07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 5, 2011

வலைச்சரத்தில் இறுதியாக-நண்பேன்டா.!!

எனக்கு வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியர் அழைப்பு வந்திருப்பது என்னை சுற்றிய வட்டாரத்திற்கு சிறிது நாட்கள் முன்னரே தெரியும். அப்போது விளையாட்டாய் பதிவர் ரேவாவிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றேன். ஓவர் எக்ஸைடட் ஆன அவர் பேசதொடங்கினார்.

ரேவா: ஏ.! நீ நல்லா பண்ணுவ.. புது புதுசா நிறைய பேர அறிமுகபடுத்தி கெத்து காட்டு..

நான்: புதுசா.? அதுக்கு நான் எங்க போறது.? எனக்கு யாரையுமே தெரியாதே.. ஹி ஹி

ரேவா: போடா லூசு..! இப்படிலாம் பேசாத.. நீ பெஸ்ட் ஆ பண்ணுவ.!!

நான்: ஹி ஹி

ரேவா: என்னடா சிரிப்பு.? ஒரு சகோவா நல்லது பண்ணலாம்னு பாத்தா சிரிக்கிற..

நான்: நல்லதா.? ஹி ஹி.. என்ன நல்லது பண்ண போற.?

ரேவா: இரு ஒரு சில ப்ளாக்கர்ஸ் லிஸ்ட் தர்றேன்..

நான்: சரி சரி கொடு..

ரேவா: இளயுகன் என்று ஒரு பதிவர் அவர் போகும் பயணத்தை பத்திலாம் சொல்லுறாரு.

நான்: சூப்பரு ரேவா.. பாத்தேன் அதுல கென்யாவை பயணம் சூப்பரு.

ரேவா: ஆமாம் ஆமாம்.. அடுத்து கிறுக்கன பத்தி சொல்லபோறன்.

நான்: கிறுக்கனா.? அட போ.. நீ வேற.. சென்னைக்கு வந்து கீழ்பாக்கத்துல போய் சொல்லு.

ரேவா: டே.!! இவரு தொழில்நுட்ப கிறுக்கன் டா. பேஸ்புக் சென்ட் பட்டன் பத்தி சொல்லுறார்.

நான்: பேஸ்புக் பத்தி எனக்கு தெரியாததா..?

ரேவா: ஆமாம் பெரிய விஞ்ஞானி.. மத்தவங்களுக்கு சொல்லலாம்ல..

நான்: ம்ம் சரி.. இப்போ நானு.. அனீஷ் என்ற பதிவர் மழைக்காதல் பத்தி சொல்லுறாரு.

ரேவா: மழை காதலா.? அப்படீனா.?

நான்: உனக்கு தெரியாததா காதல பத்தி.. எல்லாத்தையும் என்னையே கேப்ப போய் படி.

ரேவா: சரி சரி.. ஐபிஎல் போட்டியால சர்வதேச கிரிக்கெட்ட வீரர்கள் துறக்கிறாமே.!! நம்ம வைரை சதீஷ் சொல்லுறாரு.?

நான்: ஏன் இவ்வளவு சீக்கிரமா சொல்லுறாரு.? அத பழைய நியூஸ் ஆச்சே.!1

ரேவா: சரி சரி ஓவரா பேசாத.. பெம்மு குட்டி ப்ளாக் தெரியுமா.?

நான்: தெரியும் ஒரே ஒரு சிறுகதைய மட்டும் தொங்கி படிச்சிகிட்டு கிடக்குமே அதானே.!

ரேவா: ஆமாம்.. அவர கொஞ்சம் எழுத சொல்லேன்.

நான்: நீ முதல்ல போய் அந்த பதிவ படி..

ரேவா: சரி சரி.. அசிங்கபடுத்தாத..

நான்: நந்தலாலா இணைய இதழ் தெரியுமா.?

ரேவா: தெரியும் டா.. அது சூப்பரு..

நான்: ஆமாம்.. எக்கசக்க கவிஞர்கள்.. எனக்கே கண்ண கட்டுது.. சூப்பரா இருக்கு.

ரேவா: ஈரிகள் என்று ஒரு ப்ளாக் இருக்கு பாத்தியா.?

நான்: எனக்கே வா.. பாத்தேன் பாத்தேன்.. இப்போ இருக்குற பள்ளிய பத்தி அந்த பதிவு வருத்தமா இருக்கு.

ரேவா: ஆமாம்.. என்ன பண்ண.? நம்மால என்ன பண்ண முடியும்..

[பலே பிரபு இடையில் புகுந்தார்]

பிரபு: மாப்ள..!! நாழிகைனு ஒரு ப்ளாக் பாத்தன் டா..

நான்: அதுல என்னடா இருக்கு.?

பிரபு: அத நிறைய பேர் சேர்ந்து எழுறாங்கனு நினைக்கிறேன்.

நான்: ஓ அப்படியா.. இப்ப தான் பாத்தேன். தல அஜீத்த பத்தி ஒரு பதிவு. ஏற்கனவே தெரிந்த விசயம் தான். ஓகே பரவால. நல்லா தான் எழுதுறாங்க.

பிரபு: ஆமாம் மாப்பு..

நான்: சரி ரேவா நான் எழுதபோறேன்.. பிரபு டாட்டா..

அவுங்களுக்கு மட்டும் டாடா இல்ல உங்களுக்கும் தான். ஒருவார வலைச்சரத்தில் என்னால் முடிந்த சிலவற்றை செய்துள்ளேன். ஒரு சிறிய அளவாவது இது உங்களுக்கு பயன் தரும் அளவிற்கு இருந்திருக்கும் என நம்புகிறேன். இதோடு வலைச்சரத்தில் எனது பங்கு முடிகிறது. 14 பதிவு போட வேண்டும் என்று வந்தேன். அதிக வேலை பளுவால் முடியவில்லை. 13 பதிவுகளோடு முடிக்க போகிறேன். நன்றி வணக்கம்.!!!

கடைசியாக எனக்கு பிடித்த மற்றும் எல்லாருக்கும் பிடித்த வரிகள்,

''உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் உங்களால் குமுறிக் 
கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே'' - சே குவேரா

9 comments:

 1. சகோ விடைபெறும் வேலையிலும் அசத்தல்....இன்று மட்டும் பல பதிவர்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்...மிக்க நன்றி.....உங்கள் தேடலுக்கு...இந்த ஒரு வாரம் வெகுவாய் பயனடைதோம்...புதிய பதிவர்கள் அறிமுகத்தால்.....வாழ்த்துக்கள் சகோ.....பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே இந்த தமிழ் இனிது வலைத்தளம்.
  http://tamilinithuthiratti.blogspot.com/

  இதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

  தமிழ் இனிது பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

  வாருங்கள்!
  விரல் அசைவை விசையாக்குவோம்!

  ReplyDelete
 3. 'உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் உங்களால் குமுறிக்
  கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே'' - சே குவேரா//
  பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.

  ReplyDelete
 4. லேட்டஸ் போஸ்ட்டையும் கலக்கலா....வீக்கிலிக்ஸ் ரேஞ்சில்...
  ரேவாவின் சாட்டிங்கை அர்ங்கிற்கு கொண்டு வந்து அதனூடாக அறிமுகங்களையும் தந்திருக்கிறீங்க....

  ReplyDelete
 5. உங்களின் தேடல், முயற்சி அனைத்திற்கும் நன்றி மாப்ளே.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது