07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 22, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பன் மதுரையைச் சார்ந்த சித்திர வீதிக்காரன் என்றும் மதுரை வாசகன் என்றும் புனைப்பெயர் கொண்ட சுந்தர் தான் ஏற்ற பொறுப்பினை வித்தியாசமான முறையில் திறம்பட நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் தன்னைப் பற்றிக் கூறும் போது “மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்து விடப் பட்டவன்” எனப் பெருமையுடன் கூறிக் கொள்கிறார். இவர் எழுதும் இடுகைகள் பெரும்பாலும் நீண்டவைகளாகவும், தமிழ் தட்டச்சுப் பிழைகள் இல்லாமலும் - அவ்ற்றில் பல படங்கள் தரவுகளாகவும் இருக்கும்.

இவர் ஏறத்தாழ 250 பதிவுகளை அறிமுகப் படுத்தி இருப்பார் என நினைக்கிறேன். ஏழு இடுகைகளில் தான் படித்த அத்தனை எழுத்தாளர்களைப் பற்றியும், மதுரையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் எழுதி உள்ளார். மதுரையில் நடக்கும் புத்துகத் திருவிழா - கண்காட்சிகளில் தவறாது கலந்து கொள்வார்.

அருமை நண்பன் சுந்தரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சுந்தர்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்பவர் வைரை சதீஷ். இவர் வைரை சதீஷ் என்ற பெயருள்ள தளத்திலேயே எழுதி வருகிறார். இவர் கணினி, கூகுள், மொபைல், பிளாக்கர் டிப்ஸ் எனப் பல டிப்ஸ்களை வழங்கி வருகிறார். கணினி மற்றும் அலைபேசியில் பயன் படுத்தும் பல மென் பொருள்களைப் பற்றி எழுதி வருகிறார். உங்கள் ஆருயிர் நண்பன் எனத் தளத்தில் விளம்பரப்படுத்தும் இவர் தான் இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர்களில் இளையவர் ஆவார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர். இவரை வருக வருக - அதிக - புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவர் ஏற்கனவே சென்ற ஆண்டு டிசம்பர்த் திங்களில் ஆசிரியப் பொறுப்பேற்றவர். இவர் தானே புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழையினால் உடல் நலமின்றி மூன்று நாட்கள் இணையத்தின் பக்கம் வர இயலாமையினால் குறைந்த பதிவுகளே இட முடிந்ததென வருத்தத்தோடு கூறினார். ஆகவே மற்றுமொரு முறை ஆசிரிய்ப் பொறுப்பேற்க விரும்பினார். விருப்பம் நிறைவேற்றப் பட்டது.

நல்வாழ்த்துகள் வைரை சதீஷ்

நட்புடன் சீனா

10 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சித்திரைவீதிக்காரன் திரு.சுந்தர் தனது பணியை சிறப்பாக செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள்..,

    நண்பர் 'வைரை சதீஷ்' சிறப்பாக பணிபுரிந்து வெற்றிபெற வாழ்த்துக்கள் ..,

    வாழ்த்துக்கள் நண்பா ஆசிரியர் பணிக்கு .. :)

    ReplyDelete
  3. Welcome....
    STHISH......
    MEENDUM....
    vazhthukkal.....

    ReplyDelete
  4. அருமையாக பதிவிட்ட சுந்தருக்கு வாழ்த்துக்கள்

    தம்பி வைரை சதீஷ்க்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வருக வைரை சதீஸ் நல்வாழ்த்துக்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள்.

    ReplyDelete
  6. சென்றாவார ஆசிரியருக்கும் (சித்திரவீதீக்காரன்) இந்த வார ஆசிரியருக்கும் (வைரை சதீஷ்) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் பதிவிட வாய்ப்பளித்த சீனாஅய்யாவிற்கு நன்றிகள் பல. மறுமொழியளித்து ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி. இன்று முதல் தொடரும் எங்கள் ஆருயிர் நண்பன் சதீஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். நன்றி.
    - அன்புடன், சித்திரவீதிக்காரன்

    ReplyDelete
  8. அருமையாக பதிவிட்ட சுந்தருக்கு வாழ்த்துக்கள்

    புதிய ஆசிரியர் பொறுப்பேற்கும் வைரை சதீஷ்க்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. புதிய ஆசிரியர் பொறுப்பேற்கும் வைரை சதீஷ்க்கும் வாழ்த்துக்கள்.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது