07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 16, 2012

மதுரை சித்திரவீதிகளிலிருந்து…

மதுரை வீதிகளில் அலைந்து அலைந்து பித்தேறி ஒவ்வொரு வீதியும் சித்திரமாக மனதில் படிய சித்திரவீதிக்காரனானேன். வாசித்தலும் அலைதலும்தான் வாழ்க்கையாயிருக்கிறது. நான்மாடக்கூடல், நாட்டுப்புறவியல், வழியெங்கும் புத்தகங்கள், ஊர்சுத்தி, மதுரையில் சமணம், கமலும் தமிழும், பார்வைகள் பகிர்வுகள் என்ற பகுப்புகளில் பதிவு செய்து வருகிறேன்.

இலக்குகள் அற்றுத்திரியும் தேசாந்திரியாய், கோடுகள் மூலம் பேசும் சித்திரக்காரனாய், நினைவுகளைப் புனையும் கதைசொல்லியாய், மனங்களை ஈர்க்கும் கூத்தாடியாய் வாழத்தான் விரும்புகிறேன். அன்றாட வாழ்வுக்கும், விருப்பங்களுக்குமிடையே அந்நியமாகாமலிருக்க பயணங்களும் பதிவுகளும்தான் பாலமாயிருக்கிறது.

மதுரை சித்திரவீதிகளில் சுற்றித்திரியும் சித்திரவீதிக்காரனுக்கு சித்திரை மாதத்தில் வலைச்சரத்தில் பதிவெழுத வாய்ப்பளித்த சீனாஅய்யாவிற்கும், தமிழ்வாசிக்கும் நன்றிகள் பல. என்னுடைய ஒவ்வொரு பதிவையும் வாசித்து ஊக்கமூட்டும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. டாக்டர் பவர்ஸ்டார் சீனிவாசன் போல என்னை நானே விளம்பரப்படுத்திக் கொள்கிறேன். இந்த ஆனந்ததொல்லையை ஏற்றுக்கொள்ளுங்கள். என் பதிவுகளிலிருந்து

  1. மதுரைவாசகன்
  2. மின்வெட்டில் இருளும் மின்னுலகம்
  3. உலகப்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்கட்டும்
  4. திரும்பிப்பார்க்கிறேன்
  5. மதுரை புத்தகத்திருவிழா
  6. தூங்காநகரில் உற்சவவிழா
  7. உள்ளானும் சுள்ளானும்
  8. மறைந்துவரும் விளையாட்டுகள்
  9. ச.தமிழ்ச்செல்வன் கதைகள்
  10. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
  11. அணிகலன்களின் தேவதை
  12. நாட்டுப்புறக்கலைகள்
  13. மழையோடு பாதயாத்திரை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தளம் குறித்து விகடன் வரவேற்பறையில் வாசித்து இணையதள வாசகனானேன். புத்தகவாசிப்பு இளமையில் அம்புலிமாமா, பூந்தளிரிலிருந்தே தொடங்கிவிட்டது. காமிக்ஸ் கதைகள் ரொம்பப் பிடிக்கும். நூலகங்களுக்கு சென்று புத்தகம் வாசிக்கத்தொடங்கியது என்னை மேலும் செதுக்கியது. தீராதபக்கங்களாக வலைப்பதிவுகள் அதிகரித்துவிட்டன. நிறைய சூப்பர் லிங்க்ஸாக எடுத்துத்தர வேண்டுமென்ற ஆசையிருக்கிறது. வலைச்சரத்தில் தமிழ்ச்சரம் தொடுக்கிறேன். வலைதளவாசிப்பெனும் நெடும்பயணத்தில் என்னுடைய பங்கு சிறிதே. பதிவுகளில் சொற்குற்றம் இருந்தால் மன்னித்துவிடுங்கள். தினசரி பதிவுகள் சிறப்பாகத்தொடர மின்வாரியம் அருளட்டும்.

மதுரைக்கும், தமிழுகும் நன்றி.

- சித்திரவீதிக்காரன்

3 comments:

  1. சித்திரவீதிக்காரருக்கு நல் வரவு. தங்கள் வாரம் சிறப்புற வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலககம்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சித்திரவீதிக்காரன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது