பல்சுவை ஞாயிறு
வலைச்சரத்தின் நிறைவுப் பகுதி.....
வலைச்சரம் என்னும் வண்ணச்சிறகு அணிவித்து
வானமே எல்லை என்று மனதிற்கு உற்சாகம் ஊட்டி
வலைப்பூக்கள் மலர்ந்து மணம் வீசும் சோலையில்
வலம் வந்து மலர்களயும் தேன்துளிகளையும் சேகரித்து
வணக்கத்திற்குரிய வாசகர்கள் திருமுன் அளிக்கும்
வரத்தினைத் தந்து பெருமைப்படுத்தி வாய்ப்பளித்த
வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு மனம் நிறைந்த
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.
வலைச்சரத்தில் வலம் வர ஒருநாளும் மறப்பதில்லை.
வாரம் ஒரு ஆசிரியராக திறமைகளைப் பகிர்ந்து கொள்ளும் தளம்..
மோகன்ஜி >> கணவக்கத்தரி எண்ணைக்கறி.. இன்றைக்கு ஞாயிறுதானே. மறக்காமல் பின்னூட்டக்கும்மியுடன் சேர்த்து ரசிக்கலாம்.
DrPKandaswamyPhD >> சாமியின் மனஅலைகள் - கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகள். மிக ஆர்வமாக படித்தது. பிடித்தது.
எழிலாய்ப் பழமை பேச...தமிழ்மணத் தேன் பருக வாரீர்! வாரீர்!!
முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் வேர்களைத்தேடி...... மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை....
நாஞ்சில் மனோ அவர்களின் தளம். மக்கா என்னும் மந்திரச்சொல்லோடும், அருவாளோடும் அறிமுகமாவார். சாமி பதிவில் கலாய்த்தால் சாமி கண்ணைக் குத்திவிடும் என்று என் பதிவுப் பக்கம் வரமாட்டார். பாலைவனமண்ணில் பதிவிடும் இவர் பதிவுகளும், இவரின் பின்னூட்டங்களும் பிரசித்தமான்வை.
பேரன்ட்ஸ் கிளப் >>இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.-மிகப் பயனுள்ள தளம்.... இங்கே எழுதியவர்கள் : புதுகைத் தென்றல், Vidhoosh, விசயக்குமார், பேரன்ட்ஸ் கிளப், வண்ணத்துபூச்சியார், கிருத்திகா, Jeeves, அபி அப்பா, சுரேகா, பாச மலர்.
பறவைகள் வசித்த மொட்டைமாடி >> மிக அழகாக இருக்கிறது. அதிஷா அவர்களின் தளம்.
தேவன் மாயம் >> கொஞ்சம் தேநீர், புற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி!!... நல்ல பதிவு
விழியும் செவியும் >> பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள்.
அமைதிச்சாரல்>> நினைத்ததையெல்லாம் கிறுக்குவேன் தளம். க்ரீமெல்லாம் பூசலைப்பா- அழகான படங்கள் பார்க்கலாம்.
யுவகிருஷ்ணா >>ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்! என்கிறார். கல்விக்காக ஏந்தப்பட்ட உயிராயுதம்! என்று பதறவைக்கும் பதிவு போட்டிருக்கிறார்.
இனிய தமிழ்ப் பாடல்கள் >> தாமரை தெப்பத்துல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.! சின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)
வலை உலகத்திற்கு வந்து குடும்பத்திற்குக் கிடைத்த பரிசு முகம் தெரியாத பலரின் தளங்களுக்குச் சென்று வாழ்க வளமுடன், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்றெல்லாம் பழகி இப்போது சிறு விஷயங்களுக்கெல்லாம் குடும்பத்தினரை பாராட்டி வாழ்த்தி உற்சாகமளிக்கிறேன். இந்த மாற்றத்தைத் தந்த வலைச்சரத்திற்கு இதயம் நிறைந்த நன்றிகள்.பராட்டுக்கள். வணக்கம்.....வாழ்க வளமுடன்....
|
|
நிறைவான பணிக்குவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள். ஒரு வார காலம் ஆசிரியராக இருந்து நிறைவு செய்தமைக்கு நன்றிகளும்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் செம்மையாய் ஒருவாரம் இவ்வலைப்பூவை வாசமுரச் செய்ததிற்கு...
ReplyDeleteமீண்டும் என் மற்றொரு பதிவான 'கணவக் கத்தரி எண்ணைக் கறி'யை இங்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி !!
மிகவும் சிறப்பாக பணியை நிறைவு
ReplyDeleteசெய்ததற்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteதந்த பணியை
ReplyDeleteதட்டாமல்
தங்களின்
தங்கமான
தகவல்களினால்
தரமாக்கியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
வணக்கங்கள்
அட்டகாசம்
ReplyDeleteஇனிய அறிமுகங்கள். நிறைவாய் ஒரு வாரம் முடித்தமைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ReplyDeleteபறந்து பறந்து தேனெடுக்கும் பட்டாம்பூச்சியாய், பறந்து பறந்து பல்வேறு வலைப்பூக்களில் நுழைந்து, இனிமையான தேன் துளிகளைத்திரட்டி, வலைச்சரமாக்கி, கடந்த ஒரு வாரமாக தாங்கள் ஆற்றியுள்ள அரும் பெரும் பணி, படத்தில் காட்டியிருக்கும் மினுமினுக்கும் பட்டாம்பூச்சியாய், என்றும் எங்கள் நினைவுகளில் இனிமையாக பசுமையாக நிலைத்து நிற்கும். மிக்க நன்றி.
ReplyDeleteஇன்றும் ”பல்சுவை ஞாயிறு” என்ற தலைப்பில் அருமையான அறிமுகங்கள் செய்யப்பட்டுள்ளன.
அனைவருக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
நன்றி பாராட்டுக்கள்
ReplyDeleteவாரஆசிரியப் பணியை திறம்பட முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஞாயிறு அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
நிறைய பதிவர்களுக்கு அறிமுகம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!
ReplyDeleteகருத்துரை அளித்து உற்சாகமூட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பளித்து பெருமைப்படுத்திய சீனா ஐயா அவர்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் நன்றி.வணக்கம்...
வாழ்க வள்முடன்..
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆசிரியரே :-)
ReplyDeleteஎன்னைப்பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றிகள் பல.
ReplyDeleteஒரு வாரமாக நிறைய பதிவர்களை இங்கு அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.
ReplyDelete