07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 8, 2012

ஞாழல் பூ – அனுபவச் சரம்



[பட உதவி: கூகிள்]


சிறு வயது அனுபவங்கள் என்றுமே ரசிக்கத் தகுந்த விஷயங்கள் தான்.  எல்லாரிடமும், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள, சுவையான சிறு வயது அனுபவங்கள்/விஷயங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சில சுவையான அனுபவங்களை இன்றைய வலைச்சரத்தில் ஞாழல் பூவாகத் தொடுத்திருக்கிறேன். அது என்ன ஞாழல் பூ? குங்குமப்பூவிற்கு ஞாழல் பூ என்ற பெயரும் உண்டு. இனி பதிவர்கள்/பதிவுகள் அறிமுகங்களைத் தொடரலாமா...

”மதுரையில் மார்கழி மாத அதிகாலையில் பஜனைக் கோஷ்டியினர் பல தெருக்களிலும் பாடியபடி வந்து எங்கள் தெருவைக் கடந்து அடுத்த தெருவில் இருந்த கோதண்டராமர் கோயிலில் முடிப்பார்கள். பனி பெய்யும் அந்த அதிகாலையில் எழுந்திருப்பதே அந்தச் சிறுவயதில் பெரிய விஷயம். அதிலும் குளித்துவிட்டு பஜனை கோஷ்டியுடன் செல்வது... நடக்கிற காரியமா? ஆனால் பஜனை கோஷ்டியுடன் சேர்ந்து பாடியபடி போனால் கோதண்டராமர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். அதை விட்டுவிடவும் மனம் வராது” என்று சர்க்கரைப் பொங்கலாய் இனிக்கும் அனுவத்தினைப் பகிர்ந்தவர் மின்னல் வரிகள் கணேஷ்.

”ஊருக்கு அழைத்துச் செல்லும் போது, பஸ் ஸ்டேண்டில் பத்துப் பைசாவுக்கு பட்டாணி பொட்டலமும், அன்னாசிப் பழ கீற்றும், மாம்பழமும், பன்னும் வாங்கி பையில் வைத்துக்கொள்ளும். கடைக்காரர்களிடம் பேரம் நடத்தும் திறமையை இன்று நினைத்தாலும் பொறாமையாக இருக்கிறது” என்று தனது ஆயா [பாட்டி] பற்றிய நினைவுகளை அழகாய்த் தந்திருக்கிறார் ஈரோடு கதிர்.

குழந்தைப் பருவத்தில் அத்தை, சித்தப்பா, பெரியப்பா, குழந்தைகள் என்று பெரிய கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து திருமணத்திற்குப் பின் கண்ட மாற்றத்தினை மலரும் நினைவுகள் என்ற தொடராக எழுதி இருக்கிறார் லக்ஷ்மி அம்மா. பதிவின் முதல் பகுதி இங்கே கொடுத்திருக்கிறேன் ஒரு சுட்டியாக. அதை அப்படியே பிடித்துக் கொண்டு அடுத்த பகுதிகளையும் படித்து ரசியுங்கள்.

"யே! இப்ப படந் தெரியுதா?”
இல்ல
"இப்ப
உஹும்.கொஞ்சம் கிழக்கால சர்ச் பக்கம் திருப்பு
இப்ப
லேசா வருது. இன்னும் ஒரு ஜான் அந்தப் பக்கமே திருப்பு
என்னடா ஜான்... முழம்.. இப்ப
ஒரு நாலு விரக்கடை திருப்பு
...ஆங்.. நிப்பாட்டு.. போதும்...போதும்

மேலே உள்ள உரையாடலை யார் எப்போது எங்கே பேசினார்கள் என்று கேட்கிறீர்களா?  எண்பதுகளில் டீ.வி பார்க்க வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தனது மன்னார்குடி டேஸ் தொடரின் ஒரு பகுதியாக ”மன்னார்குடி டேஸ் – தொலைக்காட்சிகள்” என்ற பகுதியில் எழுதி இருக்கிறார் மன்னை மைனர் ஆர்.வி.எஸ்.

”பதினொரு வருடத்துக்கு முந்தைய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அந்த நினைவுகளை இந்த ஒரு பதிவின் மூலம் மட்டும் விவரிக்கமுடியாது. அதற்கு பல பதிவுகள் தேவைப்படும். அதனால் தான் இந்த வலை பதிவில் அதற்கென தனி வகை தொடங்கி உள்ளேன்” என்று சொல்லும் தி.ஜா. சோமசுந்தரம் சில காலமாக மங்களூரில் தங்கி இருக்கும் திருச்சிக்காரர்.

“எங்கள் நண்பர் குழாத்தில் கட்லையுடன், நாங்கள் ஜாஸ்தி வைத்துக் கொள்ள மாட்டோம். அவனுக்கு  எங்களை விட பலம் ஜாஸ்தி! பழயது ப்ளஸ் எருமைத் தயிரில் வளர்ந்த உடம்பு. அடித்தால், ’ங்கோய்என்று காது இரண்டு நாளுக்கு கேட்கும். யானை எப்படி எரும்பை விட்டு விடுமோ, அப்படி எங்களை மன்னித்து விடுவான், கட்லை” என தனது சிறுவயது நினைவுகளை “ஆங்கரை டேஸ்” பதிவில் எழுதி இருக்கிறார் ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி”.

”சார் சார் ஒண்ணுக்கு…..
சட்டாம்பிள்ளை ரெண்டுக்கு
நான் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வந்தா கேட்டுக்கோ!”

அட, இது என்ன பாட்டு? நல்லா இருக்கே! இந்த பாட்டுடன் ஆரம்பிக்கும் பகிர்வு விசேஷமான பகிர்வு. சிறு வயதில் தான் கல்யாணியைக் கடித்த கதையை எழுதி இருக்கிறார் மோகன்ஜி! சண்டை போட்டு கடிக்கும் பழக்கமும், அதனால் ஏற்பட்ட வலி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கிடைத்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி பற்றி படியுங்களேன். இது போலவே இவர் அம்மாவிடம் விசிறிக்கட்டையால் அடி வாங்கி ”வீட்டைத் துறந்தேன்” என்று சொன்னதையும் படியுங்கள்.

”கடைசி அண்ணாவோ அவ பாடினது கேட்டு ட்யூப் லைட் "நீ பாடறது எனக்கே பொறுக்கமுடியலை. அப்பறம் அந்த நிலவு, அதுவும் ஒரு நிலவில்லை ரெண்டு நிலவில்லை ஆயிரம் நிலவும் எப்படி பொறுத்துக்கும்னு சொல்றாப்புல நெஞ்சுபொறுக்குதில்லையேன்னு டமார்னு வெடிச்சிடுத்து"ன்னான்” என்று தான் ட்யூப் லைட் உடைத்த கதையைச் சொல்லி இருக்கிறார் கற்றலும் கேட்டலும் ராஜி.  கூடவே தேளை அவர் கடித்த…. இல்லை இல்லை தேள் அவரைக் கொட்டியது பற்றிய பகிர்வு “நான் என்ன சாதுவா? சாதா தான?” என்ற பகிர்வும் சுவையானது.

தனது சிறு வயது நினைவுகளை நகைச்சுவையாகச் சொல்லுவதில் சமர்த்தர் தக்குடு. அவரது கல்லிடை நினைவுகள் சுகமானவை. கல்லிடையில் இருக்கும் பல பாத்திரங்களை அறிமுகம் செய்து வைக்கும் அவரது பதிவுகள் நகைச்சுவை ததும்பும். பிளவுஸ் சங்கரன் என்ற நபர் பற்றி இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறார். பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டு படித்து மகிழுங்கள்.

என்ன நண்பர்களே இந்த வார வலைச்சரத்தில் தொடுத்த எல்லாப் பூக்களுமே உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். என்னையும் ஆசிரியர் ஆக்கிய இந்த வலைச்சர வாரத்தில் எனக்குப் பிடித்த சில பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். இன்னும் பல நண்பர்களின் பக்கங்களை அறிமுகம் செய்திருக்கலாம் தான். ஆனால் ஒரு வாரத்தில் இத்தனை தான் செய்ய முடிந்தது. இந்த நல்வாய்ப்பினை எனக்குத் தந்த வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா ஐயா அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

தொடர்ந்து எனது பக்கத்தில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

டிஸ்கி: இன்று எனது பக்கத்தில் காதலியுடன் நீண்ட பயணம்.

46 comments:

  1. தக்குடுவும், ராஜியும், லக்ஷ்மி அம்மாவும் நான் படித்து ரசித்தவை. மற்றவற்றை அவசியம் படிக்கிறேன். என்னையும் இந்த நல்ல குழுவுடன் சேர்த்த உங்களுக்கு என் அன்பும் நன்றியும்! உங்களுடனான இந்த வலைச்சர வாரம் மனமகிழ்வைத் தந்தது. நினைவில் நிற்பது!

    ReplyDelete
  2. @ கணேஷ்: இந்த வாரம் முழுவதும் நான் தொடுத்த மலர்களைத் தொடர்ந்து படித்து கருத்துரையிட்டு என்னை மகிழ்வித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  3. தலைவரே! அது தொ”ல்”லைக் காட்சிகள்.... தொலைக்காட்சிகள்னு போட்டுட்டீங்க...

    இந்த எளியவனை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி தலைநகரமே! :-)

    ReplyDelete
  4. எல்லாப்பதிவுகளுக்கும் இனி போக வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் சாம்பிள் அப்படி வெங்கட்.
    மிக அருமையாக வாரத்தை சரங்களால் அலங்கரித்திருப்பீர்கள். பல நாட்களையும் தவறவிட்டேன்.காரணங்கள் பல. மன்னிக்கணும்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் தொடுத்த எல்லாப் பூக்களுமே சொல்கிறதே ரசனையுடன் அருமையான பகிர்வுகளை ! பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. ஞாழல் பூ சரத்தில் என்னையும் ஒரு பூவாக்கியமைக்கு நன்றி.பிற பூக்களுக்கு வாழ்த்துக்கள்.
    நானே மிகவும் ரசித்து எழுதிய பதிவுகளை அறிமுகம் செய்தது மகிழ்ச்சி.

    வலைச்சரத்தை பூச்சரங்களால் மணம் வீச செய்து எங்களை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  7. தங்களின் தேர்வுகள் யாவுமே மிகவும் சிறப்பானவைகள் தான்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ஞாழல் பூவைக்கண்டு கொண்டேன்.

    அபூர்வப் பூக்களின் அறிமுகங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. தங்களின் அன்பான அறிமுகத்திற்கு நன்றிகள் பல! எல்லா புகழும் ப்ளவுஸ் சங்கரனுக்கே!! :)

    ReplyDelete
  10. Good job done for the past one week. Well done Venkat

    ReplyDelete
  11. SRY TAMIL WORK PANNAMAATTENGUTHU. ENNAIYUM ARIMUKAPPATUTHTHIYATHARKU NANRI VENGAT MARRA ANAIVARUKKUM VAAZTHTHUKAL

    ReplyDelete
  12. அனுபவச் சரம் அருமை. அத்தனை பேரும் அருமையான பதிவர்கள்தான். இந்த வாரச் சரத்தை அருமையாக தொடுத்தமைக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து உங்கள் தளத்தில் சந்திப்போம். நன்றி.

    ReplyDelete
  13. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. @ RVS: தொல்லைக் காட்சிகளோ, தொலைக்காட்சிகளோ - அந்த கால அனுபவங்களை நீங்கள் சுவையாக எழுதி இருக்கும் தொடராயிற்றே அது.

    தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மன்னை மைனரே.

    ReplyDelete
  15. @ வல்லிசிம்ஹன்: //மிக அருமையாக வாரத்தை சரங்களால் அலங்கரித்திருப்பீர்கள். பல நாட்களையும் தவறவிட்டேன். காரணங்கள் பல. மன்னிக்கணும்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

    மன்னிப்பெல்லாம் எதற்கு? தங்கள் வாழ்த்துகள் மட்டுமே எடுத்துக் கொண்ட்டேன். :)

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா.

    ReplyDelete
  16. @ இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. @ ராஜி: //வலைச்சரத்தை பூச்சரங்களால் மணம் வீச செய்து எங்களை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள் :-))//

    வாரம் முழுவதும் வலைச்சரத்திற்கு வந்து கருத்திட்டு என்னை மகிழ்வித்ததற்கு மிக்க நன்றி ராஜி!

    ReplyDelete
  18. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  19. @ துளசி கோபால்: //ஞாழல் பூவைக்கண்டு கொண்டேன்.// கண்டு கொண்டாயிற்றா? நன்று!

    தங்களது வருகைக்கும் வலைச்சர வாரத்தில் எனக்களித்த ஆதரவிற்கும் மிக்க நன்றி டீச்சர்!

    ReplyDelete
  20. @ தக்குடு: //எல்லா புகழும் ப்ளவுஸ் சங்கரனுக்கே!! :)// எங்களைப் பொறுத்தவரை எல்லாப் புகழும் தக்குடுவிற்கே! :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தக்குடு!

    ReplyDelete
  21. @ மோகன்குமார்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

    ReplyDelete
  22. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா. உங்களை அறிமுகம் செய்வதில் எனக்குப் பெருமை!

    ReplyDelete
  23. @ துரை டேனியல்: //தொடர்ந்து உங்கள் தளத்தில் சந்திப்போம். நன்றி.// நிச்சயம் சந்திப்போம் நண்பரே.

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  24. @ ரத்னவேல் நடராஜன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  25. வலைச்சரப் பொறுப்பேற்று
    நித்தம் நித்தம் ஒவ்வொரு பூக்கள் வாசனையுடன்
    திறம்பட பணியாற்றியமை அழகு..
    வாழ்த்துக்கள் நண்பரே..

    இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. வலைச்சரப் பூக்களின் மாலை கண்டு மகிழ்தேன். அறிமுக மலர்களிற்கும் அறிமுகம் செய்த தங்களிற்கும் வாழ்த்துகள். வலைச்சர வாரம் இனியதாகக் கடந்தது. நன்றி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  27. குங்குமப் பூவிற்கு ஞாழல் பூ என்ற பெயரும் உண்டு என்பதை இப்ப தான் கேல்விப்படுறேன்.அனுபவப் பகிர்வும் அருமை சகோ.

    ReplyDelete
  28. இந்த வாரம் வலைச்சரத்தை மிகவும் ரசித்தேன். பார்க்காத மலர்களின் படங்களும் காணப் பெற்றேன். வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  29. @ மகேந்திரன்: தங்களது தொடர் வருகைக்க்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

    தொடர்ந்து எனது வலைப்பக்கத்தில் சந்திப்போம்!

    ReplyDelete
  30. @ கோவைக்கவி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    வாரம் முழுவதும் வலைச்சரத்தில் எனக்குத் தந்த ஆதரவிற்கு நன்றி.

    ReplyDelete
  31. @ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  32. @ மிடில்கிளாஸ் மாதவி: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதவி.

    ReplyDelete
  33. அபூர்வ பூக்களால் வலைச்சரத்தை தொடுத்து எல்லோருக்கும் மகிழ்ந்தளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் வெங்கட்.

    ReplyDelete
  34. @ கோமதி அரசு: உங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றிம்மா.

    ReplyDelete
  35. வலைச்சரத்தில் மலர்ச்சரங்களை மிக அழகாகவும் அருமையாகவும் தொகுத்தளித்திருக்கும் நேர்த்தியில் தெரிகிறது தங்கள் உழைப்பும் திட்டமிடலும். உடல்நிலை காரணமாக சில நாட்களாக வலைப்பக்கத்துக்கு வரவே இல்லை. எல்லாவற்றையும் இப்போது படித்தேன். நிறைவாகச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள் வெங்கட். இனி அந்தந்த வலைப்பூக்களை மெல்லப் பார்வையிடுவேன். நன்றி. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. @ கீதமஞ்சரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    லேட்டாக வந்தாலும், வந்து பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது.... மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  37. நல்லதொரு தொகுப்பு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. @ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  39. சித்தம் மகிழ நித்தம் பல பதிவுகளை
    தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. மிக்க நன்றி! :)

    ReplyDelete
  41. அருமையான எப்பவும் வாசிக்கும் அறிமுகங்கள்..

    ReplyDelete
  42. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  43. @ கதிர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  44. @ அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  45. @ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது