செண்பகப்பூ – சுற்றுலாச் சரம்
➦➠ by:
வெங்கட் நாகராஜ்
மேலே
இருக்கும் காணொளியில் நம்ம டவுசர் பாண்டி அண்ணன் “ஊரு விட்டு ஊரு வந்து” படத்தில்
”சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா?” அப்படின்னு பாடுவாரு. அது உண்மைதான்
என்றாலும், பயணம் எல்லா மனிதர்களும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்.
வாழ்க்கையில் நிகழும் இனிய அனுபவங்களில் ஒன்று பயணம். பள்ளிக் காலத்தில் சிலருக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைந்திருந்தாலும்
நிறைய பேரால் பயணம் சென்றிருக்க முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்து சுற்றுலா சென்று
திரும்பியபின் நிச்சயம் அதைப் பற்றி கட்டுரை எழுதிவரச் சொல்வார் ஆசிரியர். அந்த நாளிலிருந்தே
எனக்கு பயணம் மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் பள்ளியில் படித்த போது ஒரு முறை கூட
நான் சுற்றுலா சென்றதில்லை. கல்லூரியில் படிக்கும் சமயத்தில் இரண்டு பயணங்கள் சென்றது
மிகவும் இனிய அனுபவம். பயணம் சென்று வந்த பின் அதைப் பகிர்ந்து கொள்ளும் பதிவர்கள்
நிறைய பேர் என்னையும் சேர்த்து. நான் படித்து ரசித்த சில பகிர்வுகள் உங்களுக்காக!
லிபாக்ஷி-உயிர்த்தெழும் கற்சிலைகள்: ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் லிபாக்ஷி. இங்குள்ள
வீரபத்திரர் கோவில் மிக அழகு. ராவணன் சீதையைத் தூக்கிச் செல்கையில் அவரை ஜடாயு எதிர்த்து
இந்த இடத்தில்தான் சண்டையிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோவில் பற்றி படங்களுடன்
எழுதி இருக்கிறார் பயணம் என்ற வலைப்பூ வைத்திருக்கும் திரு பிரகாஷ்.
பாரதீயின்
பதிவுச் சுடர்கள் – "ஆங்கிலத்தில் CULTURAL SHOCK (கலாச்சார அதிர்ச்சி) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே, அது போல இது கலாச்சார வியப்புகள்
(CULTURAL
SURPRISES).கலாச்சார
வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும்
இதில் நிறைய வரும்.” என்ற முன்னுரையுடன் லண்டன் மற்றும் சிங்கபுரம் [சிங்கப்பூர்] பற்றி
இவர் எழுதிய பதிவுகள் அருமை. லண்டன் பற்றிய பகுதி – 1 இங்கே.
ஜு
ஹச்சி கிப்பு…. அட இது என்ன விநோதமான மொழியில் எதோ எழுதி இருக்கேன்னு பார்க்கறீங்களா?
11500 யென் கொடுத்து ஜப்பான் முழுவதும் புல்லட்
ட்ரையினில் சுற்றிப் பார்க்க இருக்கும் வசதி பற்றி எழுதி இருக்கிறார் பத்மஹரி.
பயணம் செல்வதே சுகமான அனுபவம். நமக்குப் பிடித்தவர்களும்
நம்முடன் வந்தால்? அலாதி இன்பம் அல்லவா அது? வலைப்பூ எழுதும் நண்பர்களில் பலருக்கு
சக வலைப்பதிவாளர்கள் நல்ல நண்பர்களாக மாறியிருப்பது விந்தையல்ல. இப்படி சக வலைப்பதிவர்களுடன் கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில்
அழகானதொரு சுற்றுலாத் தலமான பரளிக்காடு சென்று வந்தது பற்றி எழுதியிருக்கிறார் சஞ்சய் காந்தி.
நீங்கள் எதையாவது வாங்க வேண்டுமெனில் மார்க்கெட் செல்வீர்கள். ஆனால் அந்த மார்க்கெட்டே உங்களுடன் பயணம் செய்கிறதை பார்த்த அனுபவம் உண்டா உங்களுக்கு? தாய்லாந்தில் Damnoen Saduak என்ற வாய்க்காலை இருமருங்கும்
பெட்டிக்கடைகள் நிறைக்க, நடுவில் ஓடும் நீரோடையில் வியாபாரம் களை கட்டுகிற மிதக்கும் சந்தை பற்றி
படிக்க நீங்கள் செல்லவேண்டியது கானா பிரபா அவர்களின் உலாத்தல் வலைப்பூவிற்கு.
நயாக்ரா நீர்வீழ்ச்சி நேரடியாக பார்க்க எல்லோருக்கும் ஆசைதான்.
அப்படி இந்தியாவினை விட்டு வெளியே போகாத மக்கள் அது பற்றி படித்துத்தானே மனதைத் தேற்றிக்கொள்ள
வேண்டும்? நயாக்ரா – டொரோண்டோ சென்று
தாம் ரசித்த விஷயங்களையும், பெற்ற அனுபவத்தினையும் அழகாய்ப் பகிர்ந்து இருக்கிறார்
கால்கரி சிவா. பார்த்து ரசியுங்க.
குடும்பத்துடன் ஹைதை சென்று பல இடங்களைச் சுற்றிப் பார்த்து
வந்த அனுபவத்தினை அழகாய்த் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் நண்பர் மோகன் குமார்.
மிகவும் தேவையான விவரங்களுடன் அருமையான ஒரு தொடரின் முதல் பகுதி இங்கே!
பழனி மலை முருகன் தரிசனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஒவ்வொரு முறையும் செல்ல நினைப்பேன் - ஆனால் முடிவதில்லை. அந்தக் குறையைத் தீர்த்தது
புதுகைத் தென்றல் அவர்களின் பழனி மலை முருகா!
பயணத் தொடர் பற்றிய தொகுப்பு என்று சொல்லிவிட்டு பயணத் தொடர்
எழுதுவதில் நிபுணர் பற்றி சொல்லாமல் விட்டால் எப்படி! யார் அந்த நிபுணர் என்று பதிவுலகமே
அறியும்! நம்ம துளசி கோபால் [துளசி டீச்சர்] தான் அந்த நிபுணர். விவரங்கள் சொல்லிப்போவதில்
வல்லவர். ஆங்காங்கே அவரது முத்திரைகள் தந்து அசத்துவார். அவர் பதிவுகளில் எதைச் சுட்டுவது
எதை விடுவது என்ற குழப்பமே மிஞ்சுகிறது. ராஜஸ்தான் பயணத் தொடரில் இருந்து ஒரு பகுதி
இங்கே.
”மிகத்
தொன்மையான நகரமான ரோமின் உலகளாவிய பேரழகை ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுப் போனால் பதினாறாம்
நூற்றாண்டு ரோமாபுரி பேரரசர்களின் ஆவிகள் என்னை மன்னிக்காது” என்று தொடங்கி ரோம் பற்றிய
பயணக் கட்டுரை எழுதியிருக்கிறார் திரு சித்ரன்.
விவரங்களைப் படித்து ரசித்துக் கொண்டே வாருங்கள் – கடைசியில் பயணக் கட்டுரையை இப்படியும்
எழுதலாமென நமக்குச் சொல்லி இருக்கிறார்!
நாளை
வேறு ஒரு சுவையான தொகுப்புடன் சந்திக்கிறேன்.
மீண்டும்
சந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
டிஸ்கி-1: படங்கள் உதவி - கூகிள்....
டிஸ்கி-2: இன்று எனது பக்கத்தில் - செண்பகப் பூ.... எழுத்தாளர் யார்?
டிஸ்கி-2: இன்று எனது பக்கத்தில் - செண்பகப் பூ.... எழுத்தாளர் யார்?
|
|
சுற்றுலா பற்றிய தொகுப்பு பதிவர்களை இனம் காட்டியமைக்கு ரொம்ப நன்றி...
ReplyDeleteசுற்றுலா பற்றிய பதிவர்களின் பதிவுகளைத் தொகுத்துத் தந்துள்ள விதம் அருமை. நிறையப் பதிவுகள் நான் படிக்காதவை என்பது தெரிகிறது. விரைவில் படித்து விடுகிறேன். செண்பகப்பூவின் நறுமணம் நாசியைத் துளைக்கிறது வெங்கட். பிரமாதம்! தொடரட்டும். அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅட! செம்பகப்பூ எனக்கு ரொம்பப் பிடிக்கும்! காய்ஞ்ச பூவுக்கும் கம்ன்னு மணம் உண்டு கேட்டோ!!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை.
என்னையும் ஆட்டத்தில் சேர்த்ததுக்கு இனிய நன்றிகள்.
@ கோவை நேரம்: தங்களது உடனடி வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete@ கணேஷ்: அன்பு நண்பருக்கு நன்றிகள்... சில பதிவர்களை உங்களுக்கும் அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி....
ReplyDeleteதொடர்ந்து வரவேண்டும்!
@ துளசி டீச்சர்: உங்களை வலையுலகம் நன்கறியும் என்றாலும், பயணம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு என்று சொல்லிவிட்டு உங்கள் பக்கம் இல்லாமலா?
ReplyDeleteசெண்பகப் பூ மலர் வாசம் உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் சந்தோஷம்!
தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி
ReplyDeleteபயண்ககட்டுரைகள் தரும் அருமையான பதிவர்களுடன்
பயணப்பட துவங்கி இருப்பது வெகு அருமை
தொடர வாழ்த்துக்கள்
@ ரமணி: பயணத்தில் நீங்களும் வந்து கலந்துகொண்டு இன்புற்றதில் மகிழ்ச்சி சார்.......
ReplyDeleteதொடர்ந்து, வாரம் முழுவதும் வருகை புரிய வேண்டுகிறேன்....
செண்பகபூவாய் மணம் கமழும் நிறைவான பயண்ப்பகிர்வுகள் ..
ReplyDeleteபாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteபயணத்தொடர் பற்றிய பதிவுகள் அறிமுகங்கள் செண்பகப் பூவாய் மணக்கிறது நண்பரே..
ReplyDelete@ மகேந்திரன்: தங்களது தொடர்ந்த வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே...
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் நன்றி..
ReplyDeleteசெண்பகப்பூ வாசம் ஆளைத்தூக்குது. பாராட்டுகள்.
வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் எமது நல்வாழ்த்துகளும், பாராட்டுகளும்..
ReplyDeleteபயண கட்டுரை எனக்கு பிடித்தமான ஒன்று. நீங்கள் அறிமுக படுத்தியதில் ஒரு சிலரை தவிர பலரும் நான்
ReplyDeleteஅறியாதோர். அவசியம் புக்மார்க் செய்து கொள்கிறேன்
என்னையும் இங்கு சேர்த்ததற்கு நன்றி வெங்கட்
உன்னுடைய பயணக் கட்டுரைகளே நன்றாக இருக்கும். அதனாலேயே, நீ அறிமுகம் செய்து வைத்தப் பதிவுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன. நன்றிகள்.
ReplyDeleteஇனிய பயண( அனுபவ)ங்கள். சுவையான பதிவுகள். அழகான பகிர்வுகள்
ReplyDeleteஇனிய பயண( அனுபவ)ங்கள். சுவையான பதிவுகள். அழகான பகிர்வுகள்
ReplyDeleteஇனிய பயண( அனுபவ)ங்கள். சுவையான பதிவுகள். அழகான பகிர்வுகள்
ReplyDeleteசெண்பகப்பூவின் அத்தனை இதழ்களும் மணக்கின்றன. கால்கரி சிவாவின் நயாகரா கவர்ந்தது. எனக்குப் பொதுவா நயாகரான்னா ரொம்ப பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையாக அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்...
ReplyDeleteசொல்லிப் போகும் விதமே மணக்கிறது.. புது அறிமுகங்கள் பார்த்து சந்தோஷம்
ReplyDeleteஎன் பதிவு உங்களுக்குப் பிடித்ததற்கும் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.. வலைச்சர பணி சிறக்க வாழ்த்துகள்..
ReplyDeletevaazhthukkal!
ReplyDeleteவித்தியாசமான தொகுப்பு. அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதில் நண்பர் ஹரியின் பதிவை அறிமுகபடுதியதுக்காக உங்களுக்கு என் நன்றிகள் வெங்கட் நாகராஜ்.
செண்பகபூ மணம் இங்கு வரை கமழ்கிறது. :)
வாழ்த்துக்கள்
சுற்றுலாத்தொகுப்பு மிக அருமை.
ReplyDeleteVery Good Introductions. Thank you!
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட், நான் படிக்காது விடுபட்ட நல்ல பதிவுகளையும் இனங்காண முடிந்தது
ReplyDeleteஎன்னுடைய பதிவை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே. இலண்டன் பற்றிய பயணக் கட்டுரை பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர வேண்டும் என்பதற்கான நினைவு படுத்தலாகவும் ஊக்கமாகவும் இதை எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் நன்றிகள். சாவகாசமாக ஒருநாள் உங்கள் பதிவுகளையும் வாசித்து உரையாட வருகிறேன். அதுவரை வணக்கம்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ஒரு அழகான பாடலுடன்... வாழ்த்துக்கள்.
ReplyDelete@ அமைதிச்சாரல்: செண்பகப்பூ வாசம் உங்களை மகிழ்வித்ததில் எனக்கும் மகிழ்ச்சி....
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சாரல்.... தொடர்ந்து வருகை தருவீர்கள் என நினைக்கிறேன்!
@ பாரத் பாரதி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete@ மோகன்குமார்: வருகை புரிந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மோகன்.....
ReplyDelete@ வேங்கட ஸ்ரீனிவாசன்: எனது மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி சீனு!
ReplyDelete@ நிசாமுதீன்: தங்களது வருகைக்கும் மூன்று கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!
ReplyDelete@ வாஞ்சூர்: நன்றி.
ReplyDelete@ துரை டேனியல்: செண்பகப்பூவின் ஒவ்வொரு இதழையும் ரசித்தமைக்கு நன்றி நண்பரே.....
ReplyDelete@ கே. பி. ஜனா: தொடரும் தங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி சார்.
ReplyDelete@ ரிஷபன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சார்.
ReplyDelete@ சஞ்சய் காந்தி: தங்களது பகிர்வினையும் அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சி. தாங்களும் ரசித்தது கண்டு மனம் மகிழ்ந்தது.
ReplyDeleteதொடர்ந்து வருகை புரிந்து கருத்திட அழைக்கிறேன்.
@ சீனி: வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.
ReplyDelete@ கௌசல்யா: எனது இன்றைய பகிர்வினை படித்து, ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ......
ReplyDelete@ ஆசியா உமர்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDelete@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி சார்.
ReplyDelete@ கானா பிரபா: மிக்க நன்றி பிரபா.... உங்களது மற்ற வலைப்பூக்களும் நான் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறேன். இசை நிகழ்ச்சிகளும் அருமை....
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..
@ பாரதிராஜா. ஆர்.: உங்கள் பக்கத்தினை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சி நண்பரே... தொடருங்கள்.... நானும் தொடர்கிறேன்....
ReplyDelete@ விச்சு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
ReplyDeleteஅழைத்துச் செல்லும் விதமே அருமை!
ReplyDeleteகாரஞ்சன்(சேஷ்)
@ சேஷாத்ரி. ஈ.எஸ்.: பயணம் உங்களுக்குப் பிடித்தது என்றறிந்து மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteசெண்பகப்பூ அழைத்துச் சென்ற இடங்கள் அருமை:)! தொடருங்கள்.
ReplyDelete@ ராமலக்ஷ்மி: செண்பகப்பூ அழைத்துச் சென்ற இடங்களுக்கு நீங்களும் சென்று அவற்றினை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteசெண்பகப் பூக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.பயணத்தில் ஆரம்பித்த வலைச்சர வாச மலர்ப் பயணம் இனிதே தொடரட்டும்
ReplyDelete@ ராஜி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜி!
ReplyDeleteபயணப் பதிவை இன்று தான் பார்த்தேன். மிக்க நன்றி .பல புதியவை. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteசெண்பகப்பூ வாசம் ஆளைத்தூக்குது. பாராட்டுகள்.
@ கோவைக்கவி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரை எழுதியமைக்கும் மிக்க நன்றிம்மா....
ReplyDeleteசெண்பகப்பூ வாசத்தில் எல்லா இடங்களையும் சுத்திப்பார்த்தேன் அருமை.
ReplyDelete@ கோமதி அரசு: செண்பகப்பூவின் வாசத்தில் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தாச்சா... ரொம்ப நல்லதும்மா.... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.
ReplyDeleteசுற்றுலா பதிவுகள் அறிமுகங்கள் சூப்ப்ர,
ReplyDeleteநிறைய பேருக்கு இது பயன் படும்
ஜலீலா
@ சென்னை பிளாசா: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஜலீலா...
ReplyDeleteஎன் பதிவின் சுட்டிக்கு மிக்க நன்றி சகோ
ReplyDelete@ புதுகைத் தென்றல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDeleteஎனக்கும் ரொம்பப் பிடித்தமானது "சுற்றுலாச் சரம்".
ReplyDeleteஅறிமுப்படுத்திய உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
ReplyDelete