReplyDelete
  26. அம்மாடி எவ்வளவு நல்ல வலை அறிமுகங்கள்!
    எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி.
    அத்தனை பேருக்கும் தங்களிற்கும் இனிய நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது