07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 20, 2014

கீதமஞ்சரியின் வணக்கம்


ன்பார்ந்த வலையுலக உறவுகளே
வணக்கம்


கடந்த மார்ச் 2012- இல் அன்புக்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவின் பரிந்துரை மற்றும் மதிப்புக்குரிய திரு.சீனா ஐயாவின் அழைப்பின் பேரில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன். ஏற்றுக்கொண்ட பொறுப்பை ஓரளவு சரியாகவே நிறைவேற்றினேன் என்று நம்புகிறேன்

கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பொறுப்பு என்னைத் தேடிவந்துள்ளது. மீண்டும் என்னை வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ள திரு.சீனா ஐயா அவர்களுக்கும் என்மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் என் உளமார்ந்த நன்றி.

முதல் நாளான இன்று என் சுய அறிமுகம். உங்களில் பலருக்கும் என்னை முன்பே அறிந்திருக்க வாய்ப்புள்ளது என்றாலும் புதியவர்களுக்காக என் சிறு அறிமுகம்...

2008 முதல் பதிவுகள், நிலாச்சாரல், தமிழ்மன்றம் போன்ற பல இணையதளங்களில் எழுதிவந்தேன். மார்ச் 2011 இல் என் வலைப்பூவான கீதமஞ்சரியைத் துவக்கினேன். இடையில் சில தொய்வுகள் உண்டானாலும் இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு முக்கியக் காரணம் வலையுலக உறவுகளான உங்களுடைய ஆக்கபூர்வமான மறுமொழிகளும் உற்சாகம் தரும் வாழ்த்துக்களுமே. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை இவ்வேளையில் தெரிவித்து மகிழ்கிறேன்.

சமீபத்தில் சிறுகதைகள்.காம் தளத்தில் அலமேலுவின் ஆசை என்ற என் கதை எழுத்து மற்றும் ஒலிவடிவத்தில் பகிரப்பட்டது மற்றொரு கூடுதல் மகிழ்வு. என் குரலில் கதையை இங்கு கேட்கலாம்.

இதுவரை பல கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதை, கட்டுரைகள் என்று எழுதியிருந்தாலும் மனத்துக்கு மிகவும் நெருக்கமாய் இருந்து நிறைவு தந்தது, நெடுநல்வாடை பற்றிய என் புதுக்கவிதை முயற்சி. பலருடைய வாசிப்பும் பாராட்டும் பெரும் ஊக்கம் தந்து இனிதே நிறைவு செய்ய உதவியது.

என் பதிவுகளிலிருந்து உங்களுக்கு நான் பரிந்துரைக்கும் சில பதிவுகள் இதோ..

2.   நிறக்குருடு சிறுகதை
3.   என்றாவது ஒருநாள்… - ஆஸ்திரேலிய காடுறை கதை
7.   நெடுநல்வாடையை நுகரவாருங்கள் கவிப் பொழிப்புரை

நாளை முதல் என்னைக் கவர்ந்த சில வலைப்பூக்களின் அறிமுகங்களைக் காணலாம். புதியவர்களையும் பழகியவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி உற்சாகமாய் கைகுலுக்கும் வகையில் ஒரு அற்புதப் பாலமாய் அமைந்த வலைச்சரத்துக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி அறிவித்து இப்போது விடைபெறுகிறேன்.


நாளை மீண்டும் சந்திப்போம்
நன்றி. வணக்கம்.

55 comments:

 1. வலைச்சரத்தில் மீண்டும் ஆசிரியப் பணியேற்று சிறப்பிக்க வந்திருக்கும்
  தங்களின் வரவு நல்வரவாகுக!..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை செல்வராஜூ சார்.

   Delete
 2. வணக்கம்


  சிறப்பான சுய அறிமுகத்துடன் அசத்தல் சிறப்பாக உள்ளது... வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்.... தொடருகிறேன் பதிவுகளை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. வலைச் சர ஆசிரியர் பணி பொறுப்பேற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

   Delete
 4. வலைச்சர பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...

  தங்களின் தமிழைப் போலவே குரலும் அழகாக உள்ளது... கதையைப் பொறுமையாக பிறகு கேட்கிறேன்..

  இந்த வாரம் மிகச்சிறப்பாக இருக்கப் போகிறது என்பதில் எந்தவித ஐயமுமில்லை...

  ReplyDelete
 5. உங்களுக்கு எங்களின் சிவப்புக் கம்பள வரவேற்பு. சுவாரஸ்யமாய் நகரப் போகும் இந்த வாரத்தில் உடன்வர ஆவலுடன் காத்திருப்பு! மகிழ்வான பாராட்டும், நல்வாழ்த்துகளும்!

  ReplyDelete
  Replies
  1. சிவப்புக் கம்பளமெல்லாம் விரித்து வரவேற்றமைக்கு நன்றி கணேஷ்.

   Delete
 6. இரண்டாம் முறையாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்கும் தங்களை வரவேற்று, மேற்கொண்ட பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி வே. நடனசபாபதி சார்.

   Delete
 7. வலைச்சர வாரத்துக்கு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. சுருக்கமான சுய அறிமுகம் நன்று...

  அசத்துங்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. தங்களின் இரண்டு பதிவுகள் தான் படித்தேன் .. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். அவ்வளவு அருமை. மற்றவற்றையும் படிக்கிறேன். வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி எழில்.

   Delete
 10. வலைச்சர பொறுப்புகளுக்கு
  இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 11. அசத்துங்க..வாழ்த்துகள் !

  ReplyDelete
 12. 'அலமேலுவின் ஆசை 'கதை மனதைத் தொட்டது கீதமஞ்சரி..
  வலைச்சரப்பணிக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. இரண்டாம் முறையும் வலைச் சர ஆசிரியர் பணி பொறுப்பேற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்து

  ReplyDelete
 14. இந்த வாரம் – வலைச்சரம் – ஆசிரியை பொறுப்பேற்று இருக்கும் சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! வருக! வருக! என வரவேற்கிறேன்!

  ReplyDelete
 15. //கடந்த மார்ச் 2012- இல் அன்புக்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவின் பரிந்துரை மற்றும் மதிப்புக்குரிய திரு.சீனா ஐயாவின் அழைப்பின் பேரில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன். ஏற்றுக்கொண்ட பொறுப்பை ஓரளவு சரியாகவே நிறைவேற்றினேன் என்று நம்புகிறேன்.//

  மிகச்சிறப்பாகவே பணியாற்றினீர்கள். மீண்டும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். இனிமையான நினைவலைகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வை.கோ.சார்.

   Delete
 16. சிறப்பான சுய அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் தோழி .தொடர்ந்தும்
  சிறப்புற நிகழ்த்துங்கள் .

  ReplyDelete
 17. //கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பொறுப்பு என்னைத் தேடிவந்துள்ளது. மீண்டும் என்னை வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ள திரு.சீனா ஐயா அவர்களுக்கும் என்மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் என் உளமார்ந்த நன்றி.//

  திறமையாளர்களைத் தேடித்தான் வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் வந்துசேரும் என்பதற்கு இதுவே ஓர் மிகச்சிறந்த உதாரணமாகும்.

  அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று இந்த வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க தாங்கள் சம்மதித்து உள்ளதற்கு, In fact நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்தில் பொறுப்பு என்பது ஒரு வரமல்லவா? மிக்க நன்றி சார்.

   Delete
 18. சுருக்கமான சுவையான சுய அறிமுகத்திற்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள். இந்த வாரம் தங்களுக்கு வெற்றிகரமாக அமையட்டும்.

  ஒருசில சொந்தக் காரணங்களால் நாளைமுதல் என் வருகையில் மிகுந்த தாமதங்கள் இருக்கக்கூடும்.

  எப்படியும் எல்லாவற்றையும் ஒருநாள் கண்டிப்பாகப் படிப்பேன். ரஸிப்பேன். பின்னூட்டங்களும் அளிப்பேன். அவை மிகவும் தாமதமாகவே தங்களுக்குக் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். All the Best ...... VGK

  ReplyDelete
  Replies
  1. பொறுமையா வாருங்கள். சொந்தப்பணிகளுக்கே முக்கியத்துவம் தரப்படவேண்டும். பலமுறை பின்னூட்டமிட்டு ஊக்கமளித்தமைக்கு நன்றி தங்களுக்கு.

   Delete
 19. வலைச்சரம் – ஆசிரியை பொறுப்பேற்று இருக்கும் சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 20. வலைச்சர பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. Akka.

  ReplyDelete
 21. வலைச்சர பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. Akka.

  All the Best. அசத்துங்க.

  ReplyDelete
 22. //20.01.2014 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்
  கீத மஞ்சரி
  சுபத்ரா பேசுறேன்..//

  ஏன் இந்த இடத்தில் 'கீதமஞ்சரி' என்று மாற்றம் செய்யாமல் இருக்கிறீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. ஏன் என்று தெரியவில்லை நண்பரே. வலைச்சர நிர்வாகிகளால் தான் மாற்றமுடியும் என்று நினைக்கிறேன்.

   Delete
 23. சுய அறிமுகம் சுருக்கமாக, சுவையாக இருந்தது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்

   Delete
 24. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கீதமஞ்சரி

  ReplyDelete
 25. வலைச்சரா ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
  சிறப்பாக செய்வீர்கள். உங்கள் கதையை கேட்கிறேன்.
  வாழ்த்துக்கள் வலைச்சர வாரத்திற்கு.

  ReplyDelete
 26. இனிமையான குரல், கதை ஆரம்பமே அலுமேலுவின் சோகத்தை பறைசாற்றுகிறது மீதியை படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கதையை என் குரலிலும் கேட்டு ரசித்தமைக்கு நன்றி மேடம்.

   Delete
 27. வாழ்த்துக்கள்! தங்கள் பணி சிறப்பாக அமையட்டும்! நன்றி!

  ReplyDelete
 28. வலைச்சரத்தில் இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்று இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது